Wednesday 3 September 2014

மௌலித் பற்றி இமாம் அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி


                ஷைக் அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) [இறப்பு 1052 ஹிஜ்ரி]  இந்திய துணை கண்டம் இந்நாள் வரை உருவாக்கிய மிக பெரிய இஸ்லாமிய அறிஞர்களுள்  ஒருவர்.அவர் தான் முதன் முதலில் இந்திய துணை கண்டத்தில் ஹதீஸ் கலையின் போதனைகளை நிறுவியவர். அன்னார் முகலாயப் பேரரசர்களான ஜகாங்கீர் ,ஷாஹ் ஜகான் காலத்தவர் .
                இந்திய துணை கண்டத்தை சார்ந்த சில  முஹத்தித்தீன்களுக்கு  ஷாஹ்  அப்துல் ஹக் அவர்களுக்கு முன்பு அரபு அறிஞர்களிடம் இருந்து  ஹதீஸ் அறிவிக்க இஜாஸா(அனுமதி) இருந்தது, ஆனால் அந்த அறிஞர்கள் ஹதீஸ் கற்பிக்க எந்த மதராஸாவும் ஆரம்பிக்க வில்லை அல்லது திட்டமிட்ட போதனை முறைகளை தொடங்கியதும் இல்லை.ஷாஹ் அப்துல் ஹக் அவர்களின் முப்பாட்டனார் புகாராவில் இருந்து இந்தியாவின் தில்லிக்கு புலம் பெயர்ந்தார்.

அவர் ஒரு முஹக்கிக் (அராய்ச்சியாளர் ) காக இருந்தார் ,தம் வாழ்க்கை முழுவதும் பழமையான இஸ்லாமிய கையெழுத்து பிரதிகளை கற்பித்தும் ,படித்தும் வந்தார்.அவர் எழுதிய பல நூற்களில் 'மதாரிஜுன் நுபுவ்வத்' மிகவும் பிரசித்தி பெற்றது.அது செய்யதுல் அன்பியா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் அவர்களின் சுயசரிதை. அதன் மூல பிரதி பார்ஸியில் எழுதப்பட்டது .

அன்னார் அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் சத்திய உலமாக்களுள் ஒருவர் .தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரும் அன்னாரின் நூற்களை கற்பித்து வருகின்றனர் .

ஷைகு அப்துல் ஹக் முஹத்தித் திஹல்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வழிமுறை மௌலித் ஷரீப் ஓதுவதும் , பெருமானாரின் பிறப்பு பற்றிய சம்பங்களின் பொழுது எழுந்து நின்று சங்கை செய்வதும் ஆகும் .

அன்னார் கூறுகின்றார்கள் , " யா அல்லாஹ் ! உன்னுடைய மேலான திருச்சன்னிதானம் முன் சமர்ப்பிக்கும் அளவு என்னுடைய எந்த அமலுக்கும் மதிப்பில்லை . என்னுடைய எல்லா அமல்களிலும் ஏதோ சிறு குறைகள் ஏற்பட்டிருக்கும் ,மேலும் அந்த அமல்களில் என்னுடைய நிய்யத்தும் தொடர்புகொண்டிருக்கும் . எனினும் என்னுடைய ஒரு அமல் நன்மையானதும் ,கொளரவம் பொருந்தியதும் ஆகும் . அது என்னவெனில் மீலாது சபைகளில் நான் நின்று கொண்டு மிக்க பணிவுடனும்,மிகுந்த நேசத்துடனும் உன்னுடைய ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தும் ,ஸலாமும் கூறுகின்றேன் .  "

[ நூல் - அக்பாருள் அக்யார் ,பக்கம் 264 ]

Akhbarul_Akhyar

Akhbarul_Akhyar_page264

 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment