மௌலானா ரஷீத் அஹ்மத் தனது நூலில் எழுதுகிறார் ,
" யாரேனும் ஒருவர் மர்ஸியா (இறந்தவர்களின் மீது புகழ்ந்து எழதப்படும் பாடல் ) எழுதினாலோ அல்லது படித்தாலோ அவர் ஃபாஸிக் (பாவி) "
[ நூல்- பத்வா ரஷீதீயா , வால்யூம் 2,பக்கம் 39 ]
ரஷீத் அஹ்மத் கங்கோஹி மேலும் எழுதுகிறார் ,
" கர்பலாவின் ஷஹீதுகளின் மீது ஓதப்படும் அனைத்து மர்ஸியாக்களும் எரிக்கப்படவேண்டும் அல்லது புதைக்கப்படவேண்டும் "
[ நூல்- பத்வா ரஷீதீயா ,பக்கம் 39 ,கராச்சி பதிப்பு ]
இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கை நூலான 'தக்வியத்துள் ஈமான் ' நூலுடன் சேர்ந்து வந்த துணை நூலான ' ஹாரிகுல் அஸ்ரார் ' என்னும் நூலில் மர்ஸியா எழுதுவதும் ,படிப்பதும் மஜூஸிகலின் வழக்கம் என்று எழுதியள்ளனர் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் .
மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மறைந்த பின்பு அவரது மாணவர் மஹ்மூதுல் ஹசன் ,மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியைப் புகழ்ந்து ஓர் மர்ஸியா எழுதினார் !!!
மௌலானா மஹ்மூதுல் ஹசன் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் 'ஷைகுல் ஹிந்த் ' உம் ,அகாபிர் எனப்படும் முன்னோடிகளில் ஒருவர் ஆவார் .
ஆச்சரியமாக மர்ஸியா அனுமதியில்லை என்ற ஷரத்து ,ஆகுமாக்கப்பட்ட செயலாகி விடுகின்றது ! இது ஒருமுறை அல்ல பல முறை தேவ்பந்த் மூலம் வெளியிடப்பட்டுள்ளது .
இதோ அந்த மர்ஸியாவில் உள்ள சில வரிகள் , மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியைப் புகழ்ந்து அவரது மாணவர் ஷைகு மஹ்மூதுல் ஹசன் எழுதியவை
தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் ஷைகுல் ஹிந்த் ஜனாப் மஹ்மூதுல் ஹசன் தனது எல்லா தேவைகளின் தீர்வு வழங்குபவராக தேவ்பந்திகளின் இமாமான ரஷீத் அஹ்மத் கங்கோஹியை நாடுகிறார் ,
' யாரிடம் நான் எனது தேவைகளை நிவர்த்தி செய்ய முகம் திருப்புவேன் !
எனது அனைத்து வெளிரங்க மற்றும் ஆன்மீக தேவைகளை நிறைவேற்றி வைப்பவர் மறைந்து விட்டார் ! "
கொளஸ் என்ற பதம் உதவி செய்பவர் ,துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பவர் என்று பொருள் தரும் .மௌலானா மஹ்மூதுல் ஹசன் மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை கொளஸுல் அஃலம் என்கிறார் !!!
" அவர் தான் இரண்டாம் ஜுனைத் ,ஷிப்லீ ,இன்னும் அபூ மஸூத் அன்ஸாரி ,
அவர் தான் ரஷீத் ஏ மில்லத் ஏ தீன், கொளஸுல் அஃலம்,இமாமே ரப்பானி ! "
மௌலானா மஹ்மூதுல் ஹசன் மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை இவ்வாறு மட்டுமல்லாது , 'முரப்பியே கலாயிக் ' ,'மஸீஹா ஏ ஸமான் ','காசிம் ஏ பைஜ் யஜ்தாஹ் ' ,இஸ்லாத்தை நிறுவியதில் சமமானவர் ,அனைத்து படைப்புகளையும் வழிநடத்துபவர் ,முஹ்யத்தீன் ஜீலானி ,எல்லா நன்மைகளின் நீருற்று ,தன்னிகரில்லாதவர் , இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெருமதிப்பும் மரியாதையும் செய்யத் தகுந்த படைப்பு , என்றெல்லாம் வாய் வலிக்க எழுதியள்ளார் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் அகாபிர் . என்னே இவர்களின் நியாயம் ???
மேற்கண்ட சொற்களை ஒரு இஸ்லாமியர் ஒரு வலியின் சந்நிதானத்தில் வைத்து கூறினால் அவரது மீது உடனே இந்த தப்லீக் வஹாபிகள் ஷிர்க் ,குப்ர் பத்வாக்களை அள்ளி வீசுவர் ,ஆனால் அவர்களே அவ்வாறு கூறினால் அது தான் இஸ்லாமிய நடைமுறை !!!
தனது கவிதைத் தொகுப்பின் குறிப்பில் பின்வருமாறு எழுதுகிறார் ,
"எனது வழிகாட்டிகள் ,எனது ஆசிரியர்கள் ,எனக்கு எல்லா ஆரம்பமும் எல்லா முடிவுமாக உள்ளவர்கள் !
எனது தலைவர்கள் ,எனது எஜமானர்கள் ,எனது இளவரசர்கள் .
ரஷீதும் காசிம் ஏ ஹைராத் ,இருவரும் போற்றுதலுக்குரிய ஆசிரியர்கள் "
இந்த சொற்களை தேவ்பந்தி முப்திகளிடம் அனுப்பிய இம்மாதிரியான சொற்கள் குப்ரில் சேர்க்குமா எனக் கேட்டோம் ,இவை தேவ்பந்தி தப்லீக் முன்னோடிகளின் நூற்கலில் இருந்து எடுத்தவை என்று கூறவில்லை .
எல்லா தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தின் முப்திகளும் ஒருமித்த குரலில் தங்களது வஹாபிய விசுவாசத்தை வெளிக்காட்டும் விதமாக இது குப்ர் என்றனர் !!!
ஆக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் உலமாக்கள் தங்களது ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் மீது தக்பீ ஃர் பத்வா கொடுத்துள்ளனர் .
கீழே உள்ள ஸ்கேன் ஆதாரங்களை காணவும்
No comments :
Post a Comment