Sunday, 21 September 2014

நாயகத்தின் ஈமான் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? கட்டுரைக்கு பதில் !

அகிலம் வாழ் மக்களின் இறைநம்பிக்கை உறுதியுடன் திகழ்ந்து உண்மையாளர்களாய் வாழ வேண்டும். உலக முழுதுமே ஏகத்துவப் பெருஞ்சுடர் ஏற்றி வைக்கப்பட வேண்டும் என வாழ் நாளெல்லாம் போராடிய பெருமானாரின் 'இறை நம்பிக்கையே ஆட்டம் கண்டு விடலாமல்லவா?' என எழுதிய பின்னர்,
 
'குப்புற வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை.'
'இபுனு சாலிஹ்'
 
Jamaathul Ulama 1972 October
 
அகிலத்தின் அருட்கொடையாய் அவனியில் தோன்றிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றைய அனைத்து தூதுவர்களை விடவும் இறைவனிடத்தில் மிகப்பெரும் அந்தஸ்த்தை பெற்றிருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வுடன் எவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மிஃராஜ் நிகழ்ச்சி ஒன்று மட்டுமே ஆதாரமாகப் போதும்.
 
அப்படி சிறப்பிற்குரிய நிகழ்ச்சியான மிஃராஜ் ஏன் ஏற்பட்டது? என்ற காரணத்தை விளக்குமுகத்தான் அருள்மறையான திருக்குர்ஆன் கூறுகிறது:-
 
'(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை சிறப்புற்ற கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான். அதன் சூழவுள்ள பூமிகளை நாம் ஆசீர்வதித்துள்ளோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் செவியுறுவோனும் உற்று நோக்குபவனுமாக இருக்கிறான்' (17:1)
 
இவ்வாறு அண்ணலாருக்கு மிஃராஜ் நிகழ்ச்சி ஏற்பட்டதற்கான காரணத்தை மிகத் தெளிவாக குர்ஆன் எடுத்துரைக்கிறது. தனது அற்புதப் படைப்புகளை, அந்தரங்கங்களை தனது அன்பிற்குகந்த நேசருக்கு எடுத்துக் காட்ட வேண்டும். தனது வல்லமையை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற ஆவலில் அவர்களை அழைத்துச் சென்றதாக எக்காலமும் மாறாத குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறிக் கொண்டிருக்கிறான்.
ஆனால்……
 
1972-ம் ஆண்டு அக்டோபர் மாத 'ஜமாஅத்துல் உலமா' இதழில் 'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது?' என்ற தலைப்பில் மௌலவி யூசுப் அன்சாரி எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதியான,
 
'அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அபூதாலிப் இருவரும் நுபுவ்வத்து பதினோராவது ஆண்டு முடிவில் அவ்விருவரும் மறைந்தனர். அவர்களின் மரணம் நபி அவர்களுக்கு நீங்காத்துயரை நல்கியது. இரு கரங்களை இழந்தவராய், இரு இறக்கைகளை பறிகொடுத்த பறவையாய் மனமுடைந்தனர். எதிரிகளின் எதிர்ப்புகள் கொழுந்து விட்டு விண்ணாளவ எரிந்தது. அத்தீச்சுவாலைகள் அவர்களின் பொன்மேனியைக் கரிக்கத் தொடங்கியது. இப்படி துன்பங்கள் தொடர்ந்து அவர்களைத் தாக்கும்போது அவர்களது உள்ளத்து வலிவும் இறை நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? இது நபிமார்களுக்கு ஏற்பட்ட இயல்புதான்'
 
என்று அகிலத்தின் அனைத்து மாந்தர்கள் தம் ஈமானை வலுப்படுத்தி-சீராக்க வந்த பேரிறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஈமானே ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என தன்னிலை தவறி ஏதோ மயக்கத்தில் இருந்து கொண்டு வரைந்திருந்த கட்டுரைக்கு தமது மறுப்பையும், விளக்கத்தையும் 1976 ஜூலை ஜமாஅத்துல் உலமா இதழில் வெளியிட்டிருக்கிறார்.!
 
சுமார் மூன்றே முக்கால் ஆண்டுகாலமாக, தான் எழுதிய தவறை எந்த வகையில் பூசி மெழுகலாம் என்று நீண்ட பெரும் ஆராய்ச்சி நடத்தி கடைசியாக விளக்கம் தரப்போய் சறுகி விழுந்திருக்கிறார். குப்புற வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என வீராப்பு பேசுகிறார்.
 
இருகரங்களை இழந்தவராய் -இரு இறக்கைகளைப் பறிகொடுத்த பறவையாய் மனமுடைந்தனர் என எழுதி தனது அழுக்கு நிறைந்த உள்ளத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார். உறுதியற்ற உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் ஈமானே ஆட்டம் காணுமளவுக்குகோழை என்ற பெருமைக்குரிய நாயகத்தைச் சிறுமைத்தனமாக வர்ணிக்கிறார் வலுவற்ற உள்ளம் கொண்ட சாதாரண மனிதனுக்கு அவர்களை ஒப்பிடுகிறார். என்ன பேத்தல் இது!
 
பெருமானாரின் பொன்னார் காலணியை ஏன் ஒரு உரோமத்தைக் கூட இது என்ன சாதாரண காலணிதானே! முடிதானே! என்று கேவலமாக-சாதாரணமாக எண்ணியவன் காபிர் என நமது மார்க்கத் தீர்ப்புகள் கூறிக்கொண்டிருக்க சிறகொடிந்த பறவையாய் மனமுடைந்தனர் என்று எவ்வளவு துணிச்சலோடு எழுதுகிறார்?
 
அவரைக் கூறிக் கூட குற்றமில்லை. அவர் சார்ந்திருக்கும் கொள்கையின் தலைவரான இஸ்மாயீல் திஹ்லவீ 'நாயகம் அவர்களுக்கு பெரிய சகோதரரின் மரியாதை கொடுங்கள்' (தக்வியத்துல் ஈமான்) என எழுதியிருக்கிறார்.
 
 குருவைப்போன்றுதானே சிஷ்யரும் இருப்பார். சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும். அதிலும் இக்காலத்திலுள்ள சீடர்களை; கூற வேண்டியதில்லை. குரு 8 அடி பாய்ந்தால் சீடர் 16 அடி பாய்கிறார். குரு ஹராம் என்பார், சீடர் ஹராம் என்ன ஷிர்க்கேதான் என்று வாய் கூசாது தன் மேதாவித்தனத்தை காட்டும் கோஷ்டிதானே!
 
இப்படி தான்தோன்றித்தனமாக எழுதிவிட்டு அதற்கொரு மறுப்புரை, விளக்கவுரை. போகட்டும் எழுதுகிற விளக்கவுரையையாவது விவஸ்தையோடு எழுதக் கூடாதா?
 
இறை நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்று எழுதியதில் 'இறை நம்பிக்கை என்பதற்கு 'ஈமான்' என்று அர்த்தம் கொடுப்பது தவறு என்றும், 'நம்பிக்கை' என்ற சொல்லுக்கு எண்ணம் அது விளைகின்ற மனம் என்றே நான் பொருள் கொண்டிருக்கிறேன். இறை என்ற சொல்லை உதவி என்ற சொல் தொக்கி நிற்கிறது' என்றும் தமது அதிபுத்திசாலித்தனத்தை விளம்பரப்படுத்துகிறார். அப்படியாயின், 'ஈமான்' என்பதற்கு தமிழில் என்ன பொருள்? ஆண்டு பலவாக அரபிக்கல்லூரி பலவற்றில் ஓதிக்கொடுத்திருக்கிறீர்களே அப்பொழுது ஈமானுக்கு என்ன பொருளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள்?
 
தமிழாய்வாளர்களே! புது அகராதி ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை என்றால் எண்ணம், மனம் என்று பொருள். இறையென்றால் இறை உதவி. அன்ஸரி சாகிப் எந்த அகராதியிலிருந்து இப் பொருள்களை கண்டெடுத்தாரோ யாம் அறியோம்.!
 
இத்தோடு விடவில்லை அவர் தம் விளக்கத்தை! மீண்டும் தொடர்கிறார்:-
'இறை என்ற சொல்லை உதவி என்ற சொல் தொக்கியிருக்கிறது. இப்படி தொக்கியிருப்பதற்கு அரபி மொழியில் தக்தீர் என்று சொல்கிறோம். இப்படி தக்தீர் இடுவது அரபு மொழியின் மரபுதான்.'
 
என்று இறையென்பதற்கு இறை உதவி என தான் கூறும் விளக்கம் சரிதான் என வாதாடுகிறார். அன்ஸாரி தமிழ் மொழியில் இறை நம்பிக்கை ஆட்டம் கண்டு விடலாமல்லவா? என எழுதிவிட்டு, அரபி மொழியில், 'தொக்கி நிற்பது மரபுதான்' என்று கூறினால் எப்படி பொருந்தும்? தமிழுக்கு தமிழின் இலக்கண மரபையல்லவா கூற வேண்டும்?
 
எந்த மொழியில் நாம் கட்டுரை எழுதினோம் என்றே தெரியாமல் ஆலிம் ஒருவர் தடுமாறி அதற்கு விளக்கம் என்ற வகையில் ஏதோ எழுதி வைக்க, அதை வேறொரு ஆலிம் தனது பத்திரிகையில் முன்யோசனையின்றி வெளியிடுவதா? இவர்கள்தான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை சீர்திருத்தும் செம்மல்கள். தீனை உயிர்ப்பிக்கும் உலமாப் பெருந்தகைகள் (?) பிறர்கள் அல்லாஹ்வைத் தொழவில்லையே என்று ஏங்கி 'தொழுவோம் வாருங்கள்!' என்று அழைக்கும் முத்தகீன்கள். அய்யோ சமுதாயமே! இதுதான் உன் தலைவிதியா?
 
முடிவாக, தான் முன்னர் எழுதிய இறை நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்பதற்கு….
 
'இறை – இறை உதவி
நம்பிக்கை – எண்ணம், மனம்
ஆட்டம் – கலங்குவது
 
இவற்றை முறைப்படுத்திப் பார்க்கும்போது, நபியவர்கள் இறை உதவி குறித்து மனம் கலங்கிடலாமல்லவா? என்றாகும்' என்று கூறி, நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். அப்பாடா ஒருவகையாக விளக்கம் எழுதி முடித்துவிட்டோம் என்று.
 
தமிழ் மொழி வல்லுனர்களாலும், நுண்மாண் நுழைபுலமுடைய ஆன்றவிந்தடங்கும் சான்றோர்களாலும், தொகுக்கப்பட்ட நிகண்டுகளையும் அகராதிகளையும் நான் ஆராய்ந்தேன்! அதில் எங்குமே மேற்சொன்ன அர்த்தத்தைக் காண முடியவில்லை. இறை என்ற சொல்லுக்கு வினைச் சொல் என்ற அடிப்படையில் (நீர்) இறைத்தல் என்றும், பெயர்ச்சொல் அடிப்படையில் தலைவன், அரசன், இறைவன் என்றும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அன்ஸாரி சாகியு எந்தப் பல்கலைக்கழக அகராதியைப் புரட்டினார்? அல்லது
எந்த நிகண்டைப் பார்வையிட்டார்? என்று தெரிவித்து விளக்கினால் அவருக்கு நிச்சயமாக,'தமிழ்வேள்' பட்டம் கொடுக்க நாம் சிபாரிசு செய்யலாம்! அப்படியில்லையாயின் அவர் தமது அறிவீனத்தை ஒத்துக் கொண்டு, மன்னிப்புக் கேட்பதே முறையாகும்!
 
நம்பிக்கை என்பது காரியம்!
மனம் என்பது காரணம்!
 
இந்த இரண்டையும் ஒன்றாக்கி தனது வாதத்திற்கு விளக்கெண்ணெய் போடுகிறார் அன்ஸாரி சாயிபு! இதற்கு ஒத்து ஊதுகிறார் அபுல் ஹசன் ஷாதலி சாயிபு! மனம் என்னும் மேடையில் உதயமானதுதான் நம்பிக்கை நட்சத்திரம். இப்படியிருக்கும்போது மனமும் நம்பிக்கையும் ஒன்றாகுமா?
 
வானம் வேறு! நிலவு வேறு! நிலவும் வானமும் ஒன்றேயென்று ஒருவன் சொன்னால் அவனை நாம் சந்தேகத்தோடு பார்ப்போம். சூரியன் வேறு! ஆகாயம் வேறு!
 
சூரியனும் ஆகாயமும் ஒன்றே என்று ஒருவன் சொன்னால் நாம் அப்படிக் கூறுபவனைப் பார்த்து அனுதாப்படுகிறோம்.
ஆனால்,அன்ஸாரி சாயிபு,குற்றாலத்தில் நீரருவி கொட்டு முன்பே, நான் அங்கு போகத் தயார்! என்ற பாவனையில் உளற ஆரம்பித்துவிட்டார்!
 
மேலும் தமது 72-ம் ஆண்டு கட்டுரையில் 'இது நபிமார்களுக்கு ஏற்பட்ட இயல்புதான்' என்றும் எழுதி உள்ளார். அதற்கு ஏன் விளக்கம் கொடுக்கவில்லை? என்ன வடிகட்டின பேத்தல் இது? முந்தைய நபிமார்களுக்கும் ஏற்பட்ட இயல்புதானாம். எந்த நபியின் இறை நம்பிக்கை ஆட்டம் கண்டது? எதற்காக ஆட்டம் கண்டது?
 
அந்தந்த காலங்களில் வாழ்ந்த நெறிகெட்ட மக்களை நேர்வழிப்படுத்தி, ஏகத்துவப் பெருஞ்சுடதை ஏற்றி வைக்கவென இறைவனால் இவ்வகிலத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கே இறை நம்பிக்கை ஆட்டம் காணுமென்றால், சாதாரண உம்மத்துகளின் நிலை என்னவாகும்? கட்டுரை எழுதியவர் , பிரசுரித்தவர்கள் நிலைகள் எல்லாம் என்னவாகும்?
 
எழுதுகோலையும், காகிதத்தையும் எடுத்து மனம் போனபடி எழுதிவிட்டால் போதாது. எழுதுகிற விவரங்களை அதுவும் நபிமார்கள் – ஷரீஅத் குறித்து எழுதும்போது உன்னிக் கவனித்தல் அவசியம். இது பட்டங்கள் பலபெற்ற – எழுத்தாளரான கட்டுரையாசிரியருக்குத் தெரியாததல்லவே!
 
இப்படி வெளிக்கு நல்லவர்கள் போல் வேஷமிட்டு கொண்டு உள்ளத்தில் தீய்ந்த கொள்கைகளைக் கொண்டலைபவர்களைப் பற்றி அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
 
'அல்ஸின துஹும் அஹ்லா மினஸ் ஸுக்ர் வகுலூபுஹும் குலூபுத் தி ஆப்'
'அவர்களின் நாவுகள் சர்க்கரையை விட அதிக இனிப்புடையது. ஆனால் அவர்களின் இதயங்கள் ஓநாய்களின் இதயங்களாயுள்ளன' எனக் கூறுகிறார்கள்.
 
அடுத்து 'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது' என்பதற்கான காரணத்தைத் தமது விளக்கவுரையில் அன்ஸாரி சாகிப் கூறுகின்றார்.
 
'பெருகிவரும் துன்பங்கள் கடல் அலைகள் போல் அடுக்கடுக்காய் ஓயாது, ஒழியாது அண்ணலவர்களைத் தாக்கும்போது நபியவர்களின் உள்ளத்து வலிவும், இறையுதவி இப்போது வருமோ, கொஞ்சம் தாமதித்து வருமோ என்பது குறித்து அவர்கள் உள்ளம் கலங்கிவிடலாமல்லவா? அப்படி அவர்களுடைய மனம் கலங்கிவிடாமல் காப்பது அல்லாஹ்வின் பொறுப்பு. இப்பொறுப்பை இறைவன் மிஃராஜ் என்ற உருவில் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வைத்தான்.மிஃராஜின் காரணத்தை இவர் இப்படிக் கூறுகிறார்.
 
ஆனால்….
 
அல்லாஹ் தனது திருமறையில், தனது அத்தாட்சிகளை அவர்களுக்கு காட்டும் பொருட்டு அழைத்துச் சென்றதாக – மிஃராஜ் ஏற்பட்டதாகக் கூறுகிறான்.
 
அன்ஸாரி சாகிபின் தடுமாற்றம் – முரணாணன போக்கு இப்போது மிகத் தெளிவாகி விட்டதல்லவா?
 
1972-அக்டோபரில் 'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது?' என்ற கட்டுரையை எழுதியபோது அது குறித்த ஆட்சேபணை கிளப்பப்பட்டது. அதற்கு வெகுவிரைவில் விளக்கவுரை வர இருக்கிறது என்று 1974 செப்டம்பர் ஜமாஅத்துல் உலமாவில் விளம்பரம் வந்தது. இப்பொழுது 1976 ஜூலை விளக்கவுரை என்று குழப்பவுரை வெளிவந்துள்ளது. ஆக விளக்கவுரைகளும், விளம்பர உரைகளும் வருவதற்கே ஆண்டுகள் சில தேவைப்படுகிறது!
 
இப்படியெல்லாம் ஏன் அண்ணல் பெருமானாரைப் பற்றி தரக் குறைவாக விமர்சிக்க வேண்டும்? ஆதவனைக் கண்டு நாய்கள் குரைப்பதால் அப்பகலவனுக்கு எனன பங்கம் வந்துவிடப் போகிறது? பெருமானாரை தரங்குறைத்து மதிப்பிடுபவன் தன் அந்தஸ்த்து பறிபோய் தரம் தாழ்வர்! இது அன்று முதல், இன்றுவரை நாம் கண்டு வருபவைகளாகும்.
 
'அல்லாஹ்வின் ரசூலை வருத்தப்படுத்துபவர்களுக்குக் கொடிய வேதனை உண்டு' என குர்ஆன் கூறுகிறதே!
 
அவரவர்கள் எந்தெந்தக் கொள்கைகளை சார்ந்திருக்கிறார்களோ யார்யாரை குருவாக ஏற்றுக் கொண்டாடுகிறார்களோ அவர்களது கொள்கைகள்தானே பக்தாசிகாமணிகளுக்கும் இருக்கும். உள்ளத்தில் நிறைந்திருக்கும் தவறான கொள்கைகள் தாம் எழுத்து வடிவத்திலும், பேச்சு உருவிலும் வெளிவரும்.
 
'ஜமாஅத்துல் உலமா' என்று பத்திரிகைக்கு  பெயர் வைத்திருப்பதைக் கண்டு உலமாக்கள் சபையினரால் – அவர்களது எல்லோரது ஏகோபித்த ஒப்புதலையும் பெற்று நடைபெறுவதாக யாரும் எண்ண வேண்டாம். இல்லையில்லை உலமாக்களின் அங்கீகாரத்தோடுதான் உலமாக்கள் சபையின் ஒப்புதலோடுதான் உலமாக்கள் சபையின் பெயரை இப்பத்திரிகைக்கு சூட்டியிருக்கிறேன். ஜமாஅத்துல் உலமா என்று நாமம் இட்டிருக்கிறேன் என்று அதன் ஆசிரியர் கூற முன்வருவாரா?
 
எனவே ஆலிம்களின்  ஒப்புதலோடுதான் இப்பத்திரிகை நடக்கிறது என்று யாராவது நம்பியிருந்தால் அவ்வெண்ணத்தை தூர விலக்கி வைத்து விடுங்கள்! ஆகவே ஆசிரியரே! ஜமாஅத்துல் உலமாவின் பெயரை வைத்துக் கொண்டு ஷரீஅத்திற்கு மாறுபட்ட கருத்துக்களை எழுதாதீர்கள். அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
 
நன்றி: ஹுஜ்ஜத் மாத இதழ் ஆகஸ்ட் 1976.
 
முற்றும்.
 
நடந்த சம்பவம்:- நாயகத்தை குறைவுபடுத்தியவர் அடைந்த கதி:
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஈமான் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்று தரக்குறைவாக எழுதிய ஏ.ரு.யு.யூசுப் அன்ஸாரி என்பவர் இறந்தவுடன் சென்னையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றியும் கடும் துர்வாடை வீசிக் கொண்டிருந்தது. அங்கு வருபவர்களெல்லாம் உடனே இதை எடுத்துவிடுங்கள் என்று முகம் சுளித்து , மூக்கு பொத்திக் கொண்டு சென்றனர். மேலும் அந்த இறந்த உடலிலிருந்து இரத்தம் வந்து கொண்டேயிருந்தது. இதைப் பார்த்தவர்கள் அவரின் பரிதாப நிலையை எண்ணி வருந்தினர். 
 
 
                                                                                             நன்றி - http://sufimanzil.org/
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 20 September 2014

தப்லீக் பற்றிய விவாதத்தில் காயல்பட்டணம் மஹ்ழறா, ஜாவியா உலமாக்கள் !

 
   
Zaviya Arabic College Kayalpatnam


தமிழகத்தில்,இஸ்லாமிய நெறி பேணும் காயல்பட்டணத்தில் அமைந்திருக்கும் ஷாதுலிய்யா தரீகா என்று தங்களை கூறிக் கொள்ளும் ஜாவியா நிறுவனத்தினர் ; தாங்கள் கொண்ட கொள்கை ஸுன்னத் வல் ஜமாஅத்திற்கும், தரீகாவிற்கும் மாறுபட்ட கொள்கைக்கு மாறுபடவில்லை என்று சுமார் 45 வருடங்களாக கூறி வருகின்றனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்கள் அவர்களோடு விவாதித்தும், விளக்கப்படுத்தியும் அவர்கள் தாங்கள் கொண்ட கொள்கைகளிலேயே உறுதியாக இருந்து வந்தனர்.
 
ஆனால் எவ்வித எழுத்து மூலமான ஆதாரங்களை அவர்கள் தெரிவிக்காமல் போக்கு காட்டி வந்தனர். ஒடுக்கு பத்வா மற்றும் ஹாளிர் பைத்து சொன்ன ஹிழ்ரு முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் மீது அவர்களால் கொடுக்கப்பட்ட குப்ரு பத்வா போன்றவைகளை தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடாமல் தந்திரமாக மறைமுகமாக வெளியிட்டனர்.
                     
Mahlara_Arabic_College_Kayalpatnam
 
     இந்த விவாதத்தில் ஜாவியா நிர்வாக ஆலிம்கள் மற்றும் மத்ரஸா ஆலிம்களும்; நேரடியாக கலந்து கொண்டு ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாக்களான மௌலவி முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள், மௌலவி ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதரி ஸூபி அவர்கள் தலைமையில் மஹ்லறாவின் உலமாக்கள் மற்றும் ஊரின் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் ஒன்று கூடி இரு பிரிவாக கலந்து கொண்டனர்.
 
சுன்னத் வல் ஜமாஅத்தினர் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில் கூறமுடியாமல் விவாதம் நடந்த ஹாலிலிருந்து ஒரு அறைக்கு சென்று இரகசியம் பேசி பேசி வந்தனர். இறுதியில் ஜாவியாவிலிருந்து குற்றம் சொல்லப்பட்ட நூலான பதாவா ரஷீதிய்யா எடுத்துவரப்பட்டு அக்குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டது.
                                   
அச்சமயத்தில் எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு ஜாவியா தப்லீக்காரர்களின் முகமூடியை மக்கள் மத்தியில் கிழிக்க உதவியது. இருந்தும் அதற்கும் சப்பைக்கட்டு கட்டி தாங்கள் வென்றுவிட்டதாக பொய்பிரச்சாரம் செய்ததால் உண்மை நிலையை விளக்கும் நோக்கோடு சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் வெளியிடப்பட பிரசுரத்தைத் தான் தாங்கள் பார்க்கிறீர்கள்.
 
Zaviya Ulamas Tablighi Wahabi  Aqeeda Exposed
                                
 
முனாபிக்குகளிள் முரண்பட்ட போக்கை பாரீர்!!!
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
புனித சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணான கொள்கையை பரப்பி வரும் தப்லீக் ஜமாஅத்தை பல்லாண்டுகளாக தக்க சான்றுடன் எதிர்த்து வரும் 'மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி' ஆலிம்களும் மற்ற ஆலிம்களும், தப்லீக்கை ஆதரித்து வரும் 'ஜாவியத்துல் பாஸிய்யா' அரபிக் கல்லூரி ஆலிம்களில் சிலர்களும் ஆகிய இரு சார்பு ஆலிம்களை அழைத்து ஹாஜி வாவு காதர் சாகிலு அவர்களும் மன்பக்கம் கண்ட சிலர்களும் அம்பலமரைக்கார் தெரு ஹாஜி வாவு காதர் சாகிபு அவர்கள் இல்லத்தில் 11, 12-08-1998 நாட்களில் மௌலவி எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் அவர்கள் தலைமையில் உலமாக்களின் ஆலோசனைக் கூட்டம் கூடி எடுக்கப்பட்ட முடிவிற்கு ஜாவியத்துல் பாஸிக்காரர்களின் முரண்பாட்டின் முழு விபரம்:
 
 (தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை தலைவர்களிலுள்ளவரும், தப்லீகர்களால் மகானென போற்றப்படுபவருமான) மௌலவி ரஷீது அஹ்மது கங்கோஹி, இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை ஆதரித்தும், வஹ்ஹாபிக் கொள்கைகளை சரி கண்டும் எழுதின அவரது 'பதாவா ரஷீதியா' வை அனைவர்களுக்கும் முன் வாசித்ததும், தப்லீக்காரர்களான ஜாவியத்து பாயஸியாக்காரர்கள் இவ்விரண்டு விஷயங்களும், தப்லீகை ஆதரிக்கும் இங்கு வந்துள்ள ஆலிம்களுக்கு உடன்பாடானது அல்ல.
 
அவரின் இந்த கருத்தை இந்த ஆலிம்களும், தப்லீக் இயக்கத்தின் பிற நிறுவனர்களும் ஏற்கவில்லை. வஹ்ஹாபிஸம் காரிஜிக்களைப் போன்று நமக்கு முற்றிலும் ஆகாத வழி கெட்ட இனம் என்பதே தேவ்பந்தி உலமாக்களின் முடிவாகும் என்பதை இங்கு வந்த தப்லீகை ஆதரிக்கும் உலமாக்களின் நிலைபாடு என ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டார்கள்.
 
தப்லீகர்கள், வழி கெட்டவர்களை வழி கெட்ட இனம் என ஒப்புக் கொண்டதை ஏற்று கையைழுத்து போடும்போது நாங்களும் இருந்தோம் என்பதற்கு ஆதாரமாக தப்லீக் எதிர்ப்பாளர்களாகிய ஆலிம்களெல்லாம் கையெழுத்திட்டார்கள். ரஷீது அஹ்மது கங்கோஹியின் 'பதாவா ரஷீதிய்யா'வின் இரண்டு பத்வாக்களும் உடன்பாடில்லை, வஹ்ஹாபி வழி கெட்ட இனம் என மட்டுமே தப்லீகர்கள் ஒப்புக் கொண்டார்களே தவிர, கெட்ட இனத்தை உண்டாக்கும் கங்கோஹியை நிராகரிக்காத தப்லீகர்களின் நயவஞ்சக குணத்தை பாருங்கள்.
 
இவ்வாறு ஒப்புக் கொண்டது தப்லீகின் கொள்கைக்கும் மூலகர்த்தாக்களுக்கும் முரணாகி விட்டது என்று தீயவர்களை காப்பாற்ற தீய உதிப்பு ஏற்பட்டதும், தப்லீகர்களாகிய ஜாவியத்து பாஸிக்காரர்கள் குரோத நோக்கோடு அகீதா, ஷரீஅத், தரீகத் கொள்கைகைய திறம்பட கற்றுக் கொடுக்கும் கலாசாலை என்றும் புனித ஷாதுலிய்யா தரீக்கா தலைமை பீடமென புகழப்படக் கூடிய ஜாவியத்துல் பாஸிய்யாஅரபிக் கல்லூரியில் ஹைஅத் ஷரீஅத் கிளை தொடக்க விழா என்ற ஏற்பாட்டுடன் ஷரீஅத் விளக்கக் கூட்டமொன்று 13-10-1998 ம் நாள் ஹாஜி மௌலவி எஸ்.எம். முஹம்மது அப்துல் காதர் முத்து வாப்பா பாஸி கலீபத்துல் குலபா ஷாதுலி அவர்கள் தலைiமையில் தலைமையுரையுடன் ஆரம்பமாயிற்று.


Zaviya Haiathus Shariah Notice
 
தலைமையுரை தவறாக அமைந்ததால்  அடுத்து பேசிய மௌலவி முஸ்தபா ரஷாதீ உடனே முடித்து விட்டு கொள்கைக்கு முரணான சிலதை சொல்லி முடித்தார்.
 
அடுத்து தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்ற நூலின் மொழி பெயர்ப்பு ஆசிரியர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி மன்பஈ, பாஜிலே தேவ்பந்தி மேற்படி நூல் 161 ம் பக்கத்தில் 'அல்லாஹ் பொய் சொல்ல சக்தியுடையவன்' என்ற கங்கோஹியின் கருத்தை சரிகண்டும், அதெ நூல் 144 ம் பக்கத்தில் 'ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை தொழுகையில் நினைப்பது மாடு, கழுதை நினைப்பில் மூழ்குவதை விட கெட்டது' என்ற கொள்கைகளை சரி கண்டு உறுதிபடுத்தி அவருக்கு கொடுத்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதில் என்ற தலைப்பில் உளறி முடித்தார்.
 
 11,12-10-1998 ம் நாள் எடுக்கப்பட்ட முடிவிற்கு இது மாற்றமில்லையா? இவ்வாறுதான் ஊரை குழப்பி ஈமானை கெடுப்பதா? சிந்தியுங்கள். நாங்களும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்தான், மத்ஹப் வாதிதான், தரீகீக்காவாதி தான் என்று கூறிக் கொள்ளும் ஜாவியா பாஸிக்காவைச் சார்ந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கும் உலமாக்களும், மற்றவர்களும் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு முற்றிலும் முரணான கேடுகெட்ட கொள்கைகளை பேசினதை ஏன் கண்டிக்கவில்லை.?
 
இதிலிருந்து இவர்களின் உள்ளத்தில்  பதிந்த தீய கொள்கை விளங்க வரும். மேலும் இவர்கள் அல்லாஹ்வையும் அன்பியாக்களையும் குறை கூறுபவனை உண்மை முஃமின் என தக்க சான்றுடன் மார்க்கத் தீர்ப்பு கொடுப்பார்களா? சிந்தியுங்கள்.
 
இவ்வாறு இஸ்லாமிய ஷரீஅத் படி அல்லாஹ்வை, அன்பியாக்களை குறை காணுபவன், குறை காணுபவனை நேசிப்பவன், இவனை பின் தொடர்ந்து தொழவது, நிகாஹிற்கு வக்கீலாக்குவது, பிறை கண்டு சொன்னால் அவர்களை நம்பி நோன்பு வைப்பது கூடுமா? சுன்னத் ஜமாஅத் கொள்கையில் பிடிப்புள்ள கல்வி கூடங்களுக்கு எழுதிக் கேட்டு நற்பயனடையுங்கள்.
 
குறிப்பு: 13-10-1998 ஜாவியாவில் கொள்கைக்கு முரணாக பேசியது பதிவு நாடாவில் பதியப்பட்டு பலரிடம் உள்ளது.
18.10.98 இப்படிக்கு,
காயல்பட்டணம். புனிதமிகு அனைத்து தரீக்கா வாசிகள்,
குறிப்பு: நம் சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வழிகெட்ட கொள்கையைக் கொண்ட தப்லீக் தலைவர்களில் ஒருவரான ரஷீத் அஹ்மத் கங்கோஹி தனது பதாவா ரஷீதியா என்ற நூலில் இப்னு அப்துல் வங்ஙாப் நஜ்தியை ஆதரித்தும் வஹ்ஹாகியக் கொள்கையை சரி கண்டும் எழுதிய இரண்டு பத்வாக்களை பற்றி மட்டுமே 12.08.1995 அன்று நடந்த நம் நகர் உலமாக்களின் கருத்தரங்கில் பேசப்பட்டு, அக் குற்றச்சாட்டு உண்மைதான் என்று அனைத்து உலமாக்களும் ஒப்புக் கொண்டு கையொப்பமிட்ட தீர்மானமாகும்.
 
இதுபற்றி 15.02.02 அன்றும் இப் பிரசுரம் மூலம் மறுபதிப்பாக வெளியிட்டும் இதற்குரிய பதிலைக் கொடுக்காமல், அப்துல்லா இப்னு உபை போன்ற முனாபிக்குகளின் நயவஞ்சகத் தன்மையும், கோயபல்ஸின் பொய், புரட்டு, பித்தலாட்டம், மோசடி மூலம் முஸ்லிம்களை இன்னும் வழி கெடுத்துக் கொண்டிருக்கும் தப்லீக்கை ஆதரிக்கும் உலமாக்களே! அதன் அபிமானிகளே!
 
தப்லீக் தலைவர்கள் கூறிய ஈமானை வேரறுக்கும் கொள்கைகள் பற்றியும் அதைக் கூறிய தவைர்கள் நிலை பற்றியும் தற்போதாவது உங்கள் நிலைமையை பொது மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். நிறம் மாறும் பச்சோந்தியாக இல்லாமல், சுவனம் செல்லும் உண்மை சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கையின்பால் வாருங்கள் என்று வேண்டுகிறோம். அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்! யாரப்பல் ஆமீன்! ஆமீன்!!
மூன்றாம் பதிப்பு:
18 – 12- 07
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை எதிர்ப்போரை எதிர்க்கும் இயக்கம்,
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிரூ மஹ்பூபு சுபுஹானி சங்கம்,
காயல்பட்டணம்.


         நன்றி- http://sufimanzil.org/
Related Posts Plugin for WordPress, Blogger...

Sunday, 14 September 2014

தப்ஸீர் புல்காதுல் ஹைரன்

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் முஹத்திதும் ,முபஸ்ஸிருமான மௌலவி ஹுசைன் அலி பாச்ரானி தேவ்பந்திகளின் இமாமே ரப்பானியான மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மாணவர் ஆவார் .

மௌலவி ஹுசைன் அலி பாச்ரானி தேவ்பந்தி திருக்குரான் ஷரீபுக்கு புல்காதுல் ஹைரன் என்னும் பெயரில் விரிவுரை என்னும் தப்ஸீர் ஒன்றை எழுதினார் . அதில் பின்வரும் தமது வஹாபிய விஷக் கருத்துகளை சேர்த்துள்ளார்.

Tafsir Bulghatul Hairan


அவர் தமது தப்ஸீரில் எழுதுகிறார் அவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடன் ஸிராத்தே முஸ்தகீம் பாலத்தில் நடப்பதாகக் காண்கிறார் .

அப்பொழுது நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஸிராத்தே முஸ்தகீம் பாலத்தில் இருந்து தவறி கீழே விழப் பார்க்கிறார்கள் என்றும் ,

அப்பொழுது இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் ஷைகு எவருக்காக படைப்புகளைப் படைத்ததாக எல்லாம் வல்ல அல்லாஹ் ஹதீது குத்ஸியில் கூறுகிறானோ அப்பேர்ப்பட்ட பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை  இவர் கீழே விழுவதை விட்டும் காப்பாற்றுகிறார் !!!

லா ஹவ்ல வலா ஹூவத்த இல்லா பில்லாஹ் !!!

குறிப்பு : ஸிராத்தே முஸ்தகீம் பாலம் என்பது இஸ்லாமிய நம்பிக்கையின்படி நாளை இறுதி தீர்ப்பு நாளில் எல்லா மனிதர்களும் கடந்து செல்ல வேண்டிய ஒரு தலை முடியின் அளவே உள்ள, நரக நெருப்பின் மீது உள்ள ஓர் பாலம் .

அதைக் கடப்பவர்கள் தான் நித்திய வாழ்வளிக்கும் சுவனும் செல்ல முடியும் .அது தலை முடியின் அளவுக்கும் ,வாளைப் போன்று கூர்மையாகவும் இருக்கும் . ஈமானில்லாத பாவிகள் தான் அந்த பாலத்தை கடக்க முடியாமல் அதில் இருந்து கீழே நரக நெருப்பில்  விழுவர் .

ஸ்கேன் பக்கம் 8
 
Tafsir Bulghatul Hairan Pg 8


இதே தப்ஸீரின் பிறிதொருஇடத்தில் எழுதுகிறார் எல்லாம் வல்ல ஏகனாகிய
அல்லாஹ்  ஜல்லஷானுஹுதஆலா நாம் ஒரு செயலை செய்யும் வரை நமது செயல்களை அறியாதவனாக இருக்கின்றான் .

இது நிச்சயமாக அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் ( அல் அலீம் ) என்பதை மறுக்கும் செயலாகும்  !!!

ஸ்கேன் பக்கம் 157 ,158
 
Tafsir Bulghatul Hairan Pg 157

Tafsir Bulghatul Hairan Pg 158

யா அல்லாஹ் !!! உன்னிடம் நாங்கள் இத்தகைய கொள்கையுடைய நபர்களை விட்டும் ,இத்தகைய கொள்கையுடையவர்களை ஆதரிக்கும் தீயவரை விட்டும் ,இத்தகைய கொள்கையுடையவர்களை நேசித்து  நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் வழிகேடர்களை விட்டும் பாதுகாவல் தேடுகின்றோம் !!!

ஆமீன் !!!
 
Related Posts Plugin for WordPress, Blogger...

மௌலிதும் ஷைகு ஷிப்லி நுஃமானியும்


           மௌலானா ஷிப்லி நுஃமானி (இறப்பு  1332 ஹிஜ்ரி) ( 1857-1914) இந்தியாவிலுள்ள தாருல் உலூம் நத்வத்துல் உலமா என்னும் இஸ்லாமிய மதரஸாவின் நிறுவனர்களில் ஒருவர் . இவரின் மாணவர்களில் தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் அகீதாவுடைய சுலைமான் நத்வியும் ஒருவர் .

அதன் உருவாகத்திற்கு பின் ,மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உண்டான கருத்து வேற்றுமையின் காரணமாக மாணாக்கர் சிலர் எதிர் போராட்டங்களில் ஈடுபட்டனர் .

இந்த சம்பவம் பற்றிய விவாதத்திற்கு பின் மௌலானா ஷிப்லி நுஃமானி எழுதுகிறார் ,

" இந்த போராட்டத்தின் போது,அது மீலாதுடைய மாதமாக இருந்ததால் மாணவர்கள் வழக்கம் போல் மௌலித் ஷரீப் கொண்டாட வேண்டும் என்று கூறினர் . (உர்து - ஜைஸா ஹமேசா கி மாமூல் தா )
ஆனால் எதிர் தரப்பினர் நான் இந்த மீலாத் விழாவில் சொற்பொழிவாற்றக் கூடும் என்று அஞ்சியதால் அவர்கள் மீலாத் ஷரீப் நடத்துவை விட்டும் தடுக்கப் பட்டார்கள் ,மேலும் இந்த நிலை மூன்று நாட்களுக்கு தொடர்ந்ததது . இதன் பின்னர் எதிர் தரப்பிடம் மீலாத் நடத்துவது தவிர்க்கப்பட்டால் அது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ,கோபத்தையும் ,பிளவையும் ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது .பின்னர் இறுதியாக மௌலித் ஷரீப் சில கட்டுப்பாடுகளுடன் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது "


[ நூல் - மகாலதே ஷிப்லி ,வால்யூம் 6,பக்கம் 131, பழைய பதிப்பு ,ஆசம்கர் ]

இணையதள பதிப்பு : http://www.urducl.com/Urdu-Books/969-416-227-009/p0171.php

Maqalate Shibli
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 13 September 2014

மஹ்மூதுல் ஹசன் மீது வழங்கபட்ட குப்ர் பத்வா


  மௌலானா ரஷீத் அஹ்மத் தனது நூலில் எழுதுகிறார் ,

" யாரேனும் ஒருவர் மர்ஸியா (இறந்தவர்களின் மீது புகழ்ந்து எழதப்படும் பாடல் )  எழுதினாலோ அல்லது படித்தாலோ அவர் ஃபாஸிக் (பாவி) "

[ நூல்- பத்வா ரஷீதீயா , வால்யூம் 2,பக்கம் 39 ]

ரஷீத் அஹ்மத் கங்கோஹி மேலும் எழுதுகிறார் ,

" கர்பலாவின்  ஷஹீதுகளின் மீது ஓதப்படும் அனைத்து மர்ஸியாக்களும் எரிக்கப்படவேண்டும் அல்லது புதைக்கப்படவேண்டும் "

[ நூல்-  பத்வா ரஷீதீயா ,பக்கம் 39 ,கராச்சி பதிப்பு ]

இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கை நூலான 'தக்வியத்துள் ஈமான் ' நூலுடன் சேர்ந்து வந்த துணை நூலான ' ஹாரிகுல் அஸ்ரார் ' என்னும் நூலில் மர்ஸியா எழுதுவதும் ,படிப்பதும் மஜூஸிகலின் வழக்கம் என்று எழுதியள்ளனர் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் .

மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி  மறைந்த பின்பு அவரது மாணவர் மஹ்மூதுல் ஹசன் ,மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியைப் புகழ்ந்து ஓர் மர்ஸியா எழுதினார் !!!

மௌலானா மஹ்மூதுல் ஹசன் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் 'ஷைகுல் ஹிந்த் ' உம் ,அகாபிர் எனப்படும் முன்னோடிகளில் ஒருவர் ஆவார் .
ஆச்சரியமாக மர்ஸியா அனுமதியில்லை என்ற ஷரத்து ,ஆகுமாக்கப்பட்ட செயலாகி விடுகின்றது  ! இது ஒருமுறை அல்ல பல முறை தேவ்பந்த் மூலம் வெளியிடப்பட்டுள்ளது .

இதோ அந்த மர்ஸியாவில் உள்ள சில வரிகள் , மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியைப் புகழ்ந்து  அவரது மாணவர் ஷைகு மஹ்மூதுல் ஹசன் எழுதியவை

தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் ஷைகுல் ஹிந்த் ஜனாப் மஹ்மூதுல் ஹசன் தனது எல்லா தேவைகளின் தீர்வு வழங்குபவராக தேவ்பந்திகளின் இமாமான ரஷீத் அஹ்மத் கங்கோஹியை நாடுகிறார் ,

' யாரிடம் நான் எனது தேவைகளை நிவர்த்தி செய்ய முகம் திருப்புவேன் !
எனது அனைத்து வெளிரங்க மற்றும் ஆன்மீக தேவைகளை நிறைவேற்றி வைப்பவர் மறைந்து விட்டார் ! "


கொளஸ் என்ற பதம் உதவி செய்பவர் ,துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பவர் என்று பொருள் தரும் .மௌலானா மஹ்மூதுல் ஹசன் மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை  கொளஸுல் அஃலம் என்கிறார் !!!


" அவர் தான் இரண்டாம் ஜுனைத் ,ஷிப்லீ ,இன்னும் அபூ மஸூத் அன்ஸாரி ,
அவர் தான் ரஷீத் ஏ மில்லத் ஏ தீன், கொளஸுல் அஃலம்,இமாமே ரப்பானி ! "


மௌலானா மஹ்மூதுல் ஹசன் மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை  இவ்வாறு மட்டுமல்லாது , 'முரப்பியே கலாயிக் ' ,'மஸீஹா ஏ ஸமான் ','காசிம் ஏ பைஜ் யஜ்தாஹ் ' ,இஸ்லாத்தை நிறுவியதில் சமமானவர் ,அனைத்து படைப்புகளையும் வழிநடத்துபவர் ,முஹ்யத்தீன் ஜீலானி ,எல்லா நன்மைகளின் நீருற்று ,தன்னிகரில்லாதவர் , இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெருமதிப்பும் மரியாதையும் செய்யத் தகுந்த படைப்பு ,  என்றெல்லாம் வாய் வலிக்க எழுதியள்ளார் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் அகாபிர் . என்னே இவர்களின் நியாயம் ???

மேற்கண்ட சொற்களை ஒரு இஸ்லாமியர் ஒரு வலியின் சந்நிதானத்தில் வைத்து கூறினால் அவரது மீது உடனே இந்த தப்லீக் வஹாபிகள் ஷிர்க் ,குப்ர் பத்வாக்களை அள்ளி வீசுவர் ,ஆனால் அவர்களே அவ்வாறு கூறினால் அது தான் இஸ்லாமிய நடைமுறை !!!

தனது கவிதைத் தொகுப்பின் குறிப்பில் பின்வருமாறு எழுதுகிறார் ,

"எனது வழிகாட்டிகள் ,எனது ஆசிரியர்கள் ,எனக்கு எல்லா ஆரம்பமும் எல்லா முடிவுமாக உள்ளவர்கள் !
எனது தலைவர்கள் ,எனது எஜமானர்கள் ,எனது இளவரசர்கள் .
ரஷீதும் காசிம் ஏ ஹைராத் ,இருவரும் போற்றுதலுக்குரிய ஆசிரியர்கள் "


இந்த சொற்களை தேவ்பந்தி முப்திகளிடம் அனுப்பிய இம்மாதிரியான சொற்கள் குப்ரில் சேர்க்குமா எனக் கேட்டோம் ,இவை தேவ்பந்தி தப்லீக் முன்னோடிகளின் நூற்கலில் இருந்து எடுத்தவை என்று கூறவில்லை .

எல்லா தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தின் முப்திகளும் ஒருமித்த குரலில் தங்களது வஹாபிய விசுவாசத்தை வெளிக்காட்டும் விதமாக இது குப்ர் என்றனர் !!!

ஆக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் உலமாக்கள் தங்களது ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் மீது தக்பீ ஃர் பத்வா கொடுத்துள்ளனர் .

கீழே உள்ள ஸ்கேன் ஆதாரங்களை காணவும்
Fatwa on Mahmoodul Hasan by Deoband

Fatwa on Mahmoodul Hasan by Deoband
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 3 September 2014

மௌலித் பற்றி இமாம் அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி


                ஷைக் அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) [இறப்பு 1052 ஹிஜ்ரி]  இந்திய துணை கண்டம் இந்நாள் வரை உருவாக்கிய மிக பெரிய இஸ்லாமிய அறிஞர்களுள்  ஒருவர்.அவர் தான் முதன் முதலில் இந்திய துணை கண்டத்தில் ஹதீஸ் கலையின் போதனைகளை நிறுவியவர். அன்னார் முகலாயப் பேரரசர்களான ஜகாங்கீர் ,ஷாஹ் ஜகான் காலத்தவர் .
                இந்திய துணை கண்டத்தை சார்ந்த சில  முஹத்தித்தீன்களுக்கு  ஷாஹ்  அப்துல் ஹக் அவர்களுக்கு முன்பு அரபு அறிஞர்களிடம் இருந்து  ஹதீஸ் அறிவிக்க இஜாஸா(அனுமதி) இருந்தது, ஆனால் அந்த அறிஞர்கள் ஹதீஸ் கற்பிக்க எந்த மதராஸாவும் ஆரம்பிக்க வில்லை அல்லது திட்டமிட்ட போதனை முறைகளை தொடங்கியதும் இல்லை.ஷாஹ் அப்துல் ஹக் அவர்களின் முப்பாட்டனார் புகாராவில் இருந்து இந்தியாவின் தில்லிக்கு புலம் பெயர்ந்தார்.

அவர் ஒரு முஹக்கிக் (அராய்ச்சியாளர் ) காக இருந்தார் ,தம் வாழ்க்கை முழுவதும் பழமையான இஸ்லாமிய கையெழுத்து பிரதிகளை கற்பித்தும் ,படித்தும் வந்தார்.அவர் எழுதிய பல நூற்களில் 'மதாரிஜுன் நுபுவ்வத்' மிகவும் பிரசித்தி பெற்றது.அது செய்யதுல் அன்பியா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் அவர்களின் சுயசரிதை. அதன் மூல பிரதி பார்ஸியில் எழுதப்பட்டது .

அன்னார் அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் சத்திய உலமாக்களுள் ஒருவர் .தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரும் அன்னாரின் நூற்களை கற்பித்து வருகின்றனர் .

ஷைகு அப்துல் ஹக் முஹத்தித் திஹல்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் வழிமுறை மௌலித் ஷரீப் ஓதுவதும் , பெருமானாரின் பிறப்பு பற்றிய சம்பங்களின் பொழுது எழுந்து நின்று சங்கை செய்வதும் ஆகும் .

அன்னார் கூறுகின்றார்கள் , " யா அல்லாஹ் ! உன்னுடைய மேலான திருச்சன்னிதானம் முன் சமர்ப்பிக்கும் அளவு என்னுடைய எந்த அமலுக்கும் மதிப்பில்லை . என்னுடைய எல்லா அமல்களிலும் ஏதோ சிறு குறைகள் ஏற்பட்டிருக்கும் ,மேலும் அந்த அமல்களில் என்னுடைய நிய்யத்தும் தொடர்புகொண்டிருக்கும் . எனினும் என்னுடைய ஒரு அமல் நன்மையானதும் ,கொளரவம் பொருந்தியதும் ஆகும் . அது என்னவெனில் மீலாது சபைகளில் நான் நின்று கொண்டு மிக்க பணிவுடனும்,மிகுந்த நேசத்துடனும் உன்னுடைய ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் அவர்கள் மீது ஸலாத்தும் ,ஸலாமும் கூறுகின்றேன் .  "

[ நூல் - அக்பாருள் அக்யார் ,பக்கம் 264 ]

Akhbarul_Akhyar

Akhbarul_Akhyar_page264

 
Related Posts Plugin for WordPress, Blogger...