இந்திய துணைக்கண்டத்தில் வஹாபியிசத்தின் நிறுவனர் இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) . இவர் துரதிருஷ்டவசமாக அக்காலத்தில் புகழும் ,பேறும் பெற்று விளங்கிய இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் .
இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) ==> அவரது தந்தை ஷாஹ் அப்துல் கனி திஹ்லவி (மறைவு 1203 ஹிஜ்ரி / 1788) அவர்கள் ==> அன்னாரது தந்தை இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்கள்
பால்கோட் நகரிலுள்ள இஸ்மாயில் திஹ்லவியின் சபிக்கப்பட்ட கபர் |
இவர் தமது காலத்தில் அரபகத்திற்குச் சென்று ,இப்னு அப்துல் வஹாப் நஜ்தியின் நூலான 'கிதாபுத் தவ்ஹீத் ' நூலை வாசித்து ,அதன் பால் ஈர்க்கப்பட்டு அதை உர்துவில் மொழிபெயர்த்து , தமது எண்ணங்களையும் உள்ளடக்கி 'தக்வியத்துள் ஈமான் ' என்று வெளியிட்டார் .
சவூதி தாருஸ் ஸலாம் பதிப்பகம் வெளியிட்ட கிதாபுத் தவ்ஹீத் - தக்வியத்துள் ஈமான் உர்து பதிப்பு ,வஹாபிய சகோதர பாசம் ! |
இந்த புத்தகம் இந்திய -பாக் துணைக்கண்டத்தில் இதற்கு முன்னர் எந்தவொரு வழிகெட்ட இயக்கமும் செய்ய இயலாத வண்ணம் இஸ்லாத்திற்கும் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கும் பெரும் கேட்டை விளைவித்தது .
நாடெங்கிலும் நடத்தப்பட்ட கண்மணி நாயகம் ﷺ அவர்களின் புகழ் பாடும் மவ்லிதுன் நபி மஜ்லிஸ்கள் , பித்அத் என்று அழைக்ப்பட்டன . வலிமார்களின் உரூஸ் நிகழ்வுகள் இஸ்லாத்திற்கு முரணானது என்று கூறப்பட்டன . வலிமார்களை நாடி ஜியாரத் செய்வதும் ,அவர்களிடம் உதவி தேடுவதும் குப்ர் என்று கூறினர் ,இன்னும் அப்துல் முஸ்தபா என்று பெயரிடுவதே ஷிர்க் என்றனர் . இந்த புத்தகம் தான் இந்திய -பாக் துணைக்கண்டத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் இடையே பிரிவினையை உண்டாக்கிய முதல் மற்றும் முன்னோடி நூல் .
பாமர இஸ்லாமியர் குழப்பத்தில் ஆழ்ந்தனர் . ஏனெனில் இந்த புத்தகம் மேற்கூறப்பட்ட அமல்களில் ஈடுபட்ட அவர்களையும் ,அவர்களின் முன்னோர்களையும் காபிர் என்றும் முஷ்ரிக் என்றும் கூறியது . ஒவ்வொரு வீட்டிலும் சண்டை,சச்சரவுகள் உண்டாயின . உறவினர்கள் ,குடும்பத்தினர் இடையே பிரச்சினைகள் வெடித்தன .
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை தில்லி ஜும்மா மஸ்ஜிதில் விவாதத்திற்கு அழைத்தனர் . அங்கு இஸ்மாயில் திஹ்லவி வெட்கி தலைகுனியும்படியான தோல்வியை தழுவினான் .
இன்னும் பெஷாவர் நகரத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை விவாதத்திற்கு அழைத்து ,அங்கும் தோல்வியை சந்தித்தான் .
இஸ்மாயில் திஹ்லவியின் சமகால உலமாக்களில் அவனின் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து விவாதித்தும் , நூற்கள் எழுதியும் ,பத்வாக்கள் வெளியிட்ட உலமாக்கள் சிலர்.இவர்களில் அவரது குடும்பத்தாரும் ,அவரது சிறிய தந்தை ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்களும் அடங்குவர் .
- அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் )
- மவ்லானா ரஷீதுதீன் கான் திஹ்லவி
- ஷாஹ் மக்ஸுசுல்லாஹ் திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
- ஷெய்கு முஹம்மது மூஸா திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
- ஷெய்கு முஹம்மது ஷரீப் திஹ்லவி
- முப்தி ஷுஜாவுத்தீன் அலி கான்
- அல்லாமா பஜ்லே ரஸூல் பதாயுனீ
- முப்தி ஸத்ருத்தீன் திஹ்லவி
- ஷெய்கு அஹ்மத் ஸயீத் முஜத்திதி ராம்பூரி
- ஷெய்கு ஹைதர் அலி பைஜாபதி
- மவ்லனா அப்துல் மஜீத் பதாயுனீ
- ஷெய்கு அப்துல் கபூர் ஸ்வாதி
- ஷெய்கு முஹம்மது சுலைமான் தஉன்ஸ்வி
- ஷெய்கு ஆலே ரஸூல் மறெர்ஹவி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் )
- மவ்லானா துராப் அலி லக்னவி
மதராஸ் உலமாக்களின் பத்வாவுக்கு ஒப்புதல் அளித்து தில்லி உலமாக்களும் 'தக்வியத்துள் ஈமான் ' என்ற வழிகெட்ட நூலுக்கு எதிராக பத்வா வெளியிட்டனர் .
தில்லியின் வீதியெங்கும் , ' இந்த நூல் கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும் , வலிமார்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும் இந்த நூலை யாரும் வாசிக்க கூடாது என்றும் . இத்தகைய நூற்களை வாசிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றென ' அறிவிப்பு செய்யப்பட்டது .
உஸ்தாதுல் உலமா மவ்லானா முஹம்மது வஜ்ஹீ சாஹிப் அவர்கள் 'தக்வியத்துள் ஈமான் ' நூலுக்கு மறுப்பு தெரிவித்து 'நிஜாமுல் இஸ்லாம் ' என்று நூலை எழுதினார்கள் . இந்த நூலுக்கு கல்கத்தாவைச் சார்ந்த 22 உலமாக்கள் ஒப்புதல் அளித்தனர் .
வழிகெட்ட 'தக்வியத்துள் ஈமான்' நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட சில நூற்கள் :-
- குல்ஜார் ஏ ஹிதாயத் - மதராஸ் முப்தி ,அல்லாமா முஹம்மது ஸிப்ஹதுல்லாஹ்
- தஹ்கீக் உல் பத்வா பி இப்தலில் தக்வா - அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி
- ஹயாத்துன் நபி - ஷெய்கு முஹம்மது ஆபித் சிந்தி
- தஹ்கீக் உஷ் ஷிர்க் வத் தவ்ஹீத் - ஹாபிஸ் முஹம்மது ஹசன்
- ஸலாஹுல் முஃமினீன் பி காதில் காரிஜீன் -மவ்லானா லுப் உல்ஹக் காதிரி
- ஹுஜ்ஜதுல் அமல் பி இஃப்த்தால் இல் ஹைல் - மவ்லானா மூஸா திஹ்லவி
- ரஸ்முல் கைராத் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் முஸ்தபாபாதி
- துஹ்பத் அல் முஸ்லிமீன் பி ஜஸ்சாபி செய்யதில் முர்சலீன் - மவ்லானா அப்துல்லாஹ் சஹ்ரான்புரி
- தஹ்லீல் மா அஹல்லாஹு பி தபஸீர் வ மா அஹ்ல் பிஹி லி கைரில்லாஹ் - மவ்லானா கலீலுர் ரஹ்மான்
- சபீப்ளுள் நிஜாஹ் இலா தஹஸீல் இல் பலாஹ் -மவ்லானா துராப் அலி லக்கனவி
- சபீனத் உல் நிஜாத் - மவ்லானா முஹம்மது அஸ்லமீ மதராஸி
- நிஜாமே இஸ்லாம் -மவ்லானா முஹம்மது வஹீதுதீன் கல்கத்தா
- குவத் உல் ஈமான் - மவ்லானா கறாமத் அலி ஜஉன்புரி
- அஹ்காக் உல் ஹக் - மவ்லானா செய்யத் பத்ருத்தீன் ரிஸ்வி ஹைதராபாதி
- கைர் உஸ் ஸாத் லி யவ்ம் மில் மியாத் - மவ்லானா கைருத்தீன் மதராஸி
- நேம் முள் இன்திபாஹ் லி ரப் இல் லிஸ்த்திபாஹ் - மவ்லானா முஅல்லிம் இப்ராஹீம் ,பாம்பே
- ஹிதாயத்துள் முஸ்லிமீன் இலா தரீக் கில் ஹக் கில் யகீன் - காழி முஹம்மது ஹுசைன் கூபி
- துஹ்பா ஏ முஹம்மதியா தர் ரத்தே வஹாபியா - மவ்லானா செய்யத் அப்துல் பத்தாஹ் முப்தி காதிரி குல்ஷனபாதி
- சிராஜுல் ஹிதாயத் - மவ்லானா குல்ஷனாபாதி
இறுதியாக இஸ்மாயில் திஹ்லவி,அவனது உஸ்தாத் செய்யித் அஹ்மத் ரேபரேலியுடன் ,அவர்கள் இருவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்கள் என்று தெரிந்ததும் , அல்லாஹ்வையும்,கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துபவர்கள் என்று தெரிந்ததாலும் , பால்கோட் நகர பதான் முஸ்லிம்களால்கொல்லப்பட்டனர் .
தேவபந்திகளும் , கைர் முகல்லித் வஹாபிகளும் அவர்கள் இருவரும் சீக்கியருக்கு எதிராக போரிட்டு மடிந்தனர் என்று கூறி வந்தாலும் , அதற்கு சரித்திர சான்றுகள் இல்லை .
கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் , 'பித்னா கொலையை விட கொடியது ' . இஸ்மாயில் திஹ்லவி மடிந்தாலும் , அவனின் மரபு தொடர்ந்தது . அவனின் தவறிய , வழிகெட்ட கொள்கைகள் பரவின .
இஸ்மாயில் திஹ்லவியின் மறைவுக்குப் பின் அவனது ஆதரவாளர்கள் இரு பிரிவாகப் பிரிந்தனர் . அவர்களில் ஒரு கூட்டத்தார் தாம் இமாம் அபூஹனீஃபா அவர்களை பின்பற்றுவோர் என்று கூறினார்கள் . இவர்கள் பின்னாட்களில் தேவ்பந்திகள் என்று அழைக்ப்பட்டனர் .
மற்றோரு கூட்டத்தார் இமாம்களின் தக்லீதை ஏற்க மறுத்து தம்மை அஹ்லே ஹதீத் என்று அழைத்துக் கொண்டனர் .
No comments :
Post a Comment