Thursday, 24 April 2014

ஹதீஸ்களின் வெளிச்சத்தில் வஹாபிகள் -1


குழப்பத்தின் திசை அறிவித்தல்:

ஹதீஸ் எண் 1
 அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்,அன்னை ஹஃப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டு முற்றத்தில்ச் நின்றவாறு கிழக்கு திசை நோக்கி சுட்டிக்காட்டி,அங்கிருந்து தான் (மார்க்கத்தில்) குழப்பம் உருவாகும்.அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு வெளிக்கிளம்பும் என இரண்டுஅல்லது மூன்று முறை சொன்னார்கள்.
அ-ர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு , நூல்:முஸ்லிம் பாகம் 2,பக்கம்-394 .

ஹதீஸ் எண் 2
  அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒருமுறை கிழக்குத்திசை நோக்கி,குழப்பம் அங்கிருந்து தான் உருவாகும். அங்கிருந்து தான் குழப்பம் உருவாகும். அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு வெளிக்கிளம்பும் என்று சொன்னார்கள்.
அ-ர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் பாகம் 2,பக்கம்-393 .

ஹதீஸ் எண் 3
      அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்திலிருந்து அண்ணல் நபியவர்கள் வந்தனர்.வந்தவர்கள், கிழக்கு திசையை சுட்டிக்காட்டி,நிராகரிப்பின் அடித்தளம் இங்குதான் உள்ளது. ஆம் ! ஷைத்தானின் கொம்பு இங்கிருந்துதான் வெளிக்கிளம்பும் எனக் கூறினர்.
அ-ர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் பாகம் 2,பக்கம்-394 .

ஹதீஸ் எண் 4
    கிழக்குத் தேசத்திலிருந்து சிலர் வெளிப்படுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவர்.ஆனால் அது அவர்களது தொண்டை குழிக்குக் கீழே இறங்காது.வில்லை விட்டு அம்பு விரந்து ஓடுவதைப்போல் அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள்.வில்லை விட்டுச் சென்ற அம்பு வில்லை நோக்கி வந்தாலும் வரலாம்.ஆன்னல் அவர்கள் மார்க்கத்திற்கு திரும்பமாட்டார்கள். அவர்களது அடையாளம் மொட்டையாகும் என நபிகளார் நவின்றனர்.
அ-ர் : அல்லாமா தஹ்லான் ரஹிமஹுல்லாஹு
நூல் : அத்துரருஸ் ஸனிய்யா,பக்கம்-49.

ஹதீஸ் எண் 5
        கிழக்குத் திசையிலிருந்து சில மனிதர்கள் தோன்றுவார்கள்.அவர்கள் குரானை ஓதுவார்கள்.ஆனால் அது, தொண்டை குழிக்குக் கீழே இறங்காது. அவர்கள் அமிழ்த்தப்பட அமிழ்த்தப்பட வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களின் இறுதிக்கூட்டம் தஜ்ஜாலுடன் இணைந்திருக்கும்.
நூல் : அத்துரருஸ் ஸனிய்யா,பக்கம்-50.

கிழக்குத் திசை எந்த இடம் ?

         அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒருமுறை எங்களிடையே உரை நிகழ்த்திய பொழுது,”இறைவா ! எங்களுக்காக எமது எமன் ஷாம் தேசத்திற்கு அருள் புரிவாயாக. இறைவா! எங்களுக்காக எமது எமன் ஷாம் தேசத்திற்கு எனப் (பிரார்த்தித்த) போது,அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் சிலர்,இறைத்தூதரே! எங்களின் நஜ்து(இன்றைய ரியாத்) க்கும் என்றனர். (அவர்களின் கோரிக்கையை பொருட்படுத்தாது மீண்டும் நபிகளார்) இறைவா ! எங்களின் ஷாம் தேசத்திற்கும், எமன் தேசத்திற்கும் அருள் புரிவாயாக! எனப் பிரார்த்தித்தனர்.அப்போதும் அவர்கள் இறைத்தூதரே ! எங்களின் நஜ்துக்கும் என்றனர். மூன்றாம் முறையாக நபிகள் நாதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் “ அங்கு தான் திடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும். ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் (அத்தகைய இடத்திற்கு நான் எவ்வாறு பிரார்த்திப்பேன் ? ) எனக் கூறினர்.
அ-ர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புஹாரி,பாகம் 2,பக்கம் 1051.

குறிப்பு :
1.”கர்னுஷ் ஷைத்தான்” என்ற அரபி வாக்கியத்திற்கு பொதுவாகவே ஷைத்தானின் கொம்பு என்று தான் பொருள் கொள்ளப்படும். ஆனால் தேவ்பந்த் வஹாபிகளுடைய ‘மிஸ்பாஹ்’ என்னும் அரபி அகராதி நூலில் ஷைத்தானின் ஆலோசனைக்கு உட்பட்டவன் என்பதாய் பொருள் தரப்பட்டிருக்கிறது.
2.மதீனாவின் கிழக்குத் திசையில் உள்ள நஜ்த் என்னும் தேசம் நன்மையும் அபிவிருத்தியும் அடையும் தகுதி வாயிந்த இடமல்ல என்பதை மேலே விவரிகப்பட்டுள்ள ஆறு ஹதீஸ்களும் நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகின்றன, ஏனெனில் அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் துஆ என்னும் நல்லாசியை இழந்த இடம் நஜ்து தேசம் ஆகும். ஆகையால் அங்கு ஒரு போதும் நன்மை விளையாது மாறாக நபிகள் நாதரின் எச்சரிக்கைப்படி திடுக்கங்களும்,குழப்பங்களும் தான் உருவாகும்.
3.மேலும் அத்தகைய குழப்பங்களுக்கும்,திடுக்கங்களுக்கும் காரணமாக அமையப்போகும் ஒரு ஷைத்தானின் கொம்பு நிஷ்கயம் தோன்றியே தீரும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
4. பின்னும் அங்கிருந்து உருவாகி வெளிப்படப்போகும் குழப்பங்கள் உலகின் நாலாபுறமும் விரைவாக பரவிவிடும் எனபதை ’கர்னுஷ் ஷைத்தான்’ அன்னும் அரபி வாக்கியம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் அரபி மொழியில் மிகவிரைவாக பரவும் ஒன்றுக்குத் தான் ‘கர்ன்’ அன்பதாகக் கூறுவர். உதாரணமாக அதிகாலையில் உதிக்கும்  சூடியனது ஒளிக்கதிகள் மிக வேகமாக உலகின் நாலாபாகங்களிலும் பரவி விடுவதால், அதற்கு ‘கர்னுஷ் ஷம்ஸ்’ அன்று சொல்லப்படுகிறது.
5.அடுத்து ‘கர்ன்’ என்ற அரபி சொல்லுக்கு ‘காலம்’ என்ற ஒரு பொருளும் இருக்கின்றது. இதில் ‘கர்னுஷ் ஷைத்தான்’ என்று அண்ணல் நபிகளார் சொன்ன வாக்கியத்திற்கு காலம் என்ற பொருல் கொள்ளப்படுமாயின், ஷைத்தனுடைய காலம் அங்கிருந்து தான் வெளியாகும் என்ற விளக்கம் கிடைக்கிறது.ஆக நபிகளாரின் துஆ மறுக்கப்பட்ட நஜ்திலிருந்து தான் ஷைத்தனுடைய காலம் துவங்கும் என்பதை நபிகளார் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.

நஜ்த் வஹாபிகளின் பாரம்பரியம்

ஹதீஸ் எண் 7
      எனக்கு நபித்துவம் அருளப்பட்ட துவக்க காலக் கட்டத்தில் பல குலத்தாரிடமும்,நான் இறைவனின் தூதரென்றும்,எனது நபித்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் எடுத்துரைத்தேன்.அப்பொது பனூஹனீபா குலத்தார் கூறிய பதிலைவிட மிகமிக வெறுக்கத்தக்க அருவருப்பான பதிலை வேரு எந்த குலத்தாரிடமும் நான் கேட்கவில்லை என அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்கள் கூறினார்கள்.
நூல்: அத்துரருஸ் ஸனிய்யா, பக்கம் 52.
குறிப்பு:
      தேவ்பந்திய வஹாபிகளின் இயக்கமான தப்லீக் ஜமாத்தை சார்ந்த ‘மஸ்வூத் ஆலிம் நத்வி’ என்பவர் பனூ ஹனீபா குலத்தார்க்கு பனூதமீம் என்று மற்றோர் பெயருண்டு எனக் குறிப்பிடுகிறார்.

ஹதீஸ் எண் 8
      அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் மூன்று கோத்திரத்தாரை வெறுத்தார்கள். அவர்கள் ஸகீப்,பனூ ஹனீபா,பனூ உமைய்யாவாகும்.
அ-ர் : இம்ரான் பின் ஹுசைன் ரலியல்லாஹு நூல்: திர்மிதீ.

ஹதீஸ் எண் 9
    நாங்கள் அண்ணலெம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லமவர்கலின் திருச்சமூகத்தில் அமர்ந்திருந்தோம்,காரூண்ய நபி கனீமத்துப் (யுத்தத்தில் கிடைத்த) பொருட்களை பங்கீடு செய்து கொண்டிருந்தனர்.அப்போது பனூ தமீம் (பனூ ஹனீபா)  குலத்தாரைச் சார்ந்த துல்குவைஸரா என்பான் அண்ணலாரிடம் வந்து, முஹம்மதே! நியாயமாக பங்கீடு செய்யும் ! என்றான். உடனே நபிகளார் உனக்கு நாசமுண்டாகட்டும் ! நானே நியாயமாக நடக்கவில்லையென்றால் இவ்வுலகில் வேறு யார் தான் நியாயமாக நடப்பர் ? நான் நியாயமாக நடந்து கொள்ளாமலிருப்பின்(இன்னேரம்) நீ கைசேதக்காரனாகவும்,நஷ்டவாளியாகவும் ஆகியிருப்பாய் எனக்கூறினர்.இதைக்கண்ட உமர் ரலியல்லாஹு அவர்கள்,இறைவனின் திருத்தூதரே ! இவனை வெட்டியெறிய எனக்கு அனுமதி தாருங்கள் எனக்கேட்க, இவனை விட்டு விடுங்கள்.இவனுக்கு சாதகமாக் ஒரு கூட்டமே இருக்கிறது.அவர்களின் தொழுகையும் நோன்பையும் உங்களில் ஒருவர் கண்டால்,அவர் ;தனது தொழுகை நோன்பு போன்றவற்றை மிக அற்பமாகக் கருதுவார்.அவர்கள் குர்ஆனை ஓதுவர் ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காது.அவர்கள் வில்லை விட்டும் அம்பு விரைந்தோடுவதைப் போன்று இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவர் எனப் பெருமானார் நவின்றனர்.
அ-ர் : அபூ ஸயீதில் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு நூல்:மிஷ்காத் ,பக்கம் 535/புஹாரி,பாகம் 2,பக்கம்1024.

ஹதீஸ் எண் 10:
    குழி விழுந்த கண்களும்,புடைத்த நெற்றியும்,அடர்ந்த தாடியும்,உப்பிய கன்னமும்,மொட்டைத் தலையும் கொண்ட அடையாளமுள்ளவன் அண்ணல் நபிகளாரின் திருச்சமூகத்தில் வந்து “ முஹம்மதே ! அல்லாஹுவை அஞ்சிக் கொள்ளும்” என்றிட அதற்கு நபிகளார், நானே அல்லாஹுவிற்கு அஞ்சாது மாறு செய்தால் பின் எவர் தான் அல்லாஹ்வை அஞ்சுவர் ? இறைவன் இப்புவியிலுள்ளோர்க்கு என்னை அமீனாக ஆக்கியுள்ளான்.ஆனால் நீ என்னை ஆமீனாக ஏற்றுக் கொள்ளவில்லை எனக்கூறினர்.
     அப்போது அங்கிருந்த நபிதோழர்களில் ஒருவர் நபிகளாரை நோக்கி,இறைவனின் திருதுதரே ! இவனைக் கொன்றொழிக்க எனக்கு அனுமதி வழங்குங்கள் என வேண்டிட அதை விட்டும் அவரை வள்ளன் நபி விலக்கினர்.சிறிது நேரத்திற்கு பின் அந்த் முனாஃபிக் சென்றதும்,”இதோ இவனின் சந்ததியின்றும் ஒரு கூட்டம் வெளிப்படும்.அவர்கள் குர்ஆனை ஒதுவர்.ஆனால் அது அவர்களது தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காது. அவர்கள் வில்லை விட்டும் அம்பு விரைந்தோடுவதைப் போன்று இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுடன், இஸ்லாமியர்களுடன் போர் புரிவர். ஆனால் காஃபிர்களுக்கு துணைபுரிவர் என்பதாக நபிகள் நாதர் நவின்றனர்.
நூல்:மிஷ்காத் பக்கம் 535.
 










Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 23 April 2014

வஹாபிய வரலாறு - 3

இந்தியாவில் வஹாபிகள்
       அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினுடைய அடிப்படைக் கொள்கைக்குரிய நாயகர் தான் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்களை நம்மைப் போன்ற ஒரு சராசரி மனிதர் என்று , முதன்முதலில் இந்தியாவில் வெளிப்படுத்திய கூட்டம் இல்யாஸி தப்லீக் ஜமாத்தும் அவர்தம் அகாபிர்கள்.
          பெருமானார் அவர்களை ஒரு சாதாரண மனிதர் என்று சித்தரிக்கின்ற பிரச்சினை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்திய தேசத்தில் ஊடுருவியது.வரலாற்றினுடைய குறிப்புகளை சற்றே புரட்டினால் இந்த உண்மை விளங்கும்.கி.பி.1815ம் ஆண்டு இந்தியாவுக்குள் வர்த்தக அமைப்பாக காலடி எடுத்து வைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1885ல் இந்த தேசத்தில் மிக பலமாகக் காலூன்றியது.1885க்கு பின்னால் 1910ல் உத்திரபிரதெசம்,ரேபரேலி என்னும் கிராமத்தில் பிறந்தவர் செய்யத் அஹமத்,சிறுவயதில் தன் பெற்றோரை இழந்து அநாதையாகி தன் பிழைப்புக்கு வழி தேடி டில்லி மாநகரத்தை நோக்கி வந்தார். வந்தவர்,அவருக்கு சரியான பிழைப்பு கிடைக்காமல் பல நாட்கள் பசியும் பட்டினியுமாய் அலைந்து, அப்போது டில்லியில் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடைய மகனார், அல்லாமா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடைய மதரஸாவிலே ஒரு மாணவராக சேர்ந்தார். சில மாதங்கள் மட்டுமே அவருடைய மதரஸாவிலே கல்வி பயின்ற அவர், அல்லாமா அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடத்தில் பைஅத்தும் பெற்று முரீதுடைய அந்தஸ்துக்கும் உயர்ந்தவர்.
    முரீது கொடுக்கப்பட்ட இவர் தன்னுடைய ஷைகால் தரீக்காவின் போதனைகள் பயிற்றுவிக்கப்பட்ட போது,அந்த போதனைகளை ஏற்க மறுத்தார் என்பதோடு அந்த போதனைகளை மிகமோசமாக விமர்சனமும் செய்தார்.ஆறு மாதம் கூட அல்லாமா அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவ்ர்களுடைய மதரஸாவிலே கல்வி பயிலாத இவர், அல்லாமா அப்துல் அஜீஸ் அவர்களுடைய சகோதரியின் மைந்தர்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவி என்பவரை தன்னுடைய சிந்தனைக்கு தோதாக வளைத்து மாற்றினார். அவரோடு மௌலவி அப்துல் ஹை லக்னவி என்பவரும்,கான்பூரைச் சேர்ந்த கராமத் அலி என்பவரும் இந்த நபரால் வளைக்கப்பட்டார்கள். இவருடைய போக்கை தெரிந்து கொண்ட அல்லாமா அப்துல் அஜீஸ் திஹ்லவி அவர்கள், அவரை மதரஸாவிலே இருந்து வெளியேற்றியதோடு மட்டுமல்லாமல்,தன்னுடைய ஸில்ஸிலாவில் இருந்தும் நீக்கினார்கள்.
       அங்கிருந்து நீக்கப்பட்ட அவர்,அப்போது டில்லியில் கூலிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த அப்துல் கரீம் பிண்டாரியின் கூலிப்படையில் சென்று இணைந்து கொள்கிறார். இந்த கூலிப்படையின் வேலை கூலிக்கு ஆட்களை கொலை செய்வது,வேலை இல்லாத பொழுது இரவில் கொள்ளை அடிப்பது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அப்துல் கரீம் பிண்டாரியை வைத்து தான், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கட்டுப்படாதவர்களை அடக்கினார்கள்,நிர்பந்தித்தார்கள். இந்த ரேபரேலியைச் சேர்ந்த செய்யித் அஹ்மத் கான் ,அப்துல் கரீம் பிண்டாரியின் கூலிப்படையில் ஆறு ஆண்டுகள் ஒரு அங்கமாக இருந்தார்.அப்போது தான் பிரிட்டிஷாருக்கும் செய்யத் அஹமத் கானுக்கும் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக,பிரிட்டிஷார் அவரோடு இணந்து முன்னூறு நபர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள்.மக்கா சென்று திரும்பியதற்கு பின்னால் செய்யத் அஹமத் கானும்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவியும்,அப்துல் ஹை லக்னவியும் இன்னும் அவரோடு இணைந்த பல நபர்களும் டில்லியில் இருக்கின்ற சிறிய சிறிய மஸ்ஜிதுக்குள்ளெ நுழைந்து அங்கெ பயான் செய்கின்றோம் என்ற பேரிலே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை முதன்முதலாக நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் என்று கூறினார்கள்.
           இந்த கொள்கைக் குழப்பத்தின் துவக்கம் இந்திய தேசத்தில் 1910க்கு பிற்கு தான் ஏற்பட்டது.இதே பிரச்சனையை தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக கைர் முகல்லிது  வஹாபிகளான ஜாக்,நஜாத்,தௌகீத்,சலஃபீ,அஹ்லே ஹதீஸ்,ஜமாதே இஸ்லாமி போன்றவர்கள் பேசிய பொது கொந்தளித்த தமிழ் இஸ்லாமிய சமூகம் ,மிழ் இஸ்லாமிய உலமா சமூகம்  இதை முதலில் வெளிப்படுத்திய தேவ்பந்த் தப்லிகீ ஜமாத் மீது இன்றும் வாய்மூடி மௌனமாய் இருப்பது வேதனையிலும் வேதனை .
                 இந்த கருத்து மோதலுக்குரிய விஷத்தை இவர்கள் மஸ்ஜிதுகளிலே பிரசங்கம் செய்த போது அப்பாவி மக்கள் திடுக்கிட்டார்கள்.விஷயம் டில்லியிலுள்ள பெரும் பெரும் உலமாக்கள்,முஃப்திகளினுடைய சிந்தனைக்கும்,கவனத்திற்கும் கொண்டு செல்லப் பட்ட போது,டில்லியிலுள்ள ஜாமியா மஸ்ஜிதில் தொண்ணூறு உலமாக்கள் திரண்டார்கள்.பெருமானார் அவர்களை ஒரு சாதாரண மனிதர் என்று பேசும் விஷயத்திற்கு ஆதாரத்தை கேட்ட போழுது அவர்கள் மழுப்பத்துவங்கினார்கள்,முன்னுக்கு பின் முரணாக உளறினார்கள்.இதனுடைய வெளியீடு அவர்கள் எந்த மஸ்ஜிதுகளிலும் ஏற்றப்படக்கூடாது, என்பதோடு அவர்கள் வழிகேடர்கள் என்ற ஃபத்வாவையும் வெளியிட்டார்கள்.
        இதே இயக்கம் தரீகத்துல் அஹமதியா என்ற பெயரிலே மீண்டும் செய்யத் அஹ்மத் கானைக் கொண்டு வெளிவந்தது.மக்கள் அவர்களை புறக்கணித்து,மஸ்ஜிதுகளை விட்டு விரட்டிஅடித்த போது,பல்வேறு இடங்களில் இவர்கள் கேவலப்படுத்தப்பட்டதற்கு பின்னால்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவியுடன் இருந்த ஒரு கூட்டம்,அவர்களும் மார்க்கம் பயின்ற ஆலிம்கள்,இந்த கொள்கையை இந்திய முஸ்லிகளும்,இந்திய இஸ்லாமிய உலமாக்களும் புறக்கணிக்கின்றனர், எனவே இந்த கொள்கையை தற்சமயத்திற்கு நாம் வெளிப்படையாக பேச வேண்டாம்,தற்போது இந்த விஷயங்களையெல்லாம் மறைவாக வைத்துக்கொள்வோம்,முதலில் மனிதர்களை நம் வசமாக ஈர்த்து அவர்களை நம் அபிமானத்திற்கு உரியவர்களாக திருப்பியதற்குப் பின்னால்,அவர்களிடம் மெல்ல,மெல்ல சன்னச்சன்னமாக தனிமையில் அவர்களுக்கு நாம் போதிப்போம் என்ற ஒரு கருத்து அவர்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட போது,அந்த கருத்தை அவர்களிலேயே சிலர் ஏற்க மறுத்தார்கள்.
       அவ்வாறு ஏற்க மறுத்தவர்கள் அவர்களில் இருந்து பிரிந்து டில்லியில் இருந்து வெளியேறி பஞ்சாபை நோக்கி செல்கிறது,அவர்கள் தான் நவாப் சித்திக் ஹசன் கான் பொபாலைச் சேர்ந்தவர்,காதி வஹீதுஸ்ஸமான் அமிர்தரஸை சேர்ந்தவர்.இவர்கள் வெளிப்பட்டு இதே வஹாபியக் கொள்கையை நாங்கள் பகிரங்கமாகத் தான் பேசுவோம்,பெசுவது சரிதான் என்று சொன்னால் அதை ஏன் மக்களிடத்தில் மறைத்து பெசவேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து பகிரங்கமாக பேசத் துவங்கினார்கள்,அது மட்டுமல்ல அவர்கள் தங்களுக்குத் தாங்களே ‘அஹ்லே ஹதீஸ்’ என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்கள்.
        இந்த நிலையில் வஹாபிய கொள்கையை மறைத்து பேச வேண்டும் என்று பிரிந்த கூட்டம் செய்யத் அஹ்மத்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவி இவர்களோடு இன்னும் சிலர் சேருகின்றனர்.அவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு நபர் மௌலவி கலீல் அஹமத் அம்பேட்டி,மௌலவி காசிம் நானூத்வி,மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி. இதில் மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியும்,மௌலவி அஷ்ரஃப் அலி தானவியும் அல்லாமா முஹாஜிர் மக்கி ரஹ்மதுல்லாஹி அவர்களிடம் முரீதாகவும்,கலீஃபாக்களாகவும் இருந்தார்கள்.
   ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை மார்க்க கல்வி பயின்ற ஒரு மாணவர் மௌலவி இல்யாஸ் வளர்ந்து வாலிபர் ஆனபொழுது,அவருடைய சிந்தனைக்குள் இருந்து, கற்பனைக்குள் இருந்து இதே வஹாபிய கொள்கைக்கு உரிய ஒரு இயக்கம் ஒருவாயிற்று. அந்த இயக்கத்திற்கு அவர்களால் வைக்கப்பட்ட பெயர் தான் ‘தப்லீக் ஜமாத்’.
            



Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday, 22 April 2014

வஹாபிய வரலாறு - 2

ஷைகு அப்துல் வாஹ்ஹாப் நஜ்தீ :

               ஹிஜ்ரி 1203ல் துருக்கி சுல்தான் இரண்டாவது அப்துல் மஜீத் கான் மார்க்கப்பற்று நிறைந்த அரசராக இருந்து காலமானார் .இவருக்குப் பின் துருக்கி சாம்ராஜ்யம் முழுவதும் குழப்பமும் யுத்தமுமாக இருந்த போது,இச்சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இப்னு தைமியாவை பின்பற்றும் ஷைகு அப்துல் வஹ்ஹாப் நஜ்தீ சூழ்ச்சி செய்து தலைவரானார் .
                              தர்இயா என்னும் ஊரை தமது இருப்பிடமாக கொண்டார்.இந்நிலையில் தர்இயாவின் அமீரான முஹம்மதிப்னு சஊத் இவருக்கு பக்கபலமாக இருந்தார்.அப்துல் வஹ்ஹாப்  தனது உறவினர்களை அரசு அதிகாரிகளாக்கினார்.அப்துல் வஹ்ஹாப் நஜ்தீயின் பெயர் குத்பாவில் இணைக்கப்பட்டது.காரிஜியாக்கள்,ஜாஹிரிய்யா,முஃதஸிலா போன்றோரின் கொள்கைகளிலிருந்து பலவற்றை திரட்டி நூல் ஒன்றை எழுதினர். அவரது இளைய மகன் முஹம்மது அந்த நூலுக்கு மெருகூட்டி "கிதாபுத் தௌஹீத்" என்று பெயரிட்டார்.

பின்குறிப்பு  :

       அப்துல் வஹ்ஹாப் நல்லவரென்றும். 'ழாகிர்' ,'பாத்தின்' இல்முகளில் தேர்ந்தவரென்றும். 'கிதாபுத் தௌஹீத்" அவரது மகனால் எழுதப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். எனினும் தவ்ளீஹுல் ஹக்,சைபுல் ஜப்பார்,அபாத்திலே வஹ்ஹாபியா,வசீலயே ஜலீலா,துல்பிகார் ஹைதர்ரிய்யா அலா அக்னாகில் வஹ்ஹாபியா,அன்வாரே ஆப்தாயே சதாகத் போன்ற நூல்களும்,இன்னும் பல்வேறு ஆதாரங்களை கோண்டும்,வஹாபிகளின் மூலகுரு அப்துல் வஹ்ஹாபாகவே காணப்படுகிறார். மேற்படி நூலும் இவர் எழுதிய நூல் என்றே சொல்லப்படுகிறது.

ஷைகுன் நஜ்த் முஹம்மது இப்னு அப்துல் வாஹ்ஹாப் நஜ்தீ :

           நபிகள் நாதரின் வஹ்ஹாபிகள் பற்றிய முன்னறிவிப்பு ஹிஜ்ரி 1221ல்  முழுவதுமாய் நிறைவேறியது.இந்த வருடத்தில் இருந்து தான் நஜ்தில் பித்னாவும்,பசாத்தும் தோன்றின.ஷைகு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்னும் பெயருர்க்கேற்ப அதற்குரிய அப்ஜத் கணக்கான 1221 ஷைத்தானிய உச்சம் அடைந்து தலைவிரித்தாடியது.ஷைகுன் நஜ்த் தலைவரான  பின் குத்பா ஓதும் பொதெல்லாம்  ' நபியைக் கொண்டு ஷபாஅத் தேடுபவன் காபிர் ' என்று ஓதுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

         இவருடன் பிறந்த இவரது மூத்த சகோதரர் ஷைகு சுலைமான் இவரைக் கண்டித்து பல பத்வாக்கள் வெளியிட்டுள்ளார்.மேலும் இவர் தந்தை அப்துல் வஹ்ஹாபையும்,சகோதரர் ஷைக்குன் நஜ்த்தையும் கண்டித்து "அஸ்ஸவாயிகுல் இலாஹியா பீ ரத்தீ அலல் வஹ்ஹாபியா"  என்ற மறுப்பு நூலை வெளியிட்டுள்ளார் .ரத்துல் முக்தார் நூலை எழுதிய இமாம் இப்னு ஆபிதீன் ரஹீமஹுள்ளஹு அவர்கள் பாகம் 3,பக்கம் 339ல் ஷைகுன் நஜ்தை பற்றி தெளிவாக எழுதியுள்ளார்கள் . அக்காலத்தில் மக்காவின் முப்தியாக இருந்த அல்லாமா செய்யத் அஹமத் தஹ்லான் மக்கி ஷாபி ரஹீமஹுல்லாஹு அவர்கள் , 'துரருஸ் சனிய்யா பீ ரத்தீ அலல் வஹ்ஹாபியா' என்னும் நூலிலும் இது பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

           மேலும் ஹிஜ்ரி 1221ம் ஆண்டு மக்காவிலுள்ள பெருமை வாய்ந்த உலமாக்கள் ஷைகுன் நஜ்த்கு 'ஹதிய்யா மக்கிய்யா ' என்று லக்னத்துச் செய்து பாத்வா ஒன்று வெளியிட்டுள்ளனர் .அதன்றி அல்லாமா அஹ்மத் பின் அலீ பஸயி அவர்கள் 'பஸ்லுல் கிதாப் பீ ரத்துல் ழலாலதி இப்னு அப்துல் வஹ்ஹாப்'  என்னும் பெயரிலும் ,அல்லாமா செய்யத் ஜவ்வாத் அலவீ துரைமீ அவர்கள் 'மிஸ்பாகுல் அனாம்' என்ற பெயரிலும் மறுப்புரைகள் எழுதியுள்ளார்கள்.

               


               
                
Related Posts Plugin for WordPress, Blogger...

வஹாபிய வரலாறு -1

இந்த தளம் தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகளை அம்பலப்படுத்தும் தளம் ஆதலால் ,யார் இந்த வஹாபிகள் அவர்தம் கொள்கைகள் என்ன ,அவர்தம் முன்னோடிகள் யார் என்று அறிவது ஒரு தெளிவைத் தரும் . வஹாபிய வரலாற்றுச் சுருக்கம் பின்வருமாறு.

இப்னு தைமியா

Ibn Taymiyyahs Grave


          வஹாபிகளுக்கு இமாம் ஆனவர் ஷைகு அப்துல் வாஹ்ஹாப் நஜ்தி என்பவர்.இவருக்கு முன்பே அந்த நவீன கொள்கைகளை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தியவர் இப்னு தைமியா என்பவர்.
இவரின் முழுப் பெயர் அஹ்மது  இப்னு அப்துல் ஹலீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபி அல்  காஸிம் இப்னு தைமியா, தகியத்தீன் அபு அல் அப்பாஸ் இப்னு ஷிஹாப்பத்தீன் இப்னு மஜ்த் அல் தீன் அல் ஹர்ரனி அல்  திமிஷ்கி அல் ஹன்பலீ (661-728).
                                இவர் ஹிஜ்ரி ஏழாம் நூற்றண்டு தம்மை ஹன்பலீ மத்ஹபுடையவர் என்று சொல்லிக் கொண்டு வெளிப்பட்டார் .ஆரம்ப காலத்தில் மார்க்க ஞானங்கள் கற்று கல்வியில் தேர்ந்த அவர் காலத்தின் சூரியன் என்று புகழப்பட்டார் . ஆனால் காலம் செல்ல செல்ல மார்க்க கொள்கைகளில் தடம்புரண்டார்.அகக் கண் குருடரானார். இறைவனால் இதயத்திலும் செவியிலும் முத்திரையிடப்பட்டார்.
                     இவர் இயற்றிய பல நூல்களில் "சிராத்துல் முஸ்தகீம்"  என்பதும் ஒன்று. இதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,அஹ்லெ பைத்துகள்,சஹாபாக்கள்,இமாமே முஜ்தஹித்,வலிமார்கள் போன்றோரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார். இமாம்களின் இஜ்மாவுக்கு முரணாக மார்க்கச் சட்டங்களை இயற்றியுள்ளார்.
         இதுபற்றி இவரை கண்டனம் செய்தும்,சபித்தும் அவரது சமகால உலமாக்களான ஷைகுல் இமாம் முஹம்மது பாஸீ, குத்வத்துல் முஹத்திஸீன் ஷைகு இப்னு ஹஜர் மக்கி,ஷைகுல் முஹத்திஸீன் இஜ்ஜு
த்தீன் ஜமா,ஷாரிஹ் சஹீஹ் புஹாரி,ஷைகுல் மஷாயிக் அஹமத் கஸ்த்தலானி ,ஷைகுல் இஸ்லாம் தகியுத்தீன் சுப்கீ ரஹீமஹுல்லாஹு

போன்றோரும்,இன்னும் பல பெரியோர்களும் எழுதியுள்ளார்கள்.
       இவரது வரம்பு மீறிய அநியாயத்தை பொறுக்க முடியாத மிஸ்ரு அரசாங்கம் இவரை பலமுறை சிறையில் அடைத்தது.முடிவில் ஷாம் தேச அரசு இவரை கைது செய்து ,திமிஷ்க் சிறையில் சாகும்  வரை அடைத்தது .இவர் ஹிஜ்ரி 728ல் இறந்தார்.

வலிமார்களின் கப்ருகளை தரைமட்டமாக்க வேண்டும் என கூப்பாடு போடும் வஹாபிகள் தங்களின் வஹ்ஹாபிய மூல குருவான இப்னு தைமியாவின் கப்ர் இருக்கும் நிலையை மேலே உள்ள படத்தில் காணலாம் . இப்னு தைமியாவின் கப்ர்  பராம்கெஹ் நகர் அருகில் டமாஸ்கஸ் பல்கலைக்கழகம் வளாகத்தில் சில நிர்வாக கட்டிடங்களுக்கு இடையில் புதர்களுக்கும் குப்பைகளுக்கும் இடையில்  உள்ளது  !!!  
Related Posts Plugin for WordPress, Blogger...