நவீனகால இணையதள இல்யாஸி தப்லீக் ஜமாத்தின் வினோதமான பிரச்சாரம், குப்ரியத்தான விஷயங்களை எழுதியும் ,பரப்பியும் வந்த இஸ்மாயில் திஹ்லவி , அஷ்ரப் அலி தானவி , ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,காஸிம் நாணோத்வி ,கலீல் அஹ்மத் அம்பேத்வி போன்றோருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை . அவர்கள் கூறியதற்கு அவர்களே பொறுப்பு .
தப்லீக் ஜமாஅத் இவர்களை ஏற்கவில்லை .நாங்களும் ஸுன்னத் ஜமாத் தான் .அதுவும் பிக்ஹில் ஹனபி ,ஷாஃபி மத்ஹபை பின்பற்றுகின்றோம் . அகீதாவில் அஷ்அரி ,மாதுர்தியாக உள்ளோம் . இன்னும் சொல்லப்போனால் நாங்கள் தஸவ்வுப் உடைய ஸில்ஸிலா உடையவர்களாக உள்ளோம் .
தப்லீக் ஜமாஅத் அமல்களை செயல்படுத்தாத நவீன கால இஸ்லாமிய சமூகத்திடையே அதை உயிர்ப்பிக்கவே வந்துள்ளது . இதைக் கொண்டு இன்று எத்தனை அநேகம் பேர்கள் தொழுகையாளிகளாக மாறியுள்ளனர் .எனவே அது தான் அசல் நோக்கம் . தப்லீக் ஜமாஅத் முன்னோடிகள் வஹாபிகளுக்கு எதிரி என்றல்லாம் பிரச்சாரம் செய்து வருகின்றனர் .
பாமர இஸ்லாமியர் ஒருவர், கேட்பதற்கு மிகவும் எதார்த்தமாக உள்ள விஷயங்கள் தானே என்று எண்ணவும் கூடும் . ஆனால் தேவ்பந்தி முன்னோடிகளுக்கும் ,இல்யாஸி தப்லீக் ஜாமத்திற்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதை ஆதாரங்களுடன் விரிவாக காண்போம் .
தப்லீக் ஜமாஅத்
தப்லீக் ஜமாத்தின் முதல் அமீர் முஹம்மத் இல்யாஸ் காந்தலவி (மறைவு ஹிஜ்ரி 1362 / 1944 -44 ஆம் ஆண்டு ) - தப்லீக் ஜமாஅத்தின் நிறுவனர் .
ரஷீத் அஹ்மத் கங்கோஹி(பிறப்பு 1829 ஆம் ஆண்டு ) 1905ஆம் ஆண்டு மறைந்தார் . இல்யாஸ் காந்தலவி அவரிடம் 1899 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1315) பைஅத் செய்தார் .
அதன் பின்னர் சில காலம் கழித்து மவ்லவி இல்யாஸ் , மற்றோரு தேவ்பந்தி முன்னோடியான கலீல் அஹ்மத் அம்பேத்வியிடம் பைஅத் செய்தார் .
தேவ்பந்தி பிர்காவின் உலமாவான அபுல் ஹசன் நத்வி ,தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் இல்யாஸ் காந்தலவியின் வரலாற்றை கூறும் நூலை எழுதியுள்ளார் . அதன் பேர் 'மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்' என்பதாகும் . அந்த நூலுக்கு அணிந்துரை எழுதியவர் மவ்லவி இல்யாஸுடன் ஆரம்ப காலத்தில் பழகியவரும் , அவருடன் மேவாத் நகரில் இணைந்து சுற்றுப்பயணம் செய்தவருமான மன்ஸுர் நுஃமானி தேவ்பந்தி .
அதில் பல இடங்களில் இல்யாஸ் காந்தலவிக்கும் ,குப்ரான கொள்கையுடைய தேவ்பந்தி முன்னோடிகளுக்கும் உண்டான நெருங்கிய பந்தத்தை விவரிக்கிறார் .
இல்யாஸ் காந்தலவியை பற்றி அவரது தாய் வழி பாட்டி அம்மி பீ பற்றி கூறும் பொழுது ' இல்யாஸ் , நான் புனித ஸஹாபாக்களின் நறுமணத்தை உன்னிடம் நுகர்கின்றேன் '. சில நேரம் அவரது கையை இல்யாஸின் முதுகின் மீது வைத்தவராக அம்மீ பீ கூறுவார் ,' என்ன விந்தை புனித ஸஹாபா பெரும்மக்களின் உருவத்தை ஒத்தவர்கள் உன்னுடன் நடமாடுதை காண்கிறேன் ? '
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 4 ]
ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் நெருக்கம் :
மவ்லவி இல்யாஸின் மூத்த சகோதரர் முஹம்மது யஹ்யா 1893ஆம் ஆண்டு முதல் ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் இருந்தார் . முஹம்மது யஹ்யா தனது தந்தையின் அனுமதியுடன் இல்யாஸ்
காந்தலவிக்கு 10 அல்லது 11 வயது இருக்கும் பொழுது 1896 அல்லது 1897 ல் கங்கோஹ்கிற்கு மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் கல்வி கற்க , தம்முடன் அழைத்து வருகின்றார் .
தமது 10 வயதில் வந்த தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் இல்யாஸ் காந்தலவி ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மறைவு வரை 1905 ஆம் ஆண்டு வரை அவருடனே தமது வாலிப காலத்தின் பெரும்பகுதியை கழித்தார் . அவர் மறையும் பொழுது இல்யாஸ் காந்தலவிக்கு வயது 10 .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 8,9 ]
இல்யாஸ் காந்தலவிக்கு , மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் உண்டான நெருக்கம் எத்தகைய உறுதியானது என்றால் , மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி இல்லாமல் அவருக்கு மனச் சாந்தி இல்லை . இல்யாஸ் காந்தலவி அடிக்கடி , பின்னிரவுகளில் உறக்கம் கலைந்து எழுந்து ,ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் முகத்தை தரிசனம் செய்த பின்னரே உறங்க செல்வார் . மவ்லானா ரஷீத் அஹமத் கங்கோஹியும் அவரிடம் பிரியமாக இருந்தார் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 9 ]
மவுலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி 1905 ஆம் ஆண்டு மறைந்தார் . மவுலானா இல்யாஸ் ரஷீத் அஹமத் கங்கோஹியின் மரணத் தருவாயில் அவரின் படுக்கை அருகே இருந்து ,ஸுரா யாஸீன் ஓதிக் கொண்டே இருந்தார் . ரஷீத் அஹமதின் மரணத்தைக் கொண்டு மிகவும் வேதனை அடைந்த அவர் , " இரண்டு அதிர்ச்சிகள் எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக இருந்தது . எனது தந்தையின் மரணம் ,மற்றோன்று மவ்லானா ரஷீத் அஹமத் கங்கோஹியின் மரணம் " என்று அடிக்கடி கூறுபவராக இருந்தார் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 11 ]
தேவ்பந்தின் தொடர்பும் ,கலீல் அஹ்மத் ஸஹ்ரான்பூரியின் தொடர்பும் :
1908ல் மவ்லானா இல்யாஸ் ,தேவ்பந்த் அரபிக் கல்லூரிக்கு சென்று திர்மிதி ,மற்றும் ஸஹீஹ் புஹாரி ஆகியவற்றை மவுலானா மஹமூத் ஹசனிடம் இருந்து கற்றார் . மஹ்மூத் ஹசன் ,மவ்லானா இல்யாசை அவரது ஆசான் ரஷீத் அஹமத் மறைந்து விட்டதால் ,கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியிடம் சென்று ஆத்மீக பயிற்சியும் ,அறிவுரையும் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினார் . இதன் பின்னர் அவர் ஸுலூக் கின் பல்வேறு நிலைகளை கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியிடம் கற்றார் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 11 ]
ஒரு முறை நான் நோய்வாய்ப்பட்டு ,மிகவும் உடல் நலிவுற்று படியில் கூட நடந்து செல்ல இயலாத நிலையில் இருந்தேன் . மவுலானா கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி தில்லி வந்துள்ளதாக திடீரென அறிவிக்கப்பட்டது . நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக,எனது நோயையும் , சோர்வையும் மறந்தவனாக நடந்தே தில்லி சென்றேன் . வழியில் செல்லும் போது தான் அது பற்றிய நியாபகமே வந்தது .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 12 ]
மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோயின் ஆத்மீக ஆசான்களுடனும் ,பின்பற்றுபவர்களுடனும் வாடிக்கையாக தொடர்பு கொள்ளும் முறையை மவ்லவி இல்யாஸ் கொண்டிருந்தார் . ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்ப்பூரி மற்றும் அஷ்ரப் அலி தான்வி ஆகியோரை தனது இதயத்தில் ஏற்றி செயல்படுத்துவதாக கூறினார் . அவர்களும் ,அவரின் மீது மிகுந்த அன்பும் ,மரியாதையும் கொண்டிருந்தனர் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 12,13 ]
ஒரு முறை ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்பூரி ,அஷ்ரப் அலி தான்வி ,கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி ஆகியோர் காந்தலா வந்திருந்தனர் . தொழுகையுடைய வக்தில் ,மவ்லவி இல்யாசை இமாமத் செய்யுமாறு கூறினர் . அப்போது குடும்ப நண்பர் ,மவ்லவி பத்ரூல் ஹசன் " பெரிய பெட்டிகளை இழுப்பதற்கு சின்ன இஞ்சினா " என்று நகைச்சுவையாக வினவினார் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 14 ]
மழாஹிருல் உலூம் மத்ரஸாவுடன் தொடர்பு :
1910 ஆம் ஆண்டில் ,மத்ரஸாவின் பெரும்பான்மையான ஆசிரியர்கள் ஹஜ்ஜுக்கு சென்றதால் ,புதிய ஆசிரியர்களை அவர்களுக்கு பகரமாக நியமித்தனர் .அதில் மவ்லவி இல்யாஸும் ஒருவர் . ஹஜ் முடிந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதும் , தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அனைவரும் தங்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர் .மவ்லவி இல்யாஸ் காந்தலவியைத் தவிர .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 14 ]
மவ்லவி இல்யாஸின் நிக்காஹ் :
மவ்லவி இல்யாஸ் காந்தலவி தமது தாய் மாமன் மவ்லானா ரவூப் ஹசனுடைய மகளை அக்டோபர் 17,1912 ஆம் ஆண்டு மணந்தார் . மவ்லானா அப்துர் ரஹீம் ராய்பூரி ,அஷ்ரப் அலி தான்வி ,கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி ஆகியோர் அவரின் நிக்காஹ்வில் கலந்து கொண்டனர் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 14 ,15]
மவ்லவி இல்யாஸின் ஹஜ் :
1915 ஆம் ஆண்டு ,மவ்லவி கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி மற்றும் மவ்லவி மஹ்மூத் அல் ஹசன் ஆகியோர் ஹஜ் செல்ல முடிவு செய்தனர் . இதை அறிந்த மவ்லவி இல்யாஸ் தாமும் அவர்களுடன் இணைந்து ஹஜ் செய்ய நாடினார் . அவ்விருவரின் பிரிவால் இந்திய தேசம் இருளில் மூழ்கி விடும் என்றும் தம்மால் அவர்களை பிரிந்து ஸஹரான்பூரில் வாழ முடியாதுஎன்றும் எண்ணினார் . அதன் பின்னர் மவ்லவி கலீல் அஹ்மத் ஸஹரான்பூரி பயணித்த கப்பலில் உடன் பயணம் மேற்கொண்டு ஹஜ் செய்தார் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 15]
மவ்லானா இல்யாஸ் ஏப்ரல் 1925 ஆம் ஆண்டு ,மவ்லவி கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியுடன் தனது இரண்டாம் ஹஜ்ஜை நிறைவேற்றினார் . அப்போது தான் மதீனாவில் இருக்கும் பொழுது தமக்கு தப்லீக் ஜமாத்தின் முறை இல்ஹாமில் வழங்கப்பட்டதாக கூறுகிறார் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 32,33]
1938 ஆம் ஆண்டு மவ்லவி இல்யாஸ் ,மவ்லானா இஹ்திஸாமுல் ஹசன் ,மவ்லவி முஹம்மத் யூசுப் , மவ்லவி இனாமுல் ஹசன் மற்றும் ஹாஜி அப்துர் ரஹ்மான் ஆகியோருடன் தமது மூன்றாம் ஹஜ்ஜுக்கு பயணித்தார் .
இரண்டு வாரங்கள் கழித்து , மார்ச் 14, 1938 ஆம் ஆண்டு மவ்லவி இல்யாஸ் ஹாஜி அப்துல்லாஹ் , அப்துர் ரஹ்மான் மழ்ஹர் மற்றும்
மவ்லானா இஹ்திஸாமுல் ஹசன் ஆகியோருடன் சவூதி அரேபியாவில் தப்லீக் ஜமாஅத் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வேண்டி சுல்தான் இப்னு சவூதை சந்தித்தார் . மன்னர் அவர்களை சங்கையுடன் வரவேற்றார் .பின்னர் சுமார் நாற்பது நிமிடம் அவர்களுடன் கலந்துரையாடி பின்னர் விடையளித்தார் .
பின்னர் ஓர் நினைவுப் பத்திரத்துடன் மவ்லானா இஹ்திஸாமுல் ஹசன் ரயீசுல் குஜ்ஜத் (தலைமை காஜி ) யை சந்தித்து பேசினார் . அவரை மரியாதையுடன் வரவேற்ற தலைமை காஜி ,தாம் இந்த திட்டத்தை ஏற்பதாக அறிவித்தாலும் இதற்கு அனுமதி அமீர் பைசல் தான் வழங்க முடியும் என்றார் .
மக்காவில் இருந்த வரை தினமும் , காலையும் ,மாலையும் தப்லீக் ஜமாஅத் பணி நடைபெற்றது .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 42,43]
வஹாபிய அரசாங்கம் ஜஸீரத்துல் அரபில் உள்ள எத்துணையோ அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்களை வீட்டுச் சிறையில் வைத்ததும் ,அவர்களை முடக்கியதும் நடைபெற்ற இக்காலத்தில் தான் இதுவும் நடைபெற்றது ,விந்தையிலும் விந்தை !!!
ஸஹரான்பூர் மத்ரஸாவும் தப்லீக் ஜமாத்தும் :
ஸஹரான்பூர் மத்ரசாவின் ஆசிரியர்கள் மவ்லானா இல்யாஸ் காந்தலவிக்கு நெருக்கமானவர்கள் . ஸஹரான்பூர் மத்ரஸாவின் நிர்வாக கமிட்டி செயலாளர் மவ்லானா முஹம்மத் ஜக்கரிய்யா , மவ்லானா அப்துல் லத்தீப் மற்றும் மத்ரஸா நிர்வாகிகள் அடிக்கடி தப்லீக் ஜமாஅத் பணிகளில் மேவாத் நகரில் ஈடுபட்டு , நிஜாமுதீனுக்கு மவ்லானா இல்யாஸ் விரும்பும் போதெல்லாம் வந்தனர் .
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 57 ]
இன்னும் இந்த நூல் முழுக்க தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் மவ்லவி இல்யாஸ் காந்தலவிக்கும் ஏனைய தேவ்பந்தின் முன்னோடி உலமாக்களான மவ்லானா மன்ஸுர் நுஃமானி ,மவ்லானா ஜக்கரிய்யா காந்தலவி , மவ்லவி ஹுசைன் அஹ்மத் மதனி ,தைய்யிப் தேவ்பந்தி ,மவ்லவி இக்ராமுல் ஹசன் ,நத்வத்துல் உலமா ,லக்னோ மதரஸாவுடன் உடைய தொடர்பும் ,நெருக்கமும் பற்றி சிலாகித்து சொல்லப்பட்டுள்ளது .
"தப்லீக் ஜமாத்தில் ,மழாஹிருல் உலூம் ,ஸஹரான்பூர் ,தாருல் உலூம் தேவ்பந்த் , நத்வத்துல் உலமா ,லக்னோவைச் சார்ந்த உலகமாக்களும் ,மாணவர்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படுவதைக் காண முடியும் "
[ நூல் - மவ்லானா இல்யாஸ் அவ்ர் உன்கீ தீனி தஃவத்,பக்கம் 126]
முத்தாய்ப்பாக தாருல் உலூம் தேவ்பந்தின் பின்வரும் பத்வாய்ப் பாருங்கள் . தப்லீக் ஜமாஅத் தான் தேவ் பந்த் ,தேவ்பந்த் தான் தப்லீக் ஜமாஅத் என்று இரண்டுக்கும் உள்ள தொடர்பை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கு கின்றது .
மவ்லவி இல்யாஸ் காந்தலவி தப்லீக் ஜமாத் என்று அமைப்பின் நிறுவனர் . அவர் தமது பால்ய காலம் முதல் ,தமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் குப்ர் பத்வா வழங்கப்பட்ட தேவ் பந்தி முன்னோடிகளை தமது ஆசிரியர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களோடு நெருக்கம் காட்டியுள்ளார் .
மட்டுமல்லாது, அவர்களைத் தாம் இதயத்தில் ஏற்றி பின்பற்றுவதாகவும் கூறியுள்ளார் . அவர்களின் மறைவுக்குப் பின் தேவ்பந்தின் கொள்கையுடைய அரபிக் கல்லூரிகளின் உலமாக்களுடன் தான் பெரும்பாலும் தொடர்பு வைத்துள்ளார் . இது ஏதோ எதேச்சையாக நிகழந்த ஒன்றல்ல . மாறாக தமது வஹாபிய கொள்கையை உலமாக்களிடம் ஏற்றுக் கொண்டு அதைப் பரப்ப உண்டாக்கிய செயல் வடிவம் தான் தப்லீக் ஜமாஅத் .அதற்கு மக்களிடம் எதிர்ப்பு வந்தால் தேவ்பந்தி உலமாக்களின் ஆதரவைக் காண்பித்து ஏமாற்றும் ஏற்பாடே இது.
தமிழக உலமாக்களின் பெரிய கூட்டமைப்பான ஜமாத்துல் உலமாவோ , மதில் மேல் பூனை என்றும் ,ஆடு பகை குட்டி உறவு என்றும் இரட்டை வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றது .
இடத்திற்கு தகுந்தால் போல் , தப்லீக் ஜமாத் வலிமையாக உள்ள இடங்களில் (திண்டுக்கல் ,மேல்விஷாரம் ,கடலூர் போன்று ) அதை தூக்கிப் பிடிப்பதும் , அது அல்லாத இடங்களில் ஸுன்னத் வல் ஜமாத்தின் வெளிப்படையான அமல்களை ஆகும் என்று பேசுவதும் ( மீலாத் ,மவ்லூத் ,ஜியாரத் ,உரூஸ் போன்று ) எள்ளி நகைக்கத்தான் தோன்றுகின்றது .
இன்றைய தகவல் தொழில் நுட்ப காலத்தில் மக்களையே ஏமாற்ற இயலாத நிலையில் ,அல்லாஹ்வையும் ,அவன் ஹபீப் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களையும் நாளை எந்த முகத்தோடு சந்திப்பீர்கள் ,உங்களின் கடமையைப் பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு எங்கனம் பதில் அளிப்பீர்கள் .
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கும் ,இல்யாசீ தப்லீகி தேவ்பந்திகளுக்கும் உ இடையே உள்ள கொள்கை முரண்பாடு தீனுடைய அடிப்படை (தரூரியத் ஏ தீன் )களில் உண்டான முரண்பாடு .
இந்திய வஹாபியிசத்தின் தந்தை இஸ்மாயில் திஹ்லவியின் "தக்வியத்துள் ஈமான் " பற்றிய தேவ்பந்தின் பத்வாய்ப் பாருங்கள்
இப்னு அப்துல் வஹாப் நஜ்தி அல் தமீமி பற்றிய தேவ்பந்தின் பத்வாய்ப் பாருங்கள் . இப்னு அப்துல் வஹாப் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவனாம் !!!
அதை ஏதோ தேவ்பந்தின் உலமாக்களும் ,பரேலி உலமாக்களுக்கும் இடையே உண்டான கருத்து மோதல் , புரிதலில் உள்ள தவறு என்று இன்னும் எத்துணை காலத்திற்கு சப்பை கட்டு கட்டுவீர்கள் .