Friday 5 October 2018

மன்ஸுர் நுஃமானி தேவ்பந்தி

முஹம்மத் மன்சூர் நுஃமானி தேவ்பந்தி , தப்லீகி தேவ்பந்தி பிர்காவினர் மதிக்கும் இந்தியாவைச் சார்ந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞர் .  இவர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் சம்பல் என்னும் ஊரில் (பிறப்பு -15 ,திசம்பர் , 1905 ஆம் ஆண்டு  / இறப்பு - 4/5 மே ,1997) பிறந்தார் .

[ நூல்- தாருல் உலூம் தேவ்பந்தின் வரலாறு ,பாகம் 2, பேராசிரியர் முர்தாஸ் ஹுசைன் குரைஷி ,தேவ்பந்த் ,இந்தியா   ]
  
மற்றோர் தேவ்பந்தி முன்னோடியான அன்வர் ஷாஹ் காஷ்மீரியின் மாணவரான  இவர், தேவ்பந்தில் 1927ல் பட்டம் பெற்றார் . மேலும் நத்வத்துல் உலமாவின் 4 ஆண்டுகள் பணியாற்றி ,அபுல் ஹஸன் நத்வியின் நெருக்கமான நண்பராக இருந்தார் . 1941ல் ஜமாத்தே இஸ்லாமியின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்து ,மவ்தூதி சாஹிபிற்கு அடுத்த நிலையில் 'நாயிப் அமீராக' இருந்தார் . பின்னர் 1942ல் மவ்தூதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஜமாத்தே இஸ்லாமியில் இருந்து விலகினார் .

இறுதியாக இல்யாஸி தப்லீக் ஜமாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் . தாருல் உலூம் தேவ்பந்தின் 'மஜ்லிஸ் ஏ ஷுரா' ,'மஜ்லிஸ் ஏ ஆமிலா ' ஆகியவற்றிலும்  பங்காற்றினார் .

பைஸ்லா குன் முனாஜரா

சமீப காலமாக இல்யாஸி தப்லீகி தேவ்பந்திகள்         மன்சூர் நுஃமானி எழுதிய நூலான 'பைஸ்லா குன் முனாஜரா'  வைக் கொண்டு பெருமை பிதற்றித் திரிகின்றனர் .  இந்த நூலின் பெயரைக் கொண்டு ஏதோ விவாதத்தைப் பற்றிய நூல் என்று மேலோட்டமாகத் தோன்றலாம் .    

ஆனால் நூலாசிரியர் நூலின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகின்றார் (இஸ்மாயில் திஹ்லவி வஹாபிக்கு  ஆதரவு கொடுத்து , புகழ்ந்த பின்னர் )    இந்த நூலானது ,1933ஆம் ஆண்டு லாகூரில் நடைபெறுவதாக இருந்த ஓர் விவாதத்திற்கு தாம் தயார் செய்திருந்த தன்னுடைய பதில்  என்று . காவல் துறையின் தலையீட்டால் விவாதம் நடைபெறவில்லை .

ஹுஸாமுல் ஹரமைன்

அதன் பின்னர் நூலாசிரியர் இந்த பதிலை  இமாம் அஹ்மத் ரிழா கான் ஹனபி மாதுர்தி  காதிரி   رضي الله عنه    அவர்கள்(1856 -1921)  குலாம் அஹ்மத் காதியானி மற்றும் நான்கு தேவ்பந்தி முன்னோடிகளின்  குப்ரியத்தை வெளிக்காட்டி ,சங்கைக்குரிய மக்கா ,மதீனா உலமாக்களின் ஒப்புதலோடு வெளியிட்ட 'ஹுஸாமுல் ஹரமைன் ' நூலுக்கு  மறுப்பாக வெளியிட்டார் .  மன்சூர் நு ஃ மானியின் மேற்கூறிய மறுப்பு என்பது நான்கு தேவ்பந்தி முன்னோடிகளின்  குப்ரியத்தான வாக்கியங்களுக்கு விளக்கம் அளிக்கும் பயனற்ற முயற்சியே அன்றி வேறில்லை . 


முப்தி அஜ்மல் சம்பலி رحمتہ اللہ علیہ  அவர்கள் (1318/1900- 1383/1963)  , 1374/1954 ஆம் ஆண்டு எழுதிய தலைசிறந்த படைப்பான 
" ரத் ஷஹாபே சாகிப்  பர் வஹாபி காய்ப் " என்னும் நூலில் ஹுசைன் டான்டவி  தேவ்பந்திக்கு (1297/1879-1377/1957)  மறுப்பாக மட்டும் இல்லாமல் , மன்ஸுர் நுஃமானி எழுப்பும் சகலவிதமான   விளக்கங்களுக்கும் பதில் அளித்து உள்ளார்கள்  . இந்த தேவ்பந்தி உலமாக்கள் உட்புகுத்திய  எல்லாவிதமான  தந்திரங்களுக்கும் ,தெளிவான பதிலும் ,மறுப்புரையும் வழங்கப்படுள்ளன .

பின்னர் சில ஆண்டுகள் கழித்து ,முப்தி ஷரீப் அல் ஹக் அம்ஜதி 
 رحمتہ اللہ علیہ  அவர்கள்  (1339/1921-1421/2000) , 1409/1988 ஆம் ஆண்டு "ஸுன்னி -தேவ்பந்தி இக்திலாப் கா முன்சீப்பானா ஜாயிஸா " என்னும் நூலை எழுதினார்கள் . 

இந்நூல் 'பைஸ்லா குன் முனாஜரா' நூலில் மன்ஸுர் நுஃமானி  எழுதிய பொய்களையும் ,பித்தலாட்டங்களையும் எடுத்துக்காட்ட இயற்றப்பட்டது . முப்தி ஷரீப் அல்ஹக் அம்ஜதி  رحمتہ اللہ علیہ  அவர்கள் அதில் வரிக்கு வரி மறுப்புரை எழுதியிருந்தார்கள் . 

ஸுன்னி -தேவ்பந்தி இக்திலாப் கா முன்சீப்பானா ஜாயிஸா

Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment