Sunday, 23 September 2018

ரஷீத் அஹ்மத் கங்கோஹிக்காக சமைக்கும் கண்மணி நாயகம்

தலைப்பை கண்டதும் உண்மை மூஃமீன்களின் நெஞ்சம் பதறத் தான் செய்யும் .

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் மற்றோரு பொய் பித்தலாட்டங்களில் ஒன்று ,தமது முன்னோடிகளின் அந்தஸ்தையும் , மதிப்பையும் உயர்த்த எந்த அளவுக்கும் துணிந்து செல்வர் . எந்த அளவிற்கு என்றால்  அது   மூஃமீன்களின்  உயிரினும் மேலான ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் கண்ணியத்தை குறைத்து தங்களின் முன்னோடிகளின் பெருமைகளை மேடையேற்றுவதில் ,பெருமை பீற்றுவதில் ,அகங்காரச் செருக்கில் அவர்களின் உஸ்தாதான இப்லீஸின் அடியொற்றி நடப்பவர்கள் .

" ஒரு முறை ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் ஓர் கனவு கண்டார்கள் . அதில் தமது சகோதரரின் மனைவி தமது விருந்தினர்களுக்கு உணவு சமைப்பதாக கண்டார்கள் . அப்பொழுது நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் வந்து கூறினார்கள் ," இங்கிருந்து எழுந்திருங்கள் . இம்தாதுல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சமைப்பதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல . அவரது விருந்தினர் உலமாக்கள் ,எனவே நானே சமைகின்றேன் " . ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் இக்கனவு மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,அவரிடம் பைஅத் எடுத்ததன் மூலம்  உண்மையானது .ஏனெனில் ஹாஜி சாஹிப் அவர்களிடம் பைஅத் எடுத்த முதல் உலமா அவர்தான் ."


[ நூல்- தஸ்கிரத்தூர் ரஷீத் , பாகம் 1,பக்கம்  75 ,புதிய பதிப்பு ]


ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رضي الله عنه அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்த காமிலான ஷெய்கு . கனவு அவர்தானே கண்டார் ,இதில் ரஷீத் அஹ்மத் கங்கோஹியை குற்றம் பிடிப்பது என்ன நியாயம் என்று நினைக்கலாம் . 

தஸ்கிரத்தூர் ரஷீத் நூலானது ரஷீத் அஹமத் கங்கோஹியின் வரலாற்றை கூறும் நூல் .அவரது மகன் மஸுத் அஹ்மத் தின் உத்தரவின் பேரில் ,தேவ்பந்தி முன்னோடிகள் ஆஷிக் இலாஹி மீரடி , அப்துல் காதிர் ராம்பூரி ,மற்று கலீல் அஹ்மத் சஹ்ரான்புரி ஆகியோரின் எழுத்தாலும் முயற்சியாலும் வெளிவந்த நூல் . எண்ணற்ற ஹதீத் நூற்களையே பிறழ்வு செய்த இவர்கள் ,ரஷீத் அஹ்மத் கங்கோஹியை பரிசுத்தப் படுத்த   ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ அவர்கள் மீது இட்டுக்கட்டி உள்ளனர் . 
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹிந்துக்களின் கடவுள் பற்றி ரஷீத் அஹ்மத் கங்கோஹி

ஹிந்துக்கள் வணங்கும் பல்வேறு தெய்வங்களில் ராமரும் ,கிருஷ்ணரும் அடக்கம் . காபிர்களின் கடவுள் நம்பிக்கை இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் அதனை இணைவைப்பு என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ,புகஹாக்களும் வரையறுத்துள்ளனர் . 

நாங்களும் தீன் பணி செய்கின்றோம் ,சீர்திருத்தம் செய்கின்றோம் என்று வாய் கூசாமல்  வஹாபிய கொள்கையை பரப்பும் தப்லீக் ஜமாத்தினரின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஹிந்து மதக் கடவுளைப் பற்றி என்ன நம்பிக்கை கொண்டிருந்தார் என்று பாருங்கள் . 

 " ராமரும் , கன்ஹையாவும் நல்லவர்கள் . பின் வந்த மக்கள் தான் அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கினர் " 

[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2, பக்கம் 359 
ஆசிரியர் - ரஷீத் அஹ்மத் கங்கோஹி  ] 


இராமனும் ,கிருஷ்ணனும் வரலாற்று நபர்கள் அல்லர் .அவர்கள் இதிகாசங்களிலும் ,புராணங்களிலும் சொல்லப்பட்ட கதை மாந்தர்கள்(மஹாபாரதம் ,இராமாயணம் )  என்று இந்திய வரலாற்று ஆசிரியர்களே பல நூற்கள் எழுதியுள்ளனர் .

இன்னும் 14ஆம் நூற்றாண்டில் துளசிதாஸ் என்பவர் இயற்றிய இலக்கியமே பின்னர் இராம வழிபாட்டுக்கு மூலம் என்றும் சொல்லப்படுகின்றது .
[என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா   ] 

நமது கேள்வி எந்த ஆய்வுமே செய்யாமல் பொத்தாம் பொதுவாக பிற மதத்தினரின் கடவுளருக்கு  வக்காலத்து வாங்கும் தேவ்பந்தி தப்லீகி  ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,எத்துணை ஆதாரங்கள் இருந்தும் அல்லாஹு سبحانه وتعالىٰ வையும் , படைப்புகளின் காரணகர்த்தா கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை நிந்தனை செய்தது ஏன் ??? 


  


Related Posts Plugin for WordPress, Blogger...