Saturday, 31 December 2016

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 1



பித்னாவின் ஆரம்பம்  (ஹிஜ்ரி 1239 - 1823 ஆண்டு ) க்குப்  பின்

வேற்றுமை தோன்றியதன் காரணமும் அதன் ஆரம்பமும் ஓர் சுருக்கமான அறிமுகம் :

Undivided India before partition

சிராஜுல் ஹிந்த் அல் முஹத்தித் ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  [ பிறப்பு .1745  - இறப்பு  1823 ஆண்டு ]


ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித்  திஹ்லவி  (ரலியல்லாஹு அன்ஹு ) [பிறப்பு.1703  - இறப்பு.1762 ஆண்டு ] அவர்களின் மூத்த மகனார் . ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் தமது தந்தையாரின் இறப்பின் பொழுது 17யே வயது  நிரம்பியவர்களாக இருந்தார்கள் .
அவர்கள் தமது தந்தையாருக்குப் பின் ஹதீது ஆசிரியராகப் பொறுப்பேற்று ,பின்னர் டெல்லியின் புகழ்பெற்ற முஹத்தித் ஆக விளங்கி(தமது தந்தையைப் போன்றே ) ,இந்தியாவின் புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞராக  விளங்கினார்கள் .

இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு)  அவர்களுக்கு நான்கு ஆண் மக்கள் . அனைவரும் தமது தந்தையாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமது காலத்தின் சிறந்த மார்க்க அறிஞராக  விளங்கினார்கள் .  அவர்களின் பெயர்கள் முறையே ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) , ஷாஹ் ரபீயுத்தீன் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) , ஷாஹ் அப்துல் காதிர்  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) மற்றும் ஷாஹ் அப்துல் கனி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) .

குறிப்பு : பின்குறிய மூன்று சகோதரர்களும் தங்களது மூத்த தமையனார் ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மாணாக்கர் ஆவர் .

பித்னாவின் ஆரம்பம் 

ஷாஹ் அப்துல் கனி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது .அதற்கு முஹம்மத் இஸ்மாயில் திஹ்லவி என்று பெயரிட்டார் .
Taqwiyatul Iman
                                                         
 அந்த குழந்தை வாலிபன் ஆனதும்  ஓர் நூல் எழுதினான் . அதன் பெயர் " தக்வியத்துள் ஈமான் " .  இந்த நூல் முதன் முதலில் அச்சில் வெளியான ஆண்டு 1825 .அது முதல்  இந்தியாவில் பிரிவினையின் நெருப்பை கொளுத்தி விட்டது .

 இஸ்மாயில் திஹ்லவியின் ஆசிரியர் செய்யித் அஹ்மத் ரேபரேலி [பிறப்பு.1786 - இறப்பு.1831 ஆண்டு ]

இவர் ஷாஹ் வலியுல்லாஹ் மற்றும் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹும்  அஜ்மயீன் ) ஆகியோரின்  நெறிமுறைகளின்படி நடந்த உண்மையான மாணவர் அல்ல .தமது ஆசிரியர்கள் கற்றுத் தந்த போதனைகளை விட்டும் வெகுதூரம்   விலகிச் சென்றார் . இவரதும் ,இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை மறுத்து ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு)  தமது கருத்தை பதிவு செய்துள்ளார்கள் .

Anwar-e-Aftab-e-Sadaqat

[ஆதாரம்  - நூல்  : அன்வார் ஏ அப்தாப் ஏ ஸதகாத் , பக்கம் 617-620, கரீம் ப்ரெஸ் ,லாகூர் , முஹம்மத் காஜி பஜ்லே அஹ்மத் லூதியான்வி நக்சபந்தி முஜத்திதி ] 

இந்தியாவில் முஸ்லிம்களின் மத்தியில் வேற்றுமைகளும் , பித்னாவும் உருவானதன் மூல காரணம் இந்த இஸ்மாயில் தெஹ்லவி .

Grave of Ismail Dehlawi Wahabi

முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி அல் தமிமீயின்  "கிதாபுத் தவ்ஹீத் " நூலின் உர்து மொழிபெயர்ப்பு தான் " தக்வியத்துள் ஈமான் " .

இஸ்மாயில் திஹ்லவியின் கொள்கைகளும் ,போதனைகளும் 

முகம்மது காசிம் நானோத்வி [மறைவு - ஹிஜ்ரி 1297 - 1879ஆண்டு ]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஸஹ்ரான்பூர் மாவட்டத்தில் தேவ்பந்த்  என்னும் ஊரில் ஒரு அரபி மதரஸாவை ஸ்தாபிதம் செய்தார் . தமது மாணவரும் ,வஹாபிய கொள்கையுடையவருமான ரஷீத் அஹ்மத் கங்கோஹி [மறைவு - ஹிஜ்ரி 1323/1905 ஆண்டு ] உடன் இணைந்து இஸ்மாயில் தெஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை தமது மதரஸாவில் பயிலும் மாணவருக்கு போதிக்கலானார் .

இந்த தேவபந்தி மதரசாவின் வஹாபிய கொள்கைகள் பின்னர் அஷ்ரப் அலி தானவியால் [மறைவு -ஹிஜ்ரி 1362 / 1943 ஆம் ஆண்டு ] முன்னெடுக்கப்பட்டது .

எனவே இஸ்மாயில் தெஹ்லவியை இந்திய துணைக்கண்டத்தில் வஹாபிஸத்தின் தந்தை என்று அழைத்தால் அது மிகையாகாது . இநதிய இஸ்லாமிய சமூகத்தில் மார்க்க கொள்கை வேற்றுமைகளுக்கும் ,பித்னாக்களுக்கும் மைய புள்ளி இஸ்மாயில் தெஹ்லவி .

மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி 'மஜல்லா அஹ்லே ஹதீத் ' 
பத்திரிக்கையின் ஆசிரியர் 1973ல்  கூறுகின்றார் , தம்மை பொறுத்தவரை ,165 ஆண்டுகளுக்கு முன்பு ,பஞ்சாப் அம்ரித்சரின் இஸ்லாமிய சமூகம் ,இன்று 'பரேல்வி ' என்று அழைக்கப்படும் மக்களின் அதே கொள்கைகளைத் தான் கொண்டிருந்தனர் . இன்னும் முஹம்மது ஜாபர் தான்சேரியை பொறுத்தமட்டில் ,200 ஆண்டுகள் முன்பு வரை ஒருங்கிணைந்த பஞ்சாபில் வஹாபிகளின் எந்த அடையாளமும் இல்லை அல்லது இஸ்மாயில் தெஹ்லவியின் கொள்கைகளை பின்பற்றுவோரும் இல்லை  .

 [குறிப்பு : வட இந்தியாவை பொறுத்தவரை ஜியாரத் செய்து வலிமார்களிடம் உதவி தேடினால் நீங்கள் பரேல்வி . மேற்கூறிய இருவரும் அஹ்லே ஹதீத் என்னும் மத்ஹபை பின்பற்றாத வஹாபிகள்  . ]

 மவ்லானா செய்யித் அஹ்மத் பிஜ்நோரி காசிமி அவர்கள் கூறுகின்றார்கள் ,

Photobucket

"வெட்கக்கேடான விஷயம் என்னெவெனில் இந்த புத்தகம் [தக்வியத்துள் ஈமான் ] காரணமானாக சுமார் 20 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய முஸ்லிம்களில் ,தொண்ணூறு சதவீதம் ஹனபிக்கள் , இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு போனார்கள் "
[நூல் -அன்வாருல் பாரி , பக்கம் 107, நஸீருல் உலூம் , பஜ்னுர் ]

ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் மாணாக்கரில்   இஸ்மாயில் தெஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை கடுமையாக எதிரத்தவர்கள்  முஹக்கிக் அல் அஸர் அல்லாமா     பஜ்லே ஹக் கைராபாதி , மவ்லானா மெஹபூப் அலி தெஹ்லவி, முஃபதி சத்ருத்தீன் ஆஸுர்தாஹ்  மற்றும் இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி [மறைவு - ஹிஜ்ரி 1340 - 1921ஆம்  ஆண்டு ]  அவர்களின் ஷெய்கும் ,முர்ஷிதுமான  அல்லாமா அஷ்ஷைகு ஷாஹ் ஆலே ரஸூல் மெஹ்ரார்வி ஆகியோர் ஆவர்  ,










Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment