இன்னும் மற்றொரு அவ்ராத் ஆன 'துஆ யே ஹைதரி' ஜிஷ்தி-ஸப்ரி தரீக்காவின் மிக முக்கியமான அவ்ராத் ஆகும் . ஜிஷ்தி -ஸப்ரி சில்சிலாவின் மஷாயிகுமார்களின் கூற்றுப்படி இந்த அவ்ராத் மிகப் பெரும் இறைநேசரான 'ஷைகுல் ஆலம் அப்துல் ஹக் ருதால்வி (ரலியல்லாஹு அன்ஹு) ' அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது . அன்னார் ஹிஜ்ரி 836ல் இவ்வூலகை விட்டும் மறைந்தார்கள் .
அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை ஓளி வீசும் சுவனச் சோலையாக ஆக்குவானாக. ஆமீன் !!!
இந்த துஆ ஜிஷ்தி-ஸப்ரி தரீக்காவில் மிகவும் விஷேசமான துஆ ஆகும் . எனினும் பிற சில்சிலாவைச் சார்ந்த ஷைகுமார்களும் இதை ஓதுவர் .
இந்த துஆ பாமர முஸ்லிம்கள் ஓதுவது ஆகாது என்று ஸூபியாக்கள் கூறியுள்ளனர் .
பின்வரும் ஸ்கேன் ஷைகு ஷைகுல் ஆலம் அப்துல் ஹக் ருதால்வி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மல்பூஜாத்தைக் கூறும் 'அன்வாருல் உயூன் ' நூலாகும் . இது மிகவும் அரிதான ஒரு நூல் .
இதில் துஆ யே ஹைதரி உள்ளதைக் காணுங்கள் .
மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தன்னுடைய நூலான ''அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' வில் தாம் ஷைகு அபூ தாஹிர் குர்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இருந்து 'கிர்காஹ் ' என்னும் ஸூபியாக்கள் அணியும் கம்பளி ஆடையை வாங்கியதாகவும் ,மேலும் ஜவாஹிர் கம்ஸா வின் விஷேச ஓதும் முறையைக் கொண்டு அனுமதிஅளிக்கப்பட்டதாக எழுதியுள்ளார்கள் .
மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் தம்முடைய ஹதீதுகளின் ஸனதை ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களிடம் தாம் மக்காவில் தங்கியிருந்த காலத்தில் பெற்றார்கள் .
ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீதுக் கலையின் இஜாஸாவை தமது மகனார் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு வழங்கினார்கள் . அதன் பின் ஷைகு அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி இந்த இஜாஸாவை பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு வழங்கினார்கள் . அவர்களுள் ஷாஹ் இஷாக் திஹ்லவியும் ஒருவர் . இவர் தான் பின்னர் வஹாபிகளின் ஷைகுகல் ஹதீத்களில் ஒருவர் . நசீர் ஹுசைன் திஹ்லவி ஷாஹ் இஷாக் திஹ்லவியிடம் இருந்து ஹதீதுக் கலையை கற்றார் .
வஹாபிகள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் மீது 'நாத் யே அலி' ஓதுவதற்காக முஷ்ரிக் என்று அவதூறு கூறுவதை நிறுத்த வேண்டும் . ஏனெனில் அது ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களையும் முஷ்ரிக் என்று கருத வேண்டி வரும் . நவூது பில்லாஹ் !!!
மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் நூலான 'அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' இரு பகுதிகளை உடையது .
முதல் பகுதியில் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் தஸவ்வுப் தரீக்கா என்னும் ஞானவழிப் பாட்டையின் சில்சிலாவை விளக்கி உள்ளார்கள் .
இரண்டாம் பகுதியில் ஹதீது மற்றும் பிக்ஹ் கலையில் தமது ஸனதை விளக்கி உள்ளார்கள் .
ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களோ ,ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களோ ஷியா அல்ல . இதை ஓதும் பிற மார்க்க அறிஞர்களின் பெயர்களை நீங்கள் ஸ்கேனில் காணலாம் .
வலிமார்கள் மீது இத்தகைய அவதூறு கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பானாக .
அனைவரும் அஹ்லுஸ் சுன்னத் ஜமாத்தின் அகீதாவில் நின்றுமுள்ள சத்தியமான இஸ்லாமிய அறிஞர்கள் .
'நாத் யே அலி' யா அலி என்னும் சொற்கள் உள்ளன . ஒரு ஸுன்னி முஸ்லிம் இம்மாதிரியான இஸ்திகாதவைக் கொண்டு அழைக்கும் போது அமீருல் மூஃமினீன் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ அல்லது கௌதுல் அஃலம் (பைஸ்லா ஹப்த் மஸ்லா ) அவர்களோ அல்லது ஷைகு அஹ்மது ஜர்ரூக் (புஸ்தா அல் முஹத்திதீன் )அவர்களோ அல்லது ஷைகு அஹ்மது அல்வான் (ரத்துல் முஹ்தார் ) அவர்களோ சுயமாக உதவுவதாகக் கருதுவதில்லை .
இம்மாதிரி அழைப்பது வழிகேடர்கலான ராபிதி ஷியாக்களின் வழக்கம் என்பது தவறான வாதம் . ஷியாக்களில் பல பிரிவுகள் உண்டு அவர்கள் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை விட உயர்வாகக் கருதும் ஒரு பிரிவும் உண்டு . அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பெருமானார் அவர்களை விட உயர்வானவர்களாகக் கருதும் வழிகேடும் உள்ளது .
இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் மௌலவி ரஷீத் அஹ்மது கங்கோஹியின் பத்வா ரஷீதியாவில் உள்ள ஒரு பத்வாவைக் காண்போம் .
கேள்வி : ஹதீதின் பிரகாரம் ஒருவர் தனிமையில் காட்டில் இருந்து சிங்கத்தை நினைத்து அஞ்சினால் ,அவர் யா தானியால் (அலைஹிவஸலாம் ) என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூற வேண்டும் . இது அனுமதிக்கப் பட்டதா ,இல்லையா ? இம்மாதிரியான இஸ்திகாதா அனுமதிக்கப்பட்டால் அது ஷிர்க்கா இல்லையா ?
பதில் : இந்த ஹதீத் சரியென்றால் , அதன் பொருள் அல்லாஹ் தானியால் அலைஹிவஸலாம் அவர்களின் பெயரின் மீது அத்தகைய விளைவை சாட்டியுள்ளான் .
(இந்த ஹதீத் ழயீபான ஹதீத் ஆகும் .இன்னும் மௌலவி ரஷீத் அஹ்மத் இதை ஷிர்க் என்று கூறவில்லை )
ஆக இத்தகைய இஸ்திகாதாவை எந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ஷிர்க் என்று கூறவில்லை கர்னுஷ் ஷைத்தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அல் தமீமி தனது வஹாபிய பித்னாவை தொடங்கும் வரை .
ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி 'அத்யாப் உன் நகம் பி மத் சைய்யதில் அரபி வல் அஜம் ' என்னும் நூலை அரபியில் எழுதியுள்ளார்கள் . அது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை புகழ்ந்தும் அவர்களின் மீது பேரன்பு வைப்பதைப் பற்றிய நூல் . இதற்கான விளக்கவுரையை பார்சியில் எழுதியுள்ளார்கள் .
அதில் 11ம் அத்தியாயத்தில் (நபி பாக் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் கீ பார்காஹ் மே ஆஜிஸி வ பரயாத் பே பயான் மேன் ) அன்னார் பெருமானார் அவர்களை இவ்வாறான சொற்களைக் கொண்டு எழுதுகின்றார்கள் :
" நாங்கள் நம்பிக்கை கொள்ளும் ஒருவர் "
"துன்பங்களை நீக்கும் ஒருவர் "
" தாங்கள் தான் எனது மனம் பெரும் துன்பத்தில் உள்ள போது எனது கஷ்டங்களை நீக்குபவர் "
இவ்வாறு எழுதிய பின்பு அதற்கு பின்வரும் விளக்கவுரையை எழுதுகின்றார்கள் ,
' பல்வேறு விஷயங்களில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் புனித ஆன்மாவிடத்திலே உதவி தேடுவது இன்றியமையாதது .'
இந்த நூல் உர்துவில் பீர் கரம் ஷாஹ் அஸ்ஹரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .
No comments :
Post a Comment