Saturday, 18 October 2014

ஷாஹ் வலியுல்லாஹ்வும் இஸ்திகாதாவும் - 1


    ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தன்னுடைய 'அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' என்னும் நூலில் எழுதுகிறார்கள் தாம் ஷத்தாரியா சில்சிலாவில் (தரீக்காவில்)  இஜாஸத் என்னும் அனுமதி பெற்றதாகச் சொல்கிறார்கள் . அவர்கள் இந்த இஜாஸத்தின் சில்சிலா என்னும் சங்கிலித் தொடர் வரிசையை அறிவிக்கிறார்கள் .அதில் அனுமதி வழங்கிய பல்வேறு பெரியார்களின் பெயர்களை அறிவிக்கிறார்கள் . அதில்  இந்தியாவில் ஷத்தாரியா சில்சிலாவின்  தலைமை வகித்த ஷைகு கவுஸ் குவாலியர் அவர்களின் பெயரும் அடங்கும் .

ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்த சங்கிலித் தொடர் மூலம் தனக்கு ஷத்தாரியா தரீக்காவில் கிடைத்த அவ்ராதுகளையும் ,விர்துகளையும் குறிப்பிட்டுள்ளார்கள் . அதில் 'துஆ யே ஸைபி' மற்றும் 'ஜவாஹிர் கம்ஸா' ஆகியவை அடங்கும் .

Al Intibah fi Salasil ul Auliaullah’

Dua e Saifi

Nad e ali

'துஆ யே ஸைபி ' எனப்படும் துஆ அதை ஓதுவதற்கும்,கற்பித்துக் கொடுக்கவும்  அனுமதி பெற்ற ஷைகுமார்களால் தனது மூரீதுக்கு கற்றுக் கொடுக்கப்படும் . துஆ யே ஸைபியின் இறுதிப் பகுதியில் 'நாதே அலி ' என்னும் பகுதியில் 'யா அலி ,யா அலி ,யா அபூ துராப் '  போன்ற சொற்கள் வருகின்றன .

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளுக்கு இதை விட இஸ்திகாதாவுக்கு ஆதாரம் வேண்டுமா? தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இனியாவது ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களை தங்களைச் சார்ந்தவர் என்று முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும் .

இனி அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் இந்த அகீதாவை ஏற்றுக் கொண்டால் இனி அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தைச் சார்ந்த முஸ்லிம்களை முஷ்ரிக் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் .

'ஜவாஹிர் கம்ஸா ' என்னும் நூல் வேறு துஆக்களின் தொகுப்பாகும் . இதில் உள்ள 'துஆ யே ஹைதரி' ன் இறுதிப் பகுதியில் 'யா அலி ,யா அலி ,யா அபூ துராப் ' போன்ற சொற்கள் வருகின்றன .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் இதை கருத்தில் கொண்டு இஸ்திகாதா மீதான தங்களின் வஹாபிய தீர்ப்பை ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் மீது செலுத்தட்டும் .

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் தமது மற்றொரு நூலான 'அன்பாஸுல் ஆரீபீன்' ல் குறிப்பிடுகின்றார்கள் தமது தந்தையும் ஷைகுமான ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள்  ஒவ்வொரு வருடமும் மௌலித் கொண்டாடுபவர்களாகவும் அதில் நியாஜ் என்னும் நேர்ச்சை செய்பவராகவும் இருந்தார்கள் என்று .

அதே நூலில் பிறிதொரு இடத்தில் தமது தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள் தனது ஆசிரியரின் கபுருக்குச் சென்று குரான் ஓதியதாகவும்,அப்பொழுது அன்னார் சூராவின் ஒரு பகுதியை ஓதிய பின்பு மற்றொரு கபுரில் இருந்து ' எமது கபுர் அதில்லை .எனினும் அங்கு குரான் ஓதிய பின்பு இங்கு வரவும் ' என்று அசரீரி வந்ததாகவும்,எனவே ஷாஹ் அப்துர் ரஹீம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் இரு கபுருகளிலும் குரான் தனித்தனியாக ஓதியதாக பதிவு செய்துள்ளார்கள் .

'ஜவாஹிர் கம்ஸா ' எனப்படுவது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல ஸுபி ஷைகுமார்களால் ஓதப்படும் பல்வேறு துஆக்களின் தொகுப்பு . இதனை தொகுத்தவர்கள் ஷைகு கவுஸ் குவாலியரி .
அன்னார் அந்த துஆக்களுக்கு ஓரக் குறிப்பும்,விளக்கமும் பார்சியில் எழுதியுள்ளார்கள் .

அதை உர்துவில் பலரும் மொழிபெயர்த்துள்ளனர் .எனினும் மிர்ஸா பைக் நக்ஷபந்தியின் மொழிபெயர்ப்பு பிரசித்தி பெற்றது .

துஆ யே ஸைபி ஜவாஹிர் கம்ஸாவில் உள்ள அத்தகைய ஒரு துஆ .இதை ஓதுவதற்கு பல ஷரத்துகள் என்னும் நிபந்தனைகள் உள்ளன .அதில் ஒன்று துஆ ஏ ஸைபி ஓதும் முன் 'நாதே அலி' ஓதுவதாகும் .

இந்த துஆவின் 'நுகாத்'  படி 'நாதே அலி' ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு துஆ யே ஸைபி க்கு முன்னும் ,பின்னும் ஓத வேண்டும் .

அந்த ஷரத்துகளை இங்கு காணலாம் .


Jawahir Kamsa

Dua e Saifi Condition Jawahir Kamsa

ஆக துஆ யே ஸைபி ஓதும் நபர்,முதலில் நாதே அலி ஓதுவார் .

ஜவாஹிர் கம்ஸா முழுமையாக ஓத அனுமதி பெற்ற நபர் ,நாதே அலியும் ஓதுவார் ,ஏனெனில் நாதே அலி ஜவாஹிர் கம்ஸாவில் உள்ள பல்வேறு துஆக்களில் நின்றுமுள்ளது . 

ஜவாஹிர் கம்ஸாவுடன் இணைந்து உள்ள நாதே அலியின் ஸ்கேன் பின்வருமாறு.


Nade Ali Jawahir Kamsa

 
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment