Tuesday 7 February 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 4




கத்மே நுபுவ்வத் மற்றும் நஸீர் ஏ முஹம்மதி குறித்த விவாதங்களும் ,இப்னு அப்பாஸ் அவர்களுடைய அதர் பற்றிய கேள்விகளும் அதன் பதில்களும் 

 தேவ்பந்தி பிர்காவின் மவ்லவி முஹம்மத் காஸிம் நானோத்வி (தாருல் உலூம் தேவ்பந்தின் ஸ்தாபகர்  )  தமது நூலான 'தக்தீருன் நாஸ்' ல் பின்வருமாறு எழுதுகிறார் ,

"சாமானிய மக்கள் ,பொதுமக்கள் “காத்தமுன் நபீயீன்” என்பதன் பொருள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் காலம் எல்லா நபிமார்களுக்கும் பிந்தியது என்றும் அவர்கள் தாம் இறுதி நபி என்றும் அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு .பிந்தி வருவதிலோ அல்லது இறுதி நபி என்பதிலோ எந்த விசேஷமும் இல்லை என்று அறிவர் .

அண்ணலம் பெருமான் முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .எனவே அவர்கள் காலத்தில் வேறொரு நபி வேறு ஒரு கிரகத்தில் வருவதிலோ அல்லது இதே கிரகத்தில் வருவதிலோ எந்த வேறுபாடும் உண்டாகாது . "
                                                   
                                                   
                                                   

[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 24,மவ்லவி காசிம் நானோத்வி  ] 

மவ்லானா முஹம்மது பாசிலுக்கு எழுதிய கடிதத்தில் மவ்லவி காசிம் நானோத்வி  பின்வருமாறு எழுதுகிறார் ,

“காத்தமுன் நபீயீன்” என்பதன் பொருளை எழுத்தியல் பொருளாக எடுப்பவர்கள் , நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் நுபுவ்வத்  காலம் எல்லா நபிமார்களுக்கும் பிந்தியது என்றும் அவர்கள் தாம் இறுதி நபி  என்று பொருள் கொள்வர் . எனினும் இந்த விஷயம் புகழோ ,தீங்கோ அளிக்கக்கூடிய ஒன்றாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் . " 

[ நூல் - காசிம் உல் உலூம் ,பக்கம் 55 , முதல் கடிதம் ]   

மவ்லவி அஷ்ரப் அலி தான்வி எழுதுகின்றார் ,
"மவ்லவி காசிம் நானோத்வி தக்தீருன் னாஸ் நூலை எழுதிய பொழுது ஒட்டுமொத்த இந்தியாவிலும் மவ்லவி அப்துல் ஹை என்பவரைத் தவிர வேறு யாரும் ஆதரிக்கவில்லை  "
                                                Al-Ifadat al-Yawmiya

[ நூல் - அல் இபாதாத் அல் யவ்மியா , பக்கம்  580, அஷ்ரப் அலி தான்வி  ] 

மவுலானா முஹம்மது ஷாஹ் பஞ்சாபி , மவ்லானா பஜ்லே மஜீத் பதாயூனி , மவ்லானா ஹிதாயத் அலி பரேல்வி , மவ்லானா பஸீஹுத்தீன் பதாயூனி , மற்றும் ஷைகு முஹம்மது தான்வி ஆகியோர் மவ்லவி காசிம் நாணோத்வியின் 'தக்தீருந் நாஸ் ' நூலுக்கு எதிராக நூற்களை எழுதி அவற்றை கடுமையாக எதிர்த்தனர் . 

   
ஹழ்ரத் மவ்லானா அப்துல் சமீ பேதில் ராம்பூரி ,ஷைகு  ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் கலீபா  மிகப் பிரபலமான நூலான 'அன்வாரே சாதியா ' என்னும் நூலை எழுதினார் . 

                                                     Anwar-e-Sati’ah



இந்த நூலுக்கு பதில் அளிக்கும் விதமாக மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வி ஸஹ்ரான்பூரி ( பிறப்பு - ஹிஜ்ரி 1269 -  1852 ஆம் ஆண்டு)
 (மறைவு ஹிஜ்ரி 1346 - 1927 ஆம் ஆண்டு )     'பராஹீனே காத்தியா ' என்னும் நூலை எழுதினார் .
                                                          Baraheen-e-Qati’ah
இந்த நூலுக்கு மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி அதன் கருத்துக்களை ஏற்று ஒப்புதல் வழங்கினார் . இந்த நூலில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் புனிதமிகு அறிவாற்றலை ,சபிக்கப்பட்ட ஷைத்தான் இப்லீசுடன் இஸ்லாமியர்களின் மனம் நோகும் வகையில் ஒப்பீடு செய்துள்ளார் .

கலீல் அஹ்மத் எழுதுகின்றார் ,

" இறுதி முடிவு : ஷைத்தான் மற்றும் மலக்குல் மவ்த்து ஆகியோருடைய நிலையை பார்த்த பின்னர் சிந்திக்க வேண்டிய விஷயம் யாதெனில் , அதைப்போன்று உலகமனைத்தையும் உள்ளடக்கிய பேரறிவு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு உண்டென எந்தவிதமான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லாமல் , வெறுமெனே தவறான ஒப்புமை கொண்டு மட்டும் நிரூபிக்க முயல்வது - இதற்கு பெயர் ஷிர்க் இல்லையென்றால் ,இது ஈமானின் எந்த பகுதி ?  

ஏனெனில் அத்தகைய விசாலமான அறிவு ஷைத்தான் மற்றும் மலக்குல் மவ்த்து உண்டென்பது அறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மூலம்   நிரூபிக்கப்பட்டுள்ளது (நுஸுஸ் கதிய்யாஹ் ). அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  அதேபோன்ற ஆழமான அறிவுடையவர்கள் என்று என்று நிரூபிக்கும் குரான் ஹதீஸ் உடைய அறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் எங்குள்ளது  ?  எல்லா அறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை மறுத்து  இந்த ஒரு ஷிர்க்குடைய நம்பிக்கையை நிலைநிறுத்தவதற்கு  ".

"பராஹீனே காத்தியா " நூல்  எழுதப்பட்டது ஹிஜ்ரி 1303ல் (1885ஆம் ஆண்டு ) . இந்த நூலைக் கொண்டு பெரும் அதிருப்தி ஏற்பட்டது .

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இதை எதிர்த்தனர் . ஹிஜ்ரி 1306ல்  (1888ஆம் ஆண்டு ) , பஞ்சாபின் பஹவல்பூர் நகரில் ஓர் விவாதம் நடந்தது , பஹவல்பூரின் நவாப் நவாப் முஹம்மது சாதிக் அப்பாஸியின் ஏற்பாட்டில் . இந்த நகரில் தான் அப்பொழுது கலீல் அஹ்மத் அம்பேத்வி பணி செய்து வந்தார் .

மவ்லவி மஹ்மூது ஹசன் தேவ்பந்தி மற்றும்  கலீல் அஹ்மத் அம்பேத்வி "பராஹீனே காத்தியா " நூலை ஆதரித்தும் ,
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் சார்பாக மவ்லானா குலாம் தஸ்தகீர் கஸூரி வாதிட்டார்கள் . ஷைகுல் மஷாயிக் ஷாஹ் குலாம் பரீத் அவர்கள் இந்த  விவாதத்தின் நீதிபதியாக இருந்தார்கள் .

இந்த முழுமையான விவாதமும் "தக்தீஸ் உல் வகீல் அன் தவ்ஹீன் உர் ரஷீத் வ கலீல் " என்று நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது .

                                        Taqdees ul Wakeel an Tauheen ur rasheed wal khalil


இது தான் 'அஹ்லே தேவ்பந்த்' க்கு எதிரான முதல் பத்வா .  மவ்லானா குலாம் தஸ்தகீர்   கஸூரி  ஹாஷ்மி நக்ஷ்பந்தி அவர்களால் வெளியிடப்பட்டது .

இந்த விவாதம் முழுக்க முழுக்க  எழுத்துப்பூர்வமானது ,மேலும்
மவ்லானா குலாம் தஸ்தகீர்   அவர்களின் வாதமானது ,

" என்னுடைய மறுப்பானது நீங்கள் படைப்புகளில் மிகவும் அறிவார்ந்தவர்களான நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் விசாலமான அறிவை மறுத்ததோடு , அவர்களின் அறிவை ஷைத்தானை விடவும் குறைவானது என்று கூறியுள்ளீர்கள் . இது மிகவும் மோசமான அவமரியாதை ஆகும்  " 
[நூல் -தக்தீஸ் உல் வகீல் ,பக்கம்  93  ]


 ரஷீத் அஹ்மத் கங்கோஹி  , கலீல் அஹ்மத் அம்பேத்வி ஆகியோரின் ஷைகான ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) ,மற்றும் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் ஷம்சுல் உலமா அஃலா ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் அல் காதிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்களும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களை ஆதரித்து , மவ்லானா குலாம் தஸ்தகீர் அவர்களின் நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டு அவரது நூலான தக்தீஸ் உல் வகீல் க்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டனர் . 

மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி, கலீல் அஹ்மத் அம்பேத்விக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதை கண்ட  ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்கள் கூறினார்கள் , " நான் மவ்லவி ரஷீத் அஹ்மத்  'ரஷீத் ' என்று நினைத்தேன் ,ஆனால் அவர் அதற்கு மாற்றாக உருவாக்கியுள்ளார் . அவர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் அறிவு ஷைத்தானை விட குறைவு என்று நிரூபிக்க மிகக் கடினமாக முயன்றுள்ளார் .இன்னும் அதற்கு மாற்றமான நம்பிக்கை கொள்வது ஷிர்க் என்று கூறுகின்றார் "
[ நூல் -தக்தீஸ் உல் வகீல் ,பக்கம்  419 ]

ஹிஜ்ரி 1319ல் ( 1901ஆம்  ஆண்டு ) மவ்லவி அஷ்ரப் அலி தான்வி 'இல்முல் கைப் ' சம்பந்தமாக ஒரு கேள்விக்கு விடையளித்து 'ஹிப்ளுள் ஈமான் ' என்னும் நூலை எழுதினார் .

                                         Hifzul Iman-Ashraf Ali Thanvi

இந்த நூலில்,அஷ்ரப் அலி தான்வி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் அறிவை ,பைத்தியக்காரர்களுடனும் ,மிருகங்களுடனும் ஒப்பிட்டு ,பெருமானார்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்களுக்கு வழங்கப்பட்ட மறைவான அறிவைக் கொண்டு எந்த தனிச்
சிறப்புமில்லை என்று கூறியுள்ளார் .

அதன் அசல் கூற்று பின்வருமாறு ,
' இன்னும் ஜைத் கூறுவது போன்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு வழங்கப்பட்ட மறைவான அறிவு என்னும் பண்பை சாட்டுவது உண்மையென்றால் , கேட்க வேண்டிய கேள்வியாதெனில் ,ஜைத் எதைக் குறிப்பிடுகின்றார் . அது மறைவான அறிவில் (இல்முல் கைப் ) ஒரு பகுதியையா அல்லது முழுமையாகவா ? ஜைத் அதில் ஒரு பகுதியை குறிப்பிட்டுகின்றார் என்றால் ,நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மறைவான இல்மை  கொண்டு என்ன சிறப்பு உள்ளது . இது மாதிரியான மறைவான இல்ம் எல்லோருக்கும் உள்ளது ,ஜைத் அமர க்கும் உள்ளது , இன்னும் குழந்தைகள் ,பைத்தியக்காரர்கள் ,மிருகங்கள் மற்றும் நான்கு கால் பிராணிகளுக்கும் உள்ளது  '.

ஹழ்ரத் ஸெய்யித் முஹம்மத் ஜீலானி ஹைதராபாதி அவர்களின் பேரர் ஸெய்யித் நஸீருத்தீன் ,ஸெய்யித் மொய்னுதீன் அவர்களின் மகனார் அஷ்ரப் அலி தான்வியின் இந்த கூற்றுக்கு தமது கண்டனத்தை பின்வருமாறு தெரிவிக்கிறார்கள் ,

"சிலர்  அஷ்ரப் அலி தான்வி எழுதிய 'ஹிப்ளுள் ஈமான்' நூலை   எனது பாட்டனாரிடம் காண்பித்து அதைப் பற்றி கேட்டார்கள் . அவர்கள் அந்த நூலை வாசித்து 'மவ்லவி அஷ்ரப் அலி இல்முல் கைப் விஷயமாக மிகவும் அவமரியாதையாக எழுதியுள்ளார் என்றார்கள் ".

சில நாட்கள் கழித்து ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் அஷ்ரப் அலி தான்வி இருந்த பொழுது ,எனது பாட்டனார் அவரிடம் எழுந்து சென்று தமது அருவருப்பை வெளிப்படுத்தி 'இந்த பத்தியில் குப்ர் உடைய வாடை உள்ளது என்றார்கள் '.

சில நாட்கள் கழித்து உலமாக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மவ்லானா ஹாபிழ் முஹம்மத் அஹ்மத் (மவ்லவி காசிம் நாணோத்வியின் மகனார் ) அவர்களின் வீட்டில் நடைபெற்றது . அவர் எனது பாட்டனார் மீது அன்பு கொண்டவர் என்பதால் அந்த  ஒருங்கிணைப்புக்கு எனது பாட்டனாரையும் அழைத்தார் . அங்கு உலமாக்கள் 'ஹிப்ளுள் ஈமான்'  நூல் பற்றி விவாதித்தனர் . எனது பாட்டனார் இது விஷயமாக தமது அருவருப்பை வெளிப்படுத்தி, இதைப் பற்றி ஓர் பத்வா வெளியிட்டார்கள் .

இதன் பின்னர் சில நாட்கள் கழித்து கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை கனவில் கண்டார்கள் . நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம்   (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்கள் அந்த நூலுக்கு மறுப்பு தெரிவித்ததைக் கொண்டு சந்தோசம் அடைந்து ,அதை 'அக்பாஹ் ' என்றும் கூறினார்கள் .    நபிகள் நாயகம்   (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்கள் , 'நான் உம்மை கொண்டு மகிழ்வுறுகின்றேன் .உமக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள்'  ? எனது பாட்டனார் இனி தமது இறுதிகாலம் வரை மதீனாவில் இருந்து அங்கேயே அடக்கம் பெற விரும்பினார்கள்.அவரது விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது ,அன்னார் மதீனா ஷரீபிற்கு ஹிஜ்ரத் செய்து ,ஏறத்தாழ பத்தாண்டு காலம் அங்கு கழித்து ஹிஜ்ரி 1364ல் மரணம் எய்தினார்கள் .
                                          Maqamat-e-Khair
[நூல் - மகாமத் ஏ கைர் , பக்கம் 616, ஷாஹ் அபுல் கைர் அகாடமி ,தில்லி ] 

ஹழ்ரத் மவ்லானா அபுல் கைர் நக்ஷ்பந்தி முஜத்திதி திஹ்லவி அவர்கள் சில காலம் கோதி இலாஹி பக்ஷ் ,மீரட் நகரில் வசித்தார்கள் . அந்த சமயத்தில் ஹாபிழ் முஹம்மது அஹ்மது ,மவ்லவி காசிம் நாணோத்வி தேவபந்தியின் மகன் மற்றும் அஷ்ரப் அலி தான்வி ஆகியோர் அவரது ஓர் அமர்வுக்கு வந்து அன்னாரை சந்தித்தனர் .

மவ்லானா குலாம் தஸ்தகீர் கசூரி அவர்களின் ஆதரவாளர் மவ்லவி அஷ்ரப் அலி தான்வியின் 'ஹிப்ளுள் ஈமான்' நூலின் கருத்துக்களை வாசித்துக் காண்பித்தார் .   ஹழ்ரத் ஷாஹ் அபுல் கைர் திஹ்லவி அவர்கள் அதனை முற்றிலும் வெறுப்பூட்டும் ஒன்றாக கண்டு ' இது தான் நீங்கள் செய்யும் மார்க்க சேவையா ? உங்களின் முன்னோர் எமது பாதையில் இருந்தனர் . இதை  ஏன் எதிர்த்தீர்கள் ? என்று வினவ ,அஷ்ரப் அலி தான்வி 'நான் இதன் விளக்கத்தை வேறொரு புத்தகத்தில் எழுதியுள்ளேன்'  என்றார்  . ஷாஹ் அபுல் கைர் கூறினார்கள் 'பலதரப்பட்ட மக்கள் இதன் காரணமாக ஹக்கை விட்டு வெளியேறிவிட்டனர் . உமது விளக்கத்தின் தேவை என்ன எஞ்சியுள்ளது ? ' என்றார்கள் .
                                            Bazm-e-Khair az-Zayd
[நூல்-பஸ்மே கைர் அஸ் ஸைத் , பக்கம் 11,ஷாஹ் அபுல் கைர் அகாடமி ,தில்லி  ]

முஸ்லீம்களிடையே பிரிவினையின் ஆரம்பமும் ,முடிவும் அனைவரும் அறியும் வகையில் பளிங்கு கண்ணாடி போல் உள்ளது .

முஹம்மது ஹுசைன் (ரயீஸ் நஹ்டோர் ,ஜில்லா பீஜ்னோர்  ) அவர்கள் எழுதுகிறார்கள் ,

"  இஸ்மாயில் திஹ்லவி தமது ஆதரவாளர்களுடன் தில்லியில் இருந்து லக்னோ வந்து தமது கொள்கைகளை பரப்ப ஆரம்பித்தார் . அந்த சமயத்தில் தான் மவ்லானா அப்துர் ரஹ்மான் விலாயதி அவர்கள் லக்னோவில் இருந்து வந்தார்கள் . அவர் தமது கராமத்துகளின் காரணமாக பிரபலமாகியிருந்தார் . இஸ்மாயில் திஹ்லவி இந்த காலத்தில் விவாதங்களைத் தவிர்த்து வந்தார் . லக்னோவை விட்டு கிளம்பும் முன் இஸ்மாயில் திஹ்லவி லக்னோவின் உலமாக்கள் வழிதவறிவிட்டனர் என்று கூறினார் . அவர் கல்கத்தாவில் இருந்து திரும்பி வந்து இந்த லக்னோவின் வழிதவறியவர்க்கு  எதிராக ஜிஹாத் புரிவேன் என்றார் . இறைவனின் நேசர் மவ்லானா அப்துர் ரஹ்மான் விலாயதி அவர்கள் கூறினார்கள் 'மகனே ,இத்தகைய எண்ணம் உள்ள எவரும் திரும்புவதில்லை'  "
 [நூல்- பர்யாத் அல் முஸ்லிமீன் , ஹிஜ்ரி 1308/ 1890ஆம் ஆண்டு , முஹம்மது ஹுசைன் பஜ்நோரி  ]

செய்யித் அஹ்மத் ரேபரேலியுடைய கொள்கைகளும் , இஸ்மாயில் திஹ்லவியின் எழுத்துக்களும் தமது முன்னோர்களின் நம்பிக்கைகளுக்கும் ,ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் கொள்கைகளுக்கும் மாற்றாக வழி தவறி சென்றன .

இதன் விளைவுகளை சுட்டிக்காட்டி மவ்லானா உபைதுல்லாஹ் சிந்தி தமது பார்வையை தெளிவாக வெளிப்படுத்துகிறார் ,
" காலம் செல்ல செல்ல , மூல கொள்கையில் இருந்து பிரிந்து சென்றதன் காரணமாக , முஸ்லிம்களின் தேசிய இயக்கமாக மாறியிருக்க வேண்டிய வலியுல்லாஹ் இயக்கம் கொள்கை பிரிவினையின் தளமாக மாறிப் போனது . இந்த பிரிவினை செய்யித் அஹ்மத் ரேபரேலி உடன் தொடங்கியது . இந்த இயக்கத்தின் மற்றோரு பிரிவான தேவ்பந்த் இயக்கமும் அதே முடிவை அடைந்தது . இன்றும் பெருவாரியான மக்கள் பரேலவிகளாக இருப்பதோடு இவ்விரு இயக்கங்களையும் குப்ர் கொள்கைகளை கொண்டவர்கள் என்றே கருதுகின்றனர் . "
[நூல்- இபாதாத் ஏ மல்பூஜாத் , பக்கம் 349, சிந்த் சாகர் அகாடமி , லாகூர் ,மவ்லானா உபைதுல்லாஹ் சிந்தி  ]

இந்தியாவில் ஹிஜ்ரி 1240/1825ஆம் ஆண்டுக்கு பின் உண்டான இஸ்லாமிய பிரிவினையின் காரணமும் ,அதன் காரணகர்த்தாக்களும் ,அதன் பின் புலமும் விவரிக்கப்பட்டுள்ளது .

அக்காலத்தில் வட இந்தியாவைச் சார்ந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை சார்ந்த  செல்வாக்கு நிறைந்த உலமாக்களின் சுருக்கமான பட்டியல் பின்வருமாறு ,

ஹிஜ்ரி 13ஆம் நூற்றாண்டு :


  • அல்லாமா அப்துல் அலி பிரங்கி மஹல்லி லக்னவி (1144-1235  ஹிஜ்ரி 
  • ஷாஹ் முஹம்மது அஜ்மல் இலாஹாபாதி (1160-1236 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அன்வாருல் ஹக் பிரங்கி மஹல்லி (1159-1239 ஹிஜ்ரி )
  • ஷாஹ் குலாம் அலி நக்ஷ்பந்தி திஹ்லவி (1158-1240  ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபூ சயீத் முஜத்திதி ராம்பூரி (1196-1226  ஹிஜ்ரி )
  • ஷாஹ் செய்யித் ஆலே அஹ்மத் காதிரி பரகதி மெஹ்ரார்வி (1160-1262 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபுல் ஹசன் பர்த் ப்ஹுல்வாரவி (1191-1265 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அஹ்மத் சயீத் முஜத்திதி ராம்பூரி (1217-1277  ஹிஜ்ரி )
  • அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி (1212-1278  ஹிஜ்ரி 
  • அல்லாமா அப்துல் ஹலீம் பிரங்கி மஹல்லி (1209-1285 ஹிஜ்ரி )
  • அல்லாமா பஜ்லே ரசூல் உத்மானி காதிரி பதாயூனி (1213-1289 ஹிஜ்ரி 
  • ஷாஹ் ஆலே ரஸூல் அஹ்மதி காதிரி பர்கத்தி மெஹ்ரார்வி (1209-1296 ஹிஜ்ரி )  
  • மவ்லானா நகி அலி கான் பரேல்வி (1246-1297 ஹிஜ்ரி )
இன்னும் எண்ணற்றோர் .அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக ! ஆமீன் .

ஹிஜ்ரி 14ஆம் நூற்றாண்டு :

  • மவ்லானா அப்துல் ஹை பிரங்கி மஹல்லி லக்னவி (1264-1304 ஹிஜ்ரி 
  • முப்தி இர்ஷாத் ஹுசைன் முஜத்திதி ராம்பூரி (1248-1311 ஹிஜ்ரி 
  • மவ்லானா பஜ்லே ரஹ்மான் கஞ் முராதாபாதி (1208-1313 ஹிஜ்ரி 
  • மவ்லானா குலாம் தஸ்தகீர் குஸூரி லாகூரி (மறைவு 1315  ஹிஜ்ரி )
  • மவ்லானா அப்துல் காதிர் உத்மானி காதிரி பரகதி பதாயூனி (1253-1319 ஹிஜ்ரி )
  • மவ்லானா ஹிதாயத்துல்லாஹ் ராம்பூரி ஜான்புரி (மறைவு 1326 ஹிஜ்ரி )
  • மவ்லானா கைருத்தீன் திஹ்லவி (மறைவு 1326  ஹிஜ்ரி )
  • மவ்லானா அஹ்மது ரிழா ஹனஃபி காதிரி பரகதி பரேல்வி (1272-1340 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபுல் கைர் நக்ஷபந்தி திஹ்லவி (1272-1341  ஹிஜ்ரி )
  • ஸெய்யித் ஷாஹ் அலி ஹுசைன் அஷ்ரபி கச்சோச்சாவி (1266-1355  ஹிஜ்ரி )
  • ஷாஹ் மெஹர் அலி கோல்ராவி பஞ்சாபி (1274-1356 ஹிஜ்ரி )

இன்னும் எண்ணற்றோர் .அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக ! ஆமீன் .








  




Related Posts Plugin for WordPress, Blogger...

3 comments :

  1. ரிளாகான் பரலேவி அன்னாரின் மீது எந்த நூலை முன்வைத்து குற்றம் சுமத்துகிறாரோ அதே நூலில் காஸிம் நானூதவி அவர்கள், நபி (ஸல்) அவர்களை காதமுன் நபிய்யீன் என்பதை மறுப்பதானது இறைநிராகரிப்பு என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

    جیسا ہیں تعداد رکعات کا منکر کافر ہے ایساہی اس ختم نبوت زمانی کا منکر بھی کافر ہوگا (تحذیر الناس

    தொழுகையின் ரக்அத்துகளின் எண்ணிக்கையை மறுப்பது இறைநிராகரிப்போ அதைப் போல நபி ஸல் அவர்கள் இறுதிநபி என்பதை மறுப்பதும் இறைநிராகரிப்பாகும்.

    எனவே காஸிம் நானூதவி (ரஹ்)அவர்கள் காதமுன் நபிய்யீன் என்பதை மறுக்கவில்லை என தெளிவாக உணரமுடிகிறது.அன்னார் மறுப்பதாக ரிளாகான் பரலேவிதான் அபாண்டமாக பழிசுமத்தியுள்ளார் என்பதையும் விளங்கமுடிகிறது.

    ReplyDelete
  2. தேவபந்தி வஹாபி கமால் பாஷா , நீர் அரபியும் ,உருதுவும் வாசிக்க படிக்க இயலாத ஓர் பாமரன் .
    இல்லையென்றால் தக்தீருன் நாஸ் நூலின் ஸ்கேன் பிரதியை வாசித்துப் பார்க்குமாறு உமக்கு பாடம் எடுக்கும் மவ்லவியிடம் கேட்கவும் . அது காஸிம் நாணோத்வியின் எழுத்து தானே .

    நீர் சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளை .காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் தான் . பரேலி அஃலா ஹழ்ரத் அவர்கள் மீது உங்களின் சினம் ,உங்களின் ஆற்றாமையின் வெளிப்பாடு . உங்கள் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் பிர்காவின் ஹக்கீமுல் உம்மத் (?) அஷ்ரப் அலி தான்வி தனது நூலில் காசிம் நாணோத்வி இறுதி நபி பற்றிய கொள்கைக்கு இந்தியா முழுவதும் அப்துல் ஹை என்பவரைத் தவிர யாருமே ஆதரவு அளிக்கவில்லை ,தான் உட்பட என்று எழுதியள்ளது என்ன ??????

    அஷ்ரப் அலி தான்வி பொய்யரா ??? உண்மையாளரெனில் காசிம் நாணோத்வி காத்தமுன் நபி என்பதில் வழிகெட்ட கொள்கை கொண்டார் என்று ஏற்பீரா ?? ஒரு நூலையும் படிப்பது இல்லை . உர்து அறிந்தால் தானே தெரிவதற்கு . இங்கு முஹக்கிக் போன்று வேடமெதற்கு

    இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (رضي الله عنه) அவர்களுடன் எமது இஸ்னத் அவர்களின் பேரர் ,அஷ் ஷைகு அஷ் ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் முஹத்தித் செகந்திராபாதி(رضي الله عنه) அவர்கள் மூலம் எங்களுக்கு கிடைத்துள்ளது . ஷாஹ் வலியுல்லாஹ் குடும்பத்தின் அஹ்லுஸ் ஸுன்னா பாரம்பரியத்தை விட்டும் விலகியவர் இஸ்மாயில் தெஹ்லவி என்று அவர்களே தங்களின் ஸில்ஸிலாவினரிடம் விளக்கி உள்ளனர் .

    இந்தியாவிலேயே இஸ்மாயில் திஹ்லவிக்கு வக்காலத்து வாங்குவது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தும் , கைர் முகல்லிது அஹ்லே ஹதீதும் தான் . உமது வஹாபிய வாந்தியை எமது தளத்தில் வந்து எடுக்க வேண்டாம் . எல்லா வழிகெட்ட நஜீஸ்களை விட்டும் விலகியே இருக்க நான் விரும்புகின்றேன் . இந்த தளத்தின் நோக்கம் நடுநிலை கொண்டு சிந்திப்பவர்களுக்கு மட்டுமே என்பதை நான் தெளிவாக எனது தளத்தில் எழுதியுள்ளேன் . உம்மை போன்று மூளையை அடகு வைத்த வஹாபிய ஆட்டு மந்தைகளுக்கு அன்று .

    இந்த ஒரு பின்னுட்டத்தை தவிர, உமது பிற பின்னுட்டங்களையும் எனது தளத்தில் இருந்து நீக்கி உள்ளேன் . பொதுமக்கள் உமது நடுநிலைமை லட்சணத்தை பார்ப்பதற்கு !

    ReplyDelete
  3. https://www.youtube.com/watch?v=3ODCXSfzds8

    ReplyDelete