Friday, 10 June 2016

பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 1


ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் காலத்தில் உண்டான மவ்லித் பற்றிய சர்ச்சை !

        

ஹாஜி இம்தாதுல்லாஹ் ஃபாரூக்கி அவர்கள் ஹிஜ்ரி 1223/1808-9 ஆம் வருடம் இந்தியாவின் சஹரான்பூரில் உள்ள நடொவ்டா என்னும் கிராமத்தில் பிறந்தார்கள் . அன்னார் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய காலனியாதிக்கத்துக்கு எதிராக கலந்து கொண்டு , புனிதமிகு மக்கா முகர்ரமாவிற்கு ஹிஜ்ரி 1276/1859-60ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தனர் .ஷைகு இம்தாதுல்லாஹ் அவர்கள் தமது மார்க்க ஞானத்தின் காரணமாகப் புகழ் பெற்றிருந்தனர் ,இன்னும்  ஸுபிக் கோட்பாடுகளின் பிரதான ஞானாசிரியராகவும் அறியப் பெற்றிருந்தனர் .

 ஜாமியா காசிமியா தாருல் உலூம் தேவ்பந்தின் அநேக அறிஞர்கள் ,குறிப்பாக மவ்லானா அஷ்ரப் அலி தானவி ,ரஷீத் அஹ்மத் கங்கொஹி ஆகியோர் அவரைப் பின்பற்றியவர்கள்(முரீதுகள்)  .இவர்களில் சில உலமாக்கள் ஷைகு இம்தாதுல்லாஹ் அவர்களுடன் பல மார்க்கரீதியான விஷயங்களில் முரண்பட்டு நின்றாலும் ,அன்னாரைத் தீவிரமாகப் பின்தொடர்ந்த உலமாக்களான கான்பூரின் முஹத்தித் அஹ்மத் ஹசன் கான்பூரி ,மார்க்கத்தின் எல்லா உலூம்களின் ஆசிரியர் (உஸ்தாதே குல் ) என்று அழைக்கப்பட்ட மவ்லானா லுத்புல்லாஹ் அலி கர்ஹி மற்றும் மவ்லானா ஹுசைன் இலாஹாபாதி ,சைய்யித் ஹம்சா , ஷைகு அப்து அல் சமீ பய்திள், ஷைகு கரீமுல்லாஹ் முஹாஜிர் போன்றவர்கள் ஷைகு இம்தாதுல்லாஹ் அவர்களின் நிலைப்பாட்டையே கடைப்பிடித்தனர் .

ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் ஹிஜ்ரி 1317/1899-1900 ஆம் ஆண்டு மக்காவில் காலமானார்கள் .அன்னார் அவர்களின் பிரியத்திற்குரிய உடன் வேலைப் பார்த்த ,மக்காவின் ஆசிரியர் ,ஹாஜி ரஹ்மத்துல்லாஹ் முஹாஜிர் மக்கி ,அவர்களை அடுத்து ஜன்னத்துல் முஅல்லாவில்  அடக்கம் செய்யப் பட்டுள்ளார்கள் .வல்லோன் அல்லாஹ் தமது கருணையை அவர்களின் மீது பொழிவானாக !

ஷைகு இமதாதுல்லாஹ் தமது ஆய்வு கிரந்தமான "பைஸ்லா ஹப்த் மஸலா " என்னும் நூலில் ,தேவ்பந்தின் உலமாக்களை பொது மக்களிடத்தில் சந்தேகம் ஏற்படும்படியான கருத்துகளை பரவ விடுவதை விட்டும் எச்சரித்தார்கள் .அதில் ஒரு விஷயம் தான் மவ்லித் பற்றிய தேவ்பந்தி தப்லீக் உலமாக்களின் நிலைப்பாடு,அதில் தம்முடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கும் விதமாக ஷைகு இம்தாதுல்லாஹ் அவர்கள் சொல்கின்றார்கள் ,

'இந்த எளியோனின் நிலைப்பாடு என்னவெனில் நான் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்கின்றேன் .இன்னும் நான் அதனை பரக்கத்தை அடையும் ஒரு வாயிலாக கருதுகின்றேன், எனவே நான் வருடந்தோறும் அதைக் கொண்டாடுகின்றேன் .நான் கியாமில் நிற்பதைக் கொண்டும் மகிழ்ச்சியும் ,இன்பமும் அடைகின்றேன் ' . [1]

உர்து மூலம் :
'மஷ்ரப் பாகிர் கா ஹை கெ மெஹ்பில் மவ்லூத் மே ஷரீக் குவ்தா ஹூன் ,பல்கே ஜரீ பர்கத் சமஜ் கர் ஹர் சால் முனாகித் கர்தா ஹூன் .அவ்ர் கியாம் மே லுத்ப் அவ்ர் லஜ்ஜத் பாதா ஹூன் '

மவ்லவி அஷ்ரப் அலி தானவிக்கு எழுதிய ஓர் கடிதத்தில் ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் முரீது எழுதுகிறார் ,

'
 ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் அவர்கள் தமது' இருப்பிடத்தில் நடத்திய ,அல்லது இந்தியாவில் மற்றும் மக்காவில் கலந்து கொண்ட மவ்லித் மஜ்லிஸ்களில் , மக்களை அழைத்தது ,அதிகமான விளக்குகளால் அலங்கரித்தது ,நறுமணம் பூசியது  ,பொதுமக்கள் அமர ஓர் இடம் அமைத்தது ,பயான் நிகழ்த்துபவர் அமர ஓர் உயர்வான இடம் அமைத்தது ,பெருமானாரின் பிறப்பு பற்றி கூறும் பொழுது கியாமில் எழுந்து நின்றது  , சமூகத்தில் உள்ள எல்லா தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்தது போன்றவை நடைபெறவில்லையா ? ஆம் , நிச்சயமாக இவை அனைத்தும் நடைபெற்றன ' . [2]

உர்து மூலம் :

' கியா ஹஜ்ரத் ஹாஜி சாஹப் கே யஹான் ஜோ மெஹ்பில் மீலாத் ஷரீப் ஹோதி தி ,யா ஜின் மேஹ்பில் ஹிந்துஸ்தான் கே அந்தர் மைன் ,யா மக்கா முஅஜ்ஜமா மைன் ஹஜ்ரத் ஹாஜி சாஹிப் கு ஷிர்கத் கா இத்திபாக் ஹுஆ கோகா ,உன் மெஹ்பில் மே தடாஇ ,கத்ரத் ருஷ்னி ,அவ்ர் இஸ்திஆமல் குஷ்பூ அவ்ர் இஹ்திமம் பாருவ்ஷ் உவ் ஜாயி நஷிஷ்த் தாகிர் கா புலந்த் உவ் மும்தாஜ் கர்ணா அவ்ர் கியாம் பி அல் தக்சீஸ் இந்த திக்ர் அல் விலாதத் அவர் இஜ்திமா ஹர் கஸ் உவ் ஆம் கோ நா ஹோதா தா ? நஹீன் ஜரூர் ஹோதா தா '.

ஷைகு ஹாஜி  இம்தாதுல்லாஹ் அவர்கள் 'பைஸ்லா ஹப்த் மஸ்அலா' எழுதியதன் நோக்கம் இந்திய துணைக்கண்டத்தில் மவ்லித் குறித்து மார்க்க அறிஞர்கள் மத்தியில் உண்டான சர்ச்சைகளை குறைப்பதற்கே .எனினும் சர்ச்சை அதன் வடிவிலேயே தொடர்ந்தது ,அது பெரும் பிரச்சனையாக வடிவெடுக்கும் வரை .மவ்லானா ரஷித் அஹ்மத் கங்கொஹி மவ்லிதிற்கு எதிரான ஒரு பத்வாவை 'இம்மாதிரியான மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது அனுமதி மறுக்கப்பட்டது ,மற்றும் பாவமாகும்' [3], என்று தெளிவாக கூறி எழுதி,மீண்டும் மீண்டும் மக்தபா ஹாஷிமி ,மீரத் மூலம் வெளியிட்டார்கள் .

இதற்கு மறுப்பு தெரிவித்து ஷைகு அப்து அல் சமீ பய்தில் ராம்பூரி (மறைவு ஹிஜ்ரி 1381/1901 ஆம் ஆண்டு ) ,ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் பிரதான கலீபா , 'அல் அன்வார் அல் ஸாதியா பி இத்பாத் அல் மவ்லூத் அல் ஃபாத்திஹா ' என்னும் நூலை எழுதி அதில் மவ்லித் ஓதுதல் ,மரித்தோருக்கு பாத்திஹா ஓதுதல் போன்றவற்றிக்கு இஸ்லாமிய மார்க்க ஆதாரங்களை எடுத்து வைத்தார்கள் .

மவ்லானா அப்து அல் சமீ ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹி அவர்களின் மவ்லித் மீதான தாக்குதலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்களாக ,தமது நூலான 'அல் அன்வார் அல் ஸாதியா ' வில் எழுதுகிறார்கள் , ' இந்த பத்வாவின் சொற்களில் உள்ள அபத்தங்களையும் ,பொருத்தமற்ற அர்த்தங்களையும் காணும் பொழுது ,எனது உள்ளத்தில் இவை மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்களின் சொற்கள் அல்ல என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது '

மவ்லானா குலாம் தஸ்தகீர் இதன் காரணத்தை கூறும் பொழுது ,அன்னாரின் ஆன்மீக குருவான ஷைகு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் எண்ணற்ற மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொண்டுள்ளதோடு ,அன்னார் இந்தியா வருகை தரும் போதெல்லாம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்களை விளித்து ,உதவி தேடும் கவிதைகளை இயற்றி உள்ளார்கள் .

 அவ்வாறே ஷைகு இம்தாதுல்லாஹ் அவர்களின் ஞானாசிரியர் ஷைகு அப்துல் கனி சாஹிப் முஹாஜிர் மதனி அவர்கள் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது ஆகும் என்று பல நூற்களில் பத்வா வழங்கியுள்ளார்கள் .ஆகையால் , 'அல் அன்வார் அல் ஸாதியா ' வின் நூலாசிரியர் ஷைகு அப்து அல் சமீ அவர்கள் தமது மற்றும் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹி ஆகியோரின் ஆசிரியர்கள் மற்றும் ஷைகுமார்களின் மவ்லித் கூடும் என்பதற்கு நம்பத்தகுந்த அறிக்கைகளை ஒன்றாக சேகரித்து ,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கொஹியின் பத்வாவுக்கு மறுப்பு வழங்கினார்க்கள் .[4]

'அல் அன்வார் அல் ஸாதியா ' நூலுக்கு ஒப்புதல் இமாம் அஹ்மது ரிழா கான் அவர்களிடமும் வாங்கப்பட்டது . இமாம் அஹ்மத் ரிழா அவர்கள் ஏற்கனவே மவ்லித் கூடும் ,கியாம் கூடும் என்னும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி  , 'இகாமத் அல் கியாமா லி தாயின் அல் கியாம் லி நபியி திஹாமா ' என்னும் நூலை ஹிஜ்ரி 1301ல் எழுதி வெளியிட்டார்கள் . மேலும் நூலாசிரியரின் உஸ்தாதான ஹாஜி ரஹ்மத்துல்லாஹ் கீரான்வீ அவர்களும்,ஷைகு அபு முஹம்மது அப்துல் ஹக் திஹல்வி அவர்களும் 'அல் அன்வார் அல் ஸாதியா ' விற்கு ஒப்புதல் அளித்தார்கள் .[5]

ஹிஜ்ரி 1304ல் /1887ஆம் ஆண்டு ஷைகு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் சிஷ்தியா சப்ரியா தரீக்காவைச் சார்ந்தவர்களான , ஷைகு கலீல் அஹ்மத் அம்பேத்வியும் அவரது ஆசிரியருமான ஷைகு ரஷீத் அஹ்மத் கங்கொஹியும் (மறைவு ஹிஜ்ரி 1323),மேற்குறிப்பிட்ட 'அல் அன்வார் அல் ஸாதியா ' நூலுக்கு மறுப்புரை எழுதும் விதமாக 'அல் பராஹீன் அல் காதியா அலா ஜிலாம் அல் அன்வார் அல் ஸாதியா ' என்னும் நூலை எழுதினார்கள் .

அந்த நூலில் மவ்லித் மஜ்லிஸ்களை இந்துக்கள் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்திக்கு ஒப்பாகவும் ,பாரம்பரிய இஸ்லாமிய முறைகளுக்கு மாற்றமான நிர்ணயங்களை வழங்கினார்கள்  .

மவ்லானா குலாம் தஸ்தகீர் அவர்கள் எழுதுகின்றார்கள் , " இந்த ரிஸாலா ,அதாவது 'அல் அன்வார் அல் ஸாதியா' ,வெளியான பொழுது ரஷீத் அஹ்மத் கங்கொஹி சாஹிபிற்கும் ,அவரது மாணவர்களுக்கும்,அவரை பின்தொடர்பவர்களுக்கும் தாங்க இயலாது வலி ஏற்பட்டது ,ஆகையால் அவர்கள் அல் அன்வாரின் நூலாசிரியரை இழிவுபடுத்தினர் .ஆகையால் அவர்கள் பல கட்டுரைகளை நூலுக்கு மறுப்புரையாக எழுதினர் ,இதன் மூலம் பல தாரங்களை தாங்கள் வழங்கியுள்ளதாக நினைத்துக் கொண்டனர் .அதில் ஒரு ஆய்வுக் கட்டுரைதான் மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வி,மவ்லவி ரஷீத் அஹமத் கங்கொஹியின் மாணவர் ,எழுதிய 'பராஹீனே காத்தியா அலா அல் அன்வார் அல் ஸாதியா ' " [6].

இந்த நூலைப் படித்த பின்பு ,மவ்லவி கலீல் அஹமத் அம்பேத்வியின் நெருங்கிய ,பாசத்திற்குரிய தோழரான மவ்லானா குலாம் அஹ்மத் தஸ்தகீர் (மறைவு ஹிஜ்ரி 1315),  அவர்கள் கலீல் அஹ்மத் அம்பேத்வி கற்பித்துக் கொடுத்துக் கொண்டிருந்த பஹவல்பூர் நோக்கி இந்த விஷயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடவும் , இதைக் கொண்டு உருவாகிக் கொண்டிருந்த பித்னாவைப் பற்றி எச்சரிக்கை செய்யவும் பயணிதார்கள் .

ஹிஜ்ரி 1306 ஷவ்வால் 3ம் தேதி ,மவ்லானா குலாம் தஸ்தகீர் தன்னோடு ,ஷைகு சுல்தான் மஹ்மூத் தல்ஹீறி ,ஷைகு அப்துர் ரஷீத் ,ஷைகு உமர் பக்ஷ் ,ஷைகு குலாம் நபி ,ஷைகு இலாஹ் பக்ஷ் ஆகியோர் மவ்லவி கலீல் அஹமத் அம்பேத்வி மற்றும் அவரது ஆதரவார்களான ஷைகு மஹ்மூத் அல் ஹசன் தேவ்பந்தி ,மவ்லவி சித்திக் அஹ்மத் ,மவ்லவி முஹம்மது முராத் ,மவ்லவி அப்துல் ஹக் காதிபூர் ,மவ்லவி ஜமியத் அலி பஹவல்பூரி ஆகியோருடன் 'பராஹீனெ காத்தியா' நூலின் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் முறையாக விவாதம் செய்யும் உத்தியை கையிலெடுத்தனர் .

'பராஹீனெ காத்தியா' நூலில் உள்ள சர்ச்சைக்குறிய விஷயங்களைப் பற்றிய இந்த விவாதத்தில் கொடூரமான தோல்வி மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்விக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டது . இதன் முடிவாக இந்த விவாதத்தின் தீர்ப்பாக ,நீதிபதிகள் சங்கைக்குரிய சாரா ஷரீபின் ஷைகான க்வாஜா குலாம் பரீத் அவர்களும் ,பஹவல்பூர் ஆளுனரின் ஷைகான ஷைகு முஹம்மத் ஸாதிக் அப்பாஸி அவர்களும் ,இந்த தேவ்பந்தி உலமாக்கள் வஹாபிய கொள்கையுடையவர்கள் என்றும் ,இவர்கள் இனிமேலும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த உலமாக்கள் அல்ல என்றும் தீர்ப்பளித்ததோடு ,பஹவல்பூரின் ஆளுனர் மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வியை பஹவல்பூர் நகரை விட்டும் வெளியேறுமாறு உத்தரவிட்டார் ' [7].

மவ்லானா குலாம் தஸ்தகீர் குசுரி அவர்கள் இந்த விவாதத்தை ஒரு நூலாக எழுதி ,அதில் மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வி பராஹீன் நூலுக்கு ஆதரவாக வைத்த வாதங்களையும் ,அந்த நூல் எவ்வாறு நேர்வழியை விட்டும் விலகியுள்ளது என்பதற்கான தமது மறுப்பையும் ,சத்தியமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளையும் எழுதியிருந்தார் .

அவர் அந்த புத்தகத்திற்கு ' தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் கலீல் ' என்று பெயர் சூட்டினார் .இந்த தொகுப்பை மவ்லானா குலாம் தஸ்தகீர் அவர்கள் ஹிஜ்ரி 1307ல் இரண்டு புனித தலங்களுக்கும் எடுத்துச் சென்றதோடு ,தமது பயணத்தில் அவற்றை அரபியில் மொழிபெயர்த்தும் கொண்டு சென்றார் .மக்கா முகர்ரமாவில் மவ்லானா குலாம் தஸ்தகீர் 'பராஹீனே காத்தியாவை ' ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களிடமும் ,ஷைகு ரஹ்மத்துல்லாஹ் பின் கலீலுர் ரஹ்மான் கீரான்வி அவர்களிடமும் சமர்ப்பித்து அவர்களின் மாணவர்களிடமும் (ரஷீத் அஹ்மத் ,கலீல் அஹ்மத் ),தாருல் உலூம்  தேவ்பந்தைச் சார்ந்த உலமாக்களிடமும் நிகழ்ந்த விவாதத்தைக் குறித்து கூறினார் .


இதைக் கேள்வியுற்ற இரு உலமாக்களும் இந்தியாவில் தேவ்பந்தின் உலமாக்கள் நடந்து கொள்வதை எண்ணி நெஞ்சம் வருந்தினர் .ஆகையால் மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி அவர்கள் ,மவ்லானா குலாம் தஸ்தகீர் எழுதிய'நூலான ' தக்தீஸ் அல் வகீல்' நூலுக்கு 8 பக்கத்திற்கு ஒப்புதல் வழங்கி ,அதில் ஷைகு ரஷீத் அஹ்மத் கங்கொஹியையும் அவரது ஆதரவாளர்களையும் அவர்களது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான பிரச்சாரத்தையும் ,ஷைகு அப்து அல் சமீ அவர்களின் 'அல் அன்வார் அல் ஸாதியா'வைக் கொண்டு இழிவுபடுத்தியதைக் கொண்டும் மிகவும்  வன்மையாக கண்டித்தார் .

                          பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 2

                          பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 3


Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment