Friday 10 June 2016

பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 2

ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் காலத்தில் உண்டான மவ்லித் பற்றிய சர்ச்சை ! 

                        பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 1


மத்ரஸா வ்லாதியாவின் முதல் ஆசிரியர் ,ஷைகு நூர்  'தக்தீஸ் அல் வகீல் 'லின் அரபு பிரதியை வாசிக்க ,மத்ரஸா வ்லாதியாவின் இரண்டாவது  ஆசிரியர் ஷைகு அப்துல் சுப்ஹான் அவர்கள் 'தக்தீஸ் அல் வகீல்'லின் முழுமையான உர்து பிரதியை ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி அவர்களின் முன் வாசிக்க ,ஷைகு ரஹ்மதுலாஹ் கீரான்வி அவர்கள் தமது ஒப்புதலை வாய் மொழி சொல்லி ,தமது தனிப்பட்ட முத்திரையைப் பதித்தார்கள் .பின்னர் ஷைகு நூர் அவர்களும் ,ஷைகு அப்துல் சுப்ஹான் அவர்களும் தங்களுடைய ஒப்புதலை வழங்கினார்கள் .

மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி ,மத்ரஸா வ்லாதியாவின்  ஸதாபகர் அவர்கள் ,தமது ஒப்புதலை இவ்வாறு தொடங்குகின்றார்கள் ,

"அல்லாஹ்வைப் புகழ்ந்து ,பின்னர் நாயகம் ஸல்லல்லஹு அலைஹி ஸல்லம் அவர்களையும் புகழ்ந்து , ரஹ்மதுல்லாஹ் கலீல் ரஹ்மான்  அவர்களின் மகனார்,எம் இருவருக்கும் அல்லாஹ்வின் கருணையையும் ,மன்னிப்பையும் யாசித்தவனாக ,நான் கடந்த சில காலமாக மவ்லவி ரஷீத் அஹமத் கங்கொஹியைப் பற்றி பல எதிர்மறையான விஷயங்களைக் கேள்விப்பட்டு வருகின்றேன் .நான் கேள்வியுற்றதை   மிகவும் வெறுத்தேன் ,இன்னும் அவர் அவ்வாறு கூறமாட்டார் என்று நல் அபிப்பிராயம் கொண்டு அத்தகைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவில்லை .எதுவரை எனில் எமது மாணவராக எம்முடன் தொடர்புடைய மவ்லவி அப்து அல் சமீ சாஹிப் ,மக்கா வரும் வரை நான் அவரை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு எச்சரித்தேன் ,இன்னும் அவர் மக்கா வந்து சேர்ந்த பின்பு நான் அவரிடம் பலமுறை அழுத்தம் கொடுத்து விவாதத்தில் ஈடுபடுவதை விட்டும் விலகி இருக்குமாறு எச்சரித்தேன், மேலும் தேவ்பந்த் மத்ரஸாவின் உலமாக்களை அவரது மூத்த சகோதரர்களை போலவும் கருதச் சொன்னேன் .

எனினும் பரிதாபத்திற்குரிய அந்த மனிதர் பொறுமை இழந்தார் ,நான் சொல்வதைக் கேட்கவும் இல்லை .இன்னும் அவர் எவ்வாறு வாய் மூடி அமைதியாக இருக்க முடியும் ?நான் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் (முதவாதிர் ) கூற்றுகள் தேவ்பந்த் உலமாக்கள் பற்றி வாய்மொழியாகவும் ,எழுத்தின் மூலமாகவும் கேட்டு வந்ததால் ,நான் ஆழ்ந்த துக்கத்துடன்,அமைதி காப்பது நியாயமற்றது என்பதாலும் கூறுகின்றேன் ,நான் மவ்லவி ரஷீத் அஹ்மத் நெர்வழிபெற்றவர் என்று நினைத்தேன் ,எனினும் அவர் அதற்கு மாற்றமான ஒருவராக மாறியுள்ளார் .அவர் எத்தகைய மதிப்பீட்டின் பிரகாரம் வந்திருந்தாலும் ,அவர் தமது சொற்களிலும் ,எழுத்துகளிலும் விளக்கிக் காட்டிய பிரிவினைவாதம் ,வாசிப்போரை அதிர்ச்சியடைய செய்கின்றது "

ஷைகு கலீல் அஹ்மத் தனது 'பராஹீனே காத்தியா ' நூலில் எழுதுகிறார் ,[8]

' இந்த தேவையுள்ளவன் மக்காவின் மஸ்ஜிதில் பயான் நிகழ்த்தும் ஒரு கண் பார்வை அற்ற மார்க்க அரிஞரிடம்   மவ்லூத் பற்றி கேட்டேன்,அவர் கூறினார் : அது ஒரு பித்அத் மற்றும் ஷரியத்திற்கு புறம்பானது .ஆகவே மக்காவின் உண்மையான உலமாக்களும் அதைக் கண்டிக்கத்தக்கது என்றே கருதுகின்றனர் '

உர்து மூலம் :
' இஸ் பந்தா ஆஜிஸ் நே ஏக் நபினா ஆலிம் சே மஸ்ஜித் மக்கா மேன் பாத் நிமாஜ் அஸர் கே வாஜ் கர்தே ஹேன் ,ஹால் மவ்லூத் பூச்சா ,தோ உன்ஹோனே பார்மாயா : பித் அத் ஹராம் .பஸ் ,வஹான் கே உலமாயே ஹக்கானி இஸ் அமல் கோ மாதும் ஜான்தே ஹென் '.

மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி ,கலீல் அஹ்மத் அம்பேதேவியின் மேற்குறிபிட்ட ஆதாரம் கொள்ளும் முறையைப் பற்றி குறிப்பிடுகின்றார்கள் ,

'அவர் தாம் ஒரு கண் பார்வை அற்ற மார்க்க அரிஞரிடம்   மவ்லூத் பற்றி கேட்டதாகச் சொல்லுகின்றார் ,அந்த அறிஞர் அது பித்அத், ஹராம் என்றாராம் .நிச்சயமாக அந்த அறிஞர் மவ்லவி முகமது அன்சாரி சஹரான்பூரி,அவரின் பெயரை தகிய்யாவின் காரணமாக சொல்ல மறுக்கின்றார் ,ஏனெனில் மக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் ,பெரியவர்களும் அவரை ஒரு கெட்ட மனிதராகவே கருதுகின்றனர் ! இல்லையெனில் அனேகமாக அறிவும் ,கண்களும் குருடாகியுள்ள ஒருவரிடம் தான் இதைக் கேட்டிருக்க வேண்டும் .சுப்ஹானல்லாஹ் ! அவர் (கலீல் அஹ்மத் ) கண் பார்வை அற்ற மார்க்க அரிஞரின் பேச்சை மார்க்கத்தின் ஆதரமாக எடுத்துள்ளார் ,ஆனால் அவரோ யதார்த்தத்தில் அறிவுக் குருடராக உள்ளார் '.[9]


மவ்லானா ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி அவர்களின் ஒப்புதல் 15 துல் காயிதா ,ஹிஜ்ரி 1307 ல் பெறப்பட்டுள்ளது ,மேலும் அவரது தனிப்பட்ட முத்திரையுடன் முத்திரை இடப்பட்டுள்ளது .

ஷைகு ஷாஹ் அப்துல் ஹக் முஹாஜிர் மதனி ,அவர்களின் முரீதான அல் ஹாபிழ் அப்துல்லாஹ் சிந்தி அல் முத்தாரி ,அவர்களும் 6 பக்கத்திற்கு 'அல் தக்தீஸ் அல் வகீல் ' லுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள் ,என்பதோடு மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வி அவர்களை தமது 'பராஹீனே காத்தியா' வின் நிலைப்பாட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்தார்கள் .[10]

ஷைகு ,இமாம் அல் தீன் அஹ்மத் ,ஷைகு ஷாஹ் அப்துல் ஹக் முஹாஜிர் மதனி அவர்களின் மாணவரும் ,கலீபாவும் ஆனவர்கள்  'அல் தக்தீஸ் அல் வகீல் ' லுக்கு  அரபியில் 2 பக்கத்திற்கு ஒப்புதல்அளித்துள்ளார்கள்.[11]

அவர் தேவ்பந்தின் உலமாக்களை தங்களின் 'பராஹீனே காத்தியா' வின் தவறான நிலைப்பாட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு பணித்தார்கள் என்பதோடு ,அரபு உலமாக்களிடம் வழங்கப்பட்ட அரபு மொழிபெயர்ப்பின் உண்மைக்கும் சாட்சியமும் அளித்தார்கள் .

ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ,மவ்லானா குலாம் தஸ்தகீர் குசுரி அவர்களை மக்காவில் உள்ள தமது இல்லத்திற்கு இருமுறை விருந்துண்ண அழைத்தார்கள் .அவர்கள் தற்பொழுது நடைபெறும் சச்சரவு சம்பந்தமாக பல்வேறு பிரச்சனைகளை விவாதித்த பின்னர் ,ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் மவ்லானா குலாம் தஸ்தகீர் அவர்களிடம் 'பராஹீனே காத்தியா' வில் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடன் முரண்படும் ஏழு மஸ்அலாக்களை யாருடைய பெயரும் குறிப்பிடாமல் எழுதுமாறு பணித்தார்கள் .அவ்வாறே மவ்லானா குலாம் தஸ்தகீர் மூன்று பக்கத்திற்கு ஆய்வுக் கட்டுரை எழுதவும் செய்தார்கள் .

 மவ்லித் பற்றிய பிரச்சனையில் ,மவ்லானா குலாம் அஹ்மத் குசுரி பின்வருமாறு எழுதினார்கள் ,

' அரபகத்திலும் ஏனைய மற்ற பகுதிகளிலும் கொண்டாடப்படும் வழக்கமான  மவ்லித் மஜ்லிஸ்களை ,கிருஷ்ண ஜெயந்தியுடன் ஒப்பிடுவது ,அதை பித்அத் ,ஹராம் என்பது ,இன்னும் கியாமில் நின்று  சங்கை செலுத்தவும் ,மரியாதை செய்யும் பொருட்டு நிற்பதையும் ,சங்கையான உலமாக்களிடம் போற்றுதலுக்குரிய ஒன்று என்றும் உள்ள ஓர் நிகழ்வை ,ஷரீயத்திற்கு முரணானது என்றும் இன்னும் மேற்கொண்டு அதை ஷிர்க் ,குப்ர் என்று அழைப்பது மிகவும் அருவருக்கத்தக்க  சொற் பிரயோகம்  . இஸ்லாமிய மார்க்கத்தின் மேன்மைமிகு மக்களால் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்களைகண்டிக்கத்தக்க செயல்களை விட்டும் தூய்மையான செயலை ,இஸ்லாமியர் அல்லாதவரோடு(தஷபுஹ் ) ஒப்பீடு செய்யும் நோக்கம் இல்லாத நிலையில் மேலும் சட்டரீதியலானதை இத்தகைய அருவருப்பான சொற்களைக் கொண்டு பேசுவது மிகவும் பொருத்தமற்ற செயல்,மிக்க மேலான அல்லாஹ் ஜல்லாஜலாலஹு கண்ணியம் அளிக்கும் தகுதியைத் தருவானாக . '[12]

ஹாஜி இம்தாதுல்லாஹ் இந்த ஆவணத்தை ஷாஹ் அப்துல் ஹக் இலாஹாபாதி முஹாஜிர் மக்கி அவர்களிடம் அனுப்பினார்கள் .அதை ஷாஹ் அப்துல் ஹக் அவர்கள் ஆமோதித்து ஒப்புதல் வழங்கினார்கள் .அத்துடன் ஹாஜி இம்தாதுல்லாஹ் பாரூக்கி மக்கி அவர்கள் பின்வரும் வாக்கியத்தை எழுதி ,உலமாக்களும் முரீதுகளும் கூடியிருந்த சபையில் தமது முத்திரையை இட்டார்கள் .இது நடந்தது ரபீயுல் அவ்வல் மாதம் ஹிஜ்ரி 1308ல் .

"மேற்குறிபிட்ட ஆவணம் சரியானதும் எனது கொள்கையின்படியும் உள்ளது "[13].

தென் இந்தியாவின் பழமையான மதரசாவான ஜாமியா நிஜாமியா ,ஹைதராபாத்தின் முதர்ரிஸ் ஷைகுல் இஸ்லாம் ஹாஜி அன்வாருல்லாஹ் பாரூக்கி அவர்களும் இதனை ஆமோதித்து ஒப்புதல் வழங்கினார்கள்.அன்னார் ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் முரீதும் ,கலீபாவும் ஆவார் .[14]


ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் கலீபாவும்,மவ்லானா ரஷீத் அஹ்மத் அவர்களின் ஆரம்ப கால மாணவருமான சைய்யத் ஹம்ஸா நகவி மக்கி அவர்களும் இதனை ஆமோதித்து ஒப்புதல் வழங்கி ,பின்வருமாறு கூறினார்கள் ,
" இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள கொள்கைகள் யாவும் அஹ்லுஸ் ஸுன்னா கொள்கை நூற்களில் உள்ளவை .இன்னும் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் " .[15]

மதரஸா வ்லாதியாவைச் சார்ந்த பின்வரும் உலமாக்களான ,ஷைகு அபூ முஅஸ்ஸம் செய்யித் ஆசம் ஹுசைன் ,ஷைகு அஸ்மத் அலி மற்றும் ஷைகு முஹம்மத் சயீத் முத்தீ ,தேவ்பந்த் உலமாக்களை விளித்து அவர்களது உஸ்தாதுமார்களான ஷைகு இம்தாதுல்லாஹ் மக்கி ,மவ்லானா ஹாஜி ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி ஆகியோருக்காகஅவர்களின் நிலைப்பாட்டைத்  திரும்ப பெற்றுக் கொள்ளுமாறும் ,தவ்பா செய்யவும்  வலியுறுத்தினார்கள் .[16]

'பராஹீனே காத்தியா' நூலுக்கு இரு புண்ணிய தலங்களில் மீண்டும் மறுப்புரை  ஹிஜ்ரி 1324ல்  இமாம் அஹமது ரிழா கான் அவர்களின் ஹஜ்ஜூக்கான  மக்கா விஜயத்தின் பொழுது ஹிஜ்ரி 1324ல் /1905ஆம் ஆண்டு நிகழ்ந்தது ,இமாம் அஹ்மத் ரிழா கான் அவர்கள் பராஹீனே காத்தியா கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைமுக ஞானம் பற்றிய நிலைப்பட்டை மறுத்து ,'தக்தீஸ் அல் வகீல் ' நூலின் ஒப்புதலை மீண்டும் 16 வருடங்கள் கழித்து ஆமோதித்து ஒப்புதல் வழங்கி தமது 'அத் தவ்லா அல் மக்கியா ' என்னும் நூலில் குறிப்பிட்டார்கள் .[17]


இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி அவர்கள் பராஹீனே காத்தியா நூலின் ஆசிரியர் ஷைகு கலீல் அஹ்மதையும் அவரின் ஆசிரியர் ஷைகு ரஷீத் அஹ்மத் கங்கோஹியையும் மவ்லித் மஜ்லிஸ்களை இவ்வாறு ஹிந்துக்களின் கிருஷ்ண ஜெயந்தியுடன் ஒப்பிடுவதை தமது 'அல் தவ்லா அல் மக்கியா' பாகம் 5ல் கண்டித்ததோடு ,'தக்தீஸ் அல் வகீல்' நூலில் உள்ள ஹரமைன் ஷரீஃபின் உலமாக்களின் கூற்றுகளை மேற்கோள் காட்டினார்.[18]

                   பைஸ்லா ஹப்த் மஸ்அலா - 3
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment