ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் காலத்தில் உண்டான மவ்லித் பற்றிய சர்ச்சை !
ஹிஜ்ரி 1324ல், சங்கைமிகு ஹரமைன் ஷரீஃபில் வசித்து வந்த இந்திய துணைக்கண்டத்தின் உலமாக்களில் 'அல் தவ்லா அல் மக்கியா ' நூலுக்கு ஒப்புதல் அளித்தவர்கள், செய்யத் அலி அஹ்மத் ஹிந்தி ராம்பூரி முஹாஜிர் மதனி,ஷைகு கரீமுல்லாஹ் முஹாஜிர் மதனி,(இவர்கள் இருவரும் ஷாஹ் அப்துல் ஹஃக் முஹாஜிர் மதனி ,மறைவு 1333 ஹிஜ்ரி அவர்களின் மாணாக்கர்) ,செய்யத் முஹம்மது உதுமான் காதிரி ஹைதராபாதி,மற்றும் ஷாஹ் அப்துல் ஹஃக் இலாஹாபாதி .[19]
மேலும் இங்கு நினைவு கூறத்தக்கது,ஷைகு செய்யத் கலீல் பின் இஸ்மாயில் மக்கி,மக்கா நூலகத்தின் நூலகர்,ஹாஜி இம்தாதுல்லாஹ் ஃபாரூக்கி அவர்களின் மாணவராவார். செய்யத் கலீல் அவர்கள் தான் இமாம் அஹ்மத் ரிழா கான் அவர்களை அன்னார் பராஹீனே காத்தியாவின் ஃபித்னாவை எதிர்கொண்ட பொழுது ஆதரித்த மக்காவின் உலமாக்களில் முன்னோடி ஆவார்கள். [20]
பராஹீனே காத்தியாவிற்கு எதிராக ‘தக்தீஸ் அல் வகீல்’ நூலுக்கு ஒப்புதல் நல்கிய அரபுலக உலமாக்கள் :
·
முஹம்மத் ஸாலிஹ் அல் கமால் மக்கி,ஹனஃபி முஃப்தி (ஹிஜ்ரி 1307,துல் ஹஜ் 3) .அன்னார் அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கும் ஒப்புதல் அளித்தார்கள்,பக்கம் 147.
· முஹம்மது சயீத் பாபுசயில் மக்கி,ஷாஃபி முஃப்தி மற்றும் ஷைகுல் உலமா , அன்னார் அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கும் ஒப்புதல் அளித்தார்கள்,பக்கம் 142.
· முஹம்மது ஆபித் ஹுஸைன் மக்கி,மாலிகி முஃப்தி, அன்னார் அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கும் ஒப்புதல் அளித்தார்கள்,பக்கம் 145.
· முஃப்தி கல்ஃப் பின் இப்ராஹீம் மக்கி,ஹன்பலி முஃப்தி.
· உத்மான் பின் அப்துஸ்ஸலாம் தாகிஸ்தானி மதனி,ஹனஃபி முஃப்தி, அன்னார் அல் தவ்லா அல் மக்கியா நூலுக்கும் ஒப்புதல் அளித்தார்கள்,பக்கம் 168.
· முஹம்மது அலி பின் ஜாகிர் அல் வதரி(ஹிஜ்ரி 1309,முஹர்ரம் 5).
ஆக மொத்ததில், ‘தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அன் ரஷீத் வ கலீல்’ 19 ஒப்புதல்களைப் பெற்றது, 'அல் தவ்லா அல் மக்கியா ' அரபுலகைச் சார்ந்த 77 உலமா பெருமக்களால் ‘பராஹீனே காத்தியா’ வின் ஃபித்னாவிற்கு எதிராக ஒப்புத்ல் பெற்றது. அதனை காலம் கழித்து ஒப்புதல் நல்கியவர்கள் பட்டியல் கீழெ கொடுக்கப்பட்டுள்ளது. (அல் தவ்லா அல் மக்கியா நூல் எழுதப்பட்டது ஹிஜ்ரி 1324 துல் ஹஜ் மாதம்).
செய்யத் முஹம்மத் தாஜுத்தீன் ஹசனி (மறைவு ஹிஜ்ரி 1362/1943) ,ஷைகு பத்ருத்தீன் ஹசனி அவர்களின் மகனார், ஹிஜ்ரி 1331/ 1913 ‘அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு மதீனா ஷரீஃப்வில் வைத்து ஒப்புதல் வழங்கினார்.
ஷைகு மஹ்மூத் ரஷீத் அல் அத்தர்(மறைவு 1364) , ஷைகு பத்ருத்தீன் ஹசனி அவர்களுடன் 40 ஆண்டுகள் அண்மித்து இருந்து மிகவும் பிரபலமான மாணவர்களில் ஒருவர்,மேலும் ஷைகு அப்துர் ரஹ்மான் பஹ்ராவி,ஷைகு அல் அஸ்கர் ஸலீம்,ஷைகு அஹ்மது அபு குத்வாஹ்,ஷைகு முஹம்மது அஷ்மவ்னி போன்றோர்களின் மாணவர்.
அன்னாரின் மாணாக்கர்களில் ஷைகு அபு அல் கைர் அல் மீத்னாய்(மறைவு 1380 ஹிஜ்ரி/1961),ஷைகு தாஜுத்தீன் ஷைகு பத்ருத்தீன் ஹசனி அவர்களின் மகனார்(மறைவு 1362 ஹிஜ்ரி/1943), ஷைகு அப்துல் வஹ்ஹாப் தப்ஸ் வ ஜைத் (மறைவு 1969) ,ஷைகு முஹம்மது சயீத் புர்ஹானி(பல நூற்களின் ஆசிரியர்,அவற்றுள் ஹனஃபி ஃபிக்ஹ் நூலான ‘அல் ஹதியத் அல் அலய்யாஹ்’ நூலின் விளக்கவுரை),ஷைகு அப்துல் ஃப்த்தாஹ் அபு குத்தாஹ்(மறைவு ஹிஜ்ரி1417 / 1997). அன்னார் மவ்லவி ரஷீத் அஹ்மத் ,மவ்லவி கலீல் ஆகியோரின் மவ்லித் ஃபத்வாவுக்கு எதிராக ஓர் மறுப்புரையாக ‘இஸ்திஹ்பாப் அல் கியாம் இந்த திக்ரி விலாததிஹி அலைஹி வஸலாத்து வஸலாம் ‘ என்ற நூலை எழுதினார்கள்.
ஷைகு யஹ்யா மக்தபி
ஜும்மைதா அல் திமிஷ்கி(மறைவு ஹிஜ்ரி 1378/1958),ஷைகு பத்ரூத்தீன் அல் ஹசனி
அவர்களுடன் அறுபது ஆண்டுகள் விடாமுயற்கியுடன் கல்வி கற்ற மிகவும் தலைசிறந்த
மாணவர்களில் ஒருவர்,’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது மக்தபா தாருல் ஹதீத்
வைத்து,22 ஸபர்,ஹிஜ்ரி 1337ல் ஒப்புதல் வழங்கினார்கள்.
ஷைகு முஹம்மத் பின் எஃப்பெந்தி
அல் ஹக்கீம் திமிஷ்கி ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதல்
வழங்கினார்கள். அன்னார் இஸ்லாமிய பாரம்பரிய கல்வி முறைகளை தமது ஆசிரியர்களான
பத்ரூத்தீன் அல் ஹசனி(மறைவு ஹிஜ்ரி 1354/1925),ஷைகு தாஹிர் அல் ஜசாயிரி மற்றும்
ஷைகு முஹம்மத் தய்யிப் (மறைவு ஹிஜ்ரி1345 /1924) .
ஷைகு முஹம்மது ஆரிஃப்
பின் முஹைய்யித்தீன் பின் அஹ்மது , அல் மஹ்மல்ஜி(மறைவு ஹிஜ்ரி 1335/1916) என்ற
அறியப்பட்டவர்கள், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை ஹிஜ்ரி 1329
ரமழான்/1910 வழங்கினார்கள். அன்னாரும் ஷைகு பத்ரூத்தீன் அல் ஹசனி அவர்களின்
மாணவர்.
புனித மக்கா ஷரீபின்
ஒப்பற்ற செய்யித் மற்றும் ஆலிமுமான ,ஹரம் ஷரீபின் ஆசிரியருமான,முஹம்மத் பின்
செய்யித் வாஸி அல் ஹுஸைனி அல் இத்ரீஸி, ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது
ஒப்புதலை மதீனா ஷரீபில் வைத்து ஹிஜ்ரி 1330ல் வழங்கினார்கள்.
ஷைகு அப்துல்லாஹ் பின்
ஸதக்காஹ் பின் ஜைனி தஹ்லான் ஷாஃபி மக்கி , ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது
ஒப்புதலை ரஜப் 10,திங்கட்கிழமை
ஹிஜ்ரி1328ல் வழங்கினார்கள்.
ஸைய்யித் இஸ்மாயில் பின்
கஹ்லீல்,மக்கா ஷரீபின் நூலகத்தின் நூலகர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது
ஒப்புதலை ஹிஜ்ரி1328ல் வழங்கினார்கள்.
ஷைகு அலி பின் அலி
அல்ரஹ்மானி,புனித மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது
ஒப்புதலை ஹிஜ்ரி1331ல் வழங்கினார்கள்.
ஷைகு யாஸீன் பின் ஸயீத், புனித
மஸ்ஜிதுன் நபவியின் இஸ்லாமிய பாரம்பரிய கல்விமுறையின் ஆசிரியர், ’அல் தவ்லா அல்
மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை ரமழான்
இறுதியில் ஹிஜ்ரி1329ல் வழங்கினார்கள்.
ஷைகு முஹம்மத் யாகூப்
பின் ரஜப் , புனித மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது
ஒப்புதலை ஹிஜ்ரி1329ல் துல்கஹ்தா 5 அன்று
வழங்கினார்கள்.
முஃப்தி அதா அல் காசிம்
ஹனஃபி திமிஷ்கி,தனது காலத்தின் மிகப் பிரசித்தி பெற்ற உலமாக்களான ஷைகு அப்துல் கனி
மீதானி ஹனஃபி(ஷரஹ் அகீதா தஹவிய்யா மற்றும் குதுரி அல் லுபாப் நூலுக்கு விளக்கவுரை
எழுதியவர் ),ஷைகு அப்துல்லாஹ் சுக்கரி,ஷைகு அஹ்மது ஹலபி,ஷைகு அஹ்மது தந்தாவி,ஷைகு
ஸலீம் அத்தார் திமிஷ்கி போன்றோரின் மாணவர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது
ஒப்புதலை ஹிஜ்ரி1333ல்
ரபீயுத்தானில் மதீனாவில் வழங்கினார்கள்.
அன்னாரின் பிரசித்தி
பெற்ற மாணவர்களில் ஷைகு அப்துல் வஹ்ஹாப் தப்ஸ் வஜைத் திமிஷ்கி(மறைவு 1969),ஷைகு
அபூ அல் கைர் மீதானி,ஷைகு ஸயீத் அல் புர்கானி(அல் தாலீகத் அல் மர்தியா அலா அல்
ஹதியாத் அல் அலாயிய்யா நூலின் ஆசிரியர்) மற்றும் அக்காலத்தின் மதிப்புமிக்க
உலமாக்கள் பலரும் அடங்குவர்.
ஷைகு முஹம்மது பின்
அஹ்மது ரமதான் ஷாமி அல் மதனி ஷாதிலி(மறைவு ஹிஜ்ரி 1340/1921) மதீனா ஷரீஃபில் தமது
அரபு இலக்கண புலமைக்காக பிரசித்தி
பெற்றவரும்,’ஸஃப்வாத அல் அதப்,முஸாமராத் அல் அதீப்,முனாஜாத் அல் ஹபீப்,ஷேரி
திவான்’ போன்ற பல்வேறு நூற்களின் ஆசிரியருமானவரும், ’அல் தவ்லா அல் மக்கியா’
நூலுக்கு தமது ஒப்புதலை ஹிஜ்ரி1331ல்
வழங்கினார்கள்.
ஷைகு முஹம்மது ஸயீத் அல்
காஸிமி அல் திமிஷ்கி (மறைவு ஹிஜ்ரி 1335 அல்லது 1337) , ’அல் தவ்லா அல் மக்கியா’
நூலுக்கு தமது ஒப்புதலை ஹிஜ்ரி1329ல்
ரமழான் 2ல் வழங்கினார்கள்.
ஷைகு ஹுசைன் பின்
முஹம்மது பின் அலி , ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை ஹிஜ்ரி1332ல் ஸபர் மாதம் வழங்கினார்கள்.
ஷைகு முஹம்மது
ஸிப்கதுல்லாஹ் அல் மதராஸி, ’அல் தவ்லா அல்
மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை
ஹிஜ்ரி1331ல் ரபீயுல் அவ்வல் மாதம் 15ம் தேதி வழங்கினார்கள்.
ஷைகு முஹம்மது
கரீமுல்லாஹ் முஹாஜிர் மதனி, ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை ஹிஜ்ரி1329ல் ஜமாதுல் ஆகிர் மாதம் 22ம் தேதி
வழங்கினார்கள்.
ஷைகு அஹ்மது பின்
முஹம்மது பின் முஹம்மது கைர் அல் ஸினாரி அல் அப்பாஸி அல் மதனி, ’அல் தவ்லா அல்
மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை
ஹிஜ்ரி1330ல் ஜமாதுல் வலா மாதம் 25ம் தேதி வழங்கினார்கள்.
ஷைகு முஸ்தபா அல் தாஸி
பின் கஜூஜ் அல் தூனிஸி அல் கல்வதி அல் மாலிகி,மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர், ’அல்
தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை
ஹிஜ்ரி1330ல் ஷஃபான் மாதம் 15ம் தேதி வழங்கினார்கள்.
ஷைகு அப்துல் காதிர் பின்
முஹம்மது பின் அப்துல் காதிர் அல் தூனிஸி அல் ஹுஸைனி, ’அல் தவ்லா அல் மக்கியா’
நூலுக்கு தமது ஒப்புதலை ஹிஜ்ரி1329ல்
ரபீயுல் ஆகிர் மாதம் 29ம் தேதி வழங்கினார்கள்.
ஷைகு குலாம்
புர்ஹானுத்தீன் இப்னு அல் ஸைய்யித் நூர் அல் ஹசன் அல் மதனி, ’அல் தவ்லா அல்
மக்கியா’ நூலுக்கு தமது ஒப்புதலை
ஹிஜ்ரி1329ல் ஜமாதுல் உலா மாதம் 3ம் தேதி வழங்கினார்கள்.
ஷைகு ஸெய்யித் யூசுப்
அதா,மஸ்ஜிதுன் நபவியின் ஆசிரியர், ’அல் தவ்லா அல் மக்கியா’ நூலுக்கு தமது
ஒப்புதலை ஹிஜ்ரி1332ல் ரஜப் மாதம் 17ம்
தேதி வழங்கினார்கள்.
ஷாஹ் அப்துல் ஹக் இலாஹாபாதி மக்கி :
ஷாஹ் அப்துல் ஹஃக்
இலாஹாபாத் முஹாஜிர் மதனி(மறைவு ஹிஜ்ரி 1333) ஹரம் ஷரீபில் வசித்து வந்தவர்,ஹாஜி
இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி(ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் நெருங்கிய
நண்பர்,’அல் துர் அல் முனாஸம் ஃபீ மவ்லித் அல் நபி அல் ஆஸம்’ என்னும் நூலை ‘அல்
அன்வார் அல் ஸாதியா’ நூலுக்கு ஆதரவாக மவ்லித் ஷரீஃப் கொண்டாடுவதன் அனுமதி பற்றியும்,கியாமில்
நிற்பது பற்றியும் எழுதினார்.
பின்வரும் உலமாக்கள்
‘அல் துர் அல் முனாஸம்’ நூலுக்கு ஒப்புதல் வழங்கினார்கள்,
·
மவ்லானா ஹாஜி ரஹ்மதுல்லாஹ் கீரான்வி.
·
ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் முரீது,செய்யத் ஹம்ஸா நகவி திஹல்வி,மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் சில
காலம் கல்வி பயின்றவர்.
·
மவ்லானா அப்துல் ஸமீ,ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் கலீஃபா
மற்றும் ‘அல் அன்வார் அல் ஸாதியா’ நூலின் ஆசிரியர்.
·
மவ்லவி அப்துல்லாஹ்,மவ்லானா காஸிம் நானூத்வியின் மருமகன்.
மவ்லானா
ரஹ்மதுல்லாஹ் கீரான்வி மக்கி :
ஷைகு ரஹ்மதுல்லாஹ்
கீரான்வி அவர்கள்,முஜப்பர்நகர் மாவட்டம்,கீரானா என்னும் டவுணில் 1817 ஆம் ஆண்டு
பிறந்தார்கள்.அன்னார் தமது 75ம் வயதில் ரமழான் மாதம் 24ம் தேதி ஹிஜ்ரி 1308ல்/ மே
மாதம் 2ம் தேதி 1891ல் மறைந்தார்கள்.அன்னார் இஸ்லாமிய பாரம்பரிய கல்விமுறையை
இந்திய துணைக்கண்டத்தின் அக்காலத்திய பிரபல உலமாக்களிடம் கற்று,பின்னர் தமது
மார்க்க வாழ்க்கையை கிருஸ்துவ மிஷனரிக்களை உர்துவிலும்,அரபியிலும் விவாதிப்பதைக்
கொண்டு துவக்கினார்கள்.அவரது மிகப்பிரபல்யமான விவாதங்களில் முக்கியமானது பிஷப்
சி.ஜி.ஃபெண்டெர் என்பவருடன் இஸ்தான்புல்லில் நடைபெற்ற விவாதம்.
பிஷப் ஃபெண்டெர் அரபி
மற்றும் ஃபார்ஸி மொழியில் பாண்டித்தியம் பெற்றதோடு உலகம் முழுவதும் சுற்றி
இஸ்லாமிய உலமாக்களை தன்னுடன் விவாதிக்க வருமாறும் அல்லது கிருஸ்தவ மார்க்கத்தை
ஏற்குமாறும் சவால்கள் விடுத்த முக்கியமான
கிருஸ்துவ அறிஞர்.அவர் பின்னாளில் மவ்லானா ரஹ்மதுல்லாஹ் கீரான்வி அவர்களிடம் மிகக்
கொடூரமான முறையில் தோல்வியைத் தழுவி,இனி எப்பொழுதும் இம்மாதிரியான விஷயங்களில்
ஈடுபட போவது இல்லை என்று எழுத்துப்பூர்வமான பிரமாணமும் செய்தார்.இதனைத் தொடர்ந்து
மவ்லானா ரஹமதுல்லாஹ் கீரான்வி மிகவும் பாராட்டப்பெற்ற நூலான ‘இள் ஹாருல் ஹக்’
என்னும் நூலை அரபியில் எழுதினார்கள்.
ஷைகு ரஹம்துல்லாஹ்
கீரான்வி அவர்கள் தான் இந்திய உலமாக்களில் முதன் முதலில் மக்கா ஷரீஃபில் ‘ஸவ்லாதியா’ என்னும் பெயரில்
மதரஸா ஸ்தாபிதம் செய்தவர்கள்.அன்னாரின் மீது இமாம் அஹ்மது பின் ஜைனி தஹ்லான்
ஷாஃபியி அவர்கள் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள்,மேலும் ஹன்ஃபி ஃபிக்ஹின்
பிரகாரம் ஹதீத் கலை சம்பந்தமான பாடம் நடத்துவதற்கு மக்காவில் பணி அமர்த்தப்பட்டார்கள்.
அப்துல்லாஹ் அல்
ஸிந்தி அல் மக்கி ,ஷாஹ் அப்துல் ஹஃக் முஹாஜிர் இலாஹாபாதி அவர்களின் மாணவர் கூறினார்
, “ ரோம் அரசின் சுல்தான் ,அல்லாஹுதஆலா அவரையும் நம்மையும் அவன் விரும்புவதைக்
கொண்டு நேர்வழிப்படுத்துவானாக,எங்களின் இமாம் ஹழ்ரத் மவ்லானா ஷைகு ரஹ்மதுல்லாஹ்
கீரான்வி அவர்களை அழைத்து, அல்லாஹ் அவர்களின் ஆயுளைக் கொண்டு முஸ்லிம்களை
ஆசீர்வதிப்பானாக,ஷைகுல் இஸ்லாம் மற்றும் எல்லா மனிதர்களின் முஃப்தி அவர்களின்
ஆலோசனையின் பேரில், மார்க்கத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் கிளைகளில் தங்கள் அறிவை ஆழப்படுத்திய மார்க்க அறிஞர்கள் மத்தியில் மிகவும் கற்றுத் தேர்ந்தவரும்,அல்லாஹ்வின்
பால் மிகவும் எச்சரிக்கைக் கொண்ட உலமாக்களில் மிகவும் உன்னதமானவரும்,நேர்மையும் மெய்யுறுதியின்
மூலமும் ஆகிய,ஷைகு உர்ஜைனி ஜாதா அஹ்மது அஸ் அது எஃப்பெந்தி,அல்லாஹ் அவர்களின் கீர்த்தியை
அதிகப்படுத்துவானாக,’ஹரமைன் ஷரீஃபின் தூண்கள்’ இன்னும் சுல்தான் அவர்களை அழைத்து பின்வரும்
பட்டங்கள் அளித்தார்,’இஸ்லாமிய நீதிபதிகளில் மாபெரும் காஜி,தவ்ஹீதுடைய மக்களின் மிகப்பெரும்
பாதுகாவலர்,யகீன் மற்றும் கீர்த்திகளின் மூலவர்,ஷரீயத் மற்றும் தீன் கொடியைப் உயரே
பறக்க விட்டவர்,மற்றும் நபியின் இல்முடைய வாரிசு’. [21]
ஷைகு
அபூ முஅஸ்ஸம் செய்யித் ஆஸம் ஹுஸைன்,ஷைகு அஸ்மத் அலி மற்றும் முஹம்மது ஸயீத் மூதீ(மதரஸா
ஸவ்லாதியாவின் ஆசிரியர்கள்) ,தங்களின் ஒப்புதலை வழங்கும் பொழுது மவ்லானா ரஹ்மதுல்லாஹ்
கீரான்வி அவர்களை ’ஹரமைன் ஷரீஃபின் தூண்கள்’ என்று விளித்தார்கள்.(பயா ஏ ஹரமைன் ஷரீஃபைன்)
[22].
மவ்லவி கலீல் அஹமது அம்பேத்வி மற்றும் மவ்லவி
ரஷீத் அஹ்மது கங்கோஹி தமது ‘பராஹீனே
காத்தியா’ நூலில் மவ்லானா ரஹ்மதுல்லாஹ் கீரான்வி அவர்களைப் புகழ்ந்துள்ளனர்.
=================================================================
[1] ஃபைஸலா ஏ ஹஃப்த் மஸாலா ,பக்கம் 5.
[2] பவாதிர் அல் நவாதிர்,மக்தபா
தேவ்பந்த்,பக்கம் 201.
[3] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ
கலீல்,பக்கம் 5 -7.
[4] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ
கலீல்,பக்கம் 8.
[5] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ
கலீல்,பக்கம் 314,308.
[6] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ
கலீல்,பக்கம் 9.
[7] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ
கலீல்,பக்கம் 13.
[8] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ
கலீல்,பக்கம் 20.
[9] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ
கலீல்,பக்கம் 415 -422.
[10] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத்
வ கலீல்,பக்கம் 423-428.
[11] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத்
வ கலீல்,பக்கம் 428-430.
[12] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத்
வ கலீல்,பக்கம் 443.
[13] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத்
வ கலீல்,பக்கம் 444.
[14] ஜாமியா
நிஜாமியா,ஹைதராபாத்-ன் ஸ்தாபகர் மற்றும் ‘அன்வார் ஏ அஹ்மதி ஃபீ மவ்லிதுன் நபவி’
நூலின் ஆசிரியர். அன்னாரின் மாணவர்களில் ஒருவர் தான் தமது நூற்றாண்டின் முஜத்தித்
மற்றும் தெக்கானின் முஹத்தித் என்று அழைக்கப்பட்ட ஷாஹ் அப்துல்லாஹ்
ஹைதராபாதி,’மிஷ்காத் அல் மஸாபீஹ்’ நூலுக்கு ஐந்து பாகங்களில் விளக்கவுரை
எழுதியவர்,அது ஹனஃபி ஆதாரங்களின் மூலமாகவும் இன்று வரை சிறந்ததாகவும்
விளங்குகிறது.ஷைகு அப்துல் ஃபத்தாஹ் அபூ குத்தாஹ் அதற்கு ஒப்புதல் அளித்து
உள்ளார்கள்.
[15] தக்தீஸ் அல் வகீல் அன்
தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம் 444.
[16] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத்
வ கலீல்,பக்கம் 445.
[17]அல் தவ்லா அல் மக்கியா ,பக்கம் 86 -88.
[18] அல்
தவ்லா அல் மக்கியா ,பக்கம் 87.
[19] அல் தவ்லா அல் மக்கியா ,பக்கம்
179,201,231.
[20] அவரின் ஒப்புதல் அல்
தவ்லா அல் மக்கியா ,பக்கம் 38 – 142,ஹுஸாமல் ஹரமைன் ,பக்கம் 30-31,மல்ஃபூஜாத்
இமாம் அஹ்மத் ரிழா வால்யூம் 2.
[21] ஷைகு அவர்களின் சரிதையையும் அவரின்
மார்க்க சேவைகளையும் காண http://www.alsawlatiyah.com/
[22] தக்தீஸ் அல் வகீல் அன் தவ்ஹீன் அல் ரஷீத் வ கலீல்,பக்கம்
423.
================================================================