Saturday, 24 February 2024

தப்லீக் ஜமாத் என்னும் வழிகேடு

தப்லீக் ஜமாஅத் வழிகேட்டின் மொத்த உருவம்

 
இன்றைக்கு நம்முடைய சமூகத்தில்  பரவலாகப் பலராலும் பேசப்படுகின்ற ஒரு இயக்கம் தப்லீக் ஜமாஅத் அகும் . நபிமார்கள் செய்த வேலையை வழி காட்டும் ஒரே வழிகாட்டி தப்லீக் ஜமாஅத் என அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள்  மக்களிடத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள் .

பலரும் இதன் பெயரினைக் கேட்டு அதன் வெளிவேஷத்தைக் கண்டு மயங்கி அதனை உண்மையான இயக்கம் எனக் கருதி அதன் பின்னே செல்லமுற்படுகின்றனர் . உண்மையில் இவர்களின்  நோக்கம் என்ன ? மக்களை நேர்வழி படுத்த வந்தார்களா ? இல்லை மக்களை வழிகேடுக்க வந்தார்களா ?  என்றால்  நமக்கு அதிர்ச்சியான விஷயம் தான் காத்துருக்கிறது .

தப்லீக் ஜமாஅத் நிலை :

      முதல் முதலில் இந்தியாவில் வஹ்ஹாபி கொள்கையை பரப்புவதற்க்கு உருவாக்கப்பட்ட இயக்கமே ! தப்லீக் ஜமாஅத் தான் .ஏனென்றால் ? இவ்வியக்கத்தை உருவாக்கிய தலைவர் இல்யாஸ் , அவரது ஆசிரியர்கள் , பேசிய பேச்சுகளும் ,எழுதிய எழுத்துகளும் , இவ்வியக்கத்தின் அசல் நோக்கம் , வஹ்ஹாபிசத்தை பரப்புவது தான் என்பதை தெளிவுபடுத்துகிறது .

தப்லீக் ஜமாஅத் உண்மை  நிலையை தோலுரித்து காட்டுவதற்காக ,தப்லீக் ஜமாஅத் குறித்து மறுக்க இயலாத உண்மைகளை அந்த இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களின்  நூல்களில் இருந்தே எடுத்து காட்டி மக்களுக்கு அது ஒரு மோசமான இயக்கம் தான் .அதனைவிட்டு விளகி நடப்பது நம்மின்மீது கடமை தப்லீக் ஜமாஅத் சுன்னத் ஜமாஅத் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் . 

இந்தியாவில் முதலில் வஹ்ஹாபி கொள்கையை பரப்பியது யார் ? 

பதிமூண்றாவது நூற்றண்டில் மிக பிரபலம் பெற்ற தில்லி மாநகரில் கல்வியில் பேரும் புகழும் வாய்ந்த அஜீஸிய்யாக் குடும்பத்தில்  ( ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திது திஹ்லவிய்யி ரஹிமஹூல்லாஹ் அவர்களின் குடும்பத்தில் ) முஹம்மது இஸ்மாயீல் என்றொருவர் பிறந்தார் . இவர் அதிக புத்திக் கூர்மையானவர் . சில சமயம் புத்திக்கூர்மை ஈமானையும் , மார்க்கத்தையும் நாசப்படுத்தும் என்பதை நாம் விளங்க முடிகின்றது .

உலகத்தில் உள்ள வழிகேடர்கள் எல்லாம் பெரும்பாலும் புத்தி சாலியாக தான் இருப்பார்கள்  என்று இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்  ''  மா தல்ல மன் தல்ல இல்லா பி இஹ்திமாமில் அகல் ''     வழிகேட்டவர்களை எல்லாம் பாருங்கள் பெறும்பாலும்  அறிவுடையவர்களாக இருப்பார்கள் .(உதாரணம் ) காதியானி ஒரு  நல்ல திறமைசாலி ஆனால் கடைசியாக நான் தான் நபி என்று வாதிட்டதன் காரணம் அவனுடைய அறிவுதிறன் தான் ,

  மௌலவி   இஸ்மாயீல்  என்பவர் ஹஜ்ஜூக்கு செல்ல நினைத்தார் .அப்போது ஹிஜாஸிக்கு போனார்கள்  , மொளலவி  இஸ்மாயீலுக்கு அங்குதான் வஹ்ஹாபிகளுடைய பிறபல்யமான   '' கிதாபு தவ்ஹீத் ''  என்ற நூல் கிடைத்தது . மௌலவி  இஸ்மாயீல் தான்  '' கிதாபு தவ்ஹீத் ''  என்னும் நூலை  ''  தக்வியத்துல் ஈமான்  ''  என்னும் பெயரில் ஃபார்சியிலும் அதன்  மொழிபெயர்ப்பை உருதுவிலும் எழுதி இந்தியாவில் வஹ்ஹாபிய விஷத்தை தூவினார்.

 மௌலவி  இஸ்மாயீல் , அப்துல் வஹ்ஹாபு நஜ்தியைப் பின்பற்றி மக்கா முஷ்ரிக்கீன்கள் விஷயத்தில் இறங்கிய ஆயத்துகளை எல்லாம் முஸ்லிம்கள் பெயரில்  சுமத்தி ஷிர்க்கைப் போட்டு எல்லா முஸ்லிம்களையும்  முஷ்ரிக்குகள் என்று முடிவு செய்தார் . நபிமார்கள் , இறைநேசர்கள் ,சன்மார்க்கப் பெரியோர்கள் , எல்லோரையும் பற்றி கடுமையாக, கேவலமாக பேசினார் .

கடைசியாக செருப்புக்கேற்ற ஜோடிச் செருப்பு வாய்ந்தது  என்பதற்கொப்ப முந்தின வஹ்ஹாபியான அப்துல் வஹ்ஹாப் நஜ்தி உடைய கிதாபு தவ்ஹிதில் எவறெற்றை எல்லாம் எழுதியிருந்தாரோ  அவையனைத்தையும் - இல்லை இல்லை அதற்கு மேலும் இந்த  மௌலவி  இஸ்மாயீல் தன்னுடைய தக்வியத்துல் ஈமானில் எழுதிவிட்டார் . மேலும் வஹ்ஹாபிக்கொள்கையைப்  பரப்புவதில்  மௌலவி   இஸ்மாயீல் போக்கு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபு கையாண்ட வழியாகவே இருந்தது .

முஸ்லிம்களில் சிலர்  மௌலவி   இஸ்மாயீலால் ஏமாற்றமடைந்தார்கள் . சுன்னத் ஜமாஅத்து உலமாக்கள்  மௌலவி  இஸ்மாயீலின்  கொள்கைகளை வெளிப்படுத்தி கொள்கையில் இவரும் வஹஹாபிகளேதான் என்பதை முஸ்லிம் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டினார்கள் .

 உண்மையை உணர்ந்த முஸ்லிம்கள் இவர்களை விட்டு  வெருண்டோடினார்கள் ,

 முடிவாக வஹ்ஹாபிக் கொள்கை முஸ்லிம்களில் ஒப்புக்கொள்ளப்படாமல் போய்விட்டது .

இவ்வாறாக ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டாகியும்  இந்தியாவில்  வஹ்ஹாபிய்யாக்களுடைய முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போய்விட்டது ? . இதைபார்த்த வஹ்ஹாபிய்யாக் கூட்டத்தார்கள் எப்படி நாம் மக்களுக்கு மத்தியில் நம்முடைய கொள்கையை பறப்புவது , எந்த வேடத்தில் போனால்  நம்முடைய  கொள்கையை பறப்பமுடியும் ,  என்று சிந்திக்க அறம்பித்தார்கள் வஹ்ஹாபிய்யாக் கூட்டத்தார்களில் மௌலவி  இல்யாஸ் என்ற பெயருடையவர் ஒரு கூட்டத்தை உற்பத்தி செய்து  அந்த கூட்டத்திற்க்கு ''   தப்லீக் ஜமாஅத்   '' என்று பெயர் சுட்டினார் .

வஹ்ஹாபி உலமாக்களையும் , பிரசங்கிகளையும் , ஒன்று கூட்டினார் . வஹ்ஹாபிக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்க்கு தடங்கல் ஏற்படாதவாறு , பொது ஜனங்கள் இக்கொள்கைகளைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளக்கூடியவாறும் சில திட்டங்களை ஏற்படுத்தினார் .

தப்லீக் ஜமாஅத் தோற்றம் & தோற்றியவர்கள்: 

தப்லீக் ஜமாஅத்தின் தோற்றம் 1926 ல். வட இந்தியாவைச் சேர்ந்த மௌலவி  இல்யாஸ் காந்தலவி அவரால் உருவாக்கப்பட்ட இயக்கமே தப்லீக் ஜமாஅத்தாகும் ,

மௌலவி இல்யாஸின் குருமார்கள்

1.  மௌலவி  இஸ்மாயீல்  தெஹ்லவி
2.  மௌலவி  காசிம் நானுத்தவி
3.  மௌலவி  கலீல் அஹ்மத் அம்பேட்டி
4.  மௌலவி  ரஷித் அஹ்மத் கங்கோஹி
5.  மௌலவி  அஷ்ரஃப் அலி தானவி

தப்லீக் ஜமாஅத் என்பது கலிமா , தொழுகை , பற்றி இஸ்லாமிய மக்களிடம் உபதேசம் செய்து மக்களை நல்வழி படுத்துகிறோம் , எங்களுக்கு எந்த கொள்கைகளைப் பற்றியும் , பேசவோ , வாதிக்கவோ ,  நோக்கம் மில்லை , நேரம் மில்லை , என்று இவர்கள் வெளியில் சொல்லிக்கொள்ளவும் செய்வார்கள் . ஆனாலும் இந்த தப்லீக் ஜமாஅத்தை உண்டாக்கிய மௌலவி இல்யாஸின் வார்த்தைகளையும் & எழுத்துக்களையும் , பார்த்த பின் , கேட்ட பின் இவர்களின் நாட்டம் கலிமா , தொழுகைகளைச் சரியாகச் செய்யும்படி போதிப்பது மட்டுமில்லை . 

அத்துடன் பொதுமக்களைத் தங்கலுடைய கொள்கையில் கொண்டு திருப்பி வஹ்ஹாபிய்யாக் கொள்கையைப் பரப்புவது தான் அவர்களுடைய குறிக்கோள் , நோக்கம்  , என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள் . 

குர்ஆன் & ஹதீஸ் மூலம் தப்லீக் ஜமாஅத் பற்றிய ஆய்வு: 

தப்லீக் ஜமாஅத் இயக்கம்   சுன்னத் ஜமாஅத் அல்ல

குழப்பங்களும் , சோதனையும் , நிறைந்த இக்காலத்தில் புதிய புதிய கொள்கையுடையவர்கள் , விதற்பமான கூட்டத்தார்களும் , வருவது திகைப்பையும் , ஆச்சரியத்தையும் , கொடுக்க கூடிய விஷயமல்ல !எனென்றால் ? ஏறக்குறைய '' 1400 ''  ஆண்டுகளுக்கு முன்னதாகவே  '' நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்  இப்படி பட்ட   புதிய கூட்டத்தார்கள் தோன்றுவார்கள் என்பதை பற்றி முன்னறிவிப்பு கூறி எச்சரிக்கை  செய்து உள்ளர்கள் .

ஹதீஸ் : 1 

நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யூதர்கள் எழுபத்தோரு கூட்டமாக அல்லது எழுபத்திரண்டு கூட்டமாக பிரிந்தார்கள்  , அப்படியே கிருஸ்துவர்களும் , என்னுடைய உம்மத்துகள் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிவார்கள் 

(அறிவித்தவர் : அபூ ஹூரைரா ரலியல்லாஹூ அன்ஹூ , நூல் : திருமிதி )

ஹதீஸ் : 2 

   நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :  இஸ்ரவேலர்கள் எ ழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிந்தார்கள் , என்னுடைய உம்மத்துக்கள் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரிவார்கள் . ஒரு கூட்டத்தாரை தவிர மற்றெல்லாக் கூட்டத்தார்களும் நரகவாதிகள் , யா ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அந்த ஒரு கூட்டத்தார் யார் ? என ஸஹாபாக்கள்  கேட்டார்கள் : நானும் என்னுடைய ஸஹாபாக்களும் எந்த கொள்கையிலிருக்கிறோமோ . அந்த கொள்கையுடையவர்கள் .

 (அறிவித்தவர் : உமர்   ரலியல்லாஹூ அன்ஹூ , நூல் : திருமிதி )

''  நானும்  என்னுடைய ஸஹாபாக்களும் இருக்கிற கொள்கைய் இருப்பவர்கள்  ''   என்று  நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லவா அந்த ஒரு கூட்டம் எது என்பதை பற்றிய விளக்கத்தை ''  மிஷ்காத்து  ஷரீஃபின் விரிவுரையான  '' மிர்காத்து '' என்னும் கிரந்தத்தில் அதன் ஆசிரியர்  '' முல்லா அலி காரீ ''  ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சொல்கிறார்கள் :
لا شك و لا رىب انهم اهل السنة والجماعة

''அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் அந்தக் கூட்டத்தார்கள்  என்பதில்  எவ்வித சந்தேகமோ , ஐயப்பாடோ கிடையாது ''  

மேலே கூறப்பட்ட ஹதீஸ்களில் ஈடேற்றம் பெறுகிறவர்கள் சுன்னத் ஜமாஅத் கூட்டம் ஒன்றுதான் .மற்றகூட்டத்தார்களெல்லாம் நரகவாதிகள் என்று நமக்கு தெரியவருவது போல நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லாம் அவர்களுடைய உம்மத்து பல வகையாகப் பிரிவார்கள் .அவர்களில் பலதரப்பட்ட கொள்கையுடைவர்கள் தோன்றுவார்கள் என்றும் தெரியவருகிறது .
நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லாம் அவர்களுடைய முன்னறிவுப்பின் பிரகாரம் பல கூட்டங்கள் வந்து பெயர் மறையும் புதைகுழியில் மறைக்கப்பட்டு இன்று பொதுஜனங்களுக்கு அவற்றின் பெயர் கூடத் தெரியாத அளவுக்கு மாண்டு மறைந்து போனது .

ஆனால் சில கூட்டத்தார்கள் இன்று வரையும் பொது மக்களை ஏமாற்றி வழிகெடுக்கக் கூடிய வேலையிலேயே கண்ணும் கருத்து மாயிருக்கிறார்கள் அத்தகைய கூட்டத்தார்களில் வஹ்ஹாபியக் கூட்டத்தார்கள் மிக முக்கியமானவர்கள் .

தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூரவிலகு :

நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் வழிகேடான கூட்டத்தினரை விட்டுத் தூரவிலகி இருக்கும் படி சொல்லி இருக்கிறார்கள் . அப்படி விலகி இருப்பதன் மூலமாகத்தான் நம்முடைய ஈமானை பதுகாத்து கொள்ளவும் தீனுஸ் இஸ்லாத்தை பேணிக் கொள்ளமுடியும் .

ஹதீஸ் : 1

ان الني صل الله علىه و سلم قال فاياكم و اياهم لا يضلونكم لا يفتنونكم

( رواه مسلم )

நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : '' நீங்கள் அந்த வழிகெட்ட கூட்டங்களை விட்டும் தூர விலகி இருங்கள் ; அவர்களை உங்களிடம் வரவிடாதீர்கள் . அப்படியானால் அவர்கள்  உங்களை வழிகெடுக்கவோ , உங்களை ஃபித்னாவில் ஆக்கவோ முடியாது ''

நமக்கு இந்த ஹதீஸிலிருந்து கிடைக்கும் கருத்து :

கெட்ட கூட்டங்கள் , தீயகொள்கைக்காரர்கள் உடைய தீங்கு பாதிக்காமல் நீங்கள் உங்களைக்  காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் உங்களை  அவர்களின் சகவாசத்தை விட்டு அகற்றித் தடுத்துக்கொள்ளுங்கள் என்பதாகும் .

ஹதீஸ் : 2

عن ابي موسي الاشعري رضي الله عنه عن النيي صل الله عليه و سلم قال انما مثل الجليس الصالح وجليس السؤ كحامل المسك ونافخ الكيرفحامل  المسك اما ان يهديك وانما ان تبتاع منه واما ان تجد منه ريحاطيبة ونافخ الكير اما ان يحرق ثيابك و اما  ان  تجد منه ريحا خبيثة

( رواه بخاري, مسلم    )

நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் கெட்ட நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவனையும் , கொல்லன் உலை ஊதுபவனையும் போன்றாகும் .கஸ்தூரியை வைத்திருப்பவன் ஒன்று உனக்கு கஸ்தூரியைத் தருவான் . அல்லது  நீ அதை அவனிடத்தில் ( பணத்திர்க்கு ) வாங்குவாய் இல்லாவிட்டாலும் கஸ்தூரியின் நல்ல வாடையையாவது பெற்றுக்கொள்வாய் . கொல்லன் உலையை ஊதுபவனோ உன்னுடைய ஆடையைக் கரித்துப் போடுவான் . இல்லாவிடில் அதிலிருந்து துர்வாடையையாவது பெற்றுக்கொள்வாய் .

(அறிவித்தவர் : அபூமூஸல் அஷரிய்யி ரலியல்லஹூ அன்ஹூ   நூல் : புகாரி , முஸ்லிம் )

ஹதீஸின் கருத்து :

நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஓர் உதாரணம் கூறி உபதேசம் செய்திருக்கார்கள் . நல்ல குணம் நல்ல கொள்கையுடையவர்களின் நேசம் , சகவாசம் மனிதனுக்கு  எந்த விதத்திலும் பிரயோசனம் செய்யக்கூடிய தாக இருக்கிறதோ அதுபோல கெட்ட்வர்களின் கெட்டகொள்கையுடையவர்களுடைய நேசம் , சகவாமும் மனிதனுக்கு எந்த வகையிலும் தங்கடம் செய்யக்கூடியதாகவே இருக்கும் மென்பதை தெளிவு படுத்தியிருக்கிறார்கள் ;

ஹதீஸ் : 3

عن انس رضي الله قال قال رسول الله صلي الله عليه و سلم مثل جليس السوع كمثل صاحب الكيران لم يصبك من سواده اصابك من دخانه
   
  رواه   ابوداؤد,
நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : கெட்டவனோடு சிநேகம் வைப்பவனாகிறவன் கொல்லனுடைய உலையண்டையில் இருப்பவனைப் போலாவான் . அதன் கரி  உன்னைத் தொடாது போனாலும் அதன் புகையாவது உன்னைத் தொடும் .

(அறிவித்தவர் : அனஸ் ரலியல்லாஹூ அன்ஹூ   ,  நூல் : அபூதாவுத் )

ஹதீஸின் கருத்து :

கெட்டவருடைய சகவாசத்தாலும் , வழிகேடருடைய உறவாலும் மனிதன் வழிகெட்டுப் போகாவிடினும் வழிகேட்டின் குணப்பாட்டையாவது அவசியம் ஏற்றுக்கொள்ளவும் , கொள்கையில் கெட்டுப்போகவும் நேரும் .

ஹதீஸ்  : 4

عن الني صلي الله عليه وسلم من مشي الي صاحب بدعة ليوقره فقد اعان علي هدم الاسلام
رواه  , الطبراني

'' கெட்டகொள்கைக்காரர்களை சங்கை செய்வதற்காக அவர்களோடு நடப்பவன் நிச்சயமாக இஸ்லாம் மார்க்கத்தை உடைத்துத் தகர்த்துப் போடுவதற்கு உதவி செய்தவனாகிறான் ''

அறிவிப்பவர் : முஆஃத் ரலியல்லாஹூ அன்ஹூ   நூல் : தப்ரானி

ஹதீஸ் : 5

عن الني صلي الله عليه وسلم وان لقيتموهم فلا تسلموهم
                      
                               رواه ابن ماجه

''
அவர்களைக் ( கெட்ட கொள்கைக்காரர்களை ) சந்திப்பீர்களேயானால் அவ்ர்களுக்கு ஸலாம் சொல்லாதீர்கள் ''

(அறிவித்தவர் : ஜாபிர் ரலியல்லாஹூ அன்ஹூ  நூல் : இப்னு மாஜா )

ஹதீஸ் : 6

عن الني صلي الله عليه وسلم وان مرضوا فلا تعودوهم وان ماتوا فلاتشهدوهم

                                                            رواه ابوداؤد٩
'' அவர்கள் வியாதியஸ்தர்களாக இருந்தால் நோய்விசாரிக்கப் போகதீர்கள் , அவர்கள் மரணித்துவிட்டால் அவ்ர்களுடைய ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ளாதீர்கள் ''

(அறிவித்தவர் : இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ  நூல் : அபூதாவுத் )
மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நன்கு சிந்தித்து உண்மையை உணர்ந்து இதயத்தில் பதியவைத்து தீய கூட்டத்தினரின் உறவையும் , பந்தத்தையும் , அகற்றி நல்லோர்களான சுன்னத் ஜமாஅத்தார்களுடனேயே சகவாசம் பூண்டிருப்பிர்களாக . இன்ஷா அல்லாஹூ தொடரும் ...

நாம் தப்லீக் ஜமாஅத்தை ஏன்  வழிகேடு என்கிறோம் :

நம்மைப் பார்த்து ஷிர்க் செய்பவர்கள் , பித்அத் செய்பவர்கள் , கப்ர் வணங்கிகள் , என்று வசைப்பாடுவதால் தப்லீக் ஜமாஅத்தை வழிகெட்ட கூட்டம் என்று நாம் கூறுவது இல்லை மாறாக தப்லீக் ஜமாஅத்தை நாம் வழிகேடர்கள் என்று கூறுவது இஸ்லாத்தின் உயிர் நாடியான( அசலான ) அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளிலேயே  அவர்கள் கைவைத்ததுதான் அதாவது நமது உயிருக்கும் மேலான எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மரியாதைக்கு  பங்கம் விளைவிக்கும் விதமாக பேசியிருப்பதாலும் , எழுதியிருப்பதாலும் , இன்னும் அந்த கிதாபுகளை ( புக்குகளை ) அச்சிட்டு கொடுப்பதாலும் தான் நாம் அவர்களை வழிகெட்ட கூட்டம் என்கிறோம் .

ஏனெனில் குர்ஆனில் அல்லாஹூத்தஆலா நேர்வழியில் நடக்க வேண்டும் மென்று மட்டும் கட்டளையிடவில்லை , வழிகெட்டோரின் வழியை விட்டுதப்பிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான் . ஆகவே இஸ்லாத்தின் அசல் , அடிப்படை கோட்பாடுகளில் கைவைக்கும்   . தப்லீக் ஜமாஅத்தினரின் . வேடத்தைதோலுரித்துக்காட்ட வேண்டிய நமது கடமையாகும் .

தப்லீக் ஜமாஅத்தை உருவாக்கிய தலைவர்களின் கூற்றுகளை & எழுதியிருப்பதை  காணும் எந்த ஒரு முஸ்லிமுகளும் அவர்களை  நேர்வழியிலுள்ளவர்கள் என்று சொல்லமாட்டார்கள் . சுன்னத் ஜமாஅத்  உலமாக்களை ( நம்மை ) என்னக்குறை  பேசினாலும் பரவாயில்லை . நம்மை பற்றி என்ன எழுதினாலும்  கவலையில்லை . இஸ்லாத்தின் அசல் அடிப்படைக் கொள்கை கோட்பாடுகளில் , நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவரகளின் மரியாதை  விஷயத்தில் கை வைப்பவர்கள் ,

•  காதியானிகளாக இருந்தாலும் சரி
•  தேவ்பந்திய தப்லீக் ஜமாஆத்தாக இருந்தாலும் சரி
•  தவ்ஹித் ஜமாஅத்தாக இருந்தாலும் சரி
•  இந்திய தவ்ஹித் ஜமாஅத்தாக இருந்தாலும் சரி
•  தமுமுக இருந்தாலும் சரி
•  ஜாக்காக இருந்தாலும் சரி
•  அஹ்லே குர் ஆனாக இருந்தாலும் சரி
•  அஹ்லே ஹதீஸாக இருந்தாலும் சரி
•  ஃபாபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவாக இருந்தாலும் சரி
•  தாருல் ஹூதாவாக இருந்தாலும் சரி
•  தாருல் அர்கம்மாக இருந்தாலும் சரி
•  ஜமாஅத்தே இஸ்லாமியாக இருந்தாலும் சரி
•  மர்கசுஸ் ஸலாமாக இருந்தாலும் சரி
•  
எந்தப் பிரிவினராக இருந்தாலும் சரி
அவர்களது கருத்துக்களைக் கண்ணுற்ற நம்மால்  நம்மால் மௌனம் கொள்ளமுடியாது . 

உங்கள் கேள்வி :

        எந்த உலமாக்கள் சம்பந்தமாக சர்ச்சை நடக்கிறதோ அவர்களெல்லாம் மவ்த்தாகி விட்டார்கள்.ஆனால் கை சேதம் இன்னும் அவர்களால் (தப்லீக் தலைவர்களால் ) ஒரு தரப்பினருக்கிடையில் கருத்து மோதல் நீடிக்கிறது. 

நீங்கள் சொல்வது உண்மைதான்.என்றாலும் சர்ச்சை அந்த மரணித்து விட்ட பெரியார்களின் தனிப்பட்ட சொந்த விஷயங்களில் அல்ல.மாறாக,அவர்கள்  நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி தரக்குறைவாக எழுதியிருப்பதால்தான்.ஆகவே தப்லீக்தலைவர்களின் கருத்துக்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன என்பதை ஃபத்வாக வெளிப்படுத்தாமல் சர்ச்சை ஓயப்போவதில்லை.
உலகில் உள்ள உலமா பெருமக்கள் வழங்கிய சில ஃபத்வாக்கள் ( மார்க்கத் தீர்ப்புகள் ) மட்டும் பாருங்கள் :
1.  மக்கா,மதினாவிலுள்ள 34 மபெரும் மார்க்க மேதைகள் '' ஹூஷாமுள் ஹரமைன் அலா மன்ஹரில் குஃப்ரிவல்மைன் "என்ற தலைப்பில் ஹிஜ்ரி 1324 ல் ரஷீது அஹ்மது கங்கோஹி,கலீல் அஹ்ம்மது அம்பேட்டி,அஷ்ரஃப் அலி தானவி ( இல்யாஸின் குரு )ஆகியோர்கள் காஃபிர்கள் என ஃபத்வா தந்துள்ளார்கள்.
2.  இந்தியாவின் பல பாகங்களிலிருந்து சங்கைக்குரிய 268 உலமாக்கள்  '' அஸ்ஷவாரிமுல் இந்தியா '' என்ற தலைப்பில் மேற்கூறப்பட்டவர்கள் காபிர்கள்,முர்த்ததுகள் என்ற மார்க்கத் தீர்ப்பு ஹிஜ்ரி 1345 ல் வழங்கியுள்ளார்கள் .
3.  இந்தியாவிலுள்ள 45 உலமாக்கள் '' அல் அதாபுல் பஃஸ்அலாரஃஷி இல்யாஸ் '' என்ற தலைப்பில் ஹிஜ்ரி 1327 -ல் இல்யாஸ் காஃபிர் என்று ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
4.  வேலூர் பாக்கியாத்துஸ்சாலிஹாத் அரபிக் கல்லூரி முன்னால் முதல்வரும்,சென்னை மாநில ஜமாத்துல் உலமா சபை நிரந்தர கௌரவத் தலைவருமான மௌலானா.மௌலவி.அல்லாமா முஃப்தில் அஃலம் செய்ஹூ ஆதம் ஹஜரத் அவர்கள் அவர்களும்,கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் தப்லீக் ஜமாஅத்தில் சேரக் கூடாது.அது ஒரு நூதன வழிகெட்ட கூட்டம் என ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
5.  தமிழ்நாடு அரசு முன்னாள் பிரதம காஜி.மௌலானா அல்லாமா முஃப்தி முஹம்மது ஹபீபுல்லாஹ் ஹஜரத் அவர்கள் '' தப்லீக்  ஜமாத்கீ  அஸ்லியத் '' என்ற தலைப்பில் இல்யாஸ் தப்லீக்கில் சேரகூடாது அது வழிகேடானது என ஃபத்வா கொடுத்துள்ளார்கள்
6.  மஹாராஸ்டிய மாநில அரசாங்க காஜியும் கூட இல்யாஸ் தப்லீக்கை எதிர்த்து ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.
7.  தப்லீக்ஜமாஅத்துக்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்றுதான் தீர்ப்பு வந்தது ஜர்ஜீமெண்ட் NO,CC 2799/77 .
8.  சமஸ்தே கேரள ஜமீயத்துல் உலமா சபை ஃபத்வா கமிட்டி தப்லீக் ஜமாஅத்தார்களின் சகல நூல்களையும் ஆராய்ந்து தீர்வு கண்டு இந்த இல்யாஸின் தப்லீக் ஜமாத்தில் சேரக்கூடாது என்று 1965-ல் ஃபத்வா தந்துள்ளது.இந்த ஃபத்வா 10-11-1965 கேரள '' சந்திரிகா'' இதழில் வெளிவண்துள்ளது .
ஏன் ? எதற்க்கு ? இப்படி ஃபத்வாக்கள் கொடுத்துள்ளார்கள்,இதற்க்கு என்ன காரணம் இல்யாஸ் அவர்களின் ஆசிரியர்கள் ஒரு சில கூற்றை எடித்துக்காட்டுகிறேன்.ஏன் ? என்றால் தமிழில் ஒரு பலமொழி சொல்வார்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவர்கள் வழிகெட்ட கொள்கையை பற்றி உங்களுக்கு தெரியும் ஏன் இவர்களை காஃபிர் என்று சொல்கிறார்கள்.என்பதை விளங்கிகொள்வீர்கள்.

1.  மௌலவி காசிம் நானுத்தவி இவர் தேவ்பந்த் மதரஸாவின் ஸ்தாபகரும்,தேவ்பந்திய கூட்டத்தின் முதல் இமாமும் ஆவார் : 

இவரது அவலச்சனத்தை பாருங்கள் ; தேவ்பந்தீயான காசிம் நானூத்தவி தமது "தஹ்தீருந்தாஸ்" என்னும் நூலில் 24-ல் ( ஹஜ்ரி 1290-ம் ஆண்டு வெளியீட்டில் ) '' ஒரு வேளை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப்பின் யாராவது ஒருவர் தன்னை நபி என்று வாதித்தால் அதனால் முஹம்மத் நபியவர்கள் இறுதி நபி இல்லை என்பதல்ல.மாறாக அவர்களது காலத்தில் அவர்களது பூமியில் அவார்கள் இறுதி நபி.ஒரு வேளை  வேறொரு நபி வந்தால்,அவர் அவரது காலத்தில்,அவரது பூமியில் அவர் இறுதி நபியாக இருப்பார் '' என இஸ்மாயில் தெஹ்லவி சொன்னதை காசிம் நானூத்தாவி தெளிவாகவே கூறினார்.இதன் காரணமாகவே இவர் மிது காஃபிர் ஃபத்வா கொடுக்க்ப்பட்டது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் எக்காலத்திலும்,எந்த பூமியுலும் எந்த நபியும் வரப் போவதில்லை என்பது குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் அமைந்த ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் இஜ்மாவான கொள்கையாகும்.

மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி : 
இந்த வழிகெட்ட தேவ்பந்தீய ( தப்லீக் )ஜமாஅத் கூறிய இதே விளக்கத்தைக் கூறித்தான் வழிகெட்ட காதியானிகளின் தலைவன் மிர்ஜா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டான்.இதன் காரணமாக இவர் மீது காஃபிர் என கொடுக்கப்பட்டது.

இருபிரிவினருக்குமிடையில் இவ்விஷயத்தில் ஒரே ஒரு வித்தியாசம் தான்.அதாவது தேவ்பந்தீகள் நபிகளாருக்குப் பின் ஒரு நபியின் வருகை சாத்தியம் என்றார்கள்.காதியானி நபிகளாருக்கும் பின் நபி சாத்தியம்தான்.அந்த நபி நான்தான் என்று கூறினான். 

காதியானிகளை வழிகேடர்கள்,காஃபிர்கள் என்று தேவ்பந்திகளும் கூறுகின்றானர்.ஆனல் காதியானிகள் நாயகத்திற்குப் பின் நபி இருப்பது சாத்தியம் என்பதற்கு தேவ்பந்தீ காஸிம் நானூத்தவியின் தஹ்தீருன் நாஸையே ஆதாரமாக எடுத்துக் காட்டினார்.

என்ன ! வேடிக்கையான விஷயம் பாருங்கள்.தவறான கொள்கையுடைய வழிகேடர்களை ஒதுக்க வேண்டிய சமூதாயத்தின் தலைவர்களான இஸ்லாத்தின் காவலாளான உலமாக்களின் கடமை.ஆனால் அந்தோ பரிதாபம்.

இந்த வழிகெட்ட தேவ்பந்தீகளின் கொள்கைக் காவலாளிகளான உலமாக்கள் சிலர் : '' ஏதோ ஒரு சில இடத்தில் அப்படிக் கூறினார்கள் என்பதற்காக தேவ்பந்தீய (தப்லீக் ) உலமாக்களை வழிகேடர்கள் என்று கூறாதீர்கள் அவர்கள் பல இடங்களில் பல சமயங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் நபி இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் "" என்று வக்காலத்து வாங்குகிறார்கள். 

இன்னும் சிலரோ '' அவர்கள் அந்த அர்த்தத்தில் கூறவில்லை.மக்கள் அதை தவறாக விளங்கிக் கொண்டனர் '' என்று வியாக்கியானம் பேசுகின்றார்கள்.இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இவ்வளவு தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.இதைக் கூட விளங்கிக் கொள்ளமுடியாத அளவிற்கு முஸ்லிம்கள் முழுமுட்டாள்களாகி விட்டார்கள் என்று  நினைக்கிறார்களா ? 

மேலும் 10,000 முறை நாயகம்தான் இறுதி நபி என்று கூறினாலும் ஒரு தடவை நாயகத்திற்குப்பின்  நபி சாத்தியமென்று கூறினால் அதற்குப் பெயர் நேர்வழியா ? ஏன் ? மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி கூட பல இடங்களில்   நாயகத்தின் இறுதி நபித்துவத்தை உண்மை என்று கூறியாதாக வந்துள்ளது தான்.அதற்காக அவர் நாயகத்திற்கு பின்பு நபி சாத்தியம் என்று கூறியதையும்,தான் நபி என்று வாதிட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியுமா ? 

2 : மௌலவி கலீல் அஹ்மத் அம்பேட்டி :மௌலவி இல்யாஸ் காந்தலவியின் இரண்டாவது குருவும் ஆவார் 

'' பராஹீனே காத்திஆ ''  என்ற நூலை கலீல் அஹ்மத் அம்பேட்டி வெளியிட்டார்.அதில் பல தவறான கொள்கைகள் பேசப்பட்டிருப்பதுடன் கீழ்கண்டவாறும் கூறப்பட்டுள்ளது.

ஷைத்தானும்க்கும்,மலக்குல் மவ்த்தான இஜ்ராயீல் அலைஹிஸ்ஸலாமுக்கும் எல்லா மனிதர்களின் நிலையையும் அறியக்ககூடிய கல்வி இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்தளவு கல்வி நபிகள் நாயகத்திற்குமிருக்குறது என்று கூறுவது சரியான ஆதாரமாக அமையாது ஏனெனில் ஷைத்தானுக்கும்,இஜ்ராயீல் அலைஹிஸலாம் அவரக்ளுக்கும் எல்லா மனிதர்களின் நிலையையும் அறியும் கல்வி இருப்பது குர்ஆனில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிற்து.
ஆனால் நபிகளாருக்கு அந்தளவிற்கு அறிவு உள்ளதற்கு குர்ஆனில் என்ன ஆதாரமிருக்கிறது ?  (  பராஹீனே காதிஆ பக்கம் 51 ) 

 நஊதுபில்லாஹ் ! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் நபிகளாரின் இல்ம் கல்வி ஞானத்தில் குறைகாண்பதில் எப்படி துனிச்சல் வந்திருக்கிறது பாருங்கள் ! 

நாயகமே ! தாங்கள் அறிந்திராத அனைத்தையும் தங்களுக்கு கற்பித்து விட்டோம் என்றும்,பல வசனங்களின் மூலமும் சஹீஹான ஹதீஸ்களின் மூலமும் கல்வியில் நபிகளாரை விஞ்சியவர் எவருமில்லை.அல்லாஹ்வின் படைப்புககளிலேயே,நபிமார்களிலேயே மிக மிக மேன்மைக்குரியவர்களும்,மிக மிக அதிகமாக கல்வி,ஞானம் வழங்கப்பட்டவர்களும் நமது கண்மனி  நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் என்பதை தெளிவாகச் சொல்ல்ப்பட்டிருப்பதும்,அதுவே ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் கொள்கையாக இருந்தும்,ஷைத்தானுடைய கல்வியை விட நபிகளாருக்கு அதிக கல்வி ஞானமுண்டு என்று தெளிவாக கூறப்பட்டால் தான் இவர்களை ஏற்றுக்கொள்வார்களாம் ? 

நபிகளாரின் கல்வி,ஞானத்தோடு அல்லாஹ்வின் சாபத்திற்குறிய ஷைத்தானின் கல்வி ஒப்பிடுவதே மிகப் பெரிய வழிகேட்டுத்தனமில்லையா ? அதிலும் ஷைத்தானுடைய கல்வியை விட நபிகளாரின் கல்வி,ஞானம் அதிகம் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியிருப்பது எவ்வளவு பெரிய வழிகேடு ? 

இறுதி நபித்துவத்திற்கும்,எல்லா படைப்புகளை விடவும் அதிக கல்வி,ஞானம் பெறுவதற்கும் நமது ரசூல் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்கள் ? நம் ரசூல் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை தரந்தாழ்த்திப் பேசுவதற்கு எப்படி அவர்களுக்கு தைரியம் வருகிறது ? இதன் காரணமாகவே இவர் மீது கஃபிர் என ஃபத்வா கொடுக்கப்பட்டது.

3 : மௌலவி ரஷித் அஹ்மத் கங்கோஹி இவரிடமே இல்யாஸ் 10 வருடங்கள் கல்வி பயின்றுள்ளார் 

இந்திய வஹ்ஹாபிய குழுவின் தலைவர் இஸ்மாயில் தெஹ்லவீயை பின்பற்றி முதலாவதாக அல்லாஹ் பொய் சொல்லுவது இடம்பாடுதான் ( சாத்தியம்தான் ) என்று சொன்னர்.பின்னர் அவர் கையொப்பதோடு ஒரு ஃபத்வா  (இது பம்பாயில் அச்சடிக்கப்பட்டது அதை பல போட்டோ காப்பிகள் எடுக்கப்பட்டது.மதீனா ஷரீஃபிலும் ஒரு காப்பி இருக்கிறது ) அதில் அவர் சொல்கிறார் அல்லாஹ் பொய் சொன்னதாக நம்பி அல்லாஹ் பொய் சொல்லி விட்டான்,இந்த குறைபாடு அல்லாஹ்விட்த்தில் ஏற்பட்டுவிட்டது.என்று ஒருவன் சொன்னால் அவனை காஃபிர் என்று சொல்லுவது இருக்கட்டும்.அவனை ஃபாஸிக் ( கெட்டவன் )என்றும் கூட சொல்லாதீர்கள்.ஏனென்றால் அநேக உலமாக்கள் அப்படி அவன் சொன்னது போல் சொல்லியுருக்கிறார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வின் பரிசுத்தத்தின் மீதே இந்த தேவ்பந்தி ஆலிம் குறை காணுகிறார்கள்.இதன் காரணமாகவே இவர்மீது காஃபிர் என ஃபத்வா கொடுக்கப்பட்டது. இன்னும் இவர் வழிகெட்ட வஹ்ஹாபிய்ய ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் நஜதியை நல்லவர் என்றும் வல்லவர் என்றும் புகழ்ந்து தள்ளுகிறார்.அந்த வழிகேடன் எழுதிய கிதாப் தௌஹீத் என்னும் நூலை ஒவ்வொரு முஸ்லீமும் படிப்பதும் பின்பற்றுவதும் அவசியம் என்று வஹ்ஹாபிய்யத்திற்க்கு வக்காலத்து வாங்குகிறார்.இன்னும் மீலாது நபி கூடாது நேர்சைகளை சாப்பிடுவது ஹராம் ஆனால் காகத்தை சாப்பிடுவது கூடும் என்று பல தவறான ஃபத்வாக்கள் கொடுத்தவர்.இவை அனைத்தையும் ஃபதாவா ரஷீதிய்யா என்னும் நூலில் காணலாம்.

4 ;மௌலவி அஷ்ரஃப் அலி தானவி : 

தப்லீக் ஜமாஅத்தின் மூலம் அஷ்ரஃப் அலி தானவியின் கொள்கையை பரவலாக்க விருப்புகிறேன் என்று தப்லீக் ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் காந்தலவி யாரை குறித்து பேசினாரோ அந்த நபரே இவர் .

ஹிஜ்ரி 1319-ல் கிபி 1901-ல் அஷ்ரஃப் அலி தானவி ஹிப்ளுல் ஈமான் என்னும் ஒரு நூலை எழுதி வெளியிட்டார்.அதில் எழுதுகிறார்.

" நபிகளாருக்கு மறைவான விஷயங்களை அறியக் கூடிய ஞானம் உண்டு என்று ஏதோ ஒரு ஆதாரப்படி எடுத்துக் கொண்டாலும் நபிகளாருக்கு மறைவான விஷயங்கள் எல்லாமே தெரியுமா ? அல்லது ஒரு சில விஷயங்கள் மட்டும் தான் தெரியுமா ? ஏனெனில் ஒரு சில விஷயங்கள் தான் தெரியும் என்று எடுத்துக் கொண்டால் அதில் நபிகளாருக்கு என்ன தனிச் சிறப்பு இருக்கிறது ?ஒரு சில மறைவான வஷயங்கள் சாதாரண மனிதார்கள்,குழந்தைகள்,பைத்தியங்கள்,இவ்வள்வு ஏன் கால் நடைகள்,மிருகங்களுக்குக் கூடத் தெரியுமே! 

( ஹிப்ளுல் ஈமான் பக்கம் : 8 )

 நம் சிந்தனைக்கு :
                                              
                             
  எந்த நபிக்கு முன்னால் முந்திக் கொண்டு பேசினாலோ,சப்தமிட்டுப் பேசினாலோ செய்த நன்மைகள் எல்லாம் அழிந்துவிடுமோ,எந்த நபிக்கு முன் வாய்திறந்து பேசுவதற்க்கு கூட ஸஹாபாக்கள் அச்சப்பட்டார்களோ,எந்த நபிக்கு முன் வானவர்கள் கூட மிக மிக கவனத்துடன்,ஒழுக்கத்துடன் நட்ந்து கொண்டார்களோ அந்த நபியுடைய கல்வியின் வஷயத்தில் கொஞ்சம் கூட கண்ணியமில்லாமல்,ஓழுக்கமில்லாமல்,பைத்தியம்,மிருகம்,கால் நடைகளின் கல்வி,விஷயத்தோடு சம்பந்தப்படுத்திப் பேசக் கூடிய மிக மோசமான வழிகேட்டில் உள்ளவர்கள்தான் தேவ்பந்தீ (தப்லீக் ) உலமாக்கள்.இதன் காரணமாகவே இவர் மீது காஃபிர் என ஃபத்வா கொடுக்கப்பட்டது 

தேவ்பந்தீய (தப்லீக் ) உலமாக்களின் வாசகங்கள்,நாயகத்தின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக மட்டுமின்றி,அவர்களது கல்வியை,ஞானத்தை,தரத்தை சாதாரண மனிதர்கள் விலங்குகள் ஏன் ? சாபத்திற்க்குரிய ஷைத்தானின் கல்வி,ஞானத்திற்க்கும் மட்டமாக இறக்கிப் பேசுகின்றனர்.

ஆகவே வேடதாரிகளான  தேவ்பந்தீய உலமாக்களை நம்பி வழிகேட்டில் போவதை விட்டும் அப்பாவி முஸ்லிம்களைக் காக்கும் நோக்கில் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் தேவ்பந்தீகளின் கொள்கை,கோட்பாடுகளையும்,அதன் வழிகேட்டையும் பற்றி பேச்சுக்களாகவும்,எழுத்துக்களின் மூலமும் நிறைய வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அது மட்டும் மின்றி அவர்கள் தங்களது தவறான பேச்சுக்களையும்,நூல்களிலுள்ள தவறான வாசகங்களையும் நீக்கி,மறுப்புத் தெரிவித்து வெளியிட வேண்டும்.அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்று சஅஹ்லுஸ்சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தரப்பிலிருந்து தேவ்பந்தீ (தப்லீக் ) ஜமாஅத் உலமாக்களுக்கு சொல்வழியும்,கடிதங்கள் வழியும் கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் நமது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. 

எனவே  "அல்முஃதமதுல் முஸ்தனது"  என்னும் நூலில்;

1.  மிர்ஜாகுலாம் அஹ்மத் காதியானி,
2.  காஸிம் நானுத்தவி
3.  ரஷீத் அஹ்மத் கங்கோஹி
4.  அஸ்ரஃப் அலி தானவி
5.  கலீல் அஹ்மத் அம்பேட்வி

போன்ற தேவ்பந்தீ ( தப்லீக் ) உலமாக்களின் வாசகங்களின் எடுத்துக்காட்டி அதிலுள்ள அடிப்படை,அசல் கொள்கைத் தவறுகளை ஆதாரங்களோடு சுட்டிக் காட்டி மேற்கண்ட நபர்களின் மீது குஃப்ர் ( காஃபிர் ) ஃபத்வாவை வெளியிட்டு அவர்களது கொள்கை இஸ்லாத்தின் அசல் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது.அவர்கள் இஸ்லாத்தை விட்டு.இஸ்லாத்தின் தூய கொள்கையை விட்டு நீங்கி விட்ட காஃபிர்கள் என்று தீர்ப்பளித்தார்கள்.

இந்த ஃபத்வா தேவ்பந்தீய ( தப்லீக் ) உலமாக்கள் மற்றும் மிர்ஜா குலாம் அஹ்மத் காதியானி மீதுள்ள சொந்த விருப்பு வெருப்புகளின் காரணமாக வெளியிட்ட தீர்ப்பல்ல.மாறக கோடான கோடி முஸ்லிம்கள் தாங்கள் உயிரை விட நேசிக்கக்கூடிய, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் மீது குறைகண்ட காரணத்திற்க்காத் தான்.
மேலும் நம் கருத்தானது தேவ்பந்து வஹாபிகள் தவ்ஹீது வஹாபிகளை விடபன்மடங்கு முனாஃபிக்தனமான செயல்பாட்டுடன் அல்லாஹ் பொய் சொல்வது சாத்தியம்,நபி மூத்த சாகோதரர்,ஷைத்தானைன் இல்முக்கு குர்ஆனில் ஆதாரம் உண்டு,நபியின் மறை ஞானத்திற்கு ஆதாரமில்லை,நபியை தொழுகையில் நினைவு கூறுவது மாடு,கழுதை,விபச்சாரத்தை  நினைவு கூறுவதை விட கேவலமானது.ரஸூல்மார்கள்,நபிமார்கள்,வலிமார்கள் மவுத்தாகி மண்ணோடு மண்ணாகி போனர்கள்.மீலாது,மௌலுது ஹாரம்.ஃபாத்திஹா,தப்ரூக்,நேர்ச்சை சாப்பிடுவது ஹராம்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.அத்தனை வஹாபிய்ய விஷயங்களையும் தேவ்பந்து உலமாக்களும்,தப்லீக் ஜமாஅத் தலைவர்கலும் திரும்ப திரும்ப தத்தமது நூல்களில் பக்கம் மாற்றி பக்கம் புதிய புதிய பதிப்புகளில் அச்சுப் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் என்கிற போது வாசகர்களே ! நீங்களே உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் அவர்களுடைய நூல்களில் உள்ளதை நன்றாக பார்த்து வாசித்தபின் உங்கள் மனச்சாட்சிபடி கூறுங்கள். இன்ஷாஅல்லாஹ் ! 
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, 23 February 2024

பராஅத் பற்றி தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்

*தப்லீக் -  தேவ்பந்திகள் பராஅத் இரவு பற்றி வெளியிட்ட வழிகேட்டு பத்வா:*

*Question ID: 46145* 

Country: Pakistan

Title: *15 Shaaban night* 

 *Question* : I know that night of 15th Shaban (Shab-e- Barat) is a very sacred night. But I have read in some books that all hadiths pertaining to this night are very weak and that no special prayers are to be done for this night. Kindly tell me whether this is correct or not in the light of the holy Quran and sunnah. And also what is the belief of Ulama of Deoband about it?

 *Answer* ID: 46145

Bismillah hir-Rahman nir-Rahim !

(Fatwa: *1095/851/B=1434* ) Yes, all the hadiths related to the virtues of 15th of Shaban are weak, but all the scholars of hadith agree that it is lawful to practice weak hadiths if it is related to fazail (virtues). However, it is not lawful to practice weak hadiths if it is related to ahkam (commandments). No special worship is narrated in this night. However, if someone wants to pray he may do so in his house individually. People should not give it celebration look in the pathways or in the mosques during this night; it is the practice of Ahl Batil (deviants).

Allah (Subhana Wa Ta'ala) knows Best

Darul Ifta,

Darul Uloom Deoband, India.

 _Source_ : https://darulifta-deoband.com/home/en/Innovations--Customs/46145. 
பதில் விளக்கம் தமிழில் : 
 பராஅத் இரவின் பழாயில்  பற்றி வரும் ஹதீதுகள் அனைத்தும் பலகீனமானவை.எனினும் முபஸ்ஸிரீன்களது கூற்றாகிறது அமல்கள் குறித்து வரும் பலவீனமான ஹதீதுகளை ஏற்றுக் கொள்ளலாம்.

எனினும் பலவீனமான ஹதீதுகளை அஹ்காம் எனும் கட்டளைகள் குறித்து ஏற்க வேண்டியதில்லை.இந்த இரவில் எவ்விதமான சிறப்பான இபாதத்தும் அறிவிக்கப்படவில்லை.

எனினும் எவராவது பராஅத் இரவில் தொழுதிட விரும்பினால் அவர் தனியே தனது வீட்டில் தொழுது கொள்ளட்டும்.

மக்கள்  பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி கொண்டாடுவது பித்அத் கூட்டதாரின் செயல்முறையாகும்.

சுருக்கமான பதில் : 

பராத் இரவு என்று ஒன்று இல்லை 
அதில் செய்யப்படும் சிறப்பு வணக்கங்கள் பித்அத் ஆகும் 

*தப்லீக் ஜமாத்தின் மார்க்க தீர்ப்பு*

எனவே முன்னோர்கள் செய்த அமல் என்று பொதுமக்கள் யாரும் சிறப்பு வணக்கங்களில் ஈடுபட வேண்டாம்

பித்அத் யாவும் வழிகேடு என்பதை அறிந்து கொள்ளவும்.


இன்று தமிழகத்தில் மத்ஹபு மறுப்பாளர்களான போலி தவ்ஹீது கூட்டத்தாரின் முன்னோடிகள் இந்த தேவ்பந்த் தப்லீக் ஜமாத் வஹாபிகள்.

இதில் பின்னர் வந்த ஒரு கூட்டத்தை எதிர்த்து மற்ற முன்னோடி கூட்டத்தை பெரிய மத்ரஸா,எங்களது உஸ்தாதுகள் ஓதிய மத்ரஸா என்பதால் மவ்னம் காப்பது  என்பது முனாபிக்தனமாகாதா ???

Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 17 January 2024

இந்தியாவில் வஹாபிசத்தை முதன்முதலாக பரப்பியது

இந்திய துணை கண்டத்தில் முதன் முதலாக வஹாபிய கொள்கைகளை பரப்பியவர்கள் எவர் என்று வஹாபிய மார்க்க அறிஞர் தமது நூலில் எழுதியுள்ளதை ஆதாரமாக கீழே தருகின்றோம்.

இது குறித்து அக்காலத்தில் வாழ்ந்த அநேக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாப் பெருமக்கள் தமது கிதாபுகளில் பதிவு செய்திருந்தாலும், அதை ஏற்க மறுக்கும் வஹாபிய கொள்கைகளை பின்பற்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத் மற்றும் ஹதீஸ்,ஜமாத்தே இஸ்லாமி வஹாபிகள்  குறைந்தபட்ச நேர்மை இருக்குமானால் தமது நூல்களில் உள்ள மேற்கோள்களையாவது ஏற்றுக் கொள்வர் அல்லது இதனை காணும் பாமரர்கள் உண்மையை அறிவர்.

இனி வஹாபிய மார்க்க அறிஞர் அஹ்மது ஸயீத் என்பார் தமது நூலில்  பின்வருமாறு எழுதுகின்றார்,

" ஸயீத் அஹ்மது ரேபரேலி ஹஜ் செய்திட மக்கா சென்ற பொழுது ,அங்கு அவர் இப்னு அப்துல் வஹாப் நஜ்தி தமீமியின் மத்ஹபை ஏற்றுக் கொண்டார்.பின்னர் அவர் இந்தியா திரும்பியதும் வஹாபிசத்தை பரப்ப ஆரம்பித்தார்.கப்ருகளை ஜியாரத் செய்வது  மற்றும் எவரையாவது வஸீலாவாக்குவதையும் ஹராமாக்கினார் " 



நூல் : ஜுஹ்மஉல் இஸ்லாஹ் பீ அஸ்ரில் ஹதீத் ,பக்கம் 126 

சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்களே , கொஞ்சம் இந்த வாக்குமூலத்தை சீர்தூக்கிப் பாருங்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல் கொள்கைகளான வலிமார்களை ஜியாரத் செய்வது மற்றும் அவர்களை வஸீலா ஆக்குவது ஆகியவற்றை ஹராமாக்குவது தான் சத்திய வழிமுறையா ???

இந்த மேற்கூறிய ஸெய்யத் அஹ்மது ரேபரேலியின் ,மாணவர் தான் இஸ்மாயில் திஹ்லவி. இவர்களது வழிகெட்ட கொள்கைகளால் தான் இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி قدس الله سره العزيز அவர்களது கான்காஹ்வை விட்டும் இவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள்.தில்லியின் ஜும்மா மஸ்ஜிதில் இவர்கள் வழிகேடர்கள் என்று பத்வா வழங்கப்பட்டது .இறுதியில் பால்கோட்டில் முஸ்லிம்களால் வெட்டி வீழ்த்தவும் பட்டார்கள்.

இத்தகைய நபர்களை தூக்கிக் கொண்டாடுவது இரண்டே கூட்டத்தார் தான். முதலாவது நாங்களும் மதுஹபு வாதிகள் தான் என்று வெளிரங்கத்தில் கூறிக்கொண்டு உள்ரங்கத்தில் சையது அகமது லேபரேலி மற்றும் இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை பின்பற்றும தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள்.இரண்டாவது கைர் முகல்லிதுகளான அஹ்லே ஹதீஸ்,ஸலபி,ஜாக்,ஜமாத்தே இஸ்லாமி ஆகியோர்.

சமீபகாலமாக இந்த வழிகெட்ட வஹாபியை புனிதமிகும் காதிரியா ஜிஷ்தியாவின் ஆகப்பெரிய ஷெய்கு என்ற மாயத்தோற்றத்தை விதைத்து தரீக்கத் என்ற பெயரில் வியாபாரக் கிளைகளை பரப்பும் நூரிஷா கூட்டத்தார்.

இவர்களைப் பற்றி ஆஷிகுர் ரஸூல் F.M.இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அவர்களுடன் பழகி,அவர்களது முனாபிக்தனத்தை தாம் நடத்திய " அஹ்லுஸ் ஸுன்னா" பத்திரிக்கையில் 90களில் தோலுரித்து எழுதினார்கள்.


இஸ்மாயில் திஹ்லவியும்,முஹம்மது அலி ராம்பூரியும் 'கர்னுஷ் ஷைத்தான் ' இப்னு அப்துல் வஹாப் நஜ்தியை பின்பற்றும் வழிகேடர்கள் என்று கீழக்கரையில் அரசாட்சி புரியும் சங்கைக்குரிய இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் قدس الله سره العزيز தமது கிதாபான மஆனியில் எழுதியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வழிகேடர்களின் மாயவலையில் வீழ்ந்து ஈமானை இழந்திடாமல் வல்ல நாயன்,தனது ஹபீப் முஸ்தபா  ﷺ அவர்கள் பொருட்டால் நம் அனைவரையும் காப்பானாக! آمین بجاہ سیّد المرسلین صلّی اللّہ علیہ وسلّم
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 24 November 2022

ஹிதாயத்துல் அனாம் இலாஜியாரத்தில் அவ்லியாஇல் கிராம்


 குத்புல் மஜீது,கருணைக்கடல்,நாகூர் எஜமான் நாயகம் قدس الله سره العزيز அவர்களது பேரப்பிள்ளை *அல்லாமா ஸெய்யது முஹம்மது பாக்கர் ஸாஹிப் ஆலிம் காதிரி நாகூரி* رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அக்காலத்தில் தர்கா,ஜியாரத்,வஸீலா தேடுவது,உரூஸ் கொண்டாடுவது ,நேர்ச்சை செய்தல்,போர்வை போர்த்துவது,பூ,புஷ்பம் போடுவது குறித்து இதையெல்லாம் வழிகேடு என்று பிதற்றி்த் திரிந்தவர்களுக்கு மறுப்பாக எழுதிய ஆதாரப்பூர்வமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் கொள்கை நூல் 📕 *" ஹிதாயதுல் அனாம் இலாஜியாரதில் அவ்லியாஇல் கிராம் "* .
 *1951* வெளிவந்த முதல் பதிப்பிற்கு பல்வேறு உலமாக்கள் சரிகண்டு ஒப்புதல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து 2வது பதிப்பிற்கும் பல்வேறு உலமாக்கள்,ஷெய்குமார்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பின்வருமாறு  : - 

(1) அல்லாமா நஹ்வி முஹம்மது இஸ்மாயில் ஆலிம் முப்தி காஹிரி رَحِمَهُ ٱللَّٰهُ
(2)மஹ்ழரதுல் காதிரியா அரபுக்கல்லூரி முதர்ரிஸ் அல்லாமா முஹையத்தீன் தம்பி ஆலிம் رَحِمَهُ ٱللَّٰهُ
(3) காயல்பதி ஸாஹிபு தைக்கா அப்பா பிரமுகர் அல்லாமா முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை ஆலிம் ஸதகலி رَحِمَهُ ٱللَّٰهُ
(4)காயல்பதி முத்துவாப்பா வலி அவர்களது திருப்பேரர் கொம்பாலிம் என்ற அல்லாமா ஸூபி முஹம்மது இஸ்மாயில்  லெப்பை ஆலிம் رَحِمَهُ ٱللَّٰهُ.
(5) மதராஸ் அரசு காழி அல்லாமா முஹம்மது ஹபீபுல்லாஹ் ஸாஹிப் رَحِمَهُ ٱللَّٰهُ
(6) பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்,மஹ்ழரதுல் காதிரியா அரபுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அல்லாமா  உத்தமபாளையம் முஹம்மது  அபூபக்கர் கிப்லா ஹழ்ரத் رَحِمَهُ ٱللَّٰهُ
(7) ஷெய்கனா ஸூபி ஹழ்ரத் நாயகம் قدس الله سره العزيز
(8) உலகெங்கும் தாவா பணி செய்த ஷெய்கனா  மீரட் மவ்லானா அப்துல் அலீம் ஸித்தீகி قدس الله سره العزيز அவர்களது அருந்தவப் புதல்வர் அல்லாமா ஷாஹ் அஹ்மது நூரானி رَحِمَهُ ٱللَّٰهُ 

இன்னும் அநேக உலமாக்கள் இந்நூலுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்நூலின் *முன்னுரையில்* ,அல்லாமா அஷ்ஷெய்கு ஸெய்யது முஹம்மது பாக்கர் ஸாஹிப் ஆலிம் நாகூரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நூல் எழுதப்பட்டதன் பிண்ணனியை பின்வருமாறு விளக்குகின்றனர்.

" எம்பெருமானார் ரசூலே கரீம்  ﷺ அவர்கள் நஜ்தைக் குறிப்பிட்டு, " இங்குதான் அதிர்ச்சிகளும், குழப்பங்களும் உண்டாகும். இங்கிருந்து தான் ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் " என முன்னறிவிப்பு செய்தார்கள் ( மிஷ்காத்,ஸஹீஹ் புகாரி )

அவ்வாறாகவே சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நஜ்து தேசத்தில் அப்துல் வஹ்ஹாபும் அவருடைய மகன் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் உண்டாயினர். அவ்விருவரையும் பின்பற்றியவர்கள் தான் மௌலவி இஸ்மாயில் திஹ்லவியும், அவரைச் சார்ந்தவர்களும் . அக்குழுவினர் இரு பிரிவாகப் பிரிந்தார்கள். வெளிரங்கமாக தங்களை வஹ்ஹாபிகள்  என்று காட்டிக் கொண்டவர்கள் ஒரு குழுவினர். அவர்கள் எந்த மத்ஹபைவயும் ஏற்று பின்பற்றாதவர்கள். வெளிரங்கத்தில் தங்களை வஹாபிகள் என்று காட்டிக்கொள்ளாமல் ,அந்தரங்கத்தில் வஹாபியாக இருக்கக்கூடியவர்கள் மற்ற குழுவினர். இவர்கள் ஹனபி - ஹன்பலி என வெளிக்கு மத்ஹபுகளில்  ஏதாவது ஒன்றினை பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு முற்றிலும் வஹ்ஹாபிக் கொள்கைகளையே தங்கள் கொள்கையாகக் கொண்ட 'முகல்லிது' வேடதாரிகள்.

இவர்களில் முந்திய கூட்டத்தினரின் அபாயங்களை, விட பிந்திய இந்த கூட்டத்தாரின் அபாயங்கள் மிகவும் பயங்கரமானவை. ஏனெனில் இவர்கள் 'மத்ஹபு' என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு முஸ்லிம்களை வழிகேட்டில் ஆக்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் நயவஞ்சக தந்திர உபாயத்தினால் ஸுன்னத் வல் ஜமாஅத் உடைய நல்ல கொள்கைகளில் ஆகி இருந்த அநேகர்களை பொல்லாங்குடைய  வஹ்ஹாபிய்யத்தான வழிகேட்டின் அளவில் இழுத்துப் போட்டு விட்டனர்.

வஹ்ஹாபிகளான  அவர்களது கொள்கை கூற்றுகளை பாருங்கள்: 

" முஹம்மது நபி  ﷺ அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகுப் போய் விட்டார்கள். அவர்களுடைய ரவ்ழாவிற்கு ஜியாரத்திற்காகப் போவது ஷிர்க் ( இணைவைத்தல்)  ஆகவும்.

யா நபி! யா முஹம்மது ! யா ரஸூல்லல்லாஹ் ! என்று அழைத்துக் கூப்பிடுவது ஷிர்க்காகும்.அவ்விதம் அழைத்துக் கூப்பிடுபவர் காபிராக இருப்பார்.

முஹம்மது நபி  ﷺ அவர்கள் மறைவான சங்கதிகளை அறிய மாட்டார்கள்.தொழுகையில் அவர்களுடைய ஞாபகம் வருவதானது மாடு,கழுதையின் ஞாபகம் வருவதை விட மிகக் கெட்டதாகும்.அவர்களுடைய முஃஜிஸாத்து ( அற்புதங்களை) விட சூனியக்காரர்களின் சூனியம் அதிக சக்தி வாய்ந்தது. அவர்கள் ஷபாஅத் செய்வார்கள் என நம்புவது ஷிர்க்காகும்.

நபிமார்கள், அவுலியாக்களின் கப்ருகள்  புத்துகளுக்கு(விக்கிரகங்களுக்கு) ஒப்பாகும். அவைகளை தகர்த்து எறிய வேண்டும். அவர்களுக்கு எத்தகையோ சக்தியும் கிடையாது. அவர்கள் பால் உதவி தேடுதல் (வஸீலா) ஷிர்க்காகும். அவர்களுக்கு நேர்ச்சை செய்வது ஹராமாகும்.

சகல நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் ஆகியவர்கள் அல்லாஹ்வின் தகுதிக்கு முன் செம்மானை விட கீழ்த்தரமானவர்கள்.

மீலாதுந் நபி கிருஷ்ண ஜெயந்திக்கு ஒப்பாகும்.

காதிரியா, ஜிஷ்தியா, நக்ஷபந்தியா முதலான தரீக்காக்கள் வழிகேடானவை.

மவ்லிது, பாத்திஹா, கத்தம் முதலானவற்றின் ஷீர்னி  ( உணவுப் பொருள்) ஹராமாகும்.

அவுலியாக்களின் பெயராலும், மவுத் தானவர்களின் பெயராலும் கத்தம் பாத்திஹா ஓதி அதன் பலனை அவர்கள் பால் ஈஸால் தவாப் செய்வது, பிராமண புரோகிதர்கள் அவர்களுடைய வேதத்தை ஓதி ஸ்லோகம் படித்து பிதுர்களுக்கு திதி செய்வது போன்றே ஆகும்." 

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். மேற்சொன்னவகைகளும் அவை போன்ற தவறான நூற்றுக்கணக்கான கொள்கைகளும், வஹாபிகளின் வழிகேடான கொள்கைகளாகும். இத்தகைய வழிகெட்ட கொள்கைகள் பால் வஹாபிய மௌலானா, மவ்லவிகளும், மார்க்கத்தில் மறுமலர்ச்சிக் காண விரும்புவதாக சொல்லிக் கொள்பவர்களும், சமூகத்தில் சீர்திருத்தம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்களும், தாங்கள் வழிகேட்டில் இருப்பதை அறியாமல் ஏனைய முஸ்லிம் பெருமக்களை நேர்வழியில் ஆக்க முற்படுவதாக மனப்பால் குடித்துக் கொண்டு வழிகெடுக்க முற்படுகிறார்கள்.

கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் ," இப்லீசை நஜ்து தேசத்து செய்யக்கூடிய உருவத்திலே காண்பார்கள்"  என்ற விபரம் சரியாகவே இருக்கிறது.

நஜ்து தேசத்து வஹ்ஹாபி ஷைகு உடைய " *கிதாபுத் தவ்ஹீத்"* வின்  உர்து மொழி பெயர்ப்பு நூல்களாகிய *'தக்வியதுல் ஈமான்','ஸிறாத்துல் முஸ்தகீம்','இதுபாத்துத் தவ்ஹீத்'*  போன்ற ஆபாச மலக்குவியல்களிலிருந்து சிலவற்றை பொறுக்கி *'தவ்ஹீதோ இபாதத்'*  என்ற பெயரில் வடநாட்டு வஹ்ஹாபி மவ்லவி ஒருவர் உருதுவில் அச்சிட்டு இருக்கின்றார். அதை *'ஏகதெய்வ வணக்கம்'*  என்ற நாமத்தால் *தென்னாட்டு பாக்கவி ஒருவர்* தமிழாக்கம் செய்து இருக்கின்றார். அதை மற்றொரு 'பீடி மௌலவி' அச்சிட்டு இலவசமாக விநியோகம் செய்துள்ளார்.

மேலும் *'ஜியாரத்துல் குஃப்ர்' , 'அவ்லியாக்களை அவமதிப்பதிக்காதீர்' ,'* *மகான் ஷாகுல் ஹமீத்',' ஏக தெய்வ வணக்கம்'* முதலான சில்லறைத் துக்கடாப் பிரசுரங்கள்- அதிக விஷத்தை உடைய நச்சரவத்திற்கு நல்ல பாம்பு என்று பெயர் உள்ளது போல - வஹ்ஹாபிய விஷ வித்துகளைக் கொண்ட மேற்சொன்ன நூற்கள் பெயரால் கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டிக் கொண்டு நஜ்து  சைத்தானிய பணியை தென்னாட்டில் செய்து வருகின்றன. இத்தகைய கொள்கை கெட்டவர்கள் தங்களை வஹாபிகள் என்று சொல்லிக்கொள்வார்களானாலும் பரவாயில்லை. ஆனால், இவர்களோ அவ்வாறு சொல்லாமல் தங்களை ஸுன்னத் ஜமாஅத்தார்கள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள், எனவே தான் இவர்களுக்கு எதிர்ப்பும் மறுப்பும் ஏற்படுகின்றன. உள்ளொன்று புறமொன்றுமாயிராமல் வெளிக்கும் தங்களை வஹ்ஹாபிகள்  என்று பகிரங்கமாக அறிவித்து தங்களது வஹ்ஹாபியக் கொள்கைகளை இவர்கள் பரப்பினால் இவர்களை யார் ஆட்சேபிக்க போகின்றார்கள் ! " 

               *****************
1950 களில் இப்பிரச்சாரம் செய்த கூட்டம் நிச்சயம் பீஜேவின் தவ்ஹீத் ஜமாத் அல்ல. அவர்களுக்கு முன்னரே அட்சரம் பிசகாமல் அதே கொள்கையை பரப்பிய தப்லீக் தேவ்பந்தி வஹாபிகளை மட்டும் கண்டும் காணாமல் செல்வது நியாயமா ???
இது தான் தீனுக்கு ஸுன்னத் ஜமாத் உலமாக்கள் என்று கூறிக் கொள்பவர்களது சேவையா???ஏனிந்த இரட்டை வேடம் ???
ஒரே கொள்கையை மத்ஹபை மறுக்கும் பீஜே தவ்ஹீத் கூட்டம் சொன்னால் தவறு ,தப்லீக் தேவ்பந்திகள் கூறினால் எங்கள் அகாபிர் என்ற சப்பைக்கட்டா ???எதற்கு இந்த இரட்டை வேடம் ??? கேவலம் அழிந்து போகும் உலகாதாயங்களுக்காகவா ???
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, 5 June 2020

அரபுலக உலமாக்களுடன் தேவ்பந்திகளின் தொடர்பின் யதார்த்தம்

தமிழ் இஸ்லாமிய சமூக ஊடகங்களில்  சமீப காலமாக தங்களின் முன்னோடிகளின் கொள்கை நிலைப்பாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டு சாயம் வெளுப்பதைக் கண்டு புழுவென துடிக்கும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத் ஆதரவு உலமாக்களும் , தேவ்பந்தி முன்னோடிகளை தங்களது ஸில்ஸிலாவில் கொண்டுள்ள போலிகளும் சில உத்திகளை கையாண்டு வருகின்றனர் . அது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.


இவர்களது தேவ்பந்தி தப்லீக் ஜமாத் சாத்திகள் வட இந்தியாவிலும் , பாகிஸ்தானிழும் , அமேரிக்கா ,பிரிட்டன் நாடுகளிலும் செய்து இணையத்தில் அரங்கேற்றிவற்றை இவர்கள் தமிழ் சூழலில் மறுபதிப்பு செய்துள்ளனர் . இவற்றிக்கான அநேகம் மறுப்புகளும் இணையவெளியில் உள்ளன .எனினும் அந்தோ பரிதாபம் தமிழ்'இஸ்லாமிய சூழலுக்கு இதை நவீனமாக இவர்கள் இறக்குமதி செய்கின்றனர் .

  அதில் இவர்கள் கையாளுவது இரண்டு விஷயங்கள் 

* அரபுலக ஸுன்னத் வல் ஜமாத் இமாம்கள் தேவ்பந்திகளை ஏற்றுக் கொண்டு ,அவர்களிடம் கல்வி பயின்று இஜாஸத் பெற்றுள்ளனர் . (எனவே தேவ்பந்தி முன்னோடிகளை எங்களது  ஸில்ஸிலாவில் கொண்டுள்ள போலிகளான நாங்களும் உண்மையான தரீக்கத் வாதிகள் தான் )


*  அரபுலக ஸுன்னத் வல் ஜமாத் இமாம்கள்இப்னு தைமிய்யாவை புகழ்ந்துள்ளனர் (எனவே தேவ்பந்தி முன்னோடிகளை எங்களது  ஸில்ஸிலாவில் கொண்டுள்ள போலிகளான நாங்களும் அஷ்ரப் அலி தானவியை புகழ்வது ஆகுமானதே )



இது ஓர் நீண்ட கால பிரச்னை. தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபி முன்னோடிகளின் வழிகெட்ட கொள்கைகள் கொண்ட நூற்கள் உருது மொழியில் உள்ளன .அவை அரபியில் இல்லை . ஆனால் அரபியில் இவர்கள் ஹதீத் நூற்களின் ஷரஹ் , ஸீரத் போன்ற அஹ்லுஸ் ஸுன்னத் நூற்களை மொழிபெயரத்துள்ளனர் . 



எனவே அந்த நூற்கள் மூலம் இவர்களின் அறிமுகம் அரபுலக உலமாக்களுக்கு கிடைக்கும் பொழுதும் , ஏற்கனவே அரபுலகில் பெரும் பிரச்னை மத்ஹப் மறுக்கும் வஹாபிகளாக  இருக்கும் நிலையில்  , தங்களை ஹனபி,மாதுர்தி மற்றும் தஸவ்வுப் உடைய பிர்கா என்று வெளிரங்கத்தில் காட்டிக் கொண்டு தேவ்பந்திகள் வரும் பொழுது இயல்பாக இவர்களையும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் எனக் கருதுவது தன்னிச்சையான ஒன்று .  

ஆனால் அதற்கு அரபுலக உலமாக்கள் தேவ்பந்தி முன்னோடிகளின் குப்ரியத்தான கொள்கைகளை முழுக்க ஏற்றுக் கொண்டு இவர்களை பரிசுத்தப் படுத்திவிட்டனர் என்பதல்ல அதன் அர்த்தம் . 

 அரபுலக ஸுன்னத் வல் ஜமாத் இமாம்களின் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்துடன் தொடர்பு :

தேவ்பந்தி முன்னோடிகளின்(ஸயீத் அஹ்மத் ரேபரேலி ,இஸ்மாயில் திஹ்லவி ,காஸிம் நானொத்வி ,அஷ்ரப் அலி  தான்வி , ) குஃப்ரியாத்தான நூற்கள் யாவும் உர்துவிலும் ,சில பார்சியிலும் உள்ளது .இவை தற்போது பல்வேறு பதிப்புகளை கண்டுள்ளன . நவீன கால மொழி நடைபாணியிலும் அமைந்துள்ளன . இன்னும் இவற்றில் சில பதிப்புகளில் மோசடிகளும் நடைபெற்றுள்ளன .எனினும் அவற்றின் மூல பிரதிகளும் இன்றும் அஹ்லுஸ்'ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்கிடமும் உள்ளன ,இணையவெளியிலும் உள்ளன . 

இனி பெரும்பாலான அரபுலக உலமாக்கள் அரபியை தமது தாய்மொழியாக கொண்டு கல்வி கற்றும்  , நூற்கள் எழுதியும் , பாடம் நடத்தியும் வந்துள்ளனர் . ஒரு சிலர் அரபல்லாத வேறு மொழியினை தமது தாய் மொழியாக கொண்டிருந்தாலும் , அவர்கள்  சிந்தனை வழிமுறை மற்றும் இயங்கிய அறிவுசார் தளம் என்பது அரபு மொழியே.


இமாம் ஜாஹித் கவ்தாரி மற்றும்  அபுல் பத்தாஹ் அபுல் குத்தாஹ் ஆகியோர் தேவ்பந்திகளை புகழ்ந்ததின் யதார்த்தம் :


Imam Kawthari


இமாம் ஜாஹித் பின் ஹசன் அல் கவ்தாரி அல் ஹனபி அல் அஷ்அரி  رحمه الله அவர்கள் (1296-1371) உஸ்மானிய கிலாஃபத்தின் இறுதி ஷைகுல் இஸ்லாமின் துணை ஷைகுல் இஸ்லாமாக இருந்தவர்கள் .இமாம் அபுல் பத்தாஹ் அபுல் குத்தாஹ் மற்றும் அல் குமாரி ஆகியோர் இவரின் மாணாக்கர் .

அன்னாரின் மறைவையொட்டி இமாம் அபூ ஜஹ்ரா தமது புகழஞ்சலியில் பின்வருமாறு எழுதுகிறார்கள் :

" இமாம் அல் கவ்தாரி  رحمه الله ஒரு உண்மையான அறிஞர்; அறிஞர்கள் அவருடைய அறிவை அறிந்தார்கள். அவரைச் சந்திப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே நான் அவரை அறிந்தேன். சத்தியத்தின் ஒளி வெளிவந்த அவரது எழுத்துக்கள் மூலம் நான் அவரை அறிந்தேன். அவர் வெளியிடத் தொடங்கிய கையெழுத்துப் பிரதிகளின் விளக்கவுரைகள்  மூலம் நான் அவரை அறிந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக ! கையெழுத்துப் பிரதியைப் பற்றிய எனது ஆச்சரியம், ஆசிரியரின் விளக்கவுரையைப் பற்றிய எனது ஆச்சரியத்துடன் பொருந்தவில்லை. அசல் கையெழுத்துப் பிரதி ஒரு சுருக்கமான நிருபமாக இருந்தபோதும், அதைப் பற்றிய இமாமின் விளக்கவுரைகள் அதை அவசியம் படிக்க வேண்டிய ஒரு முக்கிய படைப்பாக மாற்றிவிடும்.

அவர் அரபு அல்லாத எழுத்தாளர் என்றும், அஜமி  என்றும் வாசகரின் மனதில் தோன்றாது ... ஆயினும் அது உண்மையில் ஆச்சரியமளிப்பதாக இல்லை, ஏனென்றால் அவர் இஸ்தான்புல்லில் (அல்-அஸ்தானா) வாழ்ந்த நேரத்தில் வம்சாவளி, கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையில் துருக்கியராக இருந்தார், ஆனால் அவரது அறிவார்ந்த வாழ்க்கை முற்றிலும் அரபு மொழியாக இருந்தது, ஏனெனில் அவர் அரபியைத் தவிர வேறு எதுவும் படிக்கவில்லை, அவரது சிந்தனையை அரபியைத் தவிர வேறு எதுவும் நிரப்பவில்லை "

[ நூல் -  இமாம் கவ்தாரி அவர்களது மகாலத் நூலுக்கு இமாம் அபூ ஜஹ்ரா அவர்களது முன்னுரை ,ரியாத் பதிப்பு ]

இமாம் அல் கவ்தாரி  رحمه الله அவர்கள் புகழ்ந்த தேவ்பந்தி உலமாக்களின் நூற்கள் அனைத்தும் ஸஹீஹ் முஸ்லீம் ,அபூ தாவூத் ,திர்மிதி போன்ற ஹதீத் ஷரீபின் ஷரஹ் ஆகும் .

இனி இமாம் அல் கவ்தாரி அவர்கள் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் குப்ரியத்தான கொள்கைகள் நிறைந்த உருது ,பார்சி நூற்களை வாசித்திருப்பார்களா ? அவர்கள் காலத்தில் யாரேனும் அரபியில் மொழிபெயர்த்து ,அதை அவர்கள் வாசிந்திருந்தால் "ஹுஸாமுல் ஹரமைன் " பத்வாவில் கையெழுத்திட்ட சங்கைக்குரிய மக்கா ,மதீனா உலமாக்கள் போன்று தான் முடிவெடுத்திருப்பார்கள் என்பது திண்ணம் . 

* அல் இஷ்பாக் அலா அஹ்காம் அல் தலாக் - தலாக் பற்றிய ஜம்ஹுர் இஜ்மாவிற்கு முரண்பட்ட இப்னு தைமியாவிற்கு எதிரான மறுப்புரை 

* அல் ஜவாப் அல் வாபி பி ரத் அலா அல் வாய்ஜ் அல் அவ்பி - ஸுபியாக்கள் பற்றிய அவ்ப் நகரைச் சேர்ந்த பிரச்சாகருக்கு எதிரான மறுப்புரை 

* மஹ்க் அல் தவக்குல் பி மஸாலா அல் தவஸ்ஸுல் - கண்மணி நாயகம் அவர்களை தவஸ்ஸுலாக ஏற்க மறுப்பவர்களுக்கான மறுப்புரை 

* அல் லம்மத்ஹபிய்யா கன்தரத்து அல் லத்தீனியா - மத்ஹப் மறுப்பு இறைமறுப்புக்கான நுழைவாயில் 

இமாம் அல் கவ்தாரி  رحمه الله அவர்கள் எழுதிய எண்ணற்ற நூற்களுல்  மேற்குறிப்பிட்ட நூற்கள் இன்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி இஸ்மாயில் திஹ்லவிக்கும் ,அதே போன்ற கருத்துக்களை கொண்டுள்ள அவரின் பிர்காவைச் சேர்ந்த உலமாக்களுக்கும் இன்றும் பொருந்தும் .  இமாம் அல் கவ்தாரி  رحمه الله அவர்கள் நிச்சயமாக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் வழிகெட்ட வஹாபிய கொள்கைகளை அங்கீகரித்து அவர்களை புகழவில்லை . 

மாறாக இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் 'அல் முஹன்னத் '  நூலுக்கு என்ன முனாஃபிக் தனம் செய்தார்களோ ,அதைப் போலவே இவர்கள் ஸுன்னத் வல் ஜமாத் அகீதா நூற்களை அரபியில் மொழிபெயர்த்து ,அரபுலக ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்கள் மத்தியில் தங்களைப் பற்றிய நல் அபிப்பிராயம் உண்டாக செய்த மற்றுமோர் சதித் திட்டம் .இவர்களின் வரலாற்றை ஆரம்பம் முதல் அறிந்தவர்கள் இவர்களது முனாபிக் தனமான செயல்பாடு பற்றி அறிவர் .

இதைத் தவிர  குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் தேவ்பந்த் மத்ரஸா மற்றும் இன்ன பிற அவர்களது பிர்கா சார்ந்த மத்ரஸாக்கள் மூலம் அவர்கள் குறிப்பிடத்தக்க (PR and Marketing Network) உறவை மேம்படுத்தும் சந்தை தொடர்பை உண்டாக்கினர் .

Abdu-l-Fattaah Aboo Ghuddah Ansari

இனி  அபுல் பத்தாஹ் அபுல் குத்தாஹ் அவர்களும் (1917- 1997) புகழ்ந்ததோடு அல்லாமல் சில நூற்களை அரபியில் மொழிபெயர்த்தும் உள்ளார்  . பலதரப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களின் செல்வாக்கு அவரின் மீது ஆளுமை செலுத்தியது .

1940 களில் எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவத்தின் தலைவரான ஹசன் அல்-பன்னாவை சந்தித்தார். அவர் சிரியாவுக்குத் திரும்பியபோது, அவர் முஸ்லீம் சகோதரத்துவத்துடனும் , தாவாவின் பணியியிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார், ஏனெனில் அவரது இயல்பு  மிகவும் நம்பகமானதாக இருந்தது, மேலும் அவர் தனித்துவமான தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருந்தார்.

அவர் சவுதி அரேபியாவை தனது வசிப்பிடமாக  அமைத்துக்  கொண்ட பிறகு,  அவரது பல கருத்துக்கள் மாறின. மேற்கண்ட நபர்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதை அவர் காட்டுகிறார், மேலும் அவர்களை மிகவும் பாராட்டுகிறார். இப்னு தைமியாவைப் பற்றி பேசிய தமது  ஆரம்பகால படைப்புகள் மற்றும் தஹ்கீக் மற்றும்  குறிப்புகளையும் தருகிறார்.

அவர் இப்னு தைமியாவுக்கு "ஷெய்க் அல்-இஸ்லாம்" போன்ற உயர்ந்த பட்டங்களை பல முறை தருகிறார், மேலும் அவரை ஒரு காஃபிர்  என்று அறிவித்ததை அபத்தமானது என்கிறார்  (பக். 24-30).
இப்னு தைமியாவின் மாணவர் இப்னு கயீமைப் பெரிதும் பாராட்டுகிறார், மேலும் அவர் அவரை காஃபிர் என்று அறிவித்ததாகக் கூறப்படும் பொய்யை மறுக்கிறார் (பக். 30-35).வெளிவந்த தமது மற்ற தஹ்கீக்குகள் பற்றியும் குறிப்பிடுகின்றார் .

இறந்தவர்களுடன் இஸ்திகாதாவை அவர் மறுத்தார் (பக். 35-38). அவர் அதை அனுமதிக்கிறார் என்றும் அது ஷிர்க் என்று கூறுபவர் காஃபிர் என்கிறார் .

பின்னர் இதற்கு முற்றிலும் மாறாக முரண்பட்டு ,இது அப்படியல்ல, முற்றிலும் பாத்தில் மற்றும் அவர்களிடம் "நான் அதை எங்கே சொன்னேன்?" என்று வினவுகிறார் .
பின்னர் அவர் இஸ்திகாதா அனுமதிக்கப்படாது என்று கூறுகிறார். அவர் தனது முந்தைய தஹிக்கில் ஒன்றைக் குறிப்பிடுகிறார், அங்கு அவர் அப்துல் ஹை லக்னவி பயன்படுத்திய 'கவ்த் அல்-தகலைன் ' என்ற வார்த்தையை மறுக்கிறார்.

அவர் முஹம்மது இப்னு அப்துல் வஹாபிற்கு மரியாதை செலுத்துகிறார், அவரை இமாம் அல்-தாவா என்று அழைத்து, அவரது பெயருக்குப் பின்னால்  'ரஹ்மத்துல்லாஹி அலைஹி ' என்றும் கூறுகிறார்.
இப்னு தைமியா உண்டாக்கிய  தவ்ஹீத்தின்  பிரிவுகளை  அவர் ஒப்புக்கொள்கிறார் (பக். 38).

அவர் தனது ஆசிரியர் இமாம் கவ்தாரியின் நிலைப்பாட்டை விவாதித்து, அவர் தனது பல ஆசிரியர்களில் ஒருவர் என்று கூறுகிறார். இமாம் கவ்தாரி சொன்ன எல்லாவற்றையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அதற்கு அர்த்தமல்ல என்கிறார் . பின்னர் அவர் ஹலபில் ஒரு பெரிய ஷெய்கு  இருப்பதாகக் கூறினார், அவர் இப்னு தைமியாவை முற்றிலும் நேசித்தார், மேலும் "தூதுத்துவம்  முடிவுக்கு வரவில்லை என்றால், இப்னு தைமியா ஒரு நபியாக இருந்திருப்பார்" (!) என்றும் கூறினார்.

[ நூல் - கலிமாத் ஃபி கஷ்ப் அபாத்தில் வ இஃப்திராத் , அபூ பத்தாஹ் அபூ குத்தாஹ் ]  

 முஹத்தித் ஏ ஹரமைன் ஷரீப் ஸெய்யித் முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கி அவர்கள் தேவ்பந்த் உலமாக்கள் பலரிடமும் ,இன்னும் குப்ர் பத்வா வழங்கப்பட்ட தேவ்பந்தி முன்னோடிகள் சிலரிடமும் இஜாஸத் பெற்றதின் விளக்கம் :   

முஹத்தித் ஏ ஹரமைன் ஷரீப் ஸெய்யித் முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கி  رحمه الله அவர்கள் தங்களது கல்வியின் ஆரம்ப காலத்தில் ,தேவ்பந்திகளின் உண்மை கொள்கையினை அறியாத காலத்தில்  ஜக்கரிய்யா காந்தலவி தேவ்பந்தியிடம் ஹதீத் கற்றார்கள். ஆனால் அன்னவர்கள் தஸவ்வுப் உடைய ஸில்ஸிலா இஜாஸத்தை பரேலி அஃலா ஹழ்ரத் அவர்களது கலீஃபா , குத்பே மதீனா ஜியாவுத்தீன் மதனீ அவர்களிடம் பெற்றார்கள் .இன்னும் பரேலி அஃலா ஹழ்ரத் அவர்களது மகனார் இமாம் முஸ்தபா ரிழா கான் அவர்களிடமும் ஹதீதுக்கான இஜாஸத் பெற்றுள்ளார்கள் .


ஷரீப் ஸெய்யித் முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கி  رحمه الله அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் கொள்கை விளக்க நூலான 'மஃபாஹீம்' நூலை எழுதிய பின்னர் திருடனுக்கு தேள் கொட்டியது போல் இந்த தேவ்பந்தியாக்கள் தங்களின் வஹாபிய விசுவாசத்தை காட்ட அன்னாரின் மீது முப்ததி என்று   பத்வா வெளியிட்டார்கள் .

தேவ்பந்திகள் Sunniform.com என்ற விவாத தளத்தை ஆங்கிலத்தில் நடத்தி வந்தனர் . உலகின் பல பகுதிகளில் இருந்தும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் இதில் பங்குபெற்று வாத பிரதிவாதங்கள் நடந்தேறின . வழக்கம் போல் தேவ்பந்திகள் நாங்கள் ஹனபி,மாதுர்தியாக்கள் என்று தங்கள் புரட்டுகளை முன் வைத்தனர் . ஆனால் இந்த பத்வா இதில் வெளிவந்ததும் இவர்கள் குட்டு வெளிப்பட்டு இவர்களின் உண்மையான முகம் வெளிவந்து சந்தி சிரித்தது .  தளத்தை இழுத்து மூடினர்  தேவ்பந்திகள்.

அந்த விவாத தளத்தின் பதிவு

https://web.archive.org/web/20100130043500/http://www.sunniforum.com/forum/showthread.php?53234-Beliefs-of-Muhammad-Alawi-Maliki-and-Ulama-of-Deoband


தமிழாக்கம் : 

முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கியின் கொள்கைளும் , தேவ்பந்த் உலமாக்களும்  :-

ஜாமிஆ மதனியா பஹவல்பூரின் உஸ்தாதும்,தேவ்பந்திகளின் இமாமுமான  அல்லாமா ஸர்பராஸ் கான் ஸப்தார் அவர்களது பேரனுமாகிய  ஹாபிழ் ஸபறாஸ் கான்   எழுதுகிறார்கள்,

"எனது பாட்டனார் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் மஸ்லக்கோடு வலுவானஇணைப்பையும் ,தொடர்பையும் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்த விஷயத்தில் அவர் சிறிதளவும்  நெகிழ்வுத்தன்மையை பொறுத்துக்கொள்ளவில்லை மற்றும் 'லா யக்பூன லவ்மத லயீம் ' (குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்சாட்டுக்கு அஞ்சாதவர்கள்) என்பதன் ஒரு சரியான உருவகமாக இருந்தார்.

மக்காவை சேர்ந்த ஓர் அரபி முஹம்மத் அலவி மாலிக்கி ஸாஹிப் (மஸ்லக்கால் பரேல்வி ) , 'அல் ஜகாயிர் அல் முஹம்மதியா' மற்றும்  'ஹவ்ல் அல் இஃதால் பி ஜிக்ர மவ்லித் அல் நபி அஷ் ஷரீப் 'என்னும் இரு நூற்களை எழுதியுள்ளார் . இந்த புத்தகங்களின் பல உள்ளடக்கங்கள் சவூதி உலமா போர்ட் மற்றும் மக்கா காழி ஷைகு அப்துல்லாஹ் பின் சுலைமான் பின் மானி அவர்களால் ஆட்சேபிக்கப்பட்டன .அவர் இந்நூற்களுக்கு மறுப்பாக ஹிஜ்ரி 1403ல் 'ஹிவார் மா அல் மாலிக்கி பீ ரத் முன்கரத்தி வ தலாலித்' என்ற நூலினை வெளியிட்டார் .

இந்த புத்தகம் வெளியான பிறகு, அலவியின் ஆதரவாளர்கள் 'இஸ்லாஹ்-இ-மஃபாஹிம்',  'மாஃபாஹிம் யஜிபு அன் துசாஹாவின்' உருது பதிப்பை வெளியிட்டபோது, அது அஹ்லுல் ஹக்கைத் தாக்கியது, புதுமைகள் (பிட்அத்) மற்றும்  ஷிர்க் தூய மார்க்கமாக வழங்கப்படுகின்றன என்பது புரிந்தது .
எனவே, மூத்த அறிஞர்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர், அதற்கு எதிராக தங்கள் கட்டுரைகள், ஃபதாவாக்கள் மற்றும் கடிதங்களில் மக்களை எச்சரித்தனர்.

 'இஸ்லாஹ்-இ-மஃபாஹிம்' என்பது ஷிர்க்  மற்றும் பித்அத்தை  அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் தொகுப்பாகும்.  இது தந்திரமாக தவ்ஹீத் மற்றும் சுன்னா என்று பெயரிடப்பட்டது . அவரது வழக்கம்படி, என் பாட்டனார் ஹக் மற்றும் அஹ்லுல் ஹக் ஆகியோருடன் பக்கபலமாக இருந்து 'இஸ்லாஹ்-இ-மஃபாஹிம்' மற்றும் ஸெய்யித் முஹம்மத் அலவியின் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தவறான கருத்துக்களிலிருந்துதம்மை விலக்கிக் கொண்டார்.

ஒருமுறை நான் அவரிடம் அலவி மாலிகி சாஹிப்பைப் பற்றி கேட்டபோது, அவர் கூறினார்: 'ஹத்ரத் காதி [' காயிதே  அஹ்லுஸ் -சுன்னா 'அல்லாமா காதி மஜார் உசேன், ஷெய்க் அல்-இஸ்லாம் மவ்லானா மதானியின் கலீஃபா முஜாஸ்,]  அவர்களது அதே கருத்துக்கள் என்னிடம் உள்ளன.  பின்னர், டாக்டர் முப்தி அப்துல் வாஹித் (லாகூரின் ஜாமியா மதானியாவின் முப்தி)அவர்களின் 'முஹம்மது அலவி மாலிகி கே அகாயித் உங்கி தஹ்ரிக்கத் கே ஆயினே மே' [முஹம்மது அலவி மாலிகியின் நம்பிக்கைகள் அவரது படைப்புகளின் வெளிச்சத்தில்] என்ற ஒரு கட்டுரையை வாசித்துக் காண்பித்தேன். சில வாசகங்களைக் கேட்ட என் பாட்டனார் , 'அஹ்மத் ரஸா  கான் பரேல்வியை விட அவர் அதிக பித்அத்தியாக உள்ளார் ' என்று கூறினார்.




தேவ்பந்தின் உலமாக்கள்  ஸெய்யித் முஹம்மத் அலவியின் சில புத்தகங்களுக்கும்  குறிப்பாக 'மஃபாஹிமுக்கும்'  எதிராக எச்சரித்தனர். தேவ்பந்தின்  பல அறிஞர்கள் மஃபாஹிமில் ஏராளமான அகாயித் மற்றும் மசாயில்களுக்கு  மறுப்பை எழுதினர். அதையெல்லாம் ஒன்றாக  'தஹ்கிகி நஸர்' என்ற புத்தகத்தில் வெளியிட்டது. இந்த புத்தகத்தை தாருல் உலூம் கராச்சியின் பட்டதாரி முப்தி முஹம்மது அபுபக்கர் அலவி ,  ஷெய்குல் -ஹதீஸ் மவ்லானா ஜக்கரிய்யாவின் கலீஃபா மவ்லானா முஹம்மது இஸ்மாயில் படாத் மதானியின் அறிவுறுத்தலின் பேரில் தொகுத்துள்ளார் . இதை லாகூரின் மதரஸா குத்தம்  அஹ்லுஸ் -சுன்னத் வெளியிட்டனர்.

தேவ்பந்தின் உலமாக்கள் 'மஃபாஹிம்' மற்றும் அவரது பிற புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முஹம்மது அலவி மாலிகியின் அகாயித்  பற்றிய விரிவான மறுப்பை எழுதினார்; அவர் தனது புத்தகங்களில் ஊக்குவித்த நம்பிக்கையின் காரணமாக அவரை முப்ததி என்றும் அஹ்லுஸ் -ஸுன்னத்  வல்-ஜமாவை விட்டும் வெளியேறிவிட்டார் என்று அறிவித்தனர் .

விரிவான கண்டனத்தை எழுதிய அறிஞர்கள் பின்வருமாறு:

1.அல்லாமா காழி மழ்ஹர் ஹுசைன் , சக்வால்
2.ஷைகு முஹம்மத் யூசுப் லூதியான்வி , கராச்சி
3.முப்தி ஸய்யித் அப்துல் ஷக்கூர்,சர்கோதா
4.முப்தி அப்துல் சத்தார் ,கைர் அல் மதாரிஸ், முல்தான்
5.முனைவர் முப்தி அப்துல் வாஹித் ,லாஹுர்

மஜ்லிஸ் தஹ்கீகாதி இஸ்லாமி பாகிஸ்தானின் (இஸ்லாமிய ஆராய்ச்சி அகாடமி) தலைவரான முப்தி அப்துல் சத்தார்,ஸெய்யித்  முஹம்மது அலவி மாலிகியை மறுத்து எழுதியதைத் தொடர்ந்து பின்வரும் அறிஞர்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு முப்தி அப்துல் சத்தாருடன் முழுமையாக உடன்பட்டனர்.

1. முப்தி ஜமீல் அஹ்மத் தன்வி, ஜாமியா அஷ்ரபியா லாகூர்
2. முப்தி தகி உஸ்மானி, கராச்சி.
3. முப்தி ரஃபி உஸ்மானி, கராச்சி.
4. டாக்டர். அல்லாமா காலித் மஹ்மூத், யு.கே.
5. ஷேக் சையித் நபிஸ் ஷா அல்-ஹுசைனி, லாகூர்.
6. மவ்லானா அமீன் சப்தார் ஒகார்வி, கைர் அல்-மதரிஸ் முல்தான்.
7. 'அல்லாமா அப்துல்-கயூம் ஹக்கானி, தாருல் உலூம்  ஹக்கானியா அகோரா கட்டக்.
8. முப்தி ஷேர் முஹம்மது அலவி, ஜாமியா அஷ்ரபியா லாகூர்.
9. மவ்லானா ஆஷிக் இல்ஹாகி புலந்த்ஷஹ்ரி, மதீனா.
10. முப்தி முஹம்மது ஃபரித், அகோரா கட்டக்.
11. மவ்லானா முஹம்மது இஸ்மாயில் படாத் மதானி, மதீனா.
12. முப்தி நசீர் அகமது, ஜாமியா இம்ததியா பைசலாபாத்.
13. முப்தி அப்துல் சலாம் சட்காமி, பானூரி டவுன் கராச்சி.
14. மவ்லானா முஹம்மது அக்பர், காசிம் அல்-உலூம் முல்தான்.
15. மவ்லானா ஃபைத் அகமது, காசிம் அல்-உலூம் முல்தான்.
16. மவ்லானா அப்துல் கானி, ஜாமியா மதானியா லாகூர்.
17. மவ்லானா ஜமால் அகமது, தார் அல்-உலூம் பைசலாபாத்.
18. மவ்லானா ஜாவேத் உசேன் ஷா.


முஹம்மது அலவி மாலிகி மீது மவ்லானா லூதியன்வி தேவபந்தியின் ஃபத்வா.

முஹம்மது அலவி மாலிகிக்கு ,மவ்லானா லூதியானாவி பைஅத்  கொடுத்ததாக சிலர் வதந்தி பரப்பினர். இந்த நேரத்தில் மவ்லானா லூதியன்வி முஹம்மது அலவி மாலிகியின் முகத்தை நான் பார்த்ததில்லை,
இனிமேலும் நான் பார்க்கவும் விரும்பவில்லை என்றும் எழுதினார். நான் இன்னும் அவரை ஒரு முப்ததி
என்று கருதுகிறேன் என்று கூறினார் .




தேவ்பந்தின் உலமாக்கள் முஹம்மது அலவி மாலிகியை மறுத்த சில கொள்கைகள் :

1. மண்ணறைகளில் இருக்கும் நல்லடியார்களிடம்   உதவி கோரி அழைப்பது அனுமதிக்கப்படுகிறது என்றும், அவர்கள் அழைக்கப்படும் போது அவர்கள் தசர்ருப் செய்து எங்களுக்கு உதவுவார்கள் என்றும் நம்புங்கள். படைப்பினங்களிடம்  துஆ செய்து மற்றும் வழிமுறைகளுக்கு மேலே உள்ள விஷயங்களை அவர்களிடம் கேட்பது (மா பவ்க் அல் அஸ்பாப் ) அனுமதிக்கப்படுகிறது.

2. பூமான் நபி  அவர்கள் ஹாழிர் நாழிர் அல்லது வேறுவிதமாகக் கூறினால், உலகில் எங்கும் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் சாட்சியாகவும் விழிப்புடனும் இருக்கிறார்கள் .

3. பரிசுத்த நபிநாதருக்கு  இறுதி நாளின்  சரியான நேரம் உட்பட 5 விஷயங்களைப் பற்றிய முழுமையான அறிவு உள்ளது; புனித தூதருக்கு முதல் நாள் முதல் கடைசி வரை காணப்படாத முழுமையான (குல்) அறிவு வழங்கப்பட்டுள்ளது.

4. உலக மற்றும் வானங்களின் சாவிகள் புனித நபிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன என்ற நம்பிக்கை.

5. சொர்க்கம், நரகத்தை வழங்குவதற்கும், ரிஸ்க் (வாழ்வாதாரம்) வழங்குவதற்கும் அதிகாரம் புனித நபிக்கு வழங்கப்பட்டுள்ளது.

6. பூமான் நபி அவர்களின் பெயரால் சத்தியம் செய்வது அனுமதிக்கப்படுகிறது.

8.முஃஜிஸாத், கலாக் மற்றும் கசாப் பற்றிய கலந்துரையாடல்.

9. ‘அகாயித் மற்றும் ஃபிக்ஹ் ’ விஷயங்களில் பலவீனமான ஹதீத்தைப் பயன்படுத்துதல். கூற்றுடன் எந்த தொடர்பும் இல்லாத ஆதாரங்களை கொண்டு வருவது இதனால் சாதாரண மக்களை குழப்பமடையச் செய்து ஏமாற்றுகிறது.

10. நபிமார்களை பஷர்கள் (மனிதர்கள்) என்று மட்டும் குறிப்பிடுவது ஷிர்க் !

இந்த அறிஞர்களால் 'தஹ்கீகி நசர்' புத்தகத்தில் விவாதிக்கப்பட்ட இன்னும் பல ஃபிக்ஹி  சிக்கல்கள் உள்ளன. முழுமையான மறுப்பு மற்றும் விவாதத்திற்கு அந்த புத்தகத்தைப் பார்க்கவும்.





இன்றுவரையிலும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் இந்த இரட்டை வேஷம் தொடர்கின்றது .இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மார்க்க மேதையான ,துருக்கியைச் சேர்ந்த ஷெய்கு மஹ்முத் எப்பெந்தி நக்ஷபந்தி அவர்களுக்கு இந்த தேவ்பந்திகள் சமீபத்தில்  தேவ்பந்தின் முன்னோடி காஸிம் நானோத்வி பெயரில் விருது ஒன்றினை அளித்தனர் . அதை தங்களுக்கான அங்கீகாரமாக வழக்கம் போல் இணைய வெளியில் நாடகம் நடத்தினர் .  

Shaykh Mahmud Effendi with Shaykh Ahmad Cubbeli


சமீபத்தில் பரேலி அஃலா ஹழ்ரத் அவர்களது பேரனார் தாஜுஸ் ஷரியா முப்தி அக்தர் ரிழா கான் அவர்கள் மதீனாவில் இருந்த சமயம் ஷெய்கு அஹ்மத் குப்பேலி நக்ஷபந்தி  (ஷெய்கு மஹ்முத் எப்பெந்தி நக்ஷபந்தி அவர்களின் கலீபா மற்றும் மாணவர் ) சந்தித்து தேவ்பந்திகளின் கொள்கை பற்றி வினவினார் . அவர்களின் முன்னோடிகளின் வழிகெட்ட கொள்கையை விளக்கி'பின்னர் ஷெய்கு அஹ்மத் குப்பேலி 
அவர்கள் கூறினார்கள் ' தேவ்பந்திகள் தம்மை நக்ஷபந்திகள் என்று கூறிக்கொண்டு துருக்கியில் வருகை தந்து உலமாக்களையும் , மக்களையும்  வழிகெடுகின்றனர் .நான் துருக்கி சென்று இன்ஷா அல்லாஹ் அவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் சொல்வேன் ' என்றார்கள் .


பின்னர் தாஜுஸ் ஷரியா முப்தி அக்தர் ரிழா கான் அவர்கள் செப்டெம்பர் 2014ல்  துருக்கி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரிடையாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்களை சந்தித்து தேவ்பந்திகளின் வழிகெட்ட கொள்கைகளை விளக்கினர்.அப்போது அன்னார் ஷெய்கு மஹ்முத் எப்பெந்தி நக்ஷபந்தி அவர்களையும் சந்தித்து விளக்கம் கூறிய நிகழ்வும் நடந்தது .அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள் 'துருக்கி ஸபர்நாமா'என்று  வெளிவந்துள்ளன.

இதைப் போலவே தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கையான 'அல்லாஹ் பொய் சொல்வது சாத்தியம்' என்பதைப்   பற்றி  சமீபத்தில் இணையவெளியில்  தேவ்பந்திகள் ஆங்கிலத்தில் பயான் செய்து வழிகெடுக்க முற்பட்ட பொழுது அரபுலக உலமாக்களான  ஷஹீத் ரமதான் அல் பூத்தி , ஷெய்கு அபூ ஆதம் அல் நரூஜி  , ஷெய்கு ஸாலிஹ் பின் ஸித்தினா ஆகியோர் இது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கைகள் என்று திடமாக மறுத்துள்ளனர் .  


இதுதான் தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளின் இரட்டை வேஷம். இத்தகையோரைப் பற்றித்தான் அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான் ,

தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர்.

[அல் குர்ஆன் 2:15]




 

 





Related Posts Plugin for WordPress, Blogger...