Tuesday, 24 November 2026

வலீ என்பதன் பொருள்

🌹  “வலீ”  என்பதன் பொருள் 🌹

இமாம் அல்-பைஹகீ رحمه الله (மறைவு: ஹிஜ்ரி 458) அவர்கள் “வலீ” (ولي) என்பதன் பொருளை விளக்கும்போது கூறுகிறார்கள்:

\[31\] «الولي» ويختص بحفظ أهل الولاية. ومنها :

பொருள்:

“பாதுகாப்பவரும், நேசமிக்க நண்பரும், பொறுப்பேற்று பராமரிப்பவரும்” என்பதாகும்.

* இமாம் அல்-ஹுலைமி رحمه الله (மறைவு: ஹிஜ்ரி 338) அவர்கள் கூறுகிறார்கள்:

وقال الحليمي : هو الوالي ومعناه مالك التدبير، ولهذا يقال للقيم على اليتيم : ولي اليتيم، والأمير : الوالي

பொருள்:

“வலீ” என்பதற்கு “வாலீ” என்று பொருள். அதாவது, நிர்வாகம் மற்றும் பொறுப்புகளைத் தீர்மானித்து நிர்வகிக்கும் அதிகாரம் உடையவர் என்பதாகும்.

இதன் காரணமாகவே, அனாதைக் குழந்தையைப் பொறுப்பேற்று பராமரிப்பவருக்கு “அனாதையின் வலீ” என்றும், ஆட்சியாளருக்கு “வாலீ” என்றும் கூறப்படுகிறது.

நூல்: அல்-மின்ஹாஜ் (1/204)

* இமாம் அல்-கத்தாபீ رحمه الله (மறைவு: ஹிஜ்ரி 388) அவர்கள் கூறுகிறார்கள்:

وقال الخطابي : والولي أيضا : الناصر، ينصر عباده المؤمنين

பொருள்:

“அல்-வலீ” என்பதற்கு உதவி செய்பவர், ஆதரவாளர் என்ற மற்றொரு பொருளும் உண்டு. அதாவது, தனது முஃமினான அடியார்களுக்கு உதவி செய்து, அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர் என்பதாகும்.

நூல்: ஷுஅபுல் ஈமான் – இமாம் அல்-பைஹகீ رحمه الله, பக்கம்: 245.

இமாம் ஷம்சுத்தீன் அத்தஹபீ رحمه الله (மறைவு: ஹிஜ்ரி 748) அவர்கள் கூறுகிறார்கள்:

وللحافظ أبي بكر البيهقي اعتناء بكلام الحليمي ولا سيما في كتاب " شعب الإيمان " .

பொருள்:

ஹாஃபிழ் அபூபக்ர் அல்-பைஹகீ رحمه الله அவர்கள், இமாம் அல்-ஹுலைமி رحمه الله அவர்களின் கருத்துகள் மற்றும் கூற்றுகளின் மீது மிகுந்த கவனம் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, தமது ஷுஅபுல் ஈமான் என்ற நூலில் அவருடைய கருத்துகளிலிருந்து அதிகம் பயனடைந்துள்ளார்கள்.

ஆதார நூல் 📕 : ஸியரு அஃலாமின் நுபலா – பாகம்: 17, பக்கம்: 232.

Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment