Friday 27 October 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 6

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் ஒருவரை காபிர் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கான விதிகளையும் ,நிபந்தனைகளையும் விவரித்துள்ளனர் .

* தகல்லும்  -  ஒரு குறிப்பிட்ட வாக்கியம் நிச்சயமாகச் சொல்லப்பட்டது .

* கலாம்  - அவ்வகையான வாக்கியம் நிச்சயமாக குப்ரானது .

* முதகல்லிம்  - அவ்வகையான வாக்கியம் நிச்சயமாக அந்த நபரால் சொல்லப்பட்டது .

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளில் ,சிறிதளவும் சந்தேகத்திற்கிடமில்லாத பொழுது (அல்லது சொல்லப்பட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றில்லாத போது )  அல்லது சொல்லப்பட்டதின் பெயரில் தகுந்த விளக்கம் அளிக்காத பொழுது தான் குப்ருடைய தீர்ப்பு வழங்கப்படும் . இதுவே  தான் செயல்களுக்கும் ,வார்த்தைகளுக்கும் (குப்ரின் அளவில் கொண்டு சேர்க்கக் கூடிய )  பொருந்தும் . இதை ஒரு எளிய உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முடியும் .

தம்மை முஸ்லிம் என்று உரிமை கோரும் ஜைத் தின் மீது குப்ருடைய மார்க்கத் தீர்ப்பு எப்பொழுது வழங்கப்படும் என்றால் , ஜைத் மார்க்கத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் (ஜரூரியத் ஏ தீன் ) , தனது வார்த்தைகளின் மூலமோ ,செயல்களின் மூலமோ மறுத்தாலோ அல்லது மாற்றமாக நடந்தாலோ , இன்னும் அத்தகைய மறுப்பும் ,மாற்றமும்

* நிச்சயமாக நடந்துள்ளது .
* அத்தகைய செயல்களும் ,சொற்களும் நிச்சயமாக குப்ரானது .
* அத்தகைய செயல்களும் ,சொற்களும் நிச்சயமாக ஜைத் உடையவை தான் .

மேலே மூன்று அம்சங்களும் உறுதியாக நிரூபிக்கப்பட்டு, உறுதி செய்யப்படுகின்றன எனும் பொழுது தான் ,குப்ருடைய மார்க்கத் தீர்ப்பு ஜைத் தின் மீது வழங்கப்படும் .

தேவபந்த்தின் முன்னோடி உலமாக்கள்(அஷ்ரப் அலி தான்வி ,முஹம்மது காஸிம் நாணோத்வி ,கலீல் அஹ்மத் அம்பேத்வி ,ரஷீத் அஹ்மத் கங்கோஹி  ) மற்றும் அவர்களது கூற்றுகளின் மீது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களின் தெளிவான நிலைப்பாடு என்னவெனில்   : இந்த குப்ருடைய வாக்கியங்களைப் பற்றி முழமையான அறிவுள்ள நபர் , மற்றும் அதைப் பற்றி தெளிந்த புரிதல் கொண்ட பின்னும்  , இத்தகைய நபர்களை காபிர்கள் என்று நம்ப மறுத்தால் ,அவர் தாமே காபிராவார் .

அதாகிறது  , இந்த விஷயம் தொடர்பான முழுமையான அறிவும், அவ்வாக்கியங்களைப் பற்றிய முழுமையான புரிதலும் இருத்தல் , இரண்டாவது நபரின்(தேவபந்த் முன்னோடிகளின் அபிமானி அல்லது அவர்களை ஏற்றுக் கொண்டவர் ) மீது குப்ருடைய தீர்ப்பு வழங்குவதற்கு தேவையான நிபந்தனையாகும் .

 நபிகள் நாயகம்   அவர்களின் காலத்தில் இருந்து தொடங்கி அன்னாரின் தோழர் பெருமக்களான சஹாபாக்கள் , மற்றும்  அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பெருமக்களான தாபயீன்கள் , மற்றும் தப்ஸீர் ,ஹதீத் ,பிக்ஹ் ,தஸவ்வுப் , ஸீரா மற்றும் தாரீக் நூற்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளவையே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை கோட்பாடுகளும் ,செயல்பாடுகளும்  ஆகும் .

இந்திய துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை வட நாட்டில் பிறங்கி மஹால் ,லக்னோ ,கைராபாத் , பதாயூன் மற்றும் பரேலி உலமாக்களின் பேச்சுகளும் ,எழுத்தும் மேற்குறிப்பிட்ட இந்த நம்பிக்கையின் தொகுப்பிற்கு இணங்க உள்ளவை .

இத்தகைய உலமாக்கள்  தான் ,இஸ்லாமிய உலமாக்களின் உண்மையான வாரிசுகளான , ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها அவர்கள்(மறைவு  -ஹிஜ்ரி 1052) ,சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها அவர்கள் (மறைவு-ஹிஜ்ரி 1239) ஆகியோரின் போதனைகள் மற்றும் கருத்துக்களின் உண்மையான சார்பாளர்கள் .

அவர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளில் முரண்படுகின்ற புதிய யோசனைகளை  அவர்கள் ஏற்கவோ அல்லது தணிக்கை செய்யவோ இல்லை . தங்களின் முன்னோடிகளால்  முன்வைக்கப்பட்ட மற்றும் பிரசுரிக்கப்பட்ட கோட்பாட்டை அவர்கள் சிரத்தையோடு சமரசம் செய்யாமல்  கடைப்பிடிக்கிறார்கள். இதை ஒரு விலைமதிப்பற்ற பரிசாக கருதுவதுடன் , தங்களின் இரட்சிப்புக்கும் ,ஏனைய இஸ்லாமியரின் இரட்சிப்புக்கும் இதுவே பாதை என்று கருதுகின்றார்கள் .

இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி  رضي الله عنها அவர்களின் நெருங்கிய பிரதிநிதியான வ்லானா நயீமுத்தீன் முராதாபாதி அவர்கள் எழுதுகின்றார்கள் , " ஸுன்னி என்பவர் , மா அன அலைஹி வ அஸ்ஹாபிஹி , என்பதற்கு வாழும் உதாரணமாக இருப்பவர் ஆகும் . அவர் குலபாயே ராஷிதீன்கள் ,மார்க்கத்தின் இமாம்கள்  (பிக்ஹ் மற்றும் தஸவ்வுப் ), மற்றும்  பிந்தைய உலமாக்களில் ஷைகு ஷாஹ்அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها , மலிக்குள் உலமா பஹ்ருல் உலூம்  மவ்லானா அப்துல் அலி பிராங்கி மஹாலி رضي الله عنها , மவ்லானா பஜ்லே ஹக் கைராபதி رضي الله عنها , மவ்லானா பஜ்லே பதாயூனி رضي الله عنها , முப்தி இர்ஷாத் ஹுசைன் ராம்பூரி رضي الله عنها , முப்தி ஷாஹ் அஹ்மத் ரிழா கான் பரேலி رضي الله عنها  ஆகியோரின் கொள்கையின்படி இருப்பவர் . "
[அல் பகீஹ் - பக்கம் 9, அம்ரித்ஸர் , 21 ஆகஸ்ட் , 1925]

இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி  رضي الله عنها அவர்கள் - அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் பிற உலமாக்கள் போன்று ,முஸ்லிம்கள் தமது அகீதாவில் உறுதியானவர்களாகவும் , தமது சமூக நிலைப்பாடுகளில் சிறந்து விளங்கவும் அறிவுறுத்தியுள்ளனர் .
இவை சிறு புத்தகங்களாக எழுதப்பட்டுள்ளன .பின்வருபவை அன்னாரின் பத்வாக்களின் பாடங்கள் ஆகும் ;

- ஷரீயத் மட்டுமே இறுதியான சட்டமாகும் , முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயமானதும் ஆகும் .

- பித்அத்தை விட்டும் விலகி இருப்பது மிகவும் முக்கியமானது 

- அறிவில்லாத ஓர் ஸுபி , செயற்பாடற்ற ஷெய்கும் ஷைத்தானின் பரிகாசம் 

- குப்பார்களை பின்பற்றுவதும் ,வழிகேடர்களுடன் உறவாடுவதும் ,ஹிந்துக்களின் பண்டிகைகளில் பங்கெடுப்பதும்  தடுக்கப்பட்டுள்ளது  .

- அல்லாஹ் அல்லாதவற்றிக்கு வழிபாடு செய்யும் எண்ணத்துடன் ஸுஜூது செய்வது ஷிர்க் , சங்கை செய்யும் பொருட்டு ஸுஜூது
 (سجده تعظيم يا تحيت)செய்தால் அது ஹராம் .

- சக முஸ்லிம்களை கேவலப்படுத்தி ,அவ்ர்களைக் காட்டிலும் தன்னை மேன்மையானவராகக் காட்டிக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது .

- ஷியாக்கள் முஹர்ரம் மாதத்தில் வைக்கும் படிமவியலும் (தாஜியா) ,அவற்றை சங்கை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது .

- இசைக் கருவிகளுடன் கூடிய கவ்வாலி (ஸமா ) தடை செய்யப்பட்டுள்ளது .

-  இஸ்லாமிய பெண்கள் ஜியாரத்திற்காக(வலிமார்களின் மகாம்களுக்குச் செல்வது ) பயணம் செய்வது அனுமதிக்கப் படவில்லை .

- உயிருள்ளவற்றின் படங்கள் வரைவதற்கு அனுமதி இல்லை .

- ஸலவாத்   என்பதை சுருக்கி   ஸாத் லாம் ஐன் மீம் என்று எழுதுவதற்கு அனுமதி இல்லை .

- மாதிரி கபுறுகளை (அடிப்படையோ ,ஆதாரமோ இல்லாதது ,மக்களிடையே வாய் வழி பரவியது  ) ஜியாரத் செய்வது கூடாது .

ஈசாலே சவாப் என்ற எண்ணத்துடன்,  ஏழைகளுக்கும் ,தேவையுள்ளவர்களுக்கும் உணவளிப்பது அனுமதிக்கப்பட்டது . எனினும் செல்வதர்களைக் கூட அழைத்து விருந்து உபச்சாரங்கள் போல் நடத்துவதற்கு அனுமதி இல்லை .

மேலதிக விபரங்களுக்கு அல்லாமா யாஸீன் அக்தர் மிஸ்பாஹி அவர்கள் எழுதிய 'இமாம் அஹ்மத் ரிழா அவ்ர் ரத்தே பித்அத் ஒ முன்கராத் '  என்னும் நூலை காணவும் .

ஸவாத் அல் ஆஜம் என்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை ஒட்டியே அன்னாரது நம்பிக்கைகள் இருந்தன ; பதாயூன் ,கைராபாத் , பரேலி உலமாக்கள் ,மஹ்ரேரா ஷரீப் ,கிச்சவ்சா ஷரீப் மஷாயிகுமார்களின் நம்பிக்கைகள் பின்வரும் செயல்கள் ,கொள்கைகள் அனுமதிக்கப்பட்டது என்பது  போன்றே இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி  رضي الله عنها அவர்களது நம்பிக்கைகள் இருந்தன .

- அன்பியாக்கள் மற்றும் வலிமார்களின் தவஸ்ஸுல் அனுமதிக்கப் பட்டதாகும் .

- அன்பியாக்கள் மற்றும் வலிமார்களின் நினைவாக உள்ள பொருட்களை (ஆஸார் ஷரீப் ) சங்கை செய்வது அனுமதிக்கப்பட்டது .

-  வலிமார்களின் மகாம்களை தவஸ்ஸுலின் எண்ணத்துடன் ஜியாரத் செய்வது அனுமதிக்கப்பட்டது  .

- அனாச்சரங்கள் , அனுமதியற்ற செயல்களை விட்டும் அகன்ற வலிமார்களின் உரூஸ் நிகழ்வுகளை நடத்துவது அனுமதிக்கப்பட்டது .

- பெருமானார் கண்மணி நாயகம்    அவர்களின் மீலாத் ,மவ்லித் மஜ்லிஸ்கள் நடத்துவதும் ,அவற்றில் கியாமில் எழுந்து நிற்பதும் அனுமதிக்கப்பட்டது .

- இறந்தவர்களுக்கு நன்மைகளை எத்தி வைக்கும் பாத்திஹா மற்றும் ஈசாலே சவாப் அனுமதிக்கப்பட்டது .

இந்த அமல்கள் நமது முன்னோடிகளால் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளன . இன்றும் உலகெங்கிலும் உள்ள 90% முஸ்லிகளால் இந்த அமல்கள்  செயற்படுத்தப்பட்டு வருகின்றன .


Mafaheem Yajib an Tusahhaha - Arabic

Mafaheem Yajib an Tusahhaha  -English


தற்காலத்தில் ஹிஜாஸ் மாகாணத்தில் வாழ்ந்து வந்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்த ,  அஷ்ஷைகு ஸெய்யத் முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கி  அவர்கள் எழுதி அரபியில் வெளிவந்த நூல் , 'மபாஹீம் யஜிப் அல் துசஹ்ஹஹா '  [முதல் பதிப்பு  ,1985,  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நடைமுறைகளை விரிவான விளக்கமாக எடுத்துக்காட்டுகளும் ,ஆராய்ச்சியும் கொண்ட நூலாகும் . சம காலத்தின் பல அரபுலக மற்றும் ஆப்பிரிக்க ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்கலால் அங்கீகரிக்கப்பட்ட நூலாகும் . அவர்களில் பெரும்பாலானோர்  'ராப்தா அல் ஆலமி இஸ்லாமி' , மக்கா வின் அங்கத்தினர் ஆவர் .  இந்நூல் இந்தியா ,பாகிஸ்தானில் உர்துவில் 'இஸ்லாஹே   பிக்ர் அவ்ர் இத்திக்காத் ' என்னும் பெயரில்  மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது .இந்நூல் "Notions That Must Be Corrected"  ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது .

ஸெய்யித் முஹம்மத் பாரூக் காதிரி ,இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்களது தசவ்வுப் உடைய நூலான 'அன்பாஸ் அல் ஆரிபீன் ' நூலின் உர்து மொழிபெயர்ப்பாளர் , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரின் நடைமுறைகள் குறித்து எழுதுகின்றார்கள் ,
' எண்ணிப் பாருங்கள் ! என்ன ஷாஹ் அப்துர் ரஹீம் رضي الله عنها அவர்கள் ,இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها  அவர்கள் , சிராஜுல் ஹிந்த்  ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்கள் ஆகியோர் எல்லாம் பரேல்விகளா ???

இமாம் ஷாஹ் அஹ்மத் ரிழா கான் பரேல்வி  رضي الله عنها அவர்களும் ,  தாருல் உலூம் தேவபந்த் மத்ரசாவும் இந்த பிரச்சனைகள் உண்டான பொழுது இருந்திருக்கவே இல்லை . 

முரண்பாடு என்னவென்றால் இந்திய துணைக்கண்டத்தில் இருந்த அமைதியான சூழலை சீரழித்தது, துரதிருஷ்டவசமாக இந்த முக்கியத்துவம் நிறைந்த குடும்பத்தைச் சார்ந்த நபர் - இஸ்மாயில் திஹ்லவி மற்றும் அவனது நூல் தக்வியத்துள் ஈமான் . அவரது சிந்தனைகள் ஏற்றுக் கொள்ள இயலாதது . அவர் ஒரு விசித்திரமான யோசனையின் பால்  சென்றார். அவரது அழைப்பின் வழிமுறை போர்க்களம் போன்று  இருந்தது.

நான் அவரது நூல் தக்வியத்துள் ஈமானுக்கு ,அந்த நூல் வெளிவந்த உடன் அதற்கு மறுப்பாக பல்வேறு மொழிகளில் 250 நூற்களின் பட்டியலை நான் கண்டுள்ளேன் . இதன் மூலம் அந்த நூலுக்கு இஸ்லாமிய உலமாக்களும் ,பாமரர்களும் எவ்வாறான எதிர்வினை ஆற்றினார்கள் என்பது விளங்கும் .

நம்மிடம் எல்லா உலமாக்களும் ,ஸூபியாக்களும் ,பாமர இஸ்லாமியரும் குப்ரிலும் ,ஷிர்க்கிலும் ,பித்அத்திலும் இருந்தனர் என்றும் இஸ்மாயில் திஹ்லவி ஒட்டுமொத்த தேசத்திற்கும் அறிவுபுகட்டியதாகவும் , முதன் முதலில் இந்திய முஸ்லிம்களை உண்மையான தவ்ஹீதை  (!) அறிமுகப்படுத்தியதாகவும் காரணமாவார் என்று கூறுவதற்கு எந்த ஆணித்தரமான ஆதாரமும் இல்லை .

சொல்லப் போனால் ,ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها,ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنهاமற்றும் ஷாஹ் முஹம்மது இஸ்மாயில் திஹ்லவி ஆகியோருக்கிடையே இருந்த கால வேறுபாடு என்பது என்ன ? வெகு சில ஆண்டுகளே ! 

என்ன ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டமும் இந்த குறுகிய காலத்தில் ஷிர்க்கிலும் குப்ரிலும் மூழ்கி விட்டதா ???

அவ்வாறு குப்ரிலும் ஷிர்க்கிலும் தான் மூழ்கி விட்டதென்றால் , ஹக்கீமுல் உம்மா ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها மற்றும் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها ஆகியோர் இஸ்மாயில் திஹ்லவியைப் போல் அத்தகைய  கடுமையான சொல்லாடலை பயன் படுத்தவில்லை ???

நிதர்சனமான உண்மை என்னவென்றால் , ஸவாதே ஆஜம் என்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையை விட்டு தவறி சென்று முதன் முதலில் இந்திய துணைக்கண்டத்தில் குரல் எழுப்பியவர் இஸ்மாயில் திஹ்லவி . நிச்சயமாக இத்தகைய ஒரு அழைப்பு நஜ்தில் தோன்றிய முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி அல் தமீமியின் அழைப்பை ஒத்து இருக்குமே அன்றி ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنها  அவர்களின் அழைப்புப் பணி போன்று அல்ல !   
Anfas al-Arifeen

[ நூல்- அன்பாஸ் அல் ஆரிபீன் ,பக்கம் 18-19 ,மக்தபா பலாஹ் , தேவ் பந்த் ]

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை பாதுகாக்கும் இயக்கமாகவும் , கண்மணி நாயகம் ﷺ அவர்களின் கண்ணியத்தை முஸ்லிம்களின் இதயத்தில் நிலைநிறுத்தும் காரியத்தை செயலாற்றுவதில் பங்கு பெற்றோரில் முக்கியமானவர்கள்  கைராபாத் ,பதாயூன் மற்றும் பரேலியைச் சார்ந்த உலமாக்களாகும் .


இந்த இயக்கம் இந்தியாவில் தோன்றிய வஹாபிய இயக்கங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றது . இதில் பெரும் பங்காற்றியவர்கள் இமாமே அஹ்லுஸ் ஸுன்னாஹ் இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنها  அவர்கள் . 

அன்னார் தமது மகத்தான அறிவுத் திறமையாலும் , சிறந்த தலைமைப் பண்பின் காரணமாகவும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகள் ,இமாம்கள் ஆகியோரின் கொள்கைகள் போற்றிப் பாதுகாக்கப்பட பாடுபட்டனர்.  















  
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment