Sunday, 15 January 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 3



மவ்லானா செய்யித் அஹ்மத் ரஜா பிஜ்நோரி காசிமி அவர்கள் கூறுகின்றார்கள் ,

"வெட்கக்கேடான விஷயம் என்னெவெனில் இந்த புத்தகம் [தக்வியத்துள் ஈமான் ] காரணமானாக சுமார் 20 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய முஸ்லிம்களில் ,தொண்ணூறு சதவீதம் ஹனபிக்கள் , இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு போனார்கள் "
Anwarul Bari


[நூல் -அன்வாருல் பாரி , பக்கம் 107, நஸீருல் உலூம் , பஜ்னுர் ]

மவ்லானா அபுல் கலாம் ஆசாத் எழுதுகின்றார்கள் ,

"மவ்லானா இஸ்மாயில் திஹ்லவி  மவ்லானா முனவ்வருத்தீன்அவர்களின் பள்ளித் தோழர் . ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் மறைவுக்குப் பின் ,இஸ்மாயில் திஹ்லவி எழுதிய 'தக்வியத்துள் ஈமான் ' மற்றும் 'ஜிலாஉல் ஐநைன்' நூற்களின் மூலம் அவரது கொள்கைகள் நிலமெங்கும் பரவின .அந்த கொள்கைகளை எதிர்த்து உலமாக்கள் கிளர்ந்து எழுந்தனர் .

இந்த நூற்களை அதிகம் எதிர்த்த நபர் மவுலானா முனவ்வருத்தீன் .அவர் இதற்கு எதிராக பல நூற்களை எழுதினார் .இறுதியாக ஹிஜ்ரி 1240ல் பிரசித்தி பெற்ற அந்த விவாதம் ஜாமியா மஸ்ஜித் ,டில்லியில் நடைபெற்றது .இந்தியாவில் உள்ள அனைத்து உலமாக்களிடமும் பத்வா கோரப்பட்டது ,பின்னர் ஹரமைன் ஷரீபிலும் இருந்து பத்வா பெறப்பட்டது .அவரின் எழுத்துக்களில் இருந்து புலனாகின்றது என்னவென்றால் மவ்லானா முனவ்வருத்தீன் இஸ்மாயில் திஹ்லவியையும் அவரது மருமகன் அப்துல் ஹையையும் சமாதானம் செய்ய முயற்சித்தார் என்பதும் ,அவர்களை சம்மதிக்க வைக்கவும் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார் .

எனினும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் அடைந்த  பின்னர் தமது கொள்கைகளை விவாதம் செய்தும் ,மற்ற உலமாக்களுக்கு மறுப்பு வழங்குமாறும் நிர்பந்திக்கப்பட்டார் . தில்லியின் ஜாமிஆ மஸ்ஜிதில் மிகப் பிரசித்தி பெற்ற அந்த விவாதம் நடைபெற்றது . 
ஒரு பக்கம் இஸ்மாயில் திஹ்லவியும் அவரது மருமகன் மவ்லவி அப்துல் ஹை மற்றோரு பக்கம் மவ்லனா முனவ்வருத்தீன் மற்றும் தில்லியின் அனைத்து உலமாக்களும் .

[நூல் - ஆஸாத் கீ கஹானி ,பக்கம் 48,மக்தபா கலீல் ,உருது பஜார் ,லாகூர் ]


மவ்லானா மக்சுஸுல்லாஹ் பின் ஷாஹ் ரபிய்யுத்தீன் திஹ்லவி , மவ்லானா முஹம்மது மூஸா பின் ஷாஹ்  ரபிய்யுத்தீன் திஹ்லவி , மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ),

முப்தி சத்ருத்தீன் ஆஸுர்தாஹ் (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ), மவ்லானா முஹம்மது பஜ்லே ரஸூல் உத்மானி பதாயூனி , மவ்லானா அஹ்மத் ஸயீத் நக்ஷ்பந்தி திஹ்லவி , மவ்லானா ரஷீத்துத்தீன் திஹ்லவி ,மவ்லானா கைருத்தீன் தெஹ்லவி , ஹக்கீம் சாதிக் அலி கான் திஹ்லவி (மஸீஹுல் முல்க் ஹக்கீம் அஜ்மல் கான் அவர்களின் பாட்டனார் ),

மவ்லானா செய்யித் அஷ்ரப் குல்ஷன் ஆபாதி , மவ்லானா முக்லீசூர் ரஹ்மான் சட்கமி , மவ்லானா கலந்தர் அலி ஜுபைரி பானிபதி  போன்ற எண்ணற்ற அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின்  சத்திய உலமாக்கள் இந்த புதிய வஹாபிய கொள்கைகளுக்கும் ,கோட்பாடுகளுக்கும் எதிராக  மறுப்புரைகளை தமது எழுத்தின் மூலமும் ,சொற்பொழிவின் மூலமும் வெளிப்படுத்தினர் .
அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் கொள்கைகளை பாதுகாக்க தமது மார்க்க அறிவினாலும் , செயலாலும்  இந்த புனித ஜிஹாதில்  பங்கெடுத்தனர் .

அல்லாமா பஜ்லே ரஸூல் உத்மானி பதாயூனி அவர்கள் "தக்வியத்துள் ஈமான் " பற்றி ஏழு கேள்விகளை ஹழ்ரத் ஷாஹ் மக்சுஸுல்லாஹ் பின் ஷாஹ் ரபீயுத்தீன் பின் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடம் சமர்பித்தார்கள் . இந்த கேள்வி -பதில்   ஒரு நூல் தொகுப்பாக " தஹ்கீக் அல் ஹகீகா " என்னும் பெயரில் ஹிஜ்ரி 1267ல் பம்பாயில் இருந்து வெளிவந்தது .

அவற்றில் மூன்றின் பதில்கள் பின்வருமாறு :

ஹழ்ரத் ஷாஹ் மக்சுஸுல்லாஹ் திஹ்லவி அவர்கள் எழுதுகிறார்கள் ;

" தக்வியத்துள் ஈமான் பற்றிய முதல் கேள்வியின் பதிலானது - நான் அதை தஃப்பியத்துள் ஈமான் ( அரபு எழுத்து faa கொண்டு )    - நான் அதனை மறுத்து "முஈதுல் ஈமான் " என்னும் பெயரில் எழுதிய தனிக்கட்டுரையே ஆகும் .

இஸ்மாயிலின் நூல் எமது குடும்பத்தினரின் பாரம்பரியத்திற்கு எதிரானது என்பது மட்டுமில்லாமல் ,நபிமார்கள் மற்றும் ரஸுல்மார்கள் காட்டித் தந்த தவ்ஹீதுக்கே எதிரானது ! ஏனெனில் நபிமார்களும் ,ரஸுல்மார்களும் வந்ததன் நோக்கம் மக்களுக்கு தவ்ஹீதை கற்றுத் தந்து அதன் வழியில் நடத்திக் காட்டவே ஆகும் .

இந்த புத்தகத்தில் தவ்ஹீதின் அடையாளமோ அல்லது நபிமார்களின் ஸுன்னாஹ்வின் அடையாளமோ இல்லை . எதையெல்லாம் இவர்கள் ஷிர்க் ,பித்அத் என்று அடையாளமிட்டு மக்களுக்கு கற்றுத் தருகிறார்களோ ,அவை நபிமார்களோ அல்லது அவர்களைப்  பின்பற்றியவர்களாலோ அவ்வாறு சொல்லப்படவில்லை . இதற்கு மாற்றாக அவர்களிடம் ஆதாரம் இருந்தால் ,அதனை நம்மிடம் தெரிவிக்க அவர்களின் ஆதரவாளர்களுக்கு கூறுங்கள் .

நான்காவது கேள்வியின் விடை ,

வஹாபியின் (அப்துல் வஹாப் நஜ்தி தமீமி ) நூல் உரை என்றால் ,இஸ்மாயிலின் நூல் அதன் விளக்கவுரை போல் உள்ளது . 

ஐந்தாவது கேள்வியின் விடை ,

ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்கள் பார்வை குறைபாடு காரணமாக பலவீனப்பட்டு இருந்தார்கள் . இஸ்மாயிலின் நூலைப் பற்றி கேள்விப் பட்ட அவர்கள் ,தாம் மட்டும் சுகவீனமாக இல்லையென்றால் ,ராபிழி ஷியாக்களுக்கு எதிராக எழுதிய "துஹ்பா இத்னா அஷரியா " என்னும்   மறுப்புரை போல் இஸ்மாயிலின் நூலுக்கும் மறுப்பு எழுதியிருப்பேன் என்றார்கள் .

அல்லாஹுதாலாவின் மாபெரும் கிருபையினால் நான் எழுதிய மறுப்புரை விளக்கவுரை நூலுக்கு(தஃப்பியத்துள் ஈமான்) மட்டுமல்லாது அதன் உரை நூலுக்கும்(கிதாபுத் தவ்ஹீத் ) மறுப்பாக அமைந்தது .


Anwar-e-Aftab-e-Sadaqat
[ஆதாரம்  - நூல்  : அன்வார் ஏ அப்தாப் ஏ ஸதகாத் , பக்கம் 617-620, கரீம் ப்ரெஸ் ,லாகூர் , முஹம்மத் காஜி பஜ்லே அஹ்மத் லூதியான்வி நக்சபந்தி முஜத்திதி ] 

இனி நாம் இஸ்மாயில் திஹ்லவியின் சீர்திருத்த இயல்பையும் (?) ,அவரின் பகுத்தறியும் தன்மையையும்(?) பின்வரும் சம்பவம் மூலம் காண்போம் ;

மவ்லவி அஷ்ரப் அலி தானவி எழுதுகின்றார் ,

" ஷாஹ் இஷ்ஹாக் கூறுகின்றார் , மவ்லவி இஸ்மாயில் 'ரபா யாதைன் '  (சலாஹ்வில் கைகளை உயர்த்துவது ) என்னும் செயலை செய்ய ஆரம்பித்த பொழுது , ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணாக்கர் மவ்லவி முஹம்மது அலி ,மவ்லவி அஹ்மது அலி ஆகியோர் அன்னாரைச் சந்தித்து இதன் காரணமாக தேவையில்லாத குழப்பம் உண்டாகுமென்பதால் , மவ்லவி இஸ்மாயிலை எச்சரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் .

ஷாஹ்  அப்துல் அஜீஸ் அவர்கள் தமது வயோதிகம் மற்றும் பலவீனம்  காரணமாக தாம் விவாதங்களில் கலந்து கொள்வது இல்லை என்று பதில் அளித்தார்கள் .

ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்த பொழுது ,அவரிடம் இஸ்மாயில் திஹ்லவியை ,பொது மக்களுக்கு குழப்பம் விளைவிப்பதால்  'ரபா யாதைன் '  என்னும் செயலை விட்டுவிடும்படி அறிவுறுத்துமாறு சொல்லப்பட்டது .ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் தாம் இஸ்மாயிலுக்கு அறிவுறுத்த தயாராக உள்ளதாகவும் ,எனினும் அவர் கேட்க மாட்டார் என்று தயங்கினார் . மேலும் அந்த செயலுக்கு ஹதீதைக் கொண்டு எதிர்ப்பார் என்றும் கூறினார் .

அதனால் ,ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் மவ்லவி முஹம்மது யாகூப் அவர்களிடம்   இஸ்மாயில் திஹ்லவியை ,பொது மக்களுக்கு குழப்பம் விளைவிப்பதால்  'ரபா யாதைன் '  என்னும் செயலை விட்டுவிடும்படி அறிவுறுத்துமாறு சொன்னார்கள் . மவ்லவி யாகூப் அவர்கள் மவ்லவி இஸ்மாயிலிடம் இது பற்றி கூறிய பொழுது , அவர் ,'மக்களிடம் குழப்பம் உண்டாவது குறித்து வருந்தினால் ,' ஒரு மனிதர் சோதனையான காலத்தில் ஓர் ஸுன்னாஹ்வை உயிர்பித்தால் , அவருக்கு நூறு ஷஹீதுகளின் அந்தஸ்த்து கிடைக்கும் ' என்ற ஹதீதுக்கு என்ன  விளக்கம் தருவீர்கள் என்று பதில் அளித்தார் . கைவிடப்பட்ட ஓர் ஸுன்னாஹ்வை உயிர்ப்பிக்கும் பொழுது பொதுமக்களிடம் எதிர்ப்பு வரத்தான் செய்யும் என்றார் . 

மவ்லவி யாகூப் இஸ்மாயிலின் பதிலை ஷாஹ் அப்துல் காதிர் அவர்களிடம் கூறினார் . அது கேட்ட ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் கூறினார்கள் , ' என்னவொரு கைசேதம் ! நாம் இஸ்மாயில் ஒரு மார்க்கம் கற்றறிந்த அறிஞர் ஆகிவிட்டார் என நினைத்தோம் . ஆனால் அவர் ஒரு (சுலபமான )ஹதீதின் பொருளைக்   விளங்காமல் உள்ளார் . அவர் குறிப்பிடும் ஹதீத் எந்த செயல் ஸுன்னாஹ்விற்கு மாறுபடுகின்றதோ அதற்குத்தான் . 'ரபா யாதைன் '  என்னும் செயலை பொறுத்தவரை நாம் ஸுன்னாஹ்விற்கு மாறாக எதையும் செய்யவில்லை . எவ்வாறு கைகளை உயர்த்துவதும் ஸுன்னாஹ்வின் அடிப்படையில் உள்ளதோ அதைப்போன்றே கைகளை உயர்த்தாமல் இருப்பதும் ஸுன்னாஹ்வின் அடிப்படையில் தான் . "


Hikayathe aulia (Arwah-e-Thalatha)


[நூல் - அன்வார் ஏ தலாதா , ஹிகாயத்  73, இம்தாதுல் குராபா , ஸஹ்ரான்பூர் , ஹிஜ்ரி 1370 , அஷ்ரப் அலி தான்வி  ]

இஸ்லாமிய கொள்கை மற்றும் பிக்ஹ் உடைய மஸாயில்களில்  இஸ்மாயில் திஹ்லவியின் தவறுகளும் ,மாற்றமான போக்கும் உலமாக்களிடையே சர்சைகளை ஏற்படுத்தின . குறிப்பாக 'இம்கான் ஏ காதிப் ' மற்றும் 'இம்கான் ஏ நசீர் ஏ முஹம்மதி ' ஆகியவை கலகத்தை ஏற்படுத்தின . 

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இந்த விஷயங்களை தெளிவாகவும் ,துல்லியமாகவும் ,விரிவாகவும் விளக்கி உள்ளனர் . 
இஸ்மாயில் திஹ்லவியின் நூலில் சர்ச்சைக்குறிய கருத்துக்களைக் கொண்ட அந்த வாசகம் பின்வருமாறு ,

"அந்த அரசனின்(அல்லாஹ்வின் ) மகிமை எப்படிபட்டதெனில் குன் (ஆகுக என்னும் கட்டளை ) என்னும் ஒரு நோடிப் பொழுதில் கோடிக்கணக்கான நபிமார்கள் , அவ்லியாக்கள் ,ஜின்கள் ,மலக்குகள் , முஹம்மது மற்றும் ஜிப்ரஈல் ஆகியோரை உருவாக்க முடியும்  "
[நூல்- தக்வியத்துள் ஈமான் ,பக்கம் 37 ]

அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ) ,இந்த சிந்தனையை ஷரியத்திற்கு மாற்றமானது என்று மறுத்தார்கள்.

அவர்கள் எழுதினார்கள் , குர்ஆன் ஹதீத் உடைய நஸ்ஸான (அறுதியான) ஆதாரங்களைக் கொண்டு கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்கள் தான் இறுதி நபி ,அவர்களுக்கு பின் நபியோ,ரசூலோ வரப்போவதில்லை . நபிகள்  நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்களைப் போல் இன்னொருவர் வருவார் என்பது சாத்தியமற்ற ஒன்று ,இன்னும் ஷரீயத் எதையெல்லாம் சாத்தியமற்ற அம்சங்கள் என்று  கூறுகின்றதோ அதில் நின்றும் உள்ளவை . நபிகள்  நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்களுக்குப் பின் ஒரு நபி வருவார் என்று நம்பிக்கை கொள்வது அல்லாஹுத்தஆலா குர்ஆனில் தான் கூறியதற்கு மாற்றமாக  ஒன்றை செய்தான் என்று அவசியப்படுத்துவது போல் ஆகும் ,அதாவது அல்லாஹுத்தஆலா பொய் உரைத்தான் என்று . பொய் உரைப்பது ஒரு குறைபாடு இன்னும் அல்லாஹுத்தஆலா குறைபாடுகளை கொண்டிருப்பது இயலாதவொன்று . இதுபற்றிய மேலதிக விவரங்களுக்கு அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி அவர்கள் எழுதிய 'தஹ்கீக் அல் பத்வா பீ இப்தால் அல் தகுவா ' என்னும் நூலைக் காணவும் .  



இந்த புத்தகம் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கைகளான 'அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம்' மற்றும் 'முஹம்மது  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்களைப் போல் இன்னொருவர் வருவது சாத்தியம்' என்ற கொள்கைகளை தெளிவாக ஆதாரங்களுடன் மறுத்து அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை நிலைநாட்டியது .
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa

இந்த விஷயங்கள் சம்பந்தமாக இஸ்மாயில் திஹ்லவி ஒரு தனிக்கட்டுரை 'யக் ரோஜா' என்னும் பெயரில் எழுதினார் .இதற்கு அவரின் மாணவர் மவ்லவி ஹைதர் அலி டோங்கி உறுதுணையாக இருந்தார் .
Yak Roza 


இதற்கு மறுப்பளிக்கும் விதமாக அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி அவர்கள் பாரசியில் எழுதிய நூல் 'இம்தினாஉன்  நசீர் ' . இந்த நூலை ஜூஅன்புரைச் சேர்ந்த அல்லாமா செய்யித் சுலைமான் அஷ்ரப் அவர்கள் (அதிபர் ,இஸ்லாமிக் சயின்ஸ்,அலிகர் பல்கலைக்கழகம்  ) 1908ல்  வெளியிட்டார்கள் .
  
    மவ்லானா அஹ்மத் ஹசன் கான்பூரி (முப்தி முஹம்மது லுத்புல்லாஹ் அலிகரி அவர்களின் மாணவர் மற்றும் ஹாஜி ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் கலீஃபா    )     இந்த தலைப்புகளில் இஸ்மாயில் திஹ்லவிக்கு மறுப்பாக எழுதிய நூல் 'தன்ஸீஹ் அல் ரஹ்மான் அன் ஷீயத் அல் காதிபி வ அல் நுக்சான்  ' .

இதே தலைப்பில் மவ்லானா ஹக்கீம் செய்யித் பரகத்  அஹ்மத் டோங்கி, இஸ்மாயில் திஹ்லவிக்கு மறுப்பாக ' அல் சம்சம் அல் காதிப் லிரா அசி அல் முப்தாரி அலல்லாஹி அல் காதிப் ' என்னும் நூலை எழுதினார் .  

முப்தி முஹம்மது அப்துல்லாஹ் டோங்கி , இஸ்மாயில் திஹ்லவிக்கு மறுப்பாக 'இஜாலாத் அல் ரகீப் பீ இம்தினாயி காதிப் அல் வாஜிப் ' என்னும் நூலை எழுதினார் .

இது போன்ற எழுத்துகளின் மூலம் இம்மக்கள் அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் என்ற வஹாபிய கொள்கையை மிகச் சிறப்பாக எதிர்த்தனர் .

இனி அக்காலத்தில் உண்டான சச்சரவுகளை பற்றிய விஷயங்களை சற்றே ஒதுக்கிவிட்டு சற்று முன்னே நகரலாம் .

மிகப் பிரபலமான நக்ஷபந்தி முஜத்திதி ஷைகும் அறிஞருமான மவுலானா அபுல் ஹசன் ஜைத் பாரூக்கி திஹ்லவி அவர்களின் தமது காலத்தில் உண்டான பிளவுகளைப் பற்றிய  கூற்று சிந்திக்கத்தக்கவை  ,

" முஜத்திதே அல் பதானி ஷைகு அஹ்மத் பாரூக்கி சிர்ஹிந்தி அவர்களின் காலம் தொட்டு ஹிஜ்ரி 1240 (1825ஆம் ஆண்டு ) வரை இந்திய முஸ்லிம்கள் இரு பிரிவாக பிளவுபட்டு இருந்தனர்  ,
                   
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ராபிழி ஷியாக்கள் 

               அதன் பின்னர் இஸ்மாயில் திஹ்லவி தோன்றினார்,
இவர் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தைவழி பேரன் . மற்றும் ஷாஹ் அப்துல் அஜீஸ் ,ஷாஹ் ரபிய்யுத்தீன் ,ஷாஹ் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரர் மகன் .  

இவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் சிந்தனைகளால் கவரப்பட்டு ,இப்னு அப்துல் வஹாபின் நூலான 'ரத்துல் இஷ்ராக்' கை வாசித்து அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் . 

இவர் 'தக்வியத்துள் ஈமான்' என்னும் நூலை உர்துவில் எழுதினார் . இந்த நூல் மார்க்க விஷயங்களில் தடங்களற்ற சுதந்திரத்தை உண்டாக்கும் காலத்தை தொடங்கி வைத்தது . சிலர் கைர் முகல்லிதுகலாயினர் ,சிலர் வஹாபிகளாயினர் ,சிலர் அஹ்லே ஹதீத் என்று தங்களை அழைத்தனர் சிலர் ஸலபிகள் என்று பிரிந்தனர் .

முஜ்தஹித் இமாக்களுக்கு மக்கள் அளித்த கண்ணியம் வெகுவாக குறைந்தது ,மார்க்க விஷயங்களில் சாதாரண  அறிவும் கற்றலும் உடையவர்கள் இமாம்களாயினர் .

மிகப்பெரும் சோகம் என்னவெனில் தவ்ஹீதின் பெயரால் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை மக்கள் நிந்தனை செய்யத் தொடங்கினர் . இது போன்ற சிதைந்த கருத்தாக்கங்கள் ஹிஜ்ரி 1240 (1825 ஆம் ஆண்டு )ரபிய்யுல் ஆகிர் மாதத்திற்கு பின் தோன்றின   . "
           
                                       Maulana Isma’il Dihlawi aur Taqwiyatul Iman
[நூல்- மவ்லானா இஸ்மாயில் திஹ்லவி அவ்ர் தக்வியத்துள் ஈமான் , பக்கம் 9, ஷாஹ் அபுல் கைர் அகாடமி ,மவுலானா அபுல் ஹசன் ஜைத் பாரூக்கி திஹ்லவி  ]


1871ஆம் ஆண்டு பதாயூனில் உள்ள ஷைக்கோபூர் என்னும் ஊரில் வைத்து ஒரு விவாதம் நடந்தது . 

முஹிப்பிர்  ரசூல் தாஜுல் புஹூல் அல்லாமா அப்துல் காதிர் காதிரி பரக்கத்தி பதாயூனி (மறைவு  1319 ஹிஜ்ரி - 1901 ஆம் ஆண்டு ) 
                                                                       மற்றும் 
மவ்லானா அமீர் அஹ்மத் பின் மவ்லவி அமீர் ஹசன் சஹசவாணி (மறைவு ஹிஜ்ரி 1306 - 1889 ஆம் ஆண்டு ) 
'அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம்' 'முஹம்மது  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்களைப் போல் இன்னொருவர் வருவது சாத்தியம்' போன்ற தலைப்புகளில் .

மவ்லானா நசீர் அஹ்மத் சஹசவாணி (மறைவு ஹிஜ்ரி 1299 - 1881 ஆம் ஆண்டு ) இந்த விவாதத்தை பதிவு செய்துள்ளார் .

[நூல் -முனாஜாரா ஏ அஹ்மதியா ,ஹிஜ்ரி 1289 பதிப்பு ]

மவ்லானா அமீர் அஹ்மத் மற்றும் மவ்லானா நசீர் அஹ்மத் இருவரும் மவ்லானா முஹம்மது அஹ்சன்  நானொத்வியிடம் சில காலம் கழித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்னு அப்பாஸ் உடைய அதரை ஆதாரமாகக் கொண்டு , அவர்கள் ஆதம் (அலைஹிஸ்ஸலாம் ) ,நூஹ்  (அலைஹிஸ்ஸலாம் ), இப்ராஹீம்  (அலைஹிஸ்ஸலாம் ),மூஸா  (அலைஹிஸ்ஸலாம் ),ஈஸா  (அலைஹிஸ்ஸலாம் ) ,முஹம்மது  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  போன்று இன்னொருவர் வருவது சாத்தியம் என்ற நம்பிக்கையோடு மட்டுமல்லாமல் அதுதான் யதார்த்தமான நிலையும் கூட என்று அவ்விருவரும் நம்பினார்கள் .

பேராசிரியர் அய்யூப் காதிரி (கராச்சி ) அவர்கள் எழுதுகின்றார்கள் ,

" முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டிய விஷயம் யாதெனில் பரேலி பதாயூனைச் சார்ந்த உலமாக்கள் ,மவ்லானா முஹம்மது அஹ்சன்  நானொத்வியின் கண்ணோட்டத்தை கடுமையாக எதிர்த்தனர் ,முரண்பட்டனர் . பரேலி உலமாக்களில் முன்னோடியாக எதிர்த்தவர்கள் மவ்லானா நகீ அலி கான் ,பதாயூன் உலமாக்களில் முன்னோடியாக எதிர்த்தவர்கள் மவ்லானா அப்துல் காதிர் ,மவ்லானா பஜ்லே ரஸூல் பதாயூனி அவர்களின் மகனார்   "

[நூல்- மவ்லானா முஹம்மது அஹ்சன்  நானொத்வி , பக்கம் 94, மஃத்பா உத்மானியா , பேராசிரியர் முஹம்மது அய்யூப் காதிரி ]

மவ்லானா அப்துல் ஹக் கைராபாதி ,மவ்லானா செய்யித் ஹுசைன் முஹத்தித் ராம்பூரி , மவ்லானா அப்துல் அலி ராம்பூரி ,முப்தி நூருந்நபி ராம்பூரி மற்றும் அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் ஏனைய உலமாக்கள் இப்னு அப்பாஸ் உடைய அதரை ,அது குர்ஆனுக்கு எதிராக உள்ளதாக நிரூபணம் செய்ததோடு அது தவறான கொள்கை என  எதிர்த்தனர் .

ஹழ்ரத் முப்தி இர்ஷாத் ஹுசைன் ராம்பூரி அதில் நம்பிக்கைக்கு கொள்வது அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் கொள்கைக்கு முரணானது என எழுதினார்கள் . ஏனெனில் 'காத்தமுன் நபிய்யீன்' என்றால் இறுதி நபி - அதாவது  முஹம்மது  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்கள் .
[நூல் - தன்பீஹ் அல் ஜிஹால் , பக்கம் 26, முப்தி  ஹாபிஸ் பக்ஷ் அனோல்வி  ]








Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 11 January 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 2

இந்திய துணிகண்டத்தில் இருந்த இஸ்லாமியரின் மூல நம்பிக்கைகள் என்ன  ?
எங்கு ,எப்பொழுது வேற்றுமை பிரிவுகள் தோன்றின ?

ஆரம்ப காலம் முதல் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை இஸ்லாமியர் ஹனபி மத்ஹபை பின்பற்றும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினராக இருந்தனர் . இந்தியாவின் கொங்கன் பகுதியிலும் தென்னிந்தியாவின் தமிழகம் மற்றும் கேரளாவில் ஷாஃபி  மத்ஹபை பின்பற்றும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினராக இருந்தனர் . சில பகுதிகளில் ராபிழி ஷியாக்கள் இருந்து வந்தனர் .

இந்திய முஸ்லீம் சமூகத்தில் கொள்கை சார்ந்த குழுக்களின் பிளவு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்டது. குறிப்பாக மத்ஹப் உடைய நான்கு இமாம்களை தக்லீது செய்வது கருத்து வேற்றுமைக்கான ஒரு முக்கிய காரணியாகவும் , தஸவ்வுப் என்னும் தரீகத்துடைய வழிமுறைகளும் ஒரு சிறிய  அளவிற்கு பிரிவின் இலக்காயின .


தக்லீதும் , தஸவ்வுபும் வழிகேடான பித்அத்கள் என்று எதிர்ப்பாளர்களால் சித்தரிக்கப்பட்டு ,இதன் காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான பல உட்பிரிவுகள்  உருவாயின.

இந்த உண்மைகளை வரலாற்றுரீதியான ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்வதற்கு , இரண்டு  மேற்கோள்கள் எடுத்துக்காட்டப்படுகின்றது .

முதலாவது ஹக்கீம் அப்துல் ஹை ரேபரேலி உடையது ,இன்னொன்று சுலைமான் நத்வி ,மவ்லவி ஷிப்லி நுஃமானி உடைய மாணவர் .

 [1] அப்துல் ஹை ரேபரேலி உடைய மேற்கோள் : 

சில அறிஞர்களின் கருத்துப்படி , பிக்ஹ் உடைய விஷயங்களில் ஓர் இமாமை தக்லீது செய்வது ஹராமும் ,அனுமதிக்கப்படாததும் ஆகும் . குர்ஆனிலும் ,சுன்னாஹ்விலும் தெளிவாக உள்ள தீர்ப்புகளை பின்பற்ற வேண்டும் ,மேலும் பிக்ஹ் உடைய விஷயங்களில் கியாஸ் ,இஜ்மாவுக்கு எந்த  பங்கும் இல்லை .

இவ்வகையான கொள்கைக் கோட்பாட்டை பின்பற்றிய அறிஞர்கள் , மவ்லானா பகீர் இலாஹாபாதி பின் யஹ்யா , மியான் நசீர் ஹுசைன் திஹ்லவி பின் ஜவ்வாத் அலி , நவாப் சித்திக் ஹசன் போபாலி மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .

இன்னுமொரு கூட்டம் தக்லீதைக் கொண்டு தீவிர எதிர்ப்பு  வாதங்களை முன்வைத்தது ,இன்னும் அவர்கள் அது தடை செய்யப்பட்ட ஒன்றென பிடிவாதம் செய்தனர் . அவர்கள் முகல்லீதீன்கள் ( இமாம்களைப் பின்பற்றுவோர் ) தங்களது நப்சின் அடிமைகள் என்றும்  அஹ்லுல் பிதாவைச் சார்ந்தவர்கள் என்றும் கூறினர் .

அவர்கள் தமது கருத்தில் எந்த அளவிற்கு கடுமையானவர்களாக இருந்தார்கள் என்றால் அவர்கள் மத்ஹப் உடைய நான்கு இமாம்களையும் சிறுமைப்படுத்தபவர்களாக இருந்தனர் ,அதிலும் குறிப்பாக இமாமுல் அஃலம் இமாம் அபூஹனீபா அவர்களின் மீது .

 இவ்வகையான கொள்கைக் கோட்பாட்டை பின்பற்றியவர்கள் மவ்லானா அப்துல் ஹக் பணாராசி பின் பஜ்லுல்லாஹ் மற்றும் அப்துல்லாஹ் சித்திக்கி இலாஹாபாதி , மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .

இவர்கள் தமது கொள்கையைப் பரப்ப எழுதிய நூற்கள் பின்வருமாறு ,

மவ்லவி  மொய்னுதீன் சிந்தி எழுதிய "திராசத்துள் லபீப் "
மவ்லவி பாகீர் இலாஹாபாதி எழுதிய "குர்ரதுல் ஐன் "
மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி எழுதிய " தன்வீருள் ஐனைன் "
மியான் நசீர் ஹுசைன் எழுதிய "மியாருள்  ஹக் "   
மவ்லவி அப்துல்லாஹ் இலாஹாபாதி எழுதிய "இஃதிசாமுஸ் ஸுன்னா "
நவாப் சித்திக் ஹசன் போபாலி எழுதிய "அல் ஜன்னாஹ் பில் உத்ஸவத்தில் ஹஸனாஹ் பிஸ் ஸுன்னாஹ் "  

ஹனபி உலமாக்களும் இருவகையினராக இருந்தார்கள் :

[i] ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் பிரகாரம் தக்லீதை ஏற்பவர்கள் . "அர்கான் ஏ அர்ப ஆ  " நூலின் ஆசிரியர் முல்லா பஹ்ருல் உலூம் மவ்லானா அப்துல் அலி பின்  முல்லா நிஜாமுத்தீன் , "அல் தலீக் அல் முமஜ்ஜத் "  நூலின் ஆசிரியர் மவ்லானா அப்துல் ஹை பிரங்கி மஹாலி பின் அப்துல் ஹலீம் .

[ii] மற்றோரு வகையான ஹனபி உலமாக்கள் தக்லீதை முழு மூச்சாகப் பின்பற்றியவர்கள் ,இன்னும் தக்லீதுக்கு எதிரான எந்த ஒரு சமரசத்தையும் ஏற்காதவர்கள் . உதாரணமாக மவ்லானா ஷைகு பஜ்லே ரஸூல் பதாயூனி , மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .
islamiuloomofunoon

[நூல்  - இஸ்லாமி உலூம் ஓ பூணூன் ஹிந்துஸ்தான் மேன் ,பக்கம் 154,தாருல் முஸன்னிபீன் ,ஆசம்கர்ஹ் ,ஹக்கீம் அப்துல் ஹை ரே பரேலி ]  

[2] சுலைமான் நத்வி உடைய மேற்கோள் 

மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி மற்றும் மவ்லவி காசிம் நானோத்வி (தாருல் உலூம் தேவபந்தின் ஸ்தாபகர்  )ஆகியோர் ஷாஹ் அப்துல் கனி முஜத்திதியின் மிகச் சிறந்த மாணவர்கள் . இஸ்மாயில் திஹ்லவியின் மாணவர் மவ்லவி ஷவ்கத் அலி ஜூஅன்புரி . இவர்கள் பித்அத் எதிர்ப்பாளர்களாகவும்,தூய்மையான தவ்ஹீதை போதனை செய்வதாகவும் ,இன்னும் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்களாகவும் தமது கூற்றினை வெளிப்படுத்தினர் .

மவ்லவி ஷாஹ் இஷாக்கின் மாணவர் மவ்லவி நசீர் ஹுசைன் திஹ்லவி . இவரும் இவரது  ஆதரவாளர்களும் பித்அத் எதிர்ப்பாளர்களாகவும்,தூய்மையான தவ்ஹீதை போதனை செய்வதாகவும் ,இன்னும் ஹனபி மத்ஹபை பின்பற்றுவதை தவிர்ப்பவர்களாகவும் தமது கூற்றினை வெளிப்படுத்தினர் .மார்க்க சட்டங்களை நேரடியாக ஹதீத் நூற்களில் இருந்து பெற்று அதன் பிரகாரம் அமல் செய்யலாம் என்று தமது கூற்றினை வெளிப்படுத்தினர் . இந்த கூட்டத்தினர் 'அஹ்லே ஹதீத் ' என்று அழைக்கப்பட்டனர் .

மூன்றாவது வகையான உலமாக்கள் தமது பழமையான பாரம்பரியங்கள் மீது உறுதியாக நிலைத்திருந்து தம்மை 'அஹ்லுஸ் ஸுன்னாஹ் ' என்றழைத்தனர் . இந்த கூடடத்தின் தலைவர்கள் யாவரும் பதாயூன் மற்றும் பரேலியைச் சார்ந்த உலமாக்களாகும் .
Hayate Shibli

[நூல் -ஹயாதே ஷிப்லி ,பக்கம் 46 ,தாருல் முஸன்னிபீன் , ஆசம்கர்ஹ் ,சுலைமான் நத்வி ]

அப்துல் ஹை ரேபரேலி மற்றும் சுலைமான் நத்வி அகியோரைப் பொறுத்தவரை ,தக்லீதின் மீது உறுதியாக நின்று ,இஸ்லாமிய பாரம்பரியத்தை பற்றிப் பிடித்த'கூட்டம் தம்மை  "அஹ்லுஸ் ஸுன்னாஹ் " என்றழைத்தனர் . இந்த உலமாக்கள் பெரும்பாலும் பதாயூன் மற்றும் பரேலியைச் சார்ந்தவர்கள். இன்றளவும் அவர்கள் தக்லீதை வீட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள் மற்றும்  இஸ்லாமிய பாரம்பரியத்தை  விட்டு அகலவும் மாட்டார்கள் .

                                                                        பிளவு 

இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அப்துர்ரஹ்மான் பர்வேஸ் இஸ்லாஹி மற்றும் பேராசிரியர் கலாநிதி முஹம்மது அய்யூப் காதிரி ஆகியோர் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட பிளவின் மூல ஆணிவேரை பின்வருமாறு விவரிக்கின்றனர் .

* ஹஸ்ரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மாணாக்கரில் ஒரு கூட்டம் அன்னாருடைய கொள்கையில் உறுதியாக இருந்து ஷரீயத் மாற்றமான விஷயங்களில்  எதையும் பொறுத்துக்கொள்ள இயலாதவர்களாக இருந்தனர் .இன்னொரு கூட்டம் தக்லீதை மறுக்குமாறும் ,இஜ்திகாதை ஏற்குமாறும் அறைகூவலிட்டது . இவ்வாறு மெல்ல மெல்ல எனினும் உறுதியாக இவ்விருவரிடையே சில விஷயங்களில் கொள்கை பிரிவுகள் உண்டாயின .

[நூல்- முப்தி சத்ருத்தீன் ஆஸுர்தாஹ் ,பக்கம் 138,மக்தபா ஜாமா ,அப்துர்ரஹ்மான் பர்வேஸ் இஸ்லாஹி ]

* அவாத் நகரம் மிகச் சிறந்த சிந்தனையாளர்களை உருவாக்கியது .அவர்களுள் மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி அவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள் . தமது தந்தையார் பஜ்லே இமாம் அவர்களிடம் மட்டுமல்லாது ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து அவர் கல்வி கற்றார் .

எனினும் அவர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி மற்றும் ஷாஹ் இஷ்ஹாக் ஆகியோரின் பிழையான கொள்கைகளை எதிர்த்து தமது பாரம்பரிய இஸ்லாமிய மரபுகளின் மீது உறுதியாக நின்றார் .

மவ்லானா மஹபூப் அலி திஹ்லவி ( ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மாணாவர் ) அவர்களும் அஹ்லுஸ் ஸூன்னாஹ் கொள்கையைச் சார்ந்தவர் தான் .மவ்லானா பஜ்லே ஹக் மற்றும் மவ்லானா மஹபூப் அலி திஹ்லவி ஆகியோர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர் . இவர்களுக்கு உறுதுணையாக பரேலி ,பதாயூனைச் சார்ந்த உலமாக்கள் நின்றனர் .

[நூல்- உருது ரோஜனமா ,உருது மேன் மத்ஹபி அதப் ,பக்கம் 55, டிசம்பர் 1995 ]

 மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி மற்றும் முஹம்மது ஜாபார் தாநேசரி ஆகியோரின் கருத்துக்கள் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதோடு சரியான முடிவை எத்துவதற்கு அனுகூலமாயிருக்கின்றன .

* நான் இந்தியாவில் இருந்த காலத்தில் [ஹிஜ்ரி 1280- 1864ஆம் ஆண்டு ],முழு பஞ்சாபிலும் வஹாபிய கொள்கையை பின்பற்றுவோர் பத்து நபர்கள் கூட இருக்க மாட்டார்கள் என நம்புகின்றேன் .இப்பொழுது[1302 ஹிஜ்ரி - 1884ஆம் ஆண்டு ] ஒவ்வொரு ஊரிலும் .ஒவ்வொரு நகரிலும் நான்கில் ஒரு'நபர் இஸ்மாயில் திஹ்லவியின் கொள்கையைப் பின்பற்றும் வஹாபியாக உள்ளார் .

[நூல் - தவாரிக் ஏ அஜீபா ,பக்கம் 81, சங் மெயில் பப்ளிகேஷன் , லாகூர் ,முஹம்மது ஜாபார் தாநேசரி ]

* அமிர்தசரில் முஸ்லிம் ,முஸ்லிமல்லாதோரின் எண்ணிக்கை சமமாக இருந்தது .எண்பது வருடம் முன்பு ,எல்லா இஸ்லாமியரும் இன்று 'ஹனபி பரேல்வி ' எனப்படும் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர் .

[நூல்- ஷமா தவ்ஹீத் ,பக்கம் 4,மக்தபா தானாயியா ,சர்கோதா ,பஞ்சாப் ,தனாவுல்லாஹ்  அம்ரத்சரி ]

மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி 'மஜல்லா அஹ்லே ஹதீத் ' 
பத்திரிக்கையின் ஆசிரியர் 1973ல்  கூறுகின்றார் , தம்மை பொறுத்தவரை ,165 ஆண்டுகளுக்கு முன்பு ,பஞ்சாப் அம்ரித்சரின் இஸ்லாமிய சமூகம் ,இன்று 'பரேல்வி ' என்று அழைக்கப்படும் மக்களின் அதே கொள்கைகளைத் தான் கொண்டிருந்தனர் . இன்னும் முஹம்மது ஜாபர் தான்சேரியை பொறுத்தமட்டில் ,200 ஆண்டுகள் முன்பு வரை ஒருங்கிணைந்த பஞ்சாபில் வஹாபிகளின் எந்த அடையாளமும் இல்லை அல்லது இஸ்மாயில் தெஹ்லவியின் கொள்கைகளை பின்பற்றுவோரும் இல்லை  

சிராஜுல் ஹிந்த் ஹஸ்ரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மறைவுக்கு பின் [மறைவு - 1239 ஹிஜ்ரி - 1823ஆம் ஆண்டு ]இஸ்லாமியர் பலர் ஸுன்னி ஹனபி கொள்கையில் இருந்து பிறழ்வுபட்டு கைர் முகல்லிது எனும் மத்ஹப் மறுப்பாளர்கள் ஆயினர் . இஸ்மாயில் திஹ்லவியின் நூல் 'தக்வியத்துள் ஈமான் '  அத்தகையோரின் சிந்தனைகளை சுருக்கமாகக் காட்டியது .

தேவபந்தி பிர்காவின் ஹக்கீமும் உம்மத்' (?) அஷ்ரப் அலி தானவி தனது நூலில் இந்திய வஹாபிகள் மூல கர்த்தா இஸ்மாயில் திஹ்லவி என்ன நினைத்தார் என பின்வருமாறு எழுதுகிறார் .

"நான் இந்த நூலை எழுதியுள்ளேன் ,இன்னும் இதில் சில இடங்களில் கடுமையான சொற்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதையும் அறிவேன் ,இன்னும் சில இடங்களில் தீவிரமான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதையும் அறிவேன் . உதாரணமாக சில மறைவான ஷிர்க்கை (ஷிர்க் ஏ 
காஃபி ) உண்டாக்கும் செயல்களை நான் பகிரங்கமான ஷிர்க் (ஷிர்க் ஏ ஜாலி ) என்று பெயரிட்டுள்ளேன் . இதை கொண்டு மிகப் பெரிய சீற்றம் உண்டாகும் என்று நான் பயப்படுகின்றேன் .நான் இங்கு இருந்தால் ,இந்த கருத்துக்களை  எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு பிரகடனப்படுத்தி இருப்பேன் . எனினும் இந்த நொடியில் எனது திட்டம் ஹஜ்ஜுக்கு சென்று அதன் பின் ஜிகாத் புரிய செல்வதே .எனவே ,அடுத்த எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு இந்த கொள்கை கருத்துக்களை பரப்ப இயலாது .இதை வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த நூலை ஒரே பதிப்பில் ,இதற்கு எதிராக சீற்றம் வரும் எனும் போதிலும் எல்லாவற்றையும் பதிப்பிக்க முடிவு செய்தேன் . எனினும் இது சில காலங்களில் தணிந்துவிடும் என்று நம்புகின்றேன் "

Hikayath E Aulia

[நூல்- ஹிகாயத் ஏ அவ்லியா (அர்வாஹ் ஏ தலாதா ),பக்கம்'98,குதுப் கானா நயீமியா ,தேவ்பந்த் ,அஷ்ரப் அலி தான்வி  ]

கடுமையான சொற்கள் ஒரு எழுத்தாளனின் பழக்கமாக இருக்கலாம் . எனினும் இஸ்மாயில் திஹ்லவிக்கு ஷிர்க் ஏ காஃபி யை ஷிர்க் ஏ ஜாலி என்று பெயரிடுவதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது . 

சீற்றத்தை உண்டாக்கும் அவரது நோக்கம் நிறைவேறியது ,எனினும் பிளவுபட்ட இந்த இந்திய இஸ்லாமிய சமூகத்தின் இரணம் இன்னும் ஆறவில்லை . இதை எதுவுமே அறியாத நவீன கால தப்லீக் ஜமாத் தேவ்பந்திகள்  நாங்கள்தான்  சமூக ஒற்றுமைகாக உழைப்பவர்கள் என்பது சாத்தான் வேதம் ஓதுவது போலாகும் .


Related Posts Plugin for WordPress, Blogger...