இப்னு அப்துல் வஹாப் நஜ்தி தமது காலத்தில் எத்தகைய கொள்கையடையவனாக இருந்தான் , எவ்வாறு சத்திய உலமாக்கள் அவனை எதிர்த்தனர்,இன்னும் எத்தகைய அக்கிரமங்களை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டான் என்பதை அக்காலத்தில் மக்கா முஃப்தியாக விளங்கிய அல்லாமா அஷ்ஷைகு செய்யத் அஹ்மத் பின் ஜைனி தஹ்லான் அல் மக்கி அல் ஷாபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் எழுதிய "பித்னத்துல் வஹாபியா " என்னும் நூலை வாசிப்பவர்கள் பளிங்கு கண்ணாடி போல் விளக்கம் பெறுவர் .
தங்களையும் அஹ்லுஸ் சுன்னா எனப் போலியாக தாவா செய்யும் இந்த தப்லீக் தேவ்பந்தி ஜமாத்தின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி எழுதிய பத்வாக்களின் தொகுப்பு " பத்வா ரஷீதியா ".
இதில் பக்கம் 273ல் தமது வஹாபிய விசுவாசத்தை தெளிவாக விளக்குகிறார்
கேள்வி:
வஹாபிகள் எனப்படுவோர் யார் ? அப்துல் வஹாப் நஜ்தியின் நம்பிக்கைகள் என்ன ? அவர்எந்த மத்ஹபை சார்ந்தவர் இன்னும் எந்த மாதிரியான நபர் ? இன்னும் நஜ்தைச் சார்ந்த இம்மக்களுக்கு அஹ்லுஸ் ஸுன்னாவுக்கும் என்ன வித்தியாசம் ?
பதில் :
முஹம்மது இப்னு அப்துல் வஹாபை பின்பற்றுவோருக்கு வஹாபிகள் என்றழைக்கப்படும் ,இன்னும் அவர்களின் கொள்கைகள் மிகச் சிறந்தவை மற்றும் அவர்கள் ஹன்பலி மத்ஹபை சார்ந்தவர்கள்.எனினும் அவர் கடின சுபாவமானவர் ,அவரைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நல்லவர்கள் என்றாலும் அதில் எல்லை மீறியவர்களால் சேதமே . இன்னும் அவர்களின் எல்லா நம்பிக்கைகளும் நம்பத்தகுந்தவையே . இனி அமல்களில் உள்ள வேறுபாடு என்பது ஹனபி ,ஷாபியீ ,மாலிகி ,ஹன்பலி ஆகியவை போலதான் .
இனி இப்னு அப்துல் வஹாபின் உடன் பிறந்த சகோதரர் ஷைகு சுலைமான் இப்னு அப்துல் வஹாப் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) தமது நூல் "அஸ் சவாயிக் அல் இலாஹியா பி ரத்தில் வஹாபியா"வில் தமது இளைய சகோதரன் அப்துல் வஹாப் நஜ்தியை வழிகேடன் என்றும் ஹதீது ஷரீபில் உள்ள கர்னுஷ் ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டது இவனைத் தான் என்று குறிப்பிடுகிறார் .
இனியாவது இல்யாஸி தப்லீக் தேவ்பந்திகள் தமது வஹாபிய விசுவாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளட்டும் .
No comments :
Post a Comment