Monday, 22 August 2016

சுவர்க்க நகைகள்

தேவபந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கையாவும் மவ்லவி அஷ்ரப் அலி தானவி உடைய கொள்கையை அமுல்படுத்துவதே என்பது தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் மவ்லவி இல்யாஸின் ஆசையும் ,லட்சியமும் என்பதை பின்வாறு விளக்குகிறார் ,

"ஹஜ்ரத் மௌலானா அஷ்ரப் அலி தானவி அவர்கள் மிகப்பெரிய வேலை செய்திருக்கின்றார்கள் ,எனது மனம் விரும்புகிறது .கல்வி ,ஞானபோதனை அவர்களுடையதாகவும் ,தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்கட்டும் .ஏனேனில் இவ்வாறு அவர்களுடைய (அஷ்ரப் அலி தானவியுடைய) போதனை விரிவாகி விடும் ."

                            [நூல்:மல்பூஜாத்தே இல்யாஸ் ,பக்கம் -71,72]

இனி மவ்லவி அஷ்ரப் அலி தானவியின் வஹாபிய வழிகெட்ட கொள்கைகளை ஓர் தனி பதிவில்  இங்கு விரிவாக விளக்கி உள்ளோம் .


தமிழகத்தில் தப்லீக் ஜமாத்தை அதன் ஆரம்ப காலங்களில் நிலை நிறுத்த வேலை செய்தவர்கள் லால்பேட்டை மதரஸா நிறுவனர் அமானி ஹஸ்ரத் என்று அறியப்பட்டவர்கள் . அதே போல் தென் தமிழகத்தில் திருநெல்வேலி முன்னேற்றம் புக் டிப்போ உரிமையாளர் மவ்லவி அபுல் ஹசன் நூரி ,பேட்டை ரியாளுள் ஜினான் அரபிக் கல்லூரி ஆசிரியர் கலீலுர் ரஹ்மான் ரியாஜி ஆகியோர் அந்த வேலையை செய்தனர் .
Bahishthi Zewar

தேவபந்தி தப்லிக் ஜமாத்தினரால்  தமது பிர்காவின் 'ஹக்கீமுல் உம்மத் ' என்று அறியப்பட்ட  மவ்லவி அஷ்ரப் அலி தானவி எழுதிய நூல் 'பிஹிஷ்தி ஜேவர் '  . இந்த  நூலை திருச்சியைச் சார்ந்த தி.எஸ் .எ.ரசூல் என்பவர் தமிழில் 'சுவர்க்க நகைகள்' என  மொழிபெயர்த்து மேற்படி உலமாக்களிடம் ஒப்பம் பெற்று மவ்லவி அபுல் ஹசன் நூரி அவர்களின் முன்னேற்றம் புக் டிப்போ பதிப்பகம் மூலம் வெளியிடுகிறார் .
சுவர்க்க நகைகள்




























நூலில் ஷிர்க் ,குப்ர் ,பித் அத் சம்பந்தமான கொள்கை விளக்கம் அளிக்கும் இடத்தில் மவ்லவி அஷ்ரப் அலி தான்வி உடைய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்துக்கு மாற்றமான வஹாபிய கொள்கையை மொழி பெயர்த்து வெளியிட்டனர் .

இனி மேற்படி உலமாக்கள் ஒன்றும் அறியாத பாமரர் அல்ல .அக்காலத்தில் மார்க்க கல்வியில் சிறந்து விளங்கியவர்களாக அறியப்பட்டவர்கள் . இனி அவர்கள் இந்த வஹாபிய கொள்கைகளை இன்று உள்ள (போலி) தவ்ஹீத் ஜமாத் அப்படியே ஏற்றுக் கொள்வர் .இன்னும் சொல்லப்போனால் ஏதோ இன்று உள்ள (போலி) தவ்ஹீத் ஜமாத் , இந்த கொள்கைகளை கற்றுக் கொண்டதே இந்த தேவ் பந்த் தப்லீக் ஜமாத் உலமாக்களிடமோ என்று எண்ணுமளவு அப்படி ஓர் ஒற்றுமை . தேவ் பந்த் மஸ்லக் படி நடக்கும் சென்னையில் உள்ள காஷிஃபுல் ஹு தா மதரசா ஏன் இன்று உள்ள (போலி) தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பீ .ஜெ  விற்கு ஆரம்ப காலங்களில் ஆதரவளித்தது ஏன் என  இப்போது விளங்கும் என்று எண்ணுகின்றேன் .

சுவர்க்க நகைகள் நூல் மொழி பெயர்ப்பாளர் திருச்சியைச் சார்ந்த தி.எஸ் .எ.ரசூல் . இவரின் முழு பெயர் செய்யத் அப்துர் ரஸுல் ,இவர் தான் தப்லீக் ஜமாத்தின் அநேக கொள்கை விளக்க நூல்களை தமிழில் எழுதிய பன்னூலாசிரியர் (!) திருச்சி குலாம் ரசூல்  . இவர் பெயர் மாற்றியதன் பின்னணி நகைப்புக்குரியது  .

சுவர்க்க நகைகள் நூல் வெளிவந்ததும் தமிழ்கத்தில்  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  உலமாக்களிடம் சலசலப்பு . எனினும் நூலுக்கு ஒப்புதல் அளித்தவர் மாநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர்  என்பதால்  பல பேர் அதற்கு மறுப்பு எழுத தயங்கிய நிலையில் , காயல் பதி தந்த காமில் வலி ஷைகுனா வ முர்ஷிதுனா அல் ஆரிபுபில்லாஹ் ,அல் முஹிப்பிர்ரஸூல் அஷ்ஷாஹ் அப்துல் காதிர் ஆலிம் நூரி சூஃபி ஸித்தீக்கி காதிரியில் காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் ) அவர்கள் தாம் படித்து சனது வாங்கிய மத்ரசாவின் ஆசிரியர்கள் ஒப்புதல் வழங்கியது என்றெல்லாம் இன்றைய கால உலமாக்கள் தங்களது ஆசிரியர்களுக்கு எதிராக உண்மை பேசாது வாய் மூடி மெளனம் சாதிப்பது போல் அல்லாமல் , சிறிதும் தயங்காமல் சத்தியக் கொள்கையை நிலை நாட்ட அதற்கு மறுப்பு எழுதினார்கள் .
சுவர்க்க நகைகளா அல்ல நரக விலங்குகள்

அந்த நூல் " சுவர்க்க நகைகளா அல்ல நரக விலங்குகள் " . சுவர்க்க நகைகள் நூலுக்கு மறுப்பு ஆணித்தரமாக வழங்கி வாதிகளின் வாயை அடைத்தனர் ஸூபி ஹழ்ரத் காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் ) . அஷ்ரப் அலி தான்வியின் வஹாபிய கொள்கை பிரகாரம் சுவர்க்க நகைகள் நூலின் ஆசிரியர் அப்துர் ரசூல் எனப்பெயர் உள்ளதால் முஷ்ரிக் ஆகிப் போனார் என்று விளக்கிய பொழுது பன்னூலாசிரியர் (!) பேந்த பேந்த முழித்து தமது பெயரை குலாம் ரசூல் என்று மாற்றினார் அந்த அறிவுஜீவி  .

உர்துவில்  10 பாகங்களாக உள்ள மூல நூலை தமிழில் 25 பாகங்களாக வெளியிடுவதாக கூறிய பதிப்பக உரிமையாளர்  மவ்லவி அபுல் ஹசன் நூரி ,மறுப்பை கண்டதும் இத்துடன் முடித்துக் கொண்டார் .

  "சுவர்க்க நகைகளா அல்ல நரக விலங்குகள் " நூலை பதிவிறக்கம்செய்க 


இதில் மாபெரும் குளறுபடி என்னவென்றால் மவ்லவி அஷ்ரப் அலி தான்வி உடைய வாழ்க்கை வரலாறில் அவர் தம்மை தசவ்வுப் உடைய ஷைகாக காட்டிக் கொள்வதால் பல உலமாக்கள் மதிமயங்கி வழித்தவறிவிடுவர் .

அவர் கூறியது போன்ற கொள்கையை தசவ்வுப் உடைய மாபெரும் ஷெய்குமார்களான கவ்துல் அஃலம் அவர்களோ ,சுல்தானுல் ஆரிபீன் அவர்களோ ,குத்புல் அக்தாப் ஷாதுலி நாயகம் அவர்களோ ,குத்புல் ஹிந்த் கவாஜா நாயகம் அவர்களோ , ஷாஹ் வலியுல்லாஹ்  அவர்களோ இன்னும் உலகில் இதுவரை தோன்றிய காமிலான வலிமார்களோ ,அவ்வளவு ஏன் அவரது ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களோ கூறியதாக ஓர் வரலாற்றுப் பதிவு உண்டா ????
அவரது ஷைகு எழுதிய ஹப்த் மஸ்லா நூலைப் பற்றி இங்கு காண்க  .

மாறாக அவரது கொள்கை ஒத்துப் போவது யாருடன் இப்னு தைமிய்யா ,இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி , இஸ்மாயில் தெஹ்லவி  ஆகியோருடனும் அவரைப் பின்தொடருபவர்களுடனும் தான் .

இவரின் ஷிர்க் ,குப்ர் ,பித் அத்   கடுமையாக எதிர்க்கும் கொள்கையால் (???)  இவருக்கு வஹாபி என்ற பட்டமும் ,காபிர் பட்டமும் வழங்கியதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர் . எனினும் தமிழகத்தில் உள்ள சில போலி தரீக்காக்கள் அஷ்ரப் அலி தான்வியை வலி என்று தாவா செய்து தமது தப்லீக் தேவ்பந்தி விசுவாசத்தைக் காட்டுகின்றனர் .இனி அவர்கள் அஷ்ரப் அலி தானவி கூறியது உண்மை என ஒப்புக் கொண்டால் அவர்கள் மீது ஷிர்க் ,குப்ர்  உடைய பத்வா பாயும்  . மதில் மேல் பூனையின் நிலை தான் !

இனி இந்த நூலில் உள்ளது போல் அஷ்ரப் அலி தான்வியின் கலீபாக்கள் தமிழகத்தில் இருந்தால் அவர்கள் என்ன கொள்கை போதிப்பார்கள், என்ன தசவ்வுப் உடைய விளக்கம் அளிப்பார்கள் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது . ஏற்கனவே தமிழகத்தில் ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் ஸில்ஸிலாவை ஆரணி பாவா (???) என்று கமாலுத்தீன் பாகவி பரப்பி உள்ளார் .இஸ்மாயில் திஹ்லவியின் ஆசிரியர்  செய்யத் அஹ்மத் ரேபரேலியின் ஸில்ஸிலாவை நூரி ஷாஹ் தரீக்காவாசிகள் எனப்படுவோர்  பரப்பி வருகின்றனர் . இவர்கள் என்ன   கொள்கை,தசவ்வுப் உடைய விளக்கம்  அளித்து வருகின்றார்கள் என்பது பளிங்கு கண்ணாடி போல் விளங்குகின்றது  .


வல்லோன் அல்லாஹ் தனது ஹபீபின் பொருட்டால் காமிலான ஷெய்குமார்களைக் கொண்டு ஸவாதே ஆஜம் என்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் சத்திய கொள்கையில் நம் அனைவரையும் நிலைத்திருக்கச் செய்வானாக ! ஆமீன் ! பிஜாஹி செய்யதில் முர்சலீன்  !


Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment