Thursday, 16 April 2015

அல் முஹன்னத்- 2

தேவ்பந்திகள் தங்களது சொந்த அகீதா நூலான 'அல் முஹன்னத்' க்கு எதிராக முரண்படுகின்றனர் :

         தேவ்பந்திகளின் முன்னோடிகளில் ஒருவரான ரஷீத் அஹ்மத் கங்கோஹி இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி சரியான அகீதா உடையவர் என்கின்றார் .
மவ்லவி ரஷீத் அஹமத் கங்கோஹி எழுதுகிறார் , ' முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபைப் பின்பற்றுபவர்களுக்கு வஹாபிகள் என்று சொல்லப்படும் ,அவர்களது கொள்கைகள் மிகச் சிறந்தவை '
[நூல் - பத்வா ரஷீதியா ,பாகம் 1,பக்கம் 111]

     தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் 'அல் முஹன்னத்' எழுதிய பொழுது ( ஸுன்னி அரபுலக உலமாக்களிடம் ஒப்புதல் பெற) அவர்கள் அந்த புத்தகத்தில் இந்த விஷயத்தைக் குறிப்பிடவில்லை.

இப்பொழுது தாருல் உலூம் தேவ்பந்தின் அதிகாரப்பூர்வ பத்வா இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் அகீதாவும் அணுகுமுறையும் சரியானது என்று வந்துள்ளது .இங்கு தேவ்பந்திகள் அவர்களின் சொந்த நூலான 'அல் முஹன்னத்' துடன் முரண்படுகின்றனர் .

இது தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஸுன்னி அரபுலக உலமாக்களிடம் ஒப்புதல்  கையொப்பம் பெற வேண்டி செய்த கபட நாடகமே 'அல் முஹன்னத் ' என்பது தெளிவு !!!

தேவ்பந்தி உலமாக்களின் பார்வையில் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அல் தமீமீ :

அல் முஹன்னத் ,தேவ்பந்தி தப்லீக் உலமாக்களின் கொள்கை நூலில் பக்கம் 12,பின்வரும் கேள்வி பதில் உள்ளது :

" கேள்வி எண் 12 : முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் முஸ்லிம்களின் இரத்தம் சிந்துவதையும்,அவர்களின் உடமைகளை அபகரிப்பதையும் ,அவர்களின் கண்ணியத்தை சிதைப்பதையும் ஆகுமெனக் கருதினார் .அவர் அவர்களை விக்கிரக வணங்கிகள் என்றும் கருதினார் . தமது முன்னோடிகளிடம் ஆணவம் நிறைந்தவராகக் காணப்பட்டார் . அவரைப் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்ன ? இன்னும் அஹ்லே கிப்லா உடையோரை இறை நம்பிக்கையற்றவர் என்று அழைப்பது ஆகுமாக்கப்பட்ட செயலா ?இவ்வாறு செய்யும் நபர் இஸ்லாத்தில் முறையான பிரிவைச் சார்ந்தவரா ?


பதில் : இது விஷயத்தில் எங்களின் பார்வையானது துர்ருல்   முக்தார் எழுதியவர்  வழங்கிய தீர்ப்பே  பொருந்தும்.க்வாரிஜியாக்கள் என்னும் குழுவினர் இமாமுக்கு எதிராக போர் தொடுத்தனர் ,ஏனெனில் அவர்கள் இமாம் குப்ரின் மீது இருக்கின்றார் என்று நினைத்தனர் ,அதாவது உருவ வழிபாட்டில்,எனவே போர் தொடுப்பதை நியாயப்படுத்தினர். இதன் காரணமாக அவர்கள் நம் உயிரையும்,உடைமையையும் எடுப்பதையும் நம் பெண்களை சிறைப்பிடிப்பதையும் இஸ்லாமியச் சட்டரீதியாக ஆகுமெனக் கருதினர் .இன்னும் அவர் க்வாரிஜியாக்களைக் கலகக்காரர்கள் எனக் கருதினார்.மேலும் இமாம் க்வாரிஜியாக்கள் அவர்களை நிராகரிப்பாளர்கள் என விவரிக்கவில்லை ஏனெனில் இது புரிந்து கொள்ளுவதில் உள்ள விஷயம் எனக் கூறினார்,அது தவறான கருத்து .

  இன்னும் அல்லாமா ஷாமி புத்தகத்தின் ஓரக் குறிப்பில்,கூறியுள்ளார்கள்,
" நமது காலத்தில் நடைபெற்றது போல் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுபவர்கள் நஜ்தில் இருந்து வெளிப்பட்டு ஹரமைன் ஷரீபை கைப்பற்றினார்கள். அவர்கள் தங்களை ஹன்பலி மத்ஹபை பின்பற்றுபவர்கள் எனக் கூறினார்கள் ,எனினும் அவர்களின் நம்பிக்கை தாங்கள் மட்டுமே முஸ்லிம்கள் எனவும் தங்களுக்கு எதிரான கருத்துகள் கொண்டு தங்களைப் பின்பற்றாதோர் காபிர்கள் எனவும் கருதினர் .  எனவே அவர்கள் அஹ்லே சுன்னத் வல் ஜமாத்தினரையும் ,ஸுன்னி உலமாக்களையும் கொல்வதை நியாயப்படுத்தி கொன்றும் வந்தனர் ,எனினும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் மேற்கொண்டு முன்னேறிச் செல்வதைத் தடுத்து நிறுத்தும் வரை ".

தேவ்பந்தி மவ்லவி ஹுசைன்  அஹ்மத் சாஹிப் தாண்ட்வி மதனீ கூறுகிறார் :
' பண்பாளர்களே !  முஹம்மத் இப்னு  அப்துல்  வஹ்ஹாப் நஜ்தில் 13ஆம் நூற்றாண்டில் தோன்றினார் , இன்னும் அவர் தவறான எண்ணங்களில் பிடிபட்டிருந்ததாலும் ,தவறான கொள்கையின் காரணமாகவும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் மீது போர் தொடுத்தார் , அவர் அவர்கள் மீது தனது தீய எண்ணங்கள் கட்டாயப்படுத்த முயன்றார் ,அவர் அவர்களின் உடைமைகளைக் கைப்பற்றுவது ஷரீயத்தின் படி ஆகுமான செயலனக் கருதினார் ,அவர்களைக் கொல்வது ஆகுமெனக் கருதினார் ,இன்னும் இம்மாதிரியான செயல்கள் இறைஅன்பைப் பெற்றுத் தரும் செயலாகக் கருதினார் .அவர் ஹரம் ஷரீபைச்  சார்ந்தவர்கள் (மக்கா மற்றும் மதீனா ) மீது மிகக் குறிப்பாகவும் ஹிஜாஸ் மாகாணத்தைச் சார்ந்தவர்கள் மீது பொதுவாகவும்  கடுமையாக நடந்து கொண்டார் .அவர் முன்னோர்களில் நல்லடியார்கள் மீது மிகத் தரக் குறைவான சொற்களைப் பயன்படுத்தினார் . அவர்கள் மீது அவர் செய்த அட்டுழியங்கள் காரணமாக ,எண்ணிலடங்கா மக்கள் புனித மக்கா மதீனாவை விட்டும் விரண்டோடினர் ,இன்னும் பலர் அவரது படையினரால் ஷஹீதாக்கப்பட்டனர் .சுருக்கமாகக் கூறுவதானால் ,அவன் ஒரு கொடுங்கோலன், ஒருகிளர்ச்சியாளன்  மற்றும் ஒரு முற்றிலும் தீய நபர்.'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 42]

' முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் உலகம் முழுவதும் உள்ள மக்களும் முஸ்லிம்களும் இறை மறுப்பளார்கலாகவும் காபிர்களெனவும் கருதினார் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 44]


'அந்த நஜ்தியாக்கள்   நம்பினார்கள் ,இன்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள் , நபிமார்களின் வாழ்க்கை இவ்வுலகில் அவர்கள் வாழ்ந்த காலம் மட்டுமே . அவர்களின் மறைவுக்கு பின் அவர்களும் ஏனைய நம்பிக்கையாளர்களும் சரிசமம் என்று.'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 45]

' இந்த கூட்டம் பெருமானார் ஸல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைக் கனவில்/நினைவில் பார்ப்பதையும் அவர்களின் புனித ரவ்ழாவிற்கு ஜியாரத் செய்வதையும் கெட்ட பித்அத் என்றும் ஷரீயத்திற்கு முரணானது என்றும் கூறுகின்றனர் .இன்னும் அவர் அந்த திசையை நோக்கி பிரயாணம் செய்வதைக் கூட ஷரீயத்திற்கு முரணானது என்று கூறுகின்றார்.இன்னும் அவர்களில் சிலரின் கூற்றுப்படி,பெருமானாரின் புனித ஜியாரத் செய்யும் எண்ணம் கொண்டு பிரயாணம் செய்வது ஜினா செய்வதற்கு சமம் என்கின்றனர் .அல்லாஹ் இத்தகைய கெட்ட எண்ணங்களை விட்டும் நம்மைக் காப்பானாக ! '.
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 45]

'வஹ்ஹாபிகள் நபிமார்களுக்கு எதிராக மிகவும் ஆணவம் பிடித்த மொழிப் பிரயோகங்களைப் பயன்படுத்திகின்றனர் .இன்னும் இதை பெருமானாரிடமும் பயன் படுத்துகின்றனர் எந்த
அளவிற்கு அவர்களின் ஆணவம் சென்றுள்ளது என்றால் பெருமானாரின் அந்தஸ்து நமக்கு சரிசமமானது,அவர்களின் மூலம் சிறிதளவு நன்மை அல்லாஹ்வின் தூதை எத்தி வைக்கும் காலத்தில் கிட்டியது,அவர்களின் மறைவிற்கு பின் அவர்களைக் கொண்டு எந்த நன்மையும் இல்லை   என்கின்றனர் .
இவர்கள் இவ்வாறு எண்ணுவதால் ஷபாஅத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் பாவங்கள் மன்னிக்கப்பட இறைஞ்சுவது ஷரீயத்திற்கு முரணானது என்கின்றனர் .அவர்களின் முன்னோர்களும் இவ்வாறு பெருமானார் அவர்களின்  ஷபாஅத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் பாவங்கள் மன்னிக்கப்பட இறைஞ்சுவது ஷரீயத்திற்கு முரணானது என்கின்றனர் .(அல்லாஹ் இத்தகைய எண்ணங்களை விட்டும் நம்மைக் காப்பானாக !). எனினும் இத்தகைய எண்ணங்களை மீள்பதிவு செய்வது அனுமதிக்கப்பட்டதே , வெறுமனே குப்ரை உண்டாக்கக் கூடிய சொற்களை மீள்பதிவு செய்வது குப்ரை உண்டாக்காது .இன்னும் அவர்கள் ஒரு மனிதனின் கைத்தடி உண்டாக்கும் பயன் ஒப்பற்ற ஆளுமை பிரபஞ்சத்தின் அரசரான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ  ஸல்லம் அவர்களை விட அதிக நன்மை பயக்கும் ,ஏனெனில் ஒரு மனிதனின் கைத்தடியைக் கொண்டு ஒரு நாயிடம் இருந்து பாதுகாப்பு பெற முடியும் எனினும் பிரபஞ்சத்தின் பெருமையான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ  ஸல்லம் அவர்களால் இதைக் கூட செய்ய இயலாது '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 47]

'வஹாபிகள் மறைபொருளான சடங்குகள் மற்றும் நயமான நடைமுறைகளுக்கு எதிராக உள்ளார்கள் - தியானிப்பது ,திக்ருல்லாஹ் ,ஷைகுமார்களுக்கு பைஅத் கொடுப்பது மற்றும் மஷாயிகுமார்களுக்கு எதிராகவும் ,ஷைகுமார்களுடன் தொடர்பில் இருப்பது ,இன்னும் பனா மற்றும் நித்திய சாசுவத நிலை அடைதல் போன்ற கொள்கைகளுக்கு எதிராக உள்ளனர் .அவர்களின் கண்ணோட்டத்தில் இவை எல்லாம் எந்த விளைவும் இல்லை ,கெட்ட பித் அத் ,மற்றும் அர்த்தமற்றவை '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 59]

' வஹாபிய கொள்கையின்படி இமாம்களை தக்லீத் செய்வது பெருமானாரை நிந்தனை செய்வது ,இன்னும் அவர்கள் நான்கு இமாம்களையும் அவர்களை பின்பற்றுபவர்களையும் கேடுகெட்ட மற்றும் துன்மார்க்க வார்த்தைகளால் நிந்தனை செய்கின்றனர் .எனவே இவர்கள் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை விட்டும் வெளியேறியவர்கள், இன்னும் இந்தியாவில் இவர்களை பிரதிபலிப்பவர்களும் இந்த துஷ்ட கூட்டத்தைச் சார்ந்தவர்களே . இவர்கள் முதலில் வரும் பொழுது தங்களை ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்று கூறினாலும் இவர்கள் பெரும்பாலான விஷயங்களில் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களைப் பின் தொடர்பவர்கள் அல்ல '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 62]

'அர்  ரஹ்மானு அலல் அர்ஷிஸ் தவா என்ற குரான் வசனத்தின் மூலம் வஹாபிகள் அல்லாஹ் சிம்மாசனத்தில் அமர்ந்து உள்ளான் என்றும் அல்லாஹ் விற்கு பரிமாணங்கள் உண்டென்றும் நிரூபிக்க முயன்று  அல்லாஹ்விற்கு உருவம் உண்டென்று கூறுகின்றனர் '.
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 24]

'அரபுலகின் வஹாபிகள் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ் ! என்று கூறுவதை கடுமையாக கண்டனம் செய்கின்றனர் , இன்னும் அதன் பயன்பாட்டை மிகவும் கடுமையாக கண்டிக்கவும்  மற்றும் பரிகாசம் செய்யவும் செய்கின்றனர் ,இன்னும் இதைக் கூறும் ஹரம் ஷரீபின் மக்கள் மீது வசைமாறிப் பொழியவும் செய்கின்றனர் .'
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 65]

'இந்த கேடுகெட்ட வஹாபிகள் பெருமானார் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஸலவாத் சொல்வதைப்  பகிரங்கமாகக் கண்டனம் செய்கின்றனர் ,இன்னும் தலாயிலுல் கைராத் ,கஸீதா புர்தா ,கஸீதா ஹம்சியா ஓதுவதை வெறுத்தொதுக்கப்பட்ட மற்றும் தேவையற்ற செயல் என்று கருதுகின்றனர் '.இன்னும் அவர்கள் கஸீதா புர்தாவின் சில வரிகளை குப்ர் என்றே கருதுகின்றனர் .உதாரணமாக ;
யா அஷ்ரபுல் ஹல்கி மாலி மன் அலூஸு பிஹி சிவாக இந்த ஹுலூலில் ஹாதிசில் அமமி
(படைபினங்களில் சிறந்தவரே ! எனக்கு தங்களைத் தவிர வேறு யாருமில்லை இந்த அபாய காலங்களில் )

[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 66]

'வஹாபிகள் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கொண்டு பெற்ற அறிவைத் தவிர ,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ,அனைத்துவிதமான மறைவான மற்றும் உண்மையான அறிவை விட்டும் அற்றவர்கள் எனக் கருதுகின்றனர் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 62]

'வஹாபிகள் பிரபஞ்சத்தின் அரசரான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  பிறப்பைக் கூறுவதை மிகவும் கண்டனத்திற்குரிய மற்றும் மிக மோசமான பித் அத் எனக் கூறுகின்றனர் '
[ நூல்  - அஷ் ஷஹாபுஸ் சாகிப் ,பக்கம் 67]

அன்வர் ஷாஹ் கஷ்மீரி பைத் அல் பாரி நூலில் ,பாகம் 1ல் எழுதுகிறார் 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ஒரு மிகக் குறைந்த அளவே இல்முடைய ஒரு முட்டாள் '.

தேவ்பந்தி தப்லீக் உலமாக்களின் நூலில் வஹாபிகளைப்  பற்றி உள்ள மேற்கூறியவற்றைப் படித்த பின் தேவ்பந்த் வஹாபிகளின் அரபி மதரஸாவான தாருல் உலூம் தேவ்பந்த் ,இந்தியாவின் பத்வா வழங்கும் பிரிவில் வஹாபிகளைப் பற்றிய பத்வாவைக் கீழே காணுங்கள் !

இது மிகவும் மோசமான முனாபிக் தனம் இல்லையா என்பதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம்   .

வஹாபிகளின்  மீதுள்ள தங்களின் முஹப்பைத்தை இன்னும் எவ்வாறெல்லாம் இந்த தேவபந்தி தப்லீக் வஹாபிகள் வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் பின்வரும் ஆதாரங்களில் காணலாம் :

எனினும் வாசகர்கள் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் அரபுலக ஸுன்னி உலமாக்களிடம் 'அல் முஹன்னதில் ' என்ன கூறினார்கள் என்பதை நினைவில் கொள்க ,

' நாங்கள் வஹாபிகளை வெறுக்கின்றோம் ,இன்னும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியையும் ,அவரைப் பின்பற்றுபவர்களையும் க்வாரிஜியாக்கள் எனக் கருதுகின்றோம் '.


1. இந்த பெயர் (வஹாபி) ஒருவர் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கொள்கையைப் பின்பற்றுவோருக்கு அல்லது அடிபணிந்து நடப்பவருக்கு சொல்லப்படும் .
[நூல் - இம்தாதுல் பத்வா ,பக்கம் 233]


2. மத்ரஸா ஜாமியுல் உலூம்,கான்பூரில் அஷரப் அலி தானவி சாஹிப் ஆசிரியராக இருந்த காலத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது .அந்த மதரஸாவின் பகுதியில் வாழ்ந்த சில பெண்கள் சில இனிப்புகளைப்  புனித குரான் ஷரீப் ஓதி அதன் மூலம் கிடைக்கும் நன்மை எத்தி வைக்கப்படும் என்ற எண்ணத்துடன் கொண்டு வந்தனர்.எனினும் மத்ரஸா மாணவர்கள் குரான் ஓதாமல் இனிப்புகளை மட்டும் உண்டனர் . அது ஒரு சர்ச்சையைக்  கிளப்பியது .இது பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்ட பொழுது ,தானவி சாஹிப் வந்து உரத்த குரலில் சொன்னார்கள் ' சகோதரர்களே ! இந்த இடம் வஹாபிகளால் நிரம்பியுள்ளது . இங்கு பாத்திஹா அல்லது நியாஜ் ஓதவோ எதையும் கொண்டு வராதீர்கள் '
[நூல்- அஷ்ரபுஸ் ஸவானிஹ் ,பக்கம் 45]

3.யூசப் காந்தல்வியின் சரிதை ,பக்கம் 192ல் நாங்கள்  தீவிரமான வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4.தேவ்பந்தி வஹாபிகளின் மூன்னோடிகளில் ஒருவரான ஷைகுல் ஹதீஸ் ஜக்கரியா சாஹிப் அறிவிக்கின்றார் 'நான் உங்கள் அனைவரையும் விட தீவிரமான வஹ்ஹாபி ' .
[ மவ்லானா முஹம்மத் யூசுப் காந்தலவியின் சரிதை ,பக்கம் 193,எழுதியோர் முஹம்மத் சானி ஹசனி மற்றும் மன்சூர் நுஃமானி ].

5.என்னிடம் 10000 ருபாய் இருந்தால், நான் பகிருந்திருப்பேன் மக்கள் அனைவரும் அவர்களாக முன்வந்து வஹாபியாயிருப்பர் .[நூல் - அல் இபாததுல் யௌமியா ,அஷ்ரப் அலி தானவி ]
Ashraf Ali Thanavi on Wahhabis


குறிப்பு : ஹுசைன் அஹ்மத் தாந்த்வி மதனீ சாஹிப் வஹாபிகளைப் பற்றி என்னவெல்லாம் குறிப்பிட்டார் என்று சீர்தூக்கி பாருங்கள் .

இப்பொழுது ,
தற்காலத்தில் வாழ்ந்து வரும் தேவ்பந்தி முப்தி ஒருவரின் கருத்து அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பற்றியும் ,வஹ்ஹாபிகளைப் பற்றியும் .
Deobandi Mufti Desai Fatwa on Wahhabis


நிற்க !!!

இதே முப்தி பின்னர் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் புகழ்ந்து பின்னர் பத்வா வெளியிட்டார் .இது பற்றிய சர்ச்சை வந்ததும் தனது இணையதளத்தில் இருந்து பின்னர் அதை நீக்கி விட்டார் .
இது தொடர்பான விவாதம் நடந்ததின் பதிவு கீழே முப்தியின் பத்வாவுடன் .
Mufti Desai Fatwa Praising Wahabis -Removed


என்ன இந்த தவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் திடீர் மாற்றம் ???

தேவ்பந்திகளின் அதிகாரப்பூர்வ நூலான அல் முஹன்னத் இவர்கள் வஹாபிகளைப் பற்றி துர்ருல் முக்தார் நூலில் என்ன சொல்லப்படுள்ளதோ அதுவே தமது நிலைப்பாடு என்கின்றனர் .

இவ்வாறு பொய் உரைத்ததன் மூலம் மட்டுமே தப்லீக் தேவ்பந்திகள் அரபுலக ஸுன்னி உலமாக்களிடம் பத்வா பெற முடிந்தது எனபது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது .

ஆனால் தேவ்பந்தின் பத்வா வழங்கும் தாருல் இப்தாக்களோ அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை புகழ்ந்து தள்ளுகின்றன !!!

இதுதான் தேவ்பந்திகளின் வஹாபிய முனாபிக் கொள்கை !!!

இது தேவ்பந்தி தப்லீக் வஹ்ஹாபிகள் அல் முஹன்னதை அரபுலக ஸுன்னி உலமாக்களை ஏமாற்றம் அளிக்கவே எழுதியது என்பது திண்ணம் !

தேவ்பந்திகள் வஹ்ஹாபிகளை சந்திக்கும் பொழுது இப்போது உள்ள பத்வாக்களையும் ,துணைக்கண்டத்திற்கு வெளியே உள்ள உலமாக்களை சந்திக்கும் பொழுது அல் முஹன்னதையும் காட்டுவர் .

இதுவே இந்த முனாபிக்கீன்களின் சுயரூபம் !
      
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment