Friday, 5 June 2020

அரபுலக உலமாக்களுடன் தேவ்பந்திகளின் தொடர்பின் யதார்த்தம்

தமிழ் இஸ்லாமிய சமூக ஊடகங்களில்  சமீப காலமாக தங்களின் முன்னோடிகளின் கொள்கை நிலைப்பாடுகள் அப்பட்டமாக வெளிப்பட்டு சாயம் வெளுப்பதைக் கண்டு புழுவென துடிக்கும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத் ஆதரவு உலமாக்களும் , தேவ்பந்தி முன்னோடிகளை தங்களது ஸில்ஸிலாவில் கொண்டுள்ள போலிகளும் சில உத்திகளை கையாண்டு வருகின்றனர் . அது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.


இவர்களது தேவ்பந்தி தப்லீக் ஜமாத் சாத்திகள் வட இந்தியாவிலும் , பாகிஸ்தானிழும் , அமேரிக்கா ,பிரிட்டன் நாடுகளிலும் செய்து இணையத்தில் அரங்கேற்றிவற்றை இவர்கள் தமிழ் சூழலில் மறுபதிப்பு செய்துள்ளனர் . இவற்றிக்கான அநேகம் மறுப்புகளும் இணையவெளியில் உள்ளன .எனினும் அந்தோ பரிதாபம் தமிழ்'இஸ்லாமிய சூழலுக்கு இதை நவீனமாக இவர்கள் இறக்குமதி செய்கின்றனர் .

  அதில் இவர்கள் கையாளுவது இரண்டு விஷயங்கள் 

* அரபுலக ஸுன்னத் வல் ஜமாத் இமாம்கள் தேவ்பந்திகளை ஏற்றுக் கொண்டு ,அவர்களிடம் கல்வி பயின்று இஜாஸத் பெற்றுள்ளனர் . (எனவே தேவ்பந்தி முன்னோடிகளை எங்களது  ஸில்ஸிலாவில் கொண்டுள்ள போலிகளான நாங்களும் உண்மையான தரீக்கத் வாதிகள் தான் )


*  அரபுலக ஸுன்னத் வல் ஜமாத் இமாம்கள்இப்னு தைமிய்யாவை புகழ்ந்துள்ளனர் (எனவே தேவ்பந்தி முன்னோடிகளை எங்களது  ஸில்ஸிலாவில் கொண்டுள்ள போலிகளான நாங்களும் அஷ்ரப் அலி தானவியை புகழ்வது ஆகுமானதே )



இது ஓர் நீண்ட கால பிரச்னை. தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபி முன்னோடிகளின் வழிகெட்ட கொள்கைகள் கொண்ட நூற்கள் உருது மொழியில் உள்ளன .அவை அரபியில் இல்லை . ஆனால் அரபியில் இவர்கள் ஹதீத் நூற்களின் ஷரஹ் , ஸீரத் போன்ற அஹ்லுஸ் ஸுன்னத் நூற்களை மொழிபெயரத்துள்ளனர் . 



எனவே அந்த நூற்கள் மூலம் இவர்களின் அறிமுகம் அரபுலக உலமாக்களுக்கு கிடைக்கும் பொழுதும் , ஏற்கனவே அரபுலகில் பெரும் பிரச்னை மத்ஹப் மறுக்கும் வஹாபிகளாக  இருக்கும் நிலையில்  , தங்களை ஹனபி,மாதுர்தி மற்றும் தஸவ்வுப் உடைய பிர்கா என்று வெளிரங்கத்தில் காட்டிக் கொண்டு தேவ்பந்திகள் வரும் பொழுது இயல்பாக இவர்களையும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் எனக் கருதுவது தன்னிச்சையான ஒன்று .  

ஆனால் அதற்கு அரபுலக உலமாக்கள் தேவ்பந்தி முன்னோடிகளின் குப்ரியத்தான கொள்கைகளை முழுக்க ஏற்றுக் கொண்டு இவர்களை பரிசுத்தப் படுத்திவிட்டனர் என்பதல்ல அதன் அர்த்தம் . 

 அரபுலக ஸுன்னத் வல் ஜமாத் இமாம்களின் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்துடன் தொடர்பு :

தேவ்பந்தி முன்னோடிகளின்(ஸயீத் அஹ்மத் ரேபரேலி ,இஸ்மாயில் திஹ்லவி ,காஸிம் நானொத்வி ,அஷ்ரப் அலி  தான்வி , ) குஃப்ரியாத்தான நூற்கள் யாவும் உர்துவிலும் ,சில பார்சியிலும் உள்ளது .இவை தற்போது பல்வேறு பதிப்புகளை கண்டுள்ளன . நவீன கால மொழி நடைபாணியிலும் அமைந்துள்ளன . இன்னும் இவற்றில் சில பதிப்புகளில் மோசடிகளும் நடைபெற்றுள்ளன .எனினும் அவற்றின் மூல பிரதிகளும் இன்றும் அஹ்லுஸ்'ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்கிடமும் உள்ளன ,இணையவெளியிலும் உள்ளன . 

இனி பெரும்பாலான அரபுலக உலமாக்கள் அரபியை தமது தாய்மொழியாக கொண்டு கல்வி கற்றும்  , நூற்கள் எழுதியும் , பாடம் நடத்தியும் வந்துள்ளனர் . ஒரு சிலர் அரபல்லாத வேறு மொழியினை தமது தாய் மொழியாக கொண்டிருந்தாலும் , அவர்கள்  சிந்தனை வழிமுறை மற்றும் இயங்கிய அறிவுசார் தளம் என்பது அரபு மொழியே.


இமாம் ஜாஹித் கவ்தாரி மற்றும்  அபுல் பத்தாஹ் அபுல் குத்தாஹ் ஆகியோர் தேவ்பந்திகளை புகழ்ந்ததின் யதார்த்தம் :


Imam Kawthari


இமாம் ஜாஹித் பின் ஹசன் அல் கவ்தாரி அல் ஹனபி அல் அஷ்அரி  رحمه الله அவர்கள் (1296-1371) உஸ்மானிய கிலாஃபத்தின் இறுதி ஷைகுல் இஸ்லாமின் துணை ஷைகுல் இஸ்லாமாக இருந்தவர்கள் .இமாம் அபுல் பத்தாஹ் அபுல் குத்தாஹ் மற்றும் அல் குமாரி ஆகியோர் இவரின் மாணாக்கர் .

அன்னாரின் மறைவையொட்டி இமாம் அபூ ஜஹ்ரா தமது புகழஞ்சலியில் பின்வருமாறு எழுதுகிறார்கள் :

" இமாம் அல் கவ்தாரி  رحمه الله ஒரு உண்மையான அறிஞர்; அறிஞர்கள் அவருடைய அறிவை அறிந்தார்கள். அவரைச் சந்திப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பே நான் அவரை அறிந்தேன். சத்தியத்தின் ஒளி வெளிவந்த அவரது எழுத்துக்கள் மூலம் நான் அவரை அறிந்தேன். அவர் வெளியிடத் தொடங்கிய கையெழுத்துப் பிரதிகளின் விளக்கவுரைகள்  மூலம் நான் அவரை அறிந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக ! கையெழுத்துப் பிரதியைப் பற்றிய எனது ஆச்சரியம், ஆசிரியரின் விளக்கவுரையைப் பற்றிய எனது ஆச்சரியத்துடன் பொருந்தவில்லை. அசல் கையெழுத்துப் பிரதி ஒரு சுருக்கமான நிருபமாக இருந்தபோதும், அதைப் பற்றிய இமாமின் விளக்கவுரைகள் அதை அவசியம் படிக்க வேண்டிய ஒரு முக்கிய படைப்பாக மாற்றிவிடும்.

அவர் அரபு அல்லாத எழுத்தாளர் என்றும், அஜமி  என்றும் வாசகரின் மனதில் தோன்றாது ... ஆயினும் அது உண்மையில் ஆச்சரியமளிப்பதாக இல்லை, ஏனென்றால் அவர் இஸ்தான்புல்லில் (அல்-அஸ்தானா) வாழ்ந்த நேரத்தில் வம்சாவளி, கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையில் துருக்கியராக இருந்தார், ஆனால் அவரது அறிவார்ந்த வாழ்க்கை முற்றிலும் அரபு மொழியாக இருந்தது, ஏனெனில் அவர் அரபியைத் தவிர வேறு எதுவும் படிக்கவில்லை, அவரது சிந்தனையை அரபியைத் தவிர வேறு எதுவும் நிரப்பவில்லை "

[ நூல் -  இமாம் கவ்தாரி அவர்களது மகாலத் நூலுக்கு இமாம் அபூ ஜஹ்ரா அவர்களது முன்னுரை ,ரியாத் பதிப்பு ]

இமாம் அல் கவ்தாரி  رحمه الله அவர்கள் புகழ்ந்த தேவ்பந்தி உலமாக்களின் நூற்கள் அனைத்தும் ஸஹீஹ் முஸ்லீம் ,அபூ தாவூத் ,திர்மிதி போன்ற ஹதீத் ஷரீபின் ஷரஹ் ஆகும் .

இனி இமாம் அல் கவ்தாரி அவர்கள் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் குப்ரியத்தான கொள்கைகள் நிறைந்த உருது ,பார்சி நூற்களை வாசித்திருப்பார்களா ? அவர்கள் காலத்தில் யாரேனும் அரபியில் மொழிபெயர்த்து ,அதை அவர்கள் வாசிந்திருந்தால் "ஹுஸாமுல் ஹரமைன் " பத்வாவில் கையெழுத்திட்ட சங்கைக்குரிய மக்கா ,மதீனா உலமாக்கள் போன்று தான் முடிவெடுத்திருப்பார்கள் என்பது திண்ணம் . 

* அல் இஷ்பாக் அலா அஹ்காம் அல் தலாக் - தலாக் பற்றிய ஜம்ஹுர் இஜ்மாவிற்கு முரண்பட்ட இப்னு தைமியாவிற்கு எதிரான மறுப்புரை 

* அல் ஜவாப் அல் வாபி பி ரத் அலா அல் வாய்ஜ் அல் அவ்பி - ஸுபியாக்கள் பற்றிய அவ்ப் நகரைச் சேர்ந்த பிரச்சாகருக்கு எதிரான மறுப்புரை 

* மஹ்க் அல் தவக்குல் பி மஸாலா அல் தவஸ்ஸுல் - கண்மணி நாயகம் அவர்களை தவஸ்ஸுலாக ஏற்க மறுப்பவர்களுக்கான மறுப்புரை 

* அல் லம்மத்ஹபிய்யா கன்தரத்து அல் லத்தீனியா - மத்ஹப் மறுப்பு இறைமறுப்புக்கான நுழைவாயில் 

இமாம் அல் கவ்தாரி  رحمه الله அவர்கள் எழுதிய எண்ணற்ற நூற்களுல்  மேற்குறிப்பிட்ட நூற்கள் இன்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி இஸ்மாயில் திஹ்லவிக்கும் ,அதே போன்ற கருத்துக்களை கொண்டுள்ள அவரின் பிர்காவைச் சேர்ந்த உலமாக்களுக்கும் இன்றும் பொருந்தும் .  இமாம் அல் கவ்தாரி  رحمه الله அவர்கள் நிச்சயமாக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் வழிகெட்ட வஹாபிய கொள்கைகளை அங்கீகரித்து அவர்களை புகழவில்லை . 

மாறாக இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் 'அல் முஹன்னத் '  நூலுக்கு என்ன முனாஃபிக் தனம் செய்தார்களோ ,அதைப் போலவே இவர்கள் ஸுன்னத் வல் ஜமாத் அகீதா நூற்களை அரபியில் மொழிபெயர்த்து ,அரபுலக ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்கள் மத்தியில் தங்களைப் பற்றிய நல் அபிப்பிராயம் உண்டாக செய்த மற்றுமோர் சதித் திட்டம் .இவர்களின் வரலாற்றை ஆரம்பம் முதல் அறிந்தவர்கள் இவர்களது முனாபிக் தனமான செயல்பாடு பற்றி அறிவர் .

இதைத் தவிர  குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் தேவ்பந்த் மத்ரஸா மற்றும் இன்ன பிற அவர்களது பிர்கா சார்ந்த மத்ரஸாக்கள் மூலம் அவர்கள் குறிப்பிடத்தக்க (PR and Marketing Network) உறவை மேம்படுத்தும் சந்தை தொடர்பை உண்டாக்கினர் .

Abdu-l-Fattaah Aboo Ghuddah Ansari

இனி  அபுல் பத்தாஹ் அபுல் குத்தாஹ் அவர்களும் (1917- 1997) புகழ்ந்ததோடு அல்லாமல் சில நூற்களை அரபியில் மொழிபெயர்த்தும் உள்ளார்  . பலதரப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களின் செல்வாக்கு அவரின் மீது ஆளுமை செலுத்தியது .

1940 களில் எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவத்தின் தலைவரான ஹசன் அல்-பன்னாவை சந்தித்தார். அவர் சிரியாவுக்குத் திரும்பியபோது, அவர் முஸ்லீம் சகோதரத்துவத்துடனும் , தாவாவின் பணியியிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார், ஏனெனில் அவரது இயல்பு  மிகவும் நம்பகமானதாக இருந்தது, மேலும் அவர் தனித்துவமான தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருந்தார்.

அவர் சவுதி அரேபியாவை தனது வசிப்பிடமாக  அமைத்துக்  கொண்ட பிறகு,  அவரது பல கருத்துக்கள் மாறின. மேற்கண்ட நபர்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதை அவர் காட்டுகிறார், மேலும் அவர்களை மிகவும் பாராட்டுகிறார். இப்னு தைமியாவைப் பற்றி பேசிய தமது  ஆரம்பகால படைப்புகள் மற்றும் தஹ்கீக் மற்றும்  குறிப்புகளையும் தருகிறார்.

அவர் இப்னு தைமியாவுக்கு "ஷெய்க் அல்-இஸ்லாம்" போன்ற உயர்ந்த பட்டங்களை பல முறை தருகிறார், மேலும் அவரை ஒரு காஃபிர்  என்று அறிவித்ததை அபத்தமானது என்கிறார்  (பக். 24-30).
இப்னு தைமியாவின் மாணவர் இப்னு கயீமைப் பெரிதும் பாராட்டுகிறார், மேலும் அவர் அவரை காஃபிர் என்று அறிவித்ததாகக் கூறப்படும் பொய்யை மறுக்கிறார் (பக். 30-35).வெளிவந்த தமது மற்ற தஹ்கீக்குகள் பற்றியும் குறிப்பிடுகின்றார் .

இறந்தவர்களுடன் இஸ்திகாதாவை அவர் மறுத்தார் (பக். 35-38). அவர் அதை அனுமதிக்கிறார் என்றும் அது ஷிர்க் என்று கூறுபவர் காஃபிர் என்கிறார் .

பின்னர் இதற்கு முற்றிலும் மாறாக முரண்பட்டு ,இது அப்படியல்ல, முற்றிலும் பாத்தில் மற்றும் அவர்களிடம் "நான் அதை எங்கே சொன்னேன்?" என்று வினவுகிறார் .
பின்னர் அவர் இஸ்திகாதா அனுமதிக்கப்படாது என்று கூறுகிறார். அவர் தனது முந்தைய தஹிக்கில் ஒன்றைக் குறிப்பிடுகிறார், அங்கு அவர் அப்துல் ஹை லக்னவி பயன்படுத்திய 'கவ்த் அல்-தகலைன் ' என்ற வார்த்தையை மறுக்கிறார்.

அவர் முஹம்மது இப்னு அப்துல் வஹாபிற்கு மரியாதை செலுத்துகிறார், அவரை இமாம் அல்-தாவா என்று அழைத்து, அவரது பெயருக்குப் பின்னால்  'ரஹ்மத்துல்லாஹி அலைஹி ' என்றும் கூறுகிறார்.
இப்னு தைமியா உண்டாக்கிய  தவ்ஹீத்தின்  பிரிவுகளை  அவர் ஒப்புக்கொள்கிறார் (பக். 38).

அவர் தனது ஆசிரியர் இமாம் கவ்தாரியின் நிலைப்பாட்டை விவாதித்து, அவர் தனது பல ஆசிரியர்களில் ஒருவர் என்று கூறுகிறார். இமாம் கவ்தாரி சொன்ன எல்லாவற்றையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அதற்கு அர்த்தமல்ல என்கிறார் . பின்னர் அவர் ஹலபில் ஒரு பெரிய ஷெய்கு  இருப்பதாகக் கூறினார், அவர் இப்னு தைமியாவை முற்றிலும் நேசித்தார், மேலும் "தூதுத்துவம்  முடிவுக்கு வரவில்லை என்றால், இப்னு தைமியா ஒரு நபியாக இருந்திருப்பார்" (!) என்றும் கூறினார்.

[ நூல் - கலிமாத் ஃபி கஷ்ப் அபாத்தில் வ இஃப்திராத் , அபூ பத்தாஹ் அபூ குத்தாஹ் ]  

 முஹத்தித் ஏ ஹரமைன் ஷரீப் ஸெய்யித் முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கி அவர்கள் தேவ்பந்த் உலமாக்கள் பலரிடமும் ,இன்னும் குப்ர் பத்வா வழங்கப்பட்ட தேவ்பந்தி முன்னோடிகள் சிலரிடமும் இஜாஸத் பெற்றதின் விளக்கம் :   

முஹத்தித் ஏ ஹரமைன் ஷரீப் ஸெய்யித் முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கி  رحمه الله அவர்கள் தங்களது கல்வியின் ஆரம்ப காலத்தில் ,தேவ்பந்திகளின் உண்மை கொள்கையினை அறியாத காலத்தில்  ஜக்கரிய்யா காந்தலவி தேவ்பந்தியிடம் ஹதீத் கற்றார்கள். ஆனால் அன்னவர்கள் தஸவ்வுப் உடைய ஸில்ஸிலா இஜாஸத்தை பரேலி அஃலா ஹழ்ரத் அவர்களது கலீஃபா , குத்பே மதீனா ஜியாவுத்தீன் மதனீ அவர்களிடம் பெற்றார்கள் .இன்னும் பரேலி அஃலா ஹழ்ரத் அவர்களது மகனார் இமாம் முஸ்தபா ரிழா கான் அவர்களிடமும் ஹதீதுக்கான இஜாஸத் பெற்றுள்ளார்கள் .


ஷரீப் ஸெய்யித் முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கி  رحمه الله அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் கொள்கை விளக்க நூலான 'மஃபாஹீம்' நூலை எழுதிய பின்னர் திருடனுக்கு தேள் கொட்டியது போல் இந்த தேவ்பந்தியாக்கள் தங்களின் வஹாபிய விசுவாசத்தை காட்ட அன்னாரின் மீது முப்ததி என்று   பத்வா வெளியிட்டார்கள் .

தேவ்பந்திகள் Sunniform.com என்ற விவாத தளத்தை ஆங்கிலத்தில் நடத்தி வந்தனர் . உலகின் பல பகுதிகளில் இருந்தும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் இதில் பங்குபெற்று வாத பிரதிவாதங்கள் நடந்தேறின . வழக்கம் போல் தேவ்பந்திகள் நாங்கள் ஹனபி,மாதுர்தியாக்கள் என்று தங்கள் புரட்டுகளை முன் வைத்தனர் . ஆனால் இந்த பத்வா இதில் வெளிவந்ததும் இவர்கள் குட்டு வெளிப்பட்டு இவர்களின் உண்மையான முகம் வெளிவந்து சந்தி சிரித்தது .  தளத்தை இழுத்து மூடினர்  தேவ்பந்திகள்.

அந்த விவாத தளத்தின் பதிவு

https://web.archive.org/web/20100130043500/http://www.sunniforum.com/forum/showthread.php?53234-Beliefs-of-Muhammad-Alawi-Maliki-and-Ulama-of-Deoband


தமிழாக்கம் : 

முஹம்மத் பின் அலவி அல் மாலிக்கியின் கொள்கைளும் , தேவ்பந்த் உலமாக்களும்  :-

ஜாமிஆ மதனியா பஹவல்பூரின் உஸ்தாதும்,தேவ்பந்திகளின் இமாமுமான  அல்லாமா ஸர்பராஸ் கான் ஸப்தார் அவர்களது பேரனுமாகிய  ஹாபிழ் ஸபறாஸ் கான்   எழுதுகிறார்கள்,

"எனது பாட்டனார் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் மஸ்லக்கோடு வலுவானஇணைப்பையும் ,தொடர்பையும் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்த விஷயத்தில் அவர் சிறிதளவும்  நெகிழ்வுத்தன்மையை பொறுத்துக்கொள்ளவில்லை மற்றும் 'லா யக்பூன லவ்மத லயீம் ' (குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்சாட்டுக்கு அஞ்சாதவர்கள்) என்பதன் ஒரு சரியான உருவகமாக இருந்தார்.

மக்காவை சேர்ந்த ஓர் அரபி முஹம்மத் அலவி மாலிக்கி ஸாஹிப் (மஸ்லக்கால் பரேல்வி ) , 'அல் ஜகாயிர் அல் முஹம்மதியா' மற்றும்  'ஹவ்ல் அல் இஃதால் பி ஜிக்ர மவ்லித் அல் நபி அஷ் ஷரீப் 'என்னும் இரு நூற்களை எழுதியுள்ளார் . இந்த புத்தகங்களின் பல உள்ளடக்கங்கள் சவூதி உலமா போர்ட் மற்றும் மக்கா காழி ஷைகு அப்துல்லாஹ் பின் சுலைமான் பின் மானி அவர்களால் ஆட்சேபிக்கப்பட்டன .அவர் இந்நூற்களுக்கு மறுப்பாக ஹிஜ்ரி 1403ல் 'ஹிவார் மா அல் மாலிக்கி பீ ரத் முன்கரத்தி வ தலாலித்' என்ற நூலினை வெளியிட்டார் .

இந்த புத்தகம் வெளியான பிறகு, அலவியின் ஆதரவாளர்கள் 'இஸ்லாஹ்-இ-மஃபாஹிம்',  'மாஃபாஹிம் யஜிபு அன் துசாஹாவின்' உருது பதிப்பை வெளியிட்டபோது, அது அஹ்லுல் ஹக்கைத் தாக்கியது, புதுமைகள் (பிட்அத்) மற்றும்  ஷிர்க் தூய மார்க்கமாக வழங்கப்படுகின்றன என்பது புரிந்தது .
எனவே, மூத்த அறிஞர்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர், அதற்கு எதிராக தங்கள் கட்டுரைகள், ஃபதாவாக்கள் மற்றும் கடிதங்களில் மக்களை எச்சரித்தனர்.

 'இஸ்லாஹ்-இ-மஃபாஹிம்' என்பது ஷிர்க்  மற்றும் பித்அத்தை  அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் தொகுப்பாகும்.  இது தந்திரமாக தவ்ஹீத் மற்றும் சுன்னா என்று பெயரிடப்பட்டது . அவரது வழக்கம்படி, என் பாட்டனார் ஹக் மற்றும் அஹ்லுல் ஹக் ஆகியோருடன் பக்கபலமாக இருந்து 'இஸ்லாஹ்-இ-மஃபாஹிம்' மற்றும் ஸெய்யித் முஹம்மத் அலவியின் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிற தவறான கருத்துக்களிலிருந்துதம்மை விலக்கிக் கொண்டார்.

ஒருமுறை நான் அவரிடம் அலவி மாலிகி சாஹிப்பைப் பற்றி கேட்டபோது, அவர் கூறினார்: 'ஹத்ரத் காதி [' காயிதே  அஹ்லுஸ் -சுன்னா 'அல்லாமா காதி மஜார் உசேன், ஷெய்க் அல்-இஸ்லாம் மவ்லானா மதானியின் கலீஃபா முஜாஸ்,]  அவர்களது அதே கருத்துக்கள் என்னிடம் உள்ளன.  பின்னர், டாக்டர் முப்தி அப்துல் வாஹித் (லாகூரின் ஜாமியா மதானியாவின் முப்தி)அவர்களின் 'முஹம்மது அலவி மாலிகி கே அகாயித் உங்கி தஹ்ரிக்கத் கே ஆயினே மே' [முஹம்மது அலவி மாலிகியின் நம்பிக்கைகள் அவரது படைப்புகளின் வெளிச்சத்தில்] என்ற ஒரு கட்டுரையை வாசித்துக் காண்பித்தேன். சில வாசகங்களைக் கேட்ட என் பாட்டனார் , 'அஹ்மத் ரஸா  கான் பரேல்வியை விட அவர் அதிக பித்அத்தியாக உள்ளார் ' என்று கூறினார்.




தேவ்பந்தின் உலமாக்கள்  ஸெய்யித் முஹம்மத் அலவியின் சில புத்தகங்களுக்கும்  குறிப்பாக 'மஃபாஹிமுக்கும்'  எதிராக எச்சரித்தனர். தேவ்பந்தின்  பல அறிஞர்கள் மஃபாஹிமில் ஏராளமான அகாயித் மற்றும் மசாயில்களுக்கு  மறுப்பை எழுதினர். அதையெல்லாம் ஒன்றாக  'தஹ்கிகி நஸர்' என்ற புத்தகத்தில் வெளியிட்டது. இந்த புத்தகத்தை தாருல் உலூம் கராச்சியின் பட்டதாரி முப்தி முஹம்மது அபுபக்கர் அலவி ,  ஷெய்குல் -ஹதீஸ் மவ்லானா ஜக்கரிய்யாவின் கலீஃபா மவ்லானா முஹம்மது இஸ்மாயில் படாத் மதானியின் அறிவுறுத்தலின் பேரில் தொகுத்துள்ளார் . இதை லாகூரின் மதரஸா குத்தம்  அஹ்லுஸ் -சுன்னத் வெளியிட்டனர்.

தேவ்பந்தின் உலமாக்கள் 'மஃபாஹிம்' மற்றும் அவரது பிற புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முஹம்மது அலவி மாலிகியின் அகாயித்  பற்றிய விரிவான மறுப்பை எழுதினார்; அவர் தனது புத்தகங்களில் ஊக்குவித்த நம்பிக்கையின் காரணமாக அவரை முப்ததி என்றும் அஹ்லுஸ் -ஸுன்னத்  வல்-ஜமாவை விட்டும் வெளியேறிவிட்டார் என்று அறிவித்தனர் .

விரிவான கண்டனத்தை எழுதிய அறிஞர்கள் பின்வருமாறு:

1.அல்லாமா காழி மழ்ஹர் ஹுசைன் , சக்வால்
2.ஷைகு முஹம்மத் யூசுப் லூதியான்வி , கராச்சி
3.முப்தி ஸய்யித் அப்துல் ஷக்கூர்,சர்கோதா
4.முப்தி அப்துல் சத்தார் ,கைர் அல் மதாரிஸ், முல்தான்
5.முனைவர் முப்தி அப்துல் வாஹித் ,லாஹுர்

மஜ்லிஸ் தஹ்கீகாதி இஸ்லாமி பாகிஸ்தானின் (இஸ்லாமிய ஆராய்ச்சி அகாடமி) தலைவரான முப்தி அப்துல் சத்தார்,ஸெய்யித்  முஹம்மது அலவி மாலிகியை மறுத்து எழுதியதைத் தொடர்ந்து பின்வரும் அறிஞர்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு முப்தி அப்துல் சத்தாருடன் முழுமையாக உடன்பட்டனர்.

1. முப்தி ஜமீல் அஹ்மத் தன்வி, ஜாமியா அஷ்ரபியா லாகூர்
2. முப்தி தகி உஸ்மானி, கராச்சி.
3. முப்தி ரஃபி உஸ்மானி, கராச்சி.
4. டாக்டர். அல்லாமா காலித் மஹ்மூத், யு.கே.
5. ஷேக் சையித் நபிஸ் ஷா அல்-ஹுசைனி, லாகூர்.
6. மவ்லானா அமீன் சப்தார் ஒகார்வி, கைர் அல்-மதரிஸ் முல்தான்.
7. 'அல்லாமா அப்துல்-கயூம் ஹக்கானி, தாருல் உலூம்  ஹக்கானியா அகோரா கட்டக்.
8. முப்தி ஷேர் முஹம்மது அலவி, ஜாமியா அஷ்ரபியா லாகூர்.
9. மவ்லானா ஆஷிக் இல்ஹாகி புலந்த்ஷஹ்ரி, மதீனா.
10. முப்தி முஹம்மது ஃபரித், அகோரா கட்டக்.
11. மவ்லானா முஹம்மது இஸ்மாயில் படாத் மதானி, மதீனா.
12. முப்தி நசீர் அகமது, ஜாமியா இம்ததியா பைசலாபாத்.
13. முப்தி அப்துல் சலாம் சட்காமி, பானூரி டவுன் கராச்சி.
14. மவ்லானா முஹம்மது அக்பர், காசிம் அல்-உலூம் முல்தான்.
15. மவ்லானா ஃபைத் அகமது, காசிம் அல்-உலூம் முல்தான்.
16. மவ்லானா அப்துல் கானி, ஜாமியா மதானியா லாகூர்.
17. மவ்லானா ஜமால் அகமது, தார் அல்-உலூம் பைசலாபாத்.
18. மவ்லானா ஜாவேத் உசேன் ஷா.


முஹம்மது அலவி மாலிகி மீது மவ்லானா லூதியன்வி தேவபந்தியின் ஃபத்வா.

முஹம்மது அலவி மாலிகிக்கு ,மவ்லானா லூதியானாவி பைஅத்  கொடுத்ததாக சிலர் வதந்தி பரப்பினர். இந்த நேரத்தில் மவ்லானா லூதியன்வி முஹம்மது அலவி மாலிகியின் முகத்தை நான் பார்த்ததில்லை,
இனிமேலும் நான் பார்க்கவும் விரும்பவில்லை என்றும் எழுதினார். நான் இன்னும் அவரை ஒரு முப்ததி
என்று கருதுகிறேன் என்று கூறினார் .




தேவ்பந்தின் உலமாக்கள் முஹம்மது அலவி மாலிகியை மறுத்த சில கொள்கைகள் :

1. மண்ணறைகளில் இருக்கும் நல்லடியார்களிடம்   உதவி கோரி அழைப்பது அனுமதிக்கப்படுகிறது என்றும், அவர்கள் அழைக்கப்படும் போது அவர்கள் தசர்ருப் செய்து எங்களுக்கு உதவுவார்கள் என்றும் நம்புங்கள். படைப்பினங்களிடம்  துஆ செய்து மற்றும் வழிமுறைகளுக்கு மேலே உள்ள விஷயங்களை அவர்களிடம் கேட்பது (மா பவ்க் அல் அஸ்பாப் ) அனுமதிக்கப்படுகிறது.

2. பூமான் நபி  அவர்கள் ஹாழிர் நாழிர் அல்லது வேறுவிதமாகக் கூறினால், உலகில் எங்கும் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் சாட்சியாகவும் விழிப்புடனும் இருக்கிறார்கள் .

3. பரிசுத்த நபிநாதருக்கு  இறுதி நாளின்  சரியான நேரம் உட்பட 5 விஷயங்களைப் பற்றிய முழுமையான அறிவு உள்ளது; புனித தூதருக்கு முதல் நாள் முதல் கடைசி வரை காணப்படாத முழுமையான (குல்) அறிவு வழங்கப்பட்டுள்ளது.

4. உலக மற்றும் வானங்களின் சாவிகள் புனித நபிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன என்ற நம்பிக்கை.

5. சொர்க்கம், நரகத்தை வழங்குவதற்கும், ரிஸ்க் (வாழ்வாதாரம்) வழங்குவதற்கும் அதிகாரம் புனித நபிக்கு வழங்கப்பட்டுள்ளது.

6. பூமான் நபி அவர்களின் பெயரால் சத்தியம் செய்வது அனுமதிக்கப்படுகிறது.

8.முஃஜிஸாத், கலாக் மற்றும் கசாப் பற்றிய கலந்துரையாடல்.

9. ‘அகாயித் மற்றும் ஃபிக்ஹ் ’ விஷயங்களில் பலவீனமான ஹதீத்தைப் பயன்படுத்துதல். கூற்றுடன் எந்த தொடர்பும் இல்லாத ஆதாரங்களை கொண்டு வருவது இதனால் சாதாரண மக்களை குழப்பமடையச் செய்து ஏமாற்றுகிறது.

10. நபிமார்களை பஷர்கள் (மனிதர்கள்) என்று மட்டும் குறிப்பிடுவது ஷிர்க் !

இந்த அறிஞர்களால் 'தஹ்கீகி நசர்' புத்தகத்தில் விவாதிக்கப்பட்ட இன்னும் பல ஃபிக்ஹி  சிக்கல்கள் உள்ளன. முழுமையான மறுப்பு மற்றும் விவாதத்திற்கு அந்த புத்தகத்தைப் பார்க்கவும்.





இன்றுவரையிலும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் இந்த இரட்டை வேஷம் தொடர்கின்றது .இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மார்க்க மேதையான ,துருக்கியைச் சேர்ந்த ஷெய்கு மஹ்முத் எப்பெந்தி நக்ஷபந்தி அவர்களுக்கு இந்த தேவ்பந்திகள் சமீபத்தில்  தேவ்பந்தின் முன்னோடி காஸிம் நானோத்வி பெயரில் விருது ஒன்றினை அளித்தனர் . அதை தங்களுக்கான அங்கீகாரமாக வழக்கம் போல் இணைய வெளியில் நாடகம் நடத்தினர் .  

Shaykh Mahmud Effendi with Shaykh Ahmad Cubbeli


சமீபத்தில் பரேலி அஃலா ஹழ்ரத் அவர்களது பேரனார் தாஜுஸ் ஷரியா முப்தி அக்தர் ரிழா கான் அவர்கள் மதீனாவில் இருந்த சமயம் ஷெய்கு அஹ்மத் குப்பேலி நக்ஷபந்தி  (ஷெய்கு மஹ்முத் எப்பெந்தி நக்ஷபந்தி அவர்களின் கலீபா மற்றும் மாணவர் ) சந்தித்து தேவ்பந்திகளின் கொள்கை பற்றி வினவினார் . அவர்களின் முன்னோடிகளின் வழிகெட்ட கொள்கையை விளக்கி'பின்னர் ஷெய்கு அஹ்மத் குப்பேலி 
அவர்கள் கூறினார்கள் ' தேவ்பந்திகள் தம்மை நக்ஷபந்திகள் என்று கூறிக்கொண்டு துருக்கியில் வருகை தந்து உலமாக்களையும் , மக்களையும்  வழிகெடுகின்றனர் .நான் துருக்கி சென்று இன்ஷா அல்லாஹ் அவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் சொல்வேன் ' என்றார்கள் .


பின்னர் தாஜுஸ் ஷரியா முப்தி அக்தர் ரிழா கான் அவர்கள் செப்டெம்பர் 2014ல்  துருக்கி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரிடையாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் உலமாக்களை சந்தித்து தேவ்பந்திகளின் வழிகெட்ட கொள்கைகளை விளக்கினர்.அப்போது அன்னார் ஷெய்கு மஹ்முத் எப்பெந்தி நக்ஷபந்தி அவர்களையும் சந்தித்து விளக்கம் கூறிய நிகழ்வும் நடந்தது .அதன் ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள் 'துருக்கி ஸபர்நாமா'என்று  வெளிவந்துள்ளன.

இதைப் போலவே தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கையான 'அல்லாஹ் பொய் சொல்வது சாத்தியம்' என்பதைப்   பற்றி  சமீபத்தில் இணையவெளியில்  தேவ்பந்திகள் ஆங்கிலத்தில் பயான் செய்து வழிகெடுக்க முற்பட்ட பொழுது அரபுலக உலமாக்களான  ஷஹீத் ரமதான் அல் பூத்தி , ஷெய்கு அபூ ஆதம் அல் நரூஜி  , ஷெய்கு ஸாலிஹ் பின் ஸித்தினா ஆகியோர் இது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கைகள் என்று திடமாக மறுத்துள்ளனர் .  


இதுதான் தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளின் இரட்டை வேஷம். இத்தகையோரைப் பற்றித்தான் அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான் ,

தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர்.

[அல் குர்ஆன் 2:15]




 

 





Related Posts Plugin for WordPress, Blogger...