Thursday, 11 May 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 5

இதற்கு முன் உள்ள பதிவுகளில் நாம் தேவ்பந்தின் முன்னோடிகள் எழுதியதாக நாம்  சுட்டிக் காட்டியுள்ள குறிப்புகளும் ,கருத்துக்களும் வழிகேட்டின் மீதும் குப்ரின் மீதும் அடிப்படையாக அமைந்தவை .
மூல கருத்துக்களின் பிரதிகளை காண வேண்டுவோர்  மவ்லானா முஹம்மது மான்ஷா தஸ்பீஹ் கஸவ்ரி எழுதிய  'தாவத் ஏ பிக்ர் ' என்னும் நூலைக் காணவும் .
                                       
Dawat e Fikr

இந்த கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேரான அல்லாஹுத்தஆலா பற்றிய நம்பிக்கையையும் ,நுபுவ்வத்தின் புனிதத்தையும் களங்கப்படுத்துபவை .

இவை தான் இந்திய முஸ்லிம்களிடையே பிரிவினையின் ஆணிவேராக இருந்தன . இன்னும் இந்த நிலம் பிரிவினையின் போர்க்களமாக மாறவும் காரணமாயின .இஸ்லாத்தின் ஆன்மாவையே அழிக்கும் இதன் விளைவை இன்றும் இந்திய துணைக்கண்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,
நகரிலும் ,பெருநகரங்களிலும் காணலாம்  .

நுபுவ்வத்தின் புனிதத்தையும் ,அகமியத்தையும் பாதுகாக்கவும் . அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை பேணிக் காக்கவும் பல உலமாக்கள் முக்கிய பங்காற்றி இயங்கினர்.

அவர்களில் பிரிவினை தோன்றிய அதே மாநிலத்தில்(உத்திரபிரதேசம் )  இருந்து இயங்கியவர்களில் இருவர் மிகவும் முக்கியமானவர்கள் .

முஹிப்பிர் ரஸூல், தாஜுல் புஹூல்  மவ்லானா அப்துல் காதிர் உத்மானி காதிரி பர்கத்தி பதாயூனி (அல்லாமா பஜ்லே ரஸூல் உத்மானி காதிரி பர்கத்தி பதாயூனி அவர்களின் மகனார்  ) ,அல்லாமா பஜ்லே  ஹக் கைராபாதி(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ) அவர்களின் மாணவர்.  
                                              
Tajul Fuhool Dargah

இமாமே அஹ்லே ஸுன்னத் மவ்லானா அஹ்மத் ரிழா ஹனஃபி காதிரி பர்கத்தி பரேல்வி (மவ்லானா நகீ அலி கான் பரேல்வி அவர்களின் மகனார் ) ,அஷ் ஷைகு ஷாஹ் ஆலே ரசூல்  காதிரி பர்கத்தி மெஹ்ராரவி (சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர்அவர்களின் கலீஃபா  .


                                                 Related image



இவ்விரு பெருமக்களும் தமது காலத்தில் முக்கிய பங்காற்றினர்.இவ்விரு பெருமக்களும் மெஹ்ரேரா ஷரீபில் இருந்து பைஅத் ,இஜாஸத் மற்றும் கிலாபத்   பெற்றிருந்தனர் .

                                             
Marahra Mutahhara (Eta, U.P.)

                                                                                                                                                                              இதில் இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் தனித்தன்மையானது பெருமானார் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மீது கொண்டு மட்டில்லாத இஷ்க் ஆகும் .
அன்னாரின் பேரனார் மவ்லானா முப்தி  அக்தர் ரிழா காதிரி பரேல்வி (ஹாபிதஹுல்லாஹ் ) அவர்கள் கூறுகின்றார்கள் ,"கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் முஹப்பத்  தான் அவர்களது வாழ்வில் பிரதம கவனமாக இருந்தது . அன்னாரின் கூற்றும் ,செயல்பாடுகளும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  இஷ்கில் ஊறிப் போயிருந்தன,எந்தளவுக்கு என்றால் தமது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  இஷ்கில் மூழ்கிப் போயிருந்தன  . கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  முஹப்பத் தான் அவரது வாழ்வாகவும் ,அவரது செய்தியாகவும் இருந்தது  . "

இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் ,இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் இஷ்க் என்பது தெளிவான தீர்ப்பு எடுக்க இயலாமல் தமது உணர்விழந்து சிந்தை மாறிப் போகும் நிலையில் அல்ல , மாறாக அவரது முஹப்பத் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் விருப்பத்திற்கு இணங்குமாறு கட்டுப் படுத்துகின்றது . இஷ்கின் இந்த நிலையில் ,ஒரு மனிதனின் சுய விருப்பங்கள் மறைந்து ,தமது நேசரின் விருப்பங்களை பின்தொடருபவர் ஆகின்றார் .

இந்த நிலையைத்தான் ஹதீத் ஷரீபில்  " மனிதனின் விருப்பங்கள் நான் கொண்டு வந்ததுடன்(தூது ) இணைந்துவிடுகின்றன  " என்று கூறப்பட்டுள்ளது .

இந்த நிலையானது அன்னாரின் மார்க்க சேவைகளிலும் ,பணிகளிலும் வெளிப்பட்டுள்ளன . அவர்களின் ஒரு நூல் 'மகால் உல் உரபா பி இஜாஜி ஷரயின் வ உலமா '(مقال العرفاء بإعزاز شرع وعلماءஇதை நிலை நிறுத்த போதுமானது .
                                                     
Maqal e ‘Urafa’ bi I’zaz e Shar’a wa ‘Ulema


இந்த நூலில் அன்னார் ஷரீயத்தின் மேன்மையை விளக்கியுள்ளதோடு ,அதை எதிர்க்கும் நவீன காலத்தவரை மறுத்துள்ளார் . ஷரீயத்திற்கு மாற்றமான செயல்களை மருத்துள்ளதோடு ,முஸ்லிம்களை அவற்றை விட்டும் விலகி இருக்க அறிவுறுத்தி உள்ளார் .உதாரணமாக பெண்கள் இக்காலத்தில் தர்காவுக்கு சென்று ஜியாரத் செய்வது,வலிமார்களின் உரூஸ் போது நிகழும் அனாச்சாரங்கள் .சஜ்தா ஏ தழீம் ,மற்றும் தஜியா (அஹ்லே பைத்தினரின் ஷஹாதத்தின் நினைவாக ) ஆகியவை . இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இத்தகைய சடங்குகளில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ளுமாறு மிக கடுமையாக வலியுறுத்தி உள்ளார்கள் .
[வாராந்திர ஹுஜும்  .டிசம்பர் ,புது டில்லி .1988]

பேராசிரியர் முஹம்மது மசூத் அஹ்மத் நக்ஷ்பந்தி முஜத்திதி மழ்ஹரி ,முப்தி முஹம்மது மழ்ஹருல்லாஹ்  நக்ஷ்பந்தி முஜத்திதி(தில்லி பதேஹ்பூர் மஸ்ஜிதின் கதீப் மற்றும் இமாம்  ) அவர்களின் மகனார் ,எழுதுகின்றார்கள் :


 " (1). இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அல்லாஹ்வை பற்றியும் ,நபிமார்களைப் பற்றியும் தளர்வான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை பயன்படுத்துவது அதபுக்கு மாற்றமான ஒன்றெனக் கருதினார்கள் , ஏனெனில் அதன் நேரடிப் பொருள் சரியாக இருப்பதாக தோன்றினாலும் ,அவை அவமதிப்பை உண்டாக்குபவையே .

முஹத்தித் பரேல்வி அவர்களை பொறுத்தவரை அத்தகைய சொற்கள் பின்வரும் நூற்களில் இடம்பெற்றுள்ளன .

மவ்லவி காசிம் நாணோத்வியின் தக்தீருன் நாஸ் ,

மவ்லவி அஷ்ரப் அலி தான்வியின் ஹிப்ளுள் ஈமான் ,
மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வியின் அல் பராஹீன் அல் காதியா ,
மவ்லவி இஸ்மாயில் தெஹ்லவியின் சிராத்தே முஸ்தகீம் மற்றும் தக்வியத்துள் ஈமான் ,
மவ்லவி மஹ்மூத் ஹுசைன் தேவபந்தியின் அல் ஜகத் அல் மகல் .

எனினும் மேற்கூறிய புத்தகங்களின் ஆசிரியர்கள் இந்த வாக்கியங்களை அவமதிப்பை ஏற்படுத்தும் அதன் நேரடிப் பொருளில் ஏற்க கூடாது என வாதிடுக்கின்றார்கள் ,ஏனெனில் அவர்களிடமும் அவமதிப்பு ஹராமாகும் . ஆனால் முஹத்தித் பரேல்வி அவர்களின் நிலைப்பாடானது அந்த புத்தகங்களின் வாக்கியங்கள் உர்து மொழியின் சாதாரண பேச்சுவழக்கில் உள்ளவை .
அதன் இயல்பான பொருள் உர்துவை தாய்மொழியாக கொண்டு பேசுபவர் எவ்வாறு பொதுவாக புரிந்து கொள்வாரோ அதுவே ஆகும் . எனவே தீர்ப்பு அத்தகைய அர்த்தத்தின் மீதே வழங்கப்படும் என்பதாம் .

(2) இரண்டாவதாக ,முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் குர்ஆனிலும் ,ஹதீதிலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் புகழ் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வாறே  அறிவிக்கப்பட  வேண்டும் என்றும் ,பரப்ப வேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டார்கள் .இதன் மூலம் எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மேன்மையும் ,தரஜாவும் முஸ்லிம்கள் அறிந்துகொள்ளவும் அவர்களின் உள்ளம் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் முஹப்பத்திலும்,சங்கையிலும் நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை பூண்டார்கள் .

எனினும் ,தேவபந்த்தின் உலமாக்கள் இந்த விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தார்கள் . ஏனெனில் முஸ்லிம்கள் இது விஷயத்தில் எல்லை மீறிவிடுவார்கள் என்று நினைத்தார்கள்.

(3) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களிடத்தில் பெருமானாரின் மீலாதை கொண்டாடுவது அனுமதிக்கப் பட்டதும் ,விரும்பத்தக்கதும் ஆகும் .எனினும் தேவபந்த்தின் உலமாக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர் .

(4) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்கள் பெருமானாரின் புகழ் பாடும் மவ்லித் மஜ்லிஸ்களில் கியாம் (எழுந்து நின்று சங்கை செய்வது ) பாராட்டுக்குரிய செயல் ,எனினும் தேவபந்த்தின் உலமாக்கள் இதை பித்அத் என்று கருதினர் .

(5) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்கள் வலிமார்களின் உரூஸ் அனுமதிக்கப்பட்ட ஒன்றென (அதில் ஷரீயத்திற்கு மாற்றமான செயல்கள் நடைபெறாத பொழுது ) கருதினார்கள் . தேவபந்த்தின் உலமாக்கள் அதை அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றென கருதினர் .

(6) பாத்திஹா ஓதுவது  (மரித்தோருக்கு ஈசால் சவாப் செய்தல் ) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களிடத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயல் (அதில் ஷரீயத்திற்கு மாற்றமான செயல்கள் நடைபெறாத பொழுது ) . தேவ்பந்த்தின் உலமாக்கள் அதை அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றென கருதினர் .

சில பத்திகள் கழித்து பேராசிரியர் முஹம்மத் மசூத் அஹ்மத் எழுதுகின்றார்கள் :

தேவபந்த் முன்னோடிகளின் முர்ஷிதும் ஷைகுமான ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களும் இது விஷயங்களில் இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களைப் போன்றே நம்பிக்கை கொண்டிருந்தார்கள் .அவர்கள் இது விஷயமாக எழுதிய நூல் 'பைஸ்லா ஹப்த் மஸ்லா'  .இந்த இரு பிரிவினரையும் ஒன்றிணைக்கும் வண்ணம் இந்த நூல் எழுதபட்டது  .

எனினும் தேவ்பந்தின் உலமாக்கள் அன்னாரின் கருத்துக்களை ஏற்கவில்லை . "
[நூல்- இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி ,பக்கம் 37-38,காதிரி கிதாப் கர் ,பரேலி ,பேராசிரியர் முஹம்மத் மசூத் அஹ்மத் ]

ஸலபுகளில் ஆரம்பித்து கலபுகள் வரை எல்லோரதும் ஏகோபித்த முடிவு நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை அவமதிப்பது கடுமையான குற்றம் மற்றும் குப்ரை வெளிப்படுத்தும் செயலாகும் . குர்ஆன் ,ஹதீத் மற்றும் ஸஹாபாக்கள் .தாபியீன்களுடைய சொற்கள் இந்த சட்டத்தின் ஆதாரமாக அமைகின்றன .

இது விஷயமாக தாருல் உலூம் தேவபந்த்தின் ஷைகுல் ஹதீத் மவ்லானா ஹுசைன் அஹ்மத் டாண்டவி இது விஷயமாக எழுதுகின்றார்கள் ,
'நபிகள் நாயகம்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை அவமதிப்பது  குப்ராகும் . தெளிவான அவமதிப்பை விடுங்கள் ,ஒரு மனிதன் (தெளிவற்ற சொல்லாடல் காரணமாக )அவமதிப்பை ஒத்திருக்கும் சொற்களை பிரயோகிப்பானேயானால்  ,இதுவும் குப்ர் என்னும் தீர்ப்பை வழங்கும் காரணமாகும் . '
[நூல் - மக்தூபாத் ஷைகுல் இஸ்லாம் ,வால்யூம் 2,பக்கம் 165]

இதைப் போன்றே இல்ஹாத் மற்றும் ஜந்தகா  வும் குப்ர்  . இன்னும் ஷரீயத்தின் ஆதாரங்களை சேகரித்த பின்பு , தீனுடைய அடிப்படை நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மறுக்கும் ஒருவரை காபிர் என்று தீர்ப்பு அளிப்பது கடமை . மவ்லானா அமீன் அஹ்சன் இஸ்லாஹி ,மத்ரஸத்துல் இஸ்லாஹ் (ஆசம்கர் ,உத்தர்பிரதேஷ்  ) ஒரு கடிதத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள் ,
'மவ்லானா தானவி அவர்களின் பத்வா, மவ்லானா ஷிப்லி நுஃமானி அவர்களும் மவ்லனா ஹமீதுத்தீன் பாராஹி அவர்களும் காபிர் இன்னும் மத்ரசத்துள் இஸ்லாஹ் அவர்களின் பணியில் ஒரு அங்கம் வகிப்பதால் ,அது குப்ருடைய மத்ரஸா இன்னும் அதன் குப்ரியத் எந்த அளவுக்கு உள்ளதென்றால்  அந்த மத்ரஸாவின் தாவா பணிகளில் கலந்து கொள்ளும் உலமாக்கள் முல்கித் மற்றும் காபிர்கள்   என்று வெளியானது  '
[நூல் - ஹக்கீமுல் உம்மத் ,பக்கம் 475 , ஆசிரியர் - அப்துல் மஜீத் தைராபாதி ]
Hakeemul Ummath Book

அஷ்ரப் அலி தான்வியின் மாணவர் மற்றும் கலீபா அப்துல் மஜீத் தைராபாதி ,அஷ்ரப் அலி தான்விக்கு ஓர் கடிதம் எழுதி அதில் மவ்லானா ஷிப்லி நுஃமானி ,மவ்லானா ஹமீதுத்தீன் பராஹி ஆகியோரின் அறிவாற்றல்,தக்வா,மார்க்கப் பணிகள் ஆகியவற்றை   புகழ்ந்து எழுதினார். அஷ்ரப் அலி தானவி பதில் பின்வருமாறு எழுதினார் .
'இவை எல்லாம் செயல்கள் (அமல் ) . நம்பிக்கை இதை விட்டும் தனித்த ஒரு விஷயம் . நல்ல நம்பிக்கை தீய செயல்களுடன் இணைக்கப்படலாம் , எவ்வாறு தீய கொள்கைகளுடன் நன் நம்பிக்கை இணைந்திருப்பது போல் .'
[நூல் - ஹக்கீமுல் உம்மத் ,பக்கம் 476 , ஆசிரியர் - அப்துல் மஜீத் தைராபாதி ]

இந்த தலைப்பில் மேலதிக விபரங்கள் பின்வரும் நூற்களில் காணலாம் .
கிதாப் அல் ஷிபா - காழி இயாழ் அல் மாலிகி அல் அந்தலூசி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) , அஸ் சரீம் அல் மசலூல் - இப்னு தைமிய்யா , இஃபார் அல் முல்கிதீன் - அன்வர் ஷாஹ் காஷ்மீரி (ஷைகுல் ஹதீத் ,தாருல் உலூம் தேவபந்த் ) , அஷத்துல் அத்ஹாப்  - முர்தஸா ஹசன் தர்பாங்வி (முதன்மை கல்வி செயலர் ,தேவபந்த் ) .இரண்டு தற்கால புதிய புத்தகங்கள் நமூஸ் ஏ ரஸூல் அவ்ர் கானூன் ஏ தவ்ஹீன் ஏ ரிஸாலத் - நீதிபதி முஹம்மத் இஸ்மாயில் குரேஷி , குஸ்தாக் ஏ ரஸூல் கி ஷரீ ஹைசியத் - முப் தி  முஹம்மத் குல் ரஹ்மான் காதிரி .

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் நபித்துவத்தின் புனிதத்தை பாதுகாத்ததோடு , உறுதி செய்து நிறுவப்பட்ட நம்பிக்கைகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலுக்கு எதிராக ஜிஹாத் புரிந்தனர் .

அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி ,இமாமே அஹ்லுஸ் ஸுன்னாஹ் மவ்லானா அஹ்மத் ரிழா ஹனபி காதிரி பர்கத்தி பரேலி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை தமது எழுத்துக்களின் மூலம் காத்தார் .அன்னாரின் நூற்கள் கன்சூல் ஈமான் பீ தர்ஜூமத்துல் குர்ஆன் ,அல் அதாயா அல் நபவிய்யா பி அல் பதாவா அல் ரிழ்விய்யா ,ஜத் அல் மும்தர் அலா ரத் அல் முஹ்தர் , ஹதாயிகே பக்ஷிஷ் மற்றும் தவ்லா அல் மக்கியா ஆகியவை அத்தகைய குழப்பங்களுக்கு எதிராக   அன்னாரின் முயற்சியின் ஆதாரங்கள் .

அன்னாருடைய மார்க்க சேவைகளின் ஒரு பகுதி தான் பதாவா அல் ஹரமைன் ரஜபி நத்வத் அல் மைன் (ஹிஜ்ரி 1317 , 1899 ஆம் ஆண்டு ), அல் முஸ்தமத் அல் முஸ்தநத் (ஹிஜ்ரி 1320, 1902 ஆம் ஆண்டு ), ஹுஸாம் அல் ஹரமைன் (ஹிஜ்ரி  1324 ) ஆகியவற்றில் அவர்கள் மேற்கூறப்பட்ட தேவபந்தி முன்னோடிகளின் கூற்று குப்ர் என்று  மார்க்கத் தீர்ப்பு வழங்கி ,அதனை ஹரமைனின் உலமாக்களிடம் சமர்ப்பித்தார் .அவர்கள் அதற்கு ஒப்புதல் (தக்ரீஜ் ) வழங்கினார்கள் .

இது பற்றி மேலதிக விபரங்களுக்கு பாஜிலே பரேல்வி உலமா ஏ ஹிஜாஸ் கி நஜர் மேன் என்று பேராசிரியர் .முனைவர் .மசூத் அஹ்மத் எழுதிய நூலைக் காணவும் .

ஒரு பாகீஹ் மற்றும் முப்தியாக இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்கள் ஆயிரக்கணக்கான பத்வாக்களை எழுதி,எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்தனர் . அவர்களின் சமகால ஸுன்னி உலமாக்களும் இந்த சேவையை செய்தனர் ஆயினும் ,இமாம் அஹ்மத் ரிழா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் அந்தஸ்தானது அவர்கள் அனைவரின் சார்பாக பேசுபவராகயிருந்தது(செய்தி தொடர்பாளர் - Spokeperson) . அவர்கள்  எப்பொழுதும் பொய்யான நம்பிக்கைகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தாந்தங்கள் ஆகிவற்றை எதிர்ப்பதில் முன்னோடியாக விளங்கினார் .

அன்னார் வஹாபிய பிரிவு மற்றும் அதன் கிளை பிரிவுகளை மிகச் சிறப்புமிக்க தனது திறமையினால் மறுத்ததன் காரணமாக ,பல போலியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்கள் .

அன்னார்  தமது நூலான 'தம்ஹீதே ஈமான்' நூலில் எழுதுகின்றார்கள் ,

Tahmeed-e-Iman

' பொதுமக்களை ஏமாற்ற இந்த ஆட்கள் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளனர் . அவர்கள் கூறுகின்றார்கள் , 'அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் இத்தகைய உலமாக்களின் நம்பகத்தன்மை எத்தகையது ? அவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் தக்பீர் செய்கின்றனர் .அவர்களின் இயந்திரங்கள் மக்களை காபிர் என்று மட்டுமே கூறும் கட்டளைகளை கடைந்து அனுப்புகின்றன .
அவர்கள் மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி , மவ்லவி ஷாஹ் இஷ்ஹாக் ,மவ்லவி அப்துல் ஹை ஆகியோரை காபிர் என்று பத்வா கொடுத்துள்ளனர் . '
(இங்கு இமாம் அஹ்மத் ரிழா அவர்கள் தாம் இவர்கள் மீது குப்ர் பத்வா வெளியிடவில்லை என்கின்றார் )

இன்னும் அவர்களில் சிறிதும் வெட்கம் இல்லாதோர் நான் - ஷாஹ் அப்துல் அஜீஸ் ,ஷாஹ் வலியுல்லாஹ் ,ஹாஜி இம்தாதுல்லாஹ் ,மவ்லானா ஷாஹ் பஜ்லூர் ரஹ்மான் (அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் ) ஆகியோரையும் ,இன்னும் அவர்களில் வெட்கம் என்னும் எல்லையைக் கடந்தவர்கள் ,நான் ஷைக் முஜத்தித் அல்பதானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களை காபிர் என்று கூறியதாக   - நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன் - கூறுகின்றார்கள் . (தாம் அவ்வாறு கூறவில்லை என்று வெளிப்படுத்துகின்றார்கள் ).

அவர்கள் யாரிடம் எல்லாம் தொடர்பு கொள்கின்றார்களோ ,அத்தகையோர் பெருமதிப்பு வைத்திருக்கும் பெரியார்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது நான் தக்பீர் செய்ததாக கூறுகின்றனர் . இன்னும் உள்ளபடியே அவர்களில் சிலர் மவ்லானா முஹம்மது ஹுசைன் இலாஹாபதி அவர்களிடம் சென்று , நான் ஷைகுல் அக்பர் முஹைனுதீன் இப்னு அரபி (குத்திஸிர்ரஹு ) அவர்களின் மீது தக்பீர் செய்ததாகக் கூறினர் -   நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன் .

அல்லாஹுதஆலா சிங்ககைமிகு மவ்லானா அவர்களுக்கு சுவர்க்க பதியில் உயர்வான இடத்தை வழங்குவானாக ,அன்னார் அந்த பொய்யர்களை நம்பவில்லை . மாறாக அவர்கள் திருக்குர்ஆன் ஷரீபின் வசனத்திற்கு கீழ்ப்படிந்தார்கள் ,
'நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். '  [49:6]
இன்னும் நான் அவ்வாறு கூறினேனா என்று என்னிடம் கேட்டு எழுதினார்கள் .

நான் அத்தகைய கூற்றை மறுக்கும் விதமாக நூல் வடிவில் ஒரு மறுப்புரை அவருக்கு பதிலாக எழுதினேன் , இன்ஜா அல் பாரி அந்த வஸ்வாஸில் முப்தாரி  . அதை வாசித்த மவுலானா அவர்கள் 'லா ஹவ்ல வலா ஹுவ்வத்த இல்லா பில்லாஹ் ' என்றனர் . வஞ்சகத்தினால் முற்றுகையிட முயன்றவர்களின் சதியை முறியடித்தவர்களாக .  
[நூல்- தம்ஹீதே ஈமான் ,பக்கம் 45-46,இமாம் அஹ்மத் ரிழா பரேல்வி ,இதாரா மஃரிப் ஏ நுஃமானியா ,லாகூர் ]

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் முக்கியத்துவம் வாய்ந்த உலமாக்களில் ஒருவரான அல்லாமா ஸெய்யித் அஹ்மத் காஜ்மி அம்ரோஹாவி (அன்வாருல் உலூம் ,முல்தான் ) எழுதுகின்றார்கள் ,
'தக்பீர் (ஒருவரை காபிர் என்று பத்வா வழங்குவது ) உடைய விஷயத்தில் , எப்பொழுது எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் ,யாரேனும் குப்ருடைய வாசகங்களை உபயோகித்தால் ,நாம் அவரின் மீது தக்பீருடைய பத்வா வழங்குவதை விட்டும் விலக மாட்டோம் . அவர் தேவபந்தியோ ,பரேல்வியோ ,லீகைச் சார்ந்தவரோ ,காங்கிரசியோ ,நேச்சரியோ (இயற்கைவாதிகள் ),நத்வியோ யாராக இருந்தாலும் சரி . இது விஷயத்தில் நாம் நண்பரா அல்லது எதிரியா என்று பாகுபாடு பார்ப்பதில்லை .

இன்னும் நிச்சயமாக இதன் அர்த்தம் ,லீகைச் சார்ந்த ஒருவர் குப்ருடைய வாசகத்தை உபயோகித்தால் ,லீகைச் சார்ந்த எல்லோரும் காபிர்கள் என்று அர்த்தம் அல்ல அல்லது ஓர் நத்வி குப்ருடைய செயலை செய்தால் எல்லா நத்விக்களும் காபிர் அல்ல என்பதாம் . நாங்கள் தேவபந்த் ஊரில்  வசிக்கும்  எல்லா நபர்களையும், ஒரு சில தேவபந்த்தை சார்ந்தவர்கள் எழுதிய குப்ரான வாசகங்களுக்காக நாம் காபிர்கள் என்று கூறவில்லை .

நாமும் நமது முன்னோடிகளும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது , நாங்கள் தேவபந்த் அல்லது லக்னோ வாசிகள் அனைவரையும் காபிர்கள் என்ற மார்க்க தீர்ப்பு அவர்கள் அங்கு வசிப்பதன் காரணமாகவே நாம் வழங்கிவிடவில்லை . எம்மைப் பொறுத்தவரை , யார் ஒருவன் அல்லாஹுத்தஆலா வை,அவனது நபிமார்களை ,அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களை  நிந்தனை செய்கின்றானோ ,பல முறை எச்சரித்தும் தவ்பா செய்யவில்லையோ அவன் தான் காபிர் .இன்னும் நாங்கள் எத்தகையோர் அத்தகைய குப்ரை அறிந்து கொண்டு ,அவமதிப்பு அளிக்கும் அதன் அசல் அர்த்தங்களை அறிந்து கொண்டு , அத்தகைய அவமதிப்புகளை உண்மை என்று ஏற்று ,அவமரியாதை செய்பவர்களை நம்பிக்கையாளராகவும் . தங்களது தலைவர்களாகவும் ஏற்றுக் கொண்டுள்ளாரோ அவர்களை நாம் காபிர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றோம் .

இது தவிர , யாதொரு முஸ்லிமையும் நாம் காபிர் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில்லை . நாம் காபிர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கிய நபர்கள் மிகவும் குறைவு மற்றும் வறையரைப்படுத்தப்பட்டது (குறிப்பிட்ட பிரச்சனையின் அடிப்படையில் ) . இந்த குறிப்பிட்ட நபர்களைத் தவிர தேவ்பந்த் அல்லது பரேலியின் எந்த ஒரு முஸ்லிமும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை . அது போலவே லீக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் விஷயத்திலும் இதே நிலைப்பாடு தான் . எல்லா முஸ்லிம்களையும் நாம் முஸ்லிம்கள் என்றே கருதுகின்றோம் .'
al haq ul mubeen

[நூல்- அல் ஹக் அல் முபீன் ,பக்கம்  24-25 , அல்லாமா அஹ்மத் சயீத் காஜ்மி ,முல்தான் ]

முப்தி முஹம்மத் ஷரீப் அல் ஹக் அம்ஜதி , புஹாரி ஷரீபின் விரிவுரையாளரும் , தாருல் இப்தா,ஜாமியா அஷ்ரபியா ,முபாரக்பூரின் (இந்தியா ) தலைவரும் ஆனவர்கள்  எழுதுகின்றார்கள் .
' பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கு பாமர மக்களிடம் வழக்கத்தில் உள்ள சொல்லாடல்(உர்ப் ) மட்டும்  போதுமானது அல்ல .
எனவே தம்மை தேவ்பந்தி என்று கூறிக் கொள்ளும் நபர் ,மற்றவர்களால் தேவ்பந்தி என்று அழைக்கப்படும் நபர் ,இந்த நான்கு தேவ்பந்துடைய   உலமாக்களை தம்முடைய  தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்பவர் ,இன்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை பித்அத்தி என்று அடையாளமிடுபவர் , ஆனால் எதார்த்தத்தில் இந்த நான்கு தேவ்பந்தி உலமாக்களின் குப்ர் வாக்கியங்களை அறியாதிருந்தால் ,அத்தகைய நபர் தேவ்பந்தி அல்ல (காபிர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர்) .அத்தகைய நபர் நம்பிக்கை மறுப்பாளர் அல்ல இன்னும் அவரது ஜனாஸா தொழுகையை தொழுவது இறைமறுப்பு அல்ல  .அல்லாஹ் நன்கு அறிந்தவன் .  '
[நூல்- மஆரிப் ஷரஹ் புஹாரி , பக்கம் 914,ரஜா அகாடமி  ]

மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு - ஷைகு ஷரீப் அல் அம்ஜதி அவர்கள் 'எதார்த்தத்தில் தேவ்பந்தி இல்லை ' என்று குறிப்பிடக் காரணம் ,இமாம் அஹ்மத் ரிழா மற்றும் ஏனைய ஸுன்னி உலமாக்களால் வழங்கப்பட்ட  பத்வாவில் , 'தேவ்பந்தி' என்று பதம் ஒரு குறிப்பிட்ட சாராரையே குறிக்கும் .















Related Posts Plugin for WordPress, Blogger...