Showing posts with label deobandi belief tamil. Show all posts
Showing posts with label deobandi belief tamil. Show all posts

Monday, 18 November 2019

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தும் ,மீலாதும்

கைர் முகல்லித் வஹாபிகள் போன்று , தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் சங்கைமிகு ரபீயுல் அவ்வல் மாதம் கொண்டாடி  மகிழும் கண்மணி நாயகம் صلى الله عليه و سلم அவர்களின்  மீலாத் ஷரீபை பித்அத் ,அனுமதியில்லாத செயல் என்ற கொள்கை கொண்டவர்களே .

ஆனால் இன்று சமீபகாலமாக தமிழக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  மீலாத் குறித்த தமது போலி நாடகத்தை இணைய வெளிகளில் (பதிவு தளங்கள் , முகநூல் ,வாட்சாப் போன்றவற்றில் ) நடத்தி வருகின்றனர் . தாங்களும் , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் போன்று மீலாத் கொண்டாடுபவர்கள் தாம் . தங்களின் மீது சுமத்தப்படும் வீண் பழி இது என்றும் , அத்துடன் தங்களின் வழக்கமான பல்லவியான பரேல்விகளின் அபாண்டமான அவதூறு என்றும் .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் முன்னோடிகள் மீலாத் பற்றி என்ன எழுதியுள்ளனர் , இதுநாள் வரை  தேவ்பந்தி தப்லீக் கொள்கை பரப்பும் அவர்களது மத்ரஸாக்களின் பத்வாக்கள் என்ன என்றும் ஆதாரங்களுடன் பார்ப்போம் .

உலகெங்கிலும் ரபீயுல் அவ்வல் மாதம் பரவலாக ஒதப்படுவது புர்தா ஷரீப் , பர்சன்ஜி மவ்லித்,மங்கூஸ் மவ்லித் ,ஹரீரி மவ்லித்    மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்த இறைநேசர்கள் கோர்வை செய்த மவ்லித் .தமிழகத்தில் பரவலாக ஒதப்படுவது ஸுப்ஹான மவ்லித்   ஆகும் . இதில் பெருமானார் صلى الله عليه و سلم அவர்களின் ஜனனத்தை குறிக்கும் பகுதியை ஓதும் பொழுது கியாம் நிலையில் எழுந்து நின்று சங்கை செய்வதும் , கண்மணி நாயகம் صلى الله عليه و سلم அவர்களும் , இறைநேசர்களும் , மலக்குமார்களும் ஹாலிராகின்றார்கள் என்பதும் அஹ்லுஸ் ஸுன்னத்  வல் ஜமாத்தினர் தம் நம்பிக்கை . 

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் முன்னோடி , இந்திய வஹாபியிசத்தின் மூலம் இஸ்மாயில் திஹ்லவி ஹாழிர் , நாளிர் நம்பிக்கை பற்றி தமது தக்வியத்துள் ஈமான் , நூல் பக்கம் 8ல் 

                                 

" அல்லாஹ்விற்கு இடைபொருளாக இருப்பவர் ஹாழிர் , நாளிர் என்றும் , அவர்  விவகாரங்களில் விவாதிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்றும் நம்பிக்கை கொள்பவர் ஷிர்க்கில் உள்ளார் . அந்த இடைப்பொருள் நபிமார்களோ ,வலிமார்களோ ,மலக்குகளோ ,ஜின்களோ என்று எதுவாக இருந்தாலும் அதில் வேறுபாடு இல்லை . இத்தகைய செயலில் ஈடுபடுபவர் காபிர் - அவர் நபிமார்களோ ,வலிமார்களோ ,ஷுஹதாக்கள் , ஷைகுமார்கள் , ஜின்கள் என யாரைக் கொண்டு தேடினாலும் சரியே " 


தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர்  தம் மற்றோர் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 41 ல் 

"மவ்லித் பித்அத் ,கியாம் நிலையில் எழுத்து நிற்பது  பித்அத்  "  என்று எழுதியுள்ளார் . 

இனி காலம் ,காலமாக பொய்யும் ,புரட்டும் மட்டுமே பேசி மக்களை ஏமாற்றும் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரது மற்றோரு வரலாற்றுத் திரிபு தாங்கள் இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களது மஸ்லக்கை சார்ந்தவர்கள்  என்று பேசித் திரிவது . ஆனால் இந்த முனாஃபிக்குகளுக்கும்  ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களது மஸ்லக்குக்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பது அன்னார் தம் குடும்பத்தினரும் , அவர்களது ஸில்ஸிலா என்னும் ஞான வழிப்பாட்டை ஏற்று நடப்பவர்களும் இன்று வரை நமக்கு உணர்த்தி வருகின்றார்கள் .

ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 50 ல் 



கேள்வி: ஷரீயத்திற்கு மாற்றம் இல்லாத வகையில் நடத்தப்படும் மவ்லித் ,உரூஸ் நிகழ்வுகள் - உதாரணமாக இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் நடத்தியது போன்று ; அவ்வாறானதை நீங்கள் அனுமதிக்கப்பட்டது என்று கூறுகின்றீர்களா , இல்லையா ? இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள்  உண்மையாகவே வ்லித் ,உரூஸ் மஜ்லிஸ்கள் நடத்தினார்களா ? 

பதில் : மவ்லித் நிகழ்வை கொண்டாட ஓர் கூட்டத்தை ஏற்பாடு செய்வது - அது ஷரீயத்திற்கு மாற்றம் இல்லாத வகையில் நடத்தப்படுவதாக இருந்தாலும் , ஆனால் அது விழாவாகவும் ,மக்களை அழைப்பதுமாகவும் ( இஹ்திமாம் , ததயி)  இருப்பதால் , இக்காலத்தில் அவ்வாறு செய்வது சரியல்ல . உரூஸ் நிகழ்வுக்கும் இதே பதிலே . பல விஷயங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டதாக ( முபாஹ் )  ஆக இருந்தது , ஆனால் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது . மவ்லித் ,உரூஸ் மஜ்லிஸ்கள் இத்தகைய ஒன்றுதான் .


நமக்கு உண்டாகும் கேள்வி சிராஜுல் ஹிந்த் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள்  மவ்லித் அல்லது உரூஸ் மஜ்லிஸ்களில் எவ்வாறு கலந்து கொண்டனர்  - மக்கள் கூடுவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் , அல்லது ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதியில் அவர்களை ஒன்றுகூட அழைக்காமல் ? தேவ்பந்த் மத்ரஸாவில் எந்த ஒரு நிகழ்வும்  மக்கள் கூடுவதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் , அல்லது ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் தேதியில் அவர்களை ஒன்றுகூட அழைக்காமல் நடக்கின்றதா என்ன ? குப்ரான மாற்று மத சாமியார்களை தேவ்பந்தில் மேடையேற்றி அவர்களிடம் ஞானம் பெறும் நிகழ்வுகள் கூட இவ்வாறு தான் தேவ்பந்தில் நடைபெற்றதா ? ஷரீயத்தை கடுமையாக பின்பற்றுபவர்கள் என்று வாய் சவடால் விடும்  தேவ்பந்தி உலமாக்கள் இதை கண்டிப்பார்களா ?



https://www.indiatoday.in/latest-headlines/story/ramdev-charms-deoband-crowd-59988-2009-11-04

  சிராஜுல் ஹிந்த் இமாம் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் இவை குறித்து ஆட்சேபம் தெரிவித்த மவ்லவி அப்துல் ஹக்கீம் பஞ்சாபி என்பவருக்கு பதில் அளிக்கும் விதமாக எழுதினார்கள் :

Zubdatu’n Nasāyiĥ_Page 17,36,42


" எதைக் கொண்டு விமர்சனம் செய்கின்றாரோ அதைப் பற்றிய விமர்சிப்பவரின் அறியாமையே விமர்சனத்தின் காரணம் . ஷரீயத்தின் சட்டதிட்டங்களைக் கொண்டு எவையெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அவற்றை தவிர வேறு எதையும் யாரும் கடமையான செயலென கூற இயலாது . ஆம் , ஸாலிஹான முஸ்லிம்களின் கபூரை ஜியாரத் செய்து , நல்லமல்கள் செய்து அதன் மூலம் பரக்கத்தை பெற்று , குர்ஆன் ஓதி ,துஆ செய்து அதன்பின்னர் உணவு அல்லது இனிப்பு வகைகளை பகிர்வது முஸ்தஹபான ஓர் காரியம் , அறிஞர்களின் இஜ்மா பிரகாரம் நன்மையான செயல் . உரூஸ் என்று நாள் குறிப்பது ,ரூஹ் இப்பூவுலகை(தார் அல் அமல் )  பிரிந்து  வெகுமதியின் உலகை(தார் அல் தவாப் )   அடைந்ததை  நினைவு கூறும் பொருட்டே அன்றே அல்லாமல் வேறில்லை . அதனை எந்த ஒரு நாளிலும் செய்யலாம் , அது வெற்றிக்கும் , இரட்சிப்புக்கும் காரணமாகும் செயல் தான் ."

[நூல் - ஜுப்ததுன்  நஸாயிஹ் ,பக்கம் 42 ] 

ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 72 ல் 

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களும் ,அவர்களது தகப்பனார் ஷாஹ் அப்துர் ரஹீம் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்களும் மவ்லித் மஜ்லிஸ்கள் நடத்தியதாக 'துர் அல் தாமீன் 'நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதையும்  , இமாம் ஸுயூத்தி رضي الله عنه‎ அவர்களும் அதனை ஏற்றமிகு செயல் ( முஸ்தஹ்சின் ) என்று தமது 'ஹுஸ்ன் அல் மகாசித்  'நூலில்   குறிப்பிடப்பட்டுளதையும் மேற்கோளிட்டு கேள்விளையாளர் மவ்லித் பற்றி வினவுகின்றார் .

திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்து , தாம் நெருக்கடியில் சிக்கியதை அறிந்த  ரஷீத் அஹ்மத் கங்கோஹி , ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களை பித்அத்தி என்றும்  சொல்ல முடியாது,  மவ்லித் ஆகுமானது என்று தனது வஹாபிய கொள்கைக்கு மாறாகவும் சொல்ல முடியாது என்பதால் ,மேலோட்டமாக பட்டும்படாமல் இந்த இடத்தில் தமது கருத்தை பதிவிடுகிறார் .

 ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ அவர்கள் மவ்லித் மஜ்லிஸ்கள் ஆகுமானது என்றும் கண்மணி நாயகம் صلى الله عليه و سلم  அவர்களின் பிறப்பை குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதே மவ்லித் மஜ்லிஸ்களின் நோக்கம் என்பதே உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயம் என்று கூறினாலும் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது முடிவில் தடுமாறவில்லை .


"  வெகுமதியை எந்த நாளிலும் எத்தி வைப்பது ஆகுமானது ,ஷரீயத்தில் அதற்கு என்று குறிப்பிட்ட எந்த நாள் , நேரம் தான் என்பது கிடையாது . மேலும் அதனை பிறந்த நாளிலோ அல்லது மறைந்த நாளிலோ எத்தி வைப்பதும் ஆகுமானது . எனவே குறிப்பிட்ட நாளில் தான் நிகழாத வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல் , ஏதாகிலும் ஒரு நாளில் செய்தால் , மற்றும் வெகுமதியை கொடையளிக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்தால் ,அத்தகைய நிகழ்வில் எந்த தீங்கும் இல்லை . இப்படி ஒரு செயலை அனைவரும் அனுமதிக்கப்பட்ட ஒன்றெனவே கூறுவர் . ஷாஹ் அப்துல் ரஹீம் அவர்களின் செயல்முறையும் இதன் அடிப்படையிலேயே நிகழ்ந்தது , இதனை ஒரு ஆதாரமாக நம் காலத்தில் நடக்கும் பித்அத்திற்கு எடுக்க இயலாது .

மேலும் , நிகழ்வில் உணவை  அளித்தது நன்மையை தேடிக் கொள்ளும் பொருட்டிலே தான் ;ஏனெனில் அதுகூட நாயகத்துடன் உண்டான தொடர்பின் காரணமாக ( என்று தான் மேற்கோளில் உள்ளது ), கண்மணி நாயகம் அவர்களின் பிறப்பை குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ அல்லது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் மவ்லித் ஒருங்கிணைப்பு மஜ்லிஸ் என்றோ இல்லை . எனவே மவ்லித் கொண்டாட எந்த ஆதாரமும் இல்லை . மேலும் ஸுயூத்தி அவர்களது காலத்தில் நமது காலத்தில் உள்ள பித்அத்துகள் இல்லை . ஸுயூத்தி அவர்களது மகாஸித் பற்றி மேலும் அறிய பராஹீனே காத்தியாவை பார்க்கவும் . அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் "


ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 90 ல் 


மவ்லித் கொண்டாடுவதன் அனுமதி பற்றியும் , ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி  رضي الله عنه‎ அவர்கள் மவ்லித் மஜ்லிஸ்களில் கலந்து கொள்வது பற்றியும் கேள்வியாளர் வினவுகின்றார் ; ஆனால் இது ரஷீத் அஹ்மத் கங்கோஹியை ஈர்க்கவில்லை :



மவ்லித் மஜ்லிஸ்கள் குறித்த விரிவான ஆய்வுகளுக்கு பராஹீனே காத்தியா நூலினை பார்க்கவும் . ஸுபியாக்கள் ,ஷெய்குமார்களது,முன்னோடி அறிஞர்கள் ஆகியோரது  சொல் ,செயல்  ஆதாரமாக ஏற்க இயலாது .

நாயகம் அவர்களது சொல் ,செயல் மற்றும் முஜ்தகித் இமாம்களின் கருத்துக்களையே ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியும் .


ஆனால் இதே தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள் , அவர்களின் மீது  'ஹுஸாமுல் ஹரமைன் 'பத்வா   சங்கைமிகு மக்கா ,மதீனா உலமாக்கள் வழங்கியதும் , என்ன செய்தார்கள் .

கலீல் அஹமத் அம்பேட்வி ' அல் முஹன்னத்' நூலில் மவ்லித் பற்றி என்ன எழுதி  பத்வா கேட்டார் ?  இந்நிலையில் வாசகர்கள் ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது பதாவா ரஷீதியா ,பக்கம் 50 ல்  எழுதியுள்ளதை மீண்டும் ஒருமுறை பாருங்கள் .

மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி தானே கேள்விகளைக் கேட்டு ,அதற்கு தேவ்பந்திகளின் நிலைப்பாடு பல்வேறு விஷயங்களில் என்ன என்பதை தமது பதிலாக எழுதியுள்ளார் .

கேள்வி எண் 21: [அல் முஹன்னத் ]


      " நீங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மெளலித் கொண்டாட்டங்கள் ஷரீயத்தின் படி அனுமதிக்கப்படாத ஒன்று என்றும் அது குற்றம்(கபீஹ்),பித்அத்,ஹராம் என்று  சொல்கின்றீர்களா ? அல்லது இது விஷயத்தில் வேறு ஏதாவது கூறுகின்றீர்களா ? "

இனி மெளலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி கடுகளவு நேர்மையுடைய ஒரு தேவ்பந்தியாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்,

 " ஆமாம்,எங்களின் ஸ்தாபகர் இஸ்மாயில் திஹ்லவி இம்மாதிரியான கொண்டாட்டங்களை முஷ்ரிக்கான நடைமுறை என்கின்றார் .எங்களின் ஷைகு ரஷீத் அஹ்மத் அனைத்து மெளலித் வைபவங்களையும் அனுமதியில்லாதது என்று தனது நூல்களிலும்,பத்வாக்களிலும் கூறியுள்ளார்.நாமும் இம்மாதிரியான மெளலித் விழாக்கள் ஹிந்துக்கள் தங்களின் கடவுள் கிருஷ்ணனை கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி விழா போன்று என்று கூறியுள்ளோம் "(பதாவா ரஷீதியா ,பராஹீனே காத்தியா )

இந்த பதிலை கலீல் அஹமத் தனது அல் முஹன்னதில் எழுதியிருந்தால் எத்துணை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அதில் கையொப்பமிடுவார்கள் !!

ஆனால்,கலீல் அஹ்மத், வஹ்ஹாபி பித்னா எவ்வாறு அரபுலகில் வேகமாக பரவி வந்ததையும், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த சத்திய உலமாக்கள் அதை எதிர்த்து வந்ததையும் அறியும் அளவுக்கு அறிவு பெற்றிருந்தார் .

கலீல் அஹ்மத் அல் முஹன்னதில் என்ன எழுதினார் என்று அறியும் முன் தேவ்பந்திகளின் மற்றொரு அறிஞரான அன்வர் ஷாஹ் காஷ்மீரி(இறப்பு 1933) மெளலித் பற்றி என்ன எழுதினார் என்று பார்ப்போம்
Anwar Shah Kashmiri

وأحدثه صوفي في عهد سلطان إربل سنة ( 600 ) ، ولم يكن له أصل من الشريعة الغراء
العرف الشذي شرح سنن الترمذي - (2 / 82 مؤسسة ضحى للنشر والتوزيع)
"அது சுல்தான் இப்ரில் காலத்தைச் சார்ந்த ஸூபி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது மேலும் இதற்கு நமது தூய்மையான ஷரீயத்தில் எந்த ஆதாரமும் இல்லை " 

இனி,மெளலானா கலீல் அஹமதுவின் பதில் அல் முஹன்னதில் என்ன என்பதைப் பார்ப்போம் .


"எந்த ஒரு முஸ்லீமுக்கும் பெருமானார் صلى الله عليه و سلم அவர்களின் பிறப்பை கொண்டாடுவதிலோ,பேசுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் யாரும் பெருமானார் அவர்களின் செருப்பைப் பற்றியோ அல்லது அவர்கள் பிரயாணம் செய்த பிரயாணியைப் பற்றி பேசுவதையோ கூட பித்அத் என்று சொல்ல முடியாது.பெருமானார் அவர்களுடன் தொடர்புடைய எல்லா சம்பவங்களையும் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் பேசுவது அழகான ஒரு செயலாகும் இன்னும் எங்களிடத்தில் அது 'முஸ்தகப் '.அது பெருமானார் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியோ அல்லது அன்னாரின் கனவுகளைப் பற்றி பேசி பிறப்பைக் கொண்டாடுவது எங்களிடத்தில் பரிந்துரைக்கப்படுகின்ற ஒரு செயலாகும்" .

ஆக கலீல் அஹ்மத் அரபுலகை சார்ந்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்களை திருப்திபடுத்தும் பொருட்டு இந்த பதிலை அல் முஹன்னதில் எழுதினார் என்பது திண்ணம் .

மேலும் சில வரிகளுக்கு பின் அவர் எழுதுகிறார் ,

"நாம் பெருமானாரின் மெளலித் பற்றி பேசுவதற்கு எதிரானவர்கள் அல்லர் ,ஆனால் அதில் கலந்து விட்ட தவறான விஷயங்களுக்கு எதிர்ர்பாக உள்ளோம் .உதாரணமாக நீங்கள் இந்தியாவில் உள்ள மெளலித் மஜ்லிஸ்களில் ஜோடிக்கப்பட்ட விஷயங்கள் (மவ்து ) பேசப்படுகின்றன ,ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த சபைகளில் ஒன்றாக கலந்து கொள்கின்றனர் , மின்விளக்குகளும் தேவையற்ற வீண் விரயங்களும் நடைபெறுகின்றன,இதில் கலந்து கொள்வது  'வாஜிப்' என்று சொல்கின்றனர் ,கலந்து கொள்ளாதவர்களை விமர்சிக்கின்றனர் .இதுவெல்லாம் போக இன்னும் பல ஷரீயத்திற்கு மாற்றமான பல்வேறு விஷயங்கள் எல்லா மெளலித் மஜ்லீஸிலும் நீக்கமற நிறைந்துள்ளன ".


இது அல் முஹன்னதில் உள்ள  பொய்களின் முதல் ஆரம்பம் !

இத்தகைய இரட்டை நாவுள்ள  முனாஃபிக்குகளைப் பற்றித்தான் , திருமறை கூறும் ஸுரா அல் முனாஃபிகூனின் சமகால சாட்சியம் இவர்கள்தான் .

தேவ்பந்த் மத்ரஸாவின் மீலாத் பற்றிய பத்வா




தமிழகத்திலுள்ள தேவ்பந்தி தப்லீக் மத்ரஸாக்களும்  தமது தாய் மத்ரஸாவை பின்பற்றி மீலாத் கூடாது என்று பத்வா அளித்துள்ளனர். அவை காஷிஃபுல் ஹுதா (சென்னை ), அன்வாருல் உலூம் (திருச்சி ),மளாஹிருல் உலூம் (சேலம்),  தற்சமயம் தேவ்பந்தி தப்லீக் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழகத்தின் தாய் மத்ரஸா பாக்கியாத்துஸ் ஸாலிகாத் (வேலூர் ) . இவை மீலாத்திற்கு எதிராக பத்வா வெளியிட்டுள்ளனர் .

இதனை மவ்லானா சலீம் சிராஜி ஹழ்ரத் (முதல்வர் , ஜாமியா நாஸிருஸ்ஸுன்னா ,சென்னை ) அவர்கள் தமது "தப்லீக் ஓர் ஆய்வு "நூலில் ஆவணப்படுத்தியுள்ளனர் .


அத்துடன் இந்த  தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் , மவ்லித் நிகழ்வுகளை மடை மாற்றும் விதமாக Seerah Conference , தமிழில் வரலாற்று நூற்களை படியுங்கள் என்று இலைமறை காயாக தமது வஹாபிய சித்தாந்தந்தை புகுத்துகின்றனர் . இவை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை ,ஆனால் இவற்றை குறிப்பாக ரபீயுல் அவ்வல் மாதத்தில் மீலாத் சமயத்தில் சொல்வது இவர்களின் விஷமத்தனமேயாகும் .




 















காசுக்காக , தாம் வகிக்கும் பதவிக்காக , சமுதாய நிர்ப்பந்தத்தின் காரணமாக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஒரு சில இடங்களில் மீலாத் நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் ,  தமிழக முஸ்லிம்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது ஈமானுக்கு நலம் ! 


Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, 1 June 2015

மரணித்த பின் மீண்டு வந்து உதவும் தேவ்பந்தி மவ்லவி !

அர்வாஹே ஸலாசா ,பக்கம் 242 நூலில் (தேவ்பந்த் அறிஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ) உள்ள ஒரு சிறு சம்பவம் !

Arwahe Salasa,Page 242


மவ்லவி காஸிம் நானோத்வி அல் தேவ்பந்தி மரணித்த பின்பு தமது பூத உடலுடன் மீண்டு வந்து தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறார் .

" ஒரு நாள் பஜ்ர் தொழுகைக்கு பின் மவ்லவி ரபியுத்தீன் சாஹிப் தமது அறைக்கு (தேவபந்த் மதரசாவிற்கு உள் ) மவ்லவி மஹ்மூதுல் ஹசன்  சாஹிப் அவர்களை வருமாறு அழைப்பு விடுத்தார் . மவ்லானா  மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அவ்வழைப்பை ஏற்று ,கதவை திறந்து உள்ளே நுழைந்தார் . அது ஒரு கடுமையான பனிக் காலம் .

மவ்லானா ரபீயுத்தீன் சாஹிப் தமது மேலங்கியை ஆய்வு செய்யுமாறு கூறினார் . மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அதை ஆராய்ந்த பொழுது அவரது மேலங்கி நனைந்திருக்க கண்டார் . மவ்லவி ரபியூத்தீன் சாஹிப் தற்பொழுது தான் மவ்லானா காசிம் நானோத்வி தமது பூத உடலுடன் (ஜசதே உன்சரீ ) தம்மை வந்து சந்தித்ததாகவும் ,அதைக் கண்டு தாம் பயந்து நடுங்கியதால் தமது மேலங்கி நனைந்து விட்டதாகவும் கூறினார் . மவ்லவி காசிம் நானோத்வி ,மவ்லானா மஹ்மூதுல் ஹசன் அவர்களுக்கு தாருல் உலூம் தேவ்பந்தின் ஆசிரியர்களுக்கு இடையில் நடைபெறும் உட் பூசல்களில் தலையிட வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள் . மவ்லவி மக்மூதுல் ஹசன் கூறினார் ,'ஹசரத் நான் உங்கள் கரம் பற்றி தவ்பா செய்கின்றேன் ,இனி இது விஷயத்தில் நான் எதுவும் பேச மாட்டேன் '. "

மேற்கூறிய சம்பவத்தில் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் உஸ்தாதான மவ்லவி காஸிம் நானோத்வி மரணித்து விட்ட பின்பும் மீண்டு வர இயலும் ,அதுவும் தனது பூத உடலுடன் ,தேவ்பந்தின் ஓர் உட்பூசலைத் தீர்க்க வேண்டி !!!!


எனினும் அகிலத்தாருக்கு அருட்கொடையான நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது புனித ரவ்ழா ஷரீபை விட்டு அகல இயலாது என்று பத்வா கொடுத்துள்ளனர் இந்த தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் !

குறிப்பாக மவ்லித் மஜ்லிஸ்களில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை குறிக்கும்  பைத் ஓதும் பொழுது எழுந்து நின்று (கியாமில்  ) சங்கை செய்வது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் நடைமுறை ,ஏனெனில் உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த சபையில்  ஹாழிர் ஆகின்றார்கள் என்பதினால் . இது அநேக வலிமார்களின் அனுபவத்தில் நிகழ்ந்துள்ளதாக வரலாற்று நூல்களில் பதிவாகி உள்ளது .

ஆனால் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள் இவையெல்லாம் இயலாது என்று மறுக்கின்றனர் .

இது பற்றிய தேவ்பந்தின் பத்வா பின்வருமாறு ,

Darul Uloom Deoband Fatwa



கோடிட்ட பகுதியில் பின்வருமாறு உள்ளது ,

' பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறை வாழ்வானது ,ஹயாதே பர்ஜக் , இந்த வாழ்க்கையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பயணிக்க இயலாது (ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ) '




Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 14 May 2015

கண்மணி நாயகம் அவர்களின் நூர் தான் முதல் படைப்பு என்று ஏற்றுக் கொள்ளும் தேவ்பந்திகளின் 'ஹக்கீமுல் உம்மத் '

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கையாகிறது அண்ணலெம் பெருமான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூராகவும் ,பஷராகவும் இருக்கின்றார்கள் என்பது . இந்த நம்பிக்கை அல் குரான்,ஹதீஸ் மற்றும் சத்திய இமாம்களின் இஜ்மாவின் அடிப்படையில் அமைந்த ஒன்று .


எனினும் இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள், கைர்  முகல்லிது வஹாபிகளைப் போன்று தம் மனோ இச்சையைப் பின்பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நூர் என்பதை ஏற்க மறுக்கினர் .


இனி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் இந்நம்பிக்கைக்கான ஆதாரங்களைப் பார்ப்போம் .


குரான் பறை சாற்றுகின்றது ,


   يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ ۚ قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ


வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.  


 [ குர் ஆன் - 5:15 ]


மிகப் பெரும் முபஸ்ஸிரான அல்லாமா அலூஸி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) இந்த ஆயத்திற்கு தப்ஸீர் எழுதுகின்றார்கள்  ,


عظيم وهو نور الأنوار والنبـي المختار صلى الله عليه وسلم


அன்னார் ஒளிகளின் பேரொளியாக உள்ளார்கள் (நூருல் அன்வார் ) மேலும் நபியுல் முக்தார் ஆகவும் உள்ளார்கள் 


[நூல் - ரூஹல் மாஃனி ,அல்லாமா அலூஸி ]


இதே போன்று இமாம் ஜலாலுத்தீன் அல் மஹல்லி ,இமாம் ஜலாலுத்தீன் அல் சுயூத்தி ஆகியோர் தமது தப்ஸீர் அல் ஜலாலைனிலும் , இமாம் இப்னு ஜவ்சீ தமது ஜாத் அல் மசீர் பில் இல்ம் அத் தப்ஸீர் நூலிலும் , இமாம் அல் ஷிர்பினி தமது தப்ஸீர் சிராஜுல் முனீரிலும் ,இமாம் பக்ரூத்தீன் ராஸி தமது தப்ஸீர் அல் கபீரிலும் இதே கருத்தை முன் மொழிந்துள்ளனர் .


மேலும் அஹ்காம் அல் குர்ஆன் (6.118) நூலில் இமாம் குர்தூபி மற்றும் மவர்தி ஆகியோர் அரபு இலக்கணத்தின் இமாம் இப்ராஹீம் இப்னு முஹம்மது அல் ஸஜ்ஜாஜ் அவர்கள் இதே கருத்தை உடைய நிலையவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது .


இனி இது விஷயமாக மிகவும் பிரபலமான ஓர் ஹதீத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுகின்ற அல்லாஹ் முதன் முதலில் எதைப் படைத்தான் என்னும் ஹதீஸ்  . இந்த ஹதீஸ் பின்வரும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது ,
  • முசன்னஃப்  அப்துர் ரஸ்ஸாக் ,பக்கம் 99,ஹதீத் எண் 18 .
  • அல்லாமா  கஸ்தலானி தமது மவாகிபுல் லதுனியா ,பாகம் 1,பக்கம் 71.
  • அல்லாமா முஹம்மது அல் ஸுர்கானி தமது ஷரஹ் மவாகிபுல் லதுனியா ,பாகம் 1,பக்கம் 89-91.
  • அல்லாமா அஜ்லுனி தமது கஷ்ப் அல் கபா ,பாகம் 1,பக்கம் 311,ஹதீத் எண் 827.
விரிவஞ்சி இத்துடன் நமது அதாரங்களை இத்துடன் முடிவு செய்கின்றோம் .


இனி இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் 'ஹக்கீமுல் உம்மத் ' என்று கூப்பாடு போடும் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'நஷறுத் தீப்' ல்   இதே கருத்தை பதிவு செய்துள்ளார் .
  
Nashar ut-Tib Volume 001, Page No. 13 ,Ashraf Ali Thanvi .










தற்கால தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் இனியாவது தமது இரட்டை நிலைப்பாட்டை மாற்றுவார்களா ????



Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 1 November 2014

ஷரஹ் அல் ஷிபாவில் தேவ்பந்திகளின் மோசடிகள்

இமாம் முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி [இறப்பு ஹிஜ்ரி- 1014] அவர்கள் எழுதுகிறார்கள் ,

"  வீட்டில் யாரும் இல்லை என்றால் 'அஸ்ஸலாமு அலா அல் நபிய்யி வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு ' என்று கூறுங்கள் ,ஏனெனில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ரூஹ் என்னும் ஆன்மா முஸ்லிம்களின் வீட்டில் உள்ளது ( ஐ லி அன்ன ரூஹஹு அல் ஸலாமுன் ஹாழிருன் பி புயூத்தி அஹ்லல் இஸ்லாம் ) "

[நூல்- ஷரஹ் அல் ஷிபா,வால்யூம் 2,பக்கம் 118,தாருல் குதூப் அல் இல்மியா ,லெபனான் ]
Sharah al- Shifa

Sharah al- Shifa, Vol.2, p.118

இமாமே அஹ்லுஸ் ஸுன்னாஹ் முல்லா அலி காரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இந்த கூற்று தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் வஹாபிய கொள்கைக்கு எதிரானதால் ,தேவ்பந்திகளின் முதன்மையான மோசடியாளர் மௌலவி சர்பராஸ் சப்தார் கான் (குஜ்ரான்வலா,பாகிஸ்தான் ) அரபி வாசகத்தை உர்துவில் மொழிபெயர்க்கும் பொழுது எழுதுகிறார் ,

"கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ரூஹ் என்னும் ஆன்மா முஸ்லிம்களின் வீட்டில் உள்ளது என்று கருதி  'அஸ்ஸலாமு அலா அல் நபிய்யி வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு '  என்று கூறுவது (கூடாது),மாறாக 'அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்' என்று கூற வேண்டும் அதன் பொருள் எல்லா நபிமார்களும் ,மலக்குகளும்   "

[நூல்- முல்லா அலி காரி அவ்ர் மஸ்லா இல்ம் கைப் வ ஹாழிர் வ நாழிர்,பக்கம் 36,பதிப்பாளர்கள் மக்தபா சப்தாரியா ,குஜ்ரன்வாலா ,பாகிஸ்தான் ]
 
Mulla Ali al- Qari aur masla ilm ghayb wa hazir wa nazir

Mulla Ali al- Qari aur masla ilm ghayb wa hazir wa nazir, p.36



இந்த தேவ்பந்தி தப்லீக் மெளலவி அரபி வாசகத்தை மூல நூலில் உள்ளபடியே எழுதி ,மொழிபெயர்ப்பில் கூறுவது ஆகும் என்பதற்கு பதிலாக கூறுவது கூடாது என்று அடைப்புக்குறிக்குள் போட்டு அதன் அர்த்தத்தை முழுவதுமாக மாற்றியுள்ளார் !!!

இது மட்டும் தனது வஹாபிய கொள்கைக்கு போதாது என்று கருதிய காரணத்தால் தனது மற்றொரு நூலில் அரபி வாசகத்திலேயே மோசடி செய்துள்ளார் .

மெளலவி சர்பராஸ் கான் தேவ்பந்தி எழுதுகிறார் ,

" லா லி அன்ன ரூஹஹு அல் ஸலாமுன் ஹாழிருன் பி புயூத்தி அஹ்லல் இஸ்லாம் ,இதை இவ்வாறு மொழிபெயர்க்கிறார் , கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ரூஹ் என்னும் ஆன்மா முஸ்லிம்களின் வீட்டில் உள்ளது என்னும் கருத்து சரியானதல்ல "

[நூல் - தப்ரீத் அல் நவாழிர் ,பக்கம் 167-168, பதிப்பாளர்கள் மக்தபா சப்தாரியா ,குஜ்ரன்வாலா ,பாகிஸ்தான்]  


Tabrid al-Nawazir

Tabrid al-Nawazir, p.167 and 168



'லா' என்னும் அரபி பதத்தை இமாம் முல்லா அலி காரி அவர்களின் மூல நூலில் மோசடியாக சேர்த்து ,அதன் மூலம் இமாம் அவர்களின் கருத்துக்கு நேர் எதிரான கருத்தை புகுத்தி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பால் நேசமும்,கண்ணியமும் வைப்பதை விட்டும் உள்ள தனது  வெறுப்பை வெளிப்படுத்துகிறார் .


மோசடிகளிலே மிகவும் தரங்கெட்ட செயலை செய்த பின்னர் இந்த தேவ்பந்தி தப்லீக் வஹாபி தனது மோசடியை உண்மையாக்கும் விதமாக " சில மூல பிரதிகளில் லா என்னும் பதம் காணப்படவில்லை " என்று எழுதுகிறார் .
Tabrid al-Nawazir


இந்த மோசடியாளர்கள் தங்கள் கூற்றை நிரூபிக்கும் வண்ணம் ஷரஹ் அல் ஷிபாவின் மூலப் பிரதியையோ அல்லது ஒரு அச்சுப் பிரதியையோ கொண்டு வந்து தங்கள் கூற்றை நிரூபிக்க இயலுமா என்று சவால் விடுகின்றோம் ???

உண்மை என்னவேன்றால் ஷரஹ் அல் ஷிபாவின் மூலப் பிரதியிலோ  அல்லது ஒரு அச்சுப் பிரதியிலோ 'லா' என்னும் பதம் கிடையாது !!!
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, 31 October 2014

தேவ்பந்த் தப்லீக் ஜமாத் பற்றி தமிழக உலமாக்கள்



Hidayathul Anaam IlaJiyarathil Auliayil Kiram

எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நஜ்தைக் குறிப்பிட்டு , 
“ இங்கு தான் அதிர்ச்சிகளும்,குழப்பங்களும் உண்டாகும். இங்கிருந்து தான் ஷைத்தான் உடைய கொம்பு உதயமாகும்” என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்."
நூல் – ஸஹீஹ் முஸ்லிம் ,பாகம் 2,பக்கம் 393,394. ஸஹீஹ் புஹாரி ,பாகம்  2,பக்கம் 1051, மிஷ்காத் .

அவ்வாறாகவே , சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நஜ்து தேசத்தில் அப்துல் வஹ்ஹாபும் அவருடைய மகன் முஹம்மதும் உண்டாயினர். அவ்விருவரையும் பின்பற்றியவர்கள் தான் மௌலவி இஸ்மாயில் திஹ்லவியும் அவரைச் சார்ந்தவர்களும். அக்குழுவினர் இரு பிரிவினராகப் பிரிந்தனர், வெளிரங்கமாகவே தங்களை வஹாபிகள் என்று காட்டிக் கொண்டவர்கள் ஒரு குழுவினர் ( அஹ்லே ஹதீத் ) . அவர்கள் எந்த மத்ஹபையும் ஏற்று பின்பற்றாதவர்கள். வெளிரங்கத்தில் தங்களை வஹாபிகள் என்று காட்டிக் கொள்ளாமல் அந்தரங்கத்தில் வஹாபிகளா இருக்கக் கூடியவர்கள் மற்றக் குழுவினர் (தேவ்பந்தி தப்லீக் ஜமாத்) . இவர்கள் ஹனபீ-ஹன்பலி என்று வெளிக்கு மதுஹபுஹளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு முற்றிலும் வஹாபிக் கொள்கைளையே தங்கள் கொள்கைகளாகக் கொண்ட ‘முகல்லிது’ வேடதாரிகள்.

இவர்களில் முந்திய கூட்டத்தாரின் அபாயங்களைவிட பிந்திய இந்தக் கூட்டத்தாரின் அபாயங்கள் மிகவும் பயங்கரமானவை. ஏனெனில் , இவர்கள் ‘மத்ஹபு’ என்ற போர்வையை போர்த்திக் கொண்டு முஸ்லிம்களை வழிகேட்டில் ஆக்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது நயவசகத் தந்திர உபாயத்தினால் ஸூன்னத்து வல் ஜமாத்துடைய நல்ல கொள்கையில் ஆகி இருந்த அனேகர்களை பொல்லாங்குடைய வஹாபியத்தான வழிகேட்டின் அளவில் இழுத்து போட்டும் விட்டனர்.

வஹாபிகளான அவர்களின் கொள்கைக் கூற்றுகளைப் பாருங்கள்:

“ முஹம்மது நபி அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப்  போய்விட்டார்கள். அவர்களுடைய ரவ்ழாவிற்கு ஜியாரத்திற்காகப் போவது ஷிர்க்கு (இணைவைத்தல்) ஆகும்.

யா நபி! யா முஹம்மது !  யா ரசூலல்லாஹ் ! என்று அழைத்துக் கூப்பிடுவது ஷிர்க்காகும். அவ்விதம் அழைத்துக் கூப்பிடுபவர் காபிராக இருப்பார்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மறைவான சங்கதிகளை அறிய மாட்டார்கள். தொழுகையில் அவர்களுடைய க்யாபகம் வருவதானது மாடு,கழுதையின் க்யாபகம் வருவதை விட மிகக் கெட்டதாகும். அவர்களுடைய முஃஜிஸாத்துகளை விட சூனியக்காரர்களின் சூனியம் அதிக சக்தி வாய்ந்த்து. அவர்கள் ஷபாஅத்து செய்வார்கள் என்று நம்புவது ஷிர்க்காகும்.

நபிமார்கள்,அவ்லியாக்களின் கப்ரு புத்து(விக்கிரகம்)களுக்கு ஒப்பாகும். அவைகளை தகர்த்து எறிய வேண்டும்.அவர்களுக்கு எத்தகைய சக்தியும் கிடையாது. அவர்கள் பால் வஸீலா தேடுதல் ஷிர்க்காகும்.அவர்களுக்கு நேர்ச்சை செய்வது ஹறாமாகும்.

சகல நபிமார்கள்,ஸஹாபாக்கள்,அவ்லியாக்கள் ஆகியவர்கள் அல்லாஹ்வின் தகுதிக்கு முன் செம்மானை விடக் கீழ்த்தரமானவர்கள்.
மீலாதுன் நபி கிருஷ்ண ஜெயந்திக்கு ஒப்பாகும். 
காதிரிய்யா,ஜிஷ்திய்யா,நக்ஷபந்தியா முதலான தரீக்காக்கள் வழி கேடானவை.

மவ்லித்,பாத்திஹா,கத்தம் முதலானவற்றின் ஷீர்னி(வினியோகப் பொருள்) ஹறாம் ஆகும்.அவ்லியாக்களின் பெயராலும்,மவுத்தானவர்களின் பெயராலும் கத்தம் பாத்திஹா ஓதி அதன் பலனை அவர்கள் பால் ஈஸால் தவாபு செய்வது,பிராமணப் புரோகிதர்கள் அவர்களுடைய வேதத்தை ஓதி சுலோகம் படித்து பிதுர்களுக்கு திதி செய்வது போன்றேயாகும் . “

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். மேற்சொன்னவைகளும் அவை போன்ற தப்புத் தவறான நூற்றுக்கணக்கான கொள்கைகளும்,வஹாபிகளின் வழிகேடான அகீதாக்களாகும். இத்தகைய வழிகெட்டகொள்கைகளின் பால் வஹ்ஹாபிய்யா மொளலானா,மொளலவிகளும் மார்க்கத்தில் மறுமலர்ச்சி காண விரும்புவதாகச் சொல்லிக்கொள்பவர்களும்,தாங்கள் வழிகேட்டில் இருப்பதை அறியாமல்,ஏனைய முஸ்லிம் பெருமக்களை நேர்வழியில் ஆக்க முற்படுவதாக மனப்பால் குடித்துக் கொண்டு வழி கெடுக்க முற்பட்டு இருக்கிறார்கள்.

“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் , இபுலீசை நஜ்து தேசத்து ஷைகு உடைய உருவத்திலே காண்பார்கள் “ என்ற விபரம் சரியாகவே இருக்கிறது.

நஜ்து வஹ்ஹாபிஷ் ஷைகுடைய ‘கிதாபுத் தவ்ஹீது’ வின் உர்து மொழி பெயர்ப்பு நூற்களாகிய ‘தக்வியத்துல் ஈமான்,ஸிராத்துல் முஸ்தகீம்,இதுபாத்துத் தவ்ஹீது ‘ போன்ற ஆபாச மலக் குவியல்களிலிருந்து சிலவற்றை பொறுக்கி தவ்ஹீதோ இபாதத் என்ற பெயரில் வடநாட்டு வஹாபி மொளலவியொருவர் உர்துவில் அச்சிட்டுள்ளார். அதை ‘ஏக தெய்வ வணக்கம்’  நாமத்தால் தென்னாட்டு பாக்கவீ ஒருவர் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதை மற்றொரு ‘பீடி மொளலவி’ அச்சிட்டு இலவசமாக வினியோகம் செய்துள்ளார்.

மேலும் ‘ஜியாரத்துல் குபூர்’ அவ்லியாக்களை அவமதிக்காதீர் – ‘மஹான் ஷாகுல் ஹமீது’ ‘ஏக தெய்வ வணக்கம்’ முதலான சில்லறைத் துக்கடாப் பிரசுரங்களை – அதிக விஷமுடைய நச்சரவத்திற்கு நல்ல பாம்பு என்று பெயர் உள்ளது போல- வஹ்ஹாபியத்தின் விஷவித்துகளைக் கொண்ட மேற்சொன்ன நூற்கள் பெயரால் கவர்ச்சிகரமான பெயர்களை சூட்டிக் கொண்டு நஜ்து ஷைத்தானிய்யத்தான பணிகளை தென்னாட்டில் செய்து வருகின்றன.இத்தகைய அகீதா கெட்டவர்கள் தங்களை வஹ்ஹாபிகள் என்று சொல்லிக் கொள்வார்களானாலும் பரவாயில்லை.ஆனால் இவர்களோ அவ்வாறு சொல்லாமல் தங்களை ஸுன்னத்து வல் ஜமாத் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். எனவேதான் இவர்களுக்கு எதிர்ப்பும்,மறுப்பும் ஏற்படுகின்றன. உள்ளொன்று புறம் ஒன்றாயிராமல் வெளிக்கும் தங்களை வஹ்ஹாபிகள் என்று பகிரங்கமாக அறிவித்து தங்களது வஹ்ஹாபிக் கொள்கையை இவர்கள் பரப்பினால் இவர்களை யார் ஆட்சேபிக்கப் போகின்றார்கள்.

நூல் – ஹிதாயத்துல் அனாம் இலாஜியாரதில் அவ்லியா இல்கிராம்,பக்கம் 15-18 , ஏழாம் பதிப்பு டிசம்பர் 2008, வெளியீடு சுலைமானியா பப்ளிஷர்ஸ் .

ஆசிரியர் – நாகூர் ஷரீபில் திலகமாய் இலங்குகின்ற குத்புல் மஜீது,பர்துல் வஹீது,ஸையிதுஸ் ஸாதாத்தி  ஸையிதுனா ஸையிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது காதர்வலி கன்ஜபக்ஷ் கன் ஜஸவாயீ ரலியல்லாஹூ அன்ஹூ  அவர்களின் பொளத்திர் அல்ஹாஜ் மொளலானா மொளலவி முஹம்மது பாக்கர் சாஹிப் ஆலிம் காதிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, நாகூர் ஷரீப்.

இந்நூலின் முதற்பதிப்பை(1950) சரிபார்த்து சிறப்புரை வழங்கிய மேன்மை தாங்கிய உலமாக்கள்:


1.       காயல்பட்டணம் மஜ்லிசுல் புகாரிஷ் ஷரீபின் முக்கியஸ்தரும்,சிறந்த முப்தியுமான, மெளலானா,மெளலவி,அல்ஹாஜ்,நஹ்வி முஹம்மது  இஸ்மாயில் ஆலீம் முப்தி அவர்கள்.

2.       காயல்பட்டணம் மஹ்ளறா அரபிக் கல்லூரியின் ஸதர் முதர்ரிஸும்,பிரபல முஃப்தியுமான மெளலானா,மெளலவி அல்ஹாஜ் முஹியித்தீன் தம்பி ஆலீம் அவர்கள்.

3.       காயல்பட்டணம் பிரபல முஃப்தியும்,ஜாவியா மத்ரஸத்துல் பாஸிய்யா பேராசிரியருமான மெளலானா,மெளலவி முஹம்மது அப்துல் காதிர் ஆலீம் ஸித்திகீ அவர்கள்.

4.       காயல்பட்டணம் ஸாகிபு அப்பா தைக்கா மானேஜரும் புகழுடைய பெரியாருமான மெளலானா,மெளலவி, அல்ஹாஜ், பா.சு.முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை அஸ்ஸதகலி ஆலீம் அவர்கள்.

5.       காயல்பட்டணம் முத்துவாப்பா வலியுல்லாஹ் அவர்களின் திருப்பேரரும்,பெரியாருமான மெளலானா,மெளலவி, ஸூபி முஹம்மது இஸ்மாயில் லெப்பை ஆலீம் (கொம்பாலீம்) அவர்கள்.

6.       மதராஸ் அரசாங்க காஜி மெளலானா,மெளலவி, அல் ஹாஜ், முஹம்மது ஹபீபுல்லாஹ் ஸாகிபு அவர்கள்.

7.       குர்ஆன் தப்ஸீர் விரிவுரையாளரும்,பன்னூல் ஆசிரியருமான மெளலானா,மெளலவி, அல்ஹாஜ், உத்தமபாளையம் முஹம்மது அப்துல் காதிர் ஆலீம் பாக்கவி அவர்கள்.

8.       கொழும்பு அல் ஜாமிஉல் அள்பர் சம்மங்கோடு பள்ளியின் இமாம் மெளலானா,மெளலவி, கிருஷ்ணாப்பட்டணம் அபுல்ஜமால் முஹம்மது  பதுருத்தீன் ஆலிம் நூரி அவர்கள்.

9.       கோட்டாறு மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் செய்யது முஹம்மது ஆலிம் (கத்தீபு,ஜும்மா மஸ்ஜித்,சிங்கப்பூர்)

10.   ஹஜ்ரத் மெளலானா,மெளலவி,அல் ஹாஜ் ஷாஹ் சுல்தான் கலீபா சாஹிபு ஷத்தாரி,காதிரி ,அரசாங்க காஜி,நாகூர்.

11.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆலீம் சாகிபு நூரி,ஸத்ரு முதர்ரிஸ் ,காதிரியா மத்ரஸா,நாகூர்.

12.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் அஸ்ஸெய்யது ஹூசைன் சாஹிபு காதிரி, நாகூர்.

13.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் குலாம் தஸ்தகீர் என்னும் நானா ஸாகிபு ,நாகூர்.

14.   மெளலானா,மெளலவி அஸ்ஸெய்யிது அஹ்மது சாகிபு காதிரி,நாகூர்.

15.   மெளலானா,மெளலவி காஜி கத்திபு,அல்ஹாஜ் ஷைகு ஹசன் சாகிபு ஷத்தாரீ,காதிரி ,நாகூர்.

16.    மெளலானா,மெளலவி செய்யிது முஹம்மது அலி சாஹிபு காதிரி என்னும் சின்னதம்பி சாஹிபு,நாகூர்.

17.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் செய்யிது முஹ்யித்தீன் சாகிபு காதிரி,நாகூர்.

18.   மெளலானா,மெளலவி,ஹாபிழ் ஷாகுல் ஹமீது,மேலப்பாளையம்.

19.   மெளலானா,மெளலவி முஹம்மது மீறான், மேலப்பாளையம்.

20.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ், ஹாபிழ் முஹ்யித்தீன், மேலப்பாளையம்.

21.   மெளலானா,மெளலவி அஹ்மது முஹ்யித்தீன் ஸித்திக்கீ நூரி,மேலப்பாளையம்.

22.   மெளலானா,மெளலவி அபுல்ஹசன் அலி ஷாதுலி,நூரி,தென்காசி.

23.   மெளலானா,மெளலவி ஹுசைன் முஹம்மது ஆலிம் என்னும் ஆயக்குடி ஸூஃபி ஹஜ்ரத் (மதராஸ் பெரம்பூர் ஜமாலிய்யா அரபி கலாசாலை,தலைமைப் பேராசிரியர்) ஆயக்குடி,பழனி.

24.   மெளலானா,மெளலவி அப்துல் மஜீத் நூரி,ஆயக்குடி,பழனி.

25.   மெளலானா,மெளலவி முஹம்மது அபூஸாலிஹ் ஆலிம் காலங்குடி இருப்பு,கிரிஸ்தியா நகரம்,திருநெல்வேலி.

26.   மெளலானா,மெளலவி முஹம்மது கலீலுர் ரஹ்மான் ஸாகிபு காதிரி,பீஹார்.

27.   மெளலானா,மெளலவி முஹம்மது பஸீஹுத்தீன் சாஹிபு,கவர்மெண்டு காஜி,மதறாஸ்.

28.   மெளலானா,மெளலவி கான் முஹம்மது சாகிபு நூரி,திண்டுக்கல்.

29.   மெளலானா,மெளலவி ஷைகு முஹம்மது இப்னு பீர் முஹம்மது நூரி கோட்டாரீ- பேராசிரியர் ,மத்ரஸா நூருல் இஸ்லாம்,தொடுபுழை,கேரளா.

30.   மெளலானா,மெளலவி ஷைகு அப்துல் காதர் பாகவி இப்னு அல்ஹாஜ் அஷ்ஷைகு அப்துல் மஜீத் காதிரி,பள்ளப்பட்டி.

31.   உலகமெல்லாம் இஸ்லாமை பரப்பும் பணியில் அரும்பெரும் சேவை செய்த உத்தமர்,காதிரிய்யா தரீக்காவின் புகழ் மிக்க ஷைகும்,முர்ஷிதுமான மீரட் ஷாஹ் முஹம்மது அப்துல் அலீம் ஸித்தீக்கி மொளலானா அவர்களது அருந்தவப் புதல்வர் நதர் முஹ்யித்தீன் நூரானி ஸித்தீக்கி காதிரி அவர்கள்.

32.   மெளலானா,மெளலவி,அல்ஹாஜ்  உத்தமபாளையம் முஹம்மது அபூபக்கர் ஆலிம் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் (நாஜிர் ,மத்ரஸத்துல் காதிரிய்யா மஹ்லறா,காயல்பட்டணம் மற்றும் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸா,வேலூர்).

33.   இந்தியா ,இலங்கை ஹிஸ்புல்லாஹ் சபையின் தலைவர், மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் ஷைகு அப்துல் காதிர் ஆலிம் ஸித்தீக்கி ஸூபி ஹஜ்ரத் அவர்கள்.

34.   தமிழ்நாட்டில் பிரபல்ய ஆலிமும் முஃப்தியுமான மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் முஹம்மது தமீம் ஆலிம் ஸாகிபு முஃப்தி அவர்களது அருமைப் புத்திரர் மெளலானா,மெளலவி அபுல்பரகாத் ஸிப்கதுல்லாஹ் ஆலிம் – முதர்ரிஸ் நாஜிர்,மத்ரஸா யூசுபிய்யா அவர்கள்.

35.   காயல்பட்டணம் ஜாவியா மத்ரஸத்துல் பாஸிய்யா பேராசிரியர் மெளலானா,மெளலவி,அல்ஹாஜ் கத்தீபு சாகுல் ஹமீத் ஆலிம் முஃப்தி அவர்கள்.
 
தேவ்பந்திய தப்லீக் ஜமாஅத் தமிழகத்தில் இஸ்லாமியர் இடையே தலை தூக்கிய ஆரம்ப நாட்களிலேயே,அதாவது 1950 முதல் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் சத்திய உலமாக்கள் தமிழக இஸ்லாமியரை அதன் வஹாபிய கொள்கைகளால் உண்டாகும் வழிகேடை கடுமையாக எதிர்த்து உள்ளனர் என்பதற்கு இதுவே தக்க சான்று.
இன்று வரை எதிர்த்தும் வருகின்றனர் .

இன்ஷா அல்லாஹ் மறுமை வரை எதிர்ப்பர் என்பது திண்ணம்  !!!



       


Related Posts Plugin for WordPress, Blogger...

Sunday, 26 October 2014

தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன ? - 8

Related Posts Plugin for WordPress, Blogger...