Showing posts with label deoband founder moulavi qasim. Show all posts
Showing posts with label deoband founder moulavi qasim. Show all posts

Thursday, 21 March 2019

மவ்லவி காஸிம் நானோத்வியும் ,தக்தீருன் நாஸ் நூலும் - 2

காஸிம் நானோத்வி எழுதிய  தக்தீருன் நாஸ் மூலநூலின் சில பதிவுகள்

"முதலில் , காத்தமுன் நபி என்பதன் அர்த்தத்தை நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் . பொது மக்களுக்கு , நபிகள் நாயகம் அவர்கள் காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் என்னெவென்றால் , நபிகள் நாயகம் அவர்களின் காலம் பிற நபிமார்களுக்குப் பின்னால் என்பதும் , இறுதி நபி என்பதுமாகும் . எனினும் புரிந்து கொள்ளுபவர்களுக்கு (ஞானமுள்ளவர்கள் ) முதல் அல்லது இறுதி நபியாக இருப்பதில் எந்த மென்மையும் இல்லை என்று உணர்ந்துள்ளனர் . "

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 4,5 ] 

தேவ்பந்தி தப்லீக் பிர்காவிற்கு கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்கள் இறுதி நபியாக இருப்பதில் எந்த மேன்மையும் ,சிறப்பும் இல்லை என்று கொள்கை கொண்டுள்ளனர் .  

தேவ்பந்திகளினால் நடத்தப்படும் இணையம் /முகநூல் /வாட்சாப் குழுக்களில் அவர்களின் முன்னோடிகளைப் பற்றி பேசினால் அதற்கு மறுப்பும் ,நீக்கமும் செய்கின்றவர்கள் ,    கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்களை நிந்தனை செய்த தமது முன்னோடிளை புகழ்பவர்களை நெஞ்சம் நிறைந்து நேசிப்பர் . என்னே முனாஃபிக் தனம் ! 

அல்லாஹ் سبحانه و تعالى‎ கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்களையும் ,ஏனைய நபிமார்களையும்  நேசித்து , அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்தொடபர்களை நேசம் கொள்ள நமது இதயங்களை திறப்பானாக ! ஆமீன் ! 


"நபிமார்கள் தங்களது உம்மத்துகளை விட சிறந்தவர்களாகவும் , உயர்ந்தவர்களாகவும் இருப்பது ஞானத்தில் மட்டுமே . அமல்கள் என்று வரும் போது உம்மத்தினர் சிலசமயம் நபிமார்களுக்கு சரிசமமான அந்தஸ்தையும் சிலசமயம் அதை விடவும் உயர்ந்த அந்தஸ்தை அடைகின்றனர் ".  

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 7 ] 

மேற்கூறிய மொழிபெயர்ப்பை வாசித்த பின் தவ்பா செய்து ,ஷஹாதத்  சொல்லிவிடவும் . எத்தகைய ஈமானை பறிக்கும் செயல் ! 

இனி தேவ்பந்திகளிடம் இது பற்றி கேட்டால் ,அவர்கள் இதை எவ்வாறெல்லாம் நியாயப் படுத்துவார்கள் தெரியுமா .  அவர்களின் மோசடியான கூற்று , நபிகள் நாயகம் தமது 40 வது வயதில் தான் அமல்களை ஆரம்பித்தார்கள் . இனி முஸ்லிமான ஒரு சிறுவன் தனது 5 வயதில் திக்ர் செய்ய ஆரம்பித்தால் , அவன் அமல்களில்  நபிமார்களையும் முந்தி விடுவான் . நவூது பில்லாஹ் !

" நபிகள் நாயகம் அவர்களது சமகாலத்தில்,எங்கோ ஓரிடத்தில்  வேறு ஒரு நபி  இருப்பதாக நாம் கருதினாலும் ,அது நபிகள் நாயகம் காத்தமுன் நபி என்பதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது . "

தேவ்பந்திகளே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ,உங்களது நெருங்கி உறவுகளைப் பற்றி தவறாக கற்பனை செய்தால் , ஏற்றுக்கொள்வீர்களா?

ஆனால் ஸய்யிதுல் அன்பியா  கண்மணி நாயகம்  صلى الله عليه و سلم அவர்கள்  மீது எவ்வாறு அனுமானம் கொள்ள முடிகின்றது ?

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 18  ] 

" எதிர்காலத்தில் வேறு ஏதேனும் ஒரு நபி வருவதாக நாம் கருதினால் ,அது நபிகள் நாயகம் அவர்கள் இறுதி நபி (கத்மியத் முஹம்மதி ) என்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது ".

[நூல் - தக்தீருன் நாஸ் ,பக்கம் 34  ] 

இவர்கள் உருவாக்க முயன்ற கருத்துருவாக்கம் என்ன என்று மணி அடிக்கின்றதா ?

இந்த பதிவையும் ,இதற்கு முன்னர் தமது முன்னோடிகளைப் பற்றி என்ன கூறினார்கள் என்று முந்தைய பதிவிலும் வாசித்துப் பாருங்கள் இஸ்லாமிய அன்பர்களே !

இரண்டையும் தொடர்புபடுத்தி , தமது முன்னோடிகளுக்கு எந்த வாசலை திறக்க எத்தனித்தார்கள் என்பதை அறியுங்கள் . ஆனால் அவர்களை எல்லாம்  முந்திக் கொண்டு சபிக்கப்பட்ட குலாம் அஹமத் காதியானி  அந்த வாசலின் வழியே நுழைந்தான் .

காதியானிகள் கத்தமே நுபுவ்வத் பற்றி கூறுபவற்றை , தேவ்பந்தின் நிறுவனர் காஸிம் நாணோத்வி கூறுவதுடன் ஒப்பிடுப் பாருங்கள்    








Related Posts Plugin for WordPress, Blogger...

மவ்லவி காஸிம் நானோத்வியும் ,தக்தீருன் நாஸ் நூலும் - 1


கத்மே நுபுவ்வத் குறித்து தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் கொள்கைகள் என்ன ?
இது விஷயமாக தேவ்பந்திகள் இயற்றிய நூற்கள் கூறுவது என்ன ?


    
மவ்லவி காசிம் நாணோத்வி தேவ்பந்தி தப்லீகி பிர்காவின் முன்னோடிகளில் ஒருவர் . தாருல் உலூம் தேவ்பந்தின் ஸ்தாபகர்களில் ஒருவர் . இவர் "தக்தீருன் நாஸ் " என்னும் நூலில் எழுதிய குப்ரியத்தான கொள்கைகளால் மக்கா ,மதீனா  ஷரீஃபை சார்ந்த 30க்கும் மேற்பட்ட அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களாலும் ,இந்தியாவைச் சார்ந்த 268 உலமாக்களாலும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்பட்டார் .


அந்த நூலில் மவ்லவி காஸிம் நானோத்வி எழுதுகிறார் : -

பொதுவான பாமர மக்களின் சிந்தனை காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் ,நபிகள் நாயகம் அவர்களின் காலம் முன் சென்ற நபிமார்களின் காலத்திற்கு பின்னால் என்பதும் ,அவர்கள் தான் இறுதி நபி என்பதும் என்று எண்ணுகின்றனர் . எனினும் மதிநுட்பமுடைய அறிஞர்களின் கருத்து என்னவென்றால் முந்தியோ ,பிந்தியோ இருப்பதில் எந்த சிறப்பும் இல்லை .

ஒருவேளை நாயகம் அவர்களுக்குப் பின் ஒரு நபி பிறந்தாலும் , அதைக் கொண்டு காத்தமுன் நபி என்று இருப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது . எனவே நபிகள் நாயகம் அவர்களது காலத்தில் வேறு கிரகத்திலோ அல்லது இதே கிரகத்திலோ  ஒரு நபி இருந்தாலோ அது எந்த வேறுபாட்டையும் உண்டாக்காது .

மவ்லானா முஹம்மத் பாஸில் என்பாருக்கு எழுதிய ஓர் கடிதத்தில் ,காஸிம் நாணோத்வி எழுதுகிறார் : -

காத்தமுன் நபி என்பதன் அர்த்தம் ,நேர்கோட்டில் பொருள் கொள்பவர்களுக்கு நபிகள் நாயகம் அவர்களின் காலம் எல்லா நபிமார்களின் காலத்திற்கு தூதுத்துவத்திற்குப் பிந்தியது என்றும் அவர்களுக்கு பின்னர் வேறு யாரும் நபியாக வர முடியாது என்பதாம் . எனினும் நீங்கள் அறிவீர்கள் இதைக் கொண்டு தனிப்பட்ட புகழோ ,தீங்கோ ஏதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் .

பின்வரும் பதிவுகளை வாசிக்கும் முன்னர் காஸிம் நோனோத்வியின்    இந்த 
கூற்றை உங்கள் சிந்தையில் ஏற்றுங்கள் .

காசிம் நானோத்வியின் கப்ரை பற்றி :   

" தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னாள் பொறுப்புதாரி மவுலானா ரஃபீயுத்தீன் சாஹிப் அவர்களின் கஷ்ப் ஆகிறது , தேவ்பந்த் மதர்ஸாவின் நிறுவனர்  மவுலானா காஸிம் நாணோத்வியின் கப்ர் ஒரு நபியின் கப்ரினுள் அமைந்துள்ளது என்பதாம் ." 

[முபஷ்ஷிராத் , பக்கம் 36,  தாருல் உலூம் தேவ்பந்த் வெளியீடு ]     


ஸவானெஹ் காஸிமி என்பது தேவ்பந்தின் புகழ்பெற்ற அறிஞர் , மவ்லானா முனாஜிர் ஹசன் கீலானி என்பரால் எழுதப்பட்ட நூல்.  காசிம் நாணோத்வியின் சுயசரிதை நூல் . தேவ்பந்தால் வெளியிடப்பட்டது . 

அதில் கூறப்பட்டுள்ளது , 

" ஒரு முறை மவ்லானா காஸிம் நாணோத்வி தம்முடைய ஞானாசிரியர் ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களிடம் , நான் தஸ்பீஹ் செய்ய உட்காரும் போதெல்லாம் மிகுந்த சிரமத்தை உணருகின்றேன் . உன்னுடைய இதயத்திலும் ,நாவிலும் நூறு டன் எடையுள்ள கற்களை யாரோ சுமத்தியது போன்றும் ,சர்வமும் முடங்கியது போன்றும்  உணருகின்றேன் . 

அதற்கு ஹாஜி சாஹிப் அவர்கள் கூறினார்கள் :

இது வஹீ அருளப்படும் போது நபிகள் நாயகம் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை போன்ற ஓர் நுபுவ்வத்தின் ஆசீர்வாதங்களில் ஒன்று . அல்லாஹ் உம்மை நபிமார்களின் வேலைக்கு தேர்வு செய்துள்ளான் " 

[நூல் - ஸவானெஹ் காஸிமி , பாகம்  1, பக்கம் 259 ]

அதன் உர்து ஆக்கம் , 

"யே நுபுவ்வத் கா ஆப் கா கல்ப் பர் பைஜான் ஹோதா ஹை ,அவ்ர் யே வஹ்  சிக்ள் ஹை ஜோ ஹுஜுர் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் கோ வஹி கி வக்த் மௌஸூஸ் ஹோதா தா , தும் சே ஹக் தஆலா ஒ காம் லேனா ஹை ஜோ நபியோ சே லியா ஜாதா ஹை " .



அர்வாஹெ ஸலாசா என்னும் நூல் ,புகழ்பெற்ற தேவ்பந்த் உலமாக்களின்  கூற்றுகளையும் , சம்பவங்களையும் கையாள்கிறது . அதை எழுதியவர்கள் அமீர் ஷாஹ் கான் மற்றும் மவ்லானா ஜாஹிர் ஹசன் கசூரி . மவ்லவி அஷ்ரப் அலி தான்வி அதற்கு ஹாஷியா எழுதியுள்ளார் . அது தேவ்பந்திகளிடம் வரலாறு மற்றும் படிப்பினை பெறுவதற்கு என்று புகழ்பெற்ற நூல் . அதனை ஹகாயாதே அவ்லியா , அஸ்லாபே தேவ்பந்த் , ஷஹான் தில்லி என்றும் வேறு பெயர்களில் வெளிவந்துள்ளது .

அதில் எழுதப்படுள்ளது ,

'ஹழ்ரத் ரஷீத் அஹமத் கங்கோஹி தமது மாணவர் மவ்லானா முஹம்மது யஹ்யா காந்தள்வியிடம் ஷாமி நூலில் ஓர் பத்வாவை பார்வையிட சொன்னார்கள் . மவ்லானா முஹம்மது யஹ்யா  காந்தள்வி அந்த குறிப்பிட்ட பத்வா நூலில் இல்லை என்று பதில் அளித்தார்கள் . மவ்லானா  ரஷீத் அஹமத் கூறினார்கள் இது எவ்வாறு சாத்தியம் ? நூலை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார்கள் . அந்த நூல் ரஷீத் அஹ்மத் சாஹிப் அவர்களின் முன் கொண்டு வரப்பட்டது . 

அது சமயத்தில் ஹழ்ரத் ரஷீத் அஹ்மத் அவர்கள் தமது பார்வையை கிட்டத்தட்ட இழந்து விட்டார்கள் . அவர்கள் அந்த நூலை எடுத்து , மூன்றில் இரண்டு பங்கு பக்கங்களை வலதுபுறமும் , ஒரு பங்கு பக்கங்களை இடப்புறமும் திருப்பி ,ஒரு பக்கத்தை எடுத்தார்கள் . இடப்பக்கதத்தின் அடியில் பார்க்குமாறு கூறினார்கள் .அந்த பத்வா அங்கு காணப்பட்டது . எல்லோரும் வியந்து போனார்கள் . ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் ,' என் நாவில் இருந்து தவறான ஒரு சொல்லும் வராது  என்று அல்லாஹ் எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளான் '  என்று கூறினார்கள் . 

[ நூல் - அர்வாஹெ ஸலாசா ,பக்கம் 292 ]
   
இது முடிவல்ல . இதன் விளக்கவுரையில் மவ்லவி அஷ்ரப் அலி தான்வி பின்வருமாறு எழுதியுள்ளதை காணுங்கள் ,

' இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு சம்பவமாக இருக்கலாம் ,ஆனால் விஷயம் அவ்வாறல்ல . அது மவ்லானா ரஷீத் அஹ்மத் அவர்களுடைய கஷ்ப் , இல்லையெனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தி இருக்க மாட்டர்கள் .


உங்களுக்கு நினைவூட்டுகின்றேன் ,

" நபிகள் நாயகம் அவர்கள் மறைவான ஞானம் உள்ளது என்று நம்பிக்கை கொள்வது தெளிவான ஷிர்க் "

[ நூல் - பத்வா ரஷீதிய்யா ,ரஷீத் அஹ்மத் கங்கோஹி ]

இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ,

" ஒரு நாள் மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் (ஜோஷ் ) காணப்பட்டார்கள் . தஸவ்வுரே ஷெய்கு என்பது பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தது . அவர்கள்  ,'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மீண்டும் கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் . 
 
'நான் பேசட்டுமா ? ' என்று மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி மீண்டும் கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

அப்போது ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறினார் , ' மூன்றாண்டு காலமாக ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் முகம் எனது கல்பிலே இருந்தது ,அவர்களின் அனுமதியில்லாமல் நான் எந்த காரியத்தையும் செய்ததில்லை ' .

அதன் பின்னர் ரஷீத் அஹ்மத் கங்கோஹி  மிகுந்த உற்சாகத்துடன் , 'நான் பேசட்டுமா ? ' என்று கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறினார் , ' பல்லாண்டுகளாக நபிகள் நாயகம் என்னுடை கல்பிலே இருந்தார்கள் , அவர்களின் அனுமதியில்லாமல் நான் எந்த காரியத்தையும் செய்ததில்லை ' . (அடிக்குறிப்பு : கான் சாஹிப் எத்தனை ஆண்டுகள் என்று கூறியது நினைவில்லை ) .

அதன் பின்னர் ரஷீத் அஹ்மத் கங்கோஹி இன்னும்   மிகுந்த உற்சாகத்துடன் , 'நான் பேசட்டுமா ? ' என்று கேட்டார்கள். மக்கள் ,ஆம் என்றனர் .

ஆனால் அவர் அமைதியாக இருந்தார் .மக்கள் கேட்ட பொழுது , அதை விட்டு விடுங்கள் என்றார் .
[ நூல் - அர்வாஹெ ஸலாசா ,பக்கம் 292 ]

ரஷீத் அஹ்மத் கங்கோஹி  என்ன சொல்ல விரும்பவில்லை என்பது விளங்குகின்றதல்லவா !

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி தமது கல்பில் நபிகள் நாயகம் அவர்களே  நிறைந்திருந்ததாக கூறினார் . நாயகத்தின் நூர் அல்லது திருமுகம் என்று கூறவில்லை .  அப்படியானால் நாயகம் அவர்களின் சங்கைமிகு ரவ்ளா ஷரீப் காலியாக இருந்ததா ?

ஏனெனில் அஷ்ரப் அலி தான்வி எழுப்பியுள்ள கேள்வி தான் அது

' மவ்லித் மஜ்லிஸ்கள் பல இடங்களில் ஒரே சமயத்தில் நடைபெற்றால் , நாயகம் அவர்கள் எங்கு செல்ல வேண்டும் ,எங்கு செல்ல வேண்டாம் என்று எவ்வாறு முடிவு செய்வார்கள் '.
[ நூல் - பத்வா இம்தாதியா , பாகம் 4, பக்கம் 58 ] 


ஆஷிக் இலாஹி மீரடி தேவ்பந்தி சிந்தனைப் பள்ளியின் நபர் . அவர் எழுதிய நூல் தான்  'தஸ்கிரதுர் ரஷீத்' .   அது 2 பாகங்களாக வெளிவந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் சரிதையை கூறும் நூல் . தேவ்பந்தால் வெளியிடப்பட்டது .

மவ்லானா ஆஷிக் இலாஹி மீரடி  ,பல முறை ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறியதைக் கூறியுள்ளதாக எழுதுகிறார் ,

' கேளுங்கள் ! சத்தியம் என்பது ரஷீத் அஹ்மத்தின் நாவில் இருந்து வருவது தான் . நான் இக்காலத்தின் வழிகாட்டியும் , இரட்சிப்பும் (ஹிதாயத் வ நஜாத் )  என்னை பின்தொடர்வதை(இத்திபா )  அன்றி இல்லை என்று சாட்சியமளிக்கின்றேன் . '

[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2,பக்கம்  17 ]


 இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ,

ஆஷிக் இலாஹி மீரடி , ஆக்ராவைச் சேர்ந்த முன்ஷி முனீர் அஹ்மத்தின்   கனவை  விவரிக்கின்றார் .

' கங்கோஹ் நகரில் ஓர் ஷியா இருந்தான் . அவன் இறந்த பின் ,அவனை நான் கனவில் கண்டேன்,அவனது கட்டைவிரலை பற்றிக் கொண்டேன்  . அவன் பயந்து நடுங்கி , என்ன வேண்டும் உனக்கு என்றான் . நான் மரணித்திற்குப் பின் உன்னுடைய நிலை என்ன ? என்று கேட்டேன் . அவன் மிகக் கடுமையான வேதனையில் உள்ளதாகவும் , தாம் ஒரு முறை நோய்வாய் பட்டு இருக்கையில் , மவ்லானா ரஷீத் அஹ்மத் தன்னை காண வந்ததாகவும் , தமது உடலின் எந்த பாகத்தையெல்லாம் மவ்லானா தொட்டார்களோ ,அவை எல்லாம் வேதனையை விட்டும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார் . அதன் பின்னர் நான் விழித்தெழுந்து விட்டேன் . '


[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2,பக்கம்  324  ] 

இது போன்று மற்றோரு சம்பவமும் அதே நூலில் கூறப்படுள்ளது ,

' மவ்லானா இஸ்மாயிலின் ஒரு பணியாள் இருந்தான் . அவன் இறந்த பின் ,அவனை யாரோ ஒருவர் கனவில் கண்டார் . அவனது முழு உடலும் தீயில் வெந்து கொண்டிருந்தது , உள்ளங்கையைத் தவிர . அவனை கனவில் கண்ட நபர் மரணித்திற்குப் பின்  உன்னுடைய நிலை என்ன ? என்று கேட்டார் .அவர் கூறினார் தாம் செய்த கெட்ட அமல்களுக்காக தண்டனை அனுபவிப்பதாகவும் , தமது உள்ளங்கையைத் தவிர தமது முழு உடலும் தீயில் வெந்து போவதாகவும் கூறினார் . தமது உள்ளங்கையைக் கொண்டு மவ்லானா இஸ்மாயிலின் பாதங்களைத் தொட்டதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாகவும் , 'நாம் அந்த உள்ளங்கையை எரிப்பதைக் கொண்டும் வெட்கப்படுகின்றோம் ' என்று சொல்லப்பட்டதாகவும் கூறினார் '.

இவ்விரு சம்பவங்களை மீண்டுமொருமுறை வாசித்து , ஸஹீஹ் புஹாரியில் உள்ள ,தமது அடிமை துவைபாயை உரிமையிட்ட அபூலஹபின் ஹதீதை   நினைவில் கொள்க !

தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இத்தகைய நம்பிக்கைகளை கொண்டிருப்பது அவர்களின் சுய முடிவு .

ஆனால் இதே கூட்டத்தினர் , நமது ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் முஸ்தபா صلى الله عليه و سلم அவர்கள் பற்றி தமது நூற்களில் எழுதியுள்ளவற்றை சீர்தூக்கி ஆய்வு செய்து பாருங்கள் ! 

 


Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 11 May 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 5

இதற்கு முன் உள்ள பதிவுகளில் நாம் தேவ்பந்தின் முன்னோடிகள் எழுதியதாக நாம்  சுட்டிக் காட்டியுள்ள குறிப்புகளும் ,கருத்துக்களும் வழிகேட்டின் மீதும் குப்ரின் மீதும் அடிப்படையாக அமைந்தவை .
மூல கருத்துக்களின் பிரதிகளை காண வேண்டுவோர்  மவ்லானா முஹம்மது மான்ஷா தஸ்பீஹ் கஸவ்ரி எழுதிய  'தாவத் ஏ பிக்ர் ' என்னும் நூலைக் காணவும் .
                                       
Dawat e Fikr

இந்த கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேரான அல்லாஹுத்தஆலா பற்றிய நம்பிக்கையையும் ,நுபுவ்வத்தின் புனிதத்தையும் களங்கப்படுத்துபவை .

இவை தான் இந்திய முஸ்லிம்களிடையே பிரிவினையின் ஆணிவேராக இருந்தன . இன்னும் இந்த நிலம் பிரிவினையின் போர்க்களமாக மாறவும் காரணமாயின .இஸ்லாத்தின் ஆன்மாவையே அழிக்கும் இதன் விளைவை இன்றும் இந்திய துணைக்கண்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,
நகரிலும் ,பெருநகரங்களிலும் காணலாம்  .

நுபுவ்வத்தின் புனிதத்தையும் ,அகமியத்தையும் பாதுகாக்கவும் . அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை பேணிக் காக்கவும் பல உலமாக்கள் முக்கிய பங்காற்றி இயங்கினர்.

அவர்களில் பிரிவினை தோன்றிய அதே மாநிலத்தில்(உத்திரபிரதேசம் )  இருந்து இயங்கியவர்களில் இருவர் மிகவும் முக்கியமானவர்கள் .

முஹிப்பிர் ரஸூல், தாஜுல் புஹூல்  மவ்லானா அப்துல் காதிர் உத்மானி காதிரி பர்கத்தி பதாயூனி (அல்லாமா பஜ்லே ரஸூல் உத்மானி காதிரி பர்கத்தி பதாயூனி அவர்களின் மகனார்  ) ,அல்லாமா பஜ்லே  ஹக் கைராபாதி(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ) அவர்களின் மாணவர்.  
                                              
Tajul Fuhool Dargah

இமாமே அஹ்லே ஸுன்னத் மவ்லானா அஹ்மத் ரிழா ஹனஃபி காதிரி பர்கத்தி பரேல்வி (மவ்லானா நகீ அலி கான் பரேல்வி அவர்களின் மகனார் ) ,அஷ் ஷைகு ஷாஹ் ஆலே ரசூல்  காதிரி பர்கத்தி மெஹ்ராரவி (சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர்) அவர்களின் கலீஃபா  .


                                                 Related image



இவ்விரு பெருமக்களும் தமது காலத்தில் முக்கிய பங்காற்றினர்.இவ்விரு பெருமக்களும் மெஹ்ரேரா ஷரீபில் இருந்து பைஅத் ,இஜாஸத் மற்றும் கிலாபத்   பெற்றிருந்தனர் .

                                             
Marahra Mutahhara (Eta, U.P.)

                                                                                                                                                                              இதில் இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் தனித்தன்மையானது பெருமானார் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மீது கொண்டு மட்டில்லாத இஷ்க் ஆகும் .
அன்னாரின் பேரனார் மவ்லானா முப்தி  அக்தர் ரிழா காதிரி பரேல்வி (ஹாபிதஹுல்லாஹ் ) அவர்கள் கூறுகின்றார்கள் ,"கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் முஹப்பத்  தான் அவர்களது வாழ்வில் பிரதம கவனமாக இருந்தது . அன்னாரின் கூற்றும் ,செயல்பாடுகளும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  இஷ்கில் ஊறிப் போயிருந்தன,எந்தளவுக்கு என்றால் தமது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  இஷ்கில் மூழ்கிப் போயிருந்தன  . கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின்  முஹப்பத் தான் அவரது வாழ்வாகவும் ,அவரது செய்தியாகவும் இருந்தது  . "

இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் ,இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் இஷ்க் என்பது தெளிவான தீர்ப்பு எடுக்க இயலாமல் தமது உணர்விழந்து சிந்தை மாறிப் போகும் நிலையில் அல்ல , மாறாக அவரது முஹப்பத் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் விருப்பத்திற்கு இணங்குமாறு கட்டுப் படுத்துகின்றது . இஷ்கின் இந்த நிலையில் ,ஒரு மனிதனின் சுய விருப்பங்கள் மறைந்து ,தமது நேசரின் விருப்பங்களை பின்தொடருபவர் ஆகின்றார் .

இந்த நிலையைத்தான் ஹதீத் ஷரீபில்  " மனிதனின் விருப்பங்கள் நான் கொண்டு வந்ததுடன்(தூது ) இணைந்துவிடுகின்றன  " என்று கூறப்பட்டுள்ளது .

இந்த நிலையானது அன்னாரின் மார்க்க சேவைகளிலும் ,பணிகளிலும் வெளிப்பட்டுள்ளன . அவர்களின் ஒரு நூல் 'மகால் உல் உரபா பி இஜாஜி ஷரயின் வ உலமா '(مقال العرفاء بإعزاز شرع وعلماء) இதை நிலை நிறுத்த போதுமானது .
                                                     
Maqal e ‘Urafa’ bi I’zaz e Shar’a wa ‘Ulema


இந்த நூலில் அன்னார் ஷரீயத்தின் மேன்மையை விளக்கியுள்ளதோடு ,அதை எதிர்க்கும் நவீன காலத்தவரை மறுத்துள்ளார் . ஷரீயத்திற்கு மாற்றமான செயல்களை மருத்துள்ளதோடு ,முஸ்லிம்களை அவற்றை விட்டும் விலகி இருக்க அறிவுறுத்தி உள்ளார் .உதாரணமாக பெண்கள் இக்காலத்தில் தர்காவுக்கு சென்று ஜியாரத் செய்வது,வலிமார்களின் உரூஸ் போது நிகழும் அனாச்சாரங்கள் .சஜ்தா ஏ தழீம் ,மற்றும் தஜியா (அஹ்லே பைத்தினரின் ஷஹாதத்தின் நினைவாக ) ஆகியவை . இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் இத்தகைய சடங்குகளில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ளுமாறு மிக கடுமையாக வலியுறுத்தி உள்ளார்கள் .
[வாராந்திர ஹுஜும்  .டிசம்பர் ,புது டில்லி .1988]

பேராசிரியர் முஹம்மது மசூத் அஹ்மத் நக்ஷ்பந்தி முஜத்திதி மழ்ஹரி ,முப்தி முஹம்மது மழ்ஹருல்லாஹ்  நக்ஷ்பந்தி முஜத்திதி(தில்லி பதேஹ்பூர் மஸ்ஜிதின் கதீப் மற்றும் இமாம்  ) அவர்களின் மகனார் ,எழுதுகின்றார்கள் :


 " (1). இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அல்லாஹ்வை பற்றியும் ,நபிமார்களைப் பற்றியும் தளர்வான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை பயன்படுத்துவது அதபுக்கு மாற்றமான ஒன்றெனக் கருதினார்கள் , ஏனெனில் அதன் நேரடிப் பொருள் சரியாக இருப்பதாக தோன்றினாலும் ,அவை அவமதிப்பை உண்டாக்குபவையே .

முஹத்தித் பரேல்வி அவர்களை பொறுத்தவரை அத்தகைய சொற்கள் பின்வரும் நூற்களில் இடம்பெற்றுள்ளன .

மவ்லவி காசிம் நாணோத்வியின் தக்தீருன் நாஸ் ,

மவ்லவி அஷ்ரப் அலி தான்வியின் ஹிப்ளுள் ஈமான் ,
மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வியின் அல் பராஹீன் அல் காதியா ,
மவ்லவி இஸ்மாயில் தெஹ்லவியின் சிராத்தே முஸ்தகீம் மற்றும் தக்வியத்துள் ஈமான் ,
மவ்லவி மஹ்மூத் ஹுசைன் தேவபந்தியின் அல் ஜகத் அல் மகல் .

எனினும் மேற்கூறிய புத்தகங்களின் ஆசிரியர்கள் இந்த வாக்கியங்களை அவமதிப்பை ஏற்படுத்தும் அதன் நேரடிப் பொருளில் ஏற்க கூடாது என வாதிடுக்கின்றார்கள் ,ஏனெனில் அவர்களிடமும் அவமதிப்பு ஹராமாகும் . ஆனால் முஹத்தித் பரேல்வி அவர்களின் நிலைப்பாடானது அந்த புத்தகங்களின் வாக்கியங்கள் உர்து மொழியின் சாதாரண பேச்சுவழக்கில் உள்ளவை .
அதன் இயல்பான பொருள் உர்துவை தாய்மொழியாக கொண்டு பேசுபவர் எவ்வாறு பொதுவாக புரிந்து கொள்வாரோ அதுவே ஆகும் . எனவே தீர்ப்பு அத்தகைய அர்த்தத்தின் மீதே வழங்கப்படும் என்பதாம் .

(2) இரண்டாவதாக ,முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் குர்ஆனிலும் ,ஹதீதிலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் புகழ் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வாறே  அறிவிக்கப்பட  வேண்டும் என்றும் ,பரப்ப வேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டார்கள் .இதன் மூலம் எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மேன்மையும் ,தரஜாவும் முஸ்லிம்கள் அறிந்துகொள்ளவும் அவர்களின் உள்ளம் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் முஹப்பத்திலும்,சங்கையிலும் நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை பூண்டார்கள் .

எனினும் ,தேவபந்த்தின் உலமாக்கள் இந்த விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தார்கள் . ஏனெனில் முஸ்லிம்கள் இது விஷயத்தில் எல்லை மீறிவிடுவார்கள் என்று நினைத்தார்கள்.

(3) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களிடத்தில் பெருமானாரின் மீலாதை கொண்டாடுவது அனுமதிக்கப் பட்டதும் ,விரும்பத்தக்கதும் ஆகும் .எனினும் தேவபந்த்தின் உலமாக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர் .

(4) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்கள் பெருமானாரின் புகழ் பாடும் மவ்லித் மஜ்லிஸ்களில் கியாம் (எழுந்து நின்று சங்கை செய்வது ) பாராட்டுக்குரிய செயல் ,எனினும் தேவபந்த்தின் உலமாக்கள் இதை பித்அத் என்று கருதினர் .

(5) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்கள் வலிமார்களின் உரூஸ் அனுமதிக்கப்பட்ட ஒன்றென (அதில் ஷரீயத்திற்கு மாற்றமான செயல்கள் நடைபெறாத பொழுது ) கருதினார்கள் . தேவபந்த்தின் உலமாக்கள் அதை அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றென கருதினர் .

(6) பாத்திஹா ஓதுவது  (மரித்தோருக்கு ஈசால் சவாப் செய்தல் ) இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களிடத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு செயல் (அதில் ஷரீயத்திற்கு மாற்றமான செயல்கள் நடைபெறாத பொழுது ) . தேவ்பந்த்தின் உலமாக்கள் அதை அனுமதி மறுக்கப்பட்ட ஒன்றென கருதினர் .

சில பத்திகள் கழித்து பேராசிரியர் முஹம்மத் மசூத் அஹ்மத் எழுதுகின்றார்கள் :

தேவபந்த் முன்னோடிகளின் முர்ஷிதும் ஷைகுமான ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களும் இது விஷயங்களில் இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)  அவர்களைப் போன்றே நம்பிக்கை கொண்டிருந்தார்கள் .அவர்கள் இது விஷயமாக எழுதிய நூல் 'பைஸ்லா ஹப்த் மஸ்லா'  .இந்த இரு பிரிவினரையும் ஒன்றிணைக்கும் வண்ணம் இந்த நூல் எழுதபட்டது  .

எனினும் தேவ்பந்தின் உலமாக்கள் அன்னாரின் கருத்துக்களை ஏற்கவில்லை . "
[நூல்- இமாம் அஹ்மத் ரிழா முஹத்தித் பரேல்வி ,பக்கம் 37-38,காதிரி கிதாப் கர் ,பரேலி ,பேராசிரியர் முஹம்மத் மசூத் அஹ்மத் ]

ஸலபுகளில் ஆரம்பித்து கலபுகள் வரை எல்லோரதும் ஏகோபித்த முடிவு நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை அவமதிப்பது கடுமையான குற்றம் மற்றும் குப்ரை வெளிப்படுத்தும் செயலாகும் . குர்ஆன் ,ஹதீத் மற்றும் ஸஹாபாக்கள் .தாபியீன்களுடைய சொற்கள் இந்த சட்டத்தின் ஆதாரமாக அமைகின்றன .

இது விஷயமாக தாருல் உலூம் தேவபந்த்தின் ஷைகுல் ஹதீத் மவ்லானா ஹுசைன் அஹ்மத் டாண்டவி இது விஷயமாக எழுதுகின்றார்கள் ,
'நபிகள் நாயகம்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை அவமதிப்பது  குப்ராகும் . தெளிவான அவமதிப்பை விடுங்கள் ,ஒரு மனிதன் (தெளிவற்ற சொல்லாடல் காரணமாக )அவமதிப்பை ஒத்திருக்கும் சொற்களை பிரயோகிப்பானேயானால்  ,இதுவும் குப்ர் என்னும் தீர்ப்பை வழங்கும் காரணமாகும் . '
[நூல் - மக்தூபாத் ஷைகுல் இஸ்லாம் ,வால்யூம் 2,பக்கம் 165]

இதைப் போன்றே இல்ஹாத் மற்றும் ஜந்தகா  வும் குப்ர்  . இன்னும் ஷரீயத்தின் ஆதாரங்களை சேகரித்த பின்பு , தீனுடைய அடிப்படை நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மறுக்கும் ஒருவரை காபிர் என்று தீர்ப்பு அளிப்பது கடமை . மவ்லானா அமீன் அஹ்சன் இஸ்லாஹி ,மத்ரஸத்துல் இஸ்லாஹ் (ஆசம்கர் ,உத்தர்பிரதேஷ்  ) ஒரு கடிதத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்கள் ,
'மவ்லானா தானவி அவர்களின் பத்வா, மவ்லானா ஷிப்லி நுஃமானி அவர்களும் மவ்லனா ஹமீதுத்தீன் பாராஹி அவர்களும் காபிர் இன்னும் மத்ரசத்துள் இஸ்லாஹ் அவர்களின் பணியில் ஒரு அங்கம் வகிப்பதால் ,அது குப்ருடைய மத்ரஸா இன்னும் அதன் குப்ரியத் எந்த அளவுக்கு உள்ளதென்றால்  அந்த மத்ரஸாவின் தாவா பணிகளில் கலந்து கொள்ளும் உலமாக்கள் முல்கித் மற்றும் காபிர்கள்   என்று வெளியானது  '
[நூல் - ஹக்கீமுல் உம்மத் ,பக்கம் 475 , ஆசிரியர் - அப்துல் மஜீத் தைராபாதி ]
Hakeemul Ummath Book

அஷ்ரப் அலி தான்வியின் மாணவர் மற்றும் கலீபா அப்துல் மஜீத் தைராபாதி ,அஷ்ரப் அலி தான்விக்கு ஓர் கடிதம் எழுதி அதில் மவ்லானா ஷிப்லி நுஃமானி ,மவ்லானா ஹமீதுத்தீன் பராஹி ஆகியோரின் அறிவாற்றல்,தக்வா,மார்க்கப் பணிகள் ஆகியவற்றை   புகழ்ந்து எழுதினார். அஷ்ரப் அலி தானவி பதில் பின்வருமாறு எழுதினார் .
'இவை எல்லாம் செயல்கள் (அமல் ) . நம்பிக்கை இதை விட்டும் தனித்த ஒரு விஷயம் . நல்ல நம்பிக்கை தீய செயல்களுடன் இணைக்கப்படலாம் , எவ்வாறு தீய கொள்கைகளுடன் நன் நம்பிக்கை இணைந்திருப்பது போல் .'
[நூல் - ஹக்கீமுல் உம்மத் ,பக்கம் 476 , ஆசிரியர் - அப்துல் மஜீத் தைராபாதி ]

இந்த தலைப்பில் மேலதிக விபரங்கள் பின்வரும் நூற்களில் காணலாம் .
கிதாப் அல் ஷிபா - காழி இயாழ் அல் மாலிகி அல் அந்தலூசி(ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) , அஸ் சரீம் அல் மசலூல் - இப்னு தைமிய்யா , இஃபார் அல் முல்கிதீன் - அன்வர் ஷாஹ் காஷ்மீரி (ஷைகுல் ஹதீத் ,தாருல் உலூம் தேவபந்த் ) , அஷத்துல் அத்ஹாப்  - முர்தஸா ஹசன் தர்பாங்வி (முதன்மை கல்வி செயலர் ,தேவபந்த் ) .இரண்டு தற்கால புதிய புத்தகங்கள் நமூஸ் ஏ ரஸூல் அவ்ர் கானூன் ஏ தவ்ஹீன் ஏ ரிஸாலத் - நீதிபதி முஹம்மத் இஸ்மாயில் குரேஷி , குஸ்தாக் ஏ ரஸூல் கி ஷரீ ஹைசியத் - முப் தி  முஹம்மத் குல் ரஹ்மான் காதிரி .

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் நபித்துவத்தின் புனிதத்தை பாதுகாத்ததோடு , உறுதி செய்து நிறுவப்பட்ட நம்பிக்கைகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலுக்கு எதிராக ஜிஹாத் புரிந்தனர் .

அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி ,இமாமே அஹ்லுஸ் ஸுன்னாஹ் மவ்லானா அஹ்மத் ரிழா ஹனபி காதிரி பர்கத்தி பரேலி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை தமது எழுத்துக்களின் மூலம் காத்தார் .அன்னாரின் நூற்கள் கன்சூல் ஈமான் பீ தர்ஜூமத்துல் குர்ஆன் ,அல் அதாயா அல் நபவிய்யா பி அல் பதாவா அல் ரிழ்விய்யா ,ஜத் அல் மும்தர் அலா ரத் அல் முஹ்தர் , ஹதாயிகே பக்ஷிஷ் மற்றும் தவ்லா அல் மக்கியா ஆகியவை அத்தகைய குழப்பங்களுக்கு எதிராக   அன்னாரின் முயற்சியின் ஆதாரங்கள் .

அன்னாருடைய மார்க்க சேவைகளின் ஒரு பகுதி தான் பதாவா அல் ஹரமைன் ரஜபி நத்வத் அல் மைன் (ஹிஜ்ரி 1317 , 1899 ஆம் ஆண்டு ), அல் முஸ்தமத் அல் முஸ்தநத் (ஹிஜ்ரி 1320, 1902 ஆம் ஆண்டு ), ஹுஸாம் அல் ஹரமைன் (ஹிஜ்ரி  1324 ) ஆகியவற்றில் அவர்கள் மேற்கூறப்பட்ட தேவபந்தி முன்னோடிகளின் கூற்று குப்ர் என்று  மார்க்கத் தீர்ப்பு வழங்கி ,அதனை ஹரமைனின் உலமாக்களிடம் சமர்ப்பித்தார் .அவர்கள் அதற்கு ஒப்புதல் (தக்ரீஜ் ) வழங்கினார்கள் .

இது பற்றி மேலதிக விபரங்களுக்கு பாஜிலே பரேல்வி உலமா ஏ ஹிஜாஸ் கி நஜர் மேன் என்று பேராசிரியர் .முனைவர் .மசூத் அஹ்மத் எழுதிய நூலைக் காணவும் .

ஒரு பாகீஹ் மற்றும் முப்தியாக இமாம் அஹ்மத் ரிழா கான் பரேல்வி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்கள் ஆயிரக்கணக்கான பத்வாக்களை எழுதி,எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்தனர் . அவர்களின் சமகால ஸுன்னி உலமாக்களும் இந்த சேவையை செய்தனர் ஆயினும் ,இமாம் அஹ்மத் ரிழா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் அந்தஸ்தானது அவர்கள் அனைவரின் சார்பாக பேசுபவராகயிருந்தது(செய்தி தொடர்பாளர் - Spokeperson) . அவர்கள்  எப்பொழுதும் பொய்யான நம்பிக்கைகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தாந்தங்கள் ஆகிவற்றை எதிர்ப்பதில் முன்னோடியாக விளங்கினார் .

அன்னார் வஹாபிய பிரிவு மற்றும் அதன் கிளை பிரிவுகளை மிகச் சிறப்புமிக்க தனது திறமையினால் மறுத்ததன் காரணமாக ,பல போலியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார்கள் .

அன்னார்  தமது நூலான 'தம்ஹீதே ஈமான்' நூலில் எழுதுகின்றார்கள் ,

Tahmeed-e-Iman

' பொதுமக்களை ஏமாற்ற இந்த ஆட்கள் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளனர் . அவர்கள் கூறுகின்றார்கள் , 'அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் இத்தகைய உலமாக்களின் நம்பகத்தன்மை எத்தகையது ? அவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் தக்பீர் செய்கின்றனர் .அவர்களின் இயந்திரங்கள் மக்களை காபிர் என்று மட்டுமே கூறும் கட்டளைகளை கடைந்து அனுப்புகின்றன .
அவர்கள் மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி , மவ்லவி ஷாஹ் இஷ்ஹாக் ,மவ்லவி அப்துல் ஹை ஆகியோரை காபிர் என்று பத்வா கொடுத்துள்ளனர் . '
(இங்கு இமாம் அஹ்மத் ரிழா அவர்கள் தாம் இவர்கள் மீது குப்ர் பத்வா வெளியிடவில்லை என்கின்றார் )

இன்னும் அவர்களில் சிறிதும் வெட்கம் இல்லாதோர் நான் - ஷாஹ் அப்துல் அஜீஸ் ,ஷாஹ் வலியுல்லாஹ் ,ஹாஜி இம்தாதுல்லாஹ் ,மவ்லானா ஷாஹ் பஜ்லூர் ரஹ்மான் (அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் ) ஆகியோரையும் ,இன்னும் அவர்களில் வெட்கம் என்னும் எல்லையைக் கடந்தவர்கள் ,நான் ஷைக் முஜத்தித் அல்பதானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களை காபிர் என்று கூறியதாக   - நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன் - கூறுகின்றார்கள் . (தாம் அவ்வாறு கூறவில்லை என்று வெளிப்படுத்துகின்றார்கள் ).

அவர்கள் யாரிடம் எல்லாம் தொடர்பு கொள்கின்றார்களோ ,அத்தகையோர் பெருமதிப்பு வைத்திருக்கும் பெரியார்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது நான் தக்பீர் செய்ததாக கூறுகின்றனர் . இன்னும் உள்ளபடியே அவர்களில் சிலர் மவ்லானா முஹம்மது ஹுசைன் இலாஹாபதி அவர்களிடம் சென்று , நான் ஷைகுல் அக்பர் முஹைனுதீன் இப்னு அரபி (குத்திஸிர்ரஹு ) அவர்களின் மீது தக்பீர் செய்ததாகக் கூறினர் -   நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன் .

அல்லாஹுதஆலா சிங்ககைமிகு மவ்லானா அவர்களுக்கு சுவர்க்க பதியில் உயர்வான இடத்தை வழங்குவானாக ,அன்னார் அந்த பொய்யர்களை நம்பவில்லை . மாறாக அவர்கள் திருக்குர்ஆன் ஷரீபின் வசனத்திற்கு கீழ்ப்படிந்தார்கள் ,
'நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். '  [49:6]
இன்னும் நான் அவ்வாறு கூறினேனா என்று என்னிடம் கேட்டு எழுதினார்கள் .

நான் அத்தகைய கூற்றை மறுக்கும் விதமாக நூல் வடிவில் ஒரு மறுப்புரை அவருக்கு பதிலாக எழுதினேன் , இன்ஜா அல் பாரி அந்த வஸ்வாஸில் முப்தாரி  . அதை வாசித்த மவுலானா அவர்கள் 'லா ஹவ்ல வலா ஹுவ்வத்த இல்லா பில்லாஹ் ' என்றனர் . வஞ்சகத்தினால் முற்றுகையிட முயன்றவர்களின் சதியை முறியடித்தவர்களாக .  
[நூல்- தம்ஹீதே ஈமான் ,பக்கம் 45-46,இமாம் அஹ்மத் ரிழா பரேல்வி ,இதாரா மஃரிப் ஏ நுஃமானியா ,லாகூர் ]

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் முக்கியத்துவம் வாய்ந்த உலமாக்களில் ஒருவரான அல்லாமா ஸெய்யித் அஹ்மத் காஜ்மி அம்ரோஹாவி (அன்வாருல் உலூம் ,முல்தான் ) எழுதுகின்றார்கள் ,
'தக்பீர் (ஒருவரை காபிர் என்று பத்வா வழங்குவது ) உடைய விஷயத்தில் , எப்பொழுது எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் ,யாரேனும் குப்ருடைய வாசகங்களை உபயோகித்தால் ,நாம் அவரின் மீது தக்பீருடைய பத்வா வழங்குவதை விட்டும் விலக மாட்டோம் . அவர் தேவபந்தியோ ,பரேல்வியோ ,லீகைச் சார்ந்தவரோ ,காங்கிரசியோ ,நேச்சரியோ (இயற்கைவாதிகள் ),நத்வியோ யாராக இருந்தாலும் சரி . இது விஷயத்தில் நாம் நண்பரா அல்லது எதிரியா என்று பாகுபாடு பார்ப்பதில்லை .

இன்னும் நிச்சயமாக இதன் அர்த்தம் ,லீகைச் சார்ந்த ஒருவர் குப்ருடைய வாசகத்தை உபயோகித்தால் ,லீகைச் சார்ந்த எல்லோரும் காபிர்கள் என்று அர்த்தம் அல்ல அல்லது ஓர் நத்வி குப்ருடைய செயலை செய்தால் எல்லா நத்விக்களும் காபிர் அல்ல என்பதாம் . நாங்கள் தேவபந்த் ஊரில்  வசிக்கும்  எல்லா நபர்களையும், ஒரு சில தேவபந்த்தை சார்ந்தவர்கள் எழுதிய குப்ரான வாசகங்களுக்காக நாம் காபிர்கள் என்று கூறவில்லை .

நாமும் நமது முன்னோடிகளும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது , நாங்கள் தேவபந்த் அல்லது லக்னோ வாசிகள் அனைவரையும் காபிர்கள் என்ற மார்க்க தீர்ப்பு அவர்கள் அங்கு வசிப்பதன் காரணமாகவே நாம் வழங்கிவிடவில்லை . எம்மைப் பொறுத்தவரை , யார் ஒருவன் அல்லாஹுத்தஆலா வை,அவனது நபிமார்களை ,அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களை  நிந்தனை செய்கின்றானோ ,பல முறை எச்சரித்தும் தவ்பா செய்யவில்லையோ அவன் தான் காபிர் .இன்னும் நாங்கள் எத்தகையோர் அத்தகைய குப்ரை அறிந்து கொண்டு ,அவமதிப்பு அளிக்கும் அதன் அசல் அர்த்தங்களை அறிந்து கொண்டு , அத்தகைய அவமதிப்புகளை உண்மை என்று ஏற்று ,அவமரியாதை செய்பவர்களை நம்பிக்கையாளராகவும் . தங்களது தலைவர்களாகவும் ஏற்றுக் கொண்டுள்ளாரோ அவர்களை நாம் காபிர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றோம் .

இது தவிர , யாதொரு முஸ்லிமையும் நாம் காபிர் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில்லை . நாம் காபிர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கிய நபர்கள் மிகவும் குறைவு மற்றும் வறையரைப்படுத்தப்பட்டது (குறிப்பிட்ட பிரச்சனையின் அடிப்படையில் ) . இந்த குறிப்பிட்ட நபர்களைத் தவிர தேவ்பந்த் அல்லது பரேலியின் எந்த ஒரு முஸ்லிமும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை . அது போலவே லீக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் விஷயத்திலும் இதே நிலைப்பாடு தான் . எல்லா முஸ்லிம்களையும் நாம் முஸ்லிம்கள் என்றே கருதுகின்றோம் .'
al haq ul mubeen

[நூல்- அல் ஹக் அல் முபீன் ,பக்கம்  24-25 , அல்லாமா அஹ்மத் சயீத் காஜ்மி ,முல்தான் ]

முப்தி முஹம்மத் ஷரீப் அல் ஹக் அம்ஜதி , புஹாரி ஷரீபின் விரிவுரையாளரும் , தாருல் இப்தா,ஜாமியா அஷ்ரபியா ,முபாரக்பூரின் (இந்தியா ) தலைவரும் ஆனவர்கள்  எழுதுகின்றார்கள் .
' பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கு பாமர மக்களிடம் வழக்கத்தில் உள்ள சொல்லாடல்(உர்ப் ) மட்டும்  போதுமானது அல்ல .
எனவே தம்மை தேவ்பந்தி என்று கூறிக் கொள்ளும் நபர் ,மற்றவர்களால் தேவ்பந்தி என்று அழைக்கப்படும் நபர் ,இந்த நான்கு தேவ்பந்துடைய   உலமாக்களை தம்முடைய  தலைவர்கள் என்று ஏற்றுக் கொள்பவர் ,இன்னும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை பித்அத்தி என்று அடையாளமிடுபவர் , ஆனால் எதார்த்தத்தில் இந்த நான்கு தேவ்பந்தி உலமாக்களின் குப்ர் வாக்கியங்களை அறியாதிருந்தால் ,அத்தகைய நபர் தேவ்பந்தி அல்ல (காபிர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர்) .அத்தகைய நபர் நம்பிக்கை மறுப்பாளர் அல்ல இன்னும் அவரது ஜனாஸா தொழுகையை தொழுவது இறைமறுப்பு அல்ல  .அல்லாஹ் நன்கு அறிந்தவன் .  '
[நூல்- மஆரிப் ஷரஹ் புஹாரி , பக்கம் 914,ரஜா அகாடமி  ]

மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு - ஷைகு ஷரீப் அல் அம்ஜதி அவர்கள் 'எதார்த்தத்தில் தேவ்பந்தி இல்லை ' என்று குறிப்பிடக் காரணம் ,இமாம் அஹ்மத் ரிழா மற்றும் ஏனைய ஸுன்னி உலமாக்களால் வழங்கப்பட்ட  பத்வாவில் , 'தேவ்பந்தி' என்று பதம் ஒரு குறிப்பிட்ட சாராரையே குறிக்கும் .















Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 12 August 2015

தக்தீருன்னாஸ் நூலில் தேவ்பந்திகளின் மோசடிகள்



தேவ்பந்திகள் மீண்டும் நூலில் மோசடி செய்துள்ளனர் . 'தக்தீருன்னாஸ் ' என்னும் நூல் அவர்களின் அறிஞரான மவ்லவி காசிம் நாநோத்வியால் எழுதப்பட்டது .அதை தேவ்பதிகளே திரித்து மோசடி செய்துள்ளனர் .

இந்த நூலின் மீது தான் இந்தியாவைச் சார்ந்த 260 உலமாக்களும் ,மக்கா முகர்ரமா ,மதீனா முனவ்வராவைச் சார்ந்த 33 உலமாக்களும் குப்ருடைய பத்வாவை சாற்றினார்கள் .

அசல் மொழிபெயர்ப்பு :

         " நபிமார்கள் தங்களின் உம்மத்துகளை விட உயர்ந்தவர்களாகவும் / தேர்ந்தெடுக்கபட்டவர்களாகவும் இருப்பது ஞானத்தில்  தான் . நல்ல அமல்கள் என்று வரும் பொழுது உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமாகவும் ,சில சமயம் நபிமார்களையும் முந்தி விடுகின்றனர் ".

Taqdeerun Naas,Qasim Nanothvee

Taqdeerun Naas,Qasim Nanothvee
இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளால் திரித்து மோசடி செய்த பதிப்பு பின்வருமாறு :

  " நபிமார்கள் தங்களின் உம்மத்துகளை விட உயர்ந்தவர்களாகவும் / தேர்ந்தெடுக்கபட்டவர்களாகவும் இருக்கின்றனர்  . நல்ல அமல்கள் என்று வரும் பொழுது உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமாகவும் ,சில சமயம் நபிமார்களையும் முந்தி விடுகின்றனர் ".

தேவ்பந்திகள் ' இருப்பது ஞானத்தில்  தான்' என்னும் வாசகத்தை நீக்கி விட்டனர் .


Taqdeerun Naas Fabricated ,Qasim Nanaothvi Deoband

Taqdeerun Naas Fabricated ,Qasim Nanaothvi Deoband








Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, 1 June 2015

மரணித்த பின் மீண்டு வந்து உதவும் தேவ்பந்தி மவ்லவி !

அர்வாஹே ஸலாசா ,பக்கம் 242 நூலில் (தேவ்பந்த் அறிஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ) உள்ள ஒரு சிறு சம்பவம் !

Arwahe Salasa,Page 242


மவ்லவி காஸிம் நானோத்வி அல் தேவ்பந்தி மரணித்த பின்பு தமது பூத உடலுடன் மீண்டு வந்து தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறார் .

" ஒரு நாள் பஜ்ர் தொழுகைக்கு பின் மவ்லவி ரபியுத்தீன் சாஹிப் தமது அறைக்கு (தேவபந்த் மதரசாவிற்கு உள் ) மவ்லவி மஹ்மூதுல் ஹசன்  சாஹிப் அவர்களை வருமாறு அழைப்பு விடுத்தார் . மவ்லானா  மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அவ்வழைப்பை ஏற்று ,கதவை திறந்து உள்ளே நுழைந்தார் . அது ஒரு கடுமையான பனிக் காலம் .

மவ்லானா ரபீயுத்தீன் சாஹிப் தமது மேலங்கியை ஆய்வு செய்யுமாறு கூறினார் . மஹ்மூதுல் ஹசன் சாஹிப் அதை ஆராய்ந்த பொழுது அவரது மேலங்கி நனைந்திருக்க கண்டார் . மவ்லவி ரபியூத்தீன் சாஹிப் தற்பொழுது தான் மவ்லானா காசிம் நானோத்வி தமது பூத உடலுடன் (ஜசதே உன்சரீ ) தம்மை வந்து சந்தித்ததாகவும் ,அதைக் கண்டு தாம் பயந்து நடுங்கியதால் தமது மேலங்கி நனைந்து விட்டதாகவும் கூறினார் . மவ்லவி காசிம் நானோத்வி ,மவ்லானா மஹ்மூதுல் ஹசன் அவர்களுக்கு தாருல் உலூம் தேவ்பந்தின் ஆசிரியர்களுக்கு இடையில் நடைபெறும் உட் பூசல்களில் தலையிட வேண்டாம் என்று கட்டளையிட்டார்கள் . மவ்லவி மக்மூதுல் ஹசன் கூறினார் ,'ஹசரத் நான் உங்கள் கரம் பற்றி தவ்பா செய்கின்றேன் ,இனி இது விஷயத்தில் நான் எதுவும் பேச மாட்டேன் '. "

மேற்கூறிய சம்பவத்தில் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் உஸ்தாதான மவ்லவி காஸிம் நானோத்வி மரணித்து விட்ட பின்பும் மீண்டு வர இயலும் ,அதுவும் தனது பூத உடலுடன் ,தேவ்பந்தின் ஓர் உட்பூசலைத் தீர்க்க வேண்டி !!!!


எனினும் அகிலத்தாருக்கு அருட்கொடையான நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது புனித ரவ்ழா ஷரீபை விட்டு அகல இயலாது என்று பத்வா கொடுத்துள்ளனர் இந்த தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் !

குறிப்பாக மவ்லித் மஜ்லிஸ்களில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை குறிக்கும்  பைத் ஓதும் பொழுது எழுந்து நின்று (கியாமில்  ) சங்கை செய்வது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் நடைமுறை ,ஏனெனில் உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த சபையில்  ஹாழிர் ஆகின்றார்கள் என்பதினால் . இது அநேக வலிமார்களின் அனுபவத்தில் நிகழ்ந்துள்ளதாக வரலாற்று நூல்களில் பதிவாகி உள்ளது .

ஆனால் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகள் இவையெல்லாம் இயலாது என்று மறுக்கின்றனர் .

இது பற்றிய தேவ்பந்தின் பத்வா பின்வருமாறு ,

Darul Uloom Deoband Fatwa



கோடிட்ட பகுதியில் பின்வருமாறு உள்ளது ,

' பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறை வாழ்வானது ,ஹயாதே பர்ஜக் , இந்த வாழ்க்கையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பயணிக்க இயலாது (ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ) '




Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, 13 June 2014

காசிம் நானுத்வியின் மீது தக்Fபீர் பத்வா


           சில காலம் முன்பு,தாருல் உலூம் தேவ்பந்த்க்கும் ஜமாத்தே இஸ்லாமி (மௌதூதி) கக்கும் இடையேயான சண்டை அதன் உச்சத்தில் இருந்த போது,ஜமாஅத்தே இஸ்லாமியைச் சார்ந்த சில நபர்கள் மௌலவி காசிம் நானுத்வி எழுதிய நூலான தப்சியதுல் அகாயித் நூலில் இருந்து சில வாசகங்களை எடுத்து அவை குப்ரின் பக்கம் சேர்க்குமா என்ற வினாவை எழுப்பி தாருல் உலூம் தேவ்பந்த்க்கு பத்வா கோரி அனுப்பினர் .

ஆனால் அவர்கள் இந்த வாசகங்கள் தேவ்பந்தின் முன்னோடியான காசிம் நானுதிவியால் எழுதப்பட்டது எனத் தெரிவிக்கவில்லை. ஆக தேவ்பந்தின் அறிஞர்களுக்கு இவை மௌலவி காசிம் நானுத்வியின் வாசகங்கள் என அறிந்திருக்கவில்லை.

தாருல் உலூம் தேவ்பந்தின் முப்திகள் இதன் மீது உடனடி விசாரணை நடத்தி,குப்ருடைய பத்வாவை வெளியிட்டார்கள் .

இந்த பத்வாவில் நீல நிறத்தில் அடிக்கோடிட்ட பகுதிகளைக் காணுங்கள். அதில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது,
"இத்தகைய அகீதாவுடைய நபர் காபிர். அவர் தஜ்தீத் ஏ ஈமான் ,தஜ்தீத் ஏ நிக்காஹ் செய்யாத வரை அவருடன் எந்த உறவும் வைக்கக் கூடாது ".


பின்னர் ஜமாத்தே இஸ்லாமியினர் இந்த வாசகம் மௌலவி காசிம் நானுத்வியின் நூலான தப்சியதுல் அகாயித் ல் இருந்து எடுக்கப்பட்டது என்று வெளிப்படுத்திய பொழுது, தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர் !!!

பின்னர் மௌலானா அமீர் உத்மானி அல் தேவ்பந்தி "ஜமாத்தே இஸ்லாமி அவுர் தேவ்பந்த் கி இக்திலாப் கி ஹகீகத் " என்ற நூலை எழுதினார். அதில் இந்த பத்வாவைக் குறிப்பிட்டு ,தேவ்பந்தி அறிஞர்கள் மிகவும் சோர்வாகவும்,வேலைப் பளுவின் காரணமாக கவனம் செலுத்த வில்லை என்ற நொண்டிச் சாக்கு கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர் மீது குப்ர் பத்வா கொடுத்த தேவ்பந்தி முப்திகள், அந்த வாசகங்களுக்கு வேறொரு கருத்து இருக்க வாய்ப்பிருக்கலாம் என நினைத்து குப்ர்ருடைய பத்வா சுமத்தும் முன் சிறிது கூட யோசிக்கவில்லை.

உங்களை எல்லாம்  வஹாபிய சிந்தனை வேறு எவ்வாறு வழிநடத்தும்,எப்போது
சமயம் கிடைக்கும் எப்போது ஒரு முஸ்லிம் மீது குப்ர் ,ஷிர்க்,பித்அத்  என்று கூப்பாடு போடுலாம் என்று எண்ணுவதை விட !!!               
             





Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 22 May 2014

மௌலவி காசிம் நானூத்வியின் வஹாபிய வழிகேடு


         தாருல் உலூம் தேவ்பந்த் மௌலவி காசிம் நானூத்வியால் 1866/68 ல் ஸ்தாபிதம்   செய்யப்பட்டது .

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,

"நபிமார்கள் அப்பட்டமான பொய்கள் உரைப்பதை விட்டும் தூய்மையானவர்களாகவும் ,பாவங்களை விட்டும் அப்பாவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை" (மஆதல்லாஹ்)
[ நூல் - தஸ்பியத் உல் அகாயித் ,பக்கம் 25,பதிப்பாளர்கள் சையத் மாலிக் குதுப்கானா அஜீஸியா தேவ்பந்த் ]
"மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது "
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 3,25 ]


Tahzeerun naas

Tahzeerun naas Pg 2- 3

Tahzeerun naas Pg  3

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"வெளிப்படையான அமல்கள் மூலம் ஒரு சராசரி முஸ்லிம் நபியை விட உயர்ந்த அந்தஸ்துக்கு செல்ல  முடியும். "
 [ நூல் -தக்தீருன்னாஸ் ,பக்கம் 5]
"மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று."
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 3 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் ஒரு நபி வந்தால் அல்லது அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் என்று அனுமானம் செய்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது "[நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 25 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ] 


Tahzeerun naas Pg 25

"உம்மத்துகள் தங்களது நபியை அமல்களில் முந்திவிடுவர்"
[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 5 ,பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஜ்ஜாலும் வாழ்வைக் கொண்டு நன்மாரயம் பெற்றவர்கள்.எந்த பண்புகள் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களாக உள்ளதோ  அவை தஜ்ஜாலிடமும் உள்ளன."
[ நூல் - ஆபே ஹயாத் ,பக்கம் 169, பதிப்பாளர்கள் குதுப்கானா காசிமி தில்லி 1355 ஹிஜ்ரி,1936 ]

காசிம் நானூத்வி எழுதுகிறார் ,
"நபிமார்கள் தனது உம்மத்தை விட அறிவில் மட்டுமே மேலானவர்கள்,ஆனால் அமல்களில் ,சில சமயம் உம்மத்துகள் நபிமார்களுக்கு சமமானவர்களாகவும் ,மேலும் எப்போதாவது  அமல்களில் முந்தியவர்களாகவும் காணப்படுகின்றனர்"
 [ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 5 ,பதிப்பாளர்கள் மக்தபா பைஸ் நசத் ஜாமி மஸ்ஜித் ,தேவ்பந்த் மற்றும் குதுப்கானா காசிமி தேவ்பந்த் ]

தக்தீருன் நாஸ் நூலில் உள்ள மேலும் சில வழிகெட்ட கொள்கைகள்


Tahzeern Naas Pg 13



Tahzeern Naas Pg 24




                                                  அஸ்தக்பிருல்லாஹ் !!!





 
Related Posts Plugin for WordPress, Blogger...