Showing posts with label Ismail Dihlawi Fatwa. Show all posts
Showing posts with label Ismail Dihlawi Fatwa. Show all posts

Tuesday, 14 November 2017

இந்திய வஹாபியிசத்தின் தந்தை


இந்திய துணைக்கண்டத்தில் வஹாபியிசத்தின் நிறுவனர் இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) . இவர் துரதிருஷ்டவசமாக அக்காலத்தில் புகழும் ,பேறும் பெற்று விளங்கிய இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் .

இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) ==> அவரது தந்தை ஷாஹ் அப்துல் கனி திஹ்லவி (மறைவு 1203 ஹிஜ்ரி / 1788) அவர்கள்  ==> அன்னாரது தந்தை இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها  அவர்கள் 


பால்கோட் நகரிலுள்ள இஸ்மாயில் திஹ்லவியின் சபிக்கப்பட்ட கபர் 

இவர் தமது காலத்தில் அரபகத்திற்குச் சென்று ,இப்னு அப்துல்  வஹாப் நஜ்தியின் நூலான 'கிதாபுத் தவ்ஹீத் ' நூலை வாசித்து ,அதன் பால் ஈர்க்கப்பட்டு அதை உர்துவில் மொழிபெயர்த்து , தமது எண்ணங்களையும் உள்ளடக்கி 'தக்வியத்துள் ஈமான் ' என்று வெளியிட்டார் .

Kitab ut Tawheed and Taqwiyathul Iman - Urdu
சவூதி தாருஸ் ஸலாம் பதிப்பகம் வெளியிட்ட கிதாபுத் தவ்ஹீத் - தக்வியத்துள் ஈமான் உர்து பதிப்பு ,வஹாபிய சகோதர பாசம் ! 

இந்த புத்தகம் இந்திய -பாக் துணைக்கண்டத்தில் இதற்கு முன்னர் எந்தவொரு வழிகெட்ட இயக்கமும் செய்ய இயலாத வண்ணம் இஸ்லாத்திற்கும் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கும் பெரும் கேட்டை விளைவித்தது .

  நாடெங்கிலும்  நடத்தப்பட்ட   கண்மணி நாயகம் ﷺ அவர்களின் புகழ் பாடும் மவ்லிதுன் நபி மஜ்லிஸ்கள் , பித்அத் என்று அழைக்ப்பட்டன . வலிமார்களின் உரூஸ் நிகழ்வுகள் இஸ்லாத்திற்கு முரணானது என்று கூறப்பட்டன . வலிமார்களை நாடி ஜியாரத் செய்வதும் ,அவர்களிடம் உதவி தேடுவதும் குப்ர்  என்று கூறினர் ,இன்னும் அப்துல் முஸ்தபா என்று பெயரிடுவதே ஷிர்க் என்றனர் .  இந்த புத்தகம் தான் இந்திய -பாக் துணைக்கண்டத்தில்  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் இடையே பிரிவினையை உண்டாக்கிய முதல் மற்றும் முன்னோடி நூல் .

பாமர இஸ்லாமியர் குழப்பத்தில் ஆழ்ந்தனர் . ஏனெனில் இந்த புத்தகம் மேற்கூறப்பட்ட அமல்களில் ஈடுபட்ட அவர்களையும் ,அவர்களின் முன்னோர்களையும் காபிர் என்றும் முஷ்ரிக் என்றும் கூறியது . ஒவ்வொரு வீட்டிலும் சண்டை,சச்சரவுகள் உண்டாயின . உறவினர்கள் ,குடும்பத்தினர் இடையே பிரச்சினைகள் வெடித்தன .

  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை தில்லி ஜும்மா மஸ்ஜிதில் விவாதத்திற்கு அழைத்தனர் . அங்கு இஸ்மாயில் திஹ்லவி வெட்கி தலைகுனியும்படியான தோல்வியை தழுவினான் .

இன்னும் பெஷாவர் நகரத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை விவாதத்திற்கு அழைத்து ,அங்கும் தோல்வியை சந்தித்தான் .

இஸ்மாயில் திஹ்லவியின் சமகால உலமாக்களில் அவனின் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து விவாதித்தும்  , நூற்கள் எழுதியும் ,பத்வாக்கள் வெளியிட்ட உலமாக்கள் சிலர்.இவர்களில் அவரது குடும்பத்தாரும் ,அவரது சிறிய தந்தை ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்களும் அடங்குவர் .


  • அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி  (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  • மவ்லானா ரஷீதுதீன் கான் திஹ்லவி 
  • ஷாஹ் மக்ஸுசுல்லாஹ் திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது மூஸா திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது ஷரீப் திஹ்லவி 
  • முப்தி ஷுஜாவுத்தீன் அலி  கான்   
  • அல்லாமா பஜ்லே ரஸூல் பதாயுனீ 
  • முப்தி ஸத்ருத்தீன் திஹ்லவி 
  • ஷெய்கு அஹ்மத் ஸயீத் முஜத்திதி ராம்பூரி 
  • ஷெய்கு ஹைதர் அலி பைஜாபதி 
  • மவ்லனா அப்துல் மஜீத் பதாயுனீ 
  • ஷெய்கு அப்துல் கபூர் ஸ்வாதி 
  • ஷெய்கு முஹம்மது சுலைமான் தஉன்ஸ்வி 
  • ஷெய்கு ஆலே ரஸூல் மறெர்ஹவி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  •  மவ்லானா துராப் அலி லக்னவி  
1835ல் ,தக்வியத்துள் ஈமான் முழு புத்தகமும் ஆதி முதல் அந்தம் வரை மதராஸ் உலமாக்கள் முன் வாசிக்கப்பட்டு , முப்பது உலமாக்களும் பின்வரும் பத்வா வெளியிட்டனர் : " யாராகிலும் ஒரு நபர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது போல் கொள்கை உடையவனாய் இருந்தால் அவன் காபிர் ,இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன்  ."

மதராஸ் உலமாக்களின் பத்வாவுக்கு ஒப்புதல் அளித்து தில்லி உலமாக்களும் 'தக்வியத்துள் ஈமான் ' என்ற வழிகெட்ட நூலுக்கு எதிராக பத்வா வெளியிட்டனர் .

தில்லியின் வீதியெங்கும் , ' இந்த நூல் கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்  , வலிமார்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்   இந்த நூலை யாரும் வாசிக்க கூடாது என்றும் . இத்தகைய நூற்களை வாசிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றென ' அறிவிப்பு செய்யப்பட்டது .

உஸ்தாதுல் உலமா மவ்லானா முஹம்மது வஜ்ஹீ சாஹிப் அவர்கள் 'தக்வியத்துள் ஈமான் ' நூலுக்கு மறுப்பு தெரிவித்து 'நிஜாமுல் இஸ்லாம் ' என்று நூலை எழுதினார்கள் . இந்த நூலுக்கு கல்கத்தாவைச் சார்ந்த 22 உலமாக்கள் ஒப்புதல் அளித்தனர் .

வழிகெட்ட 'தக்வியத்துள் ஈமான்'  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட சில நூற்கள்  :- 

  • குல்ஜார் ஏ ஹிதாயத்  - மதராஸ் முப்தி ,அல்லாமா முஹம்மது ஸிப்ஹதுல்லாஹ் 
  • தஹ்கீக் உல் பத்வா பி இப்தலில் தக்வா  - அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி 
  •  ஹயாத்துன் நபி  - ஷெய்கு முஹம்மது ஆபித் சிந்தி 
  • தஹ்கீக் உஷ் ஷிர்க் வத் தவ்ஹீத் - ஹாபிஸ் முஹம்மது ஹசன்
  • ஸலாஹுல் முஃமினீன் பி காதில் காரிஜீன்  -மவ்லானா லுப் உல்ஹக் காதிரி 
  • ஹுஜ்ஜதுல் அமல் பி இஃப்த்தால் இல் ஹைல்  - மவ்லானா மூஸா திஹ்லவி 
  • ரஸ்முல் கைராத் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் முஸ்தபாபாதி 
  • துஹ்பத் அல் முஸ்லிமீன் பி ஜஸ்சாபி செய்யதில் முர்சலீன் - மவ்லானா அப்துல்லாஹ் சஹ்ரான்புரி 
  • தஹ்லீல் மா அஹல்லாஹு பி தபஸீர் வ மா அஹ்ல் பிஹி லி கைரில்லாஹ் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் 
  • சபீப்ளுள் நிஜாஹ் இலா தஹஸீல் இல் பலாஹ்  -மவ்லானா துராப் அலி லக்கனவி 
  • சபீனத் உல் நிஜாத்  - மவ்லானா முஹம்மது அஸ்லமீ மதராஸி 
  • நிஜாமே இஸ்லாம்  -மவ்லானா முஹம்மது வஹீதுதீன்  கல்கத்தா 
  • குவத் உல் ஈமான்  -  மவ்லானா கறாமத் அலி ஜஉன்புரி 
  • அஹ்காக் உல் ஹக்  - மவ்லானா செய்யத் பத்ருத்தீன் ரிஸ்வி ஹைதராபாதி 
  • கைர் உஸ் ஸாத் லி யவ்ம் மில் மியாத் - மவ்லானா கைருத்தீன் மதராஸி 
  • நேம் முள் இன்திபாஹ் லி ரப் இல் லிஸ்த்திபாஹ் - மவ்லானா முஅல்லிம் இப்ராஹீம் ,பாம்பே 
  • ஹிதாயத்துள் முஸ்லிமீன் இலா தரீக் கில் ஹக் கில் யகீன் - காழி முஹம்மது ஹுசைன் கூபி 
  • துஹ்பா ஏ முஹம்மதியா தர் ரத்தே வஹாபியா - மவ்லானா செய்யத் அப்துல் பத்தாஹ் முப்தி காதிரி குல்ஷனபாதி 
  • சிராஜுல் ஹிதாயத்  - மவ்லானா குல்ஷனாபாதி 
இந்த உலமாக்களைத் தவிர மவ்லானா இனாயத் கான் , மவ்லானா ஷாஹ் ரவூப் அஹ்மத் , மவ்லானா ஷாஹ் அஹ்மத் ஸயீத் முஜத்திதி ஆகியோர் கடுமையாக எதிர்த்து ,அதன் பித்னாவை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தனர் .

இறுதியாக இஸ்மாயில் திஹ்லவி,அவனது உஸ்தாத் செய்யித் அஹ்மத் ரேபரேலியுடன்  ,அவர்கள் இருவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்கள் என்று தெரிந்ததும் , அல்லாஹ்வையும்,கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துபவர்கள் என்று  தெரிந்ததாலும்  , பால்கோட் நகர பதான் முஸ்லிம்களால்கொல்லப்பட்டனர் .
தேவபந்திகளும் , கைர் முகல்லித் வஹாபிகளும் அவர்கள் இருவரும் சீக்கியருக்கு எதிராக போரிட்டு மடிந்தனர் என்று கூறி வந்தாலும் , அதற்கு சரித்திர சான்றுகள் இல்லை .


கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் , 'பித்னா கொலையை விட கொடியது ' . இஸ்மாயில் திஹ்லவி மடிந்தாலும் , அவனின் மரபு தொடர்ந்தது . அவனின் தவறிய , வழிகெட்ட கொள்கைகள் பரவின .

இஸ்மாயில் திஹ்லவியின் மறைவுக்குப் பின் அவனது ஆதரவாளர்கள் இரு பிரிவாகப் பிரிந்தனர் . அவர்களில் ஒரு கூட்டத்தார் தாம் இமாம் அபூஹனீஃபா அவர்களை பின்பற்றுவோர் என்று கூறினார்கள் . இவர்கள் பின்னாட்களில் தேவ்பந்திகள் என்று அழைக்ப்பட்டனர் .

மற்றோரு கூட்டத்தார் இமாம்களின் தக்லீதை ஏற்க மறுத்து தம்மை அஹ்லே ஹதீத் என்று அழைத்துக் கொண்டனர் . 

   
  



Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, 2 June 2014

இஸ்மாயில் திஹ்லவியும் இஜா உல் ஹக்


இஸ்மாயில் திஹ்லவி எழுதிய பார்ஸி நூல் இஜா உல் ஹக் . அதில் அவர் கூறுகிறார் ,

"வஹ்ததுல் வுஜூத் மற்றும் வஹ்ததுல் ஷுஹூத் இரண்டும் பித்அத்  "

[ வாசகர்களின் கவனத்திற்கு தஸவ்வுப்- பையும் விட்டு வைக்காத இந்த வஹாபிய தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினரின் சிஷ்தி சப்ரி சில்சிலா வஜூதி சில்சிலா . இந்த வஹாபிய தப்லீக் ஜமாஅத் தரீக்காக்களில் எவ்வாறு ஊடுருவியுள்ளனர் என்பதை பின்னர் விளக்குவோம் ]

இஸ்மாயில் திஹ்லவி மேலும் கூறுகிறார் ,

"அல்லாஹ் நேரத்தை விட்டும் காலத்தை விட்டும் திசைகளை விட்டும்  தேவையற்றவன் என்று நம்புவது பித்அத் மேலும் அல்லாஹ் ஹுதஆலாவின் பரிசுத்த லிகா என்னும் தரிசனத்தை நியாயத் தீர்ப்பு   நாளில் திசையில்லாமல்  பார்க்கலாம் என்று நம்புவது பித்அத் "

இஸ்மாயில் திஹ்லவி   கூறுகிறார் ,

" ஆயத்தே முதஷ்பிஹாத் வின்  தாவீல் செய்வது பித்அத் "

மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி இந்த வஹாபிய கொள்கையுடைய இஸ்மாயில் திஹ்லவியின் அகீதாவை சஹீஹ் அகீதா என்கிறார் . என்னே இவர்களின் வஹாபிய விசுவாசம் !!!
 


Iza ul Haq


 


 
 
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, 29 May 2014

இஸ்மாயில் திஹ்லவியின் மீது வழங்கப்பட்ட பத்வா



            மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதுகிறார்கள் ,

"             மௌலானா முஹம்மத் இஸ்மாயில் தெஹ்லவி ஷஹீத் , மௌலானா முனவ்வருத்தீனின் வகுப்புத் தோழர். ஷாஹ் அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மறைவுக்குப் பின்,அவர் (இஸ்மாயில் திஹ்லவி ) தக்வியதுள் ஈமான் ,ஜிலா உல் அய்னய்ன் ஆகிய நூல்களை எழுதிய போதும் , அவரது கொள்கைகள் நாடெங்கும் பரவிய போது, எல்லா மார்க்க அறிஞர்களும் அதற்கு எதிராக ஒன்று திரண்டனர். அவர்களில் இந்த நூற்களை வெகுவாக எதிர்த்து,இதற்கு எதிராக பல நூற்களை எழுதியவர்கள் மௌலானா முனவ்வருத்தீன் அவர்கள்.
ஹிஜ்ரி 1240ல் தில்லி ஜாமியா மஸ்ஜிதில் பிரசித்தி பெற்ற அந்த விவாதம் நடைபெற்றது. இந்த நூற்களின் மீது இந்தியாவில் உள்ள அனைத்து உலமாக் களிடமும் பத்வா கேட்கப்பட்டு , பின்னர் ஹரம் ஷரீபில் இருந்தும் ஒன்று கேட்கப்பட்டது.

                  மௌலானா முனவ்வருத்தீன் ஆரம்ப காலத்தில் இஸ்மாயில் திஹ்லவியையும் அவரது மருமகன் மௌலானா அப்துல் ஹை மற்றும் அவர்களை பின்பற்றுவோரை சமாதானப்படுத்த முயன்றார் ,மேலும் அவர்களை சம்மதிக்க வைக்க அனைத்து வழிமுறைகளையும் முயற்சி செய்தார் என்பது அவரது எழுத்துகளில் புலனாகிறது.எனினும் , அவரது அனைத்து முயற்சிகளும் எந்த  பலனளிக்கவில்லை என்ற போது, மௌலானா முனவ்வருத்தீன் விவாதிக்கவும்,மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தார். தில்லி ஜாமியா மஸ்ஜிதில் அந்த பிரசித்தி பெற்ற விவாதம் எற்பாடு செய்யப்பட்டது, ஒரு பக்கம் இஸ்மாயில் திஹ்லவியும் மௌலானா அப்துல் ஹையும் , மற்றொரு பக்கம் மௌலானா முனவ்வருத்தீனும் தில்லியைச் சார்ந்த அணைத்து உலமாக்களும். "

 [ நூல் - ஆசாத் கி கஹானி ,பக்கம் 48,மக்தபா கலீல் ,உர்து பஜார்,லாகூர்,மௌலானா அப்துர் ரஜ்ஜாக் மலீஹ் ஆபாதி ]

மவ்லானா மக்சூஸ் உல்லாஹ் பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி,மவ்லானா முஹம்மது மூசா பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி,மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்), முப்தி சத்ருத்தீன் ஆசுர்தாஹ்(ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்),மவ்லானா பஜ்லே ரசூல் உத்மானி பதாயுனீ,மவ்லானா அஹ்மத் சய்யத் நக்ஷபந்தி திஹ்லவி,மவ்லானா ரஷீத்துத்தீன் திஹ்லவி,மவ்லானா கைருத்தீன் திஹ்லவி,ஹகீம் சாதிக் அலி கான் திஹ்லவி(மசீஹ் உல் முல்க் ஹகீம் அஜ்மல் கான் னின் பாட்டனார்),மவ்லானா சய்யத் அஷ்ரப் அலி குல்ஷன் ஆபாதி,மவ்லானா முக்லிசுர்ரஹ்மான் சத்காமி,மவ்லானா கலந்தர் அலி ஜுபைரி பானிபட்டி இன்னும் எண்ணற்ற அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் உலமாக்கள் இந்த புதிய வஹாபிய நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை தங்கள் பேச்சிலும், எழுத்திலும் எதிர்த்தார்கள்.

அவர்கள்  அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தின் சத்திய கொள்கைகளைப் பாதுகாக்க தங்களின் அறிவின் மூலமும் ,நடவடிக்கைகளின் மூலமும் இந்த உன்னத ஜிஹாதில் பங்கேற்றனர்.

தக்வியதுள் ஈமான் கிதாபைப் பற்றி மவ்லானா ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் பின் ஷாஹ் ரபியுத்தீன் திஹ்லவி பின் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடத்தில் மவ்லானா பஜ்லே ரசூல் உத்மானி பதாயுனீ அவர்கள் ஏழு கேள்விகள் கேட்டார்கள். இந்த கேள்வி விடை தொகுப்பு தஹ்கீக் அல் ஹகீகா என்று பெயரில் பம்பாயில் இருந்து 1267 ஹிஜ்ரியில் வெளிவந்துள்ளது . அதில் உள்ள மூன்று விடைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

 மவ்லானா ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் திஹ்லவி அவர்கள் எழுதுகிறார்கள்,

"   தக்வியதுள் ஈமான் பற்றிய முதல் கேள்விக்கான விடையாவது, நான் அதை தப்வியதுள் ஈமான் என்று அழைக்கிறேன்,நான் அதை மறுத்து
முஈதுல் இமான்ப் என்று ஒரு தனிக்கட்டுரை எழுதியுள்ளேன். இஸ்மாயிலின் புத்தகம் நமது குடும்ப மரபுகளுக்கு எதிரான மட்டுமின்றி நபிமார்கள்,ரசூல்மார்கள் கூறிய தவ்ஹீதுக்கும் எதிராக இருக்கிறது.ஏனெனில் நபிமார்கள் மற்றும் ரசூல்மார்கள் அனுப்பப்பட்டது மக்களுக்கு கற்பித்து அவர்களை தவ்ஹீதின் வழியில் நடத்தவே.எனினும் இந்த புத்தகத்தில் தவ்ஹீதோ அல்லது நபிமார்களின் சுன்னத்தை கூறும் எந்த அடையாளமும் இல்லை.எந்த விஷயங்களை எல்லாம் இவர்கள் ஷிர்க், பித்அத் என்று கூறி மக்களுக்கு கற்பிக்கிறார்களோ அவற்றை எல்லாம் நபிமார்களோ அல்லது அவர்களை பின்பற்றியவர்களோ அவ்வாறு கூறவில்லை.இல்லை ,அவர்களிடத்தில் ஆதாரம் இருந்தால் , அவரை பின்பற்றுவோரை நம்மிடம் சமர்ப்பிக்க சொல்லுங்கள்.

நான்காம் கேள்விக்கான விடையாவது, வஹாபியின்(இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி)  புத்தகம் உரையாகவும், தக்வியதுள் ஈமான் அதன் வர்ணனை போன்றும் உள்ளது. ஐந்தாம் கேள்வியின் விடையாதெனில் ,ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் .இந்த புத்தகத்தை பற்றி அவர்கள் கேள்வி பட்ட பொது,அவர்கள் கூறினார்கள் தாம் மட்டும் நோய்வாய்படவில்லையாயின் , இந்த புத்தகத்திற்கு துப்னா இத்னா அஷரியா போன்று ஒரு மறுப்பு எழுதியிருப்பேன் என்றார்கள்.

அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நான் (ஷாஹ் மக்சூஸ் உல்லாஹ் திஹ்லவி) நான் தக்வியதுள் ஈமான் என்ற வர்ணனைக்கு எழுதிய மறுப்பு ,அதன் உரை நூலான (கிதாபுத்  தவ்ஹீத்) க்கும் மறுப்பாக அமைந்தது.எனது தந்தை ஷாஹ் ரபியுத்தீன் அவர்கள் இந்த நூலை(தக்வியதுள் ஈமான்) பார்க்கவில்லை எனினும் ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் அதைக் கண்டு , நிரகரித்தபொழுது நான் இதற்கு மறுப்பு எழுத ஆரம்பித்தேன்  "

[ நூல் - அன்வர் ஏ அப்தாப் ஏ சதாகத் ,பக்கம் 617-620,கரீம் பிரஸ் ,லாகூர்,முஹம்மத் காதி பஜ்லே அஹ்மத் லுத்யான்வி ]

இமாம் பஜ்லே ஹக் கைராபாதி ரஹ்மாதுள்ளஹி அலைஹி அவர்கள் இஸ்மாயில் திஹ்லவியின் வழிகெட்ட வஹாபிய கொள்கைகளை எதிர்த்து தஹ்கீக் அல் பத்வா பி இப்தல் அல் தக்வா என்ற நூலை எழுதினார்கள் .இஸ்மாயில் திஹ்லவியின் மீதும் அவரது நூலான தக்வியதுள் ஈமான் மீதும் குப்ர் பத்வா வெளியிடப்பட்டது. அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த 17 முண்ணனி உலமாக்களால் கையெழுத்திடப்பட்டது .

அதன் ஸ்கேன் கீழே உள்ளது.

Fatwa on Ismail Dihlawi
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa


Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa
 
 
. 
                         
 
  
Related Posts Plugin for WordPress, Blogger...