Showing posts with label ismail dehlavi tamil. Show all posts
Showing posts with label ismail dehlavi tamil. Show all posts

Thursday, 16 November 2017

முதன்முதலாக தக்பீர் (تكفير‎‎ ) செய்தது யார் ?

நவீன கால தேவ்பந்தி வஹாபிகளின் மற்றோரு மோசடிப் பிரச்சாரம் , இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி பரேலி   رضي الله عنه அவர்கள் தான் பரேலி உலமாக்கள் ,தேவ்பந்தி உலமாக்களிடையே பிரிவினை உண்டாக முதல் காரணம் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்வது .  அறியாமையை தனது குணமாகக் கொண்ட முட்டாளை அன்றி வேறு யாரும் இவ்வாறு பிதற்றித் திரிவதில்லை .

இந்த பொய் பிரச்சாரத்தின் உண்மை தன்மை என்னவென்று ஆய்வு செய்வோம் :

இஸ்மாயில் திஹ்லவி முஸ்லிகளால் பால்கோட்டில் , கொல்லப்பட்டது 1831 ஆம் ஆண்டு . மாறாக இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنه  அவர்கள்  பிறந்தது 1856 ஆம் ஆண்டு , சுமார் 25 ஆண்டுகள் கழித்து .

இனி 'பிரிவினையின் மூல காரணம் யார் ? ' என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக , இஸ்மாயில் திஹ்லவி தனது நூலான 'தக்வியத்துள் ஈமான் ' பற்றி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை காண்போம் . இன்றளவும் தேவ்பந்தி வஹாபிகளால் அச்சிடப்படும் நூல் . அவர்களால் ஐனுல் இஸ்லாம் என்று கொண்டாடப்படும் நூல் 'தக்வியத்துள் ஈமான் '.
தக்வியத்துள் ஈமான்

இந்த வாக்குமூலத்தை  தேவ்பந்தி வஹாபி பிர்காவின் ஹக்கீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'ஹிகாயத்துள் அவ்லியா ' வில் பதிவு செய்துள்ளார் .
ஹிகாயத்துள் அவ்லியா 
பக்கம் 83

பக்கம்  84

" உபகதை  59 :   கான் ஸாஹிப் கூறினார்கள் மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி , தக்வியத்துள் ஈமான் நூலை அரபியில் எழுதினார்கள் . அதனால் அதன் ஒரு பிரதி என்னிடமும் ,மற்றோரு பிரதி மவ்லவி ரஷீத் அஹமத் கங்கோஹியிடமும் ,மற்றுமொன்று பிரதி மவ்லவி நஸ்ருல்லாஹ் கான் குஜருவியின் நூலகத்திலும் இருந்தது . எனவே மவ்லனா அதை உர்துவில் மொழிபெயர்த்து , புகழ்பெற்ற ஆளுமைகளான செய்யத் மவ்லவி அப்துல் ஹை சாஹிப் , ஷாஹ் இஷ்ஹாக் சாஹிப் , மவ்லானா முஹம்மது யாகூப் சாஹிப் ,மவ்லவி பரீதுத்தீன் சாஹிப் முராதாபாதி ,முஃமீன் கான் மற்றும் அப்துல்லாஹ் கான் அலவி ஆகியோரை   ஒன்று திரட்டினார் .

அவர்கள் முன் தக்வியத்துள் ஈமான் சமர்ப்பிக்கப்பட்டது . அவர் கூறினார்  ,' நான் இந்த நூலை எழுதியுள்ளேன் . இன்னும் இதில் சில இடங்களில் சிந்தனையற்ற வார்த்தைகள் சேர்த்துள்ளதை அறிவேன் . சில இடங்கள் கொடுமையானவை ,உதாரணமாக ,ஷிர்க் ஏ காஃபி என்று சொல்லப்படுபவை ஷிர்க் ஏ ஜலீல் என்று பெயரிடப்பட்டுள்ளது . இதன் காரணமாக எனக்கு உண்டாகும் பயம் என்னவென்றால் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டால் நிச்சயமாக குழப்பமும் ,அமளிகளும் உண்டாகும் .

நான் இங்கு தங்கினேன் என்றால் ,இதைபற்றி எட்டுஅல்லது பத்து வருடங்களுக்கு விளக்கம் அளிப்பேன் , எனினும்  நான் இப்பொழுது ஹஜ் செய்ய நாடியுள்ளேன் , திரும்பிய பின்னர் ஜிஹாத் செய்வதே எனது நோக்கம் . எனவே என்னை இந்த வேலையை விட்டும் தவிர்க்கின்றேன் , என்னும் என்னைத் தவிர வேறு யாரும் இந்த முயற்சியை செய்ய முன் வரமாட்டார்கள் . எனவே தான் இந்த நூலை எழுதியுள்ளேன் , பிரச்சனைகள் உண்டாகும் எனினும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பின் சில காலத்தில் அமைதியாகி விடுவார்கள் என்று நம்புகிறேன் .

இதுவே எனது கவலை . நீங்கள் விரும்பினால் இதை பதிப்பித்து வெளியிடுவோம் அல்லது அளித்து விடுவோம் . அப்பொழுது கூடி இருந்தவர்களில் ஒருவர் சில இடங்களில் திருத்தம் செய்து வெளியிடுவோம் என்றார் . மவ்லவி அப்துல் ஹை சாஹிப் , ஷாஹ் இஷ்ஹாக் சாஹிப் ,முஃமீன் கான் மற்றும் அப்துல்லாஹ் கான் அலவி ஆகியோர் திருத்தம் செய்து தொகுத்து வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .

அதன் பின்னர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி , திருத்தம் செய்வது தேவை இல்லை , நூல் அதன் மூல வடிவிலேயே வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து , அதன் பின்னர்  அது இவ்வாறு பதிப்பிக்கப்பட்டது . நூல் வெளியான பின் மவ்லவி இஸ்மாயில் ஹஜ்ஜுக்கு சென்று , திரும்பி வந்ததும் தில்லியில் தங்கினார் . இந்த காலத்தில் தில்லியின் தெருக்களிலும் ,சந்துகளில் மவ்லவி இஸ்மாயில் பிரச்சாரம் செய்தார் . மவ்லவி அப்துல் ஹை சாஹிப் பள்ளியில் ஆறு மாத காலம் தங்கிய பின் ஜிஹாதுக்கு கிளம்பினார் . இந்த செய்தியை நான் மவ்லவி அப்துல் கைய்யும் சாஹிப் மற்றும் எனது ஆசிரியர் மியாஜி முகம்மதி சாஹிப் அவர்களிடமும் இருந்து கேட்டறிந்தேன் "

[ நூல்- ஹிகாயத்துள் அவ்லியா (அர்வாஹே தலாதா  ) , உபகதை எண் 59, அஷ்ரப் அலி தானவி , ஜக்கரிய்யா புத்தக நிலையம் , தேவ்பந்த் , ஸஹரான்பூர் , உ .பி ,இந்தியா , பக்கம் 83-84 ]   

   எந்த அறிவார்ந்த முஸ்லிம் இஸ்லாமியரிடையே குழப்பத்தை உண்டாக்கும் புத்தகத்தை முன்னரே கணித்து எழுதுவார் ?

இது எந்த மாதிரியான ஒரு இதயம் , இஸ்லாமியரிடையே சகோதரத்துவத்தையும் ,நலனையும் காட்டிலும்  குழப்பமும் ,அமளிகளும் உண்டாக விரும்புவது ?

பளிங்கு கண்ணாடி போல் விளங்கும் விஷயம் இஸ்லாமியரிடையே முதன் முதலில் உண்டான பிரிவினையின் மூல கர்த்தா ,வேண்டுமென்றே கடுமையான சொற்களும் ,வழிகெட்ட கொள்கைகளும் கொண்ட இஸ்மாயில் திஹ்லவியின்  'தக்வியத்துள் ஈமான் ' என்னும் நூல் .

நாற்பெரும் பிக்ஹ் உடைய இமாம்களான இமாமுல் அஃலம்  இமாம் அபூ ஹனீபா رضي الله عنه , இமாம் ஷாபிஈ رضي الله عنه , இமாம் மாலிக்  رضي الله عنه , இமாம் ஹன்பல் رضي الله عنه      ஆகியோரை தக்லீத் செய்வதை மறுக்கும் கூட்டமான அஹ்லே ஹதீத் வஹாபிகளும்  தம்முடைய  முன்னோடிகளில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளது இஸ்மாயில் திஹ்லவியை தான் .

இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி காதிரி رضي الله عنه  அவர்கள் தமது காலத்தில்   இஸ்மாயில் திஹ்லவியின் நூற்களை வாசித்து ,அதில் எழுபது குப்ரியத்தான விஷயங்களை பட்டியலிட்டு , அதற்கு மாற்றமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை விளக்கினார்கள் . 

எனினும் இஸ்மாயில் திஹ்லவியின் மீது குப்ர் பத்வா வெளியிடாததின் காரணம் , இஸ்மாயில் திஹ்லவி தமது இறுதி காலத்தில் தவ்பா செய்தார் என்று ஒரு கூற்று காரணமாக , இஸ்மாயில் திஹ்லவிக்கு சந்தேகத்தின் பலனை அளித்தார் . 

ஒரு சாதாரண சொல் , இமாம் அஹ்மத் ரிழா கான் பரேலி  رضي الله عنه  அவர்கள் எவ்வளவு விசாலமான பார்வை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று விளக்கும் பொழுது , யார் தான் அன்னார்  மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் போது  தயங்கினார்கள் என்று கூற முடியும் ? 
Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday, 14 November 2017

இந்திய வஹாபியிசத்தின் தந்தை


இந்திய துணைக்கண்டத்தில் வஹாபியிசத்தின் நிறுவனர் இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) . இவர் துரதிருஷ்டவசமாக அக்காலத்தில் புகழும் ,பேறும் பெற்று விளங்கிய இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர் .

இஸ்மாயில் திஹ்லவி(1193-1246 ஹிஜ்ரி / 1779-1831 ) ==> அவரது தந்தை ஷாஹ் அப்துல் கனி திஹ்லவி (மறைவு 1203 ஹிஜ்ரி / 1788) அவர்கள்  ==> அன்னாரது தந்தை இமாமுல் ஹிந்த் ஷாஹ்  வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி رضي الله عنها  அவர்கள் 


பால்கோட் நகரிலுள்ள இஸ்மாயில் திஹ்லவியின் சபிக்கப்பட்ட கபர் 

இவர் தமது காலத்தில் அரபகத்திற்குச் சென்று ,இப்னு அப்துல்  வஹாப் நஜ்தியின் நூலான 'கிதாபுத் தவ்ஹீத் ' நூலை வாசித்து ,அதன் பால் ஈர்க்கப்பட்டு அதை உர்துவில் மொழிபெயர்த்து , தமது எண்ணங்களையும் உள்ளடக்கி 'தக்வியத்துள் ஈமான் ' என்று வெளியிட்டார் .

Kitab ut Tawheed and Taqwiyathul Iman - Urdu
சவூதி தாருஸ் ஸலாம் பதிப்பகம் வெளியிட்ட கிதாபுத் தவ்ஹீத் - தக்வியத்துள் ஈமான் உர்து பதிப்பு ,வஹாபிய சகோதர பாசம் ! 

இந்த புத்தகம் இந்திய -பாக் துணைக்கண்டத்தில் இதற்கு முன்னர் எந்தவொரு வழிகெட்ட இயக்கமும் செய்ய இயலாத வண்ணம் இஸ்லாத்திற்கும் ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கும் பெரும் கேட்டை விளைவித்தது .

  நாடெங்கிலும்  நடத்தப்பட்ட   கண்மணி நாயகம் ﷺ அவர்களின் புகழ் பாடும் மவ்லிதுன் நபி மஜ்லிஸ்கள் , பித்அத் என்று அழைக்ப்பட்டன . வலிமார்களின் உரூஸ் நிகழ்வுகள் இஸ்லாத்திற்கு முரணானது என்று கூறப்பட்டன . வலிமார்களை நாடி ஜியாரத் செய்வதும் ,அவர்களிடம் உதவி தேடுவதும் குப்ர்  என்று கூறினர் ,இன்னும் அப்துல் முஸ்தபா என்று பெயரிடுவதே ஷிர்க் என்றனர் .  இந்த புத்தகம் தான் இந்திய -பாக் துணைக்கண்டத்தில்  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் இடையே பிரிவினையை உண்டாக்கிய முதல் மற்றும் முன்னோடி நூல் .

பாமர இஸ்லாமியர் குழப்பத்தில் ஆழ்ந்தனர் . ஏனெனில் இந்த புத்தகம் மேற்கூறப்பட்ட அமல்களில் ஈடுபட்ட அவர்களையும் ,அவர்களின் முன்னோர்களையும் காபிர் என்றும் முஷ்ரிக் என்றும் கூறியது . ஒவ்வொரு வீட்டிலும் சண்டை,சச்சரவுகள் உண்டாயின . உறவினர்கள் ,குடும்பத்தினர் இடையே பிரச்சினைகள் வெடித்தன .

  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை தில்லி ஜும்மா மஸ்ஜிதில் விவாதத்திற்கு அழைத்தனர் . அங்கு இஸ்மாயில் திஹ்லவி வெட்கி தலைகுனியும்படியான தோல்வியை தழுவினான் .

இன்னும் பெஷாவர் நகரத்திற்கு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இஸ்மாயில் திஹ்லவியை விவாதத்திற்கு அழைத்து ,அங்கும் தோல்வியை சந்தித்தான் .

இஸ்மாயில் திஹ்லவியின் சமகால உலமாக்களில் அவனின் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து விவாதித்தும்  , நூற்கள் எழுதியும் ,பத்வாக்கள் வெளியிட்ட உலமாக்கள் சிலர்.இவர்களில் அவரது குடும்பத்தாரும் ,அவரது சிறிய தந்தை ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர்களும் அடங்குவர் .


  • அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி  (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  • மவ்லானா ரஷீதுதீன் கான் திஹ்லவி 
  • ஷாஹ் மக்ஸுசுல்லாஹ் திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது மூஸா திஹ்லவி (இஸ்மாயில் திஹ்லவியின் உடன்பிறவா சகோதரர் )
  • ஷெய்கு முஹம்மது ஷரீப் திஹ்லவி 
  • முப்தி ஷுஜாவுத்தீன் அலி  கான்   
  • அல்லாமா பஜ்லே ரஸூல் பதாயுனீ 
  • முப்தி ஸத்ருத்தீன் திஹ்லவி 
  • ஷெய்கு அஹ்மத் ஸயீத் முஜத்திதி ராம்பூரி 
  • ஷெய்கு ஹைதர் அலி பைஜாபதி 
  • மவ்லனா அப்துல் மஜீத் பதாயுனீ 
  • ஷெய்கு அப்துல் கபூர் ஸ்வாதி 
  • ஷெய்கு முஹம்மது சுலைமான் தஉன்ஸ்வி 
  • ஷெய்கு ஆலே ரஸூல் மறெர்ஹவி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவியின் மாணவர் ) 
  •  மவ்லானா துராப் அலி லக்னவி  
1835ல் ,தக்வியத்துள் ஈமான் முழு புத்தகமும் ஆதி முதல் அந்தம் வரை மதராஸ் உலமாக்கள் முன் வாசிக்கப்பட்டு , முப்பது உலமாக்களும் பின்வரும் பத்வா வெளியிட்டனர் : " யாராகிலும் ஒரு நபர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளது போல் கொள்கை உடையவனாய் இருந்தால் அவன் காபிர் ,இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன்  ."

மதராஸ் உலமாக்களின் பத்வாவுக்கு ஒப்புதல் அளித்து தில்லி உலமாக்களும் 'தக்வியத்துள் ஈமான் ' என்ற வழிகெட்ட நூலுக்கு எதிராக பத்வா வெளியிட்டனர் .

தில்லியின் வீதியெங்கும் , ' இந்த நூல் கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்  , வலிமார்களை கண்ணியக் குறைவுபடுத்துவதாலும்   இந்த நூலை யாரும் வாசிக்க கூடாது என்றும் . இத்தகைய நூற்களை வாசிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றென ' அறிவிப்பு செய்யப்பட்டது .

உஸ்தாதுல் உலமா மவ்லானா முஹம்மது வஜ்ஹீ சாஹிப் அவர்கள் 'தக்வியத்துள் ஈமான் ' நூலுக்கு மறுப்பு தெரிவித்து 'நிஜாமுல் இஸ்லாம் ' என்று நூலை எழுதினார்கள் . இந்த நூலுக்கு கல்கத்தாவைச் சார்ந்த 22 உலமாக்கள் ஒப்புதல் அளித்தனர் .

வழிகெட்ட 'தக்வியத்துள் ஈமான்'  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட சில நூற்கள்  :- 

  • குல்ஜார் ஏ ஹிதாயத்  - மதராஸ் முப்தி ,அல்லாமா முஹம்மது ஸிப்ஹதுல்லாஹ் 
  • தஹ்கீக் உல் பத்வா பி இப்தலில் தக்வா  - அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி 
  •  ஹயாத்துன் நபி  - ஷெய்கு முஹம்மது ஆபித் சிந்தி 
  • தஹ்கீக் உஷ் ஷிர்க் வத் தவ்ஹீத் - ஹாபிஸ் முஹம்மது ஹசன்
  • ஸலாஹுல் முஃமினீன் பி காதில் காரிஜீன்  -மவ்லானா லுப் உல்ஹக் காதிரி 
  • ஹுஜ்ஜதுல் அமல் பி இஃப்த்தால் இல் ஹைல்  - மவ்லானா மூஸா திஹ்லவி 
  • ரஸ்முல் கைராத் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் முஸ்தபாபாதி 
  • துஹ்பத் அல் முஸ்லிமீன் பி ஜஸ்சாபி செய்யதில் முர்சலீன் - மவ்லானா அப்துல்லாஹ் சஹ்ரான்புரி 
  • தஹ்லீல் மா அஹல்லாஹு பி தபஸீர் வ மா அஹ்ல் பிஹி லி கைரில்லாஹ் - மவ்லானா கலீலுர் ரஹ்மான் 
  • சபீப்ளுள் நிஜாஹ் இலா தஹஸீல் இல் பலாஹ்  -மவ்லானா துராப் அலி லக்கனவி 
  • சபீனத் உல் நிஜாத்  - மவ்லானா முஹம்மது அஸ்லமீ மதராஸி 
  • நிஜாமே இஸ்லாம்  -மவ்லானா முஹம்மது வஹீதுதீன்  கல்கத்தா 
  • குவத் உல் ஈமான்  -  மவ்லானா கறாமத் அலி ஜஉன்புரி 
  • அஹ்காக் உல் ஹக்  - மவ்லானா செய்யத் பத்ருத்தீன் ரிஸ்வி ஹைதராபாதி 
  • கைர் உஸ் ஸாத் லி யவ்ம் மில் மியாத் - மவ்லானா கைருத்தீன் மதராஸி 
  • நேம் முள் இன்திபாஹ் லி ரப் இல் லிஸ்த்திபாஹ் - மவ்லானா முஅல்லிம் இப்ராஹீம் ,பாம்பே 
  • ஹிதாயத்துள் முஸ்லிமீன் இலா தரீக் கில் ஹக் கில் யகீன் - காழி முஹம்மது ஹுசைன் கூபி 
  • துஹ்பா ஏ முஹம்மதியா தர் ரத்தே வஹாபியா - மவ்லானா செய்யத் அப்துல் பத்தாஹ் முப்தி காதிரி குல்ஷனபாதி 
  • சிராஜுல் ஹிதாயத்  - மவ்லானா குல்ஷனாபாதி 
இந்த உலமாக்களைத் தவிர மவ்லானா இனாயத் கான் , மவ்லானா ஷாஹ் ரவூப் அஹ்மத் , மவ்லானா ஷாஹ் அஹ்மத் ஸயீத் முஜத்திதி ஆகியோர் கடுமையாக எதிர்த்து ,அதன் பித்னாவை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தனர் .

இறுதியாக இஸ்மாயில் திஹ்லவி,அவனது உஸ்தாத் செய்யித் அஹ்மத் ரேபரேலியுடன்  ,அவர்கள் இருவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்கள் என்று தெரிந்ததும் , அல்லாஹ்வையும்,கண்மணி நாயகம் ﷺ அவர்களை கண்ணியக் குறைவுபடுத்துபவர்கள் என்று  தெரிந்ததாலும்  , பால்கோட் நகர பதான் முஸ்லிம்களால்கொல்லப்பட்டனர் .
தேவபந்திகளும் , கைர் முகல்லித் வஹாபிகளும் அவர்கள் இருவரும் சீக்கியருக்கு எதிராக போரிட்டு மடிந்தனர் என்று கூறி வந்தாலும் , அதற்கு சரித்திர சான்றுகள் இல்லை .


கண்மணி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள் , 'பித்னா கொலையை விட கொடியது ' . இஸ்மாயில் திஹ்லவி மடிந்தாலும் , அவனின் மரபு தொடர்ந்தது . அவனின் தவறிய , வழிகெட்ட கொள்கைகள் பரவின .

இஸ்மாயில் திஹ்லவியின் மறைவுக்குப் பின் அவனது ஆதரவாளர்கள் இரு பிரிவாகப் பிரிந்தனர் . அவர்களில் ஒரு கூட்டத்தார் தாம் இமாம் அபூஹனீஃபா அவர்களை பின்பற்றுவோர் என்று கூறினார்கள் . இவர்கள் பின்னாட்களில் தேவ்பந்திகள் என்று அழைக்ப்பட்டனர் .

மற்றோரு கூட்டத்தார் இமாம்களின் தக்லீதை ஏற்க மறுத்து தம்மை அஹ்லே ஹதீத் என்று அழைத்துக் கொண்டனர் . 

   
  



Related Posts Plugin for WordPress, Blogger...

Sunday, 15 January 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 3



மவ்லானா செய்யித் அஹ்மத் ரஜா பிஜ்நோரி காசிமி அவர்கள் கூறுகின்றார்கள் ,

"வெட்கக்கேடான விஷயம் என்னெவெனில் இந்த புத்தகம் [தக்வியத்துள் ஈமான் ] காரணமானாக சுமார் 20 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய முஸ்லிம்களில் ,தொண்ணூறு சதவீதம் ஹனபிக்கள் , இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு போனார்கள் "
Anwarul Bari


[நூல் -அன்வாருல் பாரி , பக்கம் 107, நஸீருல் உலூம் , பஜ்னுர் ]

மவ்லானா அபுல் கலாம் ஆசாத் எழுதுகின்றார்கள் ,

"மவ்லானா இஸ்மாயில் திஹ்லவி  மவ்லானா முனவ்வருத்தீன்அவர்களின் பள்ளித் தோழர் . ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் மறைவுக்குப் பின் ,இஸ்மாயில் திஹ்லவி எழுதிய 'தக்வியத்துள் ஈமான் ' மற்றும் 'ஜிலாஉல் ஐநைன்' நூற்களின் மூலம் அவரது கொள்கைகள் நிலமெங்கும் பரவின .அந்த கொள்கைகளை எதிர்த்து உலமாக்கள் கிளர்ந்து எழுந்தனர் .

இந்த நூற்களை அதிகம் எதிர்த்த நபர் மவுலானா முனவ்வருத்தீன் .அவர் இதற்கு எதிராக பல நூற்களை எழுதினார் .இறுதியாக ஹிஜ்ரி 1240ல் பிரசித்தி பெற்ற அந்த விவாதம் ஜாமியா மஸ்ஜித் ,டில்லியில் நடைபெற்றது .இந்தியாவில் உள்ள அனைத்து உலமாக்களிடமும் பத்வா கோரப்பட்டது ,பின்னர் ஹரமைன் ஷரீபிலும் இருந்து பத்வா பெறப்பட்டது .அவரின் எழுத்துக்களில் இருந்து புலனாகின்றது என்னவென்றால் மவ்லானா முனவ்வருத்தீன் இஸ்மாயில் திஹ்லவியையும் அவரது மருமகன் அப்துல் ஹையையும் சமாதானம் செய்ய முயற்சித்தார் என்பதும் ,அவர்களை சம்மதிக்க வைக்கவும் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார் .

எனினும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் அடைந்த  பின்னர் தமது கொள்கைகளை விவாதம் செய்தும் ,மற்ற உலமாக்களுக்கு மறுப்பு வழங்குமாறும் நிர்பந்திக்கப்பட்டார் . தில்லியின் ஜாமிஆ மஸ்ஜிதில் மிகப் பிரசித்தி பெற்ற அந்த விவாதம் நடைபெற்றது . 
ஒரு பக்கம் இஸ்மாயில் திஹ்லவியும் அவரது மருமகன் மவ்லவி அப்துல் ஹை மற்றோரு பக்கம் மவ்லனா முனவ்வருத்தீன் மற்றும் தில்லியின் அனைத்து உலமாக்களும் .

[நூல் - ஆஸாத் கீ கஹானி ,பக்கம் 48,மக்தபா கலீல் ,உருது பஜார் ,லாகூர் ]


மவ்லானா மக்சுஸுல்லாஹ் பின் ஷாஹ் ரபிய்யுத்தீன் திஹ்லவி , மவ்லானா முஹம்மது மூஸா பின் ஷாஹ்  ரபிய்யுத்தீன் திஹ்லவி , மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ),

முப்தி சத்ருத்தீன் ஆஸுர்தாஹ் (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ), மவ்லானா முஹம்மது பஜ்லே ரஸூல் உத்மானி பதாயூனி , மவ்லானா அஹ்மத் ஸயீத் நக்ஷ்பந்தி திஹ்லவி , மவ்லானா ரஷீத்துத்தீன் திஹ்லவி ,மவ்லானா கைருத்தீன் தெஹ்லவி , ஹக்கீம் சாதிக் அலி கான் திஹ்லவி (மஸீஹுல் முல்க் ஹக்கீம் அஜ்மல் கான் அவர்களின் பாட்டனார் ),

மவ்லானா செய்யித் அஷ்ரப் குல்ஷன் ஆபாதி , மவ்லானா முக்லீசூர் ரஹ்மான் சட்கமி , மவ்லானா கலந்தர் அலி ஜுபைரி பானிபதி  போன்ற எண்ணற்ற அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின்  சத்திய உலமாக்கள் இந்த புதிய வஹாபிய கொள்கைகளுக்கும் ,கோட்பாடுகளுக்கும் எதிராக  மறுப்புரைகளை தமது எழுத்தின் மூலமும் ,சொற்பொழிவின் மூலமும் வெளிப்படுத்தினர் .
அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் கொள்கைகளை பாதுகாக்க தமது மார்க்க அறிவினாலும் , செயலாலும்  இந்த புனித ஜிஹாதில்  பங்கெடுத்தனர் .

அல்லாமா பஜ்லே ரஸூல் உத்மானி பதாயூனி அவர்கள் "தக்வியத்துள் ஈமான் " பற்றி ஏழு கேள்விகளை ஹழ்ரத் ஷாஹ் மக்சுஸுல்லாஹ் பின் ஷாஹ் ரபீயுத்தீன் பின் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடம் சமர்பித்தார்கள் . இந்த கேள்வி -பதில்   ஒரு நூல் தொகுப்பாக " தஹ்கீக் அல் ஹகீகா " என்னும் பெயரில் ஹிஜ்ரி 1267ல் பம்பாயில் இருந்து வெளிவந்தது .

அவற்றில் மூன்றின் பதில்கள் பின்வருமாறு :

ஹழ்ரத் ஷாஹ் மக்சுஸுல்லாஹ் திஹ்லவி அவர்கள் எழுதுகிறார்கள் ;

" தக்வியத்துள் ஈமான் பற்றிய முதல் கேள்வியின் பதிலானது - நான் அதை தஃப்பியத்துள் ஈமான் ( அரபு எழுத்து faa கொண்டு )    - நான் அதனை மறுத்து "முஈதுல் ஈமான் " என்னும் பெயரில் எழுதிய தனிக்கட்டுரையே ஆகும் .

இஸ்மாயிலின் நூல் எமது குடும்பத்தினரின் பாரம்பரியத்திற்கு எதிரானது என்பது மட்டுமில்லாமல் ,நபிமார்கள் மற்றும் ரஸுல்மார்கள் காட்டித் தந்த தவ்ஹீதுக்கே எதிரானது ! ஏனெனில் நபிமார்களும் ,ரஸுல்மார்களும் வந்ததன் நோக்கம் மக்களுக்கு தவ்ஹீதை கற்றுத் தந்து அதன் வழியில் நடத்திக் காட்டவே ஆகும் .

இந்த புத்தகத்தில் தவ்ஹீதின் அடையாளமோ அல்லது நபிமார்களின் ஸுன்னாஹ்வின் அடையாளமோ இல்லை . எதையெல்லாம் இவர்கள் ஷிர்க் ,பித்அத் என்று அடையாளமிட்டு மக்களுக்கு கற்றுத் தருகிறார்களோ ,அவை நபிமார்களோ அல்லது அவர்களைப்  பின்பற்றியவர்களாலோ அவ்வாறு சொல்லப்படவில்லை . இதற்கு மாற்றாக அவர்களிடம் ஆதாரம் இருந்தால் ,அதனை நம்மிடம் தெரிவிக்க அவர்களின் ஆதரவாளர்களுக்கு கூறுங்கள் .

நான்காவது கேள்வியின் விடை ,

வஹாபியின் (அப்துல் வஹாப் நஜ்தி தமீமி ) நூல் உரை என்றால் ,இஸ்மாயிலின் நூல் அதன் விளக்கவுரை போல் உள்ளது . 

ஐந்தாவது கேள்வியின் விடை ,

ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்கள் பார்வை குறைபாடு காரணமாக பலவீனப்பட்டு இருந்தார்கள் . இஸ்மாயிலின் நூலைப் பற்றி கேள்விப் பட்ட அவர்கள் ,தாம் மட்டும் சுகவீனமாக இல்லையென்றால் ,ராபிழி ஷியாக்களுக்கு எதிராக எழுதிய "துஹ்பா இத்னா அஷரியா " என்னும்   மறுப்புரை போல் இஸ்மாயிலின் நூலுக்கும் மறுப்பு எழுதியிருப்பேன் என்றார்கள் .

அல்லாஹுதாலாவின் மாபெரும் கிருபையினால் நான் எழுதிய மறுப்புரை விளக்கவுரை நூலுக்கு(தஃப்பியத்துள் ஈமான்) மட்டுமல்லாது அதன் உரை நூலுக்கும்(கிதாபுத் தவ்ஹீத் ) மறுப்பாக அமைந்தது .


Anwar-e-Aftab-e-Sadaqat
[ஆதாரம்  - நூல்  : அன்வார் ஏ அப்தாப் ஏ ஸதகாத் , பக்கம் 617-620, கரீம் ப்ரெஸ் ,லாகூர் , முஹம்மத் காஜி பஜ்லே அஹ்மத் லூதியான்வி நக்சபந்தி முஜத்திதி ] 

இனி நாம் இஸ்மாயில் திஹ்லவியின் சீர்திருத்த இயல்பையும் (?) ,அவரின் பகுத்தறியும் தன்மையையும்(?) பின்வரும் சம்பவம் மூலம் காண்போம் ;

மவ்லவி அஷ்ரப் அலி தானவி எழுதுகின்றார் ,

" ஷாஹ் இஷ்ஹாக் கூறுகின்றார் , மவ்லவி இஸ்மாயில் 'ரபா யாதைன் '  (சலாஹ்வில் கைகளை உயர்த்துவது ) என்னும் செயலை செய்ய ஆரம்பித்த பொழுது , ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணாக்கர் மவ்லவி முஹம்மது அலி ,மவ்லவி அஹ்மது அலி ஆகியோர் அன்னாரைச் சந்தித்து இதன் காரணமாக தேவையில்லாத குழப்பம் உண்டாகுமென்பதால் , மவ்லவி இஸ்மாயிலை எச்சரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் .

ஷாஹ்  அப்துல் அஜீஸ் அவர்கள் தமது வயோதிகம் மற்றும் பலவீனம்  காரணமாக தாம் விவாதங்களில் கலந்து கொள்வது இல்லை என்று பதில் அளித்தார்கள் .

ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்களை சந்தித்த பொழுது ,அவரிடம் இஸ்மாயில் திஹ்லவியை ,பொது மக்களுக்கு குழப்பம் விளைவிப்பதால்  'ரபா யாதைன் '  என்னும் செயலை விட்டுவிடும்படி அறிவுறுத்துமாறு சொல்லப்பட்டது .ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் தாம் இஸ்மாயிலுக்கு அறிவுறுத்த தயாராக உள்ளதாகவும் ,எனினும் அவர் கேட்க மாட்டார் என்று தயங்கினார் . மேலும் அந்த செயலுக்கு ஹதீதைக் கொண்டு எதிர்ப்பார் என்றும் கூறினார் .

அதனால் ,ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் மவ்லவி முஹம்மது யாகூப் அவர்களிடம்   இஸ்மாயில் திஹ்லவியை ,பொது மக்களுக்கு குழப்பம் விளைவிப்பதால்  'ரபா யாதைன் '  என்னும் செயலை விட்டுவிடும்படி அறிவுறுத்துமாறு சொன்னார்கள் . மவ்லவி யாகூப் அவர்கள் மவ்லவி இஸ்மாயிலிடம் இது பற்றி கூறிய பொழுது , அவர் ,'மக்களிடம் குழப்பம் உண்டாவது குறித்து வருந்தினால் ,' ஒரு மனிதர் சோதனையான காலத்தில் ஓர் ஸுன்னாஹ்வை உயிர்பித்தால் , அவருக்கு நூறு ஷஹீதுகளின் அந்தஸ்த்து கிடைக்கும் ' என்ற ஹதீதுக்கு என்ன  விளக்கம் தருவீர்கள் என்று பதில் அளித்தார் . கைவிடப்பட்ட ஓர் ஸுன்னாஹ்வை உயிர்ப்பிக்கும் பொழுது பொதுமக்களிடம் எதிர்ப்பு வரத்தான் செய்யும் என்றார் . 

மவ்லவி யாகூப் இஸ்மாயிலின் பதிலை ஷாஹ் அப்துல் காதிர் அவர்களிடம் கூறினார் . அது கேட்ட ஷாஹ் அப்துல் காதிர் அவர்கள் கூறினார்கள் , ' என்னவொரு கைசேதம் ! நாம் இஸ்மாயில் ஒரு மார்க்கம் கற்றறிந்த அறிஞர் ஆகிவிட்டார் என நினைத்தோம் . ஆனால் அவர் ஒரு (சுலபமான )ஹதீதின் பொருளைக்   விளங்காமல் உள்ளார் . அவர் குறிப்பிடும் ஹதீத் எந்த செயல் ஸுன்னாஹ்விற்கு மாறுபடுகின்றதோ அதற்குத்தான் . 'ரபா யாதைன் '  என்னும் செயலை பொறுத்தவரை நாம் ஸுன்னாஹ்விற்கு மாறாக எதையும் செய்யவில்லை . எவ்வாறு கைகளை உயர்த்துவதும் ஸுன்னாஹ்வின் அடிப்படையில் உள்ளதோ அதைப்போன்றே கைகளை உயர்த்தாமல் இருப்பதும் ஸுன்னாஹ்வின் அடிப்படையில் தான் . "


Hikayathe aulia (Arwah-e-Thalatha)


[நூல் - அன்வார் ஏ தலாதா , ஹிகாயத்  73, இம்தாதுல் குராபா , ஸஹ்ரான்பூர் , ஹிஜ்ரி 1370 , அஷ்ரப் அலி தான்வி  ]

இஸ்லாமிய கொள்கை மற்றும் பிக்ஹ் உடைய மஸாயில்களில்  இஸ்மாயில் திஹ்லவியின் தவறுகளும் ,மாற்றமான போக்கும் உலமாக்களிடையே சர்சைகளை ஏற்படுத்தின . குறிப்பாக 'இம்கான் ஏ காதிப் ' மற்றும் 'இம்கான் ஏ நசீர் ஏ முஹம்மதி ' ஆகியவை கலகத்தை ஏற்படுத்தின . 

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இந்த விஷயங்களை தெளிவாகவும் ,துல்லியமாகவும் ,விரிவாகவும் விளக்கி உள்ளனர் . 
இஸ்மாயில் திஹ்லவியின் நூலில் சர்ச்சைக்குறிய கருத்துக்களைக் கொண்ட அந்த வாசகம் பின்வருமாறு ,

"அந்த அரசனின்(அல்லாஹ்வின் ) மகிமை எப்படிபட்டதெனில் குன் (ஆகுக என்னும் கட்டளை ) என்னும் ஒரு நோடிப் பொழுதில் கோடிக்கணக்கான நபிமார்கள் , அவ்லியாக்கள் ,ஜின்கள் ,மலக்குகள் , முஹம்மது மற்றும் ஜிப்ரஈல் ஆகியோரை உருவாக்க முடியும்  "
[நூல்- தக்வியத்துள் ஈமான் ,பக்கம் 37 ]

அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி (ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் மாணவர் ) ,இந்த சிந்தனையை ஷரியத்திற்கு மாற்றமானது என்று மறுத்தார்கள்.

அவர்கள் எழுதினார்கள் , குர்ஆன் ஹதீத் உடைய நஸ்ஸான (அறுதியான) ஆதாரங்களைக் கொண்டு கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்கள் தான் இறுதி நபி ,அவர்களுக்கு பின் நபியோ,ரசூலோ வரப்போவதில்லை . நபிகள்  நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்களைப் போல் இன்னொருவர் வருவார் என்பது சாத்தியமற்ற ஒன்று ,இன்னும் ஷரீயத் எதையெல்லாம் சாத்தியமற்ற அம்சங்கள் என்று  கூறுகின்றதோ அதில் நின்றும் உள்ளவை . நபிகள்  நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்களுக்குப் பின் ஒரு நபி வருவார் என்று நம்பிக்கை கொள்வது அல்லாஹுத்தஆலா குர்ஆனில் தான் கூறியதற்கு மாற்றமாக  ஒன்றை செய்தான் என்று அவசியப்படுத்துவது போல் ஆகும் ,அதாவது அல்லாஹுத்தஆலா பொய் உரைத்தான் என்று . பொய் உரைப்பது ஒரு குறைபாடு இன்னும் அல்லாஹுத்தஆலா குறைபாடுகளை கொண்டிருப்பது இயலாதவொன்று . இதுபற்றிய மேலதிக விவரங்களுக்கு அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி அவர்கள் எழுதிய 'தஹ்கீக் அல் பத்வா பீ இப்தால் அல் தகுவா ' என்னும் நூலைக் காணவும் .  



இந்த புத்தகம் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் கொள்கைகளான 'அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம்' மற்றும் 'முஹம்மது  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்களைப் போல் இன்னொருவர் வருவது சாத்தியம்' என்ற கொள்கைகளை தெளிவாக ஆதாரங்களுடன் மறுத்து அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கைகளை நிலைநாட்டியது .
Tahqeeq al-Fatwa fi Ibtal al-Taghwa

இந்த விஷயங்கள் சம்பந்தமாக இஸ்மாயில் திஹ்லவி ஒரு தனிக்கட்டுரை 'யக் ரோஜா' என்னும் பெயரில் எழுதினார் .இதற்கு அவரின் மாணவர் மவ்லவி ஹைதர் அலி டோங்கி உறுதுணையாக இருந்தார் .
Yak Roza 


இதற்கு மறுப்பளிக்கும் விதமாக அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி அவர்கள் பாரசியில் எழுதிய நூல் 'இம்தினாஉன்  நசீர் ' . இந்த நூலை ஜூஅன்புரைச் சேர்ந்த அல்லாமா செய்யித் சுலைமான் அஷ்ரப் அவர்கள் (அதிபர் ,இஸ்லாமிக் சயின்ஸ்,அலிகர் பல்கலைக்கழகம்  ) 1908ல்  வெளியிட்டார்கள் .
  
    மவ்லானா அஹ்மத் ஹசன் கான்பூரி (முப்தி முஹம்மது லுத்புல்லாஹ் அலிகரி அவர்களின் மாணவர் மற்றும் ஹாஜி ஷைகு இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்களின் கலீஃபா    )     இந்த தலைப்புகளில் இஸ்மாயில் திஹ்லவிக்கு மறுப்பாக எழுதிய நூல் 'தன்ஸீஹ் அல் ரஹ்மான் அன் ஷீயத் அல் காதிபி வ அல் நுக்சான்  ' .

இதே தலைப்பில் மவ்லானா ஹக்கீம் செய்யித் பரகத்  அஹ்மத் டோங்கி, இஸ்மாயில் திஹ்லவிக்கு மறுப்பாக ' அல் சம்சம் அல் காதிப் லிரா அசி அல் முப்தாரி அலல்லாஹி அல் காதிப் ' என்னும் நூலை எழுதினார் .  

முப்தி முஹம்மது அப்துல்லாஹ் டோங்கி , இஸ்மாயில் திஹ்லவிக்கு மறுப்பாக 'இஜாலாத் அல் ரகீப் பீ இம்தினாயி காதிப் அல் வாஜிப் ' என்னும் நூலை எழுதினார் .

இது போன்ற எழுத்துகளின் மூலம் இம்மக்கள் அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் என்ற வஹாபிய கொள்கையை மிகச் சிறப்பாக எதிர்த்தனர் .

இனி அக்காலத்தில் உண்டான சச்சரவுகளை பற்றிய விஷயங்களை சற்றே ஒதுக்கிவிட்டு சற்று முன்னே நகரலாம் .

மிகப் பிரபலமான நக்ஷபந்தி முஜத்திதி ஷைகும் அறிஞருமான மவுலானா அபுல் ஹசன் ஜைத் பாரூக்கி திஹ்லவி அவர்களின் தமது காலத்தில் உண்டான பிளவுகளைப் பற்றிய  கூற்று சிந்திக்கத்தக்கவை  ,

" முஜத்திதே அல் பதானி ஷைகு அஹ்மத் பாரூக்கி சிர்ஹிந்தி அவர்களின் காலம் தொட்டு ஹிஜ்ரி 1240 (1825ஆம் ஆண்டு ) வரை இந்திய முஸ்லிம்கள் இரு பிரிவாக பிளவுபட்டு இருந்தனர்  ,
                   
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ராபிழி ஷியாக்கள் 

               அதன் பின்னர் இஸ்மாயில் திஹ்லவி தோன்றினார்,
இவர் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் தந்தைவழி பேரன் . மற்றும் ஷாஹ் அப்துல் அஜீஸ் ,ஷாஹ் ரபிய்யுத்தீன் ,ஷாஹ் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரர் மகன் .  

இவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் சிந்தனைகளால் கவரப்பட்டு ,இப்னு அப்துல் வஹாபின் நூலான 'ரத்துல் இஷ்ராக்' கை வாசித்து அதன் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் . 

இவர் 'தக்வியத்துள் ஈமான்' என்னும் நூலை உர்துவில் எழுதினார் . இந்த நூல் மார்க்க விஷயங்களில் தடங்களற்ற சுதந்திரத்தை உண்டாக்கும் காலத்தை தொடங்கி வைத்தது . சிலர் கைர் முகல்லிதுகலாயினர் ,சிலர் வஹாபிகளாயினர் ,சிலர் அஹ்லே ஹதீத் என்று தங்களை அழைத்தனர் சிலர் ஸலபிகள் என்று பிரிந்தனர் .

முஜ்தஹித் இமாக்களுக்கு மக்கள் அளித்த கண்ணியம் வெகுவாக குறைந்தது ,மார்க்க விஷயங்களில் சாதாரண  அறிவும் கற்றலும் உடையவர்கள் இமாம்களாயினர் .

மிகப்பெரும் சோகம் என்னவெனில் தவ்ஹீதின் பெயரால் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை மக்கள் நிந்தனை செய்யத் தொடங்கினர் . இது போன்ற சிதைந்த கருத்தாக்கங்கள் ஹிஜ்ரி 1240 (1825 ஆம் ஆண்டு )ரபிய்யுல் ஆகிர் மாதத்திற்கு பின் தோன்றின   . "
           
                                       Maulana Isma’il Dihlawi aur Taqwiyatul Iman
[நூல்- மவ்லானா இஸ்மாயில் திஹ்லவி அவ்ர் தக்வியத்துள் ஈமான் , பக்கம் 9, ஷாஹ் அபுல் கைர் அகாடமி ,மவுலானா அபுல் ஹசன் ஜைத் பாரூக்கி திஹ்லவி  ]


1871ஆம் ஆண்டு பதாயூனில் உள்ள ஷைக்கோபூர் என்னும் ஊரில் வைத்து ஒரு விவாதம் நடந்தது . 

முஹிப்பிர்  ரசூல் தாஜுல் புஹூல் அல்லாமா அப்துல் காதிர் காதிரி பரக்கத்தி பதாயூனி (மறைவு  1319 ஹிஜ்ரி - 1901 ஆம் ஆண்டு ) 
                                                                       மற்றும் 
மவ்லானா அமீர் அஹ்மத் பின் மவ்லவி அமீர் ஹசன் சஹசவாணி (மறைவு ஹிஜ்ரி 1306 - 1889 ஆம் ஆண்டு ) 
'அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம்' , 'முஹம்மது  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )   அவர்களைப் போல் இன்னொருவர் வருவது சாத்தியம்' போன்ற தலைப்புகளில் .

மவ்லானா நசீர் அஹ்மத் சஹசவாணி (மறைவு ஹிஜ்ரி 1299 - 1881 ஆம் ஆண்டு ) இந்த விவாதத்தை பதிவு செய்துள்ளார் .

[நூல் -முனாஜாரா ஏ அஹ்மதியா ,ஹிஜ்ரி 1289 பதிப்பு ]

மவ்லானா அமீர் அஹ்மத் மற்றும் மவ்லானா நசீர் அஹ்மத் இருவரும் மவ்லானா முஹம்மது அஹ்சன்  நானொத்வியிடம் சில காலம் கழித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்னு அப்பாஸ் உடைய அதரை ஆதாரமாகக் கொண்டு , அவர்கள் ஆதம் (அலைஹிஸ்ஸலாம் ) ,நூஹ்  (அலைஹிஸ்ஸலாம் ), இப்ராஹீம்  (அலைஹிஸ்ஸலாம் ),மூஸா  (அலைஹிஸ்ஸலாம் ),ஈஸா  (அலைஹிஸ்ஸலாம் ) ,முஹம்மது  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  போன்று இன்னொருவர் வருவது சாத்தியம் என்ற நம்பிக்கையோடு மட்டுமல்லாமல் அதுதான் யதார்த்தமான நிலையும் கூட என்று அவ்விருவரும் நம்பினார்கள் .

பேராசிரியர் அய்யூப் காதிரி (கராச்சி ) அவர்கள் எழுதுகின்றார்கள் ,

" முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டிய விஷயம் யாதெனில் பரேலி பதாயூனைச் சார்ந்த உலமாக்கள் ,மவ்லானா முஹம்மது அஹ்சன்  நானொத்வியின் கண்ணோட்டத்தை கடுமையாக எதிர்த்தனர் ,முரண்பட்டனர் . பரேலி உலமாக்களில் முன்னோடியாக எதிர்த்தவர்கள் மவ்லானா நகீ அலி கான் ,பதாயூன் உலமாக்களில் முன்னோடியாக எதிர்த்தவர்கள் மவ்லானா அப்துல் காதிர் ,மவ்லானா பஜ்லே ரஸூல் பதாயூனி அவர்களின் மகனார்   "

[நூல்- மவ்லானா முஹம்மது அஹ்சன்  நானொத்வி , பக்கம் 94, மஃத்பா உத்மானியா , பேராசிரியர் முஹம்மது அய்யூப் காதிரி ]

மவ்லானா அப்துல் ஹக் கைராபாதி ,மவ்லானா செய்யித் ஹுசைன் முஹத்தித் ராம்பூரி , மவ்லானா அப்துல் அலி ராம்பூரி ,முப்தி நூருந்நபி ராம்பூரி மற்றும் அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் ஏனைய உலமாக்கள் இப்னு அப்பாஸ் உடைய அதரை ,அது குர்ஆனுக்கு எதிராக உள்ளதாக நிரூபணம் செய்ததோடு அது தவறான கொள்கை என  எதிர்த்தனர் .

ஹழ்ரத் முப்தி இர்ஷாத் ஹுசைன் ராம்பூரி அதில் நம்பிக்கைக்கு கொள்வது அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் கொள்கைக்கு முரணானது என எழுதினார்கள் . ஏனெனில் 'காத்தமுன் நபிய்யீன்' என்றால் இறுதி நபி - அதாவது  முஹம்மது  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்கள் .
[நூல் - தன்பீஹ் அல் ஜிஹால் , பக்கம் 26, முப்தி  ஹாபிஸ் பக்ஷ் அனோல்வி  ]








Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 11 January 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 2

இந்திய துணிகண்டத்தில் இருந்த இஸ்லாமியரின் மூல நம்பிக்கைகள் என்ன  ?
எங்கு ,எப்பொழுது வேற்றுமை பிரிவுகள் தோன்றின ?

ஆரம்ப காலம் முதல் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை இஸ்லாமியர் ஹனபி மத்ஹபை பின்பற்றும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினராக இருந்தனர் . இந்தியாவின் கொங்கன் பகுதியிலும் தென்னிந்தியாவின் தமிழகம் மற்றும் கேரளாவில் ஷாஃபி  மத்ஹபை பின்பற்றும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினராக இருந்தனர் . சில பகுதிகளில் ராபிழி ஷியாக்கள் இருந்து வந்தனர் .

இந்திய முஸ்லீம் சமூகத்தில் கொள்கை சார்ந்த குழுக்களின் பிளவு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்டது. குறிப்பாக மத்ஹப் உடைய நான்கு இமாம்களை தக்லீது செய்வது கருத்து வேற்றுமைக்கான ஒரு முக்கிய காரணியாகவும் , தஸவ்வுப் என்னும் தரீகத்துடைய வழிமுறைகளும் ஒரு சிறிய  அளவிற்கு பிரிவின் இலக்காயின .


தக்லீதும் , தஸவ்வுபும் வழிகேடான பித்அத்கள் என்று எதிர்ப்பாளர்களால் சித்தரிக்கப்பட்டு ,இதன் காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான பல உட்பிரிவுகள்  உருவாயின.

இந்த உண்மைகளை வரலாற்றுரீதியான ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்வதற்கு , இரண்டு  மேற்கோள்கள் எடுத்துக்காட்டப்படுகின்றது .

முதலாவது ஹக்கீம் அப்துல் ஹை ரேபரேலி உடையது ,இன்னொன்று சுலைமான் நத்வி ,மவ்லவி ஷிப்லி நுஃமானி உடைய மாணவர் .

 [1] அப்துல் ஹை ரேபரேலி உடைய மேற்கோள் : 

சில அறிஞர்களின் கருத்துப்படி , பிக்ஹ் உடைய விஷயங்களில் ஓர் இமாமை தக்லீது செய்வது ஹராமும் ,அனுமதிக்கப்படாததும் ஆகும் . குர்ஆனிலும் ,சுன்னாஹ்விலும் தெளிவாக உள்ள தீர்ப்புகளை பின்பற்ற வேண்டும் ,மேலும் பிக்ஹ் உடைய விஷயங்களில் கியாஸ் ,இஜ்மாவுக்கு எந்த  பங்கும் இல்லை .

இவ்வகையான கொள்கைக் கோட்பாட்டை பின்பற்றிய அறிஞர்கள் , மவ்லானா பகீர் இலாஹாபாதி பின் யஹ்யா , மியான் நசீர் ஹுசைன் திஹ்லவி பின் ஜவ்வாத் அலி , நவாப் சித்திக் ஹசன் போபாலி மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .

இன்னுமொரு கூட்டம் தக்லீதைக் கொண்டு தீவிர எதிர்ப்பு  வாதங்களை முன்வைத்தது ,இன்னும் அவர்கள் அது தடை செய்யப்பட்ட ஒன்றென பிடிவாதம் செய்தனர் . அவர்கள் முகல்லீதீன்கள் ( இமாம்களைப் பின்பற்றுவோர் ) தங்களது நப்சின் அடிமைகள் என்றும்  அஹ்லுல் பிதாவைச் சார்ந்தவர்கள் என்றும் கூறினர் .

அவர்கள் தமது கருத்தில் எந்த அளவிற்கு கடுமையானவர்களாக இருந்தார்கள் என்றால் அவர்கள் மத்ஹப் உடைய நான்கு இமாம்களையும் சிறுமைப்படுத்தபவர்களாக இருந்தனர் ,அதிலும் குறிப்பாக இமாமுல் அஃலம் இமாம் அபூஹனீபா அவர்களின் மீது .

 இவ்வகையான கொள்கைக் கோட்பாட்டை பின்பற்றியவர்கள் மவ்லானா அப்துல் ஹக் பணாராசி பின் பஜ்லுல்லாஹ் மற்றும் அப்துல்லாஹ் சித்திக்கி இலாஹாபாதி , மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .

இவர்கள் தமது கொள்கையைப் பரப்ப எழுதிய நூற்கள் பின்வருமாறு ,

மவ்லவி  மொய்னுதீன் சிந்தி எழுதிய "திராசத்துள் லபீப் "
மவ்லவி பாகீர் இலாஹாபாதி எழுதிய "குர்ரதுல் ஐன் "
மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி எழுதிய " தன்வீருள் ஐனைன் "
மியான் நசீர் ஹுசைன் எழுதிய "மியாருள்  ஹக் "   
மவ்லவி அப்துல்லாஹ் இலாஹாபாதி எழுதிய "இஃதிசாமுஸ் ஸுன்னா "
நவாப் சித்திக் ஹசன் போபாலி எழுதிய "அல் ஜன்னாஹ் பில் உத்ஸவத்தில் ஹஸனாஹ் பிஸ் ஸுன்னாஹ் "  

ஹனபி உலமாக்களும் இருவகையினராக இருந்தார்கள் :

[i] ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் பிரகாரம் தக்லீதை ஏற்பவர்கள் . "அர்கான் ஏ அர்ப ஆ  " நூலின் ஆசிரியர் முல்லா பஹ்ருல் உலூம் மவ்லானா அப்துல் அலி பின்  முல்லா நிஜாமுத்தீன் , "அல் தலீக் அல் முமஜ்ஜத் "  நூலின் ஆசிரியர் மவ்லானா அப்துல் ஹை பிரங்கி மஹாலி பின் அப்துல் ஹலீம் .

[ii] மற்றோரு வகையான ஹனபி உலமாக்கள் தக்லீதை முழு மூச்சாகப் பின்பற்றியவர்கள் ,இன்னும் தக்லீதுக்கு எதிரான எந்த ஒரு சமரசத்தையும் ஏற்காதவர்கள் . உதாரணமாக மவ்லானா ஷைகு பஜ்லே ரஸூல் பதாயூனி , மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .
islamiuloomofunoon

[நூல்  - இஸ்லாமி உலூம் ஓ பூணூன் ஹிந்துஸ்தான் மேன் ,பக்கம் 154,தாருல் முஸன்னிபீன் ,ஆசம்கர்ஹ் ,ஹக்கீம் அப்துல் ஹை ரே பரேலி ]  

[2] சுலைமான் நத்வி உடைய மேற்கோள் 

மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி மற்றும் மவ்லவி காசிம் நானோத்வி (தாருல் உலூம் தேவபந்தின் ஸ்தாபகர்  )ஆகியோர் ஷாஹ் அப்துல் கனி முஜத்திதியின் மிகச் சிறந்த மாணவர்கள் . இஸ்மாயில் திஹ்லவியின் மாணவர் மவ்லவி ஷவ்கத் அலி ஜூஅன்புரி . இவர்கள் பித்அத் எதிர்ப்பாளர்களாகவும்,தூய்மையான தவ்ஹீதை போதனை செய்வதாகவும் ,இன்னும் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்களாகவும் தமது கூற்றினை வெளிப்படுத்தினர் .

மவ்லவி ஷாஹ் இஷாக்கின் மாணவர் மவ்லவி நசீர் ஹுசைன் திஹ்லவி . இவரும் இவரது  ஆதரவாளர்களும் பித்அத் எதிர்ப்பாளர்களாகவும்,தூய்மையான தவ்ஹீதை போதனை செய்வதாகவும் ,இன்னும் ஹனபி மத்ஹபை பின்பற்றுவதை தவிர்ப்பவர்களாகவும் தமது கூற்றினை வெளிப்படுத்தினர் .மார்க்க சட்டங்களை நேரடியாக ஹதீத் நூற்களில் இருந்து பெற்று அதன் பிரகாரம் அமல் செய்யலாம் என்று தமது கூற்றினை வெளிப்படுத்தினர் . இந்த கூட்டத்தினர் 'அஹ்லே ஹதீத் ' என்று அழைக்கப்பட்டனர் .

மூன்றாவது வகையான உலமாக்கள் தமது பழமையான பாரம்பரியங்கள் மீது உறுதியாக நிலைத்திருந்து தம்மை 'அஹ்லுஸ் ஸுன்னாஹ் ' என்றழைத்தனர் . இந்த கூடடத்தின் தலைவர்கள் யாவரும் பதாயூன் மற்றும் பரேலியைச் சார்ந்த உலமாக்களாகும் .
Hayate Shibli

[நூல் -ஹயாதே ஷிப்லி ,பக்கம் 46 ,தாருல் முஸன்னிபீன் , ஆசம்கர்ஹ் ,சுலைமான் நத்வி ]

அப்துல் ஹை ரேபரேலி மற்றும் சுலைமான் நத்வி அகியோரைப் பொறுத்தவரை ,தக்லீதின் மீது உறுதியாக நின்று ,இஸ்லாமிய பாரம்பரியத்தை பற்றிப் பிடித்த'கூட்டம் தம்மை  "அஹ்லுஸ் ஸுன்னாஹ் " என்றழைத்தனர் . இந்த உலமாக்கள் பெரும்பாலும் பதாயூன் மற்றும் பரேலியைச் சார்ந்தவர்கள். இன்றளவும் அவர்கள் தக்லீதை வீட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள் மற்றும்  இஸ்லாமிய பாரம்பரியத்தை  விட்டு அகலவும் மாட்டார்கள் .

                                                                        பிளவு 

இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அப்துர்ரஹ்மான் பர்வேஸ் இஸ்லாஹி மற்றும் பேராசிரியர் கலாநிதி முஹம்மது அய்யூப் காதிரி ஆகியோர் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட பிளவின் மூல ஆணிவேரை பின்வருமாறு விவரிக்கின்றனர் .

* ஹஸ்ரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மாணாக்கரில் ஒரு கூட்டம் அன்னாருடைய கொள்கையில் உறுதியாக இருந்து ஷரீயத் மாற்றமான விஷயங்களில்  எதையும் பொறுத்துக்கொள்ள இயலாதவர்களாக இருந்தனர் .இன்னொரு கூட்டம் தக்லீதை மறுக்குமாறும் ,இஜ்திகாதை ஏற்குமாறும் அறைகூவலிட்டது . இவ்வாறு மெல்ல மெல்ல எனினும் உறுதியாக இவ்விருவரிடையே சில விஷயங்களில் கொள்கை பிரிவுகள் உண்டாயின .

[நூல்- முப்தி சத்ருத்தீன் ஆஸுர்தாஹ் ,பக்கம் 138,மக்தபா ஜாமா ,அப்துர்ரஹ்மான் பர்வேஸ் இஸ்லாஹி ]

* அவாத் நகரம் மிகச் சிறந்த சிந்தனையாளர்களை உருவாக்கியது .அவர்களுள் மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி அவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள் . தமது தந்தையார் பஜ்லே இமாம் அவர்களிடம் மட்டுமல்லாது ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து அவர் கல்வி கற்றார் .

எனினும் அவர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி மற்றும் ஷாஹ் இஷ்ஹாக் ஆகியோரின் பிழையான கொள்கைகளை எதிர்த்து தமது பாரம்பரிய இஸ்லாமிய மரபுகளின் மீது உறுதியாக நின்றார் .

மவ்லானா மஹபூப் அலி திஹ்லவி ( ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மாணாவர் ) அவர்களும் அஹ்லுஸ் ஸூன்னாஹ் கொள்கையைச் சார்ந்தவர் தான் .மவ்லானா பஜ்லே ஹக் மற்றும் மவ்லானா மஹபூப் அலி திஹ்லவி ஆகியோர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர் . இவர்களுக்கு உறுதுணையாக பரேலி ,பதாயூனைச் சார்ந்த உலமாக்கள் நின்றனர் .

[நூல்- உருது ரோஜனமா ,உருது மேன் மத்ஹபி அதப் ,பக்கம் 55, டிசம்பர் 1995 ]

 மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி மற்றும் முஹம்மது ஜாபார் தாநேசரி ஆகியோரின் கருத்துக்கள் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதோடு சரியான முடிவை எத்துவதற்கு அனுகூலமாயிருக்கின்றன .

* நான் இந்தியாவில் இருந்த காலத்தில் [ஹிஜ்ரி 1280- 1864ஆம் ஆண்டு ],முழு பஞ்சாபிலும் வஹாபிய கொள்கையை பின்பற்றுவோர் பத்து நபர்கள் கூட இருக்க மாட்டார்கள் என நம்புகின்றேன் .இப்பொழுது[1302 ஹிஜ்ரி - 1884ஆம் ஆண்டு ] ஒவ்வொரு ஊரிலும் .ஒவ்வொரு நகரிலும் நான்கில் ஒரு'நபர் இஸ்மாயில் திஹ்லவியின் கொள்கையைப் பின்பற்றும் வஹாபியாக உள்ளார் .

[நூல் - தவாரிக் ஏ அஜீபா ,பக்கம் 81, சங் மெயில் பப்ளிகேஷன் , லாகூர் ,முஹம்மது ஜாபார் தாநேசரி ]

* அமிர்தசரில் முஸ்லிம் ,முஸ்லிமல்லாதோரின் எண்ணிக்கை சமமாக இருந்தது .எண்பது வருடம் முன்பு ,எல்லா இஸ்லாமியரும் இன்று 'ஹனபி பரேல்வி ' எனப்படும் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர் .

[நூல்- ஷமா தவ்ஹீத் ,பக்கம் 4,மக்தபா தானாயியா ,சர்கோதா ,பஞ்சாப் ,தனாவுல்லாஹ்  அம்ரத்சரி ]

மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி 'மஜல்லா அஹ்லே ஹதீத் ' 
பத்திரிக்கையின் ஆசிரியர் 1973ல்  கூறுகின்றார் , தம்மை பொறுத்தவரை ,165 ஆண்டுகளுக்கு முன்பு ,பஞ்சாப் அம்ரித்சரின் இஸ்லாமிய சமூகம் ,இன்று 'பரேல்வி ' என்று அழைக்கப்படும் மக்களின் அதே கொள்கைகளைத் தான் கொண்டிருந்தனர் . இன்னும் முஹம்மது ஜாபர் தான்சேரியை பொறுத்தமட்டில் ,200 ஆண்டுகள் முன்பு வரை ஒருங்கிணைந்த பஞ்சாபில் வஹாபிகளின் எந்த அடையாளமும் இல்லை அல்லது இஸ்மாயில் தெஹ்லவியின் கொள்கைகளை பின்பற்றுவோரும் இல்லை  

சிராஜுல் ஹிந்த் ஹஸ்ரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மறைவுக்கு பின் [மறைவு - 1239 ஹிஜ்ரி - 1823ஆம் ஆண்டு ]இஸ்லாமியர் பலர் ஸுன்னி ஹனபி கொள்கையில் இருந்து பிறழ்வுபட்டு கைர் முகல்லிது எனும் மத்ஹப் மறுப்பாளர்கள் ஆயினர் . இஸ்மாயில் திஹ்லவியின் நூல் 'தக்வியத்துள் ஈமான் '  அத்தகையோரின் சிந்தனைகளை சுருக்கமாகக் காட்டியது .

தேவபந்தி பிர்காவின் ஹக்கீமும் உம்மத்' (?) அஷ்ரப் அலி தானவி தனது நூலில் இந்திய வஹாபிகள் மூல கர்த்தா இஸ்மாயில் திஹ்லவி என்ன நினைத்தார் என பின்வருமாறு எழுதுகிறார் .

"நான் இந்த நூலை எழுதியுள்ளேன் ,இன்னும் இதில் சில இடங்களில் கடுமையான சொற்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதையும் அறிவேன் ,இன்னும் சில இடங்களில் தீவிரமான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதையும் அறிவேன் . உதாரணமாக சில மறைவான ஷிர்க்கை (ஷிர்க் ஏ 
காஃபி ) உண்டாக்கும் செயல்களை நான் பகிரங்கமான ஷிர்க் (ஷிர்க் ஏ ஜாலி ) என்று பெயரிட்டுள்ளேன் . இதை கொண்டு மிகப் பெரிய சீற்றம் உண்டாகும் என்று நான் பயப்படுகின்றேன் .நான் இங்கு இருந்தால் ,இந்த கருத்துக்களை  எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு பிரகடனப்படுத்தி இருப்பேன் . எனினும் இந்த நொடியில் எனது திட்டம் ஹஜ்ஜுக்கு சென்று அதன் பின் ஜிகாத் புரிய செல்வதே .எனவே ,அடுத்த எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு இந்த கொள்கை கருத்துக்களை பரப்ப இயலாது .இதை வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த நூலை ஒரே பதிப்பில் ,இதற்கு எதிராக சீற்றம் வரும் எனும் போதிலும் எல்லாவற்றையும் பதிப்பிக்க முடிவு செய்தேன் . எனினும் இது சில காலங்களில் தணிந்துவிடும் என்று நம்புகின்றேன் "

Hikayath E Aulia

[நூல்- ஹிகாயத் ஏ அவ்லியா (அர்வாஹ் ஏ தலாதா ),பக்கம்'98,குதுப் கானா நயீமியா ,தேவ்பந்த் ,அஷ்ரப் அலி தான்வி  ]

கடுமையான சொற்கள் ஒரு எழுத்தாளனின் பழக்கமாக இருக்கலாம் . எனினும் இஸ்மாயில் திஹ்லவிக்கு ஷிர்க் ஏ காஃபி யை ஷிர்க் ஏ ஜாலி என்று பெயரிடுவதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது . 

சீற்றத்தை உண்டாக்கும் அவரது நோக்கம் நிறைவேறியது ,எனினும் பிளவுபட்ட இந்த இந்திய இஸ்லாமிய சமூகத்தின் இரணம் இன்னும் ஆறவில்லை . இதை எதுவுமே அறியாத நவீன கால தப்லீக் ஜமாத் தேவ்பந்திகள்  நாங்கள்தான்  சமூக ஒற்றுமைகாக உழைப்பவர்கள் என்பது சாத்தான் வேதம் ஓதுவது போலாகும் .


Related Posts Plugin for WordPress, Blogger...