Showing posts with label moulavi rasheed ahmed tamil. Show all posts
Showing posts with label moulavi rasheed ahmed tamil. Show all posts

Sunday, 23 September 2018

ரஷீத் அஹ்மத் கங்கோஹிக்காக சமைக்கும் கண்மணி நாயகம்

தலைப்பை கண்டதும் உண்மை மூஃமீன்களின் நெஞ்சம் பதறத் தான் செய்யும் .

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் மற்றோரு பொய் பித்தலாட்டங்களில் ஒன்று ,தமது முன்னோடிகளின் அந்தஸ்தையும் , மதிப்பையும் உயர்த்த எந்த அளவுக்கும் துணிந்து செல்வர் . எந்த அளவிற்கு என்றால்  அது   மூஃமீன்களின்  உயிரினும் மேலான ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் கண்ணியத்தை குறைத்து தங்களின் முன்னோடிகளின் பெருமைகளை மேடையேற்றுவதில் ,பெருமை பீற்றுவதில் ,அகங்காரச் செருக்கில் அவர்களின் உஸ்தாதான இப்லீஸின் அடியொற்றி நடப்பவர்கள் .

" ஒரு முறை ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி அவர்கள் ஓர் கனவு கண்டார்கள் . அதில் தமது சகோதரரின் மனைவி தமது விருந்தினர்களுக்கு உணவு சமைப்பதாக கண்டார்கள் . அப்பொழுது நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் வந்து கூறினார்கள் ," இங்கிருந்து எழுந்திருங்கள் . இம்தாதுல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு சமைப்பதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல . அவரது விருந்தினர் உலமாக்கள் ,எனவே நானே சமைகின்றேன் " . ஹாஜி இம்தாதுல்லாஹ் அவர்களின் இக்கனவு மவ்லானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,அவரிடம் பைஅத் எடுத்ததன் மூலம்  உண்மையானது .ஏனெனில் ஹாஜி சாஹிப் அவர்களிடம் பைஅத் எடுத்த முதல் உலமா அவர்தான் ."


[ நூல்- தஸ்கிரத்தூர் ரஷீத் , பாகம் 1,பக்கம்  75 ,புதிய பதிப்பு ]


ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رضي الله عنه அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்த காமிலான ஷெய்கு . கனவு அவர்தானே கண்டார் ,இதில் ரஷீத் அஹ்மத் கங்கோஹியை குற்றம் பிடிப்பது என்ன நியாயம் என்று நினைக்கலாம் . 

தஸ்கிரத்தூர் ரஷீத் நூலானது ரஷீத் அஹமத் கங்கோஹியின் வரலாற்றை கூறும் நூல் .அவரது மகன் மஸுத் அஹ்மத் தின் உத்தரவின் பேரில் ,தேவ்பந்தி முன்னோடிகள் ஆஷிக் இலாஹி மீரடி , அப்துல் காதிர் ராம்பூரி ,மற்று கலீல் அஹ்மத் சஹ்ரான்புரி ஆகியோரின் எழுத்தாலும் முயற்சியாலும் வெளிவந்த நூல் . எண்ணற்ற ஹதீத் நூற்களையே பிறழ்வு செய்த இவர்கள் ,ரஷீத் அஹ்மத் கங்கோஹியை பரிசுத்தப் படுத்த   ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ அவர்கள் மீது இட்டுக்கட்டி உள்ளனர் . 
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹிந்துக்களின் கடவுள் பற்றி ரஷீத் அஹ்மத் கங்கோஹி

ஹிந்துக்கள் வணங்கும் பல்வேறு தெய்வங்களில் ராமரும் ,கிருஷ்ணரும் அடக்கம் . காபிர்களின் கடவுள் நம்பிக்கை இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் அதனை இணைவைப்பு என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ,புகஹாக்களும் வரையறுத்துள்ளனர் . 

நாங்களும் தீன் பணி செய்கின்றோம் ,சீர்திருத்தம் செய்கின்றோம் என்று வாய் கூசாமல்  வஹாபிய கொள்கையை பரப்பும் தப்லீக் ஜமாத்தினரின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஹிந்து மதக் கடவுளைப் பற்றி என்ன நம்பிக்கை கொண்டிருந்தார் என்று பாருங்கள் . 

 " ராமரும் , கன்ஹையாவும் நல்லவர்கள் . பின் வந்த மக்கள் தான் அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கினர் " 

[நூல் - தஸ்கிரதுர் ரஷீத் , பாகம் 2, பக்கம் 359 
ஆசிரியர் - ரஷீத் அஹ்மத் கங்கோஹி  ] 


இராமனும் ,கிருஷ்ணனும் வரலாற்று நபர்கள் அல்லர் .அவர்கள் இதிகாசங்களிலும் ,புராணங்களிலும் சொல்லப்பட்ட கதை மாந்தர்கள்(மஹாபாரதம் ,இராமாயணம் )  என்று இந்திய வரலாற்று ஆசிரியர்களே பல நூற்கள் எழுதியுள்ளனர் .

இன்னும் 14ஆம் நூற்றாண்டில் துளசிதாஸ் என்பவர் இயற்றிய இலக்கியமே பின்னர் இராம வழிபாட்டுக்கு மூலம் என்றும் சொல்லப்படுகின்றது .
[என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா   ] 

நமது கேள்வி எந்த ஆய்வுமே செய்யாமல் பொத்தாம் பொதுவாக பிற மதத்தினரின் கடவுளருக்கு  வக்காலத்து வாங்கும் தேவ்பந்தி தப்லீகி  ரஷீத் அஹ்மத் கங்கோஹி ,எத்துணை ஆதாரங்கள் இருந்தும் அல்லாஹு سبحانه وتعالىٰ வையும் , படைப்புகளின் காரணகர்த்தா கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை நிந்தனை செய்தது ஏன் ??? 


  


Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday, 7 February 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 4




கத்மே நுபுவ்வத் மற்றும் நஸீர் ஏ முஹம்மதி குறித்த விவாதங்களும் ,இப்னு அப்பாஸ் அவர்களுடைய அதர் பற்றிய கேள்விகளும் அதன் பதில்களும் 

 தேவ்பந்தி பிர்காவின் மவ்லவி முஹம்மத் காஸிம் நானோத்வி (தாருல் உலூம் தேவ்பந்தின் ஸ்தாபகர்  )  தமது நூலான 'தக்தீருன் நாஸ்' ல் பின்வருமாறு எழுதுகிறார் ,

"சாமானிய மக்கள் ,பொதுமக்கள் “காத்தமுன் நபீயீன்” என்பதன் பொருள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் காலம் எல்லா நபிமார்களுக்கும் பிந்தியது என்றும் அவர்கள் தாம் இறுதி நபி என்றும் அர்த்தம் கொள்வர்.எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு .பிந்தி வருவதிலோ அல்லது இறுதி நபி என்பதிலோ எந்த விசேஷமும் இல்லை என்று அறிவர் .

அண்ணலம் பெருமான் முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .எனவே அவர்கள் காலத்தில் வேறொரு நபி வேறு ஒரு கிரகத்தில் வருவதிலோ அல்லது இதே கிரகத்தில் வருவதிலோ எந்த வேறுபாடும் உண்டாகாது . "
                                                   
                                                   
                                                   

[ நூல் -தக்தீருன் நாஸ் ,பக்கம் 24,மவ்லவி காசிம் நானோத்வி  ] 

மவ்லானா முஹம்மது பாசிலுக்கு எழுதிய கடிதத்தில் மவ்லவி காசிம் நானோத்வி  பின்வருமாறு எழுதுகிறார் ,

“காத்தமுன் நபீயீன்” என்பதன் பொருளை எழுத்தியல் பொருளாக எடுப்பவர்கள் , நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் நுபுவ்வத்  காலம் எல்லா நபிமார்களுக்கும் பிந்தியது என்றும் அவர்கள் தாம் இறுதி நபி  என்று பொருள் கொள்வர் . எனினும் இந்த விஷயம் புகழோ ,தீங்கோ அளிக்கக்கூடிய ஒன்றாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் . " 

[ நூல் - காசிம் உல் உலூம் ,பக்கம் 55 , முதல் கடிதம் ]   

மவ்லவி அஷ்ரப் அலி தான்வி எழுதுகின்றார் ,
"மவ்லவி காசிம் நானோத்வி தக்தீருன் னாஸ் நூலை எழுதிய பொழுது ஒட்டுமொத்த இந்தியாவிலும் மவ்லவி அப்துல் ஹை என்பவரைத் தவிர வேறு யாரும் ஆதரிக்கவில்லை  "
                                                Al-Ifadat al-Yawmiya

[ நூல் - அல் இபாதாத் அல் யவ்மியா , பக்கம்  580, அஷ்ரப் அலி தான்வி  ] 

மவுலானா முஹம்மது ஷாஹ் பஞ்சாபி , மவ்லானா பஜ்லே மஜீத் பதாயூனி , மவ்லானா ஹிதாயத் அலி பரேல்வி , மவ்லானா பஸீஹுத்தீன் பதாயூனி , மற்றும் ஷைகு முஹம்மது தான்வி ஆகியோர் மவ்லவி காசிம் நாணோத்வியின் 'தக்தீருந் நாஸ் ' நூலுக்கு எதிராக நூற்களை எழுதி அவற்றை கடுமையாக எதிர்த்தனர் . 

   
ஹழ்ரத் மவ்லானா அப்துல் சமீ பேதில் ராம்பூரி ,ஷைகு  ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் கலீபா  மிகப் பிரபலமான நூலான 'அன்வாரே சாதியா ' என்னும் நூலை எழுதினார் . 

                                                     Anwar-e-Sati’ah



இந்த நூலுக்கு பதில் அளிக்கும் விதமாக மவ்லவி கலீல் அஹ்மத் அம்பேத்வி ஸஹ்ரான்பூரி ( பிறப்பு - ஹிஜ்ரி 1269 -  1852 ஆம் ஆண்டு)
 (மறைவு ஹிஜ்ரி 1346 - 1927 ஆம் ஆண்டு )     'பராஹீனே காத்தியா ' என்னும் நூலை எழுதினார் .
                                                          Baraheen-e-Qati’ah
இந்த நூலுக்கு மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி அதன் கருத்துக்களை ஏற்று ஒப்புதல் வழங்கினார் . இந்த நூலில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் புனிதமிகு அறிவாற்றலை ,சபிக்கப்பட்ட ஷைத்தான் இப்லீசுடன் இஸ்லாமியர்களின் மனம் நோகும் வகையில் ஒப்பீடு செய்துள்ளார் .

கலீல் அஹ்மத் எழுதுகின்றார் ,

" இறுதி முடிவு : ஷைத்தான் மற்றும் மலக்குல் மவ்த்து ஆகியோருடைய நிலையை பார்த்த பின்னர் சிந்திக்க வேண்டிய விஷயம் யாதெனில் , அதைப்போன்று உலகமனைத்தையும் உள்ளடக்கிய பேரறிவு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு உண்டென எந்தவிதமான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லாமல் , வெறுமெனே தவறான ஒப்புமை கொண்டு மட்டும் நிரூபிக்க முயல்வது - இதற்கு பெயர் ஷிர்க் இல்லையென்றால் ,இது ஈமானின் எந்த பகுதி ?  

ஏனெனில் அத்தகைய விசாலமான அறிவு ஷைத்தான் மற்றும் மலக்குல் மவ்த்து உண்டென்பது அறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மூலம்   நிரூபிக்கப்பட்டுள்ளது (நுஸுஸ் கதிய்யாஹ் ). அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்  அதேபோன்ற ஆழமான அறிவுடையவர்கள் என்று என்று நிரூபிக்கும் குரான் ஹதீஸ் உடைய அறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் எங்குள்ளது  ?  எல்லா அறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை மறுத்து  இந்த ஒரு ஷிர்க்குடைய நம்பிக்கையை நிலைநிறுத்தவதற்கு  ".

"பராஹீனே காத்தியா " நூல்  எழுதப்பட்டது ஹிஜ்ரி 1303ல் (1885ஆம் ஆண்டு ) . இந்த நூலைக் கொண்டு பெரும் அதிருப்தி ஏற்பட்டது .

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்கள் இதை எதிர்த்தனர் . ஹிஜ்ரி 1306ல்  (1888ஆம் ஆண்டு ) , பஞ்சாபின் பஹவல்பூர் நகரில் ஓர் விவாதம் நடந்தது , பஹவல்பூரின் நவாப் நவாப் முஹம்மது சாதிக் அப்பாஸியின் ஏற்பாட்டில் . இந்த நகரில் தான் அப்பொழுது கலீல் அஹ்மத் அம்பேத்வி பணி செய்து வந்தார் .

மவ்லவி மஹ்மூது ஹசன் தேவ்பந்தி மற்றும்  கலீல் அஹ்மத் அம்பேத்வி "பராஹீனே காத்தியா " நூலை ஆதரித்தும் ,
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் சார்பாக மவ்லானா குலாம் தஸ்தகீர் கஸூரி வாதிட்டார்கள் . ஷைகுல் மஷாயிக் ஷாஹ் குலாம் பரீத் அவர்கள் இந்த  விவாதத்தின் நீதிபதியாக இருந்தார்கள் .

இந்த முழுமையான விவாதமும் "தக்தீஸ் உல் வகீல் அன் தவ்ஹீன் உர் ரஷீத் வ கலீல் " என்று நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது .

                                        Taqdees ul Wakeel an Tauheen ur rasheed wal khalil


இது தான் 'அஹ்லே தேவ்பந்த்' க்கு எதிரான முதல் பத்வா .  மவ்லானா குலாம் தஸ்தகீர்   கஸூரி  ஹாஷ்மி நக்ஷ்பந்தி அவர்களால் வெளியிடப்பட்டது .

இந்த விவாதம் முழுக்க முழுக்க  எழுத்துப்பூர்வமானது ,மேலும்
மவ்லானா குலாம் தஸ்தகீர்   அவர்களின் வாதமானது ,

" என்னுடைய மறுப்பானது நீங்கள் படைப்புகளில் மிகவும் அறிவார்ந்தவர்களான நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் விசாலமான அறிவை மறுத்ததோடு , அவர்களின் அறிவை ஷைத்தானை விடவும் குறைவானது என்று கூறியுள்ளீர்கள் . இது மிகவும் மோசமான அவமரியாதை ஆகும்  " 
[நூல் -தக்தீஸ் உல் வகீல் ,பக்கம்  93  ]


 ரஷீத் அஹ்மத் கங்கோஹி  , கலீல் அஹ்மத் அம்பேத்வி ஆகியோரின் ஷைகான ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) ,மற்றும் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் ஷம்சுல் உலமா அஃலா ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் அல் காதிரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்களும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களை ஆதரித்து , மவ்லானா குலாம் தஸ்தகீர் அவர்களின் நிலைப்பாட்டை ஒப்புக்கொண்டு அவரது நூலான தக்தீஸ் உல் வகீல் க்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டனர் . 

மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி, கலீல் அஹ்மத் அம்பேத்விக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதை கண்ட  ஷைகு ரஹ்மத்துல்லாஹ் கீரான்வி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்கள் கூறினார்கள் , " நான் மவ்லவி ரஷீத் அஹ்மத்  'ரஷீத் ' என்று நினைத்தேன் ,ஆனால் அவர் அதற்கு மாற்றாக உருவாக்கியுள்ளார் . அவர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் அறிவு ஷைத்தானை விட குறைவு என்று நிரூபிக்க மிகக் கடினமாக முயன்றுள்ளார் .இன்னும் அதற்கு மாற்றமான நம்பிக்கை கொள்வது ஷிர்க் என்று கூறுகின்றார் "
[ நூல் -தக்தீஸ் உல் வகீல் ,பக்கம்  419 ]

ஹிஜ்ரி 1319ல் ( 1901ஆம்  ஆண்டு ) மவ்லவி அஷ்ரப் அலி தான்வி 'இல்முல் கைப் ' சம்பந்தமாக ஒரு கேள்விக்கு விடையளித்து 'ஹிப்ளுள் ஈமான் ' என்னும் நூலை எழுதினார் .

                                         Hifzul Iman-Ashraf Ali Thanvi

இந்த நூலில்,அஷ்ரப் அலி தான்வி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் அறிவை ,பைத்தியக்காரர்களுடனும் ,மிருகங்களுடனும் ஒப்பிட்டு ,பெருமானார்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்களுக்கு வழங்கப்பட்ட மறைவான அறிவைக் கொண்டு எந்த தனிச்
சிறப்புமில்லை என்று கூறியுள்ளார் .

அதன் அசல் கூற்று பின்வருமாறு ,
' இன்னும் ஜைத் கூறுவது போன்று நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு வழங்கப்பட்ட மறைவான அறிவு என்னும் பண்பை சாட்டுவது உண்மையென்றால் , கேட்க வேண்டிய கேள்வியாதெனில் ,ஜைத் எதைக் குறிப்பிடுகின்றார் . அது மறைவான அறிவில் (இல்முல் கைப் ) ஒரு பகுதியையா அல்லது முழுமையாகவா ? ஜைத் அதில் ஒரு பகுதியை குறிப்பிட்டுகின்றார் என்றால் ,நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் மறைவான இல்மை  கொண்டு என்ன சிறப்பு உள்ளது . இது மாதிரியான மறைவான இல்ம் எல்லோருக்கும் உள்ளது ,ஜைத் அமர க்கும் உள்ளது , இன்னும் குழந்தைகள் ,பைத்தியக்காரர்கள் ,மிருகங்கள் மற்றும் நான்கு கால் பிராணிகளுக்கும் உள்ளது  '.

ஹழ்ரத் ஸெய்யித் முஹம்மத் ஜீலானி ஹைதராபாதி அவர்களின் பேரர் ஸெய்யித் நஸீருத்தீன் ,ஸெய்யித் மொய்னுதீன் அவர்களின் மகனார் அஷ்ரப் அலி தான்வியின் இந்த கூற்றுக்கு தமது கண்டனத்தை பின்வருமாறு தெரிவிக்கிறார்கள் ,

"சிலர்  அஷ்ரப் அலி தான்வி எழுதிய 'ஹிப்ளுள் ஈமான்' நூலை   எனது பாட்டனாரிடம் காண்பித்து அதைப் பற்றி கேட்டார்கள் . அவர்கள் அந்த நூலை வாசித்து 'மவ்லவி அஷ்ரப் அலி இல்முல் கைப் விஷயமாக மிகவும் அவமரியாதையாக எழுதியுள்ளார் என்றார்கள் ".

சில நாட்கள் கழித்து ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் அஷ்ரப் அலி தான்வி இருந்த பொழுது ,எனது பாட்டனார் அவரிடம் எழுந்து சென்று தமது அருவருப்பை வெளிப்படுத்தி 'இந்த பத்தியில் குப்ர் உடைய வாடை உள்ளது என்றார்கள் '.

சில நாட்கள் கழித்து உலமாக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மவ்லானா ஹாபிழ் முஹம்மத் அஹ்மத் (மவ்லவி காசிம் நாணோத்வியின் மகனார் ) அவர்களின் வீட்டில் நடைபெற்றது . அவர் எனது பாட்டனார் மீது அன்பு கொண்டவர் என்பதால் அந்த  ஒருங்கிணைப்புக்கு எனது பாட்டனாரையும் அழைத்தார் . அங்கு உலமாக்கள் 'ஹிப்ளுள் ஈமான்'  நூல் பற்றி விவாதித்தனர் . எனது பாட்டனார் இது விஷயமாக தமது அருவருப்பை வெளிப்படுத்தி, இதைப் பற்றி ஓர் பத்வா வெளியிட்டார்கள் .

இதன் பின்னர் சில நாட்கள் கழித்து கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களை கனவில் கண்டார்கள் . நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம்   (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்கள் அந்த நூலுக்கு மறுப்பு தெரிவித்ததைக் கொண்டு சந்தோசம் அடைந்து ,அதை 'அக்பாஹ் ' என்றும் கூறினார்கள் .    நபிகள் நாயகம்   (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )  அவர்கள் , 'நான் உம்மை கொண்டு மகிழ்வுறுகின்றேன் .உமக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்கள்'  ? எனது பாட்டனார் இனி தமது இறுதிகாலம் வரை மதீனாவில் இருந்து அங்கேயே அடக்கம் பெற விரும்பினார்கள்.அவரது விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது ,அன்னார் மதீனா ஷரீபிற்கு ஹிஜ்ரத் செய்து ,ஏறத்தாழ பத்தாண்டு காலம் அங்கு கழித்து ஹிஜ்ரி 1364ல் மரணம் எய்தினார்கள் .
                                          Maqamat-e-Khair
[நூல் - மகாமத் ஏ கைர் , பக்கம் 616, ஷாஹ் அபுல் கைர் அகாடமி ,தில்லி ] 

ஹழ்ரத் மவ்லானா அபுல் கைர் நக்ஷ்பந்தி முஜத்திதி திஹ்லவி அவர்கள் சில காலம் கோதி இலாஹி பக்ஷ் ,மீரட் நகரில் வசித்தார்கள் . அந்த சமயத்தில் ஹாபிழ் முஹம்மது அஹ்மது ,மவ்லவி காசிம் நாணோத்வி தேவபந்தியின் மகன் மற்றும் அஷ்ரப் அலி தான்வி ஆகியோர் அவரது ஓர் அமர்வுக்கு வந்து அன்னாரை சந்தித்தனர் .

மவ்லானா குலாம் தஸ்தகீர் கசூரி அவர்களின் ஆதரவாளர் மவ்லவி அஷ்ரப் அலி தான்வியின் 'ஹிப்ளுள் ஈமான்' நூலின் கருத்துக்களை வாசித்துக் காண்பித்தார் .   ஹழ்ரத் ஷாஹ் அபுல் கைர் திஹ்லவி அவர்கள் அதனை முற்றிலும் வெறுப்பூட்டும் ஒன்றாக கண்டு ' இது தான் நீங்கள் செய்யும் மார்க்க சேவையா ? உங்களின் முன்னோர் எமது பாதையில் இருந்தனர் . இதை  ஏன் எதிர்த்தீர்கள் ? என்று வினவ ,அஷ்ரப் அலி தான்வி 'நான் இதன் விளக்கத்தை வேறொரு புத்தகத்தில் எழுதியுள்ளேன்'  என்றார்  . ஷாஹ் அபுல் கைர் கூறினார்கள் 'பலதரப்பட்ட மக்கள் இதன் காரணமாக ஹக்கை விட்டு வெளியேறிவிட்டனர் . உமது விளக்கத்தின் தேவை என்ன எஞ்சியுள்ளது ? ' என்றார்கள் .
                                            Bazm-e-Khair az-Zayd
[நூல்-பஸ்மே கைர் அஸ் ஸைத் , பக்கம் 11,ஷாஹ் அபுல் கைர் அகாடமி ,தில்லி  ]

முஸ்லீம்களிடையே பிரிவினையின் ஆரம்பமும் ,முடிவும் அனைவரும் அறியும் வகையில் பளிங்கு கண்ணாடி போல் உள்ளது .

முஹம்மது ஹுசைன் (ரயீஸ் நஹ்டோர் ,ஜில்லா பீஜ்னோர்  ) அவர்கள் எழுதுகிறார்கள் ,

"  இஸ்மாயில் திஹ்லவி தமது ஆதரவாளர்களுடன் தில்லியில் இருந்து லக்னோ வந்து தமது கொள்கைகளை பரப்ப ஆரம்பித்தார் . அந்த சமயத்தில் தான் மவ்லானா அப்துர் ரஹ்மான் விலாயதி அவர்கள் லக்னோவில் இருந்து வந்தார்கள் . அவர் தமது கராமத்துகளின் காரணமாக பிரபலமாகியிருந்தார் . இஸ்மாயில் திஹ்லவி இந்த காலத்தில் விவாதங்களைத் தவிர்த்து வந்தார் . லக்னோவை விட்டு கிளம்பும் முன் இஸ்மாயில் திஹ்லவி லக்னோவின் உலமாக்கள் வழிதவறிவிட்டனர் என்று கூறினார் . அவர் கல்கத்தாவில் இருந்து திரும்பி வந்து இந்த லக்னோவின் வழிதவறியவர்க்கு  எதிராக ஜிஹாத் புரிவேன் என்றார் . இறைவனின் நேசர் மவ்லானா அப்துர் ரஹ்மான் விலாயதி அவர்கள் கூறினார்கள் 'மகனே ,இத்தகைய எண்ணம் உள்ள எவரும் திரும்புவதில்லை'  "
 [நூல்- பர்யாத் அல் முஸ்லிமீன் , ஹிஜ்ரி 1308/ 1890ஆம் ஆண்டு , முஹம்மது ஹுசைன் பஜ்நோரி  ]

செய்யித் அஹ்மத் ரேபரேலியுடைய கொள்கைகளும் , இஸ்மாயில் திஹ்லவியின் எழுத்துக்களும் தமது முன்னோர்களின் நம்பிக்கைகளுக்கும் ,ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களின் கொள்கைகளுக்கும் மாற்றாக வழி தவறி சென்றன .

இதன் விளைவுகளை சுட்டிக்காட்டி மவ்லானா உபைதுல்லாஹ் சிந்தி தமது பார்வையை தெளிவாக வெளிப்படுத்துகிறார் ,
" காலம் செல்ல செல்ல , மூல கொள்கையில் இருந்து பிரிந்து சென்றதன் காரணமாக , முஸ்லிம்களின் தேசிய இயக்கமாக மாறியிருக்க வேண்டிய வலியுல்லாஹ் இயக்கம் கொள்கை பிரிவினையின் தளமாக மாறிப் போனது . இந்த பிரிவினை செய்யித் அஹ்மத் ரேபரேலி உடன் தொடங்கியது . இந்த இயக்கத்தின் மற்றோரு பிரிவான தேவ்பந்த் இயக்கமும் அதே முடிவை அடைந்தது . இன்றும் பெருவாரியான மக்கள் பரேலவிகளாக இருப்பதோடு இவ்விரு இயக்கங்களையும் குப்ர் கொள்கைகளை கொண்டவர்கள் என்றே கருதுகின்றனர் . "
[நூல்- இபாதாத் ஏ மல்பூஜாத் , பக்கம் 349, சிந்த் சாகர் அகாடமி , லாகூர் ,மவ்லானா உபைதுல்லாஹ் சிந்தி  ]

இந்தியாவில் ஹிஜ்ரி 1240/1825ஆம் ஆண்டுக்கு பின் உண்டான இஸ்லாமிய பிரிவினையின் காரணமும் ,அதன் காரணகர்த்தாக்களும் ,அதன் பின் புலமும் விவரிக்கப்பட்டுள்ளது .

அக்காலத்தில் வட இந்தியாவைச் சார்ந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தை சார்ந்த  செல்வாக்கு நிறைந்த உலமாக்களின் சுருக்கமான பட்டியல் பின்வருமாறு ,

ஹிஜ்ரி 13ஆம் நூற்றாண்டு :


  • அல்லாமா அப்துல் அலி பிரங்கி மஹல்லி லக்னவி (1144-1235  ஹிஜ்ரி ) 
  • ஷாஹ் முஹம்மது அஜ்மல் இலாஹாபாதி (1160-1236 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அன்வாருல் ஹக் பிரங்கி மஹல்லி (1159-1239 ஹிஜ்ரி )
  • ஷாஹ் குலாம் அலி நக்ஷ்பந்தி திஹ்லவி (1158-1240  ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபூ சயீத் முஜத்திதி ராம்பூரி (1196-1226  ஹிஜ்ரி )
  • ஷாஹ் செய்யித் ஆலே அஹ்மத் காதிரி பரகதி மெஹ்ரார்வி (1160-1262 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபுல் ஹசன் பர்த் ப்ஹுல்வாரவி (1191-1265 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அஹ்மத் சயீத் முஜத்திதி ராம்பூரி (1217-1277  ஹிஜ்ரி )
  • அல்லாமா பஜ்லே ஹக் கைராபாதி (1212-1278  ஹிஜ்ரி ) 
  • அல்லாமா அப்துல் ஹலீம் பிரங்கி மஹல்லி (1209-1285 ஹிஜ்ரி )
  • அல்லாமா பஜ்லே ரசூல் உத்மானி காதிரி பதாயூனி (1213-1289 ஹிஜ்ரி ) 
  • ஷாஹ் ஆலே ரஸூல் அஹ்மதி காதிரி பர்கத்தி மெஹ்ரார்வி (1209-1296 ஹிஜ்ரி )  
  • மவ்லானா நகி அலி கான் பரேல்வி (1246-1297 ஹிஜ்ரி )
இன்னும் எண்ணற்றோர் .அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக ! ஆமீன் .

ஹிஜ்ரி 14ஆம் நூற்றாண்டு :

  • மவ்லானா அப்துல் ஹை பிரங்கி மஹல்லி லக்னவி (1264-1304 ஹிஜ்ரி ) 
  • முப்தி இர்ஷாத் ஹுசைன் முஜத்திதி ராம்பூரி (1248-1311 ஹிஜ்ரி ) 
  • மவ்லானா பஜ்லே ரஹ்மான் கஞ் முராதாபாதி (1208-1313 ஹிஜ்ரி ) 
  • மவ்லானா குலாம் தஸ்தகீர் குஸூரி லாகூரி (மறைவு 1315  ஹிஜ்ரி )
  • மவ்லானா அப்துல் காதிர் உத்மானி காதிரி பரகதி பதாயூனி (1253-1319 ஹிஜ்ரி )
  • மவ்லானா ஹிதாயத்துல்லாஹ் ராம்பூரி ஜான்புரி (மறைவு 1326 ஹிஜ்ரி )
  • மவ்லானா கைருத்தீன் திஹ்லவி (மறைவு 1326  ஹிஜ்ரி )
  • மவ்லானா அஹ்மது ரிழா ஹனஃபி காதிரி பரகதி பரேல்வி (1272-1340 ஹிஜ்ரி )
  • ஷாஹ் அபுல் கைர் நக்ஷபந்தி திஹ்லவி (1272-1341  ஹிஜ்ரி )
  • ஸெய்யித் ஷாஹ் அலி ஹுசைன் அஷ்ரபி கச்சோச்சாவி (1266-1355  ஹிஜ்ரி )
  • ஷாஹ் மெஹர் அலி கோல்ராவி பஞ்சாபி (1274-1356 ஹிஜ்ரி )

இன்னும் எண்ணற்றோர் .அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக ! ஆமீன் .








  




Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 16 May 2015

தேவ்பந்திகளின் கெளஸ் !

மஹ்மூத் அல் ஹசன் சாஹிப் , மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியை 'கெளஸ் ஏ ஆசம் ' என்று அழைக்கின்றார் .


' அவர்தான் இரண்டாம் ஜுனைத் ,ஷிப்லி மற்றும் அபூ மஸூத் அன்சாரி ,
அவர்தான் ரஷீத் ஏ மில்லத் ஏ தீன் ,கெளஸ் ஏ ஆசம் ,குத்பே ரப்பானி  '


அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்த இஸ்லாமியர் கெளதுள் அஃலம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹூல் அஜீஸ் அவர்களை கெளது என்று அழைத்தால் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் உதவியாளர்கள் கிடையாது ,அவ்வாறு அழைப்பது ஷிர்க் ,பித் அத் என்று வஹாபிய கூச்சல் போடும் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் தங்களுக்கு மட்டும் ஒரு நியாயம் என்று கொள்கை கொண்டு தங்கள் முனாபிக் தனத்தை வெளிப்படுத்துகின்றனர் .


எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் . 
[தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]


யாருடைய பெயர் முஹம்மது ,அலி என்று உள்ளதோ அவர்களுக்கு எதன் மீதும் அதிகாரம் இல்லை.ஒரு நபியோ அல்லது வலியோ அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 41 ]

இந்த ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் வஹாபிய கொள்கைகளை இங்கு காணலாம் !!!


Marsiya Praising Rasheed Ahmad As Gauth


Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 13 September 2014

மஹ்மூதுல் ஹசன் மீது வழங்கபட்ட குப்ர் பத்வா


  மௌலானா ரஷீத் அஹ்மத் தனது நூலில் எழுதுகிறார் ,

" யாரேனும் ஒருவர் மர்ஸியா (இறந்தவர்களின் மீது புகழ்ந்து எழதப்படும் பாடல் )  எழுதினாலோ அல்லது படித்தாலோ அவர் ஃபாஸிக் (பாவி) "

[ நூல்- பத்வா ரஷீதீயா , வால்யூம் 2,பக்கம் 39 ]

ரஷீத் அஹ்மத் கங்கோஹி மேலும் எழுதுகிறார் ,

" கர்பலாவின்  ஷஹீதுகளின் மீது ஓதப்படும் அனைத்து மர்ஸியாக்களும் எரிக்கப்படவேண்டும் அல்லது புதைக்கப்படவேண்டும் "

[ நூல்-  பத்வா ரஷீதீயா ,பக்கம் 39 ,கராச்சி பதிப்பு ]

இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கை நூலான 'தக்வியத்துள் ஈமான் ' நூலுடன் சேர்ந்து வந்த துணை நூலான ' ஹாரிகுல் அஸ்ரார் ' என்னும் நூலில் மர்ஸியா எழுதுவதும் ,படிப்பதும் மஜூஸிகலின் வழக்கம் என்று எழுதியள்ளனர் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் .

மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி  மறைந்த பின்பு அவரது மாணவர் மஹ்மூதுல் ஹசன் ,மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியைப் புகழ்ந்து ஓர் மர்ஸியா எழுதினார் !!!

மௌலானா மஹ்மூதுல் ஹசன் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் 'ஷைகுல் ஹிந்த் ' உம் ,அகாபிர் எனப்படும் முன்னோடிகளில் ஒருவர் ஆவார் .
ஆச்சரியமாக மர்ஸியா அனுமதியில்லை என்ற ஷரத்து ,ஆகுமாக்கப்பட்ட செயலாகி விடுகின்றது  ! இது ஒருமுறை அல்ல பல முறை தேவ்பந்த் மூலம் வெளியிடப்பட்டுள்ளது .

இதோ அந்த மர்ஸியாவில் உள்ள சில வரிகள் , மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியைப் புகழ்ந்து  அவரது மாணவர் ஷைகு மஹ்மூதுல் ஹசன் எழுதியவை

தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் ஷைகுல் ஹிந்த் ஜனாப் மஹ்மூதுல் ஹசன் தனது எல்லா தேவைகளின் தீர்வு வழங்குபவராக தேவ்பந்திகளின் இமாமான ரஷீத் அஹ்மத் கங்கோஹியை நாடுகிறார் ,

' யாரிடம் நான் எனது தேவைகளை நிவர்த்தி செய்ய முகம் திருப்புவேன் !
எனது அனைத்து வெளிரங்க மற்றும் ஆன்மீக தேவைகளை நிறைவேற்றி வைப்பவர் மறைந்து விட்டார் ! "


கொளஸ் என்ற பதம் உதவி செய்பவர் ,துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பவர் என்று பொருள் தரும் .மௌலானா மஹ்மூதுல் ஹசன் மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை  கொளஸுல் அஃலம் என்கிறார் !!!


" அவர் தான் இரண்டாம் ஜுனைத் ,ஷிப்லீ ,இன்னும் அபூ மஸூத் அன்ஸாரி ,
அவர் தான் ரஷீத் ஏ மில்லத் ஏ தீன், கொளஸுல் அஃலம்,இமாமே ரப்பானி ! "


மௌலானா மஹ்மூதுல் ஹசன் மௌலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹியை  இவ்வாறு மட்டுமல்லாது , 'முரப்பியே கலாயிக் ' ,'மஸீஹா ஏ ஸமான் ','காசிம் ஏ பைஜ் யஜ்தாஹ் ' ,இஸ்லாத்தை நிறுவியதில் சமமானவர் ,அனைத்து படைப்புகளையும் வழிநடத்துபவர் ,முஹ்யத்தீன் ஜீலானி ,எல்லா நன்மைகளின் நீருற்று ,தன்னிகரில்லாதவர் , இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெருமதிப்பும் மரியாதையும் செய்யத் தகுந்த படைப்பு ,  என்றெல்லாம் வாய் வலிக்க எழுதியள்ளார் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் அகாபிர் . என்னே இவர்களின் நியாயம் ???

மேற்கண்ட சொற்களை ஒரு இஸ்லாமியர் ஒரு வலியின் சந்நிதானத்தில் வைத்து கூறினால் அவரது மீது உடனே இந்த தப்லீக் வஹாபிகள் ஷிர்க் ,குப்ர் பத்வாக்களை அள்ளி வீசுவர் ,ஆனால் அவர்களே அவ்வாறு கூறினால் அது தான் இஸ்லாமிய நடைமுறை !!!

தனது கவிதைத் தொகுப்பின் குறிப்பில் பின்வருமாறு எழுதுகிறார் ,

"எனது வழிகாட்டிகள் ,எனது ஆசிரியர்கள் ,எனக்கு எல்லா ஆரம்பமும் எல்லா முடிவுமாக உள்ளவர்கள் !
எனது தலைவர்கள் ,எனது எஜமானர்கள் ,எனது இளவரசர்கள் .
ரஷீதும் காசிம் ஏ ஹைராத் ,இருவரும் போற்றுதலுக்குரிய ஆசிரியர்கள் "


இந்த சொற்களை தேவ்பந்தி முப்திகளிடம் அனுப்பிய இம்மாதிரியான சொற்கள் குப்ரில் சேர்க்குமா எனக் கேட்டோம் ,இவை தேவ்பந்தி தப்லீக் முன்னோடிகளின் நூற்கலில் இருந்து எடுத்தவை என்று கூறவில்லை .

எல்லா தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தின் முப்திகளும் ஒருமித்த குரலில் தங்களது வஹாபிய விசுவாசத்தை வெளிக்காட்டும் விதமாக இது குப்ர் என்றனர் !!!

ஆக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் உலமாக்கள் தங்களது ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹசன் மீது தக்பீ ஃர் பத்வா கொடுத்துள்ளனர் .

கீழே உள்ள ஸ்கேன் ஆதாரங்களை காணவும்
Fatwa on Mahmoodul Hasan by Deoband

Fatwa on Mahmoodul Hasan by Deoband
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, 30 June 2014

அஸ் ஸவாரிமுல் ஹிந்தியா



ஹரம் ஷரீபின் மார்க்க அறிஞர்கள் தங்கள் "ஹுஸாமுல் ஹரமைன்" பத்வாவை வெளியிட்ட பின் தேவ்பந்தி வஹாபிகளின் சாயம் வெளுத்து விட்டது. பொது மக்களை குழப்பும் பொருட்டு தேவ்பந்தி வஹாபிகள், இமாம் அஹமத் ரஜா கான் பரேலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தேவ்பந்தி அறிஞர்களின் கூற்றுகளை தவறுதலாக மொழிபெயர்த்து விட்டார்கள் என வதந்திகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

அப்போது அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த மிகப்பெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞரான அல்லாமா ஹஷ்மத் அலி கான் அவர்கள் ,ஒருங்கிணைந்த இந்தியாவின் பல மார்க்க அறிஞர்களிடமும் , மேற்படி ஐந்து அறிஞர்களின் ( குலாம் அஹ்மத் காதியானி,மௌலவி அஷ்ரப் அலி தானவி,மௌலவி ரஷீத் அஹ்மத், மௌலவி காசிம் நானுத்வி,மௌலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி )  சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பற்றி கேட்டறிந்தார் .

ஒருங்கிணைந்த இந்தியாவைச் சார்ந்த 268 முன்னணி முப்திகள் தங்கள் பத்வாவை வெளியிட்டனர் .அனைவரும் உர்து , பார்சி , அரபி மொழி அறிந்தவர்கள் மேலும் மேற்படி ஐந்து அறிஞர்களின் ( குலாம் அஹ்மத் காதியானி,மௌலவி அஷ்ரப் அலி தானவி,மௌலவி ரஷீத் அஹ்மத், மௌலவி காசிம் நானுத்வி,மௌலவி கலீல் அஹ்மத் அம்பேத்வி )  சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்.

அவர்களிடம் இந்த ஐந்து அறிஞர்களின் நூல்கள்,பத்வாக்களை நேரடியாக அணுகவும் வசதி இருந்தது .அவர்களின் பத்வா தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.   சங்கைக்குரிய 268 உலமாக்கள் “அஸ்ஸவாரிமுல் ஹிந்தியா” என்ற தலைப்பில் மேற்கூறப்பட்டவர்கள் காஃபிர்கள்,முர்தத்துகள் என்று மார்க்கத் தீர்ப்பு ஹிஜ்ரி 1345ல் வழங்கியுள்ளார்கள்.


268 முப்திகளின் பட்டியலில் பிராங் மஹால்,ராம்பூர்,சிந்த், ஹைதராபத்,சூரத்,டில்லி,ஆக்ரா போன்ற நகரங்களின் முப்திகளும் அடங்குவர் .

இந்த பத்வாவுக்கு பின் தேவ்பந்தி வஹாபிகளின் வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடப்பட்டது .

Al Sawarim Ul Hindiyah Ala Makri Shyaatin Al Deobandiyah

Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, 6 June 2014

நஷ்ர் உத் தீப் நூலில் தேவ்பந்தி மோடிகள்


    இஸ்லாமிய புத்தகங்களை  திரித்து எழுதும் அவர்களின் நடைமுறையை தொடர்ந்து,தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இப்போது அவர்களின் தலைவர்களுள் ஒருவரால்  எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை திரித்துள்ளனர்!

மௌலவி அஷ்ரப் அலி தானவி எழுதிய நூல் நஷ்ர் உத் தீப் பி திக்ரில் நபிய்யில் ஹபீப். இந்த புத்தகத்தில் உள்ள சில கருத்துகளைக் கொண்டு தேவ்பந்திகள் சங்கடத்தில் உள்ளனர். ஏனெனில் அந்த கருத்துகள் அவர்களின் வஹாபிய முழக்கத்திற்கு எதிராக உள்ளது.

அல்லாமா முஹம்மத் அலி முஸ்தபா அவர்கள்  நஷ்ர் உத் தீப் புதிய பதிப்பில்(தாருல் இஷாஅத் ,கராச்சி,பாகிஸ்தான் )  தேவ்பந்திகளின் இந்த மோசடிகளை கண்டுபிடித்துள்ளார் . இங்கே இரண்டு புனைவுகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்த திரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் பணி தாருல் கிதாப் ,தேவ்பந்த் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது .

மோசடி 1

   அஷ்ரப் அலி தான்வி தேவ்பந்தி நஷ்ர் உத் தீப்-பின் முன்னுரையில் எழுதுகிறார் , " ஹிஸ்ன் ஏ ஹஸீன் நூலின் முன்னுரையில் எழுதப்பட்டதாவது புர்தா ஷரீபின் ஆசிரியர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் .எல்லா மருத்துவ உதவிகளும் வீணான நிலையில் அவர் பரக்கத்தை எதிர்பார்த்து புர்தா ஷரீபை இயற்றினார் .அவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணும் பாக்கியம் பெற்றார் . பெருமானார் அவர்கள் அவர் மீது தனது கையால் தடவினார்கள் , அவர் உடனே குணமடைந்தார்  "

[ நூல் -  நஷ்ர் உத் தீப் , பக்கம் 2 ]

அல்லாமா முஹம்மத் பின் முஹம்மத் அல் ஜஸ்ரி அல் ஷாபியி (இறப்பு 833 ஹிஜ்ரி ) தமது நூலான
ஹிஸ்ன் ஏ ஹஸீன் -ல் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார்கள் . இது பெருமானார் அவர்கள் தாஃபிஇல்  பலாஇ வல் வபாயி வல் கஹ்த்தி வல் மரளி வல் அலம் (இயற்கை சீற்றங்கள், நோய், வறட்சி, வியாதிகள் மற்றும் கவலைகளை விட்டும் விலக்குபவர் )   என்பது நிரூபணமாகிறது.

தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தின் மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி, தரூத் தாஜ் ஓதுவது கூடாது ஏனெனில் அதில் உள்ள தாஃபிஇல்  பலாஇ வல் வபாயி வல் கஹ்த்தி வல் மரளி வல் அலம் ஷிர்க்கான வார்த்தைகள் என்று தமது பத்வாவில் கூறியுள்ளார் .

[ நூல் - பத்வா ரஷீதியா, கிதாப் அல் இல்ம்,பக்கம் 169,தாருல் இஷாஅத் ]

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தின் பல அறிஞர்கள் இந்த பத்வாவுக்கு எதிராக எழுதியுள்ளனர் .இன்ஷா அல்லாஹ் அதை பின்னர் விரிவாக காண்போம் .

எப்போதெல்லாம் இது விஷயமாக தேவ்பந்தி தப்லீக் ஜமாத்திடம் விவாதிக்கப் பட்டதோ அப்போதெல்லாம் அவர்களுக்கு மௌலானா அஷ்ரப் அலி தானவி தமது நூலிலேயே இதை எழுதியுள்ளார் என்று அவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது .

இந்த ஆதாரங்களை எதிர்கொள்வது தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியது . அவர்கள் இந்த முன்னுரையை தமது புதிய பதிப்பில் இருந்து நீக்கி விட்டனர் .

மோசடி 2

        அத்தியாயம் 21ல் அஷ்ரப் அலி தானவி அரபியில் ஒரு கவிதையை எழுதி அதற்கான விளக்கத்தை உர்துவில் கொடுத்துள்ளார் .

அந்த கவிதை இவ்வாறு ஆரம்பிக்கிறது " தஸ்தகிரீ கிஜியே மேரே நபி, கஷ்மா காஷ் மே தும் ஹி ஹோ மேரே நபி "

[ நூல் - நஷ்ர் உத் தீப் , அத்தியாயம் 21, பக்கம் 194 ]

அதன் பொருள் " உதுவுங்கள் பெருமானே ! சிரமம் உண்டாகும் போது நீங்கள் மட்டுமே உதவ முடியும் ".

அது ஒரு நீளமான கவிதை மேலும் அஷ்ரப் அலி தானவி இஸ்திகாதா செய்து வந்தார் என்பதும் தெளிவாகும்.  இந்த ஆதாரம் தேவ்பந்தி தப்லீக் வாஹாபிகளிடம் இஸ்திகாதா அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று விளக்க அளிக்கப்பட்டது.

தேவ்பந்தி வாஹாபிகளின் கொள்கையின்படி இஸ்திகாதா ஷிர்க் என்பதால் , தங்களின் முன்னோடிகளில் ஒருவரான அஷ்ரப் அலி தனவியை முஷ்ரிக் என்று அழைக்க விரும்பாததால் , அவர்கள் இந்த முழு கவிதையும் புதிய பதிப்பில் இருந்து நீக்கி விட்டார்கள் .
 

Nashr ut Teeb fi Dhikr il Nabbiyal Habeeb

Nashr ut Teeb -Ashraf Ali Thanvi





  
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 23 April 2014

வஹாபிய வரலாறு - 3

இந்தியாவில் வஹாபிகள்
       அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினுடைய அடிப்படைக் கொள்கைக்குரிய நாயகர் தான் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்களை நம்மைப் போன்ற ஒரு சராசரி மனிதர் என்று , முதன்முதலில் இந்தியாவில் வெளிப்படுத்திய கூட்டம் இல்யாஸி தப்லீக் ஜமாத்தும் அவர்தம் அகாபிர்கள்.
          பெருமானார் அவர்களை ஒரு சாதாரண மனிதர் என்று சித்தரிக்கின்ற பிரச்சினை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்திய தேசத்தில் ஊடுருவியது.வரலாற்றினுடைய குறிப்புகளை சற்றே புரட்டினால் இந்த உண்மை விளங்கும்.கி.பி.1815ம் ஆண்டு இந்தியாவுக்குள் வர்த்தக அமைப்பாக காலடி எடுத்து வைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1885ல் இந்த தேசத்தில் மிக பலமாகக் காலூன்றியது.1885க்கு பின்னால் 1910ல் உத்திரபிரதெசம்,ரேபரேலி என்னும் கிராமத்தில் பிறந்தவர் செய்யத் அஹமத்,சிறுவயதில் தன் பெற்றோரை இழந்து அநாதையாகி தன் பிழைப்புக்கு வழி தேடி டில்லி மாநகரத்தை நோக்கி வந்தார். வந்தவர்,அவருக்கு சரியான பிழைப்பு கிடைக்காமல் பல நாட்கள் பசியும் பட்டினியுமாய் அலைந்து, அப்போது டில்லியில் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடைய மகனார், அல்லாமா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடைய மதரஸாவிலே ஒரு மாணவராக சேர்ந்தார். சில மாதங்கள் மட்டுமே அவருடைய மதரஸாவிலே கல்வி பயின்ற அவர், அல்லாமா அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவர்களிடத்தில் பைஅத்தும் பெற்று முரீதுடைய அந்தஸ்துக்கும் உயர்ந்தவர்.
    முரீது கொடுக்கப்பட்ட இவர் தன்னுடைய ஷைகால் தரீக்காவின் போதனைகள் பயிற்றுவிக்கப்பட்ட போது,அந்த போதனைகளை ஏற்க மறுத்தார் என்பதோடு அந்த போதனைகளை மிகமோசமாக விமர்சனமும் செய்தார்.ஆறு மாதம் கூட அல்லாமா அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி அவ்ர்களுடைய மதரஸாவிலே கல்வி பயிலாத இவர், அல்லாமா அப்துல் அஜீஸ் அவர்களுடைய சகோதரியின் மைந்தர்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவி என்பவரை தன்னுடைய சிந்தனைக்கு தோதாக வளைத்து மாற்றினார். அவரோடு மௌலவி அப்துல் ஹை லக்னவி என்பவரும்,கான்பூரைச் சேர்ந்த கராமத் அலி என்பவரும் இந்த நபரால் வளைக்கப்பட்டார்கள். இவருடைய போக்கை தெரிந்து கொண்ட அல்லாமா அப்துல் அஜீஸ் திஹ்லவி அவர்கள், அவரை மதரஸாவிலே இருந்து வெளியேற்றியதோடு மட்டுமல்லாமல்,தன்னுடைய ஸில்ஸிலாவில் இருந்தும் நீக்கினார்கள்.
       அங்கிருந்து நீக்கப்பட்ட அவர்,அப்போது டில்லியில் கூலிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த அப்துல் கரீம் பிண்டாரியின் கூலிப்படையில் சென்று இணைந்து கொள்கிறார். இந்த கூலிப்படையின் வேலை கூலிக்கு ஆட்களை கொலை செய்வது,வேலை இல்லாத பொழுது இரவில் கொள்ளை அடிப்பது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அப்துல் கரீம் பிண்டாரியை வைத்து தான், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கட்டுப்படாதவர்களை அடக்கினார்கள்,நிர்பந்தித்தார்கள். இந்த ரேபரேலியைச் சேர்ந்த செய்யித் அஹ்மத் கான் ,அப்துல் கரீம் பிண்டாரியின் கூலிப்படையில் ஆறு ஆண்டுகள் ஒரு அங்கமாக இருந்தார்.அப்போது தான் பிரிட்டிஷாருக்கும் செய்யத் அஹமத் கானுக்கும் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக,பிரிட்டிஷார் அவரோடு இணந்து முன்னூறு நபர்களை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள்.மக்கா சென்று திரும்பியதற்கு பின்னால் செய்யத் அஹமத் கானும்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவியும்,அப்துல் ஹை லக்னவியும் இன்னும் அவரோடு இணைந்த பல நபர்களும் டில்லியில் இருக்கின்ற சிறிய சிறிய மஸ்ஜிதுக்குள்ளெ நுழைந்து அங்கெ பயான் செய்கின்றோம் என்ற பேரிலே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை முதன்முதலாக நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் என்று கூறினார்கள்.
           இந்த கொள்கைக் குழப்பத்தின் துவக்கம் இந்திய தேசத்தில் 1910க்கு பிற்கு தான் ஏற்பட்டது.இதே பிரச்சனையை தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக கைர் முகல்லிது  வஹாபிகளான ஜாக்,நஜாத்,தௌகீத்,சலஃபீ,அஹ்லே ஹதீஸ்,ஜமாதே இஸ்லாமி போன்றவர்கள் பேசிய பொது கொந்தளித்த தமிழ் இஸ்லாமிய சமூகம் ,தமிழ் இஸ்லாமிய உலமா சமூகம்  இதை முதலில் வெளிப்படுத்திய தேவ்பந்த் தப்லிகீ ஜமாத் மீது இன்றும் வாய்மூடி மௌனமாய் இருப்பது வேதனையிலும் வேதனை .
                 இந்த கருத்து மோதலுக்குரிய விஷத்தை இவர்கள் மஸ்ஜிதுகளிலே பிரசங்கம் செய்த போது அப்பாவி மக்கள் திடுக்கிட்டார்கள்.விஷயம் டில்லியிலுள்ள பெரும் பெரும் உலமாக்கள்,முஃப்திகளினுடைய சிந்தனைக்கும்,கவனத்திற்கும் கொண்டு செல்லப் பட்ட போது,டில்லியிலுள்ள ஜாமியா மஸ்ஜிதில் தொண்ணூறு உலமாக்கள் திரண்டார்கள்.பெருமானார் அவர்களை ஒரு சாதாரண மனிதர் என்று பேசும் விஷயத்திற்கு ஆதாரத்தை கேட்ட போழுது அவர்கள் மழுப்பத்துவங்கினார்கள்,முன்னுக்கு பின் முரணாக உளறினார்கள்.இதனுடைய வெளியீடு அவர்கள் எந்த மஸ்ஜிதுகளிலும் ஏற்றப்படக்கூடாது, என்பதோடு அவர்கள் வழிகேடர்கள் என்ற ஃபத்வாவையும் வெளியிட்டார்கள்.
        இதே இயக்கம் தரீகத்துல் அஹமதியா என்ற பெயரிலே மீண்டும் செய்யத் அஹ்மத் கானைக் கொண்டு வெளிவந்தது.மக்கள் அவர்களை புறக்கணித்து,மஸ்ஜிதுகளை விட்டு விரட்டிஅடித்த போது,பல்வேறு இடங்களில் இவர்கள் கேவலப்படுத்தப்பட்டதற்கு பின்னால்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவியுடன் இருந்த ஒரு கூட்டம்,அவர்களும் மார்க்கம் பயின்ற ஆலிம்கள்,இந்த கொள்கையை இந்திய முஸ்லிகளும்,இந்திய இஸ்லாமிய உலமாக்களும் புறக்கணிக்கின்றனர், எனவே இந்த கொள்கையை தற்சமயத்திற்கு நாம் வெளிப்படையாக பேச வேண்டாம்,தற்போது இந்த விஷயங்களையெல்லாம் மறைவாக வைத்துக்கொள்வோம்,முதலில் மனிதர்களை நம் வசமாக ஈர்த்து அவர்களை நம் அபிமானத்திற்கு உரியவர்களாக திருப்பியதற்குப் பின்னால்,அவர்களிடம் மெல்ல,மெல்ல சன்னச்சன்னமாக தனிமையில் அவர்களுக்கு நாம் போதிப்போம் என்ற ஒரு கருத்து அவர்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட போது,அந்த கருத்தை அவர்களிலேயே சிலர் ஏற்க மறுத்தார்கள்.
       அவ்வாறு ஏற்க மறுத்தவர்கள் அவர்களில் இருந்து பிரிந்து டில்லியில் இருந்து வெளியேறி பஞ்சாபை நோக்கி செல்கிறது,அவர்கள் தான் நவாப் சித்திக் ஹசன் கான் பொபாலைச் சேர்ந்தவர்,காதி வஹீதுஸ்ஸமான் அமிர்தரஸை சேர்ந்தவர்.இவர்கள் வெளிப்பட்டு இதே வஹாபியக் கொள்கையை நாங்கள் பகிரங்கமாகத் தான் பேசுவோம்,பெசுவது சரிதான் என்று சொன்னால் அதை ஏன் மக்களிடத்தில் மறைத்து பெசவேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து பகிரங்கமாக பேசத் துவங்கினார்கள்,அது மட்டுமல்ல அவர்கள் தங்களுக்குத் தாங்களே ‘அஹ்லே ஹதீஸ்’ என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்கள்.
        இந்த நிலையில் வஹாபிய கொள்கையை மறைத்து பேச வேண்டும் என்று பிரிந்த கூட்டம் செய்யத் அஹ்மத்,மௌலவி இஸ்மாயில் திஹ்லவி இவர்களோடு இன்னும் சிலர் சேருகின்றனர்.அவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு நபர் மௌலவி கலீல் அஹமத் அம்பேட்டி,மௌலவி காசிம் நானூத்வி,மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி. இதில் மௌலவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியும்,மௌலவி அஷ்ரஃப் அலி தானவியும் அல்லாமா முஹாஜிர் மக்கி ரஹ்மதுல்லாஹி அவர்களிடம் முரீதாகவும்,கலீஃபாக்களாகவும் இருந்தார்கள்.
   ரஷீத் அஹமத் கங்கோஹியிடம் பத்து ஆண்டுகள் வரை மார்க்க கல்வி பயின்ற ஒரு மாணவர் மௌலவி இல்யாஸ் வளர்ந்து வாலிபர் ஆனபொழுது,அவருடைய சிந்தனைக்குள் இருந்து, கற்பனைக்குள் இருந்து இதே வஹாபிய கொள்கைக்கு உரிய ஒரு இயக்கம் ஒருவாயிற்று. அந்த இயக்கத்திற்கு அவர்களால் வைக்கப்பட்ட பெயர் தான் ‘தப்லீக் ஜமாத்’.
            



Related Posts Plugin for WordPress, Blogger...