Showing posts with label shah waliullah. Show all posts
Showing posts with label shah waliullah. Show all posts

Saturday, 31 December 2016

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 1



பித்னாவின் ஆரம்பம்  (ஹிஜ்ரி 1239 - 1823 ஆண்டு ) க்குப்  பின்

வேற்றுமை தோன்றியதன் காரணமும் அதன் ஆரம்பமும் ஓர் சுருக்கமான அறிமுகம் :

Undivided India before partition

சிராஜுல் ஹிந்த் அல் முஹத்தித் ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  [ பிறப்பு .1745  - இறப்பு  1823 ஆண்டு ]


ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித்  திஹ்லவி  (ரலியல்லாஹு அன்ஹு ) [பிறப்பு.1703  - இறப்பு.1762 ஆண்டு ] அவர்களின் மூத்த மகனார் . ஷாஹ் அப்துல் அஜீஸ் அவர்கள் தமது தந்தையாரின் இறப்பின் பொழுது 17யே வயது  நிரம்பியவர்களாக இருந்தார்கள் .
அவர்கள் தமது தந்தையாருக்குப் பின் ஹதீது ஆசிரியராகப் பொறுப்பேற்று ,பின்னர் டெல்லியின் புகழ்பெற்ற முஹத்தித் ஆக விளங்கி(தமது தந்தையைப் போன்றே ) ,இந்தியாவின் புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞராக  விளங்கினார்கள் .

இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு)  அவர்களுக்கு நான்கு ஆண் மக்கள் . அனைவரும் தமது தந்தையாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமது காலத்தின் சிறந்த மார்க்க அறிஞராக  விளங்கினார்கள் .  அவர்களின் பெயர்கள் முறையே ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) , ஷாஹ் ரபீயுத்தீன் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) , ஷாஹ் அப்துல் காதிர்  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) மற்றும் ஷாஹ் அப்துல் கனி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) .

குறிப்பு : பின்குறிய மூன்று சகோதரர்களும் தங்களது மூத்த தமையனார் ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மாணாக்கர் ஆவர் .

பித்னாவின் ஆரம்பம் 

ஷாஹ் அப்துல் கனி  (ரஹ்மத்துல்லாஹி அலைஹி )  அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது .அதற்கு முஹம்மத் இஸ்மாயில் திஹ்லவி என்று பெயரிட்டார் .
Taqwiyatul Iman
                                                         
 அந்த குழந்தை வாலிபன் ஆனதும்  ஓர் நூல் எழுதினான் . அதன் பெயர் " தக்வியத்துள் ஈமான் " .  இந்த நூல் முதன் முதலில் அச்சில் வெளியான ஆண்டு 1825 .அது முதல்  இந்தியாவில் பிரிவினையின் நெருப்பை கொளுத்தி விட்டது .

 இஸ்மாயில் திஹ்லவியின் ஆசிரியர் செய்யித் அஹ்மத் ரேபரேலி [பிறப்பு.1786 - இறப்பு.1831 ஆண்டு ] : 

இவர் ஷாஹ் வலியுல்லாஹ் மற்றும் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹும்  அஜ்மயீன் ) ஆகியோரின்  நெறிமுறைகளின்படி நடந்த உண்மையான மாணவர் அல்ல .தமது ஆசிரியர்கள் கற்றுத் தந்த போதனைகளை விட்டும் வெகுதூரம்   விலகிச் சென்றார் . இவரதும் ,இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை மறுத்து ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு)  தமது கருத்தை பதிவு செய்துள்ளார்கள் .

Anwar-e-Aftab-e-Sadaqat

[ஆதாரம்  - நூல்  : அன்வார் ஏ அப்தாப் ஏ ஸதகாத் , பக்கம் 617-620, கரீம் ப்ரெஸ் ,லாகூர் , முஹம்மத் காஜி பஜ்லே அஹ்மத் லூதியான்வி நக்சபந்தி முஜத்திதி ] 

இந்தியாவில் முஸ்லிம்களின் மத்தியில் வேற்றுமைகளும் , பித்னாவும் உருவானதன் மூல காரணம் இந்த இஸ்மாயில் தெஹ்லவி .

Grave of Ismail Dehlawi Wahabi

முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி அல் தமிமீயின்  "கிதாபுத் தவ்ஹீத் " நூலின் உர்து மொழிபெயர்ப்பு தான் " தக்வியத்துள் ஈமான் " .

இஸ்மாயில் திஹ்லவியின் கொள்கைகளும் ,போதனைகளும் 

முகம்மது காசிம் நானோத்வி [மறைவு - ஹிஜ்ரி 1297 - 1879ஆண்டு ]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஸஹ்ரான்பூர் மாவட்டத்தில் தேவ்பந்த்  என்னும் ஊரில் ஒரு அரபி மதரஸாவை ஸ்தாபிதம் செய்தார் . தமது மாணவரும் ,வஹாபிய கொள்கையுடையவருமான ரஷீத் அஹ்மத் கங்கோஹி [மறைவு - ஹிஜ்ரி 1323/1905 ஆண்டு ] உடன் இணைந்து இஸ்மாயில் தெஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை தமது மதரஸாவில் பயிலும் மாணவருக்கு போதிக்கலானார் .

இந்த தேவபந்தி மதரசாவின் வஹாபிய கொள்கைகள் பின்னர் அஷ்ரப் அலி தானவியால் [மறைவு -ஹிஜ்ரி 1362 / 1943 ஆம் ஆண்டு ] முன்னெடுக்கப்பட்டது .

எனவே இஸ்மாயில் தெஹ்லவியை இந்திய துணைக்கண்டத்தில் வஹாபிஸத்தின் தந்தை என்று அழைத்தால் அது மிகையாகாது . இநதிய இஸ்லாமிய சமூகத்தில் மார்க்க கொள்கை வேற்றுமைகளுக்கும் ,பித்னாக்களுக்கும் மைய புள்ளி இஸ்மாயில் தெஹ்லவி .

மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி 'மஜல்லா அஹ்லே ஹதீத் ' 
பத்திரிக்கையின் ஆசிரியர் 1973ல்  கூறுகின்றார் , தம்மை பொறுத்தவரை ,165 ஆண்டுகளுக்கு முன்பு ,பஞ்சாப் அம்ரித்சரின் இஸ்லாமிய சமூகம் ,இன்று 'பரேல்வி ' என்று அழைக்கப்படும் மக்களின் அதே கொள்கைகளைத் தான் கொண்டிருந்தனர் . இன்னும் முஹம்மது ஜாபர் தான்சேரியை பொறுத்தமட்டில் ,200 ஆண்டுகள் முன்பு வரை ஒருங்கிணைந்த பஞ்சாபில் வஹாபிகளின் எந்த அடையாளமும் இல்லை அல்லது இஸ்மாயில் தெஹ்லவியின் கொள்கைகளை பின்பற்றுவோரும் இல்லை  .

 [குறிப்பு : வட இந்தியாவை பொறுத்தவரை ஜியாரத் செய்து வலிமார்களிடம் உதவி தேடினால் நீங்கள் பரேல்வி . மேற்கூறிய இருவரும் அஹ்லே ஹதீத் என்னும் மத்ஹபை பின்பற்றாத வஹாபிகள்  . ]

 மவ்லானா செய்யித் அஹ்மத் பிஜ்நோரி காசிமி அவர்கள் கூறுகின்றார்கள் ,

Photobucket

"வெட்கக்கேடான விஷயம் என்னெவெனில் இந்த புத்தகம் [தக்வியத்துள் ஈமான் ] காரணமானாக சுமார் 20 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய முஸ்லிம்களில் ,தொண்ணூறு சதவீதம் ஹனபிக்கள் , இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டு போனார்கள் "
[நூல் -அன்வாருல் பாரி , பக்கம் 107, நஸீருல் உலூம் , பஜ்னுர் ]

ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களின் மாணாக்கரில்   இஸ்மாயில் தெஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை கடுமையாக எதிரத்தவர்கள்  முஹக்கிக் அல் அஸர் அல்லாமா     பஜ்லே ஹக் கைராபாதி , மவ்லானா மெஹபூப் அலி தெஹ்லவி, முஃபதி சத்ருத்தீன் ஆஸுர்தாஹ்  மற்றும் இமாம் அஹ்மத் ரிழா கான் காதிரி [மறைவு - ஹிஜ்ரி 1340 - 1921ஆம்  ஆண்டு ]  அவர்களின் ஷெய்கும் ,முர்ஷிதுமான  அல்லாமா அஷ்ஷைகு ஷாஹ் ஆலே ரஸூல் மெஹ்ரார்வி ஆகியோர் ஆவர்  ,










Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 24 December 2016

ஷாஹ் வலியுல்லாஹ்வின் இஸ்திகாதா

வஹாபிய தேவ்பந்தி தப்லீக்  ஜமாத்தின் மற்றோரு வேடிக்கையான மோசடிக் கூற்றுகளில் ஒன்று தாங்கள் இமாமுல் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு) அவர்களின் மஸ்லக்கைச் சார்ந்தவர்கள் என்பதாம் .

இனி  இந்த வஹாபிய பிர்காவின்  முன்னோடிகள் கூறுவதைப்  பாருங்கள்

இஸ்மாயில் திஹ்லவி கூறுகிறார் :
Taqwiyatul Iman Ismail Dehlavi Wahabi

எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால்  குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் .
 [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

இஸ்மாயில் திஹ்லவி எழுதுகிறார் ,

"கருமங்களை பூர்த்தியாக்குவது ,சிரமங்களை நீக்குவது, ஆபத்து நேரங்களில் உதவி வழங்குவது,இவை  அனைத்தும் அல்லாஹ்வுக்கே மட்டுமே உரியன, மேலும் எந்த நபியும்,வலியும் ,ஷைகுமார்களும்,ஷஹீதும்,ஜின்னும்,மலக்கும் எந்தவிதமான உதவியும் செய்ய இயலாது. யாரேனும் ஒருவர் அவர்களின் மீது சபதம் செய்தாலோ அல்லது ஆபத்து நேரங்களிலும் அவர்களை  நினைவில் கொண்டாலோ, அவர் ஒரு முஷ்ரிக் ஆவார்.அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும்,இவர்கள் சூயமாக சக்தியுடையவர்கள் என்றாலும் சரி,அல்லது இவர்கள் அல்லாஹ்வினால் சக்தி வழங்கப்பட்டு உதவுகிறார்கள் என்றாலும் ,எந்த நிலையிலும் இது ஷிர்க் "
[தக்வியதுல் ஈமான்,பக்கம் 10 ,தில்லி பதிப்பு ]  

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு) அவர்கள் எழுதிய நூல் " அத்யாப் அல் நக்ஹம் பீ மத்ஹி  ஸய்யிதில்  அரபி வல் அஜம் " .
இது நான்கு அரபுக் கஸீதாக்களும் அவற்றின் விளக்கங்களை பார்சியில் உள்ளடக்கியதும் ஆகும் . இதை அன்னாரின் முரீது முஹம்மத் அமீன் காஷ்மீரி அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அன்னார் எழுதினார்கள் .
இதில் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  ) அவர்களை விளித்து தவஸ்ஸுல் ,இஸ்திகாதா ,இஸ்தினாத் போன்ற மார்க்கம் அனுமதி அளித்த செயல்களை செய்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் .

* தமது முதல் கஸீதா ஸஹாபா தோழர் ஸவாத் இப்னு காரிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இயற்றிய அரபிக் கசீதாவை போல் இருப்பதாகக் கூறும்
ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்ல்லாஹு  அன்ஹு)  அவர்கள் ,இந்த கவிதையை பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து அதன் விளக்கத்தை பார்சியில் எழுதினார்கள் .இந்த விளக்கவுரை முடிவுற்ற ஆண்டு 24 ரபீயுத்தானீ  1156 (17 ஜூன் 1743ஆம்  ஆண்டு )

* இரண்டாவது கஸீதா 'ஹம்ஜியா' , கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'ஹம்ஜா'வில் முடியும் . இது 1157/1745 ஆம் ஆண்டும் ,விளக்கவுரை 1762 ஆம் ஆண்டும் முடிவுற்றது .

* மூன்றாவது 'தாயியா ' .  கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'தா' வில்  முடியும் .இது  மஃ ரிபா உடைய விளக்கங்கள் கொண்டவை .

* நான்காவது 'லாமியா'. கவிதை அடியின் ஒவ்வொரு முடிவும் 'லா மில்  முடியும் .

வஹாபிய தேவ்பந்தி தப்லீக்  ஜமாத்தின் மீது மிகப்பெரும் பலாவை இறக்கியுள்ளார்கள் .

                                       
                                         
atyab al-nagham fi mad'Hi sayyidi'l arabi wa'l ajam



எல்லாம் வல்ல நாயன் நம்  உயிரினும் மேலான கண்மணி நாயகம் ﷺ  அவர்களின் பொருட்டால் காப்பானாக ! ஆமீன் !
Related Posts Plugin for WordPress, Blogger...

Sunday, 19 October 2014

ஷாஹ் வலியுல்லாஹ்வும் இஸ்திகாதாவும் - 2


                 இன்னும் மற்றொரு அவ்ராத் ஆன  'துஆ யே ஹைதரி'  ஜிஷ்தி-ஸப்ரி தரீக்காவின் மிக முக்கியமான அவ்ராத் ஆகும் .  ஜிஷ்தி -ஸப்ரி சில்சிலாவின் மஷாயிகுமார்களின் கூற்றுப்படி இந்த அவ்ராத் மிகப் பெரும் இறைநேசரான 'ஷைகுல் ஆலம் அப்துல் ஹக் ருதால்வி (ரலியல்லாஹு அன்ஹு) ' அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது . அன்னார் ஹிஜ்ரி 836ல் இவ்வூலகை விட்டும் மறைந்தார்கள் .

அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை ஓளி வீசும் சுவனச் சோலையாக ஆக்குவானாக. ஆமீன் !!!

இந்த துஆ ஜிஷ்தி-ஸப்ரி தரீக்காவில் மிகவும் விஷேசமான துஆ ஆகும் . எனினும் பிற சில்சிலாவைச் சார்ந்த ஷைகுமார்களும் இதை ஓதுவர் .

இந்த துஆ பாமர முஸ்லிம்கள் ஓதுவது ஆகாது என்று ஸூபியாக்கள் கூறியுள்ளனர் .

பின்வரும் ஸ்கேன் ஷைகு ஷைகுல் ஆலம் அப்துல் ஹக் ருதால்வி (ரலியல்லாஹு அன்ஹு)  அவர்களின் மல்பூஜாத்தைக் கூறும் 'அன்வாருல் உயூன் ' நூலாகும் .  இது மிகவும் அரிதான ஒரு நூல் .

இதில் துஆ யே ஹைதரி உள்ளதைக் காணுங்கள் .
Anwarul uyoon

Dua e Haidari Anwarul uyoon

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தன்னுடைய நூலான ''அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' வில் தாம் ஷைகு அபூ தாஹிர் குர்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இருந்து 'கிர்காஹ் ' என்னும் ஸூபியாக்கள் அணியும் கம்பளி ஆடையை வாங்கியதாகவும் ,மேலும் ஜவாஹிர் கம்ஸா வின் விஷேச ஓதும் முறையைக் கொண்டு அனுமதிஅளிக்கப்பட்டதாக எழுதியுள்ளார்கள் .

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் தம்முடைய ஹதீதுகளின் ஸனதை ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களிடம் தாம் மக்காவில் தங்கியிருந்த காலத்தில் பெற்றார்கள் .

ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீதுக் கலையின் இஜாஸாவை தமது மகனார் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு வழங்கினார்கள் . அதன் பின் ஷைகு அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி இந்த இஜாஸாவை பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு வழங்கினார்கள் . அவர்களுள் ஷாஹ் இஷாக் திஹ்லவியும் ஒருவர் . இவர் தான் பின்னர் வஹாபிகளின் ஷைகுகல் ஹதீத்களில் ஒருவர் . நசீர் ஹுசைன் திஹ்லவி ஷாஹ் இஷாக் திஹ்லவியிடம் இருந்து ஹதீதுக் கலையை கற்றார் .

வஹாபிகள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் மீது 'நாத் யே அலி'  ஓதுவதற்காக  முஷ்ரிக் என்று அவதூறு கூறுவதை நிறுத்த வேண்டும் . ஏனெனில் அது ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களையும் முஷ்ரிக் என்று கருத வேண்டி வரும் . நவூது பில்லாஹ் !!!

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் நூலான 'அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' இரு பகுதிகளை உடையது .

முதல் பகுதியில் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் தஸவ்வுப் தரீக்கா என்னும் ஞானவழிப் பாட்டையின் சில்சிலாவை விளக்கி உள்ளார்கள் .
இரண்டாம் பகுதியில் ஹதீது மற்றும் பிக்ஹ் கலையில் தமது ஸனதை விளக்கி உள்ளார்கள் .

ஷைகு அபூதாஹிர் குர்தி அல் மக்கி அவர்களோ ,ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி அவர்களோ ஷியா அல்ல . இதை ஓதும் பிற மார்க்க அறிஞர்களின் பெயர்களை நீங்கள் ஸ்கேனில் காணலாம் .

வலிமார்கள் மீது இத்தகைய அவதூறு கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பானாக .
அனைவரும் அஹ்லுஸ் சுன்னத் ஜமாத்தின் அகீதாவில் நின்றுமுள்ள சத்தியமான இஸ்லாமிய அறிஞர்கள் .

'நாத் யே அலி'  யா அலி என்னும் சொற்கள் உள்ளன . ஒரு ஸுன்னி முஸ்லிம் இம்மாதிரியான இஸ்திகாதவைக் கொண்டு அழைக்கும் போது அமீருல் மூஃமினீன்  அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ அல்லது கௌதுல் அஃலம் (பைஸ்லா ஹப்த் மஸ்லா ) அவர்களோ அல்லது ஷைகு அஹ்மது ஜர்ரூக் (புஸ்தா அல் முஹத்திதீன் )அவர்களோ அல்லது ஷைகு அஹ்மது அல்வான் (ரத்துல் முஹ்தார் ) அவர்களோ சுயமாக உதவுவதாகக் கருதுவதில்லை .

இம்மாதிரி அழைப்பது வழிகேடர்கலான ராபிதி ஷியாக்களின் வழக்கம் என்பது தவறான வாதம் . ஷியாக்களில் பல பிரிவுகள் உண்டு அவர்கள் இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை விட உயர்வாகக் கருதும் ஒரு பிரிவும் உண்டு . அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பெருமானார் அவர்களை விட உயர்வானவர்களாகக் கருதும் வழிகேடும் உள்ளது .

இனி தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளின் மௌலவி ரஷீத் அஹ்மது கங்கோஹியின் பத்வா ரஷீதியாவில் உள்ள ஒரு பத்வாவைக் காண்போம் .

கேள்வி : ஹதீதின் பிரகாரம் ஒருவர் தனிமையில் காட்டில் இருந்து சிங்கத்தை நினைத்து அஞ்சினால் ,அவர் யா தானியால் (அலைஹிவஸலாம் ) என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூற வேண்டும் . இது அனுமதிக்கப் பட்டதா ,இல்லையா ? இம்மாதிரியான இஸ்திகாதா அனுமதிக்கப்பட்டால் அது ஷிர்க்கா இல்லையா ?

பதில் : இந்த ஹதீத் சரியென்றால் , அதன் பொருள் அல்லாஹ் தானியால் அலைஹிவஸலாம் அவர்களின் பெயரின் மீது அத்தகைய விளைவை சாட்டியுள்ளான் .


Fatwa Rasheediya

(இந்த ஹதீத் ழயீபான ஹதீத் ஆகும் .இன்னும் மௌலவி ரஷீத் அஹ்மத் இதை ஷிர்க் என்று கூறவில்லை )


ஆக இத்தகைய இஸ்திகாதாவை எந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் ஷிர்க் என்று கூறவில்லை கர்னுஷ் ஷைத்தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி அல் தமீமி தனது வஹாபிய பித்னாவை தொடங்கும் வரை .

ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மதுல்லாஹி அலைஹி 'அத்யாப் உன் நகம் பி மத் சைய்யதில் அரபி வல் அஜம் ' என்னும் நூலை அரபியில் எழுதியுள்ளார்கள் . அது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை புகழ்ந்தும் அவர்களின் மீது பேரன்பு வைப்பதைப் பற்றிய நூல் . இதற்கான விளக்கவுரையை பார்சியில் எழுதியுள்ளார்கள் .


atyab un naghm fi madh sayyidil arab wal ajam

atyab un naghm fi madh sayyidil arab wal ajam  - Chapter 11

atyab un naghm fi madh sayyidil arab wal ajam  - Chapter 11


அதில் 11ம் அத்தியாயத்தில் (நபி பாக் ஸல்லல்லாஹு அலைஹி வா ஸல்லம் கீ பார்காஹ் மே ஆஜிஸி வ பரயாத் பே பயான் மேன் ) அன்னார் பெருமானார் அவர்களை இவ்வாறான சொற்களைக் கொண்டு எழுதுகின்றார்கள் :

" நாங்கள் நம்பிக்கை கொள்ளும் ஒருவர் "
"துன்பங்களை நீக்கும் ஒருவர் "
" தாங்கள் தான் எனது மனம் பெரும் துன்பத்தில் உள்ள போது எனது கஷ்டங்களை நீக்குபவர் "


இவ்வாறு எழுதிய பின்பு அதற்கு பின்வரும் விளக்கவுரையை எழுதுகின்றார்கள் ,

' பல்வேறு விஷயங்களில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் புனித ஆன்மாவிடத்திலே  உதவி தேடுவது இன்றியமையாதது .'




இந்த நூல் உர்துவில் பீர் கரம் ஷாஹ் அஸ்ஹரி  ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .
Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, 18 October 2014

ஷாஹ் வலியுல்லாஹ்வும் இஸ்திகாதாவும் - 1


    ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் தன்னுடைய 'அல் இன்திபாஹ் பி சலாசில் உல் அவுலியா அல்லாஹ் ' என்னும் நூலில் எழுதுகிறார்கள் தாம் ஷத்தாரியா சில்சிலாவில் (தரீக்காவில்)  இஜாஸத் என்னும் அனுமதி பெற்றதாகச் சொல்கிறார்கள் . அவர்கள் இந்த இஜாஸத்தின் சில்சிலா என்னும் சங்கிலித் தொடர் வரிசையை அறிவிக்கிறார்கள் .அதில் அனுமதி வழங்கிய பல்வேறு பெரியார்களின் பெயர்களை அறிவிக்கிறார்கள் . அதில்  இந்தியாவில் ஷத்தாரியா சில்சிலாவின்  தலைமை வகித்த ஷைகு கவுஸ் குவாலியர் அவர்களின் பெயரும் அடங்கும் .

ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் இந்த சங்கிலித் தொடர் மூலம் தனக்கு ஷத்தாரியா தரீக்காவில் கிடைத்த அவ்ராதுகளையும் ,விர்துகளையும் குறிப்பிட்டுள்ளார்கள் . அதில் 'துஆ யே ஸைபி' மற்றும் 'ஜவாஹிர் கம்ஸா' ஆகியவை அடங்கும் .

Al Intibah fi Salasil ul Auliaullah’

Dua e Saifi

Nad e ali

'துஆ யே ஸைபி ' எனப்படும் துஆ அதை ஓதுவதற்கும்,கற்பித்துக் கொடுக்கவும்  அனுமதி பெற்ற ஷைகுமார்களால் தனது மூரீதுக்கு கற்றுக் கொடுக்கப்படும் . துஆ யே ஸைபியின் இறுதிப் பகுதியில் 'நாதே அலி ' என்னும் பகுதியில் 'யா அலி ,யா அலி ,யா அபூ துராப் '  போன்ற சொற்கள் வருகின்றன .

தேவ்பந்தி தப்லீக் வஹாபிகளுக்கு இதை விட இஸ்திகாதாவுக்கு ஆதாரம் வேண்டுமா? தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் இனியாவது ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களை தங்களைச் சார்ந்தவர் என்று முன்னிறுத்துவதை நிறுத்த வேண்டும் .

இனி அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் இந்த அகீதாவை ஏற்றுக் கொண்டால் இனி அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாத்தைச் சார்ந்த முஸ்லிம்களை முஷ்ரிக் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் .

'ஜவாஹிர் கம்ஸா ' என்னும் நூல் வேறு துஆக்களின் தொகுப்பாகும் . இதில் உள்ள 'துஆ யே ஹைதரி' ன் இறுதிப் பகுதியில் 'யா அலி ,யா அலி ,யா அபூ துராப் ' போன்ற சொற்கள் வருகின்றன .

இனி தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகள் இதை கருத்தில் கொண்டு இஸ்திகாதா மீதான தங்களின் வஹாபிய தீர்ப்பை ஷாஹ் வலியுல்லாஹ் அவர்கள் மீது செலுத்தட்டும் .

மேலும் ஷாஹ் வலியுல்லாஹ் தமது மற்றொரு நூலான 'அன்பாஸுல் ஆரீபீன்' ல் குறிப்பிடுகின்றார்கள் தமது தந்தையும் ஷைகுமான ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள்  ஒவ்வொரு வருடமும் மௌலித் கொண்டாடுபவர்களாகவும் அதில் நியாஜ் என்னும் நேர்ச்சை செய்பவராகவும் இருந்தார்கள் என்று .

அதே நூலில் பிறிதொரு இடத்தில் தமது தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள் தனது ஆசிரியரின் கபுருக்குச் சென்று குரான் ஓதியதாகவும்,அப்பொழுது அன்னார் சூராவின் ஒரு பகுதியை ஓதிய பின்பு மற்றொரு கபுரில் இருந்து ' எமது கபுர் அதில்லை .எனினும் அங்கு குரான் ஓதிய பின்பு இங்கு வரவும் ' என்று அசரீரி வந்ததாகவும்,எனவே ஷாஹ் அப்துர் ரஹீம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் இரு கபுருகளிலும் குரான் தனித்தனியாக ஓதியதாக பதிவு செய்துள்ளார்கள் .

'ஜவாஹிர் கம்ஸா ' எனப்படுவது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல ஸுபி ஷைகுமார்களால் ஓதப்படும் பல்வேறு துஆக்களின் தொகுப்பு . இதனை தொகுத்தவர்கள் ஷைகு கவுஸ் குவாலியரி .
அன்னார் அந்த துஆக்களுக்கு ஓரக் குறிப்பும்,விளக்கமும் பார்சியில் எழுதியுள்ளார்கள் .

அதை உர்துவில் பலரும் மொழிபெயர்த்துள்ளனர் .எனினும் மிர்ஸா பைக் நக்ஷபந்தியின் மொழிபெயர்ப்பு பிரசித்தி பெற்றது .

துஆ யே ஸைபி ஜவாஹிர் கம்ஸாவில் உள்ள அத்தகைய ஒரு துஆ .இதை ஓதுவதற்கு பல ஷரத்துகள் என்னும் நிபந்தனைகள் உள்ளன .அதில் ஒன்று துஆ ஏ ஸைபி ஓதும் முன் 'நாதே அலி' ஓதுவதாகும் .

இந்த துஆவின் 'நுகாத்'  படி 'நாதே அலி' ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு துஆ யே ஸைபி க்கு முன்னும் ,பின்னும் ஓத வேண்டும் .

அந்த ஷரத்துகளை இங்கு காணலாம் .


Jawahir Kamsa

Dua e Saifi Condition Jawahir Kamsa

ஆக துஆ யே ஸைபி ஓதும் நபர்,முதலில் நாதே அலி ஓதுவார் .

ஜவாஹிர் கம்ஸா முழுமையாக ஓத அனுமதி பெற்ற நபர் ,நாதே அலியும் ஓதுவார் ,ஏனெனில் நாதே அலி ஜவாஹிர் கம்ஸாவில் உள்ள பல்வேறு துஆக்களில் நின்றுமுள்ளது . 

ஜவாஹிர் கம்ஸாவுடன் இணைந்து உள்ள நாதே அலியின் ஸ்கேன் பின்வருமாறு.


Nade Ali Jawahir Kamsa

 
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 27 August 2014

ஷாஹ் வலியுல்லாஹ்வின் நடைமுறைகள்


                தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள் இஸ்லாமியரைக் குழப்புவதற்காக தங்களது மஸ்லக் (கடைபிடிக்கும் வழிமுறை)  ஷைகுல் ஹிந்த் அஷ்ஷாஹ் அஷ்ஷைகு ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்களது வழிமுறைதான் என்று வாய் வலிக்கக் கூறி நாங்களும் அஹ்லுஸ் சுன்னத் வால் ஜமாஅத் தான் எனப் பிதற்றித் திரிவர் .

தப்லீக் ஜமாத்தின் வஹாபிய கொள்கைகள் :
1. எந்த முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வின் படைப்புகளாகவும்,அடியாராகவும் ஏற்று பின்னர் அவர்களை வசீலாவாக்கி (இடைப்பொருள்) உதவி கோரி,நேர்ச்சை,காணிக்கை செலுத்தினால் குப்ரில் அபுஜஹலுக்கு ஒப்பாவார் . [தக்வீயதுல் ஈமான்,பக்கம் 7 மற்றும் 27]

2 . பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.
[ தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59 ]



3.மீலாத் ஷரீப்,மிஹ்ராஜ் ஷரீப் ,கியார்வீன் ஷரீப்,உர்ஸ் ஷரீப்,கத்தம் ஷரீப் ,சைலும்,பாதிஹா,ஈசாலே சவாப் இவை ஷரியத்திற்கு மாற்றமாகவும்,கெட்ட பித்அத்களாகும்,மேலும் இவை ஹிந்துக்களின் நடைமுறையாகும்.[பதாவா அஷ்ராபியா,பாகம் 2,பக்கம் 58.பதாவா ரஷீதியா பாகம் 2 பக்கம் 144 மற்றும் 150,பாகம் 3 பக்கம் 93,941 ]     


இனி ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் நடைமுறை வஸீலா,இஸ்திகாதா,இஸ்திஆனா ,இஸ்தம்தாத் உர்ஸ்,கந்தூரி ,மௌலித்,நேர்ச்சை,    ஆகிய விஷயங்களில் என்னவாக இருந்தது என்பதை கீழே தக்க ஆதாரங்களுடன் காண்போம்  .

                                  
Anfas al Arifeen-Shah Waliullah Muhaddith Dehalvi
                  

நூல்                -       அன்பாஸ் அல் ஆரீபீன்
ஆசிரியர்      -       ஷைகுல் ஹிந்த் அஷ்ஷாஹ் அஷ்ஷைகு ஷாஹ்
                                 வலியுல்லாஹ் முஹத்தித் திஹ்லவி            (ரஹ்மதுல்லாஹி   அலைஹி )                  
நூல் விளக்கம் -   அன்னாரின் தகப்பனார் அஷ்ஷாஹ் அஷ்ஷைகு அப்துர்  ரஹீம் திஹ்லவி   ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது வரலாற்றைக் கூறும் நூல் .



1.            ஷாஹ் வலியுல்லாஹ்  ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுதுகிறார்கள் , " எனது தந்தையின் ஷைகு சையத் அப்துல்லாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹி  இறந்த போது , எனது தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் உடல் சுகவீனம் காரணமாக அன்னாரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள இயலவில்லை . பின்னர் சில நாட்கள் கழித்து உடல் சீரானதும் சையத் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்ட ஒரு நபரை அழைத்துக் கொண்டு சென்றார்கள். கபரஸ்தானை அடைந்ததும் அந்த நபருக்கு சையத் அப்துல்லாஹ் அவர்களின் மஜார் எதுவென்று குழப்பம் உண்டானது . அவர் ஒரு கபூரைச் சுட்டிக்காட்டினார் .

ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள் அந்த கபூரின் அருகே அமர்ந்து குரான் ஷரீப் ஓதத் துவங்கினார்கள் . அப்போது திடீரென மற்றொரு கபூரில் இருந்து இவ்வாறு சத்தம் வந்தது ' எனது கபூர் இங்கு உள்ளது .எனினும் இப்போது முந்த வேண்டாம் ,அங்கு ஓதி முடித்த பின் வரவும்'    . பின்னர் எனது தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள் சையத் அப்துல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கபூரின் அருகில் அமர்ந்து குரான் ஓதலானார்கள் . அன்னாரின் கிராஅத்தில் ஏற்பட்ட சிற்சில தவறுகளை சையத் அப்துல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்கள் திருத்தினார்கள் "
                                  
Anfas al Arifeen , page 56,57
              
[  நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம்  57 ]



2.               " சில சமயங்களில் காஜா குர்து ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் காஜா பாகிபில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்களின் உர்ஸ் விழாவை எடுத்து  நடுத்துவார்கள். எனது  தந்தையார்
பல்வேறு சமயங்களில் மக்கள் காஜா குர்து ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு உதவுவதை விவரித்துள்ளார்கள் .சிலர் 'நான் அரிசி வழங்க பொறுப்பேற்கின்றேன் ', என்பர் சிலர் 'நான் இறைச்சி வழங்க பொறுப்பேற்கின்றேன்', என்பர் , மேலும் சிலர் ' நான் கவ்வாலி ஏற்பாடு செய்ய பொறுப்பேற்கின்றேன் ' என்பர் . "

                     
 
Anfas al Arifeen , page 64,65
 [  நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம்  65 ]

குறிப்பு :     காஜா காஜா குர்து ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் காஜா பாகிபில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்களின்  மகனும் ,கலீபாவும் ஆவார்கள் . காஜா பாகிபில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இமாமே ரப்பானி முஜத்தித் அல் பதானி  ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஷைகு ஆவார்கள்.

சிந்தை தெளிவடைந்தோருக்கு வலிமார்களின் உர்ஸ் வைபவம் ஏதோ தற்கால நடைமுறை அல்ல என்பது விளங்கும் . இன்னும் பல்வேறு கிதாபுகளில் இதற்கு முன்னரும் உர்ஸ் ,கந்தூரி நடைபெற்றதற்கான எண்ணற்ற ஆதாரங்ககள் உள்ளன. 

இன்னும் இதில் உள்ள முக்கிய குறிப்பாகிறது, மக்கள் உர்ஸ் வைபவத்தின் போது கவ்வாலி ஏற்பாடு செய்துள்ளனர் . உர்ஸ்,கந்தூரியின் போது ஸமா வாசிப்போரை கவ்வாலிகள் எனப்படும் . இமாமே ரப்பானி முஜத்தித் அல் பதானி  ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் 'மக்தூபாத்' நூலிலும் ஸமாவை அனுமதித்து எழுதியுள்ளார்கள் . இன்னும் டாதா கஞ்ச் ஹுவேரி  ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய நூலான 'கஷ்ப் அல் மக்ஜூப்' ல் இமாம் ஜுனைத் பகுதாதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸமா கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள் . 



3.                     ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுதுகிறார்கள் , " எனது தந்தையார் அவர்கள் கூறுவார்கள் ,அவர்கள் காஜா பேரங் ரஹ்மதுல்லாஹி அலைஹி  அவர்களின் கலீபாக்களுள் ஒருவரை 
கண்டுள்ளார்கள் . அன்னார் மிகவும் வயது குன்றியவர்களாக இருந்தார்கள் எனினும் அவர்களின் முகத்தில் நூரானியத் ஓளி வீசிக் கொண்டிருந்தது . அன்னார்  'ஷைகி'  என்று பிரபலமாக அறியப்பட்டார்கள் . அவர்கள் உர்ஸ் வைபவம் நடத்துபவர்களாக இருந்தார்கள் . நான் அதில் ஆறு- ஏழு வயதிருக்கும் போது கலந்து கொண்டிருக்கிறேன் ."

                                  
Anfas al Arifeen , page 82,83

[  நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம்  82 ]



4.                            ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுதுகிறார்கள் , " எனது தந்தையாருக்கு ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உர்ஸ் வைபவம் நடத்தும் போது உணவு சமைக்க தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை. அந்த உணவைக் கொண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரூஹுக்கு நியாஸ்(நேர்ச்சை ) செலுத்த நாடினார்கள் . எனவே உலர்ந்த பருப்புகளையும்,வெல்லத்தையும் எடுத்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரூஹுக்கு நியாஸ்(நேர்ச்சை ) செலுத்தினார்கள் . 
 
அன்று இரவு கனவில்  பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் பல விஷயங்கள் வழங்கப்படுவதாகவும் அதில் இந்த உலர்ந்த பருப்புகளையும்,வெல்லத்தையும்  வழங்கப்படுவதாகவும் கண்டார்கள் .   பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைக் கண்டு மகிழ்ச்சியுற்று ,இதில் இருந்து சிறிதளவை எடுத்து ஸஹாபாக்களிடம்  பகிர்ந்து அளிப்பதைக் கண்டார்கள் ".

மேலும் எழுதுகிறார்கள் , " இது போன்ற பலரைக் கொண்டு இம்மாதிரியான சம்பவங்கள் விவரிக்கப்படுள்ளது என்றாலும் உணமையென்னவேனில் இந்த சம்பவம் என் தந்தையிடம் நிகழ்ந்தது"

 ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி எத்துணை பெருமையுடன் இச்சம்பவத்தை விவரிக்கிறார்கள் என்று காணுங்கள் !!!. இந்த தேவ்பந்தி தப்லீக் வாஹாபிகளோ மீலாத் கூடாது என்பதுடன் அவர்களின் கூட்டத்தாரை மௌலித் வைபவங்களை விட்டும் தவிர்க்கச் சொல்கின்றனர் . என்னே இவர்களின் மஸ்லக்  ???
                   
Anfas al Arifeen , page 106

[  நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம்  106 ]


5.                     ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தந்தையார் ஒரு விருந்து உண்ண சென்ற சம்பவத்தை எழுதுகிறார்கள் , " திடீரென ஒரு பெண்மணி ஒரு தட்டில் இனிப்பு சோறுடன் வந்து கூறினால் தான் தனது கணவர் வீடு திரும்பினால் மக்தூமல்லாஹ் தியா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தர்காவில் உள்ள ஏழைகளுக்கு இனிப்பு சமைத்து வழங்குவதாக ஒரு மன்னத் (இறைவன் மீது சத்தியம் செய்வது)  செய்துள்ளதாக கூறினாள் . அவள் மேலும்  சில மக்கள் இரவின் இந்த நேரத்தில் கூட, தர்காவில் தற்போது இருந்தால் தனது நசர் நிறைவேறும் என்று தான் இறைவனிடம் வேண்டியதாகக் கூறினாள் ."

ஆக மன்னத் (இறைவன் மீது சத்தியம்) செய்வது, தர்காவில் ஏழைகளுக்கு உணவு வழங்குதல் ஷாஹ் அப்துர் ரஹீம்  ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் ஆகுமானதாக இருந்தது .
                              
Anfas al Arifeen , page 112
[  நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம்  112 ]



6.                      ஷாஹ் வலியுல்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுகிறார்கள் , " எனது தந்தையார் ஷைகுல் அக்பர் முஹியத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் . அவர்கள் கூறுவார்கள் 'புஸுஸல் ஹிகம்'  முழுவதையும் குரான்,ஹதீஸ் கொண்டு என்னால் விளக்க முடியும் என்று "

                      
Anfas al Arifeen , page 181
[  நூல் - அன்பாஸ் அல் ஆரீபீன் ,பக்கம்  181 ]


 
Related Posts Plugin for WordPress, Blogger...