Showing posts with label hifzul imaan tamil. Show all posts
Showing posts with label hifzul imaan tamil. Show all posts

Saturday, 6 October 2018

காஸிம் நாணோத்வியின் தவஜ்ஜு

மவ்லானா முனாஜிர் ஹஸன் ஓர் ஆச்சரியமான சம்பவத்தை விவரிக்கிறார் . ஒரு சிலர் சட்டா மஸ்ஜிதில்(தேவ்பந்த் )  குழுமியிருந்தனர் . மவ்லானா யாகூப் (தேவ்பந்த் மத்ரஸாவின் பொறுப்பாளர் ) அந்த கூட்டத்தில் இருந்தார் . மவ்லானா யாகூப் கூறினார்கள் 

" இன்று காலை தொழுது கொண்டிருக்கும் பொழுது எனது உயிர் மாண்டு விடும் நிலையில் இருந்தது . மக்கள் அவரிடம் என்ன காரணம் என்று வினவினர் ? . அவர் கூறினார் சூரா முஸம்மில் ஓதிய பொழுது ,எனது இதயம் ஓர் விந்தையான சக்தியின் காரணமாக திடீரென இறுகி ,எனது ரூஹ் எனது உடலை விட்டும் வெளியேற இருந்தது . ஆனால் எப்படியோ இந்த நிலை சிறிது நேரத்தில் மாறியது .

தொடர்ந்து அவர் கூறினார் ,தொழுகை முடிவுற்றவுடன் இந்த விஷயம் குறித்து ஆழ்ந்து சிந்தித்தேன் . என்னிடம்  சொல்லப்பட்டது அந்த சம்பவம் நடந்த பொழுது மவ்லானா காஸிம் நாணோத்வி மேராத் என்னும் ஊரில் இருந்து என்னை நோக்கி தவஜ்ஜு செய்தார்கள் . இதன் காரணமாக எனது ரூஹ் எனது உடலை விட்டும் வெளியேறும் நிலைக்கு சென்று எனக்கு சங்கடம் ஏற்பட்டது .

மேலும் தொடர்ந்து

" எல்லாவற்றையும் அலசி ஆராயும் புத்தி உடையோர் இதனை எங்கனம் புரிந்து கொள்வர்  . தேவ்பந்திற்கும் ,மேராத் நகரங்களுக்கும் இடையே அதிக தொலைவு இருந்தாலும் , இந்த தூரம் தடை ஏற்படுவதற்கு ஓர் காரணமல்ல " . 

சவானெஹ் காசிமி


[ நூல் - சவானெஹ் காசிமி , பாகம்  1, பக்கம் 345 ]

ஆய்வு :  

இந்த விந்தையான சம்பவத்தை எங்கனம் புரிந்து கொள்வது ? இல்யாஸி தப்லீகி தேவ்பந்திகள் விளக்கம் அளிப்பார்கள் என்று எண்ணுகின்றேன் . மவ்லானா யாகூப் மிகவும் உயர்ந்த தரஜா உடையவர் போலும் . தொழுகை முடிந்து ,நடந்த சம்பவம் பற்றி ஆழ்ந்து யோசித்த நொடிப் பொழுதில் ,எல்லாமே அவருக்கு காண்பிக்கப்பட்டது .

சில மாதங்களோ ,சில மணி நேரங்களோ  அல்ல சில வினாடிகளில் வேறு ஓர் ஊரில் இருக்கும் மவுலானா காஸிம் நாணோத்வி தான் இதை செய்தார் என்று அறிந்தார் .

சிறிதேனும் வெட்கம் இருந்தால் தேவ்பந்திகள் தங்களது  தலையை தொங்கிக் கொள்ளட்டும் . இதுதான் தங்கள் பிர்காவின் உலமாக்களை பற்றிய அவர்களின் நம்பிக்கை .

ஆனால் ஈருலக இரட்சகர் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் பற்றிய அவர்களது நம்பிக்கை பின் வருமாறு 

" பல விஷயங்களில் ,நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள் தவஜ்ஜு செய்தார்கள் ,அவர்கள் கவலையுற்றார்கள் ,அமைதி காத்தார்கள் . இப்க் உடைய சம்பவம் நிகழந்த பொழுது (உம்முல் மூஃமீனின் அன்னை ஆயிஷா رضي الله عنها அவர்கள் மோதிரம் தொலைத்ததும் ,இஸ்லாத்தின் எதிரிகள் அவதூறு பேசியதும் )   ,நாயகம் தவஜ்ஜு செய்தார்கள் எனினும் எதையும் அறிய முடியவில்லை . ஒரு மாதம் கழித்து வஹீ மூலமே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது " 

[ நூல் - ஹிப்ளுள் ஈமான் , பக்கம் 7,அஷ்ரப் அலி தான்வி  ] 

உங்களது பிர்காவின் உலமாக்களை பெருமை பிதற்ற எத்துணை கதைகளை உங்கள் நூற்களில் எழுதியுள்ளீர்கள் . நொடிப்பொழுதில் தவஜ்ஜு செய்யும் உங்களது உலமாக்கள் ???


இல்யாஸி தப்லீகி தேவ்பந்தி வஹாபிகளே ,இன்னும் எத்துணை எத்துணை ஆதாரம் அளித்தால் ,உங்கள் முன்னோடிகள்  கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  மீது அவமரியாதை செய்தனர் என்றும்  ,அவர்களின் சங்கையையும் ,கண்ணியத்தையும் குறைத்தனர் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் ???

மூஃமீன்களே ,நடுநிலை வேஷம் போட்டு உலக ஆதாயம் தேடும் உலமாக்களே , உண்மையில் நாம் நாளை கியாமத் வேளையில் உச்சந் தலையில் சூரியன் அனல் கக்கும் வேளையில் ,இப்பாவிகளுக்கு மன்றாடும் ஷபீயுல் முதனீபீன் தாஹா ரஸூல்   
صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ஷபாஅத்தை  யாசிப்பீர்களேயானால் , கண்மணி நாயகத்தை அவமரியாதை செய்யும் முனாஃபிக்களை நேசிப்பதை விட்டும் விலகுங்கள் .

இத்துடன் இஸ்மாயில் திஹ்லவி "தக்வியத்துல்  ஈமான் " நூலில் எழுதியுள்ளதையும் காண்க 

" அல்லாஹ்வையன்றி வேறு யாராகிலும்  மறைவான ஞானம்  உடையவர் என்று நினைத்தாலோ , அல்லது வேறு இடத்தில நடப்பவற்றை அறிகின்றார் என்று நினைத்தாலோ , அவர்கள் சுயமாக அறிந்தார்கள் என்றோ , அல்லது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அறிவிக்கப் பட்டது என்று நம்பிக்கை கொண்டாலும் ,எல்லா நிலையிலும் அது ஷிர்க் "

[நூல் - தக்வியத்துள் ஈமான் , பக்கம் 10 ] 
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, 8 August 2014

அஷ்ரப் அலி தானவியின் மாதச் சம்பளம்


 தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் 1947க்கு முன் இரு அரசியல் குழுக்களாகப் பிரிந்திருந்தனர் .முதல் குழுவுக்கு ஷைக் ஹுசைன் தான்த்வி தலைமையெற்றிருந்தார் . அவர் காந்திஜியை முழு மூச்சாகப் பின்பற்றினார் . அவர் கதர் ஆடை அணிபவராக இருந்தார் .மேலும் மரித்தோரை கதர் துணி கொண்டே கபன் ஆடை அணிவிக்க வேண்டும் என்று பத்வாவும் வெளியிட்டார் . இது தான் கதர் ஆடை அணிய வேண்டி வலியுறுத்திய காந்திஜியின் மீது இவர் கொண்ட அன்பின் வெளிப்பாடு !!! இந்த குழு காங்கிரஸ் ஆதரவாளர்கள் .

மற்றொரு குழுவுக்கு ஷைக் ஷப்பிர் அஹ்மத் தலைமை தாங்கினார் . இவர் ஷைக் ஹுசைன் தான்த்வியின் அரசியல் நிலைப்பாடுக்கு எதிராக இருந்தார் . இந்த குழு முஸ்லிம் லீக்கிற்கு ஆதரவாக செயல்பட்டது .

இரண்டு குழுக்களுமே தேவ்பந்த் மதரசாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர் . இரு குழுக்களுமே பல முறை சொற் தகராறிலும் ,ஒருவரை ஒருவர் தாக்கி எழுதியும் வந்தனர் .

அவ்வாறு எழுதப்பட்ட ஒரு பதிலில் , அவர்களது சொந்த ஆவணமான 'முகாலாமதுஸ் சதரியன் , பக்கம் 10-11 ல்' பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது ,

" மௌலானா ஷப்பிர் அஹ்மத் தேவ்பந்தி ,தலைவர் ஜமியத்துல் இஸ்லாம் கல்கத்தா, அவர்கள் மௌலானா ஹிப்ழூர் ரஹ்மான் க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் எழுதினார்கள் , மௌலானா அஷ்ரப் லை தானவி இரு தரப்பும் மரியாதை அளிக்கும் நபர் . அவரைப் பற்றி பலர் கூறியுள்ளனர் , அதாவது அவர் மாதம் 600 ருபாய் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பெற்று வந்தார் என்று "

தேவ்பந்திகள்  அவர்களுக்கு மத்தியில் சண்டையிடும் போது அவர்கள் உண்மையை வெளியே சொல்லி விடுகிறார்கள்!

MUKALAMUTUSSADARIAN

MUKALAMUTUSSADARIAN

MUKALAMUTUSSADARIAN


 
Related Posts Plugin for WordPress, Blogger...

Wednesday, 6 August 2014

அஷ்ரப் அலி தானவியின் உயில்


தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் 'ஹக்கீமுள் உம்மத்' அவரது வாழ்க்கை முழுவதும் பணத்தை  நேசித்தார் !

அவர் கூறினார் , " என்னிடம் 10,000 ருபாய் இருந்தால் நான் அதை மக்களிடம் விநியோகித்திருப்பேன் , மக்கள் தானாக வஹாபிகளாகி விடுவர் "
     
     [ நூல்- அல் இபாததுல் யௌமியா ,மௌலவி அஷ்ரப் அலி தானவி ]

ஆனால் அவரின் மரணத் தருவாயில் அவரது இறுதி சாசனம் என்னவாக இருந்தது ?
அவரது சுயசரிதையில் வாசித்து தெரிந்து கொள்ளலாம் .

மௌலவி அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,

" நான் இறந்த பிறகு எனது (முதல்) மனைவியைப் பார்த்துக் கொள்ளுங்கள் . இருபது நபர்கள் தலா ஒரு ருபாய் பங்களித்து நான் இறந்த பின் எனது மனைவிக்கு கொடுக்க வேண்டும் ...

இந்த எளிமையான மனிதன் கடந்த ரமழானில் 1334 ஹிஜ்ரியில்  இன்னொரு பெண்ணை திருமணம் செய்தேன்.  அவருக்கும் மாதம் இருபது ருபாய் வருமாறு ஏற்பாடு செய்யுங்கள் அல்லது பத்து ருபாய் ஆனாலும் சரிதான் . நீங்கள் என் மரணத்திற்கு பிறகு ,என் இரு மனைவிமாருக்கும் மாதாந்திரம் பதினைந்து  ரூபாய்  விநியோகிக்க முடியும் என்றாலும் சரிதான் ! "

ஆக இது தான் தனது நூலான ஹிப்ளுள் ஈமானில் பின்வருமாறு கூறிய மௌலவி அஷ்ரப் அலி தானவி அந்திம நிலை ,

'அல்லாஹுதஆலாவால் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவும்,மறைவான ஞானமும் விலங்குகளுக்கும்,மதழைகளுக்கும்,பைத்தியக்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.'

  [ஹிஃப்ஸுல் ஈமான், பக்கம் 7 ]

தனது இழிவான கருத்துகளாலும் ,பெருமானார் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவமரியாதை செய்தததினாலும்,மக்கா மதீனாவைச் சார்ந்த 33 இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாலும் ,இந்தியாவைச் சார்ந்த 268  இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாலும்  அஷ்ரப் அலி தானவியின் மீது குப்ர் பத்வா வழங்கப்பட்டது .





Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, 4 August 2014

அஷ்ரப் அலி தானவி இறைநேசரா? – 2

துரோகங்கள்:

1. சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை போதித்த, வஹ்தத்துல் வுஜூது சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றுக் கொண்டு அவர்களின் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமாக செயல்பட்டுக் கொண்டிருந்து குருத் துரோகம் செய்துவிட்டார்.

2. இஸ்லாமியர்கள் அனைவரும் நாட்டுக்காக ஜிஹாத் செய்ய வேண்டும் என்று உலமாக்கள் கட்டளையிட்ட போது, அதை ஏற்றுக் கொள்ளாது நம்மை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டது. அவர்களிடமிருந்து அதற்காக மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டது. கீழ்காணும் ஆதாரத்தைப் பாருங்கள்!

மௌலானா மர்ஹும் தானவி (காலம் சென்ற மௌலானா அஷ்ரப் அலி தானவி) யின் சகோதரர் சி.ஐ.டி.யாக குற்றப் புலனாய்வுத் துறையில் பெரிய அதிகாரியாக இறுதிவரை இருந்தார். அவர் பெயர் மஜ்ஹர் அலி என்பதாகும்.

 [நூல்: மக்தூபாத்தே ஷைகு இரண்டாம் பாகம், பக்கம் 297-299. ஆசிரியர்: ஹுசைன் அஹ்மத் மதனி]

மௌலவி ஹிப்ஜுர் ரஹ்மான் சாகிபுக்கு பதில் தரும் வகையில் கல்கத்தா ஜம்இய்யத்துல் இஸ்லாம் சபைத் தலைவர் மௌல்வி ஷப்பீர் அஹ்மத் சாகிப் தேவ்பந்தி கூறியதாவது:

'இதோ பாருங்கள்! எங்களைச் சேர்ந்தவர்களாலும் உங்களைச் சேர்ந்தவர்களாலும் பெரும் சான்றோரெனவும், தலைவரென்றும் ஒப்புக் கொள்ளப்பட்டவர் மௌலானா அஷ்ரப் அலி தானவி. அவருக்கு அரசாங்கத்திடமிருந்து மாதந் தோறும் அறுநூறு ரூபாய் தரப்பட்டு வந்ததென்று அவரைப் பற்றி சிலர் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு.'

[நூல்: மகாலிமத்துஸ் ஸத்ரைன் (தலைவர்களின் பேச்சு) பக்கம் 10, 11.]

தேவ்பந்திலுள்ள நத்வத்துல் உலமா நிறுவனத்தின் நோக்கம் என்னவென்பதைப் பற்றி அவர்களின் பத்திரிகையான அன்னத்வா இவ்வாறு கூறுகிறது.

'ஆலிம்களின் முக்கியக் கடமை ஆங்கிலேய ஆட்சியின் அருட்கொடைகளை நன்கறிந்து இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையை வளர்ப்பதேயாகும். '

[நூல்:  அன்னத்வா, பக்கம் 5 ஜூலை 1908]

முழு இஸ்லாமிய உலகத்திற்கும் விரோதமாக, நாட்டிற்கு விரோதமாக ஆங்கில அரசின் கைக்கூலியாக செயல்பட்ட அஷ்ரப் அலி மகானா? சொல்லுங்கள்.

3. இறுதி நபியான முஹம்மத் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபி என்று ஏற்றுக் கொண்டு விட்டு, இல்லை இல்லை நானும் ஒரு ரஸூல்தான் என்று ஒப்புக் கொண்டு பிரகடனப்படுத்தியது.

4. சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை, ரஸூலின் முஹப்பத்தைப் பற்றி பேச, படித்துக் கொடுக்க என்று சம்பளம் பெற்றுக் கொண்டு அங்கு தேவ்பந்திய வஹ்ஹாபிய விஷக் கொள்கையை கான்பூர் மற்றும் ஏனைய மக்களுக்கு மத்தியில் பரப்பியது.

இது போன்ற எண்ணற்ற நம்பிக்கைத் துரோகங்கள் அஷ்ரப் அலி தானவியால் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்டுள்ளன.

கொள்கைகள்:

1. 'ஜைது கூறுவதைப் போன்று பெருமானாரின் பரிசுத்தக் குணாதிசியங்களில் அவர்களுக்கு இல்முல் ஙைப் (மறைவான விஷயத்தைப் பற்றிய ஞானம்) உண்டு எனத் திட்டப்படுத்தப்படுவது உண்மையான ஒன்றாயிருக்குமேயானால், இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் யாதெனில், இங்கு ஙைப் (மறைவானவற்றை பெருமானார் அறிவார்கள் என்னும் விஷயத்தில்) கொஞ்சத்தை மட்டும் அறிகின்றார்களா? அல்லது சகல மறைவான விஷயங்களையும் (பெருமானார்) அறிகிறார்களா? என்பதைப் பார்க்க வேண்டும். இனி கொஞ்சத்தை மட்டும்தான் அறிகிறார்கள் எனில், இதில் பெருமானாருக்கு என்ன தனிப்பட்ட விசேஷமிருக்கிறது? இத்தகைய மறைவான ஞானம்தான் ஜைது, உமர் போன்ற ஏன்? ஒவ்வொரு மதளைக் குழந்தைக்கும், பைத்தியக்காரர்களுக்கும், பின்னும் சகல பிராணிகளுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் கூடத்தான் இருக்கின்றது.'

[ஆதாரம்: ஹிப்ளுல் ஈமான் பக்கம் 7, 8. தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுக்களும் தக்க பதில்களும் பக் 156, 157.]
 
Hifzul Iman, Page 7

அதே ஹிப்ளுல் ஈமானில் மூன்றாவதாக ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, 'ஜைது என்பவர் சொல்கிறார்: இல்முல் ஙைப் (மறைவான விஷய அறிவு) இரு வகைப்படும். ஒன்று பித்தாத்து (பிறரால் கொடுக்கப்படாமல் தனக்குத் தானே உள்ள அறிவு) இந்தக் கருத்துப்படி அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் ஆலிமுல் கைபாக (மறைவான விசயத்தை அறிந்தவராக) ஆக முடியாது. மற்றது பில் வாஸித்தா (பிறரால் அறிவித்துக் கொடுக்கப்பட்டதன் மூலம் அறிவது). இந்தக் கருத்துப்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஆலிமுல் ஙைப் – மறைவான சங்கதிகளை அறிந்தவர்களாய் ஆவார்கள். ஜெயிது இப்படிச் சொல்வதும், இம்மாதிரி நம்பிக்கை வைப்பதும் எப்படி? (சரியா, இல்லையா?) விளக்கிக் கூறுங்கள். நற்கூலி கொடுக்கப்படுவீர்கள்' என்ற கேள்விக்கு அஷ்ரப் அலி தானவி விடை எழுதியதில் இறுதியாக 'மேலே கூறப்பட்டவைகளினால் ஜைதின் கொள்கையும், அவரின் வார்த்தையும் ஆதிமுதல் அந்தம் வரையும் தவறானது. மார்க்க ஆதாரங்களுக்கு முரணானது என்பதும் தெளிவாகிவிட்டது. யாரும் அதை நம்புவதும் கூடாது. ஜைது தவ்பாச் செய்து சுன்னத்தை (மார்க்கத்தை)ப் பின்பற்றுவது அவசியமாகும்'.

இதிலிருந்து அஷ்ரப் அலி தானவி அல்லாஹுத்தஆலாவிற்கு தாத்திய்யான இல்முமில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அதாயிய்யான இல்முமில்லை என்றும் பதிலளித்திருக்கிறார்.

இது குப்ரான வார்த்தை இல்லையா? இந்த மாதிரியான குப்ரான வார்த்தைக்காக வேண்டித்தான் மக்கா, மதீனா உலமாக்கள் அவர் மீது ஹுஸாமுல் ஹரமைன் ஷரீபைன் என்ற தலைப்பில் குப்ரு பத்வா வெளியிட்டனர். எந்த ஒரு முஸ்லிமும், முஸ்லிமல்லாதோரும் இத்தகைய வாசகத்தை தமது தலைவர் மீது எடுத்தெழுத மாட்டார். இத்தகைய கீழ்த்தரமான கொள்கையைக் கொண்டவர்தான் இந்த அஷ்ரப் அலி தானவி.

2. சுவர்க்க நகைகள் (பிஹிஷ்திஜேவர்) என்ற நூலில் குப்பர் -ஷிர்க் சம்பந்தமான விளக்கம் என்ற தலைப்பில் கீழ்காண்பவற்றை குப்ர், ஷிர்க் என்கிறார்.

ஒரு பெரிய மனிதர் அல்லது ஒரு பீரைப் பற்றி அவர்கள் நம்முடைய எல்லா நிலைமைகளையும், எல்லா நேரத்திலும் அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விசுவாசம் கொள்வது, தூரமான இடத்திலிருந்து யாரையும் அழைப்பதும் அவ்வாறு அழைப்பது அவருக்குத் தெரியுமென்று எண்ணுவதும், (அல்லாஹ்வைத் தவிர வேறு) யாரிடமாவது தமது கோரிக்கைகளை வேண்டுவது, யாருக்கேனும் 'ஸஜ்தா' செய்வது, யார் பெயரிலாவது நேர்ச்சை செய்து மிருகங்களை வளர்த்து வருவது- அல்லது அவர் பேரால் பலி கொடுப்பது, (அல்லாஹ் அல்லாமல் ) வேறு யாருக்காவது நேர்ச்சை நேர்வது, கப்ரையோ அல்லது வேறு ஸ்தலத்தையோ வலம் சுற்றி வருவது, பிறரின் முன்னால் தலை தாழ்த்துவது-குனிவது, சிலைபோல் ஆடாமல் அசையாமல் நிற்பது, எவரது பெயரிலாவது நேர்ச்சை செய்து குழந்தைகளின் காது, மூக்கை குத்துவது, காதில் வாளி அல்லது மூக்குத்தி போட்டு வைப்பது, எவரது பெயரிலாவது நேர்ச்சை செய்து புஜத்தில் காசை கட்டி வைப்பது அல்லது கழுத்தில் கயிறு போடுவது, பூமாலையிடுவது, பூவால் பின்னப்பட்ட (பூ முக்காடு) 'ஸிஹ்ரா' முகத்திலே கட்டுவது, அலீ பக்ஷ் -ஹுஸைன் பக்ஷ் அப்துந் நபி போன்ற பெயர்களை வைப்பது, எந்தப் பெரியாரின் பெயரையும் (வஜீபாவாக) தினம் வழமையாக ஜெபித்து வருவது, அல்லாஹ்வும் ரஸூலும் நாடினால் இன்ன காரியம் ஆகிவிடும் எனக் கூறுவது, உருவப்படம் வைப்பது,எந்தப் பெரியாரின் படத்தையும் 'பரக்கத்' என்று கருதி வைப்பதும் அதற்கு மரியாதை செய்வவது போன்றவை குப்ர், ஷிர்க் என்று கூறுகிறார்.

 [நூல்:  -சுவர்க்க நகைகள் பக்கம் 74-77]

இதே கருத்தைத்தான் தஃலிமுத்தீன் (தமிழ்) பாகம் 1 பக்கம் 33-38 வரையில் ஷிர்க், பித்அத் என்று கூறுகிறார்.

3. பித்அத் -கெடுதலான சடங்குகள்-செயல்கள் சம்பந்தமான விளக்கம் என்ற தலைப்பில் கப்ருகளின் மீது ஆடம்பரமாக விழா நடத்துவது, விளக்கு எரிப்பது, பெண்கள் அங்கு போவது, போர்வை போர்த்துவது, கப்ருகளின் மீது கெட்டியான கட்டிடம் கட்டுவது, கப்ருகளை முத்தமிடுவது,கூடு-கொடி கட்டுதல், எந்த ஒரு பொருளையாவது தீண்டத்தாகது என நினைப்பது, முஹர்ரம் மாதத்தில் வெற்றிலை போடாதிருப்பது, மறுதோன்றி இலை பூசாமலிருப்பது, இறந்தவர்களுக்காக 3வது, 10வது, 30வது 40 வது நாள் பாத்திஹாவை மிகவும் அவசியம் என நினைத்து செய்வது போன்றவைகளை குறிப்பிடுகிறார்
[நூல்: -. -சுவர்க்க நகைகள் பக்கம் 78.]

4. குறிப்பிட்ட நாளில்தான் ஈஸால் தவாப் செய்ய வேண்டும் என்பனப் போன்றவை, மீலாத் விழாக்கள் போன்றவை பித்அத்துகளே.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பின் மகிழ்ச்சி உலகியல் மகிழ்ச்சியல்ல. மார்க்க இயல் மகிழ்ச்சி ஆகும். இது மிக ஒழுக்கக் குறைவான செயலாகும்.
பெரியோர்களுக்காக உரூஸ் கொண்டாடுகிறார்கள். இதுவும் வீணும் எல்லை மீறிய செயலும் ஆகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கு ஜியாரத்திற்காக சென்றால் பரவாயில்லை. பரக்கத் என்ற நோக்கத்தில் செல்வது கூடாது.
எங்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி மவ்லுதும், பயானும் நடக்கிறதோ அங்கே பித்அத்தானவைகளும் நடப்பதால் அதை கண்டிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு தோழுகைக்குப் பின் அல்லது பஜர், அஸருக்குப் பின் சப்தமிட்டு திக்ருச் செய்வது பித்அத்தாகும்.
மற்ற நபிமார்களின் புகழை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்வதால் அந்த நபிமார்களுக்கு குறைவு ஏற்படுகிறது. (என்னே! அறியாமை! நபியைப் புகழ்வது இவருக்கு அந்தளவிற்கு எரிச்சல்) என்றும் ஆச்சரியமான கேள்விகளுக்கு அற்புதமான பதில்கள் என்ற நூலின் 36 முதல் 73 வரையிலுள்ள பக்கங்களில் காணக் கிடைக்கின்றன.


Faisla Haft Masala

அஷ்ரப் அலியின் ஷெய்கு ஹாஜி சாகிப் அவர்கள் 'ஹப்த் மஸாலா' என்ற பெயரில் நூல் எழுதி சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை விளக்கினர். இவரின் கூற்றுப் படி அஷ்ரப் அலியின் ஷெய்கும் ஷிர்க்கு செய்த காபிராகிறார். நவூதுபில்லாஹி…

4. புதிய புதிய கனவுகளைக் கண்டதாகவும் அதற்கு பலன் கூறுவதாகவும் கூறி அதன் மூலம் தமது தீய வஹ்ஹாபியக் கருத்துக்களை பலப்படுத்துவது இவர் போன்ற தேவ்பந்திகளின் சிறப்பு. சுவர்க்க நகைகள் பக்கம் 89 ல் ஹாபிஸ் முன்ஸி, ஷராபதுல்லாஹ் (சீப் ரீடர்-பென்ஷனர்) அக்டோபர் 1901ல் அலீகரிலிருந்து தாம் எழுதிய ஒரு கடிதத்தில் தாம் கண்ட நீண்ட கனவைப் பற்றி குறிப்பிட்டுக் கடைசியில்,
'
ஒரு பெருங்கூட்டம், ஹஜ்ரத் மௌலானா அவர்கள் முன் நின்று பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. ஹழ்;ரத் நபிகள் நாயகம (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆர்ப்பாட்டம் புரியும் கூட்டத்தினரைக் கண்டு கூறுகிறார்கள்: 'அஷ்ரப் அலீ எழுதியது முற்றிலும் உண்மை!', பிறகு என்பக்கந் திரும்பி அவர்கள் கூறுகிறார்கள்: 'அஷ்ரப் அலியிடம் கூறி விடவும் அவர் எழுதியவை முற்றிலும் உண்மை! ஆனால் இந்தச் சந்தர்ப்பம் அதற்கு சரியில்லையென்று…'


அஞ்சா நெஞ்சர் உண்மையை எவ்வித பயமும், ஒளிவு மறைவுமின்றி உரைத்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு பேசுவர் என்று இதன் மூலம் கூறுகிறார். தம்முடைய புகழை உயர்த்துவதற்காக நாயகம் அவர்களை எவ்வளவு தரம் தாழ்த்த வேண்டுமோ அந்தளவிற்கு தரம் தாழ்த்துவதுதான் தேவ்பந்திகளின்; கொள்கை! அதை அஷ்ரப் அலியும் செய்திருக்கிறார்.
 
ஹுஸாமுல் ஹரமைன் பத்வா:


Husam al Haramayn urdu

குப்ரியத்தை மறைத்துக் கொண்டு இஸ்லாத்தைப் போதிக்கிறேன் என்ற பெயரில் வந்த அஷ்ரப் அலி தானவியை அவரின் சொல், செயல்களை வைத்து மக்கா, மதீனாவிலுள்ள உலமாக்கள் 34 பேரின் கையொப்பங்களோடு ஹுஸாமுல் ஹரமைன் என்ற பெயருடன் ஒரு பத்வா ஹிஜ்ரி 1328ல் வெளியானது.


As Sawaarim al Hindiya

இந்தியாவிலிருந்து பஞ்சாப், பெங்கால், மதராஸ், பலுசிஸ்தான், எல்லைப் புறம், குஜராத், சத்தியவார் முதலிய பகுதிகளிலும் பர்மாவிலுமுள்ள 268 உலமாக்கள் கையொப்பத்துடன் அஷ்ரப் அலி தானவி உட்பட்டோரை காபிர் என்று அஸ்ஸவாரிமுல் ஹிந்திய்யா என்ற பெயருடன் ஒரு பத்வா கிதாபு ஹிஜ்ரி 1345ல் வெளியானது.

நேரடி விசாரணையும் குப்ர் பத்வாவும்:

இது தவிர அஷ்ரப் அலி தானவி தம்மை ரஸூல் என்று சொல்வதை சரி கண்டதை அப்போது மீரட் மாநகருக்கு வருகை தந்திருந்த அஷ்றபு அலி தானவிக்கு விளங்கும்படியாக ஹிஜ்ரி 1336 ஜமாஅத்துல் அவ்வல் 3 மீரட்டு மாநகரின் ஜும்ஆ பள்ளியில் அஷ்ரப் அலி தானவி தான் ஒப்புக் கொண்ட ரஸூலுத்துவ தாவாவிற்கு ஆதாரமிருப்பின் கொண்டு வர வேண்டும் என்று அறிக்கை விடப்பட்டது. முப்பது மணி நேரமும் அவகாசம் கொடுக்கப்பட்டது.
இறுதியில் நன்னம்பிக்கையுடையவர்களில் சிலர் அஷ்ரப் அலி தானவி தாம் சொன்னதற்கு வலிந்துரையாவது செய்யட்டும் என்ற நோக்கில் ஹிஜ்ரி 1336 ஜமாஅத்துல் அவ்வல் பிறை 5 ஞாயிற்றுக் கிழமை ஸுப்ஹில் மெயின் பஜார், ஜும்ஆ பள்ளியில் வைத்து வஃளு உபதேசம் செய்யும் போது மேற்படி மௌலவி சாகிபை நிர்பந்தப்படுத்தினார்கள். அதற்கு அந்த தானவி அந்த ரஸூலுத்துவ தாவா சரியில்லை என்று சொல்லவுமில்லை, அந்த குப்ரியத்தை விட்டு மீளவுமில்லை.

உபதேசம் முடிந்த பிறகு பகிரங்கக் கடிதம் மூலம் அவருடைய சமூகத்தில் மீலாதுந் நபி கூட்டம் சம்பந்தமாகவும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறைவான சங்கதிகளைப் பற்றிய அறிவு சம்பந்தமாகவும் இன்னும் வேறு பல அவரது பொய் கற்பனை மஸ்அலாக்கள் விசயமாகவும், குறிப்பாக ரஸூலுத்துவ தாவா சம்பந்தமாகவும் உண்மையை விளக்கிக் கூறும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
 
அங்கு சமூகமளித்த சகோதரர்கள் அறிவிக்கிறார்கள்: மேற்படி பொதுச் சபையில் இந்த பகிரங்கக் கடிதத்தைப் பார்த்ததும் தானவி றஸூல் கோபம் கொண்டு, நான் உங்கள் தகப்பனாரின் வேலைக்காரனல்ல என்று சொல்லிக் கொண்டு அவரும் அவருடைய சகாக்களும் அவசரமாகக் கிளம்பி விட்டார்கள்.
அதன்பின்னர் தகுதி வாய்ந்த மூன்று பெரியோர்கள் அவரின் இருப்பிடம் சென்று அவர்களுக்கு ஐந்து மணி நேரம் கழித்து அனுமதி கிடைத்து உள்ளே சென்ற போது, தானவி இந்த ரஸூலுத்துவ தாவாவை மறுக்கவோ அது விஷயமாக பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவோ மறுத்துவிட்டார்.

இதனால் தனாவியை காபிர் என்று மீரட் மௌலானா முஹம்மது அப்துல் அலீம் சித்தீகி ரஹிமஹுல்லாஹு அவர்கள் 'பர்ரத் மின் கஸ்வரா' என்ற பெயரில் பத்வா ஒன்றை ஹிஜ்ரி 1336 ஜமாஅத்துல் ஆகிர் பிறை 10 அன்று வெளியிட்டார்கள்.
 
அஷ்ரப் அலி தானவியின் குப்ரியத்தான வாசகங்களை வைத்து அவரை காபிர் என்று பத்வா வெளியிட்ட மக்கா, மதீனா உலமாக்களின் ஹுஸாமுல் ஹரமைன் பத்வா போக, தானவியிடம் நேரடியாக விசாரணை நடத்தி அவரின் குப்ரை அறிந்த பிறகு பத்வா வெளிவந்ததே!

அதன் பிறகும் அவரை மகான் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள். கேட்டால் அவர் தவ்பா செய்து விட்டாராம்! அதற்கு ஆதாரம் இருக்கிறதாம்! என்று சொன்னார்கள். அதற்கு, சுன்னத் வல் ஜமாஅத் தரப்பினர் ஆதாரம் இருப்பின் கொண்டு வாருங்கள் என்று மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்தும் கொண்டு வரவில்லை. மூன்று மாதம் கழித்து மார்ச் 1996 அஹ்லெ சுன்னத் பத்திரிகையில் பகிரங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அஷ்ரப் அலி தானவி தௌபா செய்து விட்டார் என்பதற்கு ஆதாரம் கொண்டு வரட்டும். அந்த ஆதாரத்திற்கு ரூபாய் பத்தாயிரம் அன்பளிப்பும் தருவதாக வாக்களித்து. ஒரு வருட கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. இன்றுவரை அதற்குரிய ஆதாரம் தரவில்லை. இருந்தால் தானே! தருவதற்கு!
 
ஆக மொத்தத்தில் அஷ்ரப் அலி தானவி ஒரு கடைந்தெடுத்த வஹ்ஹாபி மட்டுமல்ல: அவரின் குப்ரால் காபிராகிப் போனவர். அவர் எப்படி மகானாக, ஷெய்காக பரிணமிக்க முடியும்? அவரை ஷெய்காக ஏற்றுக் கொண்டவர்கள் கதியும், அவரை மகானாக போற்றுவோர் கதியும் அல்லாஹ்வுடைய வேதமான திருக்குர்ஆன் அடிப்படையிலும், ஹதீதுகளின் அடிப்படையில் அதோ கதிதான். அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்.

தானவி ஒத்துக் கொண்ட ஆஷிகே ரஸூல் அஃலா ஹழ்ரத்:

அஷ்ரப் அலி தானவியைப் பற்றி அவரைப் போற்றும் இணையதளத்தில் வந்திருக்கும் ஒரு செய்தி கட்டுரையில்:…
'
மௌலானா அஹ்மத் ரஜா கான் ஃபாஸில் பரேல்வி (1856 – 1921) அவர்களைக் குறித்து அறிமுகப்படுத்தத் தேவையில்லை. சொல்ல வந்ததை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அழுத்தம்திருத்தமாக எடுத்துரைப்பதில் புகழ்பெற்றவர் அவர்.
அல்லாமா அஷ்ரப் அலீ தானவி ஒருநாள் அஸருக்குப் பிறகு தம்முடைய சீடர்களுடன் அமர்ந்திருந்த வேளையில்தான் மரணம் பற்றிய தகவல் கிடைக்கின்றது. 'அல்லாமா! அஹ்மத் ரஜா கான் இறந்து விட்டாராம்..!' என்று அந்தத் தகவலைச் சொன்னார் ஒரு சீடர்.
அல்லாமாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. மௌலானா என்றோ ஜனாப் என்றோ மரியாதை கொடுத்துச் சொல்லாமல் நான்கு வயதுப் பையனைக் குறித்துச் சொல்வதைப் போல அந்த மிகப் பெரும் மார்க்க அறிஞரின் பெயர் குறிப்பிடப்படுவது அல்லாமாவுக்குப் பிடிக்கவில்லை.
'யாரு? மௌலானா அஹ்மத் ரஜா கான் பரேல்வி அவர்களா?'
'ஆமாம். அல்லாமா!'

'இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்' எனச் சொன்ன அல்லாமா, 'வாருங்கள். அவருக்காகப் பிரார்த்திப்போம்' எனச் சொல்லியவாறு இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டார். அங்கு இருந்தவர்களும் கைகளை ஏந்தி பிரார்த்தித்தனர்.
ஆனால் இது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அல்லாமா பிரார்த்தனையை முடித்ததும் வாய் திறந்து கேட்டு விட்டார்கள். 'அல்லாமா! ஒரு பித்அத்தியை (இறைத்தூதரின் வழிமுறைக்கு அப்பாற்பட்ட புதுமையானவற்றை மார்க்கத்தில் புகுத்துகின்றவர்) மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வதா?' என்றனர்.
அல்லாமா அஷ்ரப் அலீ தானவி சொன்னார்: 'அவர் பித்அத்தி அல்லர்; முஹப்பதி (மிகையான அன்பு கொண்டவர்). ஒருவர் மீது அளவு கடந்த அன்பும் நேசமும் கொண்டிருக்கும் போது மிகையான பற்றுடன் நடந்து கொள்ளத்தான் செய்வார்கள்…'

அல்லாமா சொல்லி முடிப்பதற்குள்ளாக இன்னொருவர் சொன்னார்: 'அவர் உங்களை காஃபிர் – இறைமறுப்பாளர் என அறிவித்தவராயிற்றே..! அப்படியிருந்தும் அவருக்காக நீங்கள் பிரார்த்தித்தது ஏனோ?'
அல்லாமா மிகவும் நிதானமாக, மென்மையாக பதிலளித்தார்: 'மகனே! நான் ஒரு இறை மறுப்பாளன் என்று அவர் என்னைப் பற்றி உறுதியான தீர்மானத்திற்கு வந்து விட்டிருந்தார். நான் எடுத்துரைத்த கருத்துகளில் ஏதோவொன்று அவருடைய பார்வையில் இறை நம்பிக்கைக்கு மாற்றமான கருத்தாகப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் அவர் அந்தத் தீர்மானத்திற்கு வந்து விட்டிருக்க வேண்டும். என்னுடைய பேச்சையோ, செயலையோ பார்த்து இறைவனையே மறுக்கின்றவர் இவர் என்கிற தீர்மானத்திற்கு வந்து விட்ட பிறகு அவர் என்னைக் குறித்து 'காஃபிர்' என அறிவிக்காமல் இருந்திருப்பாரேயானால் அவர் 'காஃபிர்' ஆகிவிட்டிருப்பார். ஃபிக்ஹு சட்டத்தின் உறுதியான விதி இது'.

 'உங்களில் எவரும் தனது தந்தையை விட, தனது பிள்ளையை விட உலகிலுள்ள மனிதர்கள் அனைவரையும் விட என்னை அதிகம் நேசிக்கும்வரை மூஃமினாக முடியாது' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
என்ற ஹதீதின் பிரகாரம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அளவுகடந்த நேசம் வைத்து தன்னை முஃமினாக நிலைநிறுத்தி மக்கள் மனதில் அன்புக்கு உரித்தான அஃலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் பாழில் பரேலவி அவர்களை அவரது எதிரியான அஷ்ரப் அலி தானவியே முஃமின் என்று சொல்லி விட்டார். ஆனால் அஷ்ரப் அலியின் நிலையை மேற் கூறிய அவரின் கொள்கை, கோட்பாடுகளின் ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

முடிவுரை:

நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
'மூன்று விஷயங்கள் ஒருவரிடத்தில் இருப்பின் அவன் ஈமானின் சுவையை கண்டு கொள்வான்.
1) ஏனைய அனைத்தையும் விட, அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனிடத்தில் உவப்பிற்குரியவர்களாக இருக்க வேண்டும்.
2) ஒரு மனிதரை நேசிப்பதாயின், அவரை அல்லாஹ்வுக்காகவே நேசிக்க வேண்டும்.
3) நரக நெருப்பில் போடப்படுவதை ஒருவன் எந்தளவு வெறுப்பானோ, அந்தளவு மீண்டும் இறைநிராகரிப்புக்கு திரும்புவதை வெறுக்க வேண்டும்.' (புகாரி, முஸ்லிம்).


இறைநேசர்களும் அவர்களின் அடையாளங்களும்:

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

'நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மன்னிப்போனும் மிக்க இரக்கமுடையோனுமாக இருக்கிறான் என்று (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறும்' (3:31)

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ

அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் இறைவனை நம்புவார்கள்.(அவனை) அஞ்சுவோராகவும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-10:62,63)

அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளும் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக் கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன் மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். '.(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.' என்ற 10:62 வது வசனத்தை ஓதினர்.

[அறிவிப்பவர்: ஹழ்ரத் உமர்(ரலியல்லாஹு அன்ஹு) நூல்: அபூதாவூத்.]

இதன் அடிப்படையிலேயே இமாம்கள் இறைநேசரை அறிவதற்குரிய நியதியை வகுத்து தந்துள்ளனர்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள், 'வலி என்பவர்,

1.அல் ஆலிமு பில்லாஹ்-இறைவனைப் பற்றி அறிந்தவராக இருப்பார்
.2.அல்முவாளிபு அலா தாஅத்திஹி- அவனது கட்டளைகளை சரியாகக்
கடை பிடிப்பவராக இருப்பார்.
3.அல்முக்லிஸ் ஃபீ இபாததிஹி – அவனை வணங்கி வழிபடுவதில் பரிசுத்தமானவராக இருப்பார்' என விளக்கமளிக்கிறார்கள்.

இமாம் ஷவ்கானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள்,
இறை வேதத்தை முற்றிலும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்று பவராக இருப்பவரே இறைநேசராக இருக்கமுடியும்' எனக் கூறுகிறார்கள்.
    
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.'

[ அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு நூல் :திர்மிதி ]

இந்த ஹதீதுகளின் அடிப்படையில் அஷ்ரப் அலி தானவி கொண்ட கொள்கை, செய்த செயல்கள் குப்ரியத்தை ஏற்படுத்தி அவரை நரகிற்கு கொண்டு சென்றதா? அல்லது முஃமின்களிடையே அன்பை ஏற்படுத்தி அவரை இறை நேசராக்கியதா? நீங்களே சிந்தித்து, முடிவுக்கு வாருங்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்த போதுமானவன். அல்லாஹு அக்பர்.!

மரணம்:

தாம் வாழ்ந்த இறுதி காலம் வரை (82 வருடம் 3 மாதம் 11 நாட்கள்) தாம் கொண்ட வஹ்ஹாபிய தேவ்பந்திய கொள்கையிலேயே வாழ்ந்து ஹிஜ்ரி 1362 ரஜப் 16 (19-6-1943) அன்று மரணமடைந்தார்.


Descerated grave of Ashraf ali thanvi

தன் ஹபீபை நிந்தனை செய்வோரின் கப்ர் மீது அல்லாஹ் ஹுத ஆலா இறக்கிய அதாபைக் காணுங்கள் !!!

                                                                            நன்றி- http://sufimanzil.org/
Related Posts Plugin for WordPress, Blogger...

Tuesday, 3 June 2014

அஷ்ரப் அலி தானவியும் வஹாபிகளும்


            தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரின் ஹகீமுல் உம்மத் அஷ்ரப் அலி தானவி தமது வஹாபிய விசுவாசத்தை பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறார் .

" என்னிடம் 10,000 ருபாய் இருந்தால் நான் அதை மக்களிடம் விநியோகித்திருப்பேன் , மக்கள் தானாக வஹாபிகளாகி விடுவர் "
     
    [ நூல்- அல் இபாததுல் யௌமியா ,மௌலவி அஷ்ரப் அலி தானவி ]
     



Al Ifadatul Yaumiya
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, 23 May 2014

அஷ்ரப் அலி தானவியின் வஹாபிய வழிகேடு


மௌலவி அஷ்ரப் அலி தானவி கூறுகிறார்,


Hifzul Imaan

"பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட அறிவைப் போன்றதே விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ள  அறிவு "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7]


Hifzul Iman, Page 7-Asraf ali Thanvi

"பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்பட்ட மறைவான ஞானம் விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் உள்ளது போன்றே மேலும் அதற்கு சமமானதே "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7, பதிப்பாளர்கள் ஷேய்க் ஜான் முஹம்மத் அல்லா
பக்ஷ் குதுப் உலூம் ஏ மஷ்ரிகி காஷ்மிரி பஜார் , லாகூர் 1934 ]


அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,
" மறைவான ஞானம் என்பது ஒரு பகுதி தான் எனில் அதில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு  என்ன சிறப்பு இருந்து விட போகிறது. அது மாதிரியான ஞானம் ஜைதுக்கும்,அம்ர்க்கும் , எல்லா விலங்குகள், பைத்தியக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் தான் உள்ளது.   "
[ நூல் - ஹிப்ளுல் ஈமான் , பக்கம் 7, பதிப்பாளர்கள் ஷேய்க் ஜான் முஹம்மத் அல்லா
பக்ஷ் குதுப் உலூம் ஏ மஷ்ரிகி காஷ்மிரி பஜார் , லாகூர் 1934 ]




Hifzul Iman -page 8


Ashraf Ali Thanvi - Hifzul Iman,page13
 
இதே வாசகம் ஹிப்ளுல் ஈமான் மழாஹிருள் உலூம் பதிப்பகம் 6ஆம் பக்கத்தில் உள்ளது .



Hifzaul Iman  New Edition

மௌலவி அஷ்ரப் அலி தானவியை தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் ஹக்கீமுல் உம்மத் என்று அழைக்கிறனர். இவர் தான் தப்லீக்  ஜமாத்தின் ஸ்தாபகார் மௌலவி இல்யாஸின் ஆசிரியர்.

அஷ்ரப் அலி தானவி கூறுகிறார் ,
" லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று  கூறுவதால் எந்த கேடும் இல்லை "
[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35,சபர் மாதம் 1336 ஹிஜ்ரி ,ரூதத் ஏ முனாஜிரா கேயா,அல் புர்கான் வால்யூம் 3,பக்கம் 85 ]
"லா இலாஹா இல்லல்லாஹு அஷ்ரப் அலி ரசூலுல்லாஹ் , அல்லாஹும்ம ஸல்லிஅலா செய்யதினா நபியினா அஷ்ரப் அலி என்று கூறுவது ஆகுமானதே ,அவ்வாறு கூறுவதால் ஷரீயத்தில் எந்த ஆட்சேபணையும் இல்லை "
[ரிஸாலா அல் இம்தாத் ,பக்கம் 35, சபர் 1336, பதிப்பாளர்கள் இம்தாத் உல் மதாபே தானாபவன் ]

அஷ்ரப் அலி தானவி எழுதுகிறார் ,
" முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றுமில்லாத பயனற்றவர்கள் "
[ நூல் - அஷ்ரபுஸ் சவானெஹ் ,பக்கம் 42]
"நான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறேன் இக்காலத்தில் எந்த மனிதனும் ஒரு நல்லமல் செய்தால் ,அவன் 50 அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு வின் சவாபை பெறுகின்றான் "
[நூல் - அஷ்ரபுஸ் சவானெஹ் , பாகம் 2, பக்கம் 99]


எச்சரிக்கை !!!
அஷ்ரப் அலி தானவியின் நூல்களில் உள்ள ஆபாச விரசங்கள்
இங்கு நாம் ஸ்கேன் செய்துள்ளவை  மூல நூல் பிரதிகள் .  பிஹஷ்தி ஜேவர் நூலின் புதிய பிரதிகளில் இந்த தேவ்பந்திய தப்லீக் ஜமாத்தினர் இந்த ஆபாசங்களை மறைக்க அஷ்ரப் அலி தானவி தவ்பா,ரூஜூ செய்துவிட்டார் என்று சொல்லி வருகின்றனர்.

இது போன்ற மாற்றங்களை தக்வியத்துள் ஈமான்,ஹிப்ழுள் ஈமான்,சிராத்தே முஸ்தகீம்,பராஹீனே காதியா போன்ற பிற நூல்களிலும் செய்துள்ளனர் இந்த தேவ்பந்திய வஹாபிகள்.

நூல்  - கமாலாதே அஷ்ரபியா, பக்கம் 369 ,ஆசிரியர் மௌலவி முஹம்மத் இசா இலாஹாபாதி ( அஷ்ரப் அலி தானவியின் கலீபா )
நூல்  - இம்தாதுல் முஷ்தாக் ,பக்கம் 713,673 , ஆசிரியர் அஷ்ரப் அலி தானவி
நூல்  - இபாஜாத்ஏ யௌமியா ,பாகம் 4, பக்கம் 7,570,பாகம் 5 பக்கம் 440,ஆசிரியர் அஷ்ரப் அலி தானவி


மௌலவி அஷ்ரப் அலி தானாவியின் தினசரி பாடங்கள் தொகுக்கப்பட்டு இபாஜாத்ஏ யௌமியா என்று வெளியிடப்பட்டுள்ளது . இது மல்புஜாத் ஹக்கிமுல் உம்மத்  என்றும் அழைக்கப்படுகிறது.   
மல்பூஜாத் எண் 43, பக்கம் 61 .

அஷ்ரப் அலி தானவி தம்மை ஒரு பித்அதி என்று ஒப்புக்கொள்கிறார்
" இக்காலத்தில் மக்கள் தங்கள் தன்மைகளில் குறும்புடையவர்கலாக இருக்கிறார்கள்.நான் அவர்களை மாற்றும் பொருட்டு ஒரு புதிய பித்அத் தை உருவாக்கியுள்ளேன் " 
[நூல் - மல்புஜாத் ஹக்கிமுல் உம்மத் , வால்யூம் 5 ,பக்கம் 208,இதாரா தாலிபதே அஷ்ரபியா,முல்தான்,பாகிஸ்தான் ]

தேவ்பந்திகளின் கொள்கை
"தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதி விட மோசமானது."
[ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86].

ஆனால் தொழுகையில் ஒரு தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் பெரியாரின் நினைவு வருவது சரியானதே !!!

மௌலானா அப்துல் மஜீத் தைராபாதி அஷ்ரப் அலி தான்வியின் மாணவரும் கலீபாவும் ஆவார் . அவர் அஷ்ரப் அலி தானாவியின் வாழ்க்கை வரலாறை 'ஹக்கீமுள் உம்மத்' என்று ஒரு புத்தகமாக வெளியிட்டார். மௌலவி அப்துல் மஜீத் தனது ஒரு பிரச்னையை அஷ்ரப் அலி தானவிக்கு கடிதமாக எழுதுகிறார், 
"தொழுகையில் மன ஒருமைப்பாடு இல்லாத நிலை என்பது ஒரு பழைய பிரச்சினை.அனால் என்னுடைய அனுபவத்தில் தொழுகையில் உங்களை நினைக்கும் போது மன ஒருமைப்பாடு இல்லாத நிலை,சிறிது நேரத்திற்கே ஆனாலும்  என்னை விட்டும் விலகியது . இது விஷயமாக, இது சரிதான என்று  எனக்கு ஆலோசனைக் கூறுங்கள்,இல்லையெனில் எதிர்காலத்தில் நான் கவனாமாக இருப்பேன் "
அஷ்ரப் லை தானவியின் பதில்
"இந்த முறை சரியானதே நீர் யாரிடமும் இதை வெளிப்படுத்தாதவரை "
[ நூல்  - ஹகீமுல் உம்மத் ,பக்கம் 54 ]

"மௌலானா அஷ்ரப் அலி தானவி ஒருமுறை கூறினார் , நான் நோய்வாய்பட்டிருந்தேன் மேலும் மௌத்தை நினைத்து அச்சப்பட்டுக்  கொண்டிருந்தேன். நான் ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கனவில் கண்டேன் அவர்கள் என்னை கட்டியணைத்தார்கள், நான் சுகம் அடைந்தேன் "
[ நூல் - மல்பூஜாத் ஹகீமுல் உம்மத் ,வால்யூம்  8, பக்கம் 37] 

                                  உம்  மீது லக்னத் உண்டாகட்டும்
                                         
                                        அஸ்தக்பிருல்லாஹ்  !!!
 
  
Related Posts Plugin for WordPress, Blogger...